Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 21

அத்தியாயம் 21

“விஜி!” என அதிர்ந்து நின்றவன் இத்தனையை எதிர்பார்க்கவில்லை விஜயலக்ஷ்மியிடம். அதுவும் அவளின் இந்த அணைப்பு! மூச்சைடைத்து போனான் அதில்.



Advertisement

அனைத்தும் மறந்து போக அர்ஜுன் நிலை சொல்லவும் முடியாததாய் தான் இருந்தது அந்த நிமிடம்.

ஏங்கி அழுதவள் அழுகை குறைந்து விம்மலாகி இன்னும் குறைந்து மூச்சை இழுத்து விடும் சிறு சத்தம் என குறைந்திருக்க, அதுவரையுமே அவள் அணைப்பில் மட்டுமே இவன்.

Advertisement

Advertisement

பதிலுக்கு தானும் கொடுக்க தான் ஆசை எனினும் அது ஆறுதலாய் என்று மட்டும் இருக்காதே! நினைக்கையில் பெரும் சிரிப்பு ஒன்று அர்ஜுனிடம் வெளிவரப் பார்க்க, கன்னங்களை உள்பக்கமாய் உள்ளிழுத்து கடித்துக் கொண்டு மறைத்தான் அதை.

பத்து நிமிடங்களை கடந்து அழுகை நன்றாய் குறைந்தபின் தான் தான் இருக்கும் நிலை புரிய அதிர்ந்த விஜயலக்ஷ்மிக்கு உடனே விலகவும் முடியாமல் அப்படியே நிற்கவும் முடியாமல் என அவள் கைகள் உதறலைக் கொடுக்க, அதைப் புரிந்து எழுந்த ரகசியப் புன்னகையில் உடல் குலுங்காமல் இருக்க அர்ஜுன் பட்ட பாடெல்லாம் இன்பமான அவஸ்தைகள் தான்.

Advertisement

“என் மைண்ட் சுத்தமா சரியே இல்ல! இந்த தீபக் நல்லவன் வேற என்னை நல்லவன்னு நம்பி டோர் ஓபன் பண்ணி வச்சுட்டு போயிருக்கான். சோ!” என்று சொல்ல, அதில் உடனே கைகளை விலக்கி அவனில் இருந்து பிரிந்தவள் யூடர்ன் எடுத்து திரும்பிக் கொண்டாள் அவன் முகம் பார்க்க முடியாமல்.

“உக்காரு!” என்று அர்ஜுன் சொல்ல, மீண்டும் அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டாலும் மனதின் படபடப்பு மட்டும் அடங்கவில்லை விஜயலக்ஷ்மிக்கு ‘என்ன செய்து வைத்திருக்கிறேன்’ எனும் விதமாய்.

நெஞ்சை நீவிக் கொண்டு “உஃப்!” என அர்ஜுன் இழுத்து மூச்சுவிட, எழுந்து சென்றுவிடலாமா என்றே தோன்றிவிட்டதில் மீண்டுமாய் முகத்தை மறைத்துக் கொண்டாள் கைகள் கொண்டு விஜயலக்ஷ்மி. 

வற்றாத புன்னகை அர்ஜுனுக்கு எழ, அதுவும் மனதிலிருந்து எழும் ஆழ்ந்த புன்னகை என்பதை அவனால் உணர முடிந்தது.

“நான் பேசணும்! நான் பேச தான் வந்தேனே!” விஜயலக்ஷ்மி சங்கடமாய் உணர்ந்து சொல்ல,

“நான் எதுவும் பண்ணலையே!” என்றான் இன்னுமே இதழ் மடித்து புன்னகைத்து.

உண்மை தானே! அவன் எதுவும் பண்ணவில்லையே! ஆறுதல் கூட கூறிடவில்லையே என தவித்தது விஜியின் மனம்.

இன்னும் அவள் வந்த காரணத்தை கூறிடவில்லை. அவள் முடிவு எந்த விதமாய் என்றும் கூறிடவில்லை. ஆனாலும் அழும் குழந்தை தாயிடம் தஞ்சம் புகுவதாய் தன்னிடமே வந்து சேர்ந்திருந்தாளே! இது போதுமே அவள் மனதின் எண்ணத்தை புரிந்து கொள்ள? 

