Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அங்கணம் நின்றான் அந்தியூரான் – 2

அத்தியாயம் – 2
காலை பரபரப்பில் சுழன்று கொண்டிருந்தது தணிகாசலத்தின் தொழில் கூடம்.வெறும் நூலாகத் தொடங்கிய தொடக்கம் முடிவு கொண்டு வெளியில் வரும் போது துண்டு, ஆண்கள் உள்ளாடை,பெண்கள் அணியும் அங்கி என்று சொல்லி கொண்டே போகலாம்.
 சிவராமன் தொழில் செய்யும் போது அவருக்கு வலது கையாக இருந்த நண்பன் தான் முத்து.உயிர் நண்பன் என்று கூட சொல்லலாம்.முத்துவுக்கு வாரிசு இல்லை என்பதால் தங்கை பிள்ளைகள் தான் எல்லாம் என்ற நிலையில்,முத்துவின் இடத்திற்கு வந்து சேர்ந்தான் அமுதன்.
 இந்த பழக்கத்தைக் கொண்டு தான் அமுதன் தங்கை விசாலாட்சியைத் தணிகாசலத்துக்கு முடித்தது, ஆம் அமுதன், விசாலாட்சியின் அண்ணன்.திருமணத்திற்கு முன் இருந்தே அவன் இங்குத் தான் வேலை செய்து கொண்டிருக்கிறான்.


Advertisement

 முத்துவின் இடத்திற்கு வந்தாலும் அவனது எல்லையில் நின்று கொள்வான். இப்போது விசாலாட்சியைக் பெண் குடுத்த இடம் என்பதால் இன்னும் ஒதுக்கமாக நடந்து கொண்டான்.அதாவது வேலையில் இன்னும் சரியாக நின்றான் என்று தான் சொல்ல வேண்டும்.
 துணியை தரம் பிரித்து எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் அறையில் இருந்த தணிகாசலம்.வேலையைச் சரி பார்த்துக் கொண்டே அமுதன் இருக்கும் இடத்திற்கு வந்தான். அவனை கண்டு சற்று தேங்கி நின்றவன்   “அமுதன்!” என்றழைக்க.
 வேலையில் இருந்த அமுதன் அவனது குரல் கேட்டு “இதோ சார்!” என்றவன் தணிகாசலத்திடம் விரைந்து வந்தான்.

Advertisement

 “கொஞ்சம் பேசணும் என் ரூமுக்கு வரியா?”

Advertisement

 “ஒரு பத்து நிமிஷம் நம்ப வாணி ஜவுளி கடைக்குத் துணிய பேக் பண்ணிக்கிட்டு இருக்கோம். முடிச்சிட்டு வரட்டுமா?” சிறு தயக்கமாகக் கேட்க.
 “ஹ்ம்ம்! முடிச்சிட்டா வா!” என்றவன் மேலும் சில இடங்களுக்குச் சென்று வேலையைச் சரி பார்த்து விட்டு தனது அறைக்குச் செலவும், அமுதனும் வேலையை முடித்து கொண்டு வரவும் சரியாக இருந்தது.அறைக்குள் அவனை அழைத்து எதிரில் அமர வைக்க. அமுதனும் அமர்ந்து கொண்டு தணிகாசலத்தைப் பார்த்தான்.
 முகத்தில் சிறு கொடுமை பூசி கொண்டது போல் தோற்றம்.தணிகாசலம் அமைதியாகவே அமர்ந்திருக்க பெரும் தயக்கத்துக்கு இடையே “என்ன சார்? என்ன பேசணும்?” மென்மையாக அமுதன் கேட்டு வைக்க. அதற்காகவே காத்திருந்தவன் போலப் பேசினான் தணிகாசலம்.

