Skip to content
Post Views: 179
வருணனின் அலுவலக அறையின் முன் நின்று கேள்வியாகப் பார்த்தார் வசுந்தரா.
தன் கையிலிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்த வருணன், திரும்பி இடைவரை குனிந்து, வசுந்தராவை வரவேற்றார். வருணனின் முகத்திருப்பலை எதிர்பார்த்து வந்த வசுந்தராவிற்கு, இத்தகைய வரவேற்பு ஆச்சரியத்தைக் கொடுத்து இறுக்கத்தை தளர்த்தியது. உதயனுக்கு துணைப் பிரதமர் கொடுக்க வைத்ததற்கு சண்டை போட வேண்டும் என்பதெல்லாம் மறந்தே போய் விட்டது அவருக்கு.
மனம் இலகுவானதில் சன்ன சிரிப்புடன் வசுந்தரா உள்ளே வர,
Advertisement
“எங்க உன்னோட வானரப் படை?” என்ற வருணன், அறைக்கு வெளியே இருபுறமும் பார்த்துவிட்டு, கதவை அடைத்தார்.
Advertisement
‘SPG உனக்கு வானரப் படையா?’ – முறைத்தார் வசுந்தரா.
Advertisement
“இல்லையா பின்ன?”
Advertisement
“கௌதம் சைட் ஃபுல்லா செக்யூர் பண்ணி தான் என்னைய அனுப்பினார். கூடவே வர்றேன்னு சொன்னார். நான் தான் இது ‘அன்அப்ஷியல்’ லைன் யூஸ் பண்ணி ரிசப்ஷன்ல வெய்ட் பண்ண வைச்சிருக்கேன்”
“குட்” என மெச்சிய வருணன், அறையை ஒரு சுற்று ஆராய்ந்தபடி, சாளரத்தின் வெளியே ஒரு பார்வை பார்த்து விட்டு, திரைச்சீலைகளை நன்றாக இழுத்து மூடினார். இரு கைகளையும் கட்டியபடி, ஒரு காலை சுவரில் ஊன்றி சாளரத்தின் ஒரு மூலையில் நின்றபடி வசுந்தராவைப் ஆழ்ந்து பார்த்தார்.
அவரின் முஸ்தீபுகளை மெல்லிய படபடப்புடன் கவனித்தபடி, வசுந்தராவும் அவர் அருகில் வந்து மற்றொரு பக்கம் நின்றார்.
“சோ?”
“சோ…”
“நீங்க தான் மேடம் நேர்ல பேசணும்னு சொன்னீங்க?”
‘இதைக் கொஞ்சம் எளிதாக்கக் கூடாதா?’ என்ற வேண்டுதல் பார்வை வசுந்தராவிடம். வருணனின் பார்வையிலோ இரசனையும், சுவாரஸ்யமும்.
ஒரு கையை வசுந்தராவிடம் நீட்ட, அதை மெலிதாகப் பிடித்துக் கொண்டார் வசுந்தரா. அவரை தன்னிடம் இழுத்துக் கொள்ள, வசுந்தரா வருணின் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டார்.
“அப்போ அம்மணி வாயைத் திறந்து சொல்ல மாட்டீங்க?” என்று சீண்ட, வருணனை முறைக்க முயன்று தோற்றவர், நிமிர்ந்து பார்த்து,
“ஏன் சொல்ல மாட்டேன்? அதெல்லாம் சொல்லுவேன்” என்றார் மிடுக்காக.
“என்னன்னு?”
“…ஐ திங்க்”
“இன்னும் திங்க்கா…?”
“ம்ப்ச் வருண்! என்னைப் பேச விடேன்”
“ஓகே…ஓகே” என்றவர் ‘சிப்’ என வாயில் இழுத்து சைகை செய்தார்.
வருணன் பார்வை அவரை குறுகுறுக்கச் செய்ய,
“நான் தள்ளியே இருக்கேன், அப்போ தான் பேச முடியும்” என சற்று நகர்ந்து விட, வருணனுக்கு சிறு சுணக்கம்.