“நான் அழுதுட்ருக்கேன்! சிரிக்கிறீங்க!” விஜயலக்ஷ்மி சொல்ல பதில் கூறவில்லை அவன்.

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அர்ஜுன்! ரொம்ப கில்டியா இருக்கு! என்னால முடியல!” விஜயலக்ஷ்மி சொல்ல, ஒரு கனிந்த பார்வை அவனிடம்.

“நிஜமாவே! எனக்கென்ன தகுதி இருக்கு? ஆனா நான் இல்லைனாலும் வேற யாரையும் மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிருக்கீங்க! இதுக்கு நான் என்ன பண்ணனும்? இவ்வளவு நாள் தோணல. இப்ப என்னலாமோ தோணுது! மனசு அடிச்சிக்குது! சுமக்க முடியாத பாரமா இருக்கு அர்ஜுன்!” என்றவள் தலையில் கைவைத்து குனிந்து கொள்ள, அவள் குழப்பம் தெளிவாய் புரிந்தது அர்ஜுனிற்கும்.

“இவ்வளவுக்கு அப்புறமுமா உங்க காதல் அப்படியே இருக்கு? அப்படி இருந்தாலும் அதை ஏத்துகிட்டா நான் எவ்வளவு பெரிய செல்ஃபிஷ்? என்னை பார்க்கும் போதெல்லாம் கயல் அத்தை நியாபகம் வராது உங்களுக்கு? இவளால தானேனு தோணாது?” என்று விஜயலக்ஷ்மி பேச பேச சிந்தனையுடன் தலையசைத்தான் அர்ஜுன்.

“என்னை மாதிரி ஒரு பொண்ணு உங்களுக்கு எப்படி அர்ஜுன்! நான்… நான் எப்படி உங்களை? நாம எப்படி கல்யாணம் பண்ணி என்னனு வாழ முடியும்? என்னால உங்களுக்கு எவ்வளவு இழப்பு? நான் கூடவே இருந்தா அதையெல்லாம் நியாபகப்படுத்திட்டே இருக்காதா உங்களுக்கு?” என்றவள் கண்களில் தவிப்பும் வார்த்தைகளின் கெஞ்சலும் என பார்வையை நிலைக்கவிட்டான்.

“ப்ரணித்தா எவ்வளவு மோசமாவும் இருக்கட்டும். ஆனா அவ சொன்னது எவ்வளவு நிஜம்? நான் என்ன பண்ணிட்டேன் உங்களுக்கு? என்னால என்ன சந்தோசம் தர முடியும் உங்களுக்கு? ஆனா உலகத்துலயே ரொம்ப பெரிய அதிர்ஷ்டசாலி நான் தான் அர்ஜுன்! இப்படி ஒருத்தர் காதல்ல நான் இருந்தேன்ற சந்தோசமே எனக்கு போதும்!” வேதனையும் கண்ணீருமாய் அவள் சொல்ல,

“சோ?” என்ற ஒற்றை வார்த்தை அர்ஜுனிடம்.

“நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்களா?” என்றாள் மீண்டுமாய்.

“சரி! யாரை பண்ணிக்கணும்? நீயே செலக்ட் பண்ணேன்!” அர்ஜுன் சொல்ல, மலங்க விழித்தாள்.

மீண்டுமாய் நெஞ்சை நீவிக் கொண்டான். “நேத்து நீ இவ்வளவு பேசி இருந்தா கோவம் வந்திருக்குமோ என்னவோ! இன்னைக்கு கோவமே வர்ல! மனசு லேசா இருக்கு விஜி!” என்று அர்ஜுன் சொல்ல, புரியாமல் பார்த்தாள் அவள்.

“எதனால? உனக்கு என் லவ் தெரிஞ்சிடுச்சுன்ற நிம்மதியா இல்ல கொஞ்ச நேரம் முன்னாடி நீ குடுத்த அந்த சின்ன ஸ்பரிசமா?” என்ற அர்ஜுன் சொல்லில் அவள் விழி அகலப் பார்க்க,

“அந்த பத்து நிமிஷமே போதும் எனக்கும் என்னோட மீதி காலத்துக்கும்!” என்றதில் உடைந்துவிட்டாள்.