Advertisement

 “நான் எதுக்கு உன் தங்கச்சியைக் கட்டிகிட்டேன்னு தெரியுமா?” எடுத்தயெடுப்பில் இப்படி கேட்டு வைத்தவனைச் சிறு கலவரமாகப் பார்த்து வைத்தான் அமுதன்.
 “ஏன்? என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா என்ன?”
 “ப்ச்! பேசி பழகி பார்த்தா தானே பிரச்சனை வர. நான் தான்  கல்யாணம் பண்ணிட்டு அடுத்த நாளே தொழில் பார்க்க வந்துட்டேனே” பேச்சில் அலட்சியம் கொண்டு தணிகாசலம் முகத்துக்கு நேரே சொல்ல சுருக்கென்றது அமுதனுக்கு.
 கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டான் அமுதன்.அவனுக்கு இந்த சங்கதி தான் தெரியுமே.
 “நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன் நீயும் என்கூட வா!” என்றவனை புரியாமல் பார்த்து,
 “நான் எதுக்கு சார்? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க நீங்க பேசுறதே புரியல எனக்கு”என்றதும் ஒரு பெருமூச்சுடன் மிகவும் பொறுமையாகப் பேச தொடங்கினான் தணிகாசலம்.
 “என்னை சரியா புரிஞ்சுக்கணும் நான் சொல்ல போற விஷியத்தையும் நீ சரியா புரிஞ்சுக்கணும். இல்லனா எல்லாமே தப்பாகி போகும்”
 “ஹ்ம்ம்! சொல்லுங்க?”
 “எங்க பெரியக்கா ராணி நேத்து என்னைப் பார்க்க வந்திருந்தாங்க அதாவது செல்வி அம்மா, என் மாமியார்,”
 “புரியுது”
 “அவங்க வீட்டுக்கு போயி இருந்தப்போ விசாலாட்சி கூடக் குமாரி ஒரே சண்டையாம். அவங்க அம்மாச்சியை பார்க்கவும் ரொம்ப அழுத்திருக்கா போல.அக்கா வருத்த பட்டாங்க, ரொம்பப் பயப்படுறாங்க குமாரிய அவங்க வச்சுக்கப் பாக்குறாங்க.நேத்து இங்க வந்து ஒரே அழுகை” கோர்வையாக தணிகாசலம் சொல்லவில்லை என்றாலும் அவன் சொல்ல வருவது அமுதனுக்கு நன்கு புரிந்தது.
 “அவ அப்படியெல்லாம் கொடுமை பண்ணுற ஆள் இல்லை.சுட்டிய பேசுவா, ஆனா ரொம்ப பொறுப்பு குழந்தைங்களை   நல்லா பார்த்துப்பா” கொஞ்சம் பதட்டமாக அமுதன் சொல்ல அவனது நிலையை புரிந்து கொண்ட தணிகாசலம்.
 “இப்போ எதுக்குப் பதறி வைக்கிற நீ? நான் சொல்றபடி செய் எல்லாம் நான் பார்த்துப்பேன்.அவளை கொஞ்ச நாள் உங்க கூட வச்சுக்கோ. நான் குமாரி கிட்ட பேசிட்டு அவளைக் கூப்பிட்டுக்கிறேன்” எதை எண்ணி பதறினானோ அதையே தணிகாசலம் சொல்லவும் அமுதனுக்கு அதிர்ச்சியில் கண்கள் கொஞ்சம் கலங்கி விட்டது.
 இந்த வரன் வேண்டாம் என்று அத்தனை தூரம் போராடினான் அமுதன், ஆனால் முத்து தான் வம்படியாகக் கட்டி வைத்தார்.விசாலாட்சிக்குப் பெரியவர்கள் பார்த்து செய்தால் சரி என்ற நிலை. அவளது எண்ணம் முதல் தாரம் இரண்டாந்தாரம் என்று எண்ணி வைக்கவில்லை.
 தாய் மாமன் சொன்ன வரன் என்ற நிலையில் தான் பெண் திருமணம் செய்து கொண்டாள்,ஆனால் அமுதன் நிறைய யோசித்துப் பயந்தான். அவன் எண்ணியது போலவே இதோ நடந்து விட்டது.
