Skip to content
Post Views: 605
“சித்தார்த் ஜோஷி ஸ்பீக்கிங்” என கம்பீரமாக அழைப்பை ஏற்றது எதிர்முனை.
“சிட், வசு. பேசணும்னு சொன்னீங்கன்னு கூப்பிட்டேன்”
Advertisement
“ஹே, ஹாய்! முதல்ல ஹார்ட்டி கங்கிராட்ஸ் மேடம். ஐ ஆம் சோ ப்ரவுட் ஆஃப் யூ. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வசு” என்றார் சித்தார்த் ஆர்ப்பாட்டமாக.
“தேங்க்ஸ். இந்த போஸ்ட் ஏத்துக்கிட்டு என் கவர்மெண்ட் கூட வொர்க் பண்றது உங்களுக்கு ஆக்வோர்ட்டா இருக்கா சிட்? அதுனால தான் பேசணும் சொன்னீங்களா?” மெதுவாக கேட்டார் வசுந்தரா.
Advertisement
Advertisement
“உனக்கு அந்த மாதிரி தோனுதா என்ன?” இப்போது சித்தார்த்தின் குரலில் ஒரு அழுத்தம்.
“எனக்குத் தெரிஞ்ச வரை அப்டி இல்ல. ஆனா இன்னிக்கு ஒரு ரெண்டு வாட்டியாச்சும் உங்க கண்ணுல ஏதோ மாற்றம் தெரிஞ்சுச்சு”
Advertisement
“என் கண்ணுல வர்ற மாற்றம் எல்லாம் தெரியுற அளவுக்கு என்னைய அப்சர்வ் பண்ணிருக்கியா வசுமா?” என்றார் குரலில் வெண்ணெயின் குழைவுடன்.
அந்தக் குரல், கடந்த காலத்தின் சில இனிய நினைவுகளை உயிர்த்தெழச் செய்ய, அதை வலிந்து புறம் தள்ளியவராய்,
“லெட்ஸ் கட் டு த சேஸ் சிட். வொர்க் பண்றது பிரச்சனை இல்லாட்டி எதுக்கு பேசணும்னு சொன்னீங்க?. ஐ ஹேட் அ லாங் டே அண்ட் ஃபீலிங் வெரி டயர்ட்”
அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவர்,
“ஆல்ரைட். எனக்கு நிறைய பேசணும். நீ அதை கேட்குற மைண்ட் செட்ல இருக்கணும். ரெண்டுக்குமே இப்ப டைம் இல்லைன்னு தெரியுது. ஜஸ்ட் ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் வசு.
ஐ ஆம் ஸ்டில் சிங்கிள். பத்து வருசம் முன்னாடி நீ நம்ம ரிலேஷன்ஷிப் பிரேக்-அப் பண்ண சொன்ன ரீசன் எல்லாம் அப்டியே தான் இருக்குன்னு நினைக்கிறேன்.
ஒரு விதத்தில அந்த முடிவு அப்ப கரெக்ட்டுன்னு தான் தோனுது. ஆஃப் கோர்ஸ், அப்ப அதை முழுசா என்னால புரிஞ்சுக்க முடியல. எத்துக்கவும் முடியல. கோவம். கோவம். கோவம் மட்டும் தான் இருந்துச்சு.
ஆனா இப்ப முழுசா இல்லாட்டியும் கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க டிரை பண்றேன். அண்ட் என்னோட ஸ்டான்ஸையும் தெளிவுபடுத்தணும்னு தான் பேசணும் சொன்னேன்.
ஐ திங்க் ஐ ஆம் ஸ்டில் இன் லவ் வித் யூ வசு! பத்து வருசத்துல எத்தனையோ பேரை கடந்து வந்திருப்பேன். பட் ஐ கேன்னாட் மூவ் ஆன் ஃப்ரம் யூ. இந்த போஸ்ட் அக்செப்ட் பண்ணது நமக்கு ஒரு செகண்ட் சான்ஸ் குடுக்க தான். அன்ட் நானே தான் வாலண்டியர் பண்ணேன்னு கூட வைச்சுகோயேன்” என்க, வசுந்தராவுக்கு முதல் அதிர்ச்சி.
