Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 6.2

Advertisement

Admin

Admin
Member
தாமரையின் அருகில் வந்த ஆதித்யா “ உன் கிட்ட டாக்டர் வள்ளியம்மாவின் உடல் நிலையை பற்றி அவரின் சந்தேகம் என்ன என்று சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன். இது என் ஹாஸ்பிட்டல் தான் அதனால் பணத்துக்கு கவலை பட தேவையில்லை.

இங்கு இருக்கும் டாக்டர் உன் பாட்டிக்கு நல்ல வைத்தியம் தான் பார்ப்பார்கள். சத்யா வந்து போய் கொண்டு தான் இருப்பான்.” என்று ஒரு அன்னிய தன்மையில் பேசி விட்டு அவளிடம் விடை பெற.

தாமரையும் தலையசைத்ததோடு சரி. இதை அனைத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த சீப் டாக்டர். சீ நான் நினைத்தது போல் ஒன்றும் இல்லை. ஆதித்யா அந்த பாட்டியிடம் காண்பித்த அக்கரையை கூட இந்த பெண்ணிடம் காண்பிக்கவில்லை. என்று நினைத்தவர் அந்த இடத்தை விட்டு அகல.

ஆதித்யாவும் இதே தான் நினைத்துக் கொண்டு இருந்தான். அந்த டாக்டர் தான் தாமரையின் அருகில் நின்றதில் இருந்து தான் தாமரையிடம் பேச பேச தன்னையும் தாமரையயும் ஒரு ஆராய்சி பார்வை பார்த்துக் கொண்டே தான் இருந்தார்.

தாமரையின் மனதில் தன்னை பற்றி எதுவும் இல்லை. அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் நான் நல்ல வேளை சத்யா என்னை எச்சரித்ததால் நான் தாமரையுடன் சாதரணமாக பேச முடிந்தது.

இல்லை என்றால் அந்த டாக்டரின் சந்தேகம் என் செயலால் உறுதியாகி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தன் வீட்டுக்கு வந்தவன். வீட்டில் மற்ற வேலையாட்கள் அவன் வந்ததும் சாப்பாடு பறி மாறினாலும் அவனால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை.

அதற்க்கு காரணம் என்ன தான் தன் பதவி தனக்கு முக்கியம் என்று ஹாஸ்பிட்டல் விட்டு வந்து இருந்தாலும் அங்கு உடல் நிலை சரியில்லாமல் படுத்துக் கொண்டு இருப்பது.பத்து வருடமாக சம்பளத்துக்கு வேலை பார்க்காமல் சொந்த பிள்ளை போல் சமைத்து பாசமாக அருகில் நின்று உணவு பரிமாறியவர் அல்லவோ…

அது மட்டும் இல்லாமல் தன் ஒரே சொந்தம் படுக்கையில் இருக்க யாரும் இல்லாமல் வேதனையில் இருப்பது அவன் மனதிற்க்கு இனியவள் ஆயிற்றே….அப்படி இருக்கும் போது சாப்பாடு எப்படி தொண்டைக் குழியில் இறங்கும். தாமரையை நினைத்த மாத்திரத்தில் பாதி சாப்பாட்டில் தட்டிலேயே கைய் கழுவியனை பார்த்த சத்யா எதுவும் பேசாமல் அவனும் பாதி சாப்பாட்டில் எழுந்தான்.

சத்யா சாப்பிடாமல் எழுவதை பார்த்து “நீ சாப்பிடு.” என்றதற்க்கு ஒன்றும் சொல்லாது “வா தலைவா” என்று அவன் அறைக்கு அழைத்து சென்றவன் தானே கபோடில் இருக்கும் சரக்கை எடுத்து ஆதித்யாவுக்கு ஊத்தி கொடுக்க ஆதித்யாவும் மறுத்து எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்தான்.

அவன் சுயநினைவு இழக்கும் மட்டும் ஊத்திக் கொடுத்தவன் அவனின் நினைவு சரிந்து அவன் படுக்கையில் விழவும் அவனை நேராக படுக்க வைத்து பேட்சீட்டை போர்த்தியன் ஏசியை ஆன் செய்து விட்டு.

