Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 15

அத்தியாயம் 15

அத்தையின் பேச்சை மறுக்க முடியாமல் தனது தாய்மாமாவிற்கு அழைத்து பேசுவதாய் சொல்லிவிட்டு நீண்ட நேர சிந்தனையின் தலைவலியோடு ஹாலில் அமர்ந்திருந்தாள் அனன்யா.



Advertisement

“இங்க என்ன பண்ற நீ? நேத்து வாய் வலிக்க பேசிட்டு நைட்டு எல்லாரையும் தூங்க விடாம பண்ணிட்ட! கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ல?”

அலுவலகம் செல்ல கிளம்பிய விவேக் அறையில் அனன்யா இல்லாததை கண்டு கீழே வந்து கேட்டான்.

Advertisement

Advertisement

“ம்ம் நல்லா கேளு டா! ஆறு மணிக்கெல்லாம் கீழ வந்துட்டா!” கலையரசியும் சொல்ல,

“என்ன அனு? தூக்கம் வரலையா? ஹாஸ்பிடல் போனுமா?” என்றான் மனைவி அருகில் அமர்ந்து கனிவாய்.

Advertisement

“தூங்கலைனா ஹாஸ்பிடல் போவாங்களா?” அனு கேட்க,

“நைட்டுக்கு தூங்காம அனத்திட்டு இருந்தியே அனு! இப்பவும் சீக்கிரமே எழுந்து உக்காந்திருக்க?” என்றான் விவேக்கும்.

“அது தான் கண்ணு பட்டிருக்குனு அத்தை சுத்தி போட்டாங்களே! சரியா போச்சு மாமா!”

“ஹ்ம்! எதாவது வேணுமா? இப்ப ஓகே தான? நான் ஆபீஸ் போய்ட்டு வரலாம்ல!”

“ஹ்ம் போய்ட்டு வாங்க!” என்றவள்,

“அர்ஜுன் வருவான்ல?” என்றாள்.

“ம்ம் வருவான்!” என சாப்பிட அமர, 

“அப்போ நான் பெரிய மாமாகிட்ட பேசவா?” என்றாள் யோசனையோடு கணவனிடம்.

நேத்து வளையல் அணிவித்து பேசி நேரம் நன்றாய் சென்றுவிட மதியம் சாப்பிட்டு கிளம்பிவிட்டான் அர்ஜுன் ப்ரணித்தாவுடன்.

அதன்பின் பேச்சுக்கள் அர்ஜுன் பற்றி மட்டும் தான் அங்கே இருந்தது.

தான் நினைத்ததையே கலையரசியும் கூறிட விவேக் மனைவியைப் பார்த்தான்.

“ப்ரணித்தா நல்ல பொண்ணா தானே இருக்கா? அர்ஜுன்க்கும் ரொம்ப வருஷமா தெரியுமே! எவ்வளவு நாள் அவன்கிட்ட கேட்டுட்டே இருக்க போற? ஏற்பாடு பண்ணு அனு! ப்ரணித்தா பெரியப்பாகிட்ட பேசு! நல்ல நேரம் இருந்தா எல்லாம் தானா கூடி வரும்!” என்றார் கலையரசி.

விஜயலக்ஷ்மியும் அங்கே தான் அமர்ந்திருந்தாள். பேசவே இல்லை. 

“நமக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்! இனி நானும் யார்கிட்டயும் சம்மதம் கேட்டுலாம் நிக்க போறது இல்ல. எவ்வளவு தான் கேட்டுட்டே இருக்க முடியும்? நான் சொல்றது தான் இனி இந்த வீட்டுலயும்!” என சூசகமாய் கலையரசி சொல்வது புரியாமல் இல்லை விஜயலக்ஷ்மிக்கும்.