“சிட், ஹௌ இஸ் இட் ஈவன் பாசிபிள்?”
“மனோகர் ஜோஷி!”
“ரைட்” என பல்லைக் கடித்த வசுந்தரா,
“ஹௌ டேர் யூ?” என கொதிக்க, ஒரு நிமிடம் சித்தார்த்துக்கு ‘இதை இப்போதே சொல்லியிருக்க வேண்டாமோ’ என்று கூட தோன்றியது. பின்னர் பொய்யில் ஆரம்பிக்கும் விஷயம் எத்தனை நாளைக்கு நிலைக்கும் என முடிவெடுத்தவர்,
“வசு, ஐ ப்ராமிஸ். இல்லீகலா எதுவும் பண்ணலை. அன் அஃபிஷியலா அப்பா சில பேர் கிட்ட பேசி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு எனக்கு தகவல் சொன்னார். எக்ஸ்டேர்னல் மினிஸ்டிரில எனக்கும் நம்பகமா நிறைய பேர் இருக்காங்க. நானும், அப்பாவும் அதை வைச்சு சில காய் நகர்த்தினோம்.
இவ்வளவு ஏன் தாரா மேடம் கிட்ட கூட பேசினேன். ஐ ஹேவ் மெரிட் வசு! இவங்க தேடின IFS கிரைட்டீரியால என் பேரு எப்படியும் வந்திருக்கும். பட் ஐ டிண்ட் வாண்ட் டு டேக் அ சான்ஸ். அதுனால ப்ரோஆக்டிவ்வா சில விஷயம் பண்ணி, என் பேரு லிஸ்ட்ல வரவும், ஃபைனலைஸ் ஆகுற மாதிரி பார்த்துக்கிட்டோம்.
உனக்கு ரெகமண்டேஷன் தானே பண்ணாங்க. நீ தானே அப்ரூவ் பண்ண. மெரிட் அண்ட் டிராக் ரெக்கார்ட் பார்க்காமையா நீ ஒத்துக்கிட்ட? இன் ஃபேக்ட், நீ நோ சொல்லுவன்னு தான் பயந்துட்டு இருந்தேன். டு மை சர்பிரைஸ் நீ ஓகே சொல்லிட்ட”
“சிட், நான் என்னைக்கும் பர்சனலையும், அஃபிஷியலையும் போட்டு குழப்ப மாட்டேன். நம்ம பாஸ்ட் ரிலேசன்ஷிப்னால ஒரு நல்ல ப்ரொப்ஃபைலுக்கு எப்டி நோ சொல்ல முடியும்?
நீங்க சைனீஸ் பீரிமியரோட பில்ட் பண்ணிருக்க ரேப்போ (rapport – நல்லுறவு) வைச்சி ஃபாரின் பாலிசி, இண்டர்னேசனல் ரிலேசனஸ் ரெண்டையும் டெவலப் பண்ணனும். தேட்ஸ் த டாப் பிரையாரிட்டி ஃபார் மை கவர்ன்மெண்ட். அதுக்காக மட்டும் தான் நான் ஓகே சொன்னேன்.
அண்ட் நீங்கன்னு இல்லை. இந்த ப்ரொபைல் யாரோடதா இருந்தாலும் ஓகே சொல்லிருப்பேன். ஐ ஹேட் மை டவுட்ஸ். ஏன் எப்பவும் போல ரிட்டயர்டு ஆஃபிசர்ஸ் எடுக்காம உங்கள போஸ்ட்லேர்ந்து ரிலீவ் பண்ணி இந்த ரோல்க்கு அசைன் பண்ணிருக்காங்கன்னு யோசிச்சேன். பட் த கமிட்டி ஜஸ்டிவைட் த ரெகமண்டேஷன்” என்று பொரிந்து தள்ளி விட்டார் வசுந்தரா.
