Skip to content
Post Views: 2,865

வாணனின் சட்டையை பிடித்த வர்ணனை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டனர்… ஆனால் வாணனோ நீ என்ன தண்டனை வேண்டும் என்றாலும் தா என்று அவனையே பார்த்து நின்று இருந்தான்….
Advertisement
“உன்னை நம்பி தானு விட்டேன்… ஆனா உன் பொண்டாட்டி ரெண்டு பேரையும் இல்லாம பண்ணிட்டாளே… என் தங்கச்சிய கூட கண்டு பிடிச்சடலாம்… ஆனா என் நண்பனை கண்டு பிடிச்சு திரும்ப கூட்டிட்டு வர முடியுமா… எல்லாத்துக்கும் நீ தான் காரணம்… நீ முதலயே உன் பொண்டாட்டிய கண்டிச்சு இருந்தா இவளோ பிரச்சனை வந்து இருக்காதே…” என்று கோவமாக கத்தினான்…
Advertisement
அவன் கத்திய பின்பு தான் அவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்பதை உணர்ந்த ஜனனி “விடுங்க… சட்டைல இருந்து கை எடு மாமா…. கோவத்துல நிதானத்தை இழக்க கூடாது… முதல்ல கை எடுங்க….” என்று கோவமாக கூறினாள்….
Advertisement
ஆனால் வர்ணன் கேட்க கூடிய நிலைமையில் இல்லை….. “விடு ஜனனி… அர்ஜுனன் முகத்தை கூட நான் கடைசியா பாக்கல… என் தங்கச்சி எங்க போனானு தெரியல… எல்லாருக்கும் இவர் பொண்டாட்டி தானு காரணம்….” என்று கோவமாக கேட்டான்… இன்னும் வாணன் சட்டையில் இருந்து அவன் கையை எடுக்கவில்லை….
Advertisement
வர்ணன் கூற கூற வாணனுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்து கொண்டே போனது… அதனால் அமைதியாகவே நின்றான்… ஜனனி தான் கஷ்டப்பட்டு வர்ணன் கையை வாணன் சட்டையில் இருந்து எடுக்க வைத்து “ப்ளீஸ் அமைதியா இருங்க மாமா… அவருக்கும் உங்களை விட அதிக வருத்தம் இருக்கும்… நீங்களும் இன்னும் அதிகம் செய்யாதீங்க…” என்று அவனுக்கு பொறுமையாக கூறினாள்….
“ச்சே” என்று வாணன் சட்டையை உதறிவிட்டு கோவமாக அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டான்… யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை… அப்போது முகுந்தனுக்கு ஒரு அழைப்பு வந்தது…
அர்ஜுனனின் வக்கீல் தான் அவனுக்கு அழைத்து இருந்தார்… “சார் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்… அர்ஜுனன் சார் வீட்டுக்கு வரேன்…. வீட்டுல இருக்குறவங்க எல்லாரும் இருக்கனும்…” என்று கூறினார்..
முகுந்தன் கொஞ்சம் தள்ளி சென்று வீட்டில் நடந்த அனைத்தும் கூறி இருந்தான்…. “சார் இப்போ சுபா சேப் தான்… பட் அவ அங்க இருக்குறது யாருக்கும் சொல்லாதீங்க….” என்று அவரிடம் கேட்டுக்கொண்டான்….