ஆனால், வருணன் கைகளைப் பற்றியபடி, கண்களை நேராகப் பார்த்து,
“ஐ ஆம் இன் லவ் வித் யூ வருண்” என்று கண்களில் காதல் பொங்க வசுந்தரா கூறியதும், அந்த சிறு சுணக்கம் கூட பறந்து விட்டது. அந்த நொடியில் அவர் முகத்தில் பேரமைதி. காலம் காலமாகக் காத்திருந்த காதல் கை சேர்ந்த நிம்மதி.
வருணனின் அந்த அமைதியில் வசுந்தராவுக்கு பெரும் ஆச்சரியம்! ஆர்ப்பட்டமாக அட்டகாசம் செய்வார்; தன்னைத் தூக்கிச் சுற்றிக் கொண்டாடுவார் என்று தான் எதிர்பார்த்திருந்தார்.
அது அவர் முகத்திலும் தெரிய,
“என்னடாம்மா?” என்றார் வருணன் தனது மொத்தக் காதலையும் தேக்கி!
ஒன்றுமில்லை என தலையை இடம், வலமாக அசைக்க, இரு கைகளையும் விரித்து அழைத்தார் வருணன். அதில் தஞ்சம் புகுந்தவரை, மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.
சில நிமிடங்கள் தன்னவளின் ஸ்பரிசத்தை உணர்ந்து சிலாகித்தவர், வசுந்தராவின் நெற்றியில் தனது முதல் அச்சாரத்தைப் பதித்தார். வசுந்தராவுக்கோ கூடடைந்த உணர்வு!
தாயின் அரவணைப்பையும், தந்தையின் பாதுகாப்பையும் ஒருங்கே பெற்றவர், அதற்கும் மேலாக வருணனின் காதலின் தேடலையும் உணர்ந்தார். அதில் கண்கள் கலங்க வருணனை நிமிர்ந்து பார்க்க, அவரது கண்களும் கலங்கி தான் இருந்தது.
வசுந்தரா முகம் நோக்கி குனிய, அவர் கண்கள் படக்கென மூடிக்கொண்டது. அதில் வருணன் முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது. மெதுவாகக் குனிந்து, மிருதுவாக கண்களில் இதழொற்றி விழிநீரை துடைக்க, வசுந்தரா மேனி சிலிர்த்து அடங்கியது.
தன் கண்ணீரை அவரது கன்னத்தில் தேய்த்தெடுக்க முனைய, தாள முடியாமல் கண்களைத் திறந்தவர் வருணனைப் பார்க்க,
“என்கிட்ட வர்றதுக்கு உனக்கு இவ்ளோ வருசம் தேவைப்பட்டுச்சா கண்ணம்மா?” என கரகரத்த குரலில் கேட்க, வசுந்தராவுக்கு மீண்டும் கண்ணீர் பொங்கியது.
அதில் சுதாரித்த வருணன், அவர் கண்ணீரைத் துடைத்தபடி,
“கொஞ்சம் பேசலாமா?” என்றவாறு, அங்கிருந்த மெத்திருக்கையில் அவரை அமர வைத்து, பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
“இப்ப சொல்லு, என்னாச்சு? திடீர்னு எப்படி மேடத்துக்கு பல்ப் எரிஞ்சுச்சு?”
அதில் மீண்டு வருணனை முறைத்தவர்,
“கல்யாணம் பண்றதுக்கு எவ்ளோ நாள் நோட்டீஸ் கொடுக்கணும்?” என்று மிடுக்காகக் கேட்க, அதிர்ந்த பார்வை வருணனிடம்.
“அம்மணி, இப்டி ராக்கெட் வேகத்துல போனா நாடு தாங்காது!”
“ம்ப்ச், ஐ நீட் யூ பேட்லி வருண்” எனவும் வசுந்தராவை ஆச்சரியமாகப் பார்த்தார் வருணன்.
