Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -13

லக்ஷ்மியம்மாவின் கணவர் நாராயணன் கொஞ்சம் செல்வாக்கான குடும்பம் தான் , அனால் திடீரென்று அவர் குடும்பம் சரிவை நோக்கி சென்றது

அனைத்திலும் நஷ்டம்  , அதுவரை கொஞ்சம் நல்ல மனிதராக இருந்தவர் பணம் சம்பாதிக்க பல வழிகளும் யோசிக்க தொடங்கினார்.

அதற்க்கு எல்லாம் முதலீடு வேண்டும் , அடுத்து என்ன என்று கலங்கி நின்ற நொடி மனக்கண்ணில் தோன்றியது லக்ஷ்மியம்மாவின் சகோதரனின் சொத்து .

காரணம் லக்ஷ்மி  நாராயணன் தம்பதிக்கு திருமணம் முடிந்து , மூன்று ஆன் பிள்ளைகளும் பிறந்து , மூத்தவர் கிருஷ்ணனுக்கு பத்தொன்பது வயது நெருங்கிய போதும் லக்ஷ்மியின் தம்பிக்கும் மனைவிக்கும் குழந்தை இல்லை.



Advertisement

இனி பிறக்க வாய்ப்பில்லை அந்த சொத்துக்கள் தங்களுக்கு தான் என்று மழிந்திருக்க , அவரின் நிம்மதியை கெடுத்துவிட்டாள் “ஸ்ரீ நந்தினி”.

குழந்தை பிறந்த சில மாதங்களில் தம்பி மனைவி இறந்து விட, நந்தினியை சொந்த மகளாக பார்த்துக்கொண்டார் லக்ஷ்மி.

அவளின் ஏழு வயதில் ரப்பர் தோட்டம் சென்ற அவளின் தந்தை பிணமாக தான் திரும்பி வந்தார் , கொலை  செய்யப் பட்டார் என்று பேச்சு.

Advertisement

அது உண்மை , அனால் அதன் பின்னால்  நாராயணன் என்பது இன்று வரை யாரும் அறியவில்லை.

Advertisement

லக்ஷ்மி யிடம் “உன் தம்பி மகளையும் சொத்துக்களையும் பார்த்துக் கொள்ள தரவாடு வீட்டில் இருப்பதே வசதி” என்று கூறி இங்கேயே குடும்பத்தோடு வந்துவிட்டார் நாராயணன்.

கிருஷ்ணன் நாயர் ஷ்யாமா திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் அப்பொழுது  , சிறகின்  அடியில் வைத்து பார்த்துக் கொள்ளுவதை போல  நந்தினியை வளர்த்தார் லக்ஷ்மி .

ஏழு வயது குழந்தைக்கு என்ன தெரியும் , “உனக்கு தாய் தந்தை இல்லை உன்னை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற நாராயணின் வார்த்தைகளை அவள் உண்மை என்று நம்பினாள்.

Advertisement

சுகமான வாழ்வை வாழ்ந்தார்கள் அடுத்தவரின் சொத்தில் .

அச்சுதன் நாயருக்கு பெண் பார்த்து பார்த்து சலித்துவிட்டார் நாராயணன்.

யாரையும் பிடிக்கவில்லை என்ற மகனை என்ன செய்ய என்று தெரியவில்லை , அப்பொழுதான் அவர் மனதில் அந்த திட்டம் உருவானது.

நந்தினியை அச்சுதனுக்கு மனம் முடிப்பது  , லக்ஷ்மி தீவிரமாக எதிர்த்தார் அவருக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை , மகன் குடி பெண் சகவாசம் என்று எஸ்டேட்டில் இருப்பது அவருக்கு தெரியும்.

இருவருக்கும் பதினெட்டு வயது வித்யாசம்.

அதோடு வேறு முக்கிய காரணம் ஸ்ரீ நந்தினியின் காதல் , அவளுக்கு அத்தனை அழகான ஆழமான காதல் தன் சிறு வயது நண்பன் மீது.

அவன் வீட்டினர்க்கும் சம்மதம் , குட்டநாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்கிறார்கள் அவர்கள் , நல்ல நிலையிலே இருந்தார்கள்.

இந்த சொத்து  பணம் எதுவும் அவர்களுக்கு தேவைப்படவில்லை, நந்தினி மட்டுமே அவர்களின் விருப்பம் .

