Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 6.1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----6

அதை கேட்ட ஆதித்யாவுக்கு ஒரு நிமிடம் தாமரை முகம் தான் வந்து போனது. அய்யோ அவள் தாங்குவாளா….? அவளுக்கு இருக்கும் ஒரே உறவு அவள் பாட்டி தானே என்று யோசனை ஓடும் போதே இன்னும் அவளுக்கு சொல்ல வில்லையே என்று நினைத்தவன்.

பக்கத்தில் நின்றுக் கொண்டு இருக்கும் சத்யாவை பார்த்து “சத்யா வள்ளியம்மா பேத்தியை அழைச்சிட்டு வா….” என்று சொன்னவன் என்ன நினைத்தானே…..

“வேண்டாம் நீ இங்கே பார்த்துக் கொள். நான் போய் அழைச்சிட்டு வர்றேன்.” என்று சொன்னவன் டாக்டரிடம் “நீங்க என்ன டெஸ்ட் எடுக்கனுமோ...எல்லாம் எடுங்க பில் என் கணக்கில் சேர்த்துடுங்க.” என்று சொல்லி விட்டு தாமரையை அழைத்து கொண்டு வர அவள் காலேஜிக்கு விரைந்தான்.

போகும் ஆதித்யாவின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்த சத்யா. ஆதித்யாவின் பதட்டமும் தாமரையை அழைக்க தன்னை போ என்று விட்டு பின் நானே அழைச்சிட்டு வர்றேன் என்ற ஆதித்யாவின் பேச்சும்.காலையில் சொன்ன பெண் தாமரையா இருப்பாளா….? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

நேற்று கூட அந்த தாமரையை பார்த்தவுடன் ஆதித்யா எழுந்து நின்றது நியாபகத்தில் வந்ததும் சந்தேகம் உறுதியாக மாறியது. தலைவர் மனதில் இருக்கும் பெண் தாமரை தான். சந்தேகமே இல்லை.

தாமரை தங்கள் ஜாதி இல்லை. அதனால் தான் தலைவர் யோசிக்கிறார். தலைவர் வசதி எல்லாம் பார்க்கும் ஆள் கிடையாது. ஆனால் இந்த பதவியை தலைவர் எவ்வளவு விரும்புகிறான் என்று தெரியும் அப்படி இருக்கும் போது தலைவர் தாமரையை சேர்வது எப்படி என்று யோசனையில் மூழ்கினான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ஒரே நாளிலேயே தாமரையை மணக்க முடியாது என்பதிலேயே தலைவர் எவ்வளவு அப்செட்டாகி விட்டார். தாமரை கிடைக்க விட்டால் கண்டிப்பாக தலைவரை பார்க்க முடியாது.

இதற்க்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு டாக்டர் வந்து “அந்த அம்மாவுக்கு நினைவு வந்து விட்டது. விடாமல் தாமரை தாமரை என்று புலம்பிட்டே இருக்காங்க.” என்றதும்.

“தாமரை அவர்கள் பேத்தி தான் டாக்டர். அவர்களை அழைச்சிட்டு வரத்தான் தலைவர் போய் இருக்கார்.” என்றதும் அந்த டாக்டர் சந்தேகத்துடன் “இந்த அம்மா அய்யாவுக்கு ரொம்ப வேண்டியவங்களோ…?” என்ற கேள்விக்கு.

“ஏன் கேட்கிறிங்க.”

“இல்லை அந்த அம்மாவை ஆதித்யா சாரே தூக்கிட்டு வந்தார். அதுவும் அவர் முகத்தில் இருக்கும் பதட்டம் அதை வைத்து தான் கேட்கிறேன்.” என்று சொன்னவர்.

மேலும் இழுத்த வாரே…”இப்போது அவர்களின் பேத்தியை ஆதித்யா சாரே கூட்டிட்டு வர போய் இருக்காருன்னா ….” என்று இழுத்தவாறு நிறுத்திய டாக்டரை பார்த்து “ நீங்க நினைப்பது போல் நெருக்கமான உறவு எல்லாம் இல்லை.

தலைவர் வீட்டில் பத்து வருடமாக சமைக்கிறாங்க அந்த பாசம் தான். அப்புறம் அவர் பேத்தியை என்னை தான் அழைச்சிட்டு வர சொன்னார். நான் தான் அந்த பெண்ணுக்கு என்னை தெரியாது.

