Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாடும் கனவே தொடருதே

அத்தியாயம் -10- PART 2

அத்தியாயம் -10- PART 2

அனைவரும் சட்டென்று அவளை திரும்பி பார்க்க, 



Advertisement

“இல்ல, நான் எதையும் பார்க்கல, நான் ஜூஸ் கொடுத்துட்டு உடனே வந்துட்டேன்” என்றாள் வேகமாக.

“வெண்பா தான், கடைசியா அவன் ரூமுக்கு போய்ட்டு வந்திருக்கா, அதுக்கு அப்புறம் தான் செயின் காணாமல் போய் இருக்குன்னா நாம என்ன தான் பண்ண முடியும்? என இளங்கோ வெண்பா மீது சந்தேகப்பட, அவளோ,

Advertisement

Advertisement

“என்ன பெரியப்பா நான் தான் எடுத்தேன் சொல்றீங்களா?” என கோபமாய் கேட்க,

“நீ எடுத்தேன்னு நான் சொல்லல. ஆனால், சூழ்நிலை உன் மேல சந்தேகப்பட வைக்குத்தே!! என இளங்கோ கூறியதும் அவளுக்கோ அத்தனை அவமானமாகி போனது. கண்ணில் நீர் வழிய,

Advertisement

“என்னை திருடினு சொல்லாமல் சொல்றீங்கள. இந்த வீட்டில் எத்தனை வருஷமா நான் வந்துட்டு போய்ட்டும் இருக்கேன். என்னை போய் இப்படி சந்தேக படுறீங்களே” என்றவளுக்கு நெஞ்சமெல்லாம் பாராமகி போனது.

“ஆமாங்க, நீங்க வெண்பாவை சந்தேகப்படுறது ரொம்ப தப்பு. அவ இந்த வீட்டு பொண்ணு, அவளை சந்தேகப்பட்டா, எல்லாரையும் சந்தேக படுற போல,” என விசாலாட்சி அவளுக்கு சாதகமாக பேச,

“நான் அவ தான் எடுத்தானு சொல்லல. ஆனால் நடந்ததை வச்சு பார்க்கும் போது, சந்தேகம் வருவது இயல்பு தானே. வேற என்ன பண்றது? சரி விடுங்க. கிஷோர் போனது போட்டும். நானே உனக்கு வேற செயின் வாங்கி தந்துறேன். போய் வேலையை பாரு. இங்க நாம என்ன பேசினாலும் தப்பா தான் கன்வே ஆகுது” 

என இளங்கோ மறைமுகமாக தாக்கினார். 

கிஷோரோ, “அங்கிள், உங்களுக்கே தெரியும், அது அப்பா போட்ட செயின். அது இல்லாமல் போனா, அப்பா கோச்சுப்பார். நீங்க தான் இங்க கூட்டிட்டு வந்தீங்க. கடைசியில் என் செயின் திருட்டு போனது தான் மிச்சம். இனி நான் இங்க இருக்க மாட்டேன். நான் ஊருக்கே கிளம்புறேன். நாளைக்கு என் எல்லா தின்க்ஸ்ம் காணாமல் போனாலும் போயிடும். இந்த வீட்டில் சேப்டி இல்ல.

இங்க வரும் போது, இந்த வீட்டை பத்தி ஆஹா, ஓஹோனு சொன்னீங்க. இப்போ பார்த்தா, செயின்லாம் திருடுறாங்க. இனி நான் இங்கே இருக்க மாட்டேன் நான் போறேன்” என கிஷோர் பெரிய வீட்டை கேவலமாக பேச நாச்சியாருக்கு தாளவில்லை.

“என்ன தம்பி நீங்க, எங்க வீட்டை பத்தி இப்படியெல்லாம் பேசறீங்க. பரம்பரை பரம்பரையா இந்த ஊரை கட்டி ஆண்ட குடும்பம் இது. போயும் போயும் உங்க செயினை வச்சு தான் வாழ போறோமா. 

என அவர் சற்று காட்டமாகவே கூற,

“கோவப்படாதீங்க அத்தே! அவனுடைய பொருள் காணும். அவனுக்கு அந்த தவிப்பு இருக்கும் தானே!! 

வீடு முழுக்க தேடியாச்சு, எங்கயும் காணும். எங்கயாச்சும் விழுந்திருந்தா கிடைச்சு இருக்கும். யாராச்சும் எடுத்து வச்சு இருந்தா, நாம செக் பண்ணா தானே கிடைக்கும். அதுக்கும் ஒத்துக்க மாட்டேன்கிறீங்க. கடைசியா வெண்பா தான் அவன் ரூமுக்கு போய் இருக்கா, அதுவும் சந்தேகத்தை கிளப்புது. செக் பண்ணி பார்ப்போம், அவ எடுத்தாளா, இல்லையான்னு அப்புறம் தெரிஞ்சுரும்ல”

என இளங்கோ கூற, நாச்சியாரால் எதுவுமே பேச முடியவில்லை.

