Skip to content
Post Views: 2,608

அனைவரும் உறங்கி இருக்க பாலா மட்டும் தூங்காமல் கிரிஜா பேசியதை நினைத்து பார்த்து கொண்டு இருந்தார்…. அவருக்கு வேதனையாக இருந்தது அவரின் பேச்சு…. கல்யாணம் முடித்தவுடனே அவரை அடக்கி இருக்க வேண்டுமோ…. அவரின் பேச்சை கேட்டு இருக்க கூடாதாதோ என்று காலம் கடந்து யோசித்து கொண்டு இருந்தார்…..
Advertisement
பாலா மாரியப்பன் தேவியின் அப்பா மூவரும் வெளியில் தோட்டத்தில் இருக்கும் கல் மேடையில் அமர்ந்து பேசி கொண்டு இருக்க அப்போது தான் கிரிஜா உள்ளே வந்தார்….
பாலா அவரை பார்த்து கோவம் அடைந்து “ஒழுங்கா இங்க இருந்து போயிடு…. எந்த பிரச்சனையும் பண்ணாத…” என்று கிரிஜா பேசுவதற்கு முன்பே எச்சரிக்கையாக கூறினார்….
Advertisement
Advertisement
ஆனால் கிரிஜாவோ “என் பையன் கல்யாணத்துக்கு என்னை என்கிட்ட ஏன் சொல்லல…. பெத்த தாய் கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணி இருக்கீங்க நல்லா இருப்பிங்களா…. என்னோட சாபத்தை வாங்கிட்டு நிம்மதியா இருந்துடுவீங்களா… வயிறு எரிஞ்சி சொல்றேன் நல்லாவே இருக்க மாட்டீங்க….” என்று சாபத்தை அள்ளி குடுத்து கொண்டு இருந்தார்….
Advertisement
மேலே இருந்து பெண்கள் அனைவரும் அப்போது தான் வந்து இருந்தனர்… பாலா அவர் பேசியதை கேட்டு கன்னத்தில் அறைந்து “ஒழுங்கா இந்த இடத்த விட்டு போயிடு…. இல்ல என்கிட்ட அடி வாங்கியே செத்து போயிடுவ” என்று மிரட்டினார்…..
சுபா மீது அவருக்கு என்ன வன்மமோ தெரியவில்லை…. நேராக அவள் அருகில் வந்து திட்ட முற்படும் போது இருவருக்கும் இடையில் வந்து நின்ற அர்ஜுனன் “என் பொண்டாட்டி கிட்ட பேசுற வேலை எல்லாம் வேண்டாம்…. நீங்க யார் எங்க கூட பேச…. அவளை காயப்படுத்துற மாதிரி பேசுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று கண்களில் கோபத்துடன் கூறினான்…
அப்டியே பின் வாங்கிய கிரிஜா இன்னும் கோவமடைந்து “கர்ணன் நிஜமாவே என் புள்ள தானு… இல்ல வேற எங்கயாவது யார் கூடயோ பெத்த புள்ளய எடுத்துட்டு வந்து என் புள்ளனு சொன்னியா… அவனுக்கு ஆரம்பத்துல இருந்து என் மேல பாசமே இல்ல… அது தான் கேட்குறேன்… உன் முத பொண்டாட்டி, நான் இல்லாம வேற யாரோ உனக்கு இருந்தாங்களா” என்று நாக்கில் எலும்பு இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தார் கிரிஜா….
அனைவரும் ச்சீ என பார்த்தனர்…. பாலா கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டார்…. கிரிஜாவை கன்னத்தில் மாறி மாறி அறைந்து இழுத்து கொண்டு போய் கேட்டின் வெளியே தள்ளிவிட்டு “என் கண்ணு முன்னாடியே நீ வர கூடாது…. மீறி வந்த உன்னை கொன்னுடுவேன்” என்று கூறிவிட்டு சென்றார்….
கிரிஜா அப்போதும் அடங்காமல் மண்ணை வாரி எரிந்து “நல்லாவே இருக்க மாட்டீங்க நீங்க” என்று சாபம் விட்டு சென்றார்….
