Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔🥺💔உயிரில் உறைந்த உறவே! 💔🥺💔

Advertisement

Narmadha mf

Well-known member
Member
99b62fa72d463624a8f5744ccdb4718d.jpg
கதைக்களம் மிகவும் அழுத்தமானதாகவும் அதே சமயம் கண்களில் கண்ணீர் மழையை வரவழைத்து உணர்ச்சி கடலில் தத்தளிக்கவும் செய்தது😢😢😢😢😢😢🥺🥺🥺🥺🥺🥺🥺.

ப்ரீத்தி : ❤️‍🔥❤️‍🔥
மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேணுமம்மா ! என்றார் கவிமணி ஆம் எவ்வளவு உண்மை ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே! பெண் என்னும் மகாசக்தி நினைத்தால் அனைத்தும் சாத்தியமே !இங்கு வசுமதி என்னும் அபலை பெண்ணை ஏமாற்றி சீரழித்து இருமகவை சுமந்து தன்னை நாடி வந்த போது இரக்கமற்று வீரம் கொண்டு அடித்து விரட்டிய அரக்க ஜென்மமாகிய

தன் பிறப்பிற்கு காரணமானவை அழிக்க அனைத்து தந்திரங்களையும், வல்லவனுக்கு வல்லவனாக வீறு கொண்டு தனக்கும் தன் தாய்க்கும் நேர்ந்த அவலத்தை வலிக்க, வலிக்க துடிக்கத் துடிக்க கொஞ்சமும் கருணை இன்றி வதம் செய்ய பிறப்பெடுத்தவள் ப்ரீத்தி என்னும் காரிகை.

இவளது துணிச்சலும் அசாத்திய நடத்தையும் நெஞ்சை பயம் கவ்வசெய்தது. தன்னையே கருவியாக்கி தன் நிலையை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ சிறிதும் யோசிக்காமல் நடந்த அநீதியை பொறுக்காமல் முழுவதுமாக தன்னிலை மறந்து பிரகாசத்திற்கு தீராத ரண வலியை கொடுத்து நடைபிணமாக்கி அவனை அழிக்க இவள் சென்ற எல்லைகள் எல்லையை கடந்தது. நிச்சயம் இப்படி ஒரு வெறித்தனம் பிரகாசத்திரம் கூட காண முடியவில்லை.

சரணுக்கு நடந்த கொடுமை வைதேகி அவளது மகள் மீதான அரக்கனின் கொடுஞ்சொற்கள், சிதம்பரம் ஐயாவின் மரணத்திற்கு பழிக்கு பழி என்று இவள் தன் காரியத்தின் வீரியத்தை வசமாக்கியது மூச்சடைக்க செய்தது. எந்த ஒரு பெண்ணும் துணியாத செயலை செய்ய இவள் துணிந்ததைக் கண்டு அகமும் புறமும் நடுக்கம் கொள்கிறது.. தன்மதிப்பைக் கெட்டு திருமணம் ஆகாமல் வாரிசை சுமந்து தீராத வலியை பிரகாசத்திற்கு கொடுக்க துணிந்து செயல்படுத்திய முறையற்ற செயல்கள் அனைத்தும் என்ன சொல்ல நிச்சயம் மன உறுதியும் இலக்கை அடைய துளியும் மனிதமற்ற இவளது செயல்கள் அசாத்தியமானவையே😰😰😰😰😰.

மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் ஒரு பாவமும் செய்யாத சரண் மற்றும் கீர்த்தியை இவள் படுத்திய பாடு இவள் மீதான நல்லெண்ணத்தை கீழ் இறக்கியது😞😞😞😞😞😞.

பத்து வருடம் காதல் என்றும், தன்னைத்தான் முதலில் சரண் பார்த்தான் என்றும் தன்னை விடுத்து தங்கை கீர்த்தியை தேர்ந்தெடுத்தான் என்றும் தன் ஒரு தலை காதல் மீதான இவளது செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. அனைத்தையும் விட கீர்த்தி என்ற பெயரில் ஆள் மாறாட்டம் செய்து சரணுடன் எல்லை மீற துணிந்து பலமான காயங்களையும் அவமானங்களையும் சந்தித்து இரு வாரங்கள் சரனை பித்து பிடிக்க வைத்து தன் நிலையிலிருந்து பின் வாங்காமல் அவளது வயிற்றில் சரணுக்கே தெரியாமல் அவனது குழந்தையை பெற இவள் வெறிகொண்டு கதறி பார்வதியிடமும் நடந்து கொண்ட முறைகள் அனைத்தும் மிகவும் கருணையற்றது..