“நீ சும்மாவே இருக்க மாட்டியா கலை? அவளை மிரட்டிகிட்டே இருந்தா அவளும் என்ன தான் பண்ணுவா?” சந்தானம் கேட்க,

“நீங்க இப்படி பேசிட்டே இருங்க! இப்படி செல்லம் குடுத்து தான் கெடுத்து வச்சிருக்கோம்!” என்று பேச்சு விஜயலக்ஷ்மிக்கு தாவிவிட, அனன்யா எதிலும் தலையிடவில்லை.

இரவு உறக்கத்தில் இருந்த போது சுருக்கென ஒரு வலி அனன்யாவிற்கு. பயந்து பதறி அவள் விழித்து விளக்கை போட்டு அமர மீண்டுமாய் அதே சுருக்கென வலி.

“விவேக்!” என்ற ஒரே சத்தத்தில் விழித்துக் கொண்டான் அவனுமே!

“என்னாச்சு அனு?”

“தெரில! வலிக்குற மாதிரி இருக்கு! பயமா இருக்கு!” என்றவளுக்கு பயத்தில் கண்ணீர் வர, அன்னையையும் தங்கையையும் எழுப்பி அழைத்து வந்தான் உடனே.

“இவ்ளோ வாய் இப்போ பேசாதன்னு சொன்னா கேட்கணும்ல? நம்ம வீட்டு கண்ணு என்ன என் கண்ணு தான் முதல்ல பட்டிருக்கும்!” என அந்த நடு இரவிலும் கலையரசி உப்பு மிளகாய் வைத்து சுத்திப் போட,

“ம்மா! குடிக்குற சூட்டுல தண்ணி கொண்டு வந்து குடுங்க!” என்ற விஜயலக்ஷ்மி,

“ஒண்ணுமில்ல அண்ணி! பகல்ல தூங்கலைல அதான்! சரியாகிடும். கொஞ்ச நேரம் சாய்ஞ்சு உக்காருங்க. படுக்க வேணாம். டேப்லெட் போட்டாங்களா ண்ணா?” என அண்ணனிடம் கேட்க,

“நான் தான் குடுத்தேனே விஜி!” என்றான் விவேக்.

“நாளைக்கு இளநீர் வாங்கி குடு ண்ணா! தினமும் கூட குடுக்கலாம்! ஹீட் இருக்கு!”

“அதெல்லாம் சொல்லி வச்சிருக்கு. கொண்டு வந்துடுவாங்க. ஆல்ரெடி குடுத்துட்டு தான் இருக்கோம் விஜி! பாதி குடிச்சிட்டு அந்த தேங்காவை சாப்பிட தான் நிக்குறா!” கலையரசி சொல்ல,

“த்தை! நீங்களும் குடிப்பிங்களேன்னு வச்சேன்!” என்றாள் அனன்யா.

“இந்த வாய் தான் டி!” கலையரசி சொல்ல,

“எனக்கு இப்ப ஓகே தான்! என் வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்தாம கிளம்புங்க எல்லாரும்!” என்ற அனு மெதுவாய் படுத்துக் கொண்டவளுக்கு கொஞ்சம் பயமும் அதிகமானதோடு அன்னையையும் தேடியது மனம். 

அனன்யாவின் கைகளை தன்மேல் போட்டுக் கொண்டு அவள் தூங்கும் போதும் அவ்வபோது எழுந்து பார்த்து என விவேக் உறக்கம் தான் பறிபோனது அதன்பின்.

“அம்மா சொன்னது சரி தான்! அதுக்காக அர்ஜுன்கிட்ட பேசாம ஏற்பாடு பண்றதெல்லாம் சரி இல்ல! அவன்கிட்ட பேசிட்டு அப்புறமா உங்க மாமாகிட்ட பேசுவோம்!” என்று விவேக் சொல்லவும் தான் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது அனன்யாவிற்கும்.

“அவங்கவங்க விருப்பம் முதல்ல கேட்டுப்போம்.ஏற்கனவே பட்டது போதாது?” என்றான் விவேக்.