அவர்களே வந்து பெண் கேட்க மறுத்துவிட்டார் நாராயணன் , அவனை மட்டுமே திருமணம் செய்வேன் என்று நந்தினி பிடிவாதமாக நிற்க, என்ன செய்ய என்று மனிதரின் குருட்டு புத்தி யோசனையிலே இருந்தது.

விலைக்கு வந்திருக்கும் ஏலக்காய் தோட்டத்தை வாங்க பணம் கேட்டு நச்சரித்த அச்சுதனிடம் , அந்த படு பாதக செயலை செய்ய சொல்லி அனுப்பினார் நாராயணன்.

ஒரு வாரமாக நந்தினியை காணவில்லை, லக்ஷ்மி அழுது ஆர்ப்பாட்டம் செய்து கணவனை சபித்தார்.

 அவளை அவர் ஏதோ செய்துவிட்டதாக , எதற்கும் அசையவில்லை மனிதர் , ஒரு வாரம் சென்று அச்சுதன் அழைத்து வந்தான் நந்தினியை.

கழுத்தில் தாலியோடு சிறு சிறு காயங்களோடு பித்துப் பிடித்தவள் போல “ஐயோ ஐயோ” என்று நெஞ்சில் அடித்து கதறி மயங்கி சரிந்தார் லக்ஷ்மியம்மா.

கன்னம் கன்னமாக வெறி கொண்டு அச்சுதனை அடித்து வெளுத்தார் ஷ்யாமா “போய் சாவு டா , நீ எல்லாம் ஏன் உயிரோடு இருக்க , சீ இது குடும்பமா” என்று.

அவரை யாராலும் தடுக்க முடியவில்லை , நந்தினியின் செயல்பாடுகள் நிலைத்து விட்டது மேல் தளத்தில் இருந்த அறையில் தன்னை சிறை வைத்துக்கொண்டாள்.

மாதங்கள் உருண்டோட கருவை தாங்கி நின்றாள் , அவளை திருமணம் செய்து கொள்ள எத்தனையோ முறை வந்து கேட்டான் அவன் காதலன் .

அவனை பார்க்க கூட இல்லை , அனால் தினமும் மாலை வேலையில் காயலில் தோணி துழைந்து வந்து அங்கிருந்தே அவளை பார்த்திருந்தான்.

அந்த ஜன்னல் கம்பிகளில் பிடித்துக் கொண்டு அவன் போகும் வரை அவளும் பார்த்திருப்பாள்.

“போதும்” என்று எண்ணினாளோ?? , இன்னும் நாட்கள் மிச்சமிருக்க வானம் மொத்தமாக பூமியில் பெய்திறங்கி வெள்ளக்காடாக மாற்றிய மழை நாளில்.

எங்கும் கொண்டு செல்லவோ உதவிக்கு யாரையும் அழைக்கவோ முடியாத நேரத்தில் , மகளை பிரசவித்து ஷ்யாமாவின் கைகளில் கொடுத்தாள் .

அந்த எட்டு மாதங்களில் அவள் பேசிய ஒரே வார்த்தை “கார்த்தும்பி”.

மகள் பிறந்தால் அந்த பெயர் வைக்க வேண்டும் என்று காதலர்கள் கனவு கண்டார்கள் , கடமை முடிந்தது என்று முடித்துக் கொண்டாள்.

அணைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை வாங்கி கொண்டாள்.

அதனாலேயே கார்த்தும்பி அந்த ஜன்னலின் அருகில் நிற்கும் போதெல்லாம் லக்ஷ்மியின் மனம் பதறும் , நந்தினியே அங்கு நிற்பதை போல ஒரு தோற்றம் அவருக்கு.

குறை மாதத்தில் பிறந்ததால் கார்த்தம்பியை காப்பாற்றவே மிகவும் போராடினார்கள்.

என்று நந்தினியை அந்த கோலத்தில் அவர் பார்த்தாரோ அன்றிலிருந்து கணவனையும் மகனையும் மொத்தமாக ஒதுக்கி வைத்தார்.

நாராயணனின் மரணம் வரை அவரிடம் பேசவும் இல்லை , அவர் முகத்தை பார்த்ததும் இல்லை.

