Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️18 (இரண்டாம் பாகம்)

நாட்கள் யாருக்கும் காத்திராமல் மூன்று மாதங்கள் வேகமாக சென்று இருந்தது… அர்ஜுனன் கொஞ்சம் கொஞ்சமாக தேறி இருந்தான்… உடம்பில் உள்ள காயம் சரியாகி இருந்தது…  கையிலும் எலும்புகள் கூடி இருந்தது…. ஆனால் காலில் உள்ள எலும்புகள் கூட தான் தாமதம் ஆகியது…



Advertisement

இந்த மூன்று மாதத்தில் ரித்திகா அர்ஜுனனிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள்… அவனை அப்பா என்று அழைக்க ஆரம்பித்து இருந்தாள்…. காருண்யா இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வந்து பார்த்துவிட்டு சென்றாலும் அவளுடன் பெரிய ஒட்டுதல் மற்றும் நன்மதிப்பு ஒன்றும் அர்ஜுனனிற்கு வரவில்லை…

அது அவளுக்கு தெரிந்தாலும் உள்ளே திட்டி கொண்டே வெளியில் சிரித்தவாரு நிற்பாள்… ஆனால் அவள் கண்களில் அந்த எரிச்சல் அப்பட்டமாக தெரியும்…

Advertisement

Advertisement

ஆனால் இந்த மூன்று மாதமும் அவனுக்கு யாருடைய கண்காணிப்பில் இருப்பது போன்று தான் இருக்கும்…  அவனுடன் ரித்திகா இருக்கும் போது தான் யாரும் இருக்க மாட்டார்கள்… ஆனால் பொன்னம்மா பாட்டி வைத்தியர் என யார் வந்தாலும் அந்த அமைச்சரின் ஆட்கள் யாரவது உடன் இருப்பார்கள்…அதுவே அவனுக்கு பயங்கர சந்தேகத்தை கொடுத்தது…

ஆனாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை… காருண்யா வரும் நேரத்தில் அவள் பேசினால் சரி இல்லை… என்று மட்டுமே பேசுவான்… மற்றபடி எதுவும் பேசிக்கொள்ள மாட்டான்…

Advertisement

ஆனால் அவன் தூங்கும் போது மட்டும் ஒரு கனவு வந்து கொண்டே இருக்கும்…. அதை பற்றி அவன் யோசித்து கொண்டே இருப்பான்… அந்த கனவில் வந்த பெண்ணை நினைத்தால் மனதே அவனுக்கு லேசானது போல் இருக்கும்…

அந்த கனவு எதுவென்றால் சுபாவிற்கு இவன் தேவியை காதலித்தது தெரிந்த பின் அவள் அவனிடம் சண்டையிட்டு விட்டு முகுந்தனுடன் அவன் வீட்டிற்கு மழையில் சென்ற கனவு தான் இது…

அவனுக்கு இந்த கனவு ஏன் வருகிறது என்று தெரியவில்லை… ஆனால் அந்த கனவில் வந்த பெண் காருண்யா இல்லை என்று மட்டும் தெரியும்…

அந்த கனவை பற்றி அவன் நினைத்து கொண்டே இருப்பான்… அந்த முகம் தெரியாத பெண்ணை நினைத்தால் அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்… பலநாள் அந்த பெணின் நினைப்புடன் மீண்டும் தூங்கி விடுவான் அவன்…

அன்று காருண்யா மட்டும் கேரளா வந்து இருக்க முதன் முதலில் அவளிடம் அர்ஜுனன் “எனக்கு அப்பா அம்மா எல்லாம் இல்லையா… யாரும் பாக்கவே வரல” என்று கேட்டான்….

அதற்கு அவளோ “உங்களுக்கு யாரும் இல்லைங்க…. உங்க சின்ன வயசுலயே இறந்து போயிட்டாங்க… நீங்க ஆசிரமத்துல தான் வளர்ந்திங்க… உங்களுக்கு அரசியல் பிடிக்கும்…  அதுல நமக்கு பழக்கம் ஏற்பட்டு காதலிச்சு அப்பா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிகிட்டோம்…. அப்பா ரெண்டு முறை எம்எம்ஏவா இருந்தாரு… இப்போ இந்த தடவ ஜெயிக்க முடியல…. அப்பாவை விட நீங்க தான் ரொம்ப வருத்தப்பட்டடீங்க…. அதுனால கொஞ்ச நாள் தனியா இருக்கேன்னு நீங்க கேரளா வரும் போது தான் இந்த அக்சிடென்ட்…” என்று சரளமாக பொய்யை கூறி முடித்தாள் காருண்யா…..

