Skip to content
Post Views: 1,822
part-2
உடனே மனைவியின் புறம் திரும்பியவர்,
“போடி போய் எல்லாத்தையும் எடுத்துட்டு வா, அதான் வீட்டை விட்டு வெளியே போனு சொல்லி அசிங்கப்படுத்துறாங்களே, எதுக்கு இன்னும் இங்க நின்னுட்டு” என கோபபமாய் கத்த, அமுதவல்லியோ, திருநாவுகரசிடமும்
Advertisement
அண்ணா, என்ன ண்ணா இது? உன் பையன் எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்றான், நீ பார்த்துட்டு சும்மா இருக்க? அவனை கேட்க மாட்டியா? என நியாயம் கேட்க,
“இதோ பாரு அமுதா, எனக்கு நீயும் கனாகவும் ஒன்னு தான். ரெண்டு பேருமே எனக்கு தங்கச்சிங்க தான். உன்ன ஒருமாதிரி, அவளை ஒருமாதிரி நான் என்னைக்கும் பார்க்க மாட்டேன்.
நீயே நியாயம் சொல்லு, வெண்பாக்கு இவன் பண்ணது நியாயமா? சின்ன பொண்ணு மேலே திருட்டு பழியை போட்டு கஷ்டப்படுத்தி இருக்கான். அதுக்கு உன் புருஷனும் துணை. சும்மா எப்படி விட சொல்ற?.இதே நிலைமை ராகினிக்கு வந்தா என்ன பண்ணுவ?
Advertisement
வெற்றி, உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து, அமைதியா பேசிட்டு இருக்கான். இதே இடத்தில் வேற யாராவது இருந்திருந்தா, உயிரோடு புதைச்சு இருப்பான்.
Advertisement
இந்த வீட்டில் எல்லாரும் சமம் தான். அது வெண்பாவா, இருந்தாலும் சரி, மீனாட்சியா இருந்தாலும் சரி, ராகினியா இருந்தாலும் சரி. யாருக்கு அநியாயம் நடந்தாலும் அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது.
அதனால், ஒழுங்கா உன் புருஷனை கூப்பிட்டுட்டு இங்க இருந்து கிளம்பிடு. எப்படி தான் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் பேச முடியுதோ உன்னால்”
என திருநாவுகரசும் வெற்றிக்கு சாதகமாக பேச, அமுதவல்லியும், இளங்கோவும் அவமானத்தில் கூனி குறுகி போயினர்.
Advertisement
அமுதவல்லியும், ராகினியும் அவர்களது பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியேற போக, சுற்றி இருந்த ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
வெற்றியோ, இளங்கோவை பார்த்து,
அப்படியே போனா எப்படி? தமிழ் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போங்க” என்றதும் அதிர்ந்து பார்த்தார் இளங்கோ.
“வெற்றி..” என அவர் கோபபமாய் கத்த,
நேரடியா பாதிக்கப்பட்டது அவ தான். அவ கிட்ட செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க. இல்லைனா நான் கேட்க வைக்க வேண்டி வரும்” என அவன் கைகளை முறுக்க,
நான் எதுவுமே பண்ணலையே வெற்றி, எல்லாமே இவன் பண்ணி இருக்கான். எனக்கு எதுவும் தெரியாது. அவன் சொன்னதை உண்மைன்னு நம்பினேன். அவ்வளவு தான்” என இளங்கோ தப்பிக்க முயல, வெற்றி காதில் வாங்கவே இல்லை.
நீங்க இதை பண்ணல என்பதால் தான், உங்களுக்கு உடம்பில் ஒரு காயம் கூட இல்லாமல் இருக்கு. இல்லைனா, அவனை திரும்பி பாருங்க. அதே நிலைமை தான் உங்களுக்கும். பொய் சொன்ன அவனை நம்பி ஒரு அப்பாவி பொண்ணு மேலே பழி போடீங்களா, அதுக்கு தான் மன்னிப்பு கேட்க சொல்றேன். அத்தனை பேர் முன்னாடியும் மன்னிப்பு கேட்கிறது தான் உங்களுக்கான தண்டனை”
என்றதும் அவரால் இதை மறுக்கவும் முடியவில்லை. ஏற்று கொள்ளவும் முடியவில்லை.
வெண்பாவை பார்த்தவர், “மன்னிச்சுடு” என எங்கோ பார்த்தப்படி கூறி, அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறினார்.
ஆவேசம் அடங்காது அவன் அங்கேயே குறுக்கும் நெடுக்கும் நடக்க, கனகவல்லியும், சண்முகமும் அவனருகில் வந்தனர்.
“வெற்றி, ரொம்ப நன்றி யா. திக்கு தெரியாத காட்டில் தெய்வம் வந்து ஒளி தந்த மாதிரி தான் நீ எங்களுக்கு பண்ணி இருக்க. நீ மட்டும் இல்லைனா இந்த அவமானம் காலம் முழுக்க எங்களை துரத்திட்டே இருந்திருக்கும்” என அவனுக்கு நன்றி கூற,
“பிரச்சனை நடக்கும் போதே எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லி இருந்தா இதெல்லாம் நடக்கவே விட்டு இருக்க மாட்டேன். அப்