Skip to content
Post Views: 2,163

கருப்பன் ஆட்டம் 18
Advertisement
கருப்பனின் வீட்டில் மாலை அணிவித்திருந்த அந்த புகைப்படத்தில் இருக்கும் மீனா என்கின்ற அந்தப் பெண் யார் என்ற விபரங்களை மலர் கேட்க,
Advertisement
அதற்கு மயில் விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தாள்.
Advertisement
அவள் கூற வருவதை மிகவும் ஆர்வமாக கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தால் மலர்.
Advertisement
“அந்த மீனா வேற யாரும் இல்லடி கருப்பு அத்தானோட தங்கச்சி தான். அவள் ஸ்கூல் முடிச்சு காலேஜ் பர்ஸ்ட் இயர் போயிட்டு இருந்தா..,
அப்போ எங்க அம்மா…, பொண்ணுத்தாயி அத்தையோட வீட்டுக்காரர் சுப்பிரமணி மாமா கிட்ட போயி என் அண்ணங்காரனுக்கு பொண்ணு கேட்டுச்சு..!,
“என்னது உங்க அண்ணனுக்கா…!”
“ஆமா மீனாவுக்கும் என் அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு கேட்டுச்சு.
அதுக்கு எங்க மாமாவும் அத்தையும் சம்மதம் சொல்லிட்டாங்க, கருப்பு அத்தானும் சம்மதம் சொல்லி இருக்காப்டி அடுத்தடுத்து ஜாதகம் பார்க்குறது பொண்ணு பார்க்குறது பூ வக்குறது நிச்சயம் பண்றதுன்னு எல்லா வேலையும் சூப்பரா நடந்துட்டு இருந்துச்சு,
இன்னும் ரெண்டே நாள்ல கல்யாணம் இருக்கும்போது வீட்டில் இருந்த மீனாவ காணோம்..!
எல்லாரும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பரபரப்பா குளம் குட்டையின்னு தேடுனாங்க ஊர்க்குள்ள எங்கேயுமே அவ இல்லை…!
அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவ பிளான் பண்ணி தான் ஊரை விட்டு ஓடி போய் இருக்கா அப்படின்னு…!
“அப்பறம்…!”
“அதுக்கப்புறம் என்ன பண்றது..? முடிஞ்ச மட்டும் தேடிப் பார்த்தாங்க, சுத்து பட்டு வட்டாரத்துல எங்கேயுமே அவ அகப்படல,, தேடி பாத்து ஓஞ்சு போனவக சரிதான் போடின்னு அந்த விஷயத்தை விட்டு வர முடியாம கஷ்ட்ட பட்டாக, கருப்பு அத்தான் ரொம்பவும் தவிச்சு போயிடுச்சு.
அதோட சுப்பிரமணி மாமாவுக்கு ஊருக்குள்ள நெறைய அவமானமாகி போயிடுச்சு, இவ்வளவு நெருங்கி, கிட்ட தட்ட ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுபுட்டு ஓடிப்போயிட்டாலே அப்படின்னு நெனச்சு புழுங்கிட்டு இருந்தவருக்கு, ஊர் கார பயலுவ பூராவும் பேசுன பேச்சுல அவருக்கு மானம் மரியாதை எல்லாம் போனதா அவரே நெனச்சுகிட்டு கவல பட்டு வீட்டுக்குள்ளேயே அடஞ்சு இருந்த மனுஷன் மனசு உக்கி போயி தாங்க முடியாம வீட்டுக்குள்ளயே சுருக்கு வச்சுக்கிட்டாரு…
அதோட அந்த குடும்பமே நிலை கொலஞ்சு போயிடுச்சு.. இதுக்கு முன்னாடி கூட இப்படித்தான் நடந்து ரொம்ப மோசமான நிலைமைக்கு போயி அதுல இருந்து மாமாவ மீட்டு வர்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு சொல்லும் எங்க ஆத்தா,
அதுல இருந்து மீண்டு அந்த மனுஷன் கொஞ்சம் நல்லா இருக்கும்போது அவரு பெத்த புள்ளையே இதே மாதிரி பண்ணவும், அவரால் அதை ஏத்துக்கவோ சகிச்சுக்கவோ முடியாம இந்த மாதிரி பண்ணிட்டாரு..!”என்று மயில் கூறினாள்.