அவருக்கும் தெரியும் தான் வெண்பா இது போலலாம் செய்த்திருக்க மாட்டாள் என்பது. அவளை சந்தேகப்படுவது அவருக்கே கஷ்டமாக தான் இருந்தது.

அனைவரும் இதற்கு என்ன தான் முடிவு? என்பது போல ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருக்க,  வெண்பாவோ,

“இப்போ என்ன? என்னை செக் பண்ணனும் அவ்வளவு தானே! பண்ணிட்டா உங்க சந்தேகம் தீர்ந்திடும்ல. பண்ணிக்கோங்க” என கண்ணீரை துடைத்தபடியே கூற,

“நீ ஏன் வெண்பா இவங்க சொன்னதுக்கெல்லாம் சரினு சொல்ற? எங்களுக்கு உன்னை பத்தி தெரியாதா?” என கதிர்வேல் அவளுக்கு பக்கபலமாக பேச, விசாலாட்சியும்,

“அதானே!!, வெண்பாவை பத்தி எங்களுக்கு நல்ல தெரியும். நீங்க அவளை சந்தேகப்பட்டது மட்டும், அவருக்கும் வெற்றிக்கும் தெரிஞ்சது, அவ்வளவு தான் சும்மா விட மாட்டாங்க” என அவரும் அவள் பக்கம் நின்றார்.

“எல்லாரும் என்னை தாப்பாவே எடுத்துகிறீங்க. சரி விடுங்க, என்ன சொன்னாலும் ஏத்துக்க போறதில்லை. இந்த பிரச்சனையை இப்படியே விட்டுட்டு வேற வேலையை பாருங்க” என இளங்கோ கூற, அனைவரும் சரியென்றனர். யாருக்கும் அவர் வெண்பாவை சந்தேகப்படுவது பிடிக்கவில்லை.

“இல்ல அத்தே, அவங்க செக் பண்ணிக்கட்டும். நான் தான் எதையும் எடுக்கலையே!! அப்புறம் எப்படி என்கிட்ட இருக்கும். இப்போ செக் பண்ணாமல் போன நாளைக்கு வேற பொருள் ஏதாச்சும் காணும்னாலும், என்னை தான் சந்தேகப்படுவாங்க. பரவாயில்ல பார்த்துக்கட்டும்” என விசாலாட்சியிடம் கூறியவள்,

“பெரியப்பா, என்கிட்ட போனை தவிர வேறெதுவும் இல்ல. பர்ஸ் பேக்னு நான் எதுவும் எடுத்துட்டு வரல” என்றதும்,  

அவரோ சட்டென்று அவள் உணவு கொண்டு போக இருந்த பையை பார்த்தார். வெண்பாவும் அவர் பார்வையை தொடர, அங்கிருந்த பையை பார்த்ததும்,

“அது நான் எடுத்து வைக்கல அத்த தான் எடுத்து வச்சாங்க. இன்னும் அதுக்குள் என்ன இருக்குனு கூட நான் பார்க்கல. உங்களுக்கு சந்தேகம் இருந்தா அதுல பார்த்துக்கோங்க” என்றாள் அவர்களின் சூழ்ச்சி அறியாது.

இளங்கோவோ, “கிஷோர் போய் செக் பண்ணு” என்றதும் அவனும் அந்த பையில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்தவன், பையை கீழே கவிழ்க்க, அதிலிருந்து வெளிவந்து விழுந்தது அவனின் செயின்.

அதனை கண்டதும் அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி. வெண்பாவிற்கோ எதுவுமே புரியவில்லை. அப்படியே ஸ்ம்பித்து போய் விட்டாள். நாச்சியார் திரும்பி அவளை பார்த்து முறைக்க, வெண்பாவோ,

“இல்ல அம்மாச்சி, நான் எடுக்கல. இது எப்படி இந்த பையில் வந்துச்சுன்னே எனக்கு தெரியாது. நான் எடுக்கல, நான் எடுக்கல” என அவள் அதையே திரும்ப திரும்ப கூறி  அழ,  விசாலாட்சியோ அவளை அணைத்து கொண்டு,

“அழாதே வெண்பா, நிச்சயமா நீ எடுத்திருக்க மாட்ட, உன்னை பத்தி எனக்கு தெரியாது” என அவளை சமதனப்படுத்தினார்.

“அவ எடுத்துட்டு போற பையில் இருந்து எடுத்து இருக்கோம், அவ எடுக்கலைனு எப்படி சொல்றீங்க” என கிஷோர் கேட்க, இருக்கும் பதற்றத்தில் யாராலும் அவன் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை.

“என்ன டி இதெல்லாம்?” என நாச்சியார் பல்லை கடிக்க,

“அம்மாச்சி உண்மையா தான் சொல்றேன், நான் எடுக்கல. இது எப்படி என பையில் வந்துச்சுன்னே தெரியல” என அழுது கரைந்தாள்.

