Skip to content
Post Views: 1,273

தீனா காலையில் அறையில் தயாராகி கீழே இறங்கி வரும் போதே வீடே சத்தமாய் இருந்தது… அவன் தம்பிகள் இருவரும் சிறுபிள்ளைத்தனமாய் சண்டையிட்டு கொண்டு இருக்க ஜானகி அதை ரசித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.. அவன் இறங்கி வருவதை பார்த்த ஜானகி சிவாவிடம் “சிவா அமைதியாகுங்க ரெண்டு பேரும்.. மாமா வராங்க… டேய் கரண் அமைதியா உட்காரு…” என்று இருவரையும் அடக்கி சாப்பிட அழைத்து சென்றாள்….
Advertisement
தீனா வரவும் “மாமா சாப்பிட வாங்க உங்களுக்காக நானே என் கையால சமைச்சு எடுத்துட்டு வந்தேன்…” என்று காதலுடன் கூறினாள்…
அவனோ அவளுக்கு ஒரு சிரிப்பை தந்தவன் “பாட்டி சாப்பிடங்களா ஜானகி…” என்று கேட்டான்…
Advertisement
Advertisement
அவளும் ஒரு நிமிடம் முகத்தை சுருக்கியவள் பின் “மாமா பாட்டி இன்னும் சாப்பிடல… கூப்பிடும் போது எனக்கு வேண்டாம்… நான் அப்பறம் சாப்பிடுறேன்னு சொல்லிட்டாங்க…” என்று கூறினாள்…
அவன் அதை கேட்டதும் சாப்பிட அமர்ந்தவன் எழுந்து நின்றவன் தன் பாட்டி தங்கி இருக்கும் அறைக்கு சென்றான்… அங்கு அவனின் பாட்டி ஆண்டாள் கட்டிலில் சுயநினைவு இன்றி கோமாவில் படுத்து இருக்கும் தன் கணவர் அழகர் சாமியிடம் அமர்ந்து அவரையே பார்த்து கொண்டு இருந்தார்…
Advertisement
அவன் “பாட்டி ஏன் சாப்பிட வரல… இன்னும் எவ்வளவு நாள் என் கூட பேசாம இருக்க போறீங்க… நான் பண்ணது தப்பு தான்… எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க… நான் அதை சரி பண்றேன்…” என்று கூறினான்…
அவர் அப்போதும் அமைதியாய் இருக்க தீனா அவரின் அமைதியை காண முடியாமல் உண்ணாமல் கூட வெளியில் சென்றுவிட்டான்… அதை பார்த்த ஜானகி “ஏன் பாட்டி இப்படி மாமா கூட பேசாம இருக்கீங்க… பாருங்க மாமா சாப்பிடாம போறாங்க…” என்று அழுதவாறு கேட்டாள்…
பாட்டி எதுவும் பேசாமல் அவளை ஒரு பார்வை பார்த்தார்… அவ்வளவு தான் அவள் அழுது கொண்டே அந்த அறையில் இருந்து வெளியேறிவிட்டாள்…
வெளியில் சிவா கரண் இருவரும் தீனா சாப்பிடாமல் சென்றதால் இருவரும் கவலை தோய்ந்த முகத்துடன் சாப்பிடாமல் அமர்ந்து இருந்தனர்… இருவரும் உண்ணாமல் இருப்பதை பார்த்த ஜானகி “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க… மாமாவை நான் சாப்பிட வெச்சிடுறேன்.. சாப்பிட்டு ஸ்கூல் காலேஜ் கிளம்புங்க…” என்று இருவரையும் சாப்பிட வைத்து பள்ளி கல்லூரிக்கு அனுப்பி வைத்து விட்டு தீனா இருக்கும் இடத்திற்கு காலை உணவை எடுத்து கொண்டு சென்றாள்…
அருவி வீடு…
விஷ்ணு காலையில் எழுந்தவன் தன் மீது குழந்தை போல் உறங்கி கொண்டு இருக்கும் தன் மனைவியை தான் கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.. இவளை எப்படி தன் பாட்டியால் திட்ட முடிகிறது என்று நினைத்து வருந்தியவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்…
அந்த முத்தத்தில் சிணுங்கியவள் மேலும் அவனுடன் ஒன்றி தூங்க ஆரம்பித்தாள்… அவனும் அவளை தட்டி கொடுத்து தூங்க வைத்தவன் மீண்டும் அவளை அணைத்து கொண்டு உறங்கிவிட்டாள்..