பிரகாசத்தின் உதிரம் என்பதை நிரூபித்து காட்டிவிட்டாலே என்று இவள் மீது ஆதங்கம் அதிகரித்தது எப்படி முடிந்தது இவளால் தன் உடன் பிறந்த தங்கையின் காதலை அழித்து கீர்த்தியை மனதளவில் பாதிப்படையை செய்து வலியை கொடுத்து ஊரை விட்டு ஓட வைத்த செயல்கள் எல்லாம் கொடுமையின் உச்சம்..
இவள் தன் தவறை உணர்ந்து இருவர் வாழ்விலிருந்தும் வெளியேற நினைத்த தருணம் கடவுள் போட்ட கணக்கின்படி விஷ்வாவின் வரிசை இவள் சுமப்பதை அறியும் நிகழ்வும் அவனுடன் வாழ்க்கை பந்தத்தில் வலுக்கட்டாயமாக இணைத்த விதியின் வலிய செயலும் மேலும் மிரட்சியையும் வியப்பையும் ஒருங்கே கொடுத்தது😯😯.

வாழ்க்கையில் அவரவர் எண்ணத்தின் படி வாழ்ந்து விட்டால் இங்கு தெய்வங்களும் மனிதமும் என்னாவது ப்ரீத்தியின் கடந்த காலம் மிகவும் கொடுமையானவையே பதின்பருவ வயதில் இவள் சந்தித்த அவமானங்களும் தன் தாய் பட்ட வேதனைகளும், தனக்கென ஒரு அன்பான அரவணைப்பான வாழ்க்கைத் துணையாக சரணை இவள் மனதளவில் நேசித்ததின் விளைவும் விவேகத்துடன் இவள் செயல்பட்டாலும் நிதானத்துடன் செயல்படாமல் போனதன் விளைவே இங்கு நல்லுள்ளங்களும் காயம் கொண்டு கதறி நிற்கும் நிலையை அடைய காரணமாகியது😢😢😢 எல்லாம் விதிப்படியே என்ன சொல்ல☹️☹️☹️☹️☹️.


சரண் -கீர்த்தி🥺🥺🥺🥺

சரண் : பிரகாசத்தால் பல கொடுமைகளையும் அவமானங்களையும் இழப்பையும் சந்தித்தது ஏராளம். காதல் நிச்சயம் தெய்வீகமானது தான் ஆனால் அந்தக் காதலே மிக மிக அதிகமான வலியையும், ஏமாற்றத்தையும் இவனுக்கு கொடுத்தது.. ப்ரீத்தி கீர்த்தியாக இடம் மாறி இவனை அடைந்த போது தன்னவளின் நிலையை பார்த்து பதறி அவளுக்கு உறுதுணையாக இவன் நடந்து கொண்ட விதம் மனதை நெகிழ்ச்சியாக்கியது, உருவத்தில் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டிருந்தாலும் தன்னவளின் பிரத்தியேக குணத்தை தேடி தோற்றது எல்லாம் பாவமாக இருந்தது. நிறைவில் கீர்த்தியை கண்டுபிடித்து தனக்கான நிலையை அறிய அவளையும் காயப்படுத்தி தன்னையும் காயம் செய்து கொண்ட நிலை எல்லாம் கண் கலங்கச் செய்தது.

கீர்த்தி 🥺🥺🥺🥺:
மிகவும் மெல்லிய மனம் கொண்ட பாவை இவளால் எவ்வளவு அதிர்ச்சியை தான் தாங்க இயலும் கடவுளுக்கு நிகரான தந்தை பொய்த்து போன போனது இவளது நிலை சொல்லில் அடங்காதது.. தன் உடன் பிறந்தவளே தன் இடத்தில் தன் உயிரானவன் மனைவியாய், அவனது குழந்தைக்கு தாயாய் இருக்கும் நிலையை கண்டு எவ்வளவு துடித்திருப்பாள் பாவை கடவுளே இவளது வலிகளையும், கதறலையும் பார்க்கவே முடியவில்லை 😭😭😭😭, கனவில் வாழ்ந்து தவித்து அந்த நிலை மிகவும் கொடுமை 🥺🥺.

பல கட்ட போராட்டத்தின் பிடியில் இருந்து விடுபட்டு வாழ்கை பந்தத்தில் இணையும் இவர்களுக்கு காலம் தான் மருந்திட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏.