 “நீங்க நாளைக்கு வரைக்கும் காக்க வேண்டாம் சார். நான் அவளை இன்னைக்கே கூட்டிகிட்டு போயிடுறேன்” என்று வேகமாக எழுந்தவன்.அடுத்து தணிகாசலம் பேசுவதற்குள் விடைபெற்றுக் கொண்டு. அதே வேகத்தில் அந்தியூர் நோக்கி சென்றான்.
 அமுதனை தடுக்க விரும்பாமல் இறுக்கமாகக் கண்ணை மூடி கொண்டான் தணிகாசலம்.மூடிய கண்களுக்குள் சிரித்தாள் செல்வி. மனம் சற்று அமைதி கொண்டது.மனம் அடித்துச் சொல்லியது அத்தனைக்கும் காரணம் தான் என்று அப்படியே சில நொடிகள் இருந்தவன்.
 நேற்றைய தினம் தனது அக்கா பேசியதை எண்ணி கொண்டே அவனும் அந்தியூருக்கு கிளம்பினான்.அமுதன் முழுதாகத் தன்னைப் பேச விடாமல் சென்றது. அங்குப் பெரிதாக வெடித்து நிற்கும் என்பதைச் சரியாகக் கணித்தவன் தனது நான்கு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு விரைந்தான்.
 தணிகாசலம் எண்ணியது போல் தான் அங்கே நடந்து கொண்டிருந்தது. தனது சைக்கிள் மூலம் ஒரு மணி நேரத்தில் அந்தியூரில் நின்றான் அமுதன்.கோபத்தை எல்லாம் மிதி வண்டியில் காட்டினான் போலும் தணிகாசலத்துக்கு முன்பே அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தான்.
 வந்த வேகத்தில் தட தடவென படியில் எரியவன் கூடத்திற்கு வர. அவன் முதலில் கண்டது குமாரியை தான். இவனைக் கண்டதும் “அமுது மாமா!” என்று வர அவளைக் கண்டு கொள்ளாது விழிகளால் தனது தங்கையைத் தேட.
 தன்னிடம் பேசாதவன் மேல் செல்ல கோபம் வந்தது குமாரிக்கு அந்த கடுப்பில் “விசா! விசா!” என்று கத்தி அழைத்தாள் அவளது விழிப்பில் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான் அமுதன். “என்னடி வாரேன்” அவளது அழைப்புக்கு வெகு இயல்பாகக் குரல் கொடுத்துக் கொண்டே வந்த தங்கையைப் பார்த்தவன்.
 எந்த வித பேச்சுகளும் இல்லாமல் “கிளம்பு விசா! போகலாம்” அவனது வரவே அதிர்ச்சி என்றால் வந்த நொடியில் தன்னையும் அழைக்க தடுமாறி போனாள்.
 “எங்க அண்ணா? ஏன்?”
 “நம்ப வீட்டுக்கு”
 “ஏன்? என்னாச்சு? யாருக்கும் எதுவும் முடியலையா என்ன? அம்மா? மாமா?” அத்தை?” யாருக்கும் மேல் சுகமில்லையோ என்ற பதட்டத்தில் கேள்விகளை அடுக்கினாள்.
 “ப்ச்! எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க. நீ கிளம்பி வா!” இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே சிவராமனும், சிவகாமியும் கூடத்திற்கு வந்து விட்டார்கள். அவனை கண்ட நொடி முகம் மலர்ந்த சிவராமன்.
 “வா அமுதா! எப்படி இருக்க?” என்றதும் முகத்தைச் சுருக்கி கொண்டவன் அவரது கேள்விக்குப் பதில் சொல்லாமல்.
 “நான் விசாவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் சார்” என்றதும் அதிர்ந்தவர் என்ன சொல்கிறான் இவன்? என்ற ரீதியில் புரியாமல் பார்த்து வைத்தார்.