“ஹேய், என்னடி இப்டி ஒரே ஷாக்கா குடுக்குற” என்றவர், ஆசையாய் வசுந்தராவை மடியில் அமர்த்திக் கொண்டார்.
“பேசணும்னு சொன்ன?”
“இப்டி உக்காந்துட்டே பேசலாம்!”
“ம்ம்ம், நீ என்னைய ரொம்ப தவிக்க விட்டுட்ட வருண்” என்றவர், படக்கென வருணன் தோளில் அழுத்தமாகக் கிள்ள,
“ஆ, ராட்சசி, வலிக்குதுடி விடு” என்ற பின்னரே கையை எடுத்தார்.
“வேணும்னே பேசாம போட்டுப் பாக்குற என்ன?” என்றவர் வருணனைத் தீயாய் முறைத்தார்.
“ஹா, ஹா…உன்கிட்ட பேசாம நான் மட்டும் ஹாப்பியா இருந்தேனா என்ன?”
“உனக்கென்ன கேடு? அதான் உங்க நொண்ணன் கூட ஜோடி போட்டுட்டு ஊரைச் சுத்திட்டு இருந்தியே?”
“பொறாமை…?”
“ஒரு ஆமையும் இல்ல. செம கடுப்பாச்சு, என் கூட பிரச்சாரத்துக்குக் கூட வரல நீ. ஆனா…அப்போ தான் ரியலைஸ் பண்ணேன்”
அதைக் கேட்டதும், பதிலில்லாத ஆர்வமான பார்வை மட்டுமே வருணிடம்.
“இந்த ஒரு மூனு நாலு மாசத்தை விட்டுப் பார்த்தா, வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ எப்பவுமே எனக்கு அக்செசபிளா தான் இருந்துருக்க…நான் அதை ரொம்ப டேக் இட் ஃபார் கிராண்ட்டட்டா எடுத்துக்கிட்டேன்ல்ல…?”
“ம்ம்ம், அப்டின்னும் சொல்ல முடியாது. உனக்கு அவெய்ளபிளா இருக்குற மாதிரி தான் என்னோட லைஃப்ல எல்லா டிசிசனும் எடுத்துருக்கேன்! சோ அது என்னோட சாய்சும் தான்”
“எனக்கு எப்டி சொல்றதுன்னு தெரியல வரு. உன்னோட பிரசன்ஸ் புரிய வைக்காதத, உன்னோட ஆப்சென்ஸ் ரொம்ப தெளிவா புரிய வைச்சிருச்சு!”
வசுந்தராவை மெச்சுதலான பார்வை பார்த்தார் வருணன். அதில் கவனம் வைக்காமல்,
“நீ இல்லாத இந்த சில மாசம் தான் நான் என்ன மிஸ் பண்றேன்னு எனக்குத் தெரிஞ்சுது. அதுவும் எனக்கு ரொம்ப தேவைன்றப்ப… நீ இல்லாதது ஏதோ என்னையே நான் தொலைச்சிட்ட மாதிரி ஃபீல் பண்ணேன். ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்…யார் கிட்ட என்னன்னு சொல்லுவேன் வரு?” என்று தன் போக்கில் பேசிக் கொண்டு போனவர், சில நிமிடங்கள் மௌனம் காத்தார்.
‘மனதிலிருப்பதை கொட்டட்டும்’ என்று நினைத்த வருணனுமே இடையிடாமல் பார்த்திருந்தார்.
“உனக்கு தெரியும்ல, ஒரு பிராக்டிக்கல் பாயிண்ட்ல தான் நானும் சித்தார்த்தும் பிரேக் அப் பண்ணோம். ரெண்டு பேரோட ‘பாத்’தும் வேற வேற. திங்கிங்கும் வேற வேற. பிரிஞ்சிருந்த அந்தப் பத்து வருசமும் அவரை நான் மிஸ் பண்ணலை வருண். உனக்குப் புரியுது தானே…?”