“அப்போ அர்ஜுன்கிட்ட யார் பேச?” அனன்யா கேட்க,

“நீயும் நானும் தான்! வீக்கெண்ட் போலாம். நீ பேசு! நான் கூட இருக்கேன்!” என்று விவேக் சொல்லிக் கொண்டு இருக்க, அர்ஜுனின் கார் சத்தம் வெளியே கேட்டதில் அனன்யா எழுந்து கொள்ள பார்த்தாள்.

“உக்காரு டி! நான் பாக்குறேன்!” என விவேக் சொல்லி எழும் நேரம் வேகமாய் உள்ளே வந்திருந்தான் அர்ஜுன்.

“என்னாச்சு அனு? இன்னும் ஹாஸ்பிடல் கிளம்பலையா?” என அனன்யா அருகே வந்து அவன் கேட்க, 

“ஏன் அர்ஜுன்?” என்றாள் அனன்யா புரியாமல்.

“நைட் வலிக்குதுன்னு அழுததா மாமா சொன்னாங்களே!” என்றதும் அனன்யா விவேக்கை முறைக்க, விவேக் தலையில் கைவைத்து விட்டான்.

“டேய்! அதான் ஒண்ணுமில்ல சரியாச்சு சொன்னேன்ல?” விவேக் சொல்ல,

“இப்ப எதுக்கு காலங்காத்தால அவன்கிட்ட இதை சொன்னிங்க நீங்க?” என்றாள் அனு. நல்லவேளை தன் தலைவலியை யாரிடமும் சொல்லவில்லை என நினைக்காமல் இல்லை அவள்.

“அவன் தான் ஆபிஸ் வர்றிங்களானு கால் பண்ணினான் டி! அப்போ தான் உன் அக்கா நைட்டு டென்ஷன் பண்ணிட்டானு பேச்சு வாக்குல சொன்னேன்! பயந்துருவான்னு நினைக்கல அனு!” என்றான் விவேக்.

“ப்ச்! என்ன அனு நீ? ஏன் வலி வந்தது? என்ன பண்ணின? மறுபடியும் வந்தா? ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாம் வா!” என்றான் அர்ஜுன்.

“அர்ஜுன்! ஒண்ணுமில்ல டா. சும்மா தானே இருக்கேன்! நேத்து கொஞ்சம் ஓவர் எக்ஸைட்மென்ட்ல ஆடிட்டேன்! அதான் நைட்டு படுத்திருச்சு!” என்றாள் அனன்யா.

“வா அர்ஜுன்! அனுக்கு ஒண்ணுமில்ல. இனிமேல் அப்பப்ப இப்படி தான் வரும். சூட்டு வலி, பொய் வலி, கால் வலி, முதுகு வலின்னு. அதான் நாங்க பார்த்துக்குவோமே!” அர்ஜுன் பேசியதை கேட்டபடி வந்த கலையரசியும் சொல்ல, தலையசைத்தாலும் முகம் தெளிவில்லை அர்ஜுனிடம்.

“விஜி கூட செக் பண்ணிட்டா டா!” என்றான் விவேக்கும். அர்ஜுனின் பயந்த முகம் இன்னும் கனிவைக் கொடுத்தது அங்கிருந்தவர்களுக்கு.

நிஜமாய் பயந்து தான் ஓடி வந்திருந்தான் அர்ஜுனுமே! இதில் கோவமும் வேறு விவேக் மீது. இரவு சரியாகி இருந்தால் கூட காலையில் எழுந்ததும் மருத்துவமனை அழைத்து செல்லாமல் இருக்கிறாரே என்று.

இப்பொழுதும் கலையரசி சொல்லை மீறவும் முடியாமல் த் எண்ணத்தை மாற்றவும் முடியாமல் என தயங்கி தான் நின்றான். 

வேறெந்த பயமும் இல்லை எதற்கும் பயமும் இல்லை. தன் உயிரானவர்களின் மீதான அன்பின் பயம் மட்டும் தான். அதுவும் அன்னை இறந்த பின் சிறு தலைவலி கூட அத்தனை பயம்.