அனைவரும் ஒரு வித மனபாரத்துடன் உள்ளே சென்றனர்…. பாலா இன்னும் கோவத்தில் தான் இருந்தார்…. அவரை மாரியப்பனும் ஜனனியின் அப்பாவும் தேவியின் அப்பாவும் தான் சமதானம் செய்தனர்….
முகுந்தன் பிரியாவிடம் கர்ணனை காட்டி உள்ளே அழைத்து செல் என கூறினான்… கர்ணனின் முகம் இறுகி போய் இருந்தது…. பிரியா அவனை அழைத்து கொண்டு அறைக்கு சென்றாள்….
பின் மற்றவர்களை குழந்தைகள் பார்த்து கொண்டனர்… அவர்களின் சத்தத்தில் சுயநினைவு வந்து அதில் இருந்து மீண்டனர்….
நடந்ததை நினைத்து கொண்டே பாலா உறங்கிவிட்டார்… கிரிஜா இன்னும் பாலாவின் பூர்விக வீட்டில் தான் இருந்தார்….
அடுத்த நாள் காலை முகுந்தன் குடும்பம் மட்டும் அவர்கள் வீட்டுக்கு அதிகாலையில் சென்று விட்டு முறைப்படி கர்ணன் சுப்ரியா இருவரையும் மறுவீட்டுக்கு அழைத்து சென்றனர்….
அவர்கள் முன் செல்ல அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மற்றவர்கள் முகுந்தன் வீட்டுக்கு சென்றனர்…நேற்றைய கசப்பு மனதில் இருந்தாலும் மற்றவர்களுக்காக அனைவரும் அதை மறைத்து சந்தோசமாக இருந்தனர்….
அப்போது வர்ணன் “அண்ணா…” என்று வாணனை அழைத்தான்…. வர்ணனின் முகத்தில் கொஞ்சம் தயக்கம் ஒட்டி இருந்தது… ஆனால் யார் என்ன சொன்னாலும் என் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்ற பிடிவாதமும் இருந்தது…..
“என்ன வர்ணா… என்கிட்ட எதோ சொல்லனுமா???”… என்று கேட்டான்… அவனும் ஆம் என தலையசைத்தான்….
“சொல்லு வர்ணா… எதோ முக்கியமான விஷயமா” என்று கண்களில் கூர்மையுடன் கேட்டான் வாணன்….
“அது அண்ணா மாமாவுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போயிடுது… அங்கயும் நம்ம வீட்டுக்கும் போயிட்டு போயிட்டு வர முடியல ண்ணா… அதுனால நான் அங்கேயே தங்கிக்குறேன்….. இது மாமா அத்தை ஏன் ஜனனிக்கு கூட தெரியாது… அங்க தங்கட்டுமா ண்ணா” என்று தயக்கமாக கேட்டான் வர்ணன் ….
“உன்னோட முடிவு சொல்றியா… இல்ல என்கிட்ட யோசனை கேட்குறீயா வர்ணா…” என்று கொஞ்சம் கோவம் கலந்த வருத்தத்துடன் கேட்டான் வாணன்…
வர்ணன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்…. வாணன் தன் தொண்டையை செருமி கொண்டு “நீயும் என்னை விட்டு போறதா முடிவு பண்ணிட்டல வர்ணா… இது மட்டும் காரணம் இல்லனு தெரியும்… அந்த காரணமும் என்னனு என்னால புரிஞ்சிக்க முடியும்… அது எதுவா இருந்தாலும் என்னை மறக்காத வர்ணா” என்று கண் எல்லாம் கலங்கி கூறிவிட்டு வெளியே செல்ல முற்பட்டவணை பின்னால் இருந்து அணைத்து “உன்ன எப்படி அண்ணா மறப்பேன்…. நீ எதுக்கும் கவலை படாத ண்ணா… கண்டிப்பா கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வந்துடுவேன் அண்ணா…. நீ அழுகாத ண்ணா… என்னால தாங்க முடியாது…. கொஞ்ச நாள் தள்ளி இருக்குறது நல்லதுனு தோணுது ண்ணா…” என்று கூறினாண்…
வாணனும் திரும்பி அவனை அணைத்து கொண்டான்… அண்ணன் தம்பி பாச பிணைப்பை சந்தோசத்தோடு பார்த்து கொண்டு இருந்தனர்… அனைவர்க்கும் ஒரு வகையில் இதற்கு காரணம் தெரிந்து தான் இருந்தது… இதில் நந்தினி மட்டும் விதிவிலக்கு எதையும் கண்டுகொள்ளாமல் நின்று இருந்தாள்….