“ப்ச்! உனக்கு சொன்னா புரியுமா?” என்று அவன் கேட்கவும் பதிலறியாமல் விழித்தாள்.

“புரியுதான்னு பாரு!” என்றவன்,

“நேத்து வரைக்கும் எந்த ஏக்கமும் இல்லை எனக்கு! ஆசை பாசம் ஏக்கம் எல்லாம் அம்மாவோட போயிடுச்சுன்னு தான் நினச்சேன்!” என்று அர்ஜுன் சொல்லவும் கண்கள் தானாய் கலங்கி வந்தது விஜயலக்ஷ்மிக்கு.

“ப்ச்! இப்ப எதுக்கு அழுற?” என்று அர்ஜுன் கேட்கவும் அவள் கண்ணீரைத் துடைக்க,

“எமோஷனலா இருக்கோம்! இன்னொரு நாள் பேசலாம். நீ கிளம்பு!” என்றான் அர்ஜுன்.

நேற்றைய தினமே அதிகப்படியான அதிர்ச்சிகள் அவளுக்கு. முதலில் அதையெல்லாம் கடந்து வரட்டும்! என்று அவளுக்காக அவன் கூற,

“இல்ல! நான் அழலை! சொல்லுங்க!” என்றாள் வேகமாய்.

“வேண்டாம் விஜி! இங்க தானே இருக்கோம்! பேசலாம்! நாளைக்கு நானே வர்றேன்!” அர்ஜுன் சொல்ல,

“ம்ம்ஹும்ம்! பேசணும்! பேசிடணும்!” என்றாள் பிடிவாதமாய்.

“உன்னால மேரேஜ் பண்ணிக்க முடியுமா விஜி? உன் அண்ணா பாக்குற மாப்பிள்ளையை?” அர்ஜுன் கேட்க, வேகமாய் தலையை ஆட்டினாள் இல்லை என்று திடமாய்.

“ஏன்?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா என்ன? இத்தனை நாட்களுமே அதை தவிர்த்து தான் வந்தாள் என்றாலும் இனி நினைக்க கூட முடியாதே! அதுவும் அர்ஜுன் காதலின் முன் தானெல்லாம் நிற்க முடியுமா என்ற எண்ணம் தான் உடனே தலையாட்ட வைத்தது அவளை.

“ஹ்ம்! நானும் தான்!” என்றவன்,

“ப்ரணித்தா ஜஸ்ட் லைக் தட்ன்ற மாதிரி சொல்லிட்டு போய்ட்டா! ஆனா அவ்வளவு சின்னதா சொல்லிட முடியாது என் மனசை!” அர்ஜுன் சொல்ல, இன்னும் என்ன இருக்கிறது? என்பதாய் விஜயலக்ஷ்மி பார்த்தாள்.

“ஓகே! நான் நேத்தே டிசைட் பண்ணிட்டேன்! சோ முதல்ல இதை பேசிப்போம்!” என்று அர்ஜுன் சொல்ல, என்ன என்பதாய் அவள் பார்க்க,

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் விஜி! உன்கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன். நீயே வந்துட்ட! அண்ட் சூர்! நீ வரலைனாலும் நான் வந்திருப்பேன் இன்னைக்கு உன்னை தேடி!” என்றதில் அவன் காதலில் விக்கித்து தவித்து நின்றாள் பெண்.

“பண்ணிக்கலாம்! பண்ணிக்குவோம்!” என அவளுக்கான முடிவையும் அவன் கூற, மனமெல்லாம் என்னவோ செய்தது அவளுக்கு.