‘எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் என்னிடமே இவர்களது திரைமறைவு வேலை திறமைகளை காண்பித்திருப்பார்கள்’ என்ற கோபம் அடங்க மறுத்தது.
“வசு, ஈசி. காம் டவுன் ப்ளீஸ். உன் பக்கத்தில இருக்குறதுக்கு எனக்கு கிடைச்சிருக்கிற கடைசி வாய்ப்பு இது. அதை நான் இழக்க விரும்பலைன்றது தான் உண்மை. அட் த சேம் டைம், என்னோட கேரியருக்கும் (career) இது ஒரு பெரிய மைல்கல் தான். இந்த போஸ்டுக்கு கேபினட் மினிஸ்டர் ரேங்க்! யாரும் இந்த வயசுல இந்த போஸ்ட்க்கு வந்ததே இல்ல வசு. எனக்கு திறமை இல்லாட்டி கண்டிப்பா பேரு லிஸ்ட்ல கூட வந்திருக்காது. அது உனக்கும் தெரியும் தானே”
“ம்ப்ச், புரியாம பேசாதீங்க சிட். ஐ வாண்ட் ஓப்பன் அண்ட் டிராண்ஸ்பெரண்ட் டீலிங்ஸ் இன் எவிரிதிங் ஐ டு. அதுக்கு ஆரம்பமே தப்பா இருக்கு. இதுல யூ ஆர் டெல்லிங் மீ யூ ஆர் ஸ்டில் இன் லவ் வித் மீ! வாட் கைண்ட் ஆப் நான் சென்ஸ் இஸ் திஸ்?”
“பி.எம்மா இருந்தா உனக்குன்னு பர்சனல் லைஃபே இருக்கக்கூடாதுன்னு இந்திய அரசியல் சாசனத்துல எதுவும் சொல்லல வசு” என்ற சித்தார்த்தின் குரலில் காட்டம். வசுந்தராவிற்காக மலையைப் புரட்டி ஒரு விசயத்தை செய்திருக்க, அதற்கான எதிர்வினை சுத்தமாக இல்லை என்றால், அவரும் தான் என்ன செய்வார்?
“ஹ்ம்ம், எவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க? அரசியல் சாசனத்துல இல்லை தான். ஆனா இந்த நாட்டில, ஒரு பொண்ணா அரசியல் வாழ்க்கையா, இல்லை குடும்ப வாழ்க்கையான்னு இரண்டில ஒன்னை தான் பெண்களால தேர்ந்தெடுக்க முடியும். இரண்டுமே சரியா அமைச்சுக்கிட்டவங்கள விரல் விட்டு எண்ணிடலாம்.
ஒன்னு, தனியா இருந்தா அவளோட கேரக்டரை அசாசினேட் பண்ணி, திமிர் பிடிச்சவ அப்டி இப்டின்னு என்னவெல்லாம் சொல்லி இமேஜை ஸ்பாயில் பண்ண முடியுமோ அவ்ளோ பண்ணுவாங்க! இல்லையா குடும்பமா இருந்தா பேருக்கு பதவியை மட்டும் கொடுத்துட்டு, அந்த வீட்டு ஆண்களோட கைப்பாவையா தான் வைச்சிருப்பாங்க. இல்லைன்னு உங்களால சொல்ல முடியுமா?
நம்ம நாட்டுல 48 சதவீதம் பெண்கள். அதுல எத்தனை பேர் அரசியலை முழுநேரத் தொழிலா எடுத்துட முடியும்னு சொல்லுங்க? நாடாளுமன்றத்துல பெண் எம்.பிக்கள் கூட 15 சதவீதத்துக்கும் கீழ தான் சிட்!