இருவரையும் உதடு பிடுக்கி பார்த்து கொண்டு இருந்த சுபா பின் வேகமாக இருவருக்கும் நடுவில் சென்று நின்று கொண்டாள்… இருவரும் அவளையும் சேர்ந்து அணைத்து கொண்டனர்…
அன்றைய நாள் முடிய வர்ணன் ஜனனியின் பெற்றோர் வீட்டுக்கு செல்லும் நாளும் வந்தது…. வாணனுக்கு உள்ளுணர்வு கூறியதோ என்னவோ வர்ணனை அணைத்து கொண்டு “என்னை மறந்துறாத வர்ணா… அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போ….” என்று கண்ணீருடன் கூறினான்…..அவன் எதுவும் கூறாமல் கண்ணீருடன் கிளப்பினான்….
ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு
ஓரம் போனதே
அண்ணன் தம்பி பாசம்
அது சோரம் போனதே
பாதையில தென்னம்புள்ள
பார்க்க யாருமில்ல
வேலியில நட்ட செடி
பூவ தேட நாதியில்ல
கண்ணுக்குள்ள விழுந்த
தூசி ஊசியானதே
பச்சை நெல்லு நாத்து
இப்போ பாசியானதே
ஒரு வருடம் சென்று இருந்தது…. மீண்டும் மித்ரா கருத்தரித்து இருக்க பிரியாவும் கருத்தரித்து இருந்தாள்… இருவருக்கும் ஒரு மாதமே இடைவெளி….
முதலில் பிரியாவுக்கு தான் தஸ்விகா பிறந்து இருந்தாள்… அடுத்த ஒரு மாதத்தில் மித்ராவுக்கு தர்ஷிகா பிறந்து இருந்தாள்….
இதில் கண்மணியும் இரண்டாவது முறை கருத்தரித்து இருந்தாள்… அவளுக்கு தஸ்விகா பிறப்பதற்கு நான்கு மாதம் முன்பு தான் யாதவ் பிறந்து இருந்தான்….
மூன்று குழந்தைகள் ஒரே வருடத்தில் பிறந்தது அனைவருக்கும் சந்தோசமாக இருந்தது…. அது மட்டுமின்றி யாரை கொஞ்சுவது என்றே தெரியவில்லை….
தஸ்விகா அழுக ஆரம்பித்தால் தர்ஷிகாவும் அழுக ஆரம்பித்துவிடுவாள்…. இருவரும் அமைதியாக இருந்தால் தன்சிகா அழுக ஆரம்பித்துவிடுவாள்… ஆள் ஆளுக்கு ஒருவரை தூக்கிக்கொண்டு சமாதானம் செய்வதே இவர்களுக்கு வேலையாகி இருந்தது….
தஸ்விகா தர்ஷிகா இருவருக்கும் அனைத்தும் ஒற்றுமையாகவே நடந்தது… இருவருக்கும் பேர் வைப்பது முதல் அனைத்தும்….
அன்று தான் இருவருக்கும் பேர் வைக்கும் விழா…. குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்…. அன்று நந்தினி கூட எந்த பிரச்சனையும் செய்யாமல் யாரையும் எடுத்து எரிந்து பேசாமல் அமைதியாக இருந்து கொண்டாள்…..
அந்த விழாவும் சந்தோசமாக முடிந்தது… அடுத்த நாள் அய்யனார் கோவில் திருவிழா அதற்கான ஏற்பாடும் ஜோராக நடைபெற்று கொண்டு இருந்தது….
அடுத்த நாள் காலை அர்ஜுனன் வீட்டில் பரபரப்பாக தயார் ஆகிக்கொண்டு இருந்தனர்… அனைவரும் அவரவர் குடும்பத்தை அழைத்து கொண்டு அய்யனார் கோவிலுக்கு சென்றனர்….