“எனக்குமே சொல்ல தெரியல! ஆனா வாழ்ந்து பார்க்கணும்னு ஆசை வந்திருச்சு! அதுவும் நடந்த எதுக்கும் நமக்கு சம்மந்தம் இல்லனும் போது என்னால என்னோட பழைய முடிவுல கான்ஸ்டண்டா இருக்க முடியல விஜி!” என்ற அர்ஜுன்,

“இத்தனை நாளும் நிறைய யோசிச்சிருக்கேன்! நீ இந்தியா வர்றதுக்கு முன்னாடி இல்ல அதுக்கு அப்புறம் தான். கல்யாணம்னு தப்பி தவறி நினச்சா கூட மனசு பதறும்! ஏன்னா என்னால வேற யாரையும் நினைக்க முடியாது! அதே உன் கூட? நினச்சு பாரேன்! அம்மாக்கு ரொம்ப பிடிச்ச நீ! அம்மா இல்லாம அந்த வாழ்க்கையை நான் முழுமையா வாழ முடியுமானு பயம்! கூடவே உன்னோட சிடுவேஷன்! உனக்குள்ள இப்போ வரைக்கும் உன்னால தானோ எல்லாம்ன்ற எண்ணம்! இது எப்படி நம்ம வாழ விடும்?” என்று சொல்ல,

“இப்பவும் எதுவும் மாறலையே அர்ஜுன்?” என்றாள் விஜயலக்ஷ்மி.

“இல்ல விஜி! நமக்கு துரோகம் பண்ணினவங்க சூழ்ச்சி தான் இதெல்லாத்துக்கும் காரணம். அவங்க நினைச்சது நடக்க நாம வழி விடணுமா? அம்மா ஆசிர்வாதம் நமக்கு இருக்கு. நேத்து வரை வேற! ஆனா இப்போ? அந்த பொண்ணு மட்டும் இதெல்லாம் பண்ணலைனானு ஒரு நினைப்பு வருது இல்ல?”

“அர்ஜுன்?”

“நீ சொல்லு! உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க தான் இவ்வளவு நேரமும் உன்னை பேச விட்டேனே!” என்றான்.

“உன்னை எனக்கு தெரியும்! கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள நீ வந்தப்பவே உன்னோட கேரக்டர்ஸ் எல்லாம் வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன்! சோ நீ ப்ரணித்தாக்கு ஹெல்ப் பண்ண நினைச்சது எனக்கு தப்பா தெரியல. உன்னோட குணத்தை ஒருத்தி யூஸ் பண்ணிக்கிட்டா! உன்னோட நேச்சர் அது! ஆனா இவ்வளவு நடந்த பிறகும் நான் வேண்டாம்னு உன்னால சொல்ல முடியுமா? அதுவும் யாருக்காகவோ?” என்றவன்,

“நான்… வேண்டாமா?” என்று இடைவெளி விட்டு கேட்க, எழுந்துவிட்டாள் அந்த கேள்வியும் அதில் அவனின் அழுத்தமும் என தாங்க இயலாதவளாய்.

“எத்தனை கஷ்டம்? எத்தனை வருஷம்? இதெல்லாம் அப்படியே இருக்கு. நான் இங்க வரும் போது முடிவை தெளிவா எடுக்க முடியாம தான் வந்தேனே! வேண்டாம்னு சொல்லிட்டா உங்க காதலை நான் அவமதிச்சதா ஆகும். வேணும்னு எடுத்துகிட்டா எந்த கவலையும் இல்லாம உங்க லவ்வை செல்ஃபிஷா எனக்கு வச்சுக்கிட்ட மாதிரி ஆகும்! நான் என்ன பண்றது?” என்றவள் சோர்ந்துவிட்டாள்.

ஆனால் அதில் தான் விழித்துக் கொண்டான் அர்ஜுன்.

“ஈஸி! சொல்லவா?” என்றவன் முகத்தில் அழகாய் ஒரு புன்னகை மனதை பறிக்கும் விதமாய்.

இத்தனை நாளும் கவனிக்கவில்லையே என நினைக்கும் பொழுதே இப்படி எல்லாம் அவன் புன்னகைக்கவில்லையே என்பதும் நியாபகத்தை நிறைத்தது.

“எனக்கும் குடு! உன் மொத்த காதலையும்!” என்றவன் நிதானமான சொல்லில் மனம் முழுதும் எதுவோ செய்ய, உள்ளம் கசிந்தது அவன் அன்பிலும் பேச்சிலும் பார்வையிலும் புன்னகையிலுமாய்.