“சரி ஆபீஸ் தானே போக போற? நானும் உன்னோடவே வந்துடுறேன். சாப்பிடணும். நீயும் வா!” என்று விவேக் அழைக்க,

“வேண்டாம் மாமா! நான் அனு கூட பேசிட்டு இருக்கேன். நீங்க சாப்பிட்டு வாங்க” என்றான் அர்ஜுன்.

“அவ நல்லா தான் டா இருக்கா. அவளே செர்வ் பண்ணினா சாப்பிடுவியா?” விவேக் சிரித்தபடி கேட்க,

“கிண்டல் பண்றிங்களா அவனை?” என உருகி நின்ற அனன்யா அர்ஜுன் கைகளைப் பிடித்து இழுத்து சென்றாள் சாப்பிடும் இடத்திற்கு.

“மாமா எங்க அனு?” என சந்தானத்தை கேட்டபடி அர்ஜுனுமே வந்தான்.

“சும்மா வாக்கிங் மாதிரி கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவாங்க!” என அனன்யா எடுத்து வைக்க,

“நீயும் சாப்பிடேன்!” என்றான் அர்ஜுன்.

“டேய் நார்மலாகு அர்ஜுன்!” என விவேக் இன்னும் சிரிக்க,

“மாமா!” என விவேக்கை முறைத்து அனன்யாவும் சாப்பிட அமர்ந்தாள் அர்ஜுனிற்காக.

அனன்யா பேச பேச தான் அர்ஜுனின் முகத்தில் தெளிவும் மீண்டு கொண்டிருந்தது.

சாப்பிட்டு முடித்து நீரை அதிகமாய் எடுத்துக் கொண்டான் அர்ஜுன். 

“இதோ வந்துடுறேன் டா!” என விவேக் மேலே தன்னறைக்கு செல்ல, அனன்யாவுடன் அமர்ந்தான் அர்ஜுன்.

“மாமா வேணா வீட்டுல இருக்கட்டுமே அனு! ஆபீஸ் நான் பார்த்துக்குறேன்!” அர்ஜுன் சொல்ல,

“எதுக்கு? சும்மா இருந்து வலிக்குதா வலிக்குதான்னு கேட்டுட்டு இருக்கவா? இன்னும் நாலு மாசத்தை நான் ஓட்டணும் டா. தயவு செஞ்சு கூட்டிட்டு போ!” என்ற அனன்யா சொல்லில் சிரித்தபடி தலையசைத்தான்.

கதவைத் திறக்கும் சத்தம் கேட்டும் அர்ஜுன் அந்த பக்கம் திரும்பாமல் அமர்ந்திருக்க, தன் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் விஜயலக்ஷ்மி.

“மதியம் தான் டியூட்டி போகணும்னு சொன்னியே விஜி?” என்று அனன்யா கேட்க,

“வந்துட்டியா? உனக்கு வேற தோசை தனியா ஊத்தணுமே நினச்சேன். இரு கையோட ஊத்திடுறேன். லஞ்ச் கட்டணுமா டி?” என்று கலையரசியும் கேட்டார்.

“நான் ஹாஸ்பிடல் போகல ம்மா!” என்று அனன்யாவைப் பார்த்தபடி விஜயலக்ஷ்மி சொல்ல, அர்ஜுனை தன் அறையில் இருந்து வெளிவந்த போதே கண்டிருந்தாள்.

“பிரண்ட்ஸ் கூட வெளில போறியா?” அனன்யா தான் கேட்டாள்.

“இல்ல அண்ணி!” 

“எங்க தான் டி போற? அதான் கேட்குறா இல்ல? பதில் சொல்லாம இல்லை இல்லைன்னு சொல்லிட்டு இருக்க!” என்று அதட்டிய கலையரசியிடம்,

“பசிக்கல ம்மா! இப்ப எதுவும் வேண்டாம். வந்து சாப்பிட்டு ஹாஸ்பிடல் கிளம்புறேன்!” என்றாள்.