“என்ன….! இதுக்கு முன்னாடி அப்படி நடந்துச்சா…! அது யாருடி..” என்று மலர் நிறுத்த,
“கருப்பு அத்தானோட அத்தை மொறை, அவங்க பேரு தேவி…! எனக்கு சின்னம்மா மொறை வரும்.
இப்படித்தான்.. நடந்துருக்கு ஆனா அவங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு எல்லாம் எதுவும் பண்ணல, ஆனா யாரையோ விரும்பி அவங்கள கூட்டிட்டு ஊரை விட்டு போயிட்டதா கேள்விப்பட்டேன்.
தான் தங்கச்சிய மாதிரியே தன்னோட மகளும் பண்ணிக்கிட்டதுனால ஒரு கட்டத்துக்கு மேல பொறுக்க முடியாம அந்த மாதிரி ஒரு நிலைமை ஆயிடுச்சு…!” என்று கூறினால் மயில்.
“ஏண்டி அவங்க அப்பா இறந்துட்டாரு அவரு போட்டோவுக்கு மாலை போட்டு இருக்காங்க சரி…, அந்த பொண்ணு ஓடித்தான் போனாங்க அதுக்கு எதுக்கு அவங்க போட்டோவுக்கும் மாலை போட்டு வைக்கணும்..?”
“நீ வேற அந்த மீனாவ மொத்தமாவே வெறுத்து ஒதுக்கிட்டாங்க.. அதுக்கு இன்னொரு காரணம் கூட இருக்கு…!
“அது என்ன….?”
“கல்யாணம் நிண்ட கையோட என் அண்ணங்காரன் சும்மா இல்லாம, கருப்பன் அத்தான் கிட்ட போயி மல்லுக்கு நின்னியான்…
அவரும் பல மொற பொறுத்து போனவரு ஒரு கட்டத்துக்கு மேல பொறுக்க முடியாம எதுத்து பேசி அது சண்டை வந்து கைகளப்பு ஆயி.., அந்த பஞ்சாயத்தை முடிக்குறதுக்குள்ள ஊர் ஜனம் ஒரு வழி ஆயிட்டாய்ங்க….!
அதுக்கு காரணம் மீனாதான் அப்படின்னு, அவங்களுக்கு மீனா மேல அவ்வளவு ஒரு வெறுப்பு….!”
“ஓஹோ… அதனாலதான் கருப்பு அத்தானும் உன் அண்ணே அய்யனாரும் பேசிக்காம முறுக்கிக்கிட்டு திரியுறாங்களா…?” என்று அவள் கேட்டவளின் நினைவில் வந்து நின்றது ஜல்லிக்கட்டில் நடந்த விஷயம்.
“ஆமாண்டி… அதுல இருந்தே என் அண்ணங்காரனுக்கும் கருப்பு அத்தானுக்கும் சுத்தமாவே செட் ஆகாது…!”
‘அங்க சுத்தி இங்க சுத்தி எங்க பாத்தாலும் எங்க குடும்பம் கருப்பன் அத்தானுடைய வெறுப்ப முழுசா சம்பாதிச்சு வச்சிருக்கா சுத்தம்…!’என்று மனதிற்கு நினைத்துக் கொண்டு அன்றைய பொழுதே கழித்திருந்தால் மலர்.
மறுநாள் காலை எப்பொழுதும் போல் எழுந்து காலை வேலைகளை முடித்துக் கொண்டு காலேஜுக்கு கிளம்பி இருந்தால் மலர்.
காலேஜில் ப்ரின்சிபால் அவளை அழைத்து “சிலபஸ் எந்த லெவல்ல முடுச்சு இருக்கீங்க..?” என்று கேட்டார்.
“சார் தியரி ஆல்மோஸ்ட் முடிஞ்சது சார். இனி நம்ம ப்ராக்டிக்கல் ஸ்டார்ட் பண்ணா கரெக்டா இருக்கும் சார்..!”என்று கூறினால் மலர்.