“நீங்க ஏன் முன்னாடியே சொல்லல அர்ஜுன்? இவ்வளவு வலி.. கயல் அத்தை.. இத்தனை வருஷம்! இதெல்லாம் வேஸ்ட் பண்ணிருக்க வேண்டாம்! உங்களை உயிரா பார்த்துட்டு இருந்திருப்பேன்!” என்றவளுக்கு கடந்த நாட்களை நினைத்து அதிலிருந்து மீள முடியவில்லை.

அவன் அவளுக்கு வெகு அருகில் வந்து நின்றவரை அவள் கவனத்திலும் அவன் விழவில்லை.

அவளின் இருபக்க தோள்களிலும் அவன் கைகள் விழுந்து மாலையாய் சுற்றிக் கொள்ள, நொடியில் விஜயலக்ஷ்மியின் இதயத்துடிப்பு இரண்டு மடங்கானதுடன் விழிகள் விரிந்து கொள்ள மூச்சுக்கள் வேகவேகமாய் ஏறி இறங்கியது.

இத்தனைக்கும் முழுதாய் அணைத்திடவில்லை. இடைவெளியோடு அவன் கைமுட்டிகள் அவள் தோளில் இருக்கும்படிக்கு அவன் கைகளை கோர்த்திருந்தான்.

“இனி முழு காலமும் உன்னோட தான்! இனிமேல் பார்த்துப்ப தானே?” என்றவன் கேள்வியும் அவன் பார்வையும் புன்னகையும் என கண்களை அவனிடமிருந்து அகற்றிட முடியவில்லை. ‘இவன் இனி இப்படியே இருந்திட வேண்டும் எப்பொழுதும்!’ என்ற விஜயலக்ஷ்மியின் உடனடி வேண்டுதல் கடவுளிடம் சென்று சேர்ந்தது.

“அம்மா நம்மோட தான் இருப்பாங்க! ரொம்ப சந்தோஷப்படுவாங்க! ஆசிர்வாதிப்பாங்க!” அர்ஜுன் சொல்ல, 

“இப்பவே இப்படி நின்னா உதைப்பாங்க!” என்றவள் புன்னகைக்க, தானுமாய் புன்னகைத்தான் அவளோடு.

“இன்னும் நீ பதில் சொல்லல!” அர்ஜுன் சொல்ல,

“பதில் தெரியாம இப்படி நிக்கலாமா?” என்றாள் அவன் கண்களோடு கலந்தவள்.

“தப்பில்ல!” உடனே பதில் கூறி நேர் பார்வை பார்ப்பவனை எவ்வளவு நேரம் தான் அந்த பார்வையை சந்தித்திட முடியும்?.

“அர்ஜுன்!” என்றவள் குரல் தேய்ந்து ஒலிக்க, 

“ஜஸ்ட் ஒன் செக் விஜி!” என்றவனை என்னவென்று அவள் நிமிர்ந்து பார்க்க, அவளின் முன்நெற்றியில் நிறைந்தது அவன் முத்தம்.

நெருங்கி வருபவனை புரியாமல் அவள் பார்க்கும் முன் அவன் நெருங்கி அழுத்தமாய் முன்நெற்றியில் இதழை ஒற்றி எடுத்து தள்ளியும் சென்று திரும்பி நின்று தலைகோதி தன்னை சமன்செய்து கொண்டிருக்க மெதுவாய் விழி திறந்தவள் நெற்றியில் இன்னுமே குறுகுறுப்பு.

“ப்ச்! ஓகே!” தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் திரும்பிப் பார்க்க, அவனை முறைத்தபடி சிரித்தும் நின்றாள் அவள்.

கெஞ்சலான பார்வையோடு ஒரு கண் சிமிட்டல் அவனிடம் கொள்ளை கொள்வதாய் இருந்தது.

“இந்த நிமிஷத்தை எனக்காகனு நான் சேர்த்து வச்சுக்கணுமே! அதுக்காக தான்!” என்றவன்,

“இனி வர மாட்டல்ல என்னை நம்பி?” அர்ஜுன் புன்னகையோடு கேட்க,

“போகமாட்டேன் உங்களைவிட்டு!” என்றாள் பதிலாய்.