கலையரசியும் எதுவோ சொல்லி அவளை திட்டிக் கொண்டிருக்க,

“போலாமா அர்ஜுன்?” என்று விவேக் வந்துவிடவும்,

“பார்த்துக்கோ அனு! எதுவும்னா கால் பண்ணு!” என்ற அர்ஜுன் வாசல்நோக்கி நடக்க,

“நான் கயல் அத்தையை பார்க்க போறேன்!” என்றதில் தானாய் நின்றது அர்ஜுனின் கால்கள்.

விவேக்குமே அனன்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தவன் விஜயலக்ஷ்மி கூறியதைக் கேட்டு திரும்ப, சட்டென்று ஒரு அமைதி அங்கே.

நேற்று ப்ரணித்தா அர்ஜுன் திருமணம் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே விஜயலக்ஷ்மியின் எண்ணம் முழுதும் கயல்விழியிடம் தான் இருந்தது.

தன்னைக் கொண்டு நடந்த பிரச்சனை! பெற்ற பெண்ணின் விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை என்றால் இன்னுமா அவர் மீண்டு வரவில்லை.

இந்த வீட்டில் இருந்தும் யாரும் சமாதானப்படுத்தியதாய் தெரியவில்லையே என பல சிந்தனைகளுக்கு பின் தான் இந்த முடிவிற்கே வந்திருந்தாள் விஜயலக்ஷ்மி.

“நில்லு விஜி!” என முன்னேறிய விஜயலக்ஷ்மியை தடுத்தது அனன்யா தான்.

“இப்ப எதுக்கு?”

“வேற எப்போ அண்ணி? உங்க குழந்தை பிறந்த அப்புறமாவா?” என்று கேட்க, அவளிடம் சொல்லிவிடவெல்லாம் அப்போதும் யாரும் எண்ணவில்லை.

அர்ஜுன் அங்கே இருப்பானே அவனை எப்படி எதிர்கொள்வது என கூட விஜயலக்ஷ்மி நினைத்திருக்க, அவனை இங்கே கண்ட பின் அந்த கவலை இல்லை விஜயலக்ஷ்மிக்கு.

“அனு! அப்புறம் பேசிக்கலாம். இப்ப ஹாஸ்பிடல் போறதை பாரு!” விவேக் கூற,

“நான் போய்க்குறேன் ண்ணா!” என அழுத்தமாய் கூறியவள் போயே தீருவேன் என்பதாய் நிற்க,

“ஏன் டி இவ்வளவு திமிரெடுத்து என் உயிரை வாங்குற? எப்போ தான் நாங்க சொல்றதை கேட்க போற? என்ன வளத்து வச்சிருக்கோம்னு நினைக்குற அளவுக்கு உன்னால நாங்க படுற பாடு!” என கலையரசி பேச ஆரம்பிக்க,

“ம்மா!” என எந்த பக்கமும் செல்ல முடியாமல் நின்றான் விவேக்.

யாரோ எதுவோ வார்த்தையை விட்டிருக்கிறார்கள்! அது தன் வீட்டிலா கயல்விழியா என தெரியவில்லை. யாராய் இருந்தாலும் கயல்விழியிடம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் தனக்கிருப்பதாய் தான் எண்ணினாள்.

அங்கிருக்கும் அத்தனை பேரின் எண்ணமும், தெரிந்தால் இவள் தாங்குவாளா என்பதாய் மட்டும் தான் இருந்தது.

மற்றவர்கள் சிறு வயதில் இருந்து விஜயலக்ஷ்மியை அறிந்தவர்கள். அனன்யா, அர்ஜுன் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்து என்றாலும் விஜயலக்ஷ்மியின் குணம் தெரியுமே!