இப்போது பேச்சின் திசை பிடிக்காவிட்டாலும், அவர் தோள்களில் ஆதரவாகத் தட்டிய வருணன்,
“இப்ப எதுக்கு இந்தக் கதை? எனக்குத் உன்னைய நல்லாத் தெரியும்…புரியும் வசு. நீ எதையும் எக்ஸ்பெளெய்ன் பண்ண வேண்டாம்!” என்றார்.
“இல்ல வரு, இந்த ஒரு வாட்டி நான் ஓப்பனா பேசிட்றேன். என்னோட மன திருப்திக்கு” என்று நிறுத்தியவர்,
“சித்தார்த் திருப்பி வந்து ஃபீலிங்க்ஸ் மாறலைன்னு சொன்னப்போ, அது ரிவைவ் பண்ற ஐடியாலாம் எனக்கு இல்ல. ஒரு பெஃமிலியாரிட்டி அன்ட் க்யூரியாசிட்டி தான் இருந்துச்சு. பட், அப்டி கன்சிடர் பண்றது கூட உனக்கு செய்ற அநியாயம்னு தோனுச்சு வரு” என்றதும் அதிர்ச்சியாகப் பார்த்தார் வருணன்.
“அப்றம் ஏன்டி என்கிட்ட எதுவும் சொல்லல?”
“சொல்ற சூழ்நிலை இல்ல வரு. எப்டி சொல்றது? இந்த இடத்துக்கு வர்ற வரைக்கும் வேற எந்த யோசனையும் இல்ல எனக்கு. நீ என்னைய ரொம்ப கம்ஃபர்ட் ப்ளேஸ்ல வச்சிருந்த. எனக்கு அந்த ப்ரெண்ட் சோன்ல இருந்து வெளில வர்ற அவசியமே இல்ல”
“புரியல…”
“எனக்கு வேற மாதிரி உன்னைய யோசிக்கிறதுக்கு எந்தக் காரணமும் இல்ல. நீயும் விளையாட்டா தான் சொல்லிட்டு இருக்கன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்”
“அடிப்பாவி! நான் என்ன பொக்கே குடுத்து ப்ரோப்போஸ் பண்ணிருந்தா தான் மேடம் சீரியசா கன்சிடர் பண்ணுவீங்களோ?” – முறைப்பு வருணனிடம்.
“ஓய், முழுசா கேளேன்” என்றவாறு கீழிறிங்கி அமர முயன்றார்.
“ம்ப்ச், இங்க இருந்தே பேசு!”
“கால் வலிக்கப் போகுது வருண்”
“அது என் பிரச்சனை, இப்ப கிளம்பினா திரும்பி எப்போ உன்னைய நேர்ல பாக்க முடியும்னு கூட தெரியாது. கொஞ்ச நேரம் உன்னை இப்டி ஃபீல் பண்ண விடேன் ப்ளீஸ்”
“ஹ்ம்ம்…உனக்காகத் தான் யோசிச்சேன்” என்றவர், வருண் மேல் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
“உண்மைய சொல்லணும்னா, அப்டியே காலத்தை ஓட்டிடலாம்னு நினைச்சேன். அப்றம்…” – தயக்கமாக நிறுத்தினார் வசுந்தரா.
வருணன் அவரை கேள்வியாகப் பார்த்தார்.
“நான் உன்னை ஹஸ்பன்ட் ப்ளேஸ்ல வைச்சிப் பார்த்தா…”
“பாத்தியா என்ன?”
“அங்க தான் பிரச்சனை…”
“என்ன பிரச்சனை?”
“எனக்கு ஒரு வைஃப் ப்ளேஸ்ல இருந்து உன்ன சாட்டிஸ்ஃபை பண்ண முடியும்னு தோணல…”
“ஏன்?” என்று வேகமாக இடையிட்டார் வருணன்.
“நாம அந்த மாதிரி பழகலேல. பிசிக்கல் இண்டிமஸிக்கு ஃபெமிலியாரிட்டி ஒரு ப்ளாக்கா இருக்கும்னு தோனுச்சு!”