அதனால் என்னை நம்பி வருமா என்று சந்தேகமா இருந்தது. அதே தலைவர் என்றால் அவர் வீட்டில் வேலை பார்ப்பது அந்த பொண்ணுக்கு தெரியும். அதனால் தான் நீங்களே போனால்; நல்லது என்று சொன்னேன். அதற்க்கே தயங்கிக் கொண்டு தான் போனார்.” என்று மழுப்பலாக ஏதோ சொல்லி அவரை அனுப்பி விட்ட பிறகு தான் சத்யாவுக்கு மூச்சே சீராக விட முடிந்தது.

இந்த தலைவர் என்ன காரியம் செய்துக் கொண்டு இருக்கிறார். இவர் செய்வதை எதிர் கட்சியாட்கள் பார்த்தால் பிரச்சனை தானே என்று யோசித்தவன் இதை இப்படியே வளர விடுவது தலைவர் பதவிக்கு தான் ஆபத்து.

அதனால் இதற்க்கு கண்டிப்பாக ஏதாவது தீர்வு யோசிக்க வேண்டும் என்று இங்கு சத்யா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஆதித்யா தாமரையின் காலேஜில் எச்.ஒ .டியின் அறையில் அமர்ந்து இருந்தான்.

ஆதித்யாவை தெரிந்த அந்த எச். ஒ.டி உடனே தாமரையை அழைத்து வர சொல்லி “ஏதாவது சாப்பிடிறிங்களா சார்.” என்றதற்க்கு மறுத்து விட்ட ஆதித்யாவின் நினைவு முழுவதும் இதை எப்படி தாமரை தாங்கிக் கொள்வாள் என்பதிலேயே இருந்தது.

எச்.ஒ.டியின் அறைக்கு வந்த தாமரை அங்கு ஆதித்யா இருப்பதை பார்த்ததும் இந்த தடவை மந்திரி மகள் எஸ் ஆயிட்டா போலவே….அது தான் எம்.எல்.ஏ சாரே வந்து இருக்கார் என்று நினைத்தாளோ ஒழியே தன் ஆயாவுக்கு ஏதாவது ஆகி இருக்குமா என்று ஒரு கடுகளவும் நினைக்க வில்லை.

தாமரையை பார்த்த ஆதித்யா எச்.ஒ . டிக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லி விட்டு வெளியே அழைத்து சென்றவன் தன் கார் வரும் வரை ஒன்றும் சொல்லாது இருப்பதை பார்த்த தாமரை

“சார் என்ன எங்கே அழைச்சிட்டு போறிங்க.” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது அவளை காரில் ஏற்றியவன் தானும் அமர்ந்து காரை ஸ்டாட் செய்ததும் அவன் காரின் முன்னும் பின்னும் நின்று இருந்த இரண்டு காரின் துணையோடு ஹாஸ்பிட்டல் வந்து நின்றதும் தான் தாமரையைய் பார்த்தான்.

கார் ஹாஸ்பிட்டல் முன் வந்து நின்றதும் தான் தாமரைக்கு சந்தேகமே வந்தது. ஒரு வேளை ஆயாவுக்கு உடம்பு சரியில்லையா என்று.நேற்றிலிருந்தே அவர்கள் ஒரு மாதிரியாக தானே இருந்தார்கள் என்ற பயத்தோடு ஆதித்யாவை பார்த்த தாமரை “சார் ஆயாவுக்கு….” என்ற அவள் குரலே அவள் பயத்தை காட்ட ஆதித்யாவுக்கு அப்படியே அவளை இழுத்தணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

ஆனால் தான் இருக்கும் இடமும் தான் வகிக்கும் பதவியும் அதற்க்கு தடையாக இருக்க “பயப்படதே தாமரை ஆயாவுக்கு ஒன்றும் இல்லை. வீட்டில் மயக்கம் வந்து விழுந்துட்டாங்க உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தாச்சி.

டாக்டர் எல்லாம் பார்த்துட்டு தான் இருக்காங்க. கவலை படதே தாமரை ஏதாவது இருந்தாலும் வெளியில் இருந்து அதற்க்கு உண்டான ஸ்பெஷலிஸ்ட்டு கூட்டி வந்து காமிச்சிடலாம்.”

என்ற அவனின் ஆறுதலான வார்தையிலேயே ஏதோ பிரச்சனை என்று புரிந்துக் கொண்ட தாமரை பேச வாய் திறந்தும் வார்த்தை வெளியே வராது அடைக்க தன் தொண்டையை கணைத்து சரி படுத்திக் கொண்டவள்.

“என்ன பிரச்சனை சொல்றாங்க.”