ஆனால் அவள் கூறுவதை அவன் மனது ஏற்றுக்கொள்ளவே இல்லை…  வெறுமனே சரி என மட்டும் தலையசைத்து அமைதியாகி இருந்துவிட்டான்….

அவளும் அவன் மேலும் பேசுவான் என்று எதிர்ப்பார்த்தாள் ஆனால் அவன் அமைதியானவுடன் அவனை மனதில் திட்டிக்கொண்டே வெளியேறிவிட்டாள்….

அவளுக்கு அர்ஜுனனை பிடிக்க ஆரம்பித்து இருந்தது…. லிங்கமும் இவன் ஜாடையில் இருந்தாலும் அவனை பிடிக்கவில்லை… ஆனால் அர்ஜுனன் முகத்தில் இருந்த வசீகரம் அவளை ஈர்த்து இருந்தது….

நாட்கள் அதன் போக்கில் காற்றாய் பறந்தது…. மேலும் மூன்று மாதம் சென்று இருந்தது… அர்ஜுனன் முழுவதுமாக குணம் ஆகி இருந்தான்…

காருண்யாவும் அய்யாதுரையும் அர்ஜுனனை சிவகங்கை அழைத்து செல்ல முடிவு எடுத்து இருந்தனர்…. அர்ஜுனனுக்கு அங்கு அவர்களுடன் செல்லவே மனம் வரவில்லை… ஆனால் ரித்திகா இங்கு இருக்க விருப்பம் இல்லை… அவளுக்கு தாய் பாசம் வேண்டும் என அங்கு செல்ல தீர்மானித்தான்….

சிவங்ககை செல்லும் நாளும் வந்தது…. அனைவரும் பிரியாவிடை குடுத்து அர்ஜுனன் மற்றும் ரித்திகாவை அனுப்பினர்… அந்த வீட்டிற்கு செல்லவே மனமில்லாமல் சென்று இருந்தான்…

லிங்கம் இறந்த போதே அவனின் கைநாட்டை பல வெற்று பேப்பரில் அப்பாவும் மகளும் வைத்து கொண்டனர்… அந்த வீட்டிற்கு வந்தாலும் அவனை வெளியே அனுப்பவே மறுத்தனர்… இங்கு எதோ தவறு இருக்கிறது என தெரிந்து அது என்னவென்று தெரிந்துகொள்ள விரும்பினான்…

ஆனால் அவனின் முயற்சி எதுவும் பயனளிக்கவில்லை… அவனுக்கு சந்தேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது….

மேலும் ஒன்றரை வருடம் சென்று இருக்க அய்யாதுரை இருந்த கட்சியின் தலைவர் அர்ஜுனனை(லிங்கத்தை) பார்க்க வேண்டும் என கூறியதால் வேறுவழி இல்லாமல் அவனை அழைத்து கொண்டு அவரின் வீட்டிற்கு சென்றனர்…

அந்த தலைவரின் ஊர் சிவகங்கை தான்…. சென்னை மற்றும் சிவகங்கை மாறி மாறி இருப்பார்… நிறைய  மாதங்களாக அவனை பார்க்க வேண்டும் என்று கூறியதை எதோ எதோ காரணம் சொல்லி மறுத்து வந்தனர்  காருண்யாவும் அய்யாதுரையும்…. முக்கியமாக அவன் அடிபட்டு இருந்ததை காட்டி கையில் அடி காலில் அடி நடக்க முடியவில்லை என்று கூறி மறுத்து வந்தனர்… அந்த தலைவர் யார் வீட்டிற்கும் செல்ல மாட்டார்…. இந்த முறை “நீங்க அவனை கூட்டிட்டு வரல நீங்க அவனை கொன்னுட்டு நாடகம் ஆடுறிங்கனு சொல்லி போலீஸ்ல சொல்லிடுவேன்” என்று கிட்டதட்ட மிரட்டி லிங்கத்தை(அர்ஜுனனை) அழைத்து வர கூறி இருந்தார்… அவர்களின் எந்த மறுப்பும்  அங்கு எடுபடவில்லை….

அப்போது தான் அதி அர்ஜுனனை பார்த்தான்… இதற்குமுன் இருவரும் ஏற்காட்டில் சந்தித்து இருந்தனர்… அப்போது நட்புடன் பேசினர்… ஆனால் அதிக்கு முக்கிய வேலை வந்ததால் நம்பர் வாங்காமல் கூட அதியும் நிவேதாவும் கிளம்பி இருந்தனர்….

