Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக-7

Advertisement

இவ எல்லாம் தெரிஞ்சும்
இப்படி காதல வளக்கிறது சரியா
சர்வா மாமன் மனசு போல போவானா
 
ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் -7

சிவன்யா தான் உண்ணும் உணவிற்கு ஏதாவது வேலை செய்ய வேண்டும். என்று தான் வேணியின் பின்னால் சுற்றியது.அவரும் இவளை அரவணைத்து கொண்டார்.அதிலும் சதாவின் நட்பும்,அன்பும் இவள் எதிர்பாராதது. அதே நேரம் உண்மையானதும் கூட..........

இவள் பயம் கொண்டதை போல எல்லாம் சர்வா அவளை கண்டு கொள்ளாமல். எப்போதும் போல நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா, என்னும் ரீதியில் நடந்து கொள்ள,அவளுக்கு இது அதிசயம் தான்.ஒருவேளை முத்து பாண்டிக்கு நம்ம மேல பயமோ !நல்ல வேலை ஒன்னும் சொல்லல ,என்றது போய் ஏன்?

என்னை அவங்க எதுவுமே சொல்லலலை.என்று யோசிக்கும் அளவிற்கு ,அவள் இததயத்தில் அழுத்தமாய் அமர்ந்து கொண்டு, அவளை ஆட்சி செய்து கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.

அவன் மேல் புதியதாய் முளைத்திருந்த நேசத்தை ,அடியோடு அழித்துவிட வேண்டும் என்றுஅவனை பார்க்காமல் , அவனை பற்றி யோசிக்காமல் , நினைக்காமல் இருக்க போகிறேன் ,என்று மனதை இழுத்து பிடிக்க ......... முயன்றவளிடம் அவளின் மனமே பகை கொண்டு சதா சர்வ காலமும் சரவேஸ்வரனை பற்றியே சிந்திக்க வைக்க,

அந்த மானம் கெட்ட மனதை ஒன்றும் செய்ய முடியாமல் .'போய்க்கோ!இத்தனை நாள் அவங்களுக்கு தெரியாமல். எப்படி தூரமா இருந்தையோ! இப்பவும் அப்படியே இருந்துக்கோ!'என்றுவிட்டு விட்டாள்.

சிவாவின் பிடித்தம் ....... அவனின் விழியோடு விழி கலந்து ,கரத்தோடு கரம் கோர்த்து தோலோடு தோல் உரசி ,எனக்கு அது பிடிக்கும் ,உனக்கு எது பிடிக்கும் என்று தங்கள் எண்ணங்களை பகிர்ந்து ,

இருவரும் ஒன்று போல உடை உடுத்தி ,பிடித்தமான இடங்களை எல்லாம் சுற்றி என்று , நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமாய் வளர்க்கப்பட்ட காதல் கிடையாது.

இது போன்று இருவரும் பரஸ்பரம் விரும்பும் காதலில் கூட ,ஒரு எதிர்பார்ப்பு , கட்டுப்பாடு இருக்கும் .

சிவாவினது முற்றிலும் வேறு,



எப்போதாவது அவன் கடந்து செல்கையில் இவளை ஒரு வினாடி பார்த்து விட்டால். உடல் முழுவதும். சுர் என்று மின்சாரம் தாக்கியது போல உணர்ந்து , வீட்டில் எங்காவது அவன் குரல் கேட்டாலே ,ஏ. ஆர் இசையை கேட்டது போல மயங்கி நின்று, அவன் சாதாரணமாய் ஓரிரு வார்த்தை பேசிவிட்டாலோ !உள்ளம் முழுவதும் ஆரஞ்சு மிட்டாய் உண்டது போலான தித்திப்போடு,



அழகாய் ,ஆழமாய், அவனே அறியாமல் வளர்க்கப்பட்ட, ஒரு தலை காதல் .........அந்த காதல் கடைசிவரை அவளுள்ளே தான் இருக்கும்.அதை அவனிடம் பகிர்ந்து கேலி கூத்தாக்க பெண்ணானவளுக்கு சிறிதும் விருப்பம் இல்லை .