“ஓ.. தியரி முடிச்சிட்டீங்களா சூப்பர்…! அப்போ உடனே ப்ராக்டிக்கலுக்கு ப்ளேஸ் அரேஞ்ச் பண்ணிட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன்..!” என்று கூறியவர் மலரை அனுப்பிவிட்டு
சிறிது நேரத்தில் யாருக்கோ அழைத்து சில விஷயங்களை கூறி அவர்கள் கூறியவற்றை கேட்டு உறுதி செய்து கொண்டவர், பின் மீண்டும் மலரை அழைத்தவர்
“மலர் ரெண்டு நாளைக்குள்ள தியரி எல்லாம் முடிச்சிடுங்க, ஏன்னா ப்ராக்டிக்கலுக்கு வேண்டிய எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் நான் பண்ணிட்டேன்..!” என்று கூறவும்
“ஓகே சார். ரெண்டு நாள்ல கண்டிப்பா முடுஞ்சுடும்” என்று விட்டு மலரும் சென்று விட்டாள்.
காலேஜ் முடிந்து மாலை நேரமாக பேருந்திலிருந்து இறங்கி மயிலின் வீட்டை நோக்கி நடந்த சென்றால் மலர்.
செல்லும் வலியெங்கும் ஒவ்வொரு இடத்திலும் கருப்பனுடன் நின்று சண்டை வார்த்தது, அவனைப் பார்த்து ரசித்து கொண்டு சென்றது என அனைத்து நிகழ்வுகளையும் மனக்கண்ணில் ஓட விட்டு, சில நொடி அந்த இடத்தை பார்த்துவிட்டு சென்றாள்.
போகும் அவளின் பின்னழகை ரசித்தவாரு ஒரு இடத்தில் இருந்து வக்கிரமாக எண்ணத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
இரண்டு நாட்கள் அதன் போக்கில் கடந்து இருந்தது. முந்தைய இரு நாட்களில் கருப்பனை பார்த்து ரசித்த அந்த இடத்தை இரண்டு நாட்களாக கருப்பன் இல்லாமல் பார்ப்பதற்கே வெறுப்பாக இருந்தது மலருக்கு.
‘இந்த காட்டான் என்ன பண்றாருன்னு தெரியலையே….! அன்னைக்கு பாக்கும் போது உடம்புல சின்ன சின்ன காயம் இருந்துச்சு, இப்போ சரியாயிடுச்சா…? நேரத்துக்கு மாத்தரை போடுறாரா…? இப்பிடி ஒண்ணுமே தெரியலையே…!
மறுபடியும் இந்த மயில் அங்க போனா கூட வீட்ல போய் என்ன ஏதுன்னு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்…!’ என்று காலையில் பஸ்ஸில் ஏறும் முன்பு பலவிதமாக யோசித்துக் கொண்டே பேருந்தில் ஏறி சென்று இருந்தாள்.
அன்றைய பொழுது ப்ராக்டிக்கல் கிளாஸ் என்பதால் மாணவர்களுக்கான மண்ணின் தரம் குறித்தும் இயற்கை உரம் மற்றும் விளைச்சல் குறித்த அனைத்து விஷயங்களையும் பார்த்தும் செய்தும் கற்றுக் கொள்ளும் விதமாக அன்றைய நாள் வடிவமைக்க பட்டிருந்தது.
கல்லூரியில் இருந்தே வேன் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
அந்த நேரம் மலரை அழைத்த அந்த காலேஜ் கரஸ்பாண்டன் “நான் அவர்கிட்ட எல்லாம் இன்ஃபார்ம் பண்ணிட்டேன். அவர் எல்லாத்தையும் பாத்துக்குவாரு,
அப்பறம் இன்னைக்கு உங்க கூட வர இருந்த லெச்சரர் வரல எமெர்ஜெசின்னு லீவ் எடுத்துட்டாங்க, மத்த ப்ரஃபசர் எல்லாம் முக்கியமான க்ளாஸ் போயிட்டு இருக்குது. அதனால அவங்க யாரும் வரமுடியாது.
அதனால நீங்க ஸ்டூடண்ட்ட மட்டும் கொஞ்சம் பாத்துக்கோங்க…!”என்று கூறினார்.
“ஓகே சார்” என்றவள் மாணவர்களுடன் சேர்ந்து பயணித்து கிராமத்தின் அழகிய வயல்வெளி பகுதியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியராக மலர்விழியும் வந்து இறங்கினார்கள்.