அர்ஜுனனுக்கு தான் தற்போது எல்லாம் முதல் மரியாதை தர படுகிறது…. முதல் மரியாதை, பூஜை என அனைத்தும் நல்ல விதத்தில் முடிந்து இருக்க ரா பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருந்தது….
ஆண்கள் அனைவரும் கோவிலில் இருக்க பெண்கள் மட்டும் வீட்டுக்கு சென்றனர்….
நந்தினி மட்டும் யாரும் கவனிக்காதவாறு கிரிஜா இருக்கும் வீட்டிற்கு சென்றாள்… கிரிஜாவுக்கு கடவுளே தண்டனை குடுத்து விட்டார்… ஆம் அவருக்கு ஒரு பக்கம் கை கால் இழுத்து கொண்டது…. நந்தினி தான் அவரை நர்ஸ் வைத்து பார்த்து கொண்டு உள்ளாள்….ஆனால் அவரும் திருந்தவில்லை.. நந்தினியையும் திருந்தவிடவில்லை…..
சென்ற வருடம் திருவிழா நடக்கவில்லை… முக்கிய தலைகட்டில் ஒருவர் இறந்து இருக்க அதனால் திருவிழா நடக்கவில்லை…
மக்களுக்கு மட்டும் பூஜை நடைபெற்றது…. மாலை அனைவரும் வீட்டிற்கு சென்று ரா பூஜைக்கு தயாராகி கோவிலுக்கு வந்து இருந்தனர்….
கோவிலில் கூட்டம் அழைமோதியது… சென்ற வருடம் திருவிழா நடக்காத காரணத்தினால் இந்த வருடம் கூட்டம் அதிகமாக இருந்தது….
அர்ஜுனனிடம் அருவாள் குடுத்து உருமி மேளம் அடித்து கொண்டு இருக்க “ஏய்” என கத்திக்கொண்டே அய்யனார் அர்ஜுனன் மேல் ஏறி இருந்தார்….
சிறிது நேரம் ஆக்ரோசத்துடன் அய்யனார் சாமி ஆடினார்… அதை பார்த்து அனைவரும் பயந்து போய் விட்டனர்… ஊர் மக்கள் அனைவரும் வந்து குறி கேட்க ஒரு சிலருக்கு நல்லதாகவும் ஒரு சிலருக்கு பார்த்து இருங்கள் நான் உள்ளேன் என கூறி அனுப்பி வைத்தனர்….
தலைக்கட்டு தலைவர்கள் வந்து குறி கேட்க ஒரு சிலருக்கு ஜாக்கிரதை என்றும் ஒரு சிலருக்கு கொஞ்சம் நல்லதாகவும் நான் இருக்கிறேன் என்றும் கூறினார்….
பட்டு பாட்டி அவர் முன்னாடி வந்து நிற்க “உனக்கு இன்னும் என்னை வேணும்… அது தான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே..” என்று கேட்டார்…
அதற்கு பாட்டியோ “ஐயா எல்லாத்தையும் குடுத்த… ஆனா இந்த கிழவிக்கு நிம்மதியே இல்ல ஐயா.. எதோ தப்பா நடக்க போற மாதிரியே தோணுது ஐயா” என்று கை கூப்பி கூறினார்….
சாமியோ “அதுக்கான விடையை சீக்கிரம் சொல்றேன்….” என்று கூறிவிட்டார்…..
அடுத்து முகுந்தன் கண்மணி குழந்தைகளுடன் வந்து நிற்க முகுந்தனை பார்த்து “நீ தான் எதுக்கும் கலங்காம எல்லாத்தையும் பாத்துக்கணும்…. எல்லாரையும் பாத்துக்கணும்…மன தைரியமா இரு…..” என்று கூறிவிட்டு கண்மணியை பார்த்து “உன் புருசனுக்கு பக்கபலமா இரு” என்று கூறினார்… குழந்தைகளுக்கு திருநீறு இட்டு அனுப்பினார்
சசி மித்ரா குழந்தையுடன் வந்து நிற்க மித்ராவை பார்த்து “வருசா வருசம் வந்து கேட்பியே உங்கிட்ட வந்து சேர்த்துட்டேன் போதுமா” என்று கேட்டார்….அதுக்கு மித்ரா கண்ணீருடன் “போதும் சாமி.. ரொம்ப ரொம்ப சந்தோசம்…. இதுக்கு மேல எதுவும் வேண்டாம்” என்று கூறினாள்….