அவளை அவன் என்ன சொன்னாலும் தாங்கும் சக்தி அவளுக்கு உண்டு ,அவன் மேல் அவள் கொண்ட பிடித்ததை ஏதும் கூறிவிட்டாள் , பிறகு சிவா என்ன செய்வாள் என்பது அவளின் கையில் இல்லை .என்பது முற்றிலும் உண்மை .

அதன்பொருட்டே தள்ளி நின்று கொண்டாள். அவன் ஆள் பார்க்க எப்படி இருக்கிறான்,என்ன உடை உடுத்துகிறான்,தன்னோடு அன்பாக பேசுகிறானா , அவனுக்கு என்னை...என்னை மட்டுமே பிடிக்குமா, என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அப்பளுக்கற்றது அவளின் அன்பு .......

அவள் விரும்புகிறாள் சர்வா என்பவனை.அவன் எப்படி இருந்தாலும் விரும்புவாள். இவளின் உயிர் கல்லறை சேரும் வரை .அந்த பிடித்ததை எந்த சூழ்நிலையிலும் அவனிடம் பகிரும் எண்ணம் சிறிதும் இல்லை .

ஆக பெண்ணுக்கு தெரியும் எந்த காலத்திலும்.இது நிறைவேறாதது என்று,ஆனாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.

ம்ம்ம்ச் அவளையும் மீறி உருவான பிடித்ததை அவளும் என்ன செய்வாள்.அதை விட்டால் அவளே இருக்க மாட்டாள் என்னும் அளவிற்கு,பித்தாக்கி அவளுள் நீக்கமற நிறைந்திருப்பவனை..................... என்ன செய்வாள் .

இவளின் காதல் சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம் .ஆனால் என்ன செய்வது அவனை அத்தனை தூரம் பிடிக்கறதே ! என்னை என்னடா செய்தாய் நீ .....என்னும் நிலை அவளுக்கு

ஒரு பெண்ணாக உன் மேல் நானே…
பேராசைக் கொண்டேன்…
உனை முன்னாலேப் பார்க்கும் போது…
பேசாமல் நின்றேன்…

எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்…
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்…

நினைவில் அவன் கண் முன்னே இருக்க ,பெண் கனவில் அவனோடு வாழ்கிறாள். இப்போதெல்லாம் பேச ஆள் இருக்கிறது ,பேச பிடிக்க வில்லை . தனிமை பிடிக்கிறது.அதிலும் இரவுகள் மிக மிக அதிகமாய் பிடிக்கிறது.விழி மூடினால் தானே அவளவனோடு இடையூறு இன்றி உரையாட முடியும் .

சிலநேரங்களில் தோன்றும்.கனவென்றாலும் அவன் அனுமதி இல்லாமல் ,அவனை பற்றிய கற்பனைகளை வளர்த்து கொண்டு .அவனுக்கும், நிசாவிற்கும் தான் துரோகம் செய்கிறோமோ என்று,

அதான் இன்னும் கல்யாணம் ஆகலை இல்லை ,அப்புறம் என்ன விடு என்று அவளின் காதல் மனம் சப்பை கட்டு கட்ட , பெண்ணும் விட்டு விடுவாள்,அப்போ அவனுக்கு கல்யாணம் ஆனால் நீ அவனை நினைக்க மாட்டாயா ,என்ற கேள்வியை இதுவரை அவள் தனக்கு தானே கேட்டு கொண்டதே இல்லை .

இவளின் பிடித்தங்களோடே அந்த வருடம் கடந்திருக்க ,இதோ அடுத்த கோடை விடுமுறை வந்து விட்டது ,பள்ளியில் ஒருவாரம் விடுமுறை கொடுத்து விட்டு , பன்னிரெண்டாவது வகுப்பிற்கான பாடங்களை எடுக்க தொடங்கி இருந்தனர்.

அந்த விடுமுறையில் இவள் சின்ன மாமா வீடு செல்ல பார்கவியும் வந்திருந்தாள்.சேலத்தில் உள்ள அரசு மகளிர் கலை கல்லுரியில் ,ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள்.

"ஹாஸ்டல் போறது என்ன பழக்கம் ,வீட்டில் இருந்து போய் படி " என்று மாமா அதட்டியதிற்கு, "எனக்கு மனுஷங்களை படிக்கணும் மாமா ,வாழ்கை முழுசும் நீங்க கூடவே வர முடியுமா ,தனியா இருந்து கத்துகிறேன்."