சிறிது நேரம் கழித்து எழுந்த மகிமா விஷ்ணுவை பார்த்து “என் செல்ல மாமா” என்று கொஞ்சியவள் அவன் தூக்கம் கலையாமல் எழ பார்த்தாள்… ஆனால் அந்த கள்வனோ அவளை எழ விடாமல் தன் மேல் இழுத்து கொண்டான்…
அவள் தடுமாறி அவன்மேல் விழுந்துவிட்டாள்… அவன் மேல் விழுந்தவள் அவன் மார்பில் குத்தியவள் “யோவ் லூசு மாமா.. எதுக்கு பிடிச்சு இழுத்த… என்னை விடுடா..” என்று அவனிடம் இருந்து திமிறி எழுந்தவள் குளியலறை சென்றுவிட்டாள்… ஆனால் என்ன குளித்துவிட்டு போட உடை எடுத்து கொண்டு செல்ல மறந்துவிட்டாள்…
குளித்து முடித்ததும் அப்போது தான் உடையை தேடினாள்… அவள் தான் உடையை எடுத்து வரவில்லையே.. “ஐயோ ட்ரெஸ் எடுத்துட்டு வரலையே… நாம வேற ஓவரா டா போட்டு வேற கூப்பிட்டு வந்துட்டேனே… இப்ப எடுத்து வர சொன்னா ஓவரா பண்ணுவானே…” என்று புலம்பியவள் மெதுவாக கதவு அருகில் சென்றவள் “மாமா….” என்று மென்மையாக அழைத்தாள்… அவன் கேட்டாலும் கேட்காத மாதிரி அமைதியாய் அமர்ந்து இருந்தான்…
“மாமா….. என் செல்ல மாமால… ட்ரெஸ் எடுத்து குடு… ப்ளீஸ்…” என்று கொஞ்சினாள்… அவன் அப்போதும் அமைதியாய் இருக்க வேண்டும் என்றே தான் செய்கிறான் என்று அறிந்து அங்கிருக்கும் பெரிய துண்டை எடுத்து உடம்பை மறைத்தவாறு கட்டி கொண்டு வெளியே வந்தாள்…
அவள் பார்க்கும் போது அவன் கட்டிலில் இல்லை… வெளியே சென்று இருப்பான் என நினைத்து பேக்கில் துணியை தேடி கொண்டு இருந்தாள்… அப்போது அவளின் மாமனோ அவளை பின்னிருந்து அணைத்தான்… முதலில் பயந்து கத்தியவள் பின் அவனின் பரிசம் உணர்ந்து அவன் மேல் அப்படியே சாய்ந்து கொண்டாள்…
எல்லாம் சிறிது நேரம் தான் பின் அவனை தள்ளி விட்டவள் மீண்டும் துணியை எடுத்து கொண்டு குளியலறை ஓடிவிட்டாள்… அவன் சிரித்து கொண்டே பக்கத்தில் இருக்கும் இன்னொரு அறைக்கு சென்று குளிக்க சென்றுவிட்டான்… அவன் குளித்து விட்டு வரும் போது அவள் சமையல் அறையில் சமைத்து கொண்டு இருந்தாள்….