யாரென்றே தெரியாதவர்களுக்கே அவ்வளவு கவலை கொண்டு பேசுபவள். தன் வருமானத்தில் பாதியை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து வருபவள். அடுத்தவற்காக தன்னை எவ்வளவோ விட்டுக் கொடுப்பவள். 

அப்படி விட்டுக் கொடுத்து தானே நிச்சயதார்த்தம் வரை வந்து நின்றாள். அதற்கு மேல் வர முடியாமல் தடுத்ததும் அவள் மனம் எத்தனை பாடு பட்டிருக்கவேண்டும்? கூடவே யாரையும் பார்க்க முடியாமல் தவித்து தான் ஊரை விட்டு கிளம்பியதும் கூட என எண்ணி எண்ணி பேச முடியாமல் அனைவரும் நிற்க,

“உங்களுக்கு என்னாச்சு அண்ணி? இவங்க தான் பேசலைனா நீங்களும் ஏன் இப்படி இருக்கீங்க? அத்தை பாவம் இல்லையா?” என அனன்யாவிடம் விஜயலக்ஷ்மி கேட்க, அங்கிருக்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் என நின்ற இடத்தில் இருந்து அகலாமல் திரும்பிப் பார்க்கவும் முடியாமல் நின்றிருந்தான் அர்ஜுன்.

“விஜி!” விவேக் அழைக்க,

“நீ சும்மா இரு ண்ணா! நான் போய் பார்க்க தான் போறேன்!” விஜயலக்ஷ்மி சொல்லி நகர,

“போறேன் போறேன்னா! எங்க டி போக போற?” என்ற அனன்யாவின் சத்தத்தை அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.

“இந்த உலகத்துலயே இல்லாத ஒருத்தங்களை எங்க போய் நீ பார்க்க போற?” என்று அனன்யா கேட்டுவிட, கண்களை மூடிக் கொண்டான் அர்ஜுன்.

மூச்சின்றி நின்றுவிட்டாள் விஜயலக்ஷ்மி.

“அவங்க போய் சேர்ந்து ரெண்டு வருஷம் மேல ஆச்சு. இப்ப வந்து குதிக்குற? என்ன டி பிரச்சனை உனக்கு?” என இன்னுமே அனன்யா கோபமாய் கேட்க,

“அனும்மா!” என பெரு மூச்சுக்களை எடுத்துக் கொண்டிருந்த அனன்யாவின் பக்கம் வந்து நின்றான் விவேக்.

ஏற்கனவே நேற்றைய ப்ரணித்தா அர்ஜுன் திருமண பேச்சு, கூடவே லேசாய் என்றாலும் இரவு அடைந்த பயம் இன்னும் மனதை விட்டு போகாமல் இருந்தது, இதில் கணவனும் தம்பியும் வருந்தக் கூடுமே என தலைவலியை மறைத்தது என எல்லாம் சேர்ந்து அத்தனை கத்திவிட்டாள் அனு.

“என்ன பண்ண முடியும் மாமா? போனவங்க போய்ட்டாங்க! சொன்னா வருத்தப்படுவாளே கொஞ்ச நாள் போகட்டும் நினச்சேன். ரொம்ப பேசுறா! அடுத்தவங்களுக்காக வருத்தப்பட்டது எல்லாம் போதும்! பேசாம அவ வாழ்க்கையை பார்க்க சொல்லுங்க மாமா!” என்ற அனன்யா தலையைப் பிடித்துக் கொண்டு தொய்ந்து அமர, அவளுக்கு நீரை எடுத்து கொடுத்த விவேக் விஜயலக்ஷ்மி அருகே வந்தவன் அப்போது தான் கவனித்தான் அர்ஜுன் அங்கில்லாததை.

“விஜி!” என்று அவள் முன் வந்து விவேக் நிற்க,

“ஏன் ண்ணா என்கிட்ட சொல்லல?” என்றவள் கண்ணீரோடு நின்றாள்.