 “ஏன்? என்ன ஆச்சு? என்னது இது? வந்த உடனே பொண்ணை கூட்டிட்டு போறேன்னு சொல்லுற? என் மகன் வராம நான் அனுப்ப மாட்டேன்” என்ற சிவகாமியை அழுத்தமாக பார்த்த அமுதன்.
 “உங்க மகன் தான் என்னைக் கூட்டி கிட்டுப் போகச் சொன்னார்.நாளைக்கு வர சொன்னாரு நான் இன்னைக்கு வந்திருக்கேன்”
 “ஏன்?” பதட்டமாகச் சிவராமன் கேட்க. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கொட்டி விட்டான் அமுதன்.
 “ஐயா! கல்யாணம் பேசும் முதலே இந்தச் சம்மந்தம் வேண்டாம்னு மாமா கிட்ட சொன்னேன்.குட்டையோ நெட்டையோ எங்க தகுதிக்கு இருக்குற மாதிரி பார்த்து என் தங்கச்சிக்கு கட்டி வச்சிருப்பேன்.இப்போ பாருங்க அவர் ‘உன் தங்கையை அழைச்சுட்டு போன்னு சொல்லவும்’ என்னால எதுவும் அவரை எதிர்த்து பண்ண முடியலை.உங்ககிட்ட சண்டை கட்ட முடியல. சட்டையை பிடிச்சு கேள்வி கேட்க முடியல” பெரும் இயலாமை வலியை குடுக்க பல்லை கடித்து கொண்டு பேசினான் அமுதன்..
 “என்னப்பா சொல்லுற? விளங்க சொல்லு?” என்ற சிவராமனை பார்த்து.
 “உங்க பெரிய மகள் வந்து…” என்று தொடங்கியவன் தணிகாசலம் பேச்சில் முடித்து வைக்க.அதன் பின்னும் தாமதிக்க வில்லை விசாலாட்சி தனது துணிகளை பையில் திணித்து கொண்டு கூடத்திற்கு வந்து நின்றாள்.
 தயாராக வந்த மருமகளைக் கலக்கமாகப் பார்த்த பெரியவர்கள். மகனை எண்ணியும், தனது மகளை எண்ணியும் பல்லை கடித்தனர்.சூழ்நிலை உணர்ந்து சிவராமன் அமுதனை சமாதானம் செய்ய வர அதனை அவன் கண்டு கொள்ளவில்லை.
 “முதல் உறுத்தல் வரும் போதே நான் இந்தக் கல்யாணம் பேச்சை நிறுத்தி வச்சிருக்கனும் சார்.நான் தான் தப்பு பண்ணிட்டேன்.என் முடிவுல பிடியா முடியாதுன்னு நின்று இருக்கனும் என்றவன் வா விசா!” தங்கையை அழைத்துக் கொண்டு கீழே வந்துவிட்டான். அப்போதான் தணிகாசலம் வண்டியை நிறுத்திவிட்டு மேல வந்து கொண்டிருந்தான்.
 சரியாக நடு படியில் மூவரும் நின்றனர். மகனை கண்ட சிவராமன் வேகமாக அவனிடம் வந்து “என்ன ஆச்சு? நீ எதுக்கு மருமக பொண்ணை வீட்டுக்கு போக சொன்ன? இதெல்லாம் சரியில்லை தணிகா”
 “பேசிக்கலாம்ப்பா ஒன்னும் பெருசு கிடையாது.கொஞ்ச நாள் அந்த பொண்ணு அவங்க அம்மா வீட்டுல இருக்கட்டும்” இப்போதும் வெகு இயலபாகத் தணிகாசலம் சொல்ல.அத்தனை கோபமாகத் தங்கையை இழுத்து கொண்டு சென்று விட்டான் அமுதன்.
 விசாலாட்சி கணவனை பார்க்கவே இல்லை.அமுதன் இழுப்புக்கு சென்றவள் கண்ணில் நீர் கலங்கி நிற்க. அதனை அடக்கி கொண்டே அண்ணனுடன் சென்று விட்டாள். அவர்கள் சென்ற நொடி வேகமாக அவன் உள்ளே செல்ல. அதுவரை என்ன நடக்கிறது என்ற அதிர்ச்சியில் இருந்த குமாரி தந்தையைக் கண்டதும் அவனது கழுத்தை கட்டி கொண்டு ஒரே அழுகை.
 மகளின் செயலை புரிந்து கொள்ளாமல், “என்னடா? எதுக்கு என் அழகி அழுகுறாங்க?” என்றவன் தனது அக்கா சொன்னது உண்மையோ என்று எண்ணி வைத்தான்,ஆனால் அது எத்தகைய தவறு என்று தெரிய வருகையில் அவன் எண்ணமெல்லாம் எகத்தாளம் பேசி நிற்கும்.