டேபிளில் இருக்கும் மிச்ச சரக்கை ஒரே முழுங்கில் விழுங்கியவன்.ஆதித்யாவை பார்த்துக் கொண்டே தலைவரை இப்படியே விடுவது அவருக்கு சரியில்லை. தலைவரின் பதவிக்கும் ஆபத்து வரக்கூடாது அதே சமயம் தாமரையும் அவருக்கு கிடைக்க வேண்டும்.

அதற்க்கு நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும். ஒன்று மட்டும் அவனுக்கு நன்றாக விளங்கியது .அவன் பார்த்த ஒரே நாளிலேயே அவன் கண்டு கொண்டது இது தான். ஆதித்யா என்ன தான் தன் பதவி முக்கியம் என்று தாமரையை விட்டு விலகினாலும்,அவர் மனது தாமரையின் நினைவாகவே இருப்பது தான் உண்மை.

அதனால் ஏதாவது செய்து தாமரையை தலைவருடன் சேர்க்க வேண்டும். அதோடு அவர் பதவிக்கும் ஆபத்து வரக் கூடாது என்று நினைத்தான். அந்த நிலையில் ஆதித்யாவை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாமல் தானும் ஒரு தலைகாணியை கீழே போட்டு படுக்களானான் அந்த உண்மையான தொண்டன்.

விடியளில் எதுவும் நடவாது போல் இருந்த ஆதித்யாவை பார்த்து தானும் ஏதும் கேட்காமல் கட்சியின் வேலையை பார்க்க சென்றான் சத்யா. ஆதித்யாவும் அன்று பகல் முழுவதும் தன் வேலையில் ஈடுபடுத்திக் கொண்டவன் இரவானால் திரும்பவும் தாமரையின் நினைவில் வாடா சத்யாவும் அவன் நினைவை மறக்கடிக்கும் தன் பாணியை கைய்யாண்டு அவனை உறக்கத்தில் ஆழ்த்திய பின் அவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஆனால் உறுப்படியாக ஒரு யோசனையும் தான் அவனுக்கு எழவில்லை. ஒரு சமயம் அந்த கருமம் பிடித்த சரக்கு அடிக்காமல் யோசித்து இருந்தால் ஏதாவது யோசனை வந்து இருக்குமா என்று தெரியவில்லை.

இங்கு இவர்களிடையே தான் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் ஹாஸ்பிட்டலில் வள்ளியம்மாவின் உடலை பரிசோதித்த சீப் டாக்டர் தாமரையிடம் “சாரிம்மா உங்க பாட்டிக்கு ப்ளட் கேன்ஸர் கடைசி ஸ்டேஜில் இருக்கு.என்ன தான் அவர்களுக்கு நல்ல மருத்துவம் பார்த்தாலும் பிழைப்பது கஷ்டம் தான்.அதுவும் இல்லாமல் நம் மருந்து அவர்களின் உடல் ஏற்காமல் போவதற்க்கு அவர்களின் வயதும் ஒரு காரணமாக இருக்கிறது.” என்று ஒரு டாக்டராய் சொல்லி விட்டு போய் விட்டார்.

தாமரையை பார்த்த முதல் பார்வையிலேயே ஆதித்யாவுக்கு பிடித்தது போல் அந்த சீப் டாக்டரின் மகன் சுரேந்தருக்கும் பிடித்து போய் விட. தன் தந்தையை போல் ஒரு மருத்துவனாய் இல்லாமல் அவளின் மனதுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டும் என்று நினைத்த அந்த இளம் டாக்டர் தன் தந்தை சென்ற பின்.

“கவலை படதே தாமரை நாம் முயன்ற மட்டும் நல்ல வைத்தியம் கொடுப்போம்.” என்றவனை பார்த்து “கொடுத்தால் பிழைத்துக் கொள்வார்களா….?”

என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் இருப்பவனை பார்த்து “முடியாது தானே டாக்டர். அப்போ ஒன்று செய்யுங்க. என் ஆயாவுக்கு வலி இல்லா மரணத்தையாவது தாங்க.”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாது அவளை பார்க்க “என் ஆயாவை நாளையே டிச்சார்ச் செய்து விடுங்க.ம் வலி நிவாரணி மாத்திரை நிறைய தாங்க. அப்புறம் தூக்க மாத்திரையும் கொஞ்சம் அதிகமா கொடுங்க.” என்றதும்.