“ஏய்! அதான் சொல்றேன்ல டி! எனக்கும் தான் பாக்கணும்னு இருக்கு. போகவா முடியும்? ஏன் சொல்லலைனா? கடல் கடந்து படிக்க போறேன்னு போன தானே? இங்க நடக்குற எல்லாத்தையும் சொல்லி அங்க நீ அழுது வடியவானு தான் சொல்லல. இப்ப பேசாம இருக்க போறியா இல்லையா நீ?” என்று படபடவென யாரையும் பேச விடாமல் தானே பேசினாள் அனன்யா.

“ஏற்கனவே தெரிஞ்சது தானே அம்மா ஹார்ட் பேசண்ட்னு! நீ டாக்டர் தானே? அம்மா ரிப்போர்ட்ஸ் அப்போவே பாத்திருக்க தானே? அவ்வளவு தான் விதி! பேசாம போய் உன் வேலையை பாரு!” 

“அனு போதும் அனு!” விவேக் சொல்ல, தன் வாயை கைகள் கொண்டு மூடிக் கொண்டு அழுதபடி நின்றாள் விஜயலக்ஷ்மி.

“பின்ன என்ன மாமா! எப்பவோ போய்ட்டாங்க! இப்ப அழுது என்ன ஆக போகுது?” கலங்கிய கண்களோடு அனன்யா சொல்ல,

“அம்மாடி!” என அப்போது தான் மருமகள் அருகே வந்தார் கலையரசி.

“எனக்கு அழ எல்லாம் தெம்பில்ல த்தை! எனக்காக என் அம்மா வருவாங்க!” என தன் வயிற்றை வருடிக் கொண்டவள்,

“அவளை பேசாம இருக்க சொல்லுங்க!” என்று சொல்லி மாடி ஏற, 

“அழாத விஜி! அக்செப்ட் இட்!” என்று தட்டிக் கொடுத்தவன் அன்னையிடம் அவளை விட்டு அனன்யாவைக் காண சென்றான்.

“கோவமா வர்ரீங்களா?” அனன்யா கேட்க,

“ஏன் அனு அவ்ளோ டென்ஷன்?” என படுத்திருந்தவள் வயிற்றை வருடிக் கொடுத்து அவள் நெற்றியில் முத்தமிட அத்தனை ஆறுதல் அனன்யாவிற்கு.

“எனக்கு கஷ்டமா இருக்கு விவேக்! ரொம்ப பிரஷரா இருக்கு. எனக்கு ப்ரணித்தாவை அர்ஜுன்க்கு கேட்க இஷ்டம் இல்ல. ஆனா நீங்க எல்லாரும் கேட்க சொல்றிங்க. நேத்து அவனுமே ப்ரணித்தாவோட வருவான்னு நான் நினைக்கவே இல்ல. என்னவோ தப்பா இருக்கு விவேக்”

“ப்ச்! என்ன டி நீ? இப்ப அதையெல்லாம் ஏன் மண்டைக்கு ஏத்துற? இந்த டென்ஷன்ல தான் கத்துனியா? நான் தான் சொன்னேனே! அர்ஜுன்க்கு பிடிக்காம எதுவும் நடக்க போறதில்ல!” 

“ஹ்ம் தெரியும்! ஆனா!” என்றவள் எப்படி சொல்வாள் உன் தங்கையை நினைத்த இடத்தில் எந்த பெண்ணை பார்த்து வைக்க முடியும் என்று?.

“சரி நீங்க கீழே போங்க! அங்க அத்தை எதாவது உளறி வைக்க போறாங்க அவகிட்ட!” 

“நீ ஓகே தானா? அர்ஜுன் சொல்லாமலே போய்ட்டான்..”

“எனக்கெல்லாம் ஒண்ணுமில்ல. அவனை தான் என்ன பண்ணணு எனக்கு தெரியல. என்ன நினைச்சுட்டு என்ன பண்ணிட்டு இருக்கானோ? மாட்டட்டும் அப்ப இருக்கு அவனுக்கு!” அனன்யா சொல்ல,

“அனு ப்ளீஸ்! நீயும் ஏன் உன்னை நினைக்கவே மாட்ற?”