வேறென்ன வேண்டும்? தன் மொத்த வாழ்நாளுக்கும் இந்த நாள் போதுமே! சில நிமிடங்கள் நின்று நிதானமாய் அந்த நிமிடங்களை ரசித்து உணர்ந்து உருகி நின்றனர்.

“மாமாகிட்ட பேசவா?” அர்ஜுன் கேட்க, தலையசைப்பு மட்டும் அவளிடம்.

“கிளம்பவா? ஹாஸ்பிடல் போகணும்!” விஜயலக்ஷ்மி சொல்ல,

“இப்பவேவா?” என்றவன் மணியைப் பார்க்க பதினொன்று.

“நான் ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுல இருந்து கிளம்பிட்டேன்! தேடுவாங்க அர்ஜுன்!” விஜயலக்ஷ்மி கெஞ்சலாய் சொல்ல, அதற்குமே அவனிடம் புன்னகை தான்.

“போலாம்! ரெண்டு மணி ஷிப்ட் தானே?” 

“எல்லாம் தெரியுமோ?” என்றாள் கிண்டலாய். அதற்குமே புன்னகைத்தவன்,

“வா!” என்று சொல்லி முன்னே செல்ல, அவன் சமையலறை செல்வது தெரிந்தது.

அங்கிருந்த காபி கப்புகளுடன் பேளேட்டையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று வைத்தவள் பாதுஷாவைப் பார்க்க, அவனுமே அதை கவனித்தான்.

அன்றைய நியாபகம் தான் இருவருக்குள்ளும். கொடுத்தால் சாப்பிடுவானா என்ற கேள்வியில் அவள் பார்க்க, தானே ஒன்றை கையில் எடுத்தவன்,

“ஃபர்ஸ்ட் டைம் எனக்காக என்னை தேடி வந்து என்னை எனக்கே திருப்பிக் கொடுத்திருக்கியே! அதுக்காக!” என்று சொல்லி ஊட்டியும் விட மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் பார்வையை புரிந்து அமைதியான புன்னகையையும் ரசனையான பார்வையையும் கொடுத்தவன்,

“நிச்சயமா உன் கையால தான் சாப்பிடுவேன்! நீ இன்னைக்கு எனக்கு கிடைச்ச மாதிரி அம்மாவும் ஒரு நாள் என் கையில கிடைப்பாங்க இல்ல! அன்னைக்கு நீ தான் எனக்கு தரணும்!” என்றதும் புரியாமல் விழித்த விஜி புரிந்தபின் கண்களை அகல விரித்தவளின் அதிர்ச்சியில் ஒரு நொடி புருவம் சுருக்கியவன் பின் புரிந்ததும்,

“ஹே விஜி!” என அட்டகாசமாய் சிரித்தபடி,

“நான் அனு பேபியை சொன்னேன்!” என்று சொல்லி இன்னும் சத்தமாய் சிரிக்க,

“அச்சச்சோ!” என்று இரு கைகளாலும் முகத்தை மறைத்துக் கொண்டவளுக்கு அவன் வார்த்தைகளில் காதுமடல்கள் எல்லாம் சிவந்து போனது.

“ஹே விஜிமா!” என அவளை ரசித்தவன் இன்னும் இன்னும் ரசித்து தோள் சேர்த்து குனிந்து அவள் முகம் பார்க்க,

“ச்சோ! போங்க போங்க!” என ‘இப்படியா’ என தன் நினைவையே திட்டி தன் தலையில் தானே தட்டிக் கொண்டு அவனை தள்ளியவள்,

“நீங்க சாப்பிடுங்க! நான் கிளம்புறேன்!” என்று வெட்கம் பிடுங்கித் தின்னும் கூச்சத்தோடு கூற,

“ப்ச்! போக மாட்டேன் சொல்லி அஞ்சு நிமிஷம் ஆகல!” அர்ஜுன் சொல்ல, என்னவோ மனதெல்லாம் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஆட்டி வைத்தது விஜயலக்ஷ்மியை.