அவரும் நீண்ட யோசனைக்கு பின் அனைத்தையும் ஏற்று கொண்டு தான் பேச வேண்டிய அனைத்து விஷயத்தையும் கூறி இருந்தார்…. அது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் “வாங்க சார் எல்லாரும் இங்க தான் இருக்கோம்…” என்று கூறி வைத்து விட்டான்…
முகுந்தனின் முகத்தில் தெரிந்த யோசனையை பார்த்து அனைவரும் என்னவென்று கேட்டனர்… “தெரியல லாயர் தான் கூப்பிட்டு இருந்தாரு… முக்கியமான விஷயம் பேசனும்… எல்லாரும் வீட்டுல இருக்கனும்…. சுபா தான் முக்கியமா இருக்கனும்னு சொன்னாரு… நானும் சுபா வீட்டுல இல்லனு வீட்டுல நடந்தது பத்தி சொன்னேன்… அவர் அதை கேட்டு சொத்துக்காக துரத்தி விட்டுட்டீங்களா அப்படி இப்படினி சத்தம் போட்டு போலீஸ் கம்பளைண்ட் தரேன்னு சொல்லி மிரட்டுனாரு…. நானும் அவ லெட்டர் எழுதி வெச்சத்தை சொன்னேன்… போன் வைங்க அங்க வந்து பேசுறேன்னு சொன்னாரு…. அதை பத்தி தான் யோசிச்சேன்…..” என்று கூறினான் முகுந்தன்
அனைவருக்கும் ஒரு ஒரு யோசனை அடுத்த கால் மணி நேரத்தில் லாயர் வந்து இருக்க அவர் பேச ஆரம்பித்தார்…. “அர்ஜுனன் சார் டெத் ஆகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடி என்னை வந்து மீட் பண்ணாரு…. ஒரு சில விஷயம் பேசுனோம்… நான் கூட கேட்டேன் இப்போ இது அவசியமானு… அதுக்கு அவரு எனக்கு இப்பயே பண்ணனும்னு தோணுது சார் பண்ணிடலாம்னு அவர் சொல்லி தயார் பண்ண டாக்குமெண்ட்ஸ்… அவர் அப்படி பண்ணதுக்கு ரீசன் இப்போ புரியுது…” என்று நந்தினியை ஒரு வெறுப்பு பார்வை பார்த்து விட்டு அந்த டாக்குமெண்ட்டில் உள்ளதை கூற ஆரம்பித்தார்…
“இந்த வீடு சுபா மேடம் மேல இருக்குறது தெரியும் உங்களுக்கு…. இந்த வீட்டுல சுபா மேடம் அனுமதிச்சா தான் எல்லாரும் இருக்க முடியும்…” என்று கூறினார்…
மற்ற அனைவரும் புரிந்து கொண்டனர்…. இது நந்தினிக்காக அர்ஜுனன் எழுதி இருப்பான் என…. ஆனால் நந்தினியோ சுபாவை தப்பாக கூறுவதாக நினைத்து பக்கத்தில் நின்று இருந்த மித்ரா பிரியா இருவரிடமும் “பாத்திங்களா அவளை நல்லவனு நம்புனீங்க… இப்போ அவ இருந்தா மட்டும் தான் நீங்க இருக்கனும்னு என் தம்பிய எழுத வெச்சு இருக்கா…. அவளை போய் தலைல தூக்கி வெச்சு ஆடுறிங்க…. அவ ஒரு பேராசை பிடிச்சவ… தரித்திரம் பிடிச்சவ….” என்று பேசிக் கொண்டே போனாள்…..
பிரியா தான் அவள் பக்கம் திரும்பி “உங்க ஆக்ட்டிங்க முதல்ல நிறுத்துங்க… உங்களை பத்தியும் தெரியும் அர்ஜுன் மாமா பத்தியும் தெரியும்…. நீங்க சொன்னா முதல்ல யாரும் நம்ப மாட்டோம்….” என்று கூறினாள்…
அவர் கூறியவுடன் சசி தான் “சார் நீங்க சொல்லாம இருந்தாலும் நாங்க இங்க இருந்து இருக்க மாட்டோம்… இந்த வீடு எப்பயும் அர்ஜுனன் அண்ணாக்கும் சுபாவுக்கு மட்டும் தான் இப்பயே நாங்க கிளம்புறோம்….” என்று கூறினான்…
“இல்ல சசி சார் உங்களுக்கு சடங்கு எல்லாம் இருக்குமே… அது முடியுற வரை இருங்க… ஆனால் அர்ஜுனன் சார் சிஸ்டர் மட்டும் இங்க இருக்க கூடாது… அது தான் அவர் முக்கியமா சொல்லி இருக்காரு….” என்று கூறிவிட்டார் லாயர்….
அவர் அவ்வாறு கூறியதும் வாணனுக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது…. தன் மனைவியால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை என்று வருந்தினான்….
லாயர் கூறியதை கேட்ட நந்தினியோ “இது என் வீடு… நான் இங்க தான் இருப்பேன்” என்று கத்த தொடங்கிவிட்டாள்… ஆனால் அவளை தான் அங்கு கண்டுகொள்ள ஆள் இல்லை….
வாணன் வேகமாக எழுந்து நந்தினியை கையைப் பிடித்து இழுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்…. அவளை காரில் ஏற்றி வேகமாக மெய்யனூர் நோக்கி கிளம்பி விட்டான்… வாணன் மனநிலை அனைவருக்கும் புரிய தான் செய்தது…. அவனை நினைத்து அனைவரும் வருந்தினர்….