இப்ப சொல்லுங்க. கண்டிப்பா எனக்கு பெர்சனல் லைப் இருக்கலாம் தான். ஆனா அதுல யாராச்சும் கை நீட்டி குற்றம் சொல்ல சான்ஸ் கொடுக்கலாமா? நீங்க இந்த மாதிரி ஒரு மைண்ட் செட் வச்சிட்டு வொர்க் பண்ணா, இட்ஸ் பிக் கான்பிலிக்ட் ஆஃப் இண்டிரஸ்ட்.
இவ எப்படா சறுக்கி விழுவா, மூஞ்சில கரியைப் பூசலாம்னு ஒரு கூட்டமே காத்துட்டு இருக்கு சிட். அதுக்கு ஒரு வாய்ப்பா இதை தூக்கிக் கொடுக்கிறதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். பிரின்சிபல் செக்ரட்ரியுடன் பிரதமர் காதல் களியாட்டம்னு ஹெட்லைன்ஸ் போடுவாங்க. அது தான் நீங்க எதிர்பார்க்குறீங்களா?” என்றார் தீவிரமாக.
“ஹா ஹா, நமக்கு எங்க அந்த லக் எல்லாம் இருக்கு? காதல் களியாட்டம்னு பேப்பர்லயாச்சும் வருதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்” என்று போலி பெருமூச்சு விட்டவர், பின் விளையாட்டைக் கைவிட்டவராய்,
“லிசன் வசு. வி ஆர் நாட் டீனேஜர்ஸ். வீ ஆர் மெச்சூர்ட் அடல்ட்ஸ்! யூ ஆர் அ சீசண்ட் பாலிட்டிசியன். அரசியலுக்காக உன்னோட சொந்த வாழ்க்கைய விட்டுக் கொடுக்கத் தயாரா இருக்க தியாகி!
அண்ட் ஐ ஆம் அ டிரெயிண்ட் டிப்லோமாட். இந்தியன் கவர்ன்மெண்ட்டோட க்ரெடிபிலிட்டி அஃபெக்ட் ஆகுற மாதிரி ஒரு சொல், செயல் என்கிட்ட இருந்து வராது. யூ ஹேவ் மை வோர்ட் ஆன் தேட்.
அதோட பி.எம்மா மட்டும் இல்லாம, ஒரு பொண்ணா, தனி மனுஷியா, உன்னோட மரியாதையும் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அதுக்கு பங்கம் வர்ற மாதிரி நான் ஒரு நாளும் நடக்க மாட்டேன். நான் உன்கிட்ட பேசணும்னு சொல்லி இதெல்லாம் சொன்னது கூட என்னோட இண்டென்ஷன் உன்கிட்ட கிளியர் பண்றதுக்காகத் தான்.
அதுக்காக உடனே நான் ஏதோ லவர் பாய் மாதிரி ஆஃபிஸ் ரூம்ல டூயட் பாடப் போறது போல நீ என்னைய மட்டமா நினைச்சுடாதே. அண்ட் அவர் பாஸ்ட் இஸ் சீல்ட். என்கிட்ட இருந்து எதுவும் வெளில வராது.
மீடியா ஏற்கனவே ஸ்மெல் பண்ணிருக்க வாய்ப்பு இருக்கு தான். யங் அண்ட் ப்யூட்டிஃபுல் பி.எம். ஸிங்கில் வேற! அதோட நம்ம ரெண்டு பேரும் ஜெ.என்.யூ (J.N.U) முன்னாள் மாணவர்கள் அப்டின்றதே அவங்களுக்கு அல்வா ஸ்கூப்.
கேட்கவே வேண்டாம். இது மாதிரி நியூஸ் எல்லாம் அவங்களுக்கு ஒன்ஸ் இன் லைஃப்டைம் கிடைக்கிறது. கண்டிப்பா கேப்பிட்டலைஸ் பண்றதுக்கு தான் பார்ப்பாங்க. தேட் இஸ் ஈவன் இஃப் நத்திங் இஸ் கோயிங் ஆன் பிட்வீன் அஸ்” என முடிக்குமுன்னே,
“தேர் இஸ் நத்திங் கோயிங் ஆன் பிட்வீன் அஸ் சிட்!” என சீறினார் வசுந்தரா.