“நான் ஒன்னும் உங்க தங்கச்சி மாதிரி இல்ல. நல்லா சாப்பிட்டுட்டு ஏனர்ஜியோட தான் கத்திட்டு இருக்கேன். அவ தான் இன்னும் ஒரு வாரம் தூங்க மாட்டா சாப்பிட மாட்டா. நீங்க முடிஞ்சா தாலாட்டு பாடி தூங்க வச்சுட்டு வாங்க!”

“ஏன் டி இம்சை பண்ற?”

“நானா?” என முறைத்தவள்,

“போங்க மாமா!” என சொல்ல,

“நீ முதல்ல ரெஸ்ட் எடு! நான் அர்ஜுனை பார்த்துட்டு வர்றேன். இன்னைக்கு ஆபீஸ் போனாலும் வேலை ஓடாது!” 

“விஜி?”

“நான் பாத்துக்குறேன் டி! நீ தூங்கு!” என்று சொல்லி தான் கீழே வந்தான்.

கலையரசி மடியில் தலை சாய்த்து படுத்திருந்த விஜயலக்ஷ்மி கண்களின் ஈரம் வடிந்து கொண்டிருந்தது.

“நடந்ததை மாத்த முடியாது விஜி! அர்ஜுன் அவங்க வீட்டு செல்ல பிள்ளை! பையனுக்கு ஒண்ணுன்னு துடிச்சாலும் அப்போ சரியாகிட்டாங்க. உன் அண்ணி எவ்வளவோ சொல்லி இருக்கா தானே? அதுவும் இதயம் பலவீனமானவங்க! எவ்வளவோ அவங்களும் மகனுக்காக தப்பிச்சு வர தான் பார்த்தாங்க! ஆனா நேரம்!” என்று சொல்லிக் கொண்டு இருந்தார் கலையரசி.

எத்தனை கோபம் இருந்தாலும் மகளை அப்படி உடைந்து காண முடியவில்லை அன்னையால்.

“விஜி!” என விவேக் அழைக்க,

“நீ சொல்லிருக்கலாமே ண்ணா! என்னை பார்க்க அவ்வளவு தூரம் வந்தியே! அப்பவாச்சும் சொல்லி இருக்கலாம் இல்ல?” விஜயலக்ஷ்மி கேட்க,

“அனு சொன்னது தான் டா! அப்போ அந்த சிட்டுவேஷன்ல சொல்லி இருந்தா நீ நிச்சயமா தாங்கி இருக்கவே மாட்ட. இதோ இப்பவும் எப்படி ஆகிட்ட நீ? மூணு வருஷம்கிட்ட ஆக போகுது. எல்லாம் மீண்டு வந்துட்டு இருக்காங்க. இனி எதையும் பேச வேண்டாம் டா! அவங்க தெய்வமா எல்லாரோடவும் இருப்பாங்க!” என்று சொல்லி விவேக் எழுந்து சென்ற நீண்ட நேரம் அன்னை மடியில் இருந்து எழுந்து கொள்ளவில்லை விஜயலக்ஷ்மி.

“கயல் அத்தை தான் ஆறு மாசம் போகட்டும்னு சொன்னாங்க!” சட்டென்று ப்ரணித்தாவின் வார்த்தைகள் காதில் கேட்க, எழுந்தமர்ந்த விஜயலக்ஷ்மி எப்பொழுது அதை ப்ரணித்தா கூறினாள் என்று நினைவுகளை ஓட்டிப் பார்த்தாள்.

தான் படிப்பை முடித்து அங்கே பணியில் சேரவா, ஊருக்கு வந்து விடவா என குழப்பத்தில் இருந்த நேரம் அது என நியாபகம் வர, மனம் என்னென்னவோ நினைத்து அலைபாய்ந்து கொண்டிருந்தது.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!