“போடி லூசு” என்றவர், வசுந்தராவை இறுக்கி அணைத்தபடி,
“இது ஒரு பிரச்சனைனு சின்ன ஹிண்ட் கொடுத்திருந்தேன்னா, செக் பண்ணிப் பாத்துருக்கலாம்” என்றார்.
“செக்கா?”
“ம்ம்ம்” என்றவர், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் இதழ்களில் உரசி விலக, வசுந்தராவின் முகம் சட்டென்று சிவந்தது.
“இப்போ சொல்லு, ஜிவ்வுன்னு இருந்துச்சா இல்ல அருவருப்பா இருந்துச்சா?”
“ஏதோ எறும்பு கடிச்ச மாதிரி தான் இருந்துச்சு!” என்று வசுந்தரா பங்கம் செய்து விட, வருணின் முகம் அஷ்டகோனலாகியது.
அதில் கலகலவென சிரித்தவர்,
“பிசிக்கல் இண்டிமசி பத்தியும் எனக்கு யோசிக்க வேண்டியிருந்தது வருண். அதுக்குள்ள சித்தார்த் இறந்தப்பறம் கில்ட் ஃபுல்லா ஓவர்டேக் பண்ணிடுச்சு” என்ற போது சிரிப்பு சுத்தமாக மறைந்து விட்டது.
“அதுக்கப்புறம் தான் உனக்கே தெரியுமே…உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். சாரி வரு” என்றவர் வருணனின் கன்னத்தை மென்மையாக வருட, அவர் கரங்களை அப்படியே அழுத்திக் கொண்டார்.
“ஒன்னு சொல்லட்டுமா?”
“ம்ம்ம்”
“நீ ரியலைஸ் பண்ணிருக்கியான்னு தெரியல, பட் நான் நெறைய தடவை கவனிச்சிருக்கேன். என்னோட பிசிக்கல் டச்-ல நீ ஒரு நாளும் அன்ஈசியா ஃபீல் பண்ணதே இல்ல…”
“அ…அதெல்லாம் ஃபரெண்ட்லி டச் தானே. அதோட ரெண்டு பேரும் சின்னதுலேர்ந்து ஒன்னா தான் ஓடி விளையாண்டிருக்கோம். சோ?”
“நான் அப்டி சொல்லல வசு. டீன் ஏஜ்ல…ஏன் அடல்ட்ஸ் ஆனப்பறம் கூட எல்லாரையும் ஒரு டிஸ்டன்ஸ்ல தான் வைச்சிருப்ப. பட் என்கிட்ட உனக்கு எந்தவொரு ரெஸ்ட்ரிக்ஷன்சும் இருக்காது. அந்த மாதிரி ஏதாச்சும் சின்னதா நான் சென்ஸ் பண்ணிருந்தாக் கூட இவ்ளோ கான்ஃபிடென்ட்டா வெயிட் பண்ணிருக்க மாட்டேன்”
“ஹ்ம்ம், மே பி. நீ நோட்டிஸ் பண்ண அளவு நான் ரிஃபெலெக்ட் பண்ணி பார்க்கலையோ என்னவோ…எல்லாத்தையும் விட என் மனசு ஃபுல்லா பொலிட்டிக்கல் லைஃப் தான் இருந்துச்சு வரு”
“அதுதான் உலகத்துக்கே தெரியுமே” என்றவர் இன்னுமே கையை விடாமல்,
“எல்லாம் ஓகே, இன்னிக்கு ஸ்பெசிஃபிக்கா என்ன நடந்துச்சு?” என விஷயத்தின் நாடியைப் பிடித்து விட, கையை உருவிக் கொண்ட வசுந்தரா மௌனம் காத்தார்.
பின்னே ‘மனோகர் ஜோஷி பேசிய பின்னரே என் குற்ற உணர்ச்சி நீங்கியது’ என்றா சொல்ல முடியும்? வருணன் தன் மீது வைத்திருக்கும் காதலை அவமரியாதை செய்ய முடியாதே அவரால்.