சசியை பார்த்து “மூனு பொக்கிஷத்தை குடுத்து இருக்கேன் பத்திரமா பாத்துக்கோ” என்று கூறினார்…. அவனும் “கண்டிப்பா சாமி…”என்று கூறினான்…
கர்ணன் பிரியா வந்து நிற்க “சந்தோசமா இருப்பிங்க…. எல்லாரையும் சந்தோஷத்தோட வெச்சி இருப்பிங்க” என்று கூறி அனுப்பினார்…
சசி கர்ணன் இருவரையும் பார்த்து “உங்க குடும்பத்தோட ஆணிவேர் போக போகுது… நல்லபடியா வழி அனுப்பி வைங்க….” என்று கூறினார்… இருவரும் திகைத்து நின்றுவிட்டனர்…..
நந்தினி வந்து நிற்க அவளை கோவமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்து நின்றுவிட்டார்…..வாணன் வரவே இல்லை… அவன் முன் சென்று நின்று “என்ன என்னை பாக்க வரமாட்டியா… உன் துணை பண்ண தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்கிறியா…” என்று கேட்டார்…
அவன் கண்ணீருடன் நின்றான்…. “உன் மனசை இன்னும் திடம் ஆகிக்கோ… இன்னும் நீ பார்க்கவேண்டியது நிறைய இருக்கு….” என்று கூறி சென்றுவிட்டார்….
அடுத்து வர்ணன் ஜனனி இருவரும் குழந்தைகளுடன் வந்து நிற்க வர்ணனை பார்த்து “நிதானம் ரொம்ப முக்கியம்… உன்னோட கோவம் தப்பு செய்யாதவங்க மேல இருக்க கூடாது” என்று கூறிவிட்டு ஜனனியிடம் “என்ன திரும்பியும் குடும்பம் எப்போ ஒன்னு சேரும் கேட்க வந்தியா” என்று கேட்டார்….
அவளும் ஆம் என தலையசைத்து நிற்க “அது திரும்பியும் சேராது… நீ மட்டும் நினச்சா போதுமா…. மனசு கலங்காம இரு” என்று கூறிவிட்டார்….
சுபா கண்ணீருடன் ஆரவ் நிரவியுடன் வந்து நிற்க அவள் கண்ணீரை பார்த்து “இதுக்கே அழுதா நீ பாக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.. அதுக்கு கண்ணீருக்கு எங்க போவ… எந்த சூழ்நிலை வந்தாலும் உனக்காக யார் இல்லாம போனாலும் நான், நான் யார்குள்ள இருக்கேனா அவனும் உனக்காக உன்கூட இல்லாம போனா என்ன பண்ணுவ… உன் புருஷன் எப்போதும் உன்கூடவே இருக்க மாட்டான்… அவன் திடீர்னு ஒரு நாள் இல்லாம போனா என்ன பண்ணுவ… தைரியமா இருக்கனும்… உனக்காக யாரும் இல்லனாலும் உனக்காக இவன் ஒருத்தன் இருப்பான் தைரியமா இரு” என்று ஆரவை காட்டி கூறிவிட்டு அர்ஜுனன் மேல் இருந்து இறங்கி இருந்தார்….
அதை கேட்டு சுபா உடைந்துவிட்டாள்…. சாமி கூறிய “ஒரு நாள் அவன் இல்லாம போனா என்ன பண்ணுவ” அந்த வாக்கியம் அவள் காதுக்குள் கேட்டு கொண்டே இருந்தது…..
அதை நினைத்து கொண்டே சுபா மயங்கி கீழே விழுந்துவிட்டாள்…. அனைவரும் மயங்கிய அர்ஜுனனை பார்த்து கொண்டு இருக்க அவள் கீழே விழுந்த சத்தத்தில் தான் அவளை நோக்கினர்… அனைவரும் பதறி அவள் அருகில் வந்து பார்க்கும் போது கீழே விழுந்து அவளுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்து இருந்தது…..