இத்தனை நாட்களுக்குமான மொத்த சந்தோஷமும் அவன் முகத்தினில், பார்வையில், புன்னகையில் ஏன் அவன் உற்சாகத்தில் என எளிதாய் காண முடிந்ததில் பரிதவித்தது என்னவோ விஜயலக்ஷ்மி தான்.

“நான் ஹாஸ்பிடல் போணுமே அர்ஜுன்! வீட்டுக்கு போய்ட்டு பேசணுமே!” என்று அவள் பேச பேச அவனில் எழுந்த சன்னமான புன்னகை அவளை கட்டி இழுக்க,

“என்னவோ பண்றிங்க! ஏன் சிரிக்கிறீங்க?” என்றாள்.

தோள்களை குலுக்கியவன், “தெரிலயே!” என்றான் நிஜமாய்.

“என்ன பண்றீங்க?” அவன் செய்வதை எல்லாம் பார்த்தபடி விஜயலக்ஷ்மி கேட்க,

“சமையல்! தீபக் செஞ்சு வச்சதெல்லாம் ஆறிப் போச்சு! அதை அவனே நைட்டு வந்து சாப்பிட்டுக்கட்டும். இப்ப நான் பண்றேன்! நீ சும்மா என்கிட்ட பேசிட்டு இரு! முடிச்சிடலாம். அப்படியே அக்காக்கும் எடுத்துட்டு போ!” என்றான்.

“அண்ணிக்கு கால் பண்ணி சொல்லவா?” விஜயலக்ஷ்மி கேட்க,

“என்னனு?” என்றவன் கள்ளப் புன்னகையில்,

“அச்சோ சிரிக்காதிங்க பா!” என்றாள் சிணுங்கலாய். அதில் இன்னும் சிதறி அவளை தன் விழிகளுக்குள் சேமித்துக் கொண்டான் அவன்.

“இப்ப மட்டும் தீபக் வரணுமே!” என்று அர்ஜுன் சாதாரணப் பேச்சுக்களுக்கு தாவி அவளையும் இலகுவாக்கி வேலைகளையும் இயல்பாய் முடித்துக் கொண்டிருந்தான்.

******************************************

“எனக்கென்னவோ பயமா இருக்கு! ஒரு போன் கூட பண்ணல இந்த விஜி! என்ன பண்றா?” என காரில் புலம்பியபடி அனன்யா அமர்ந்திருக்க,

“அனு! நான் பார்த்துட்டு வர்றேன் வீட்டுல இருன்னு சொன்னாலும் கேட்காம கிளம்பிட்ட! போய் பார்க்கலாம்! ஏன் இப்படி டென்ஷன் எடுத்துட்டு இருக்க நீ? நேத்து தான் ஹாஸ்பிடல் போனோம்! மறந்திட்டியா? மறுபடியும் அந்த டாக்டர் திட்டுறதையெல்லாம் என்னால கேட்க முடியாது!” விவேக் சொல்ல,

“எனக்கு தான் தெரியும் என் டென்ஷன்! ரெண்டுல எதாவது ஒண்ணு தெளிவா இருந்தா கூட சரினு நான் நிம்மதியா வீட்டுல இருக்கலாம்! அங்க ரெண்டுமே அடுத்தவங்களுக்காக மட்டும் யோசிக்குற முழு பைத்தியம்! இப்ப என்ன பேசி என்ன சண்டை இழுத்து வைக்க போகுதுங்களோ!” என்றாள் அனன்யா.

“நான் பார்த்துட்டு வர்றேன் சொன்னேன்ல?” விவேக் சொல்ல,

“ஆமா! நீங்க மட்டும் ரொம்ப தெளிவா? உங்களை எல்லாம் ஓரமா உக்கார வச்சிடுவாங்க ரெண்டு பேரும் சேர்ந்து!” என்று சொல்ல, அர்ஜுன் விஜயலக்ஷ்மி இருவரையும் காணாமல் இவள் தெளிய வாய்ப்பில்லை என புரிந்து அமைதியானான் விவேக்.