அகனெழிலன் -அலர்விழி 🥰🥰🥰
எழில் மீது மீதான மரியாதை மிகவும் உயர்ந்துவிட்டது, இக்கட்டான அசாதாரண சூழ்நிலையை திறம்பட கையாண்டு ப்ரீத்தியின் தவறை சுட்டிக்காட்டியும், தெளிவுபடுத்தியும் அவளுக்கு விளக்கிய தருணங்கள் சிறப்பானவை. ப்ரீத்தியின் நிலையை கருத்தில் கொண்டு வாஞ்சையுடன் அரவணைத்தது எல்லாம் 👌👌👌👌👌👌👌👌👌.


அலர்விழியின் தவிப்பும், சரண் -கீர்த்தி அநியாயமாக பாதிக்கப்பட்டது கண்டு பொங்கி எழுந்த தருணங்கள் எல்லாம் வாசகரின் மனதை வெளிப்படுத்துவதாகவே இருந்தது.

நாதன்: 🥶🥶🥶🥶🥶🥶
தயவுசெய்து எனக்கு தலைவலி மாத்திரையை அனுப்பிவிடுங்க ருத்ராமா தாங்க முடியல இவரது அராஜகம் 😬😬😬😬😬, பொறுமை அது இந்த மனுஷனுக்கு மட்டும் எப்போ பார்த்தாலும் எருமை மேய்க்க போய்டும் போல,.... எழில், சரண் விஷயத்தில் அவசர குடுக்கை தனம்🤧🤧🤧🤧வளர்மதியை கை நீட்டி அடிப்பதிலும் மனுஷனுக்கு அருள் வந்திடும் போல...செமையா கடுப்பாகுது.. எல்லாத்தையும் செஞ்சுட்டு தவறு புரியும் போது திருவிழாவில் தொலைந்த பிள்ளை போல இவர் காட்டும் பாவனை ஐயோ சத்தியமா முடியல 🙄🙄🙄🙄🙄.

கதைக்களம் கதற வைத்துவிட்டது, வசுமதி நிலையும், தீபிகா நிலையும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பிரகாசத்தால் ஏமாற்ற பட்டவர்களே.... பிரகாசம் தன் தவறை உணர்ந்து சிவனது திருவடியை பற்றி கதறினாலும் கருணை வடிவானவன் கருணை காட்டும் நிலையை கடந்ததன் விளைவு பிரகாசம் பிரகாசமின்றி அணைந்தது.
 
Last edited:
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
விமர்சனம் கண்கலங்க வச்சிருச்சு நம்மூ.🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
வாழ்க்கை எல்லாருக்கும் நல்ல பக்கங்களை காமிப்பது இல்லை.
பிரீத்தி மாதிரி கறைபக்கங்களையும் காமிப்பதை விமர்சனம் மூலம் செமையா தந்தீங்க.

சாங், கவர் பிக் ஆவ்சம்ப்பா.
அதுவும் கண்ணுலிருந்து ரத்தம் சொட்டும் இதயம் வாவ் வாவ் வாவ் அமேசிங்.
 
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
விமர்சனம் கண்கலங்க வச்சிருச்சு நம்மூ.🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
வாழ்க்கை எல்லாருக்கும் நல்ல பக்கங்களை காமிப்பது இல்லை.
பிரீத்தி மாதிரி கறைபக்கங்களையும் காமிப்பதை விமர்சனம் மூலம் செமையா தந்தீங்க.

சாங், கவர் பிக் ஆவ்சம்ப்பா.
அதுவும் கண்ணுலிருந்து ரத்தம் சொட்டும் இதயம் வாவ் வாவ் வாவ் அமேசிங்.
🙌🙌🙌
 
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
விமர்சனம் கண்கலங்க வச்சிருச்சு நம்மூ.🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
வாழ்க்கை எல்லாருக்கும் நல்ல பக்கங்களை காமிப்பது இல்லை.
பிரீத்தி மாதிரி கறைபக்கங்களையும் காமிப்பதை விமர்சனம் மூலம் செமையா தந்தீங்க.

சாங், கவர் பிக் ஆவ்சம்ப்பா.
அதுவும் கண்ணுலிருந்து ரத்தம் சொட்டும் இதயம் வாவ் வாவ் வாவ் அமேசிங்.
நன்றிடா பட்டு 🥰🥰🥰🥰🥰🥰
நிஜமா நல்லா இருந்துச்சாடா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு☺️☺️☺️☺️☺️.
 
Top