 ஒரு வித பதட்டத்தில் நின்ற பெற்றவர்களைப் பார்த்தவன் “ம்மா! ப்பா! ஒன்னுமே இல்லை.எங்க உறவுக்கு கொஞ்சம் நாள் இடைவேளை.அதுவும் போக என் மக கிட்ட கொஞ்சம் பேசணும் புரிய வைக்கனும்.
 இதையெல்லாம் முன்னாடியே பண்ணிட்டு நான் கல்யாணம் பண்ணி இருக்கனும்.அப்போ இதையெல்லாம் எண்ணி வைக்கல தப்பு பண்ணிட்டேன்”சலிப்பாக நெற்றியை நீவி நின்றவனைக் கோபமாகப் பார்த்து நின்றனர் அவனைப் பெற்றவர்கள்.
 “நீ பண்ணுறது சரி இல்ல தணிகா. ராணி உங்கிட்ட என்ன பேசுனா? அதுக்கு நீ என்ன பேசி வச்ச முதல அதை சொல்லு?” அமுதன் சொல்லி இருந்தாலும். அவன் சொன்ன இரு வரியில் அவருக்கு ஒன்னும் விளங்கவில்லை போலும்.அதனால் மகனிடம் கேட்டு வைத்தார்.
 ஒரு பெருமூச்சுடன் தமக்கை தன்னிடம் சொல்லியதை தணிகாசலம் சொல்லி முடிக்க. அத்தனை கோபம் சிவகாமிக்கு “அவ சொல்ற பக்கத்தைக் கேட்டு நீ எப்படி முடிவு பண்ணலாம் தணிகா? நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்.அது என்ன அவ சொன்ன உடனே நீ உன் பொண்டாட்டியை அனுப்புறது?” ஏகத்துக்கும் சிவகாமி கத்தி வைக்க.
 “ஒரு செய்தி கவனிச்சியா சிவகாமி?”மகனை உருத்து விழித்துக் கொண்டே சிவராமன் கேட்டு வைக்க.
 “என்னங்க?”
 ‘அந்தப் பொண்ணை அவங்க வீட்டுக்கு போயிட்டு வரட்டும்’ தணிகா சொல்வது போல் சொல்லி நிறுத்திய சிவராமன். ஆக இன்னும் அந்த பொண்ணு தான் உன் பொண்டாட்டி இல்ல, அப்படி தானே?” என்றதும் தந்தைக்குப் பதில் சொல்லாமல் விருட்டென உள்ளே சென்று விட்டான் தணிகாசலம்.
 “டேய்! இது என்ன பழக்கம்? பேசிகிட்டு இருக்கும் போது போறது? பதில் சொல்லிட்டு போ” என்றதும் ஒரு நொடி தேங்கி நின்றவன் அவர்களை விட அழுத்தமாக பார்த்துக் கொண்டே.
 “இப்போ என்கிட்ட இதுக்கு பதில் இல்லை. எனக்கு பதில் தெரிஞ்சா.அதாவது நான் அதை கண்டு பிடிச்சா கண்டிப்பா சொல்றேன்” பொறுமையாக ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிவிட்டு செல்ல. அதிர்ச்சிக்கு மேல் ஏதும் வார்த்தை உள்ளதா என்று துழாவி நின்றனர் பெரியவர்கள்.
 “என்னடி சிவா இப்படி சொல்லிட்டு போறான். இவன் மருமகன் பொண்ணு கூட பொழைச்சு நிக்கிற மாதிரி தெரியலையே.முத்துக்கு நான் என்ன பதில் சொல்றது?” கலக்கமாக கேட்டவரை பார்த்து.
 சிவகாமி கலவரமாக,“ அமுதன் வேற ரொம்ப கோபமா இருக்கான்.அவங்க கேக்குற மாதிரி வைக்காம நம்ப போயி முறையா பேசிடுறது நல்லதுங்க”
 “நாளைக்கு விடியலுக்கே கிளம்பிடலாம் சிவகாமி”
 “சரிங்க” என்றவர் அப்படியே வாசலில் அமர்ந்து விட்டார்.அவர் அருகில் சிவகாமியும் அமர்ந்து கொண்டார் மனம் முழுக்க கனத்து நின்றது இரு பெரியவர்களுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!