“இந்த அர்ஜுன் தான் இவ்வளவு நாளும் வாயை திறக்காம இருந்துட்டான். இப்போ அவன் மனசு தெரிஞ்ச அப்புறமாவது உங்க தங்கச்சி நேத்து எதாவது ரியாக்சன் காட்டினாளா? என்னனு வளத்தீங்களோ?” என்று அனன்யா கோபமாய் சொல்ல,

“அர்ஜுன் வருஷக் கணக்கா சொல்லாம இருந்தது எல்லாம் தப்பில்ல?. விஜி விஷயம் தெரிஞ்ச உடனே ரியாக்ட் பண்ணாதது தான் தப்பா? என்ன பேசுற நீ?” என்றான் விவேக்கும்.

“அதானே! தங்கச்சியை விட்டு குடுத்துடுவீங்களா?” அனன்யாவிற்கு விவேக் கேள்வியின் நியாயம் புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராய் இல்லை.

“பக்கத்துல வந்தாச்சு அனு! கொஞ்சம் அமைதியா இரு!” என விவேக் தான் இறங்கி வந்தான் மனைவியிடம்.

“இவ்வளவு யோசிக்குற நீ விஜியை தனியா அனுப்பி இருக்க கூடாது! கூட வந்திருக்கலாம்ல அப்பவே?” விவேக் கேட்க,

“தனியா பேசினா அவங்களுக்கு ஈஸியா இருக்குமேனு நினச்சேன்! இவ்ளோ நேரமாகவும் தான் பதறுது!”

“விஜிக்கு கால் பண்ணியா?” 

“நான் ஏன் அவளுக்கு பண்ணனும்? அவ எனக்கு பண்ணினாளா? அர்ஜுன்க்கு பண்ணினேன். அவன் எடுக்கவே இல்ல!” என்றாள் அனன்யா.

பேசியபடியும் புலம்பியபடியும் அர்ஜுன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்!

“வெயிட் அனு! நான் வர்றேன்!” என இறங்கி அனன்யா பக்கம் வந்து கதவை திறந்து அவள் இறங்க உதவி நின்றான் விவேக்.

“தள்ளுங்க!” என்ற அனன்யா வயிற்றைப் பிடித்துக் கொண்டு வேகமாய் நடக்க முயற்சித்தாலும் முடியவில்லை. விவேக் கைப்பிடித்து தான் அழைத்து வந்தான்.

கதவில் கைவைக்கவும் திறந்து கொள்ள, உள்ளே வந்த இருவரும் சுற்றிலும் தேட,

“ஹே பார்த்து!” டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த விஜயலக்ஷ்மிக்கு புரையேற, தண்ணீரை கொடுத்து தலையில் தட்டிவிட்டுக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

“போதும்” விஜயலக்ஷ்மி சொல்ல,

“இதை டேஸ்ட் பண்ணு!” என அர்ஜுன் மற்றொன்றை எடுத்து விஜயலக்ஷ்மிக்கு வைக்க, கைகளைக் கட்டி கதவில் சாய்ந்து நின்ற விவேக் பார்வையில் நிம்மதியும் சந்தோசமும் என்றால் அனன்யா நிலை எல்லாம் சந்தோசத்தின் உச்சம்!

“தங்கச்சி தனியா ஒரு பையனை பார்க்க போயிருக்காளேனு ஒரு அக்கறை இருக்கா உங்களுக்கு?” அனன்யா வீட்டில் வைத்து கேட்டதற்கு கூறி இருந்தானே விவேக் “அவ அர்ஜுனை பார்க்க போயிருக்கா!” என்று நம்பிக்கையாய்.

“அவ்வ்வ்வ்வா!” என்ற சத்தத்தில் அர்ஜுன் விஜயலக்ஷ்மி இருவரும் திரும்ப, அனன்யா வாயில் கைவைத்து நிற்க, விவேக் கதவில் சாய்ந்து நின்று, “என்ன டா இதெல்லாம்?” என்ற பார்வை பார்த்து கைவிரித்தான்.

“ப்ச்!” என்று நெற்றியின் ஓரம் நீவிக் கொண்ட அர்ஜுன் இதழ் மடித்து புன்னகைக்க, டேபிளில் தலை கவிழ்ந்து கொண்டாள் அவர்களை எதிர்கொள்ள முடியாமல் விஜயலக்ஷ்மி.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!