வேகமாக மெய்யனூர் வீட்டை அடைந்த வாணன் நந்தினியை இழுத்து வீட்டில் விட்டு “இனிமே நீ இங்க மட்டும் தான் இருக்கனும்… வீட்டை விட்டு வெளிய வந்த உசுரோட இருக்க மாட்ட மனுசியா நீ எல்லாம் த்தூ….” என்று துப்பி விட்டு அவளை அறையில் அடைத்து விட்டு ஹாலில் அமர்ந்து கொண்டான்….
அடுத்த அடுத்த நாட்கள் வேகமாய் சென்றது… நாட்கள் தான் வேகமாக சென்றது… ஆனால் அங்கு இருந்தவர்களின் மனது தான் ஒரே இடத்தில் தேங்கி விட்டது….
பதினாறாம் நாள் திதி முடிந்து அனைவரும் அந்த வீட்டில் அர்ஜுனன் சுபா ஆரவின் நினைவை சுமந்து கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்….
ஜனனியும் வர்ணனும் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டியதால் குழந்தைகள் அனைவரும் முகுந்தன் வீட்டில் தான் இருந்தனர்… ஜனனி கூறிவிட்டாள் கிரிஜா இருக்கும் வரை அங்கு குழந்தைகளை அனுப்ப மாட்டேன் என….
அனைவரும் வீட்டிற்கு நுழையும் போது வேண்டுமென்றே கிரிஜா சத்தகமாக சிரித்து “என்ன உங்க குலசாமி செத்து போயிட்டானா… அவன் பொண்டாட்டியும் யாரு கூடயோ ஓடி போயிட்டாளா… எனக்கு எதிரினு இருந்த எல்லாரும் இப்போ போயிட்டாங்க” என்று பைத்தியம் மாதிரி கத்தி கொண்டு இருந்தார்…
பாலா கிரிஜிவை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்….. அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என யாருக்கும் தெரியவில்லை…. ஒருநாள் சசியும் கர்ணனும் ஒரு வேலையாக பக்கத்து நகரத்துக்கு சென்ற போது கிரிஜா யாருமில்லா அனாதை போன்று ரோட்டில் சுற்றி திரிந்து கொண்டு இருப்பதை பார்த்து அங்கு இருக்கும் முதியோர் காப்பாகத்தில் சேர்த்து விட்டனர்…. அவர் பழைய மனநிலையில் இருந்து இருந்தால் கண்டிப்பாக சேர்த்து விட்டு இருக்க மாட்டார்கள்…. கிரிஜா தான் யார் என்பதை மறந்து சுற்றி கொண்டு இருந்தார்…. அதனால் தான் அந்த காப்பாகத்தில் சேர்த்து விட்டனர் இருவரும்…. அங்கு பக்கத்தில் ரோட்டு கடை வைத்து இருப்பவர்களிடம் கேட்ட போது “இவங்க வந்த அப்பவே என் எதிரி எல்லாம் போயிட்டாங்க போயிட்டாங்கனு கத்திட்டு தான் வந்தாங்க… நாங்க கூட பெரிய பணக்காரங்க மாதிரி இருகாங்கனு நினைச்சோம்… அவங்க அந்த கோவில்ல தூங்குனாங்க…. அதுக்கு அப்பறம் இங்க தான் சுத்திட்டு இருக்காங்க…. அவங்களை பத்தி எல்லாம் மறந்து போயிட்டாங்க…. எங்க கிட்டயும் ஹாஸ்பிடல்ல சேத்துற அளவுக்கு காசு இல்லை…. எங்களால முடிஞ்ச சாப்பாடு கொடுப்போம்…” என்று கூறி முடித்தனர்….
கேட்ட இருவருக்கும் கிரிஜாவை நினைத்து பரிவு எல்லாம் வரவில்லை… அவரை இருவரும் பெத்த கடமைக்காக காப்பாகத்தில் சேர்த்து விட்டனர்… கிரிஜாவை பார்த்ததாக முகுந்தனிடம் மட்டும் கூறி இருந்தனர்….