அவளை பின்னிருந்து அணைத்தவன் அவளை சமைக்க விடாமல் இம்சை செய்து கொண்டு இருந்தான்… “ஐயோ மாமா… அமைதியா இரு.. கொஞ்ச நேரம் சமைக்க விடு… ஒரு பத்து நிமிஷம் மட்டும் அமைதியா இரு…” என்று அவனை தன்னிடம் இருந்து பிரிக்க பார்த்தாள்…
அவனோ அவள் மண்டையில் தட்டி “என்ன இந்த மேகி சமைக்குறது பெரிய காரியமா… ஒழுங்கா நகரு கால் மணி நேரமா காய் தான் கட் பண்ணி இருக்க… நகரு நானே சமைக்குறேன்… என்னால எல்லாம் இந்த மேகியை எல்லாம் சாப்பிட முடியாது…” என்று அவளை தூக்கி சமையல் மேடையில் அமர வைத்தவன் சீக்கிரமாக சமைக்க ஆரம்பித்தான்…
அடுத்த அரை மணி நேரத்தில் சமைத்து முடித்தவன் அவளுக்கும் ஊட்டி விட்டு தானும் உண்டு முடித்துவிட்டு அருவிக்கு தூக்கி சென்றான்… அங்கு அவள் சிறுபிள்ளை போல் விளையாடி கொண்டு இருக்க விஷ்ணு அவளை ரசித்து கொண்டு இருந்தான்… அவன் மனசாட்சியோ “அவ விளையாடவா இங்க கூட்டிட்டு வந்த…” என்று கேட்க அதை அடக்கியவன் அவளை ரசிக்க ஆரம்பித்தான்…
பின் அவள் ஆடி முடித்து அவனிடம் வர அவன் கண்களோ அவளை தான் மேய்ந்தது… இருவரும் வீட்டிற்கு வந்த பின் தான் அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்தாள்… அந்த பார்வையில் அவள் தான் நெளிய ஆரம்பித்தாள்… பின் அவளை தூக்கி கொண்டு அறைக்கு சென்று கதவை அடைத்துவிட்டான்… (இனிமே நமக்கு அங்க வேலை இல்லை மக்காஸ்)
மருத்துவமனை…
சத்யா மருத்துவமனையில் அமர்ந்து இருக்க தீனா அப்போது கையில் வெட்டு காயத்துடன் வந்தான் உடன் ஜானகி அழுது கொண்டே வந்தாள்…. சத்யா அவனுக்கு சிகிச்சை அளிக்க முற்படும் போது ஜானகி “நீ என் மாமாவை தொடாத… இந்த ஹாஸ்பிடல்ல வேற டாக்டர் இல்லையா… உன் மூஞ்சுல முளிக்குறதே பாவம்…” என்று கூறி அவளை தடுத்தாள்….
சத்யா அதை கேட்டு கண் கலங்கி பின் வாங்க தீனா ஜானகியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வீம்பாக வேறு எந்த மருத்துவரையும் சிகிச்சை அளிக்க அனுமதிக்கவே இல்லை….
ஜானகியோ “மாமா உங்களுக்கு என்ன பைத்தியமா இவ கிட்ட தான் நீங்க டிரீட்மென்ட் பார்ப்பீங்களா… இவ வேண்டாம் மாமா… வாங்க நாம வேற ஹாஸ்பிடல் வேணா போகலாம்” என கூறினாள்….
தீனா அப்போதும் வீம்பாக அமர்ந்து இருக்க ஒரு பக்கம் அவன் கையில் ரத்தம் அதிகமாக வெளியேறி கொண்டு இருந்தது… சத்யா அதை பார்த்து பதறியவள் ஜானகியை மீறி அவனுக்கு கட்டு போட்டு விட்டாள்…
அவனுக்கு சிகிச்சை அளித்துவிட்டு சத்யா வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்… ஜானகியும் தீனாவை அழைத்து கொண்டு கோவமாக சென்றுவிட்டாள்…
தீனா வீடு…
ஜானகி வீட்டிற்கு நுழைந்ததும் “மாமா… உங்களுக்கு எங்க போச்சு அறிவு… அந்த சத்யா கிட்ட டிரீட்மென்ட் பார்த்து இருக்கீங்க… அவளே ஒரு ஒழுக்கம் கெட்டவ… அவகிட்ட டிரீட்மென்ட் பார்த்தா உங்க மரியாதை என்ன ஆகும்… முதல்ல அவளை இந்த ஊரை விட்டு அனுப்புங்க” என்று கத்தி கொண்டு இருந்தாள்…
“நான் என்ன பண்ணனும் நீ சொலல் கூடாது… உன்னோட லிமிட்ல இரு…” என்று கோவமாக கூறிவிட்டு பைக் எடுத்து கொண்டு நேராக வயலிற்கு சென்று விட்டான்… அங்கு அவன் அமர்ந்து இருக்க அவனிடம் பேச வடிவாம்பாள் வந்தார்…
வீட்டில் அவன் சென்றதும் ஜானகியும் அழுது கொண்டே தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.. தீனாவின் தம்பிகள் இருவரும் அங்கு தான் இருந்தனர்… அவர்களோ தன் அண்ணன் அண்ணி இருவரின் சண்டைக்கு சத்யா தான் காரணம் என்று தேவையே இல்லாமல் அவள் மேல் கோவத்தை வளர்த்து கொண்டனர்…
error: Content is protected !!