அவளை தண்ணீர் தெளித்து எழுப்பி அங்கிருக்கும் ஒரு நர்ஸை வைத்து தலையில் கட்டு போட்டு அவளை ஒரு இடத்தில் அமர வைத்தனர்…. பின் சசி மற்றும் கர்ணனிடம் “நீங்க ரெண்டு பேரும் மித்ரா பிரியா குழந்தைங்க சுபா, பெரியவங்க எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போங்க நாங்க அப்புறம் வரோம்… யாருமே இல்லாம இருந்தா அர்ஜுனனுக்கு சந்தேகம் வரும்” என்று கூறி சுபாவை அவர்களுடன் அனுப்பி வைத்தான் முகுந்தன்….
அர்ஜுனன் மயக்கத்தில் இருந்து எழுந்து முதலில் தேடியது சுபாவை தான்… அவன் சுபா எங்கு என்ற கேள்வியோடு அனைவரையும் பார்த்தான்…. முகுந்தன் தான் “நிரவி பாப்பா அழுதுட்டே இருந்தா அதுனால வீட்டுக்கு போயிட்டா… வா நாமலும் போகலாம்” என்று கூறி அவனை கைதாங்கலாக காருக்கு அழைத்து சென்று வீட்டிற்கு சென்றனர்….
உடம்பு வலியில் சுபா அறையில் இல்லாததை கவனித்தும் கவனிக்காமல் உறங்கிவிட்டான்… அவன் உறங்கும் வரை அங்கேயே இருந்த முகுந்தன் அதன் பின் தான் கீழே சென்றான்….
அங்கு அறையில் சுபா சசியின் தோளில் சாய்ந்து அழுது கொண்டு இருந்தாள்… அவளை யாராலும் சமாதானம் செய்யவே முடியவில்லை…. பின் உறக்க மாத்திரை குடுத்து தான் உறங்க வைத்து இருந்தனர்….
அனைவரும் சாமி சொன்ன வாக்கை நினைத்தப்படியே உறங்கி இருந்தனர்…. அடுத்த நாள் காலை பட்டு பாட்டி சுபா அர்ஜுனன் குழந்தைகள் தவிர்த்து அனைவரும் எழுந்து இருக்க சுபா அப்போது தான் மெதுவாக எழுந்து அமர்ந்து அந்த அறையிலேயே குளித்துவிட்டு அர்ஜுனன் முகம் பார்க்க தைரியம் இல்லாமல் அங்கேயே அமர்ந்து இருந்தாள்… அர்ஜுனனும் எழுந்து குளித்து விட்டு ஏன் என்றே தெரியாமல் மனபாரத்துடன் கீழே இறங்கி வந்தான்…..
சசி “நேத்து என்ன ஆச்சு… சுபா எங்க… பாட்டி இன்னும் எழுந்து வரலையா” என்று கேட்டு கொண்டே பாட்டியின் அறைக்கு சென்றான்… தற்போது எல்லாம் பாட்டி நேரம் கடந்து யாரோ எழுப்பினால் தான் எழுந்து கொள்கிறார்….
“பாட்டி எழுந்துருங்க… நேரம் ஆச்சு… சாப்பிட்டு மாத்திரை போடணும்ல எழுந்துருங்க…” என்று அவரின் கையை தொட்டு எழுப்பினான்….. அவரின் கை சில் என இருந்தது… எந்த ஒரு அசைவும் இல்லாமல் படுத்து இருந்தார்…. அதை பார்த்து “பாட்டி….” என கத்திக்கொண்டே அவரின் கையில் தன் தலையை வைத்து முட்டி போட்டு அமந்துவிட்டான் அர்ஜுனன்….
அவனின் சத்தத்தில் அனைவரும் பாட்டியின் அறைக்கு வந்து இருந்தனர்… அர்ஜுனன் நிலையை பார்த்து என்னவென்று உணர்ந்து அனைவரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்
error: Content is protected !!