வரும் வழியில் வேனில் மாணவர்கள் அனைவரும் “ஏய் கதிர் அண்ணன் தோட்டத்தை சூப்பரா பராமரிச்சு வளர்ப்பாங்க, இயற்கை உரத்த தானே உருவாக்க அவர் ரொம்ப மெனக்கட்டு வேலை செய்வார் அப்படின்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன்.
அது குறித்த விசயங்களை சூப்பரா எக்ஸ்பிளைன் பண்ணுவாரு அப்படின்னு இதுக்கு முன்னாடி இருந்த சீனியர்ஸ் சொல்லி நான் கேள்விப்பட்டு இருக்கேன்.
இன்னைக்கு ஒரே ஜாலி தான் போ…!” என்று கூறி அந்த மாணவர்கள் பேசிக்கொண்டதை கேட்டவளுக்கு,
கருப்பனாக அவளின் மனம் முழுவதும் நிறைந்திருந்த அந்த கதிரை யார் என்று பார்ப்பதற்கு ஆவல் பெருகியது மலர்விழிக்கு.
வேனிலிருந்து இறங்கிய மாணவர்கள் அனைவரும் தோட்டத்திற்குள் நுழைய,அந்தத் தோட்டத்தில் வாசலிலேயே நின்றிருந்தான் தர்மன்.
அவனைப் பார்த்த மலரோ புன்னகைத்து “அண்ணா நீங்க இங்க என்ன பண்றீங்க…?” என்று கேட்டாள்.
அதற்கு தர்மனோ “நம்ம தோட்டத்துல நான் இல்லாம எப்படி தங்கச்சிமா…?”என்று கேட்டான்.
‘என்னது நம்ம தோட்டமா…?’ என்று புரியாமல் அப்பொழுதே சுற்றும் முற்றும் பார்த்தால் மலர்.
ஏனென்றால் அவர்கள் வந்தது நேர்வழிப்பாதை. இத்தனை நாட்களாக மலரும் மயிலும் வந்து சென்றது அந்த ஊரில் உள்ள ஒத்தையடி பாதை வழியாக, அதுவும் ஓரிரு நாட்கள் மட்டுமே வந்திருந்ததால் அந்த பாதை பற்றி மலருக்கு எதுவும் தெரியாது போயிருந்தது.
அத்தோடு ஊருக்குள் திரும்பும் போது பஸ்ஸில் உள்ள மாணவர்கள் பேசிக் கொண்டு வந்ததை மனதில் அசைபோட்டு கொண்டிருந்ததால் அவள் தங்கள் ஊருக்குள் தான் பஸ் வந்தது என்பதையும் அவள் கவனித்திருக்கவில்லை.
தர்மன் அவளிடம் பேசிவிட்டு மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒரு இடம் நோக்கி சென்றான். மலரும் தன் யோசனையை கலைத்து அவர்களின் பின்னால் சென்றாள்.
மாணவர்கள் அனைவரும் முன்னே சென்றவர்கள் ஓர் இடத்தை சுற்றி நின்று அதனை பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் அருகில் இருந்த தர்மனோ அந்த இடத்தை சுட்டிக்காட்டி அவர்களுக்கு விவரித்து கொண்டிருந்தான்.
மலரோ கருப்பன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பான் அவன் வந்திருக்க மாட்டான் என்று நினைத்து கொண்டவள், அந்தக் கூட்டத்தை கலைந்து உள்ளே பார்த்தாள்.
அங்கே கருப்பனோ கருப்பு டி-ஷர்ட்டும் அதற்கு ஏற்றார் போல் லுங்கியும் அணிந்து கைகள் நிறைய மாட்டு சாணமும் அதனோடு ஒட்டிய மாட்டு பொருட்களையும் வைத்து இயற்கையான பஞ்ச கவ்ய உரம் செய்வதற்கான வேலையில் இறங்கி இருந்தான்.
அவன் அதனை எல்லாம் முறையாய் கலந்து கலவையாய் செய்ய செய்ய இங்கே மாணவர்கள் அனைவரும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அதனை கவனித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டிய மலர்விழியோ கருப்பனை பார்த்த மகிழ்ச்சியில் அதே சமயம் அவன் நின்றிருந்த கோலத்தில் விழியகளாது அவனை மட்டுமே பார்த்து இருந்தாள்.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
error: Content is protected !!