நந்தினிக்கும் வெளியுலகத்துக்கும் சம்மந்தம் இல்லாமல் போய் பல நாட்கள் ஆகி இருந்தது…. வாணன் தன்னுடன் ராஜம்மா மற்றும் அவரின் கணவர் இருவரையும் மெய்யனூர் அழைத்து வந்து விட்டான்… நந்தினிக்கு சாப்பாடு கதவின் ஓரத்தில் வைத்து விட்டு செல்வான்… அவள் சாப்பிட்டு இருந்தாலும் சாப்பிடாமல் இருந்தாலும் அடுத்து அடுத்த வேளை அவளுக்கு சரியாக சாப்பாடு வைத்து விடுவான்….. ஆனால் ஒரு வார்த்தை அவளிடம் பேச மாட்டான்….
தேவியின் பெற்றோரையும் இவன் தான் அடிக்கடி சென்று பார்த்துக்கொள்வான்…. அவர்கள் இருவர் தான் மிகவும் பாதிப்படைந்து இருந்தனர்… முதலில் அவர்களின் மகள் தேவியின் இறப்பு அடுத்து தற்போது அர்ஜுனன் சுபா இல்லாமல் போனது என மிகவும் சோர்வடைந்து விட்டனர்….
ஜனனியின் அப்பாவிற்கு நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து இந்தியா திரும்பி விட்டனர்… சசி ஜனனியிடம் கேட்டான் நிரவி மட்டும் என்னுடன் இருக்கட்டும் என கேட்டு பார்த்தான்…. ஆனால் அவள் விடவில்லை… என்னுடன் இருக்கட்டும் என்று பிடிவாதமாக அவளுடன் அழைத்து சென்றுவிட்டாள்….
சுபா தன்னை தேட வேண்டாம் என எழுதி இருந்தாலும் அவளை ஆளுக்கு ஒரு பக்கம் தேடிக் கொண்டு தான் இருந்தனர்…. ஊரில் உள்ள அனைவருக்கும் சுபா ஆரவ் வீட்டை விட்டு வெளியே சென்றது தெரிந்தாலும் அவளை பற்றி அங்கு யாரும் தவறாக பேசவில்லை… ஏன் அவளை தவறாக கூட அங்கு யாரும் நினைக்கவில்லை….
நாட்கள் யாருக்கும் காத்திராமல் வேகமாக சென்றது…. நந்தினி இன்னும் அறையிலேயே தான் அடைந்து இருந்தாள்… இருபது நாட்கள் வாணன் அடைத்து வைத்து இருந்தான்… அதன் பிறகு அவன் கதவை திறந்து வைத்து இருந்தாலும் அவளே அறையை விட்டு வெளியே வரவில்லை….
அவள் நடுவில் தானே கிரிஜாவின் பேச்சை கேட்டு தீய எண்ணங்களை வளர்த்து கொண்டாள்…. அதற்கு முன்பு வரை நல்லவளாக தானே இருந்தாள்…. அந்த நல் எண்ணங்கள் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருந்தது…. அவளுக்கு தான் செய்த தவறுகள் மெதுவாக புரிய தொடங்கி இருந்தது… அவளுக்கு சிவனேஸை பார்க்க ஆசை தான்… ஆனால் கடைசி தினம் அவன் அவளை பார்த்த பார்வை… அப்போது பெரிதாக தெரியவில்லை அவளுக்கு ஆனால் தற்போது செத்து விடலாம் போன்று இருந்தது… அவள் செய்த செயலுக்கு அவளே இப்போது அனைவரிடம் இருந்தும் ஒதுங்கி கொண்டாள்…
அடுத்த ஒன்றரை வருடம் வேகமாக சென்றது… ஜனனியின் அப்பா திடீரென ஹார்ட் அட்டாக் வந்து ஆறு மாதம் முன்பு தான் இறந்து இருந்தார்… அவரின் இழப்பும் அனைவரையும் பாதிப்பு அடைய செய்து இருந்தது….
அந்த இரு வருடத்தில் நடந்த அனைத்தையும் கண்மணி சுபாவிடம் கூறி முடித்து இருந்தாள்… அவளுக்கு தான் ஜனனியின் அப்பாவின் இறப்பு மட்டும் தான் வருந்த செய்து இருந்தது… மற்ற படி நந்தினி கிரஜா இருவரை பற்றியும் அவள் கவலை கொள்ளவே இல்லை….