"என்னால முடியல ,ஏதும் பிரச்சனைனா உங்க கிட்ட தானே வர போகிறேன்". என்று பெண் தெளிவாய் கூறிவிட்டாள்.வகுப்பு முடிந்த பிறகு,கலூரிக்கு எதிரில் இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்கு செல்கிறாள் .

விடுமுறைக்கு வந்திருந்த தங்கைக்கும் .

"சிவா என்ன தான் மாமாவீடா இருந்தாலும் அங்கேயே இருந்தா நல்லா இருக்காது.ட்வல்த்துல நல்ல மார்க் எடுத்துடு கவர்மென்ட் காலேஜில் சீட் கிடைச்சா போதும். ஹாஸ்டல் ,சாப்பாடு எல்லாம் ப்ரீ தான் . "

"அப்புறம் படிச்சு முடிக்கிறவரை பிரச்சனை இல்லை. படிச்சு முடிச்சதும் ஏதாவது வேலைக்கு போய்ட்டா,நம்மளை நாமளே பாத்துக்கலாம்." என்று அதையே பாடமாக்கி அனுப்பி இருந்தாள்.

சிவாவும் அதையே தான் தனக்குள் உரு போட்டு கொண்டிருந்தாள்.என்ன தான் இவளின் பிடித்தம் இன்று வரை அவளின் ரகசியமாய் இருந்தாலும்.பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது போல ,

என்றாவது ஒரு நாள் மாட்டிக்கொண்டால் ,அதுவும் வேணியின் கையில் மாட்டினால் அவ்வளவு தான் வச்சு செய்து விடுவார் அவளை .அதனால் அவளுக்கும் கூடிய விரைவில் சென்று விடும் எண்ணம் தான்.

இதோ இன்று சிவா வழக்கம் போல் வகுப்பு முடித்து வந்தவள் . காம்பவுண்டிற்குள் நின்னிருந்த காரை ,விழி சுருக்கி பார்த்தவாறே வீடு நுழைகையில் ,வாசலில் அத்தனை காலனி ,அதிலும் வயது பெண்ணின் காலனி என்பதை போல அரை அடி ஹீல்ஸ்,

அதை கண்டதுமே சிவாவிற்கு வந்திருப்பது நிஷா குடும்பம் என புரிந்து போனது.கூடவே சிரிப்பு வேறு பின்னே நிஷாவே நல்ல உயரம் ,இதில் ஏறி நின்றாள் இன்னும் உயரமாய் தெரிவாள்.

'பேஷன் படிக்கிறேன்ன்னு இந்த அக்கா இன்னும் என்ன என்ன அலப்பறை பன்னிட்டு இருக்கோ ,சிவா கொஞ்சம் லேட்டா வந்துருக்க கூடாதாடி நீ ,'என நினைத்தவாறு உள்ளே நுழைந்தாள்.



ஆம் நிஷா பேஷன் டெக்னோலஜி படிக்கிறாள் ,அதுவும் சென்னையில் ,சிவா நினைத்தது போலவே ஒரு ஜீன் , டாப்போடு அமர்ந்திருந்தவள் உதட்டில் அழுத்தி தீட்டப்பட்டிருந்த உதட்டு சாயம் ,இந்த சூழலுக்கு பொருந்தவே இல்லை.அதை கூட அவளது விருப்பம் என விட்டு விட்ட சிவாவால் ,

வேனியினது போலவே ,இடையை தாண்டி இருந்த அவள் கூந்தலை தோல் வரை வெட்ப்பட்டிருப்பதை கண்டு தான் அதிர்ச்சியே ,சர்வாவிற்கு நீண்ட கூந்தல் என்றால் மிகவும் பிடிக்கும் .

இவள் காணவே பலமுறை "அம்மா உங்க முடி , நீளமா அழகா இருக்குமா ,"என்று ஆசையாய் அதை தொட்டு பார்த்து வியந்து இருக்கிறான் .அதன் பின் சிவாவும் என்ன என்னமோ குட்டி கரணம்அடித்து பார்க்கிறாள்.இடையை நெருங்குவேனா என்று அவளின் கூந்தல் ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறது .

அவங்க ஒன்னும் சொல்லலையா ,என்பது போல இவளின் பார்வை சர்வாவை வருட ஏனோ சர்வாவின் முகம் வாட்டமாய் இருந்தது .'முடி கட் பண்ணதுக்கு ஏன் இவ்ளோ பீல் பண்றாங்க' என்றது போல எண்ணினாலும்.அவனின் வாட்டத்தை பெண்ணால் தாள முடியவில்லை .

அங்கு அனைவரும் இருக்க,சங்கர் இருப்பதால் தன்னை ஒன்றும் கூறமாட்டார்கள் என்று தைரியமாய் அனைவரையும் வரவேற்றவள்.அவளின் அறைக்குள் நுழைந்து கொள்ள முயல.

"குட்டி முகம் கழுவிட்டு போய் சாப்பிடு,நாங்க எல்லாம் சாப்பிட்டோம் ."என்றிருந்தார் வேணி ,கனகாவுக்கு அது பிடிக்கவில்லை .

இந்த ஒரு வருடமாக அவரும் வேணியிடம்."அந்த பொண்ணுக்கு நெறய இடம் கொடுக்காதீங்க ,தலைல ஏறி உக்காந்துக்க போகுது"என்று பலமுறை கூறி விட்டார்.வேணி அவரின் பேச்சை கேட்டது போல தெரியவில்லை .

அத்தை கூறியது போலவே முகம் கழுவி விட்டு,இவள் உண்ண வர ,சதாவும் வால்பிடித்து கொண்டு பின்னால் வந்து விட்டான்.

"சும்மா இவங்க வரும் பொழுது எல்லாம்,இந்த அம்மா வெளில போக விடாமல், டார்ச்சர் பண்ணுது ,நான் இல்லாமல் பசங்க படத்துக்கு போயிருக்கானுங்க ," என்றவாறே! சமையலறை தரையில் உண்ண அமர்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்து கொண்டவன். தனது அலைபேசியை எடுத்து அவன் நண்பர்கள் தியேட்டரில் செய்த அலராசிட்டிகளை போட்டோ எடுத்து அனுப்பியிருக்க ,

அதை பார்த்து கொண்டிருந்தான் .இப்போது மூலைக்கு மூலை மொபைல் கடை இருக்க,ஆண்ட்ராய்டு விற்பனை சக்கை போடு போட்டு கொண்டிருந்தது.

சதா காட்டிய படங்களை பார்த்து சிரித்தவாறே !தான் உண்டு கொண்டிருந்த மீனை சதாவிற்கு ஊட்டிய சமயம் , சர்வா அறைக்குள் வந்திருந்தான்.ஒரு நொடி சர்வாவின் விழிகளும் சிவாவின் விழிகளும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டிருக்க .

சர்வவின் மேல் இருந்த கவனத்தில் சிவாவின் ஊட்ட எடுத்த கை அப்படியே அந்தரத்தில் இருக்க, குனிந்து அலைபேசி பார்த்து கொண்டிருந்த சதா, அவளது கையை இழுத்து தனது வாய்க்குள் திணித்து கொள்ளவும் ,

இப்போது சர்வாவின் பார்வை அவளின் தளிர் கரங்களின் மேல் சென்று திரும்பினாலும் அவன் முகத்தில் எந்த பாவமும் இல்லை .சதாவோடு இவள் பழக ஆரம்பித்த நாட்களில். இது போன்று அவ்வப்பொழுது. சதாநந்தன் இவளை தீண்டுவது மிக சாதாரண விடயமாக இருந்தாலும் .

முன்பு பார்க்கில் பார்க்கும் ஒருவனுக்கு போஸ் கொடுத்தாயோ !என்று சர்வா கேட்டதால் பெண் பயந்து இருக்கிறாள்.ஆனால் சர்வா எப்போதும் போல எந்த எதிர் வினையும் ஆற்றாமல் இருக்கவே அவளுக்கு பெருத்த நிம்மதி.



இன்றும் அது போலவே அவர்களை கடந்து சென்றவன் ,குழாயை திறந்து விட்டு கண்ணை மூடியபடி அவனது தலையை சிங்கிள் காட்டி கொண்டு சில நிமிடங்கள் நின்று....