சிதையில் வைக்க அவரை கொண்டு செல்லும் போதும் பார்க்க மறுத்துவிட்டார் , இன்றுவரை மகனிடமும் பேசுவதில்லை.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு அச்சுதனுக்கு நந்தினியின் நினைவுகள் பயம்முறுத்த தொடங்க  , ஒருபக்கம் குற்றவுணர்ச்சி , மகளை காண வந்தவரை அறை வாயிலிலே திருப்பி அனுப்பினார் ஷ்யாமா .

அவர் சொல்லி நிறுத்த விழிகளை மூடி அந்த கனத்தை கடக்க முயன்றான் ஜெகன்.

என்ன வாழ்க்கை…. என்ன வாழ்ந்தார் அவர் .

“அவங்க காதலிச்சவருக்கு என்ன ஆச்சு” என்ற வாஞ்சியின் கேள்வியில் அனைவரும் லக்ஷிமியை பார்க்க.

“அவ இறந்த அடுத்த நாள் இதே கரையில பிணமா கிடந்தான்” என்றார்.

உடனே எழுந்துவிட்டான்  , அவள் அறை சென்று உறங்கும் அவளை அள்ளி அணைத்துக்கொண்டான் தன்னோடு.

“அவளுக்கு எதுவும் தெரியாது” என்றவரை  பார்த்தவன்,  “தெரியவேண்டாம் எப்போவும்” என்றான் உறுதியாக.

அன்று இரவு நிலவின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்த மின்மினிப் பூச்சியை கைகளில் பிடித்து மூடி வைத்து ரசித்துக்கொண்டிருந்தாள் கார்த்தும்பி.

அவளை ரசித்துக்கொண்டே அங்கே அமர்ந்திருந்தவன் அருகில் வந்தவள் “போலாம் போதும்” என்க.

எழுந்து அவள் கை பற்றி தன்னை நோக்கி இழுத்தான் , அவள் விழிகள் விரித்தது.

அதிகம் அருகில் கூட வர மாட்டான் , இன்று என்ன!! என்று அவள் பார்க்க .

அவள் முடியை காதோரம் ஒதுக்கியவன் விரல்கள் அந்த மச்சத்தை தொட்டு வருட , விழிகளை மூடிக் கொண்டவள் அவன் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

மிக அருகில் அவன் வாசம் , அவள்  செவி மடலின் மச்சத்தில் முத்தம் பதித்தவனின் இதழ்கள் கன்னத்தில் மெல்ல ஊர்ந்து அவள் இதழ்களின் அருகே தேங்கி நின்றது.

ஒரு கை அவள் இடையை வளைத்து தன்னோடு இறுக்க “நந்தேட்டா..” என்ற அழைப்பிற்கு காத்திருந்தவன் போல அவள் இதழ்களில் புதைந்து கொண்டான்

ருசித்து ருசித்து அவனிற்கு பசி அடங்கவில்லை , இது போதாது… , தன் கட்டுப்பாட்டை இழக்கிறோம் என்று உணர்ந்த நொடி மெல்ல அவள் இதழ்களை விடுத்து நெற்றி முட்டி நின்றான்.

 

கம்பன் சொல்ல வந்து , ஆனால் கூச்சங்கொண்டு

எழுதா ஓர் உவமை நீ

வர்ணம் சேர்க்கும்போது , வர்மன் போதை கொள்ள

முடியா ஓவியமும் நீ

எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்

உயிரே இல்லாத கல் கூட காமமுறும்

உன் மீது காதல் கொண்ட மானுடன் தான்

என்ன ஆகுவான்…..

 

“தும்பி…”

ம்ம்ம்”

 “கல்யாணம் செய்துக்கலாமா” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் அத்தனை கனவு.

திருமதி வருண் ஜெகன்நாதன் ஆயிட்டா  என் கூடவே வந்துடனும் ,  இந்த  ஊர் சொந்தம் எல்லாரையும் விட்டு ,  சம்மதமா..”  என்க.

“வருண் ஜெகன்நாதன் கூட இருக்க கார்தும்பிக்கு காரணங்கள் வேண்டாம் ,  இந்த காதல் போதும்”  என்றவளை எப்படி இனியும் பிரிந்திருக்க.

“அம்மா உங்க மறுமவள போய் பொண்ணு கேளுங்க” என்ற மகனின் வார்த்தையில் அடுத்த நாளே தட்டோடு அவளின் வீட்டில் நின்றனர் சீதாவும் பிரகாஷும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!