அவளுக்கு இப்போது அவளின் மாமனை பார்க்க வேண்டும்… அது தான் முக்கியமாக இருந்தது…. ஆனால் அவன் இவளை தேடி வராமல் அவனை பார்க்க மாட்டேன் என்று முடிவு எடுத்து இருந்தாள்… கண்மணி அவளை ஊருக்கு அழைக்க தெளிவாக கூறிவிட்டாள்…. அர்ஜுனன் இல்லாமல் அந்த ஊருக்கு வர மாட்டேன் என…. அடுத்து ஒரு நாள் அங்கு தங்கி விட்டு மனமே இன்றி அய்யனார்புரம் நோக்கி மீண்டும் பயணத்தை தொடங்கினர் முகுந்தனும் கண்மணியும்…
கண்மணி இன்னும் அவனிடம் பேசவில்லை… முகுந்தன் பேசினாலும் கோவ பார்வையை மட்டும் தான் பதிலாக தந்தாள் அவள்… தற்போதும் உனக்கி “எப்படி சசி அம்மா பத்தி தெரியும் அவனுங்க ரெண்டு பேரும் என்கிட்ட மட்டும் தானு சொன்னாங்க” என்று கேட்டான்….
“ஆமா அப்படியே ரகசியமா பேசி கிழிச்சிட்டீங்க…. நடு வீட்டுல உட்காந்து பேசுனா எல்லாருக்கும் கேட்க தான் செய்யும்… வந்துட்டாங்க ரகசியம் பேசுறேன்னு” என்று கோவமாக கூறினாள்….
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி அவள் பக்கம் திரும்பிய முகுந்தன் “கண்ணம்மா என்னை பாரு” என்று மென்மையாக கூறினான்….
அவள் வேண்டுமென்றே ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி வைத்து கொண்டாள்…. ‘கண்மணி இங்க பாருடி வேணும்னு மறைக்கல… அந்த சூழ்நிலைல என்ன பண்றதுனு தெரியல…. அது தான் மறைச்சிட்டேன்…. இனிமே எதுவுமே மறைக்க மாட்டேன்” என்று கூறினான்….
அவளோ அவன் பக்கம் பார்க்காமலே “அது தான் மறைக்க வேண்டியதை மறைச்சிட்டீங்களே…. அப்போ சொல்லல சரி… அவளை நினைச்சு எத்தனை நாள் உன் நெஞ்சுல சாஞ்சி அழுது இருக்கேன்…. ஆனா நீ அழுகுறத பாத்துட்டு தானு நின்னுட்டு இருந்த” என்று அழுது கொண்டே கூறினாள்…
அவள் அழுவதை தாங்காமல் அவனே அவளின் சீட் பெல்ட்டை கழட்டி தன் பக்கம் திருப்பி அவள் கையை பிடித்து கொண்டு “கண்ணம்மா இங்க பாரு… நீ அழுகுற அப்ப எனக்கு ரொம்ப வலிக்கும் டா…. உன்கிட்ட சொல்லிடலாம்னு தோணும்… ஆனா பாப்பா அன்னிக்கு நான் பார்த்த கோலத்தை பார்த்து என்னால யார் கிட்டயும் சொல்ல முடியல…. இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும் இருக்கட்டும் டா… தயவு செஞ்சு யார்கிட்டயும் சொல்லாத… அர்ஜுனே அவளை தேடி போகட்டும்…. அதுக்கு அப்பறம் எல்லாருக்கும் தெரியட்டும்….” என்று அவளுக்கு புரியுமாறு கூறினான்…. அவளுக்கு புரிந்ததா என்று அவனுக்கு தெரியவில்லை…. அவள் கையில் ஒரு முத்தத்தை பதித்து விட்டு காரை எடுத்தான்….
கண்மணி எதையும் காண்பித்து கொள்ளவில்லை….
அய்யனார்புரத்தில் அர்ஜுனன் பற்றி டிவியில் பார்த்ததும் அவனை தொடர்புகொள்ள முயற்சி செய்தனர்… ஆனால் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை… எனவே அவர்களுக்கு தெரிந்த கமிஷனர் மூலம் அதிவீரபாண்டியனை தொடர்பு கொண்டு பேசினர்…. அவனோ அர்ஜுனனிடம் பேசிவிட்டு தான் முடிவு சொல்வேன் என கூறிவிட்டான்…
அவன் இவர்களிடம் பேச ஒத்துகொள்வானா……?!?!?!?!?…. அர்ஜுனன் சுபாவை எப்போது போய் பார்ப்பான்….?!?!?!?
error: Content is protected !!