பின்பு சுற்றும் முற்றும் தேடியவன்.அங்கிருந்த பெரிய காட்டன் டவலை எடுத்து தலையையும்,முகத்தையும் துடைக்க , "அ ....."என்று சிவா ஏதோ கூறவருவதை கண்டுகொள்ளாமல் .துண்டை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு . பிரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை பருகி முடிக்க.....

சதா"அண்ணா அவங்க சொல்றதுக்காக ,உன்னோட முடிவை மாத்திக்காத,உனக்கு என்ன தோணுதோ அதை செய்"என்க

தம்பிக்கு எந்த பதிலும் அளிக்காமல்.சிறு தலை அசைப்போடு ,அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான் சர்வேஸ்வரன்.

அதுவரை தன்னவனின் முகவட்டத்திற்கான காரணத்தை தவறாக கணித்ததை புரிந்து கொண்டவளுக்கு ,விஷயம் பெரியது என இப்போது புரிய ,சதாவிடம் எப்படி கேட்டபது என தெரியவில்லை .

இதுவரை சதாவிடம் மட்டும் அல்ல ,வேறு யாரிடமும் அவள் சர்வாவை பற்றி பேசியது இல்லையே !ஆனால் அவள் கேட்க எந்த அவசியமும் இன்றி ,சதாவே

"அண்ணா இப்போ படிப்பை முடிச்சிட்டாங்க இல்லையா ,அவங்களை மாமா உடனே அவங்க ப்ரண்ட் கார்மென்ஸ்ல ட்ரைனிங் மாதிரி ஜாயின் பண்ண சொல்றாங்க,அண்ணாக்கு பிடிக்கலை ,அவன் ஐடில இன்டெர்வியூக்கு பிரிப்பர் பன்னிட்டு இருக்கான் ,"என்கவும்

"ஹோ" என்றதோடு நிறுத்தி கொண்டாள் சிவா .ஆனாலும் மனம் 'அண்ணாமலையாரே அவங்க ஆசைப்பட்டத்தை நிறைவேத்திக்குடேன்.'என்று வேண்டி கொண்டது.

இத்தனை நேரம் சர்வா மாமன் கோணாமல் என்ன பதில் சொல்வது என யோசித்து இருந்தவன் .இப்போது "நான் மேனேஜ்மென்ட் படிக்க போறேன் மாமா ,இப்போதைக்கு வேலைக்குப்போற ஐடியா இல்லை "என்று கூறியிருந்தான்,

"எப்போ இருந்தாலும் நம்ம கார்மென்ஸை தானே பாக்க போற மாப்பிள்ளை, அதுக்கு எதுக்கு மேல மேல படிச்சிட்டு , நானும் எவ்வளவு நாள் தான் ஓடிக்கிட்டே இருக்குறது வயசாகுது இல்லை .படிச்சது போதும் வந்து கவனி, நான் என்னோட ப்ரண்ட் கிட்ட சொல்லிட்டேன்."என்று அத்தனை எளிதாய் அவர் மறுத்து விட்டார்.

இப்போது இவனுக்கு 'நான் தான் முக தாட்சண்யம் பார்க்கிறேன்.இவருக்கு அப்படி இல்லை என்பது புரிந்து போனது' . அத்தோடு நான் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டிய தாய், தந்தை அமைதியாய் இருக்க ,இவர் இப்படி ஆர்டர் போடுவது . சர்வாவுக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுத்தது.

'இவரோட கார்மென்ஸை பாத்துக்க இவங்க பொண்ணுங்க இருக்காங்க , அப்புறம் நான் எதுக்கு பாத்துக்கணும் . இவங்க பெண்ணை கல்யாணம் பண்ண பிறகு இப்படி சொன்னால் கூட பரவாயில்லை .'இப்போதே சொல்வது அவனுக்கு அத்தனை பிடித்தமில்லை.

அவர் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறாரா ,இதோ அவனின் தந்தை எத்தனை வருடமாய் ஓடி கொண்டிருக்கிறார் , அதுவும் பல நாட்கள் இரவு பகல் என்று இரண்டு ஷிப்ட் பார்த்த நாட்கள் ஏராளம்.இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று விட்டு அவரை அமர வைக்க வேண்டும்.

என்ற ஆசை அவனுக்கு இருக்க ,யாரோடும் கலந்து கொள்ளாமல் இவராக எப்படி பேசலாம் ,என்று எரிச்சல் வேறு முட்டி கொண்டு நின்றது.