அவள் பேச கூட கஷ்டப்படுவதை பார்த்த ஆதித்யா அவளை ஆறுதல் படுத்த நீண்ட தன் கையை கஷ்டப்பட்டு அடக்கியவன் “இப்போ தானே சேர்த்தோம் உடனே எப்படி சொல்வாங்க.” என்று அறிவு பூர்வமாக பேசுவதாக நினைத்து கேட்க.

பி. எஸ் சியில் நர்ஸிங் கோர்ஸ் படித்துக் கொண்டு இருக்கும் தாமரை மருத்துவத்தை பற்றி தெரிந்தவளாய் “கன்பாம் பண்ண மாட்டாங்க. ஆனால் எந்த நோய் இருக்கும் என்று சந்தேகம் வந்தால் தான் அதற்க்கு உண்டான டெஸ்ட்டுக்கு எழுதி கொடுப்பாங்க.”

என்ற அவளின் பேச்சை கேட்டதும் தான் அவள் படிப்பே நினைவு வந்தவனாக பேச்சை மாற்றும் பொருட்டு “எல்லாம் இங்கயே பேசுடுவீயா….? வா உள்ளே போய் உன் பாட்டியை பார்க்கலாம்.”என்று சொன்னதும் ஒன்றும் பேசாது அவன் பின் செல்ல.

அங்கு இவர்களின் வருகைக்காக காத்திருந்த சத்யா இவர்கள் இருவரும் ஜோடியாக வருவதை பார்ப்பதற்க்கு நன்றாக இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்து விட போகிறது என்று நினைத்து அவர்கள் அருகில் ஓடியவன் அவர்கள் இருவருக்கும் இடையே நின்றுக் கொண்டான்.

அவனின் செயலை வியப்பாக பார்த்த ஆதித்யாவிடம் கண்ணாலயே ஹாஸ்பிட்டலின் சீப் டாக்டரை காமித்தவன் ஆதித்யாவின் காதில் “இது பொது இடம் தலைவா….” என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் ஆதித்யாவை தாமரையின் அருகில் இருந்து அழைத்து சென்றவன் எதிர் புறமாக தன்னருகில் நிறுத்திக் கொண்டான்.

இதை ஏதும் கவனிக்கும் நிலையில் தாமரை இல்லாது டாக்டரை நோக்கி சென்றவள் “டாக்டர் ஆயா உடம்புக்கு என்ன “ என்ற கேள்விக்கு பதில் அளிக்காது ஆதித்யாவை பார்க்க.

ஆதித்யா டாக்டர் பார்ப்பதை பார்த்ததும் தாமரையிடம் டாக்டர் சொல்லும் போது அவள் அருகில் தான் இருக்க வேண்டும் என்று கருதி அவர் அருகில் செல்ல விழையும் போதே அதை தடுத்த சத்யா .

“வேண்டாம் தலைவா….நானே போறேன். ஏற்கனவே அந்த ஆளுக்கு லைட்டா சந்தேகம் வந்து விட்டது.” என்று சொல்லி விட்டு சத்யா டாக்டரிடம் சென்றான்.

அப்போது தான் ஆதித்யாவுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. தன் மனதில் இருக்கும் பெண் தாமரை என்று நாம் சத்யாவுக்கு சொல்லவே இல்லையே….அவன் எப்படி கண்டு பிடித்தான். அப்போ மற்றவர்கள் கண்டு பிடிக்கும் அளவுக்கு இருக்கிறது நம் செயல்.

இதே எதிர் கட்சியாட்கள் பார்த்திருந்தால் இதை வைத்தே பிரச்சனை செய்து விடுவார்களே….என்ற தன் பதவியின் யோசனையில் வள்ளியம்மாவின் உடல் நிலையையும், அதனால் தாமரைக்கு ஏற்படும் துக்கத்தை மறந்தவனாக இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போக வேண்டும் என்ற எண்ணத்தில் சத்யாவை பார்க்க.

சத்யாவும் வள்ளியம்மாவின் உடல் நிலையை பற்றி அனைத்தையும் டாக்டர் தாமரையிடம் சொல்லி விட்டதால் ஆதித்யாவை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவில் அவனும் ஆதித்யாவை பார்க்க.

இருவரும் ஒரு சேர போகலாமே...என்ற கண் ஜாடையிலேயே முடிவு செய்து கொண்டனர்.இப்போது ஆதித்யாவுக்கு கண் முன் தன் பதிவியே நின்றதால் தாமரையை சாதரணமான பார்வையில் பார்க்க முடிந்தது.
 
Top