முதலில் கேட்ட வலி நிவாரணி மாத்திரை எதற்க்கு என்று புரிந்துக் கொண்டன். அடுத்து கேட்ட தூக்கமாத்திரை எதற்க்கு என்று யோசித்தவன். பின் ஏதோ நினைத்தவனாய் “தாமரை என்ன இது சில்லியா யோசிச்சிட்டு.பிரச்சனைக்கு தற்கொலை தான் முடிவு என்றால் நம் நாட்டில் முக்கால் வாசி பேர் சாக வேண்டியது தான்.” என்று கோபத்துடன் பேசியவனை புரியாது பார்த்தவள்.

பின் புரிந்ததும் விரக்தியாக சிரித்துக் கொண்டே “கவலை படாதிங்க டாக்டர் நான் சாக மாட்டேன். என் ஆயா என்னை அந்த அளவுக்கு கோழையா வளர்க்கலே….” என்றவளை பார்த்து கைய் நீட்டி பிராமிஸ் என்று கேட்க.

தாமரையும் பிராமிஸ் என்று அவன் கையில் அடித்து சத்தியம் செய்தாள். தனியே இருக்கும் தாமரைக்கு சுரேந்தரின் அந்த பேச்சி மிக ஆறுதலாக இருந்தது.அன்று சுரேந்தர் டியூட்டி முடிந்தும் வீட்டுக்கு செல்லாது ஆஸ்பிட்டலிலேயே தாமரைக்காக இருந்தவன்.

அவள் மறுக்க மறுக்க ஹாஸ்பிட்டல் கேன்டினுக்கு அழைத்து சென்று இரண்டு இட்லி அவளை சாப்பிட்ட பிறகே அவளை பாட்டியின் அருகில் அமர வைத்தான்.

மூன்று நாள் தன்னை கட்டு படுத்திக் கொண்ட ஆதித்யாவுக்கு நான்காவது நாள் முடியாமல் போக சத்யாவை பார்த்து “ஹாஸ்பிட்டலுக்கு போகனும் காரை எடு .” என்றதும்.

ஏதோ பேச முயன்ற சத்யாவை பார்த்து “என்னால் முடியலை சத்யா.” என்று குரல் உடைய பேசியவனை பார்த்து அதிசயத்துடன் நின்றான்.அதிசயத்து தான் நின்றான்.

ஆதித்யாவை எப்போதும் ஒரு நிமிர்வோடு தான் பார்த்திருக்கிறான். அப்படி பட்டவனை இப்படி என்னால் முடியவிலை என்ற வார்த்தை அவனை ஏதோ செய்தது. கண்டிப்பாக எப்படியாவது அந்த பெண்ணை தலைவரோடு சேர்த்து வைத்திட வேண்டும் என்ற முடிவோடு காரை எடுத்தான்.

ஆதித்யாவும் சத்யாவும் ஹாஸ்பிட்டல் உள்ளே சென்று சீப் டாக்டரை பார்த்து வள்ளியம்மாவின் உடல் நிலையை விசாரித்து விட்டு . பின் அவர் இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான். அங்கு வள்ளியம்மா மருந்தின் உதவியுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்தவன் அவரை தொந்தரவு செய்யாது அந்த இடத்தை விட்டு வெளியில் வந்தான்.

சத்யாவிடம் “தாமரை எங்கு சென்று இருப்பாள்.” என்று ஆதித்யா கேட்பதற்க்கு எந்த பதலும் சொல்லாது ஒரே இடத்தில் அவன் பார்வை செல்வதை பார்த்த ஆதித்யா நம் பேச்சு கூட காதில் விழாது இவன் எங்கு பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று ஆதித்யாவும் அவன் பார்வை சென்ற இடத்தில் பார்த்தான்.

முதலில் சாதரணமாக தன் பார்வையை செலுத்திய ஆதித்யா அங்கு அவன் கண்ட காட்சியில் கண்கள் இரண்டும் இரத்தமென சிவக்க ஆத்திரத்துடம் முறைத்து பார்த்தான்.

அங்கு சுரேந்தர் தாமைரையின் கையை பிடித்து அதில் டீ கப்பை திணித்துக் கொண்டு இருந்தான்.
 
Top