"இல்லை மச்சான் தம்பி படிக்கணும்னு ஆசை படுறான் ,இன்னும் ரெண்டு வருஷம் தானே படிக்கட்டும் ,அதுக்குள்ள நிசா பாப்பா படிப்பை முடிச்சிட போறாள்.ரெண்டு பேரும் சேர்ந்தே பாத்துக்கட்டும்."என்று சங்கர் முடிக்க பார்க்கவும்

அவர் இவ்வாறு பேசவே கணேசனுக்கும் ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயம். இருப்பினும். "இல்லை மாப்பிள்ளை,இன்னும் ரெண்டு,மூணு வருசத்துல கல்யாணம் வைக்க போறோம் ,அதுனால சர்வா எல்லாம் இப்போவே கத்துக்க ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்."

"நீ சொல்லி அனுப்பிவைம்மா" என்று தங்கையிடம் கூறிவிட்டு அவரின் குடும்பம் கிளம்பி விட்டது.

இங்கு வேணி "அண்ணா சொல்றதை ஏத்துக்கிட்டு போறதுக்கு என்ன,சீக்ரம் கத்துக்கிட்டா, சீக்ரம் முதலாளியா உக்காரலாம்.உனக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகலாம்.நாளைக்கு நல்ல நாள் தான் நீ கிளம்பு"

"நீ நெனைக்குற மாதிரி போன உடனே! உன் அண்ணண் தூக்கி குடுத்துற மாட்டாரு,அவரு இருக்குற வரைக்கும் அவர் தான் முதலாளி,எல்லாத்தையும் மெயின்டைன் பண்ண ஒரு நம்பிக்கையான வேலை ஆளை தான் ரெடி பன்றாரு," என்று சதா தாய்க்கு விளக்கமளிக்கவும்,

"ஆமாடா,பின்னே!"என்று வேணி அதற்கும் ஏதோ கூற,"வேணி கொஞ்சம் தண்ணி கொண்டுவா" என்று அவரை உள்ளே அனுப்பிய சங்கர்.

"என்னைக்கு இருந்தாலும் நீ அங்க போய்தான் ஆகணும்.கார்மென்ஸ் மட்டும் இல்லை அவங்க வீட்டையும் நீ தான் பாத்துக்கணும்னு ,அவங்க பிரியப்படுறாங்க, உங்க அம்மா நிஷா தான் அவள் மருமகள்னு உறுதியா இருக்குறது உனக்கு புரியும்னு நினைக்குறேன்,இதுக்கு மேல உன்னோட விருப்பம்" என்றுவிட்டு அங்கிருந்தது நகர்ந்து விட்டார்.

மாமா இவனை வீட்டோடு மாப்பிள்ளையாக வர சொல்கிறார்.என்று தெளிவாய் தெரிகிறது.ஆனால் அவனுக்கு பிடிக்கவில்லையே!இதற்க்கு என்ன வழி என்று அப்படியே கண்ணை மூடிசோபாவில் சாய ,கண்முன்னே வானிசா இவனை பார்த்து புன்னகைத்தாள்.

அவனை அறியாமல் உதடுகள் நிஷா என்று முணுமுணுத்தது ...............

இங்கு சிவன்யா துண்டு என்று நினைத்து சர்வா முகம் ,தலை துடைத்த.... தனது ஈரமான துப்பட்டாவை,ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்து விட்டு, கழுத்தை சுற்றி போட்டு கொண்டவள் ஹாலுக்கு வர,சர்வாவின் முணுமுணுப்பு தெளிவாய் கேட்டது



வருவாள் ...........

ரெகுலரா குடுக்க முயற்சி பண்றேன் ............முடியலையே ..........என்ன செய்ய .... அதனால் என்னை மன்னிச்சு .............

நன்றி








Super ud ?
 
அப்போ சர்வாக்கு நிஷா மேல தான் விருப்பமா.. சிவா இனியாவது அவனை நினைக்காம வாழ்க்கையில முன்னேற நல்லா படிச்சு வேலைக்கு போ...
 
அவன் நிஷான்னு புலம்புறான், நீ ஏன் சிவா இப்படி இருக்க. உன் அக்கா எவ்ளோ தெளிவா இருக்கா. :love: :love: :love:
 

Advertisement

Top