“இல்லையா என்ன? சீ வசு. ஐ ஹேவ் மேட் மை இண்டென்ஷன் கிளியர். ஐ திங்க் யூ ஸ்டில் ஹேவ் ஃபீலிங்க்ஸ் ஃபார் மீ. ஆனா நீ ஒத்துக்க மாட்ட! நான் உன்னை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன் வசு.
நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன். மை மைண்ட் இஸ் கிளியர் நவ். பேக் டு வொர்க் டுமாரோ. குட் நைட்” என்றவர், வசுந்தரா பதிலளிக்கக்கூட வாய்ப்புத் தராமல் அலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.
‘உஃப் எத்தனை வருசம் ஆனாலும், என்ன டிப்ளோமேட்டா இருந்தாலும், இந்தப் பொண்ணை மட்டும் கரெக்ட் பண்ண முடியலையே ஆண்டவா’ என மனதினுள் புலம்பிய சித்தார்த், பாரம் இறங்கியதாலோ என்னவோ, தெளிவான மனதுடன் படுத்ததும் உறங்கி விட்டார்.
ஆனால் ‘இவங்க சங்காத்தம் வேண்டாம்னு இருந்தாலும் தேடி வந்து வம்பு பண்றாங்களே’ என புலம்பிய வசுந்தராவோ, தாரா தேவிக்கு அழைத்துப் பேச நினைத்தாலும் உடலிலும், மனதிலும் தெம்பு இல்லை.
சிறிது நேரம் புரண்டு படுத்தவரின் மனதில், ‘ஐ ஆம் ஸ்டில் இன் லவ் வித் யூ வசு’ என்ற சித்தார்த்தின் குரல் வேறு விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘எவ்வளவு ஈசியா சொல்றார்? செத்தேனா, பொழச்சேனான்னு கூடக் கேட்காம, பத்து வருசம் மேல பேசாம இருந்துட்டு இப்போ ஒரு டிரான்ஸ்ஃபர்ல எல்லாம் மாறிடுமா என்ன?’ என்று கோபம் வேறு வந்தது.
‘பிரேக்-அப்புன்னு அவர கோவப்படுத்தி பிரிஞ்சு வந்தது நீ தானே வசு. அப்போ கூட அவர் எவ்வளவோ சொன்னார் தானே’ என வசுவின் நியாய மனசாட்சி ஒரு புறம் இடித்துரைக்க, அது வேறு மனதை அழுத்தியது.
வேகமாக அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தவர், முக்கிய நபர் ஒருவரின் புலனப் பக்கத்தைத் திறந்து, தட்டச்சு செய்யத் துவங்கினார்: ‘Tomorrow 5 AM, Jogging @ India Gate?’
சில விநாடிகளிலிலேயே பதிலும் வந்துவிட்டது: ‘Got security clearance? Big day today! I was waiting for your call. Is everything ok?’
‘Sorry, long day! Will sort it with SPG’ என்று வசுந்தராவின் செய்திக்குப், பதிலாக வந்தது, தன் இல்லாத நேரங்களையும், பேசாத மௌனங்களையும் புரிந்து கொள்ளும் ஒரே நபரின் மென்னகைதான்.
கேள்விகளுடனே நீண்ட இரவுக்குப் பின்னர், மெல்லோட்டத்தின் நடுவே, உணர்வுகளின் சுமையை இறக்கி வைத்து, நாளைய போர்க்களத்தை எதிர் கொள்ளும் உத்வேகம் அளிக்க, வசுந்திராவின் மனதில் தோன்றிய முதல் உருவம் வருணன் தேவராஜன்!
error: Content is protected !!