Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெல்ல கரைகிறது மனம் _ அறிமுகம்

Advertisement

suba srisi

New member
Member
வணக்கம் மக்களே ❤️

நான் உங்கள்..... அப்படினு தொடங்க எனக்கும் ஆசை தான். ஆனா... நான் பெயர் மறைத்து எழுதும் முறையை தேர்வு செய்திருக்கிறேன். அதனால் இந்த போட்டி முடியும் வரை நான் யார் என்று சொல்வதை தவிர்த்து விடுகிறேன்.

இந்த தளத்தில் இது எனது இரண்டாவது போட்டி கதை. போன முறை 072 என்ற எண்ணில் கதை எழுதினேன். இந்த முறையும் அதே எண்ணில் தான் எழுத உள்ளேன். அதனால் இந்த முறையும் நான் 072 தான்.

சரி வாங்க கதைக்குள்ள போவோம்.

ஹீரோ : சர்வேஸ்வரன்

கோபக்காரன் அழுத்தகாரன் இப்படி எதுவும் இல்லாமல் சாதாரணமானவன். அவனுக்கு அவன் நியாயங்கள் சரி தவறை பொறுத்தே அவன் கோபங்கள்.

ஹீரோயின் : உதிரமலர்

மென்மையும், அதீத பொறுமையையும் ஒருங்கே கொண்டவள்.

மாமா பொண்ணு, அத்தை பையன், இருவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையா வளர்ந்தவர்கள். அதனால் தானோ என்னவோ காதல் என்ற மூன்று எழுந்து அவர்களுக்கு இடையில் நிகழவில்லை. நிகழ தொடங்கும் நேரம் அவர்கள் வாழ்க்கையும் காதலும் விதி வசம் சென்றிருக்க, அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை அவர்கள் வசப்படுமா! என்பதே கதை.

கதையுடன் தொடர்ந்து பயணித்து கதையின் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍

உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நான் உங்கள் 072

eiZGZXH70420.jpg

நன்றி ❤️
 
Top