“அப்பத்தா, இவங்க இப்போ வந்தவங்க, அவங்களுக்கு வெண்பாவை பத்தி தெரியாமல் இருக்கலாம். ஆனால் நமக்கு தெரியுமே!! வெண்பா  மேலே நம்பிக்கை இருக்கு அவ, அப்படி செய்ய மாட்டா” என அடித்து கூறினான் கதிர்வேல். மீனாட்சியும்,

“அண்ணா சொல்றது உண்மை தான். வெண்பா அப்படி கிடையாது” என எல்லாருமே அவளுடன் நின்றனர்.

“அப்போ இது எங்க இருந்து வந்தது?” என்ற கிஷோர்,

“அங்கிள், இவங்க எல்லாரும் இப்படியே தான் சொல்லிட்டு இருப்பாங்க. நீங்க போலீஸை கூப்பிடுங்க, அவங்க வந்து விசாரிக்கிற விதத்தில் விசாரிச்சா, எல்லா உண்மையும் வந்துற போது” என அவன் வெண்பாவை பார்த்து கொண்டே கூற, அவளுக்கோ பயத்தில் முகம் வெளிறி போனது.

அவள் எடுக்கவில்லை தான், இருந்தாலும், காவல்துறை என்றதும் எழும் இயல்பான பயம் அவளை வந்து தொற்றி கொண்டது.

விசாலாட்சியின் கையை இறுக பிடித்தப்படி, அவர் தோளில் சாய்ந்து கொண்டவளுக்கு உடலெல்லாம் நடுங்கியது.

“போதுமா? இப்போ சந்தோஷமா? உன்னை வீட்டில் சேர்த்ததுக்கு, எங்க கொண்டு நிறுத்தி இருக்க பார்த்தியா? உன்னால் இந்த வீட்டுக்கு அவமானம் தான் வந்து சேர போது”

என நாச்சியார் வேறு ஒருபக்கம் அவளை கடித்து குதற, செய்வதறியாது தவித்து போய் நின்றிருந்தாள் வெண்பா.

அந்நேரம் சரியாக விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தனர் கனகவல்லியும், சண்முகமும்.

அவர்களை கண்டதும், வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தந்தையை நோக்கி, “அப்பா” என கதறியபடியே ஓடி சென்று கட்டி கொண்டாள் வெண்பா.

மகளை ஆர தழுவி கொண்ட சண்முகம், 

“என்ன மா? என்ன பிரச்சனை? வள்ளி போன் பண்ணி என்னென்னமோ சொல்றா? எங்களுக்கு ஒன்னும் புரியல, அதான் பதறி அடிச்சுட்டு ஓடி வந்தோம்” என்றவரை மேலும் மேலும் ஒன்றி கொண்டாள் வெண்பா.

“ஆன்.. உங்க பொண்ணு, இந்த பையனோட செயினை திருடி இருக்கா. காசு வேணும்னா கேட்க வேண்டியது தானே! அதை விட்டுட்டு இதென்ன வேலை”

என நாச்சியார் சொல்லம்புகளை எறிய, துடித்துடித்து போயினர் சண்முகம் குடும்பத்தினர்.

“அத்தே, அவ எடுத்திருக்க மாட்டான்னு தானே சொல்றோம். சும்ம் எதுக்கு அவ மேலே பழி போடுறீங்க” என விசாலாட்சி சற்று சத்தமாகவே மாமியாரை பேச,

“நீ வாய மூடிட்டு இரு. இல்ல அவ்வளவு தான் பார்த்துக்கோ” என அவருக்கு மேலே நாச்சியார் கத்த, விசாலாட்சியால் மேலே எதுவும் பேச முடியவில்லை.

“என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும். வீணா அவ மேலே பழிய போட்டு பேசுனீங்க, அப்புறம் நல்லா இருக்காது” என கனகவல்லி கோபப்பட,

“இங்க வந்து யாரும் உன் பொண்ணு மேல வீண் பழி போடல. இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸ் வரும் அவங்க சொல்லுவாங்க. யார் பழி போடுறா? யார் எடுத்தானு”

என நாச்சியாரும் பதிலுக்கு பேச, அங்கு ஒரு பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் சண்முகம், தன் மேலே சாய்ந்திருந்த வெண்பாவை நோக்கி,

“ஏன் மா, இப்படி பண்ண?” என தழுதழுத்தப்படி கேட்க, உயர் மின்சாரத்தை தொட்டது போல் அவரை அதிர்ந்து பார்த்தாள்.

நீ என்பது என்னில் யாரென்று கேட்டால்

என்னவென்று சொல்வேன் நான்!!

என்னுள் வாழும்,

சொர்க்கமல்லவா நீ!

கனவுகள் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!