“சொல்லமுடியாத விஷயம்னா இட்ஸ் ஓகே வசு” என்ற வருணனும், அணைப்பை தளர விட,
“ம்ப்ச்” என்றபடி, இப்போது அழுத்திப் பிடித்துக் கொண்டார் வசுந்தரா.
“சித்தார்த்துக்கு க்ரீவிங் அப்டின்றத விட கில்ட் தான் என்னையக் கொன்னுடுச்சு. நீயும் என்னைய டோட்டலா விட்டுட்ட”
“நான் எப்பவும், எங்கயும் உன்னை விடல வசு!”
“அப்ப ஏன் எங்கிட்ட ஒழுங்காவே பேசல…”
“நீங்க தான் அம்மணி என்னைய டெல்லில கூட இருக்கக்கூடாதுன்னு தொரத்தி விட்டீங்க. என்னையப் பார்க்கக் கூட இல்ல” என்று விட்டார்.
இதற்கு என்ன பதில் கூற முடியும்?
“அது கூட பரவாயில்ல. உங்க சிச்சுவேஷன் எனக்குப் புரிஞ்சது. நான் என்னவோ பாஞ்சுடுவேன்ற மாதிரி, என்னைய அப்டி தள்ளி நிறுத்திட்டீங்க. அப்போ நான் என்ன பண்ண முடியும்?” என்றதும் வசுந்தராவின் முகம் சுருங்கி விட்டது.
“நான் அப்டி எதுவும் நினைக்கல வரு…என்னைய சரியா புரிஞ்சுக்கணும் நீ”
“என்னைய விட யாருக்கு உன்னைப் புரியும் சொல்லு?”
“ப்ளீஸ் வரு”
ஒரு நீண்ட பெருமூச்சுடன்,
“ரொம்ப கஷ்டமா இருந்துச்சு வசு. இத்தனை வருசம் என் கூட இருந்து நீ என்னையப் பத்தி என்ன புரிஞ்சிகிட்ட அப்டின்னு வருத்தம் தான். சரி தள்ளி நின்னு உனக்கு யோசிக்க கொஞ்சம் ஸ்பேஸ் கொடுக்கலாம். அப்பவாச்சும் உனக்கு உன் மனசு புரியுதா பாக்கலாம்னு…” என்க, அவர் வாயில் கை வைத்துத் தடுத்தார் வசுந்தரா.
வருணன் கேள்வியாகப் பார்க்க,
“எல்லாம் புரிஞ்சுது…அகெய்ன் வெரி சாரி” என்ற வசுந்தராவின் கைகளில் மென்மையாக முத்தமிட்டார் வருணன். அதை கண்மூடி அனுபவித்தவர், திடீரென ஏதோ ஞாபகம் வந்தவர் போல,
“ஆமா…அதென்ன பொக்கே கொடுத்து ப்ரோப்போஸ் பண்ணனுமா கேக்குறா. அட பொக்கே கூட வேண்டாம், ப்ரோப்போஸே பண்ணல! நீ எப்போ எனக்கு ப்ரோப்போஸ் பண்ண சொல்லு?”
சில நிமிடங்கள் மௌனம் வருணனிடம். வசுந்தரா சற்று ஆர்வமாகப் பார்த்திருக்க,
“என்னோட முழு வாழ்க்கையும் சொல்லாதத ஒரு வார்த்தை சொல்லிடுமா என்ன? நீ என் காதலை உணர்ந்து என்கிட்ட வரணும்னு நினைச்சேன். சொல்லுவாங்கல்ல…சொல்லித் தெரிவதில்லை காதல்னு. அது ஏதோ பொயட்டிக்கா இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை ரொம்ப நிதர்சனமான உண்மை!” எனவும், வாயடைத்துப் பார்த்தார் வசுந்தரா.
error: Content is protected !!