அத்தியாயம் 10
அத்தியாயம் 10
சொல்லுடி பெங்களூருல என்ன நடந்துச்சு.. எதுக்கு இந்த திடிர் கல்யாணம் என சிற்பிகாவின் தோளை உலுக்கியவாறு கேட்டாள் ரூபாலி..
சிற்பிகாவோ தோழியின் கேள்விக்கு.. அவள் முகத்தை பார்த்து பதில்க் கூறும் தைரியமின்றி.. அவள் மடியில் முகத்தை புதைத்தவாறு.. கடந்த மூன்று நாட்களில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி முழுவதுமாக உரைத்தாள்..
தன் தோழி எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருந்திருக்கிறாள்.. என்ற எண்ணமே ரூபாலியின் மனதை நடுங்கச்செய்தது.. அந்நேரம் அவள் என்ன பாடுபட்டிருப்பாள் என்று வேதனைக் கொண்டவள்.. மடியில் படுத்திருந்த சிற்பிகாவின் மேல் படுத்து வார்த்தைகளின்றி செயல் மூலம் அவளை சமாதானம் படித்த… சிற்பியும் ரூபாலியின் முயற்சி புரிந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு.. ” விடு ரூபி.. எனக்கு எதுவும் ஆகல… சரியான நேரத்துக்கு வந்து அவர் என்னைய காப்பாத்திட்டார்.. ”
Advertisement
” ஹ்ம்ம் அந்த வகையில கடவுள் உன்னை காப்பாத்திட்டார்.. ஆனா இந்த கல்யாணம்.. இது உனக்கு சரின்னு தோணுதா.. என சிற்பிகாவைப் கூர்மையாக பார்த்துக் கேட்டாள்..
ஹ்ம்ம் இந்த ஜென்மத்துல.. எனக்கு அவர்தான் ரூபி.. உனக்கே தெரியும் இந்த நிமிஷம் என் வாழ்க்கையில வராதான்னு நான் ஏங்காதா நாள் இல்லை… அப்படிப்பட்ட பொக்கிஷம் எனக்கு கிடைக்குறப்ப.. அத எட்டி உதைக்க தோணலை.. என்று தன்னவனை நினைத்து அவள் கூறியதும்.. ரூபாலி ஏதோ கூற வர.. நீ என்ன சொன்னாலும் நான் இந்த முடிவுல இருந்து மாறமாட்டேன் ரூபி.. என சிற்பிகா அழுத்தமாக கூற.. மற்றவள் அமைதியாகி விட்டாள்..
அந்நேரம் அவர்களின் அறைக்குள் நுழைந்த நீரஜா ” நீ எல்லாம் என்ன ஜென்மம்.. ச்ச ச்ச இப்போதான் உன் கேவலமான புத்தி பத்தி எனக்கு தெரிஞ்சது.. என்ன பண்ணி அவ்வளவு பெரிய பணக்காரன மடக்கின.. பார்க்க பூனையாட்டம் இருந்துட்டு எவ்வளவு பெரிய வேலைப் பார்த்திருக்க.. நல்லா கேட்டுக்கோ அவன் சரியான பொம்பள பொருக்கி.. ஒரு மாசம் வரைக்கும் உன்னை வச்சுக்குவான் அப்புறம் நாய் மாதிரி துரத்தி விடப்போறான்.. அதனால ஓவரா சந்தோஷப்பட்டுக்காத என தன் மனதின் வக்கிரதையும் பொறாமையையும் வார்த்தைகளால் வெளிப்படுத்த.. சிற்பிகா நீரஜாவை வெறித்துப் பார்த்தாள்.. அவளின் வலி நிறைந்த பார்வையே கூறியது.. அச்சிறு அரக்கியின் வார்த்தைகள் அவளை எவ்வளவு ரணப்படுத்தியது என்பதை..
Advertisement
வயசுக்கு தகுந்த மாதிரியா பேசுற என கோபம் கொண்ட ரூபாலி நீரஜாவை நெருங்கும் முன்.. ஒரு கன்னத்தைப் பிடித்தவாறு கீழே விழுந்தாள் நீரஜா..
Advertisement
சுற்றியிருக்கும் பொருட்கள் யாவும் இரண்டு இரண்டாய் தெரிய.. கண்ணை மூடி தன்னை நிலைப்படுத்தியவள்.. வலியில் ஒருபக்கம் இழுக்கும் கன்னத்தை அழுத்தி பிடித்தவாறு.. தன்னை அடித்தது யாரென பார்க்க.. அங்கு சிற்பிகா ரூபாலி தவிர்த்து.. இருக்கரத்தையும் கட்டியவாறு நின்றிருந்த அதியைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்…
” உனக்கு என்ன தைரியம் இருந்தா என்னைய அடிப்ப.. இரு இப்போவே எங்கப்பாக்கிட்ட சொல்லி.. உங்களையெல்லாம் என்ன செய்றேன் பாருங்க… என தன் கீச்சுக்குரலால் அவள் கத்தி முடிக்கும் முன்பே அவளின் கூந்தலை பிடித்து ஆட்ட ஆரம்பித்தாள்… அதி.