அது நடந்து மூன்று வருடம் இருக்கும்… அதனால் முதலில் அதிக்கு அடையாளம் தெரியவில்லை… அதி சிவகங்கை வந்ததுக்கு காரணம் அரசு( அதியின் நண்பன்) கமிசனராக பதவி ஏற்பதால்…

அவன் மதுரை சென்ற போது தான் அர்ஜுனனை ஏற்காட்டில் சந்தித்தது ஞாபாகம் வந்தது…. அப்போது அவர்களுடன் எடுத்த போட்டோவை எடுத்து பார்த்தான்…

போட்டோவை பார்த்ததும் கண்டு கொண்டான் அது அர்ஜுனன் தான் என்று… அதன்பின் அவர்களை பற்றி தேட ஆரம்பித்தான்.. அரசுவிடமும் சொல்லி இருந்தான்… அவனும் அவன் பங்கிற்கு அவர்களை பற்றி தேடினான்…

இருவரின் தேடலுக்கு பின் அய்யாதுரை மற்றும் காருண்யா செய்த அனைத்தும் தெரிந்து இருந்தது… ஆனால் அனைத்தும் லிங்கத்தின் பேரில் இருந்தது…. அவன் இறந்த போது எடுத்த கைநாட்டில் அவன் பெயரில் மாற்றி இருந்தனர்….

ஒருவேளை வரும் நாட்களில் மாட்டினால் அர்ஜுனன்(லிங்கம்) தான் மாட்டுவான் என மாற்றி இருந்தனர்… அவர்கள் செய்ததுக்கு எந்த தடயமும் இல்லை…

இதற்கிடையில் அதி அர்ஜுனனை சந்திக்க முயற்சித்தான்… அவனின் பதவியை வைத்து கூட அவர்களை நெருங்க இயலவில்லை… அதற்கு இரண்டு காரணம்… ஒன்று அனைத்தும் லிங்கத்தின் பேரில் இருப்பது… மற்றொரு காரணம் ரித்திகா…

ஆனால் அதியும் அரசுவும் சேர்ந்து முயற்சி செய்ததில் அய்யாதுரை காருண்யாவிற்கு எதிரான ஆதாரமும் கிடைத்தது… அதற்கு அடுத்த நாளே அர்ஜுனனை சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது….

அய்யாதுரையும் காருண்யாவும் கேரளா சென்று இருக்க வீட்டில் ரித்திகாவும் அர்ஜுனன் மட்டுமே இருந்தனர்…

ரித்திகாவை அழைத்து கொண்டு மதுரை மீனாட்சியை தரிசிக்க வந்து இருந்தனர்…. கண்டிப்பா உடன் யாரும் வரக்கூடாது என கூறி தான் வந்து இருந்தான் அர்ஜுனன்… அவனுக்கு தெரிந்து யாரும் வரவில்லை… ஆனால் தெரியாமல் இரண்டு பேர் வந்து இருந்தனர்…

முதலில் கவனிக்காதவன் பின் கவனித்து பற்களை கடித்து கொண்டான்… அப்போது அதியும் கோவிலுக்கு வந்து இருந்தான்… அர்ஜுனனை கிளம்பும் போது தான் கண்டான்… அவனை கண்டு ஆச்சர்ய பட்டவன் அவனுடன் பேச சென்றான்…

அர்ஜுனன் உடன் வந்த ஆட்களை கவனித்து அவர்கள் பார்க்காமல் அர்ஜுனனிடம் தான் யார் என கூறி தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்தான்….

முதலில் யோசித்தவன் அதியும் கண்ணில் தெரிந்த உண்மையை கண்டு அவனுடன் பேச சம்மதம் தெரிவித்தான்… அர்ஜுனனுடன் வந்த ஆட்களுக்கு தெரியாமல் மூவரும் காபி ஷாப்பிற்கு சென்று பேச ஆரம்பித்தனர்…. இது தான் நடந்தது…..

தற்போது அர்ஜுனன் அவனுக்கு தெரிந்ததை அனைத்தும் அதியிடம் கூறி இருந்தான்… அதி அவனிடம் தனக்கு எல்லாம் தெரியும் என கூறி அவன் அறியாதது அனைத்தும் கூறி இருந்தான்…

தன்னை எவ்வாறு ஏம்மாற்றி உள்ளனர் என நினைத்து அர்ஜுனனுக்கு கோவமாக வந்தது…. ஆனால் அதைவிட தன் கனவில் வந்த பெண்ணை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என ஆசை தான் அதிகம் இருந்தது….

அர்ஜுணம் அதியிடன் “அப்டினா என் கனவுல வந்த பொண்ணு என்கூட நீங்க ஏற்காட்டுல பார்த்த என் வைப்னு சொல்றிங்களா சார்” என்று கேட்டான் அர்ஜுனன்….

“அது நீங்க தான் சொல்லணும்” என்று கூறி தன்னிடம் இருந்த போட்டோவை எடுத்து காட்டினான் அதி…

 அவன் காட்டிய போட்டோவை வாங்கி பார்த்த அர்ஜுனனின் கண்கள் தானாகவே கலங்கியது… அவன் கை அந்த போட்டோவை வருடியது…. தன்னை சமாளித்து அதியிடம் “இவங்க தான்… இவங்க பேரு…” என்று கலங்கியவாரு கேட்டான்….

“சுபா… சுபத்திரா அர்ஜுனன்… அர்ஜுனன் உங்க பேரு தான்” என்று கூறினான் அதி…

“பட் இவங்களை நீங்க அம்முனு தான் கூப்பிடுவிங்க… இந்த பேரு தான் நாம பேச காரணம்… ஏன்னா நானும் என் வைப்பை அப்படி தான் கூப்பிடுவேன்….” என்று கூறினான்…

ஒருமுறை “அம்மு” என்று மென்மையாக தன்னக்குள் அழைத்து பார்த்தான்….இதே நேரம் கேரளாவில் சுபாவிற்கு விக்கல் விடாமல் எடுத்தது…

“நீங்க சிவகங்கை போகாதீங்க… நான் உங்களை மீட் பண்ணப்பவே என் பிரென்ட் கிட்ட சொல்லிட்டேன்… அவன் தான் சிவகங்கை கமிசனர்…. இந்நேரம் என் பிரென்ட் அரசு அவங்களை அர்ரெஸ்ட் பண்ணி இருப்பான்…” என்று கூறி அரசுவுக்கு அழைத்தான்…

அவன் “ஹெலோ சொல்லு தேவா அவங்களை அர்ரெஸ்ட் பண்ணியாச்சு.. அன்ட் இவங்க ரெண்டு பேருக்கும் ஹெல்ப் பண்ண அந்த அமைச்சர் அவனையும் அர்ரெஸ்ட் பண்ணியாச்சு” என்று கூறினான்…

“ஓகே சூர்யா சீக்கிரம் அவங்களை கூட்டிட்டு சிவகங்கை வந்துடு… நான் வைக்குறேன்” என்று கூறி வைத்து விட்டான்….

“ஓகே மிஸ்டர் அர்ஜுனன் அவங்களை அரெஸ்ட் பண்ணியாச்சு… உங்களுக்கு இனிமே ப்ரோப்லம் இல்ல… பட் உங்களை பார்த்தவாட்டி உங்க ஊருக்கு தகவல் சொல்ல ட்ரை பண்னேன்.. ஆனா உங்க வைப் கிட்ட நீங்க இல்லனு தெரிஞ்சவுடனே வீட்டுல உங்க சிஸ்டர் சண்டை போட்டு இருக்காங்க… வீட்டை விட்டு துரத்தி இருக்காங்க… மனசு உடஞ்சி யாருக்கும் தெரியாம உங்க பையனை மட்டும் கூட்டிட்டு ஊரை விட்டு போயிட்டாங்க… அவங்க போக உங்க பிரென்ட் முகுந்தன் ஹெல்ப் பண்ணி இருக்காரு… அவங்க இப்போ கேரளாவுல தான் இருக்காங்க…. அவங்க நீங்க இல்லாம உங்க ஊருக்கு போக பிடிக்காம கேரளாவுலயே தங்கிட்டாங்க… உங்க பேமிலினால அவங்களை கண்டுபிடிக்க முடியல….” என்று கூறி முடித்தான்….

“எனக்கு எத்தனை பசங்க” என்று கேட்டான் அர்ஜுனன்…

“ஒரு பையன் ஒரு பொண்ணு பையன் உங்க வைப் கூட இருக்கான்…வயசு பதினொன்னு… பொண்ணுக்கு ஏழு வயசு.. பொண்ணு உங்க வைப்போட அண்ணா பேமிலி கூட இருக்காங்க….” என்று கூறினான் அதி ….

தலை மட்டும் அசைத்து கேட்டுக்கொண்டான்…. பின் அதி “இந்த பொண்ணை என்ன பண்ணலாம்னு இருக்கீங்க அர்ஜுனன்….” என்று தூங்கி கொண்டு இருக்கும் ரித்திகாவை பார்த்து கேட்டான்….

தன் மடியில் தூங்கிய ரித்திகாவை பார்த்து “கண்டிப்பா இவ என்கூட தான் இருப்பா…. எனக்கு என்னோட ஞாபாகம் எல்லாம் வரணும்…. அப்போ தான் யாரையா இருந்தாலும் பாப்பேன்…” என்று கூறினான் அர்ஜுனன்… அவன் எடுத்த முடிவை அதி மறுக்கவில்லை… சரி என கூறி ஏற்றுக்கொண்டான்….