” ஆஆஆ.. விடு விடு வலிக்குது.. ”
Advertisement
” ஹ்ம்ம் என்ன சொன்ன சரியா கேட்கல.. ” என பிடிக்கு அழுத்தம் கொடுக்க மேலும் அலறத்தொடங்கினாள்…
சிற்பிகா அதியை தடுக்க முற்பட ரூபாலி தடுத்தாள்.. ” ப்ச் எங்க போற.. இவ்வளவு நேரம் உன்ன என்னவெல்லாம் பேசினா… விடு. நல்லா வாங்கட்டும்.. என பல்லைக்கடித்தவாறு கூற.. ” சிற்பிகா செய்வதறியாது விழித்தாள்…
ஹ்ம்ம் இப்போ சொல்லு.. என முடியின் பிடிக்கு அதி அழுத்தம் கொடுக்க.. நீரஜா அழுதவாறு விடுங்க போகணும் என இப்பொழுது மரியாதையாக கூறினாள்.. அதில் தன் பிடியை சற்று இலகுவாக்கிய அதி ” ஹ்ம்ம் இங்க பாரு பாப்பா.. முன்னாடி இவ உன் அக்கா.. சோ இவள நீ என்னவேனும்னாலும் பேசியிருக்கலாம்.. ஆனா இதற்கு அப்புறம் இவளப்பத்தியோ.. இல்லை என் அபியப்பத்தியோ ஒரு வார்த்தை பேசுன.. மொத்த முடியையும் கையாலயே பிடிங்கி கொடுத்துடுவேன்.. சேம்பிள் பார்க்கிறியா என்ற அதி அவளின் முடிகளை சற்று வேகமாய் இழுக்க முடி கையோடு வந்துவிட்டது..
ஆஆஆஆ என முன்னிலும் வேகமாய் கத்தியவள்… அங்கிருந்து செல்லப்பார்க்க.. அதி.. ” இங்க பாரு இப்போ மட்டும் நான் உங்க அப்பாகிட்ட நீ அபியப்பத்தி பேசுனத சொன்னேன்வையி உன் நிலைமை இன்னும் மோசமாகும்.. அதனால பார்த்து நடந்துக்கோ பாப்பா.. என நக்கலாக கூறவும். அழுதுக்கொண்டே சென்றாள்…
சிற்பிகா அழுதுக்கொண்டே செல்லும் நீரஜாவைப் பாவமாய் பார்க்க.. ரூபாலி அதியைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்து… சிற்பிகாவின் தோளை இடிக்க.. அதில் தெளிந்த சிற்பிகா.. ” ரூபி இவங்க அதி.. அவருக்கு ரொம்ப முக்கியமானவங்க.. எனக்கு எப்படி நீயோ.. அதே மாதிரி தான் அவருக்கு இவங்க.. என்றவள்.. அதி இவ ரூபாலி என் உயிர்த்தோழி என இருவரையும் அறிமுகப்படுத்தினாள்..
ஹாய் என்ற ரூபாலி மரியாதை நிமித்தம்.. அதியிடம் கைநீட்ட.. அதனை சட்டை செய்யாது.. வெறும் தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள்.. அதி.
ரூபாலி முகம் சுருங்க.. சிற்பிகா அவளை சமாதானம் படுத்தும் பொருட்டு.. ” அவங்க கொஞ்சம் மூடிடைப் ரூபி.. நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத.. ”
” ப்ச்.. விடு இது ஒரு விஷயமா.. ஆமா இவ எதுக்கு இங்க இருக்கா.. ”
” அது.. மேரேஜ் முடியுறவரை அதிய இங்க எனக்கு துணைக்கு தங்கச்சொல்லி அவரு சொல்லியிருக்காரு… ” என சிவப்பேறிய கன்னங்களுடன் சிற்பிகா கூற.. ரூபாலி அவளின் வெட்கத்தை ரசனையுடன் பார்த்தாள்…
********************************************
இருவீட்டு சொந்தங்களின் மத்தியில் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அபயசிம்ஹா சிற்பிகா திருமணம் நல்முறையில் முடிந்தது.. இதில் இரு குடும்பத்திற்கும் மிகப்பெரிய வருத்தம்.. இருந்தும் அபயின் முடிவை தட்ட இயலாது சம்மதித்திருந்தனர்..
ஆனால் சடங்கு சம்பிரதாயங்கள் யாவும் எவ்வித குறைவின்றி நடந்தது… அபய் அவையனைத்தையும் எரிச்சல் கொண்டு யாருக்கோ சொல்கிறார்கள் என்று ஏனோ தானோவென்று செய்ய.. சிற்பிகாவோ அவனுக்கும் சேர்த்து முழுஈடுபாட்டுடன் ஒவ்வொரு சடங்கையும் பயபக்தியாய் ரசனையுடன் செய்தாள்… இறுதியில் திருமாங்கல்யம் அணிவிக்கும் நேரத்தில்.. ஒன்பது வருட கனவு நினைவாகிய தருணத்தில் அவளையும் அறியாது விழிகள் ஆனந்த நீரூற்றை பெருக்கியது..
ஆனால் அதனையறியாத அபய்.. தன்னை திருமணம் செய்ததால் அவள் அழுவதாக எண்ணி முகம் இறுகினான்.. அக்னியை வலம் வரும்போது அவள் அழுததற்கான தண்டனையை சிற்பிகாவின் கரத்தில் காண்பிக்க அவள் விரல்கள் சிவந்து போனது… உயிர் போகும் வலி உண்டாலும்.. அதனை முகத்தில் காண்பிக்காமல்.. அவள் இயல்பாய் இருக்க முயல.. அபய் போனால் போகுது என அவள் கரத்தை விட்டான்… இனி வரும்காலங்களில் மனதின் துன்பத்தையும் வலிகளையும் முகத்தில் காண்பிக்க கூடாது என்பதற்காக இச்செயலை முன்னோட்டமாய் காண்பித்தானோ… என்னவோ..