இதே நேரத்தில் இடுக்கியில் அஷாவின் அம்மாவும் காட்டில் நடந்ததை கூறி இருந்தார்… “நான் வெளியே சொன்னா ஆஷாவை கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்க… என்னை இரண்டு வருஷம் வேவு பார்த்தாங்க… நான் ரெண்டு வருஷமா எதுவும் சொல்லலனு தான் ஆஷாவை இங்க அனுப்பி இருக்காங்க…” என்று அழுகையுடன் கூறி முடித்தார்….

ஆஷாவின் அம்மாவையும் அழைத்து கொண்டு சுபாவின் வீட்டிற்கு சென்றான்… அங்கு சென்றவர்கள் சுபாவிடம் அனைத்தும் கூறினர்… சுபா உடனடியாக அர்ஜுனனை பார்க்கவேண்டும் என ஜேம்ஸிடம் கேட்டாள்….

அவனோ “முதல்ல உங்களுக்கு ஹெல்ப் பண்ற உங்க அண்ணா கிட்ட அவர் உயிரோட இருக்குறதை சொல்லுங்க” என்று கூறினான்…

அவளும் அவனுக்கு அழைத்தாள்… அந்த பக்கம் போனை எடுத்தவுடன் “முகி ண்ணா மாமா உயிரோட தான் இருக்காரு… நீங்கதான் நம்பள… ஆனா இப்போ அவர் உயிரோட இருக்காரு ண்ணா… சீக்கிரம் இங்க வாங்க” என படபடவென யார் எடுத்தார்கள் பேசினாள் சுபா…

ஆனால் முகுந்தனின் போனை எடுத்தது கண்மணி… அவள் அழைத்த போது கண்மணியுடன் தான் இருந்தான்.. அவள் அருகில் தான் போன் இருந்தது… பேரை பார்த்ததும் முகுந்தனை ஒரு ஏமாற்றம் நிறைந்த ஒரு பார்வை பார்த்துவிட்டு போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டாள் கண்மணி….

கண்மணி அழுகையுடன் இரண்டு வருடம் கழித்து சுபாவின் குரலை கேட்டு கொண்டு இருந்தாள்… அவள் கூறியதை கேட்டு சத்தமாக அழுக முயன்றவள் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அமைதியாகி இருந்தாள்….

முகுந்தன் “என்ன பாப்பா சொல்ற” என்று கேட்டான் … ஆஷாவின் அம்மா கூறியதை அப்டியே முகுந்தனிடம் கூறினாள் சுபா… முகுந்தன் அனைத்தையும் கேட்டுவிட்டு “ஓகே பாப்பா உடனே கிளம்பி வரேன் அங்க” என்று கூறி வைத்துவிட்டு கண்மணி பக்கம் திரும்பினான்….

அவள் போன் வைத்தவுடன் சத்தமாக அழுக ஆரம்பித்துவிட்டாள்…. அவள் அழுகையில் பயந்தவன் அவள் கையை பிடிக்க சென்றான்… ஆனால் அவளோ அவன் கையை தட்டிவிட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்…. தன் கையை தட்டிவிட்ட தன்னுடைய கண்ணம்மாவை அதிர்ந்து பார்த்தான் முகுந்தன்…..

தன்னை சமாளித்து கொண்டு உங்கிட்ட என்னால சாரி கூட சொல்ல முடியாது கண்ணம்மா… நான் மறைச்சது தப்பு தான்… இப்போ நான் கேரளா போயே ஆகனும்…. தயவு செஞ்சி மன்னிச்சுடு கண்ணம்மா…. நான் கேரளா போயிட்டு வந்து எல்லாத்தையும் சொல்றேன்… என்று கூறி அவளின் உச்சியில் முத்தமிட்டு கேரளா செல்ல கிளம்பினான்…

ஆனால் கண்மணி “நானும் வருவேன்” என்று அவன் அறையை விட்டு வெளியே செல்லும் முன் சத்தமாக கூறினாள்…. அவனால் தற்போது எந்த மறுப்பும் கூற முடியவில்லை…. அவளை அழைத்து கொண்டு கேரளா நோக்கி சென்றான் முகுந்தன்….

கண்மணியின் வரவை எவ்வாறு எடுத்துகொள்வாள் சுபா…. அர்ஜுனனுடன் இருக்கும் ரித்திகாவை ஏற்றுக்கொள்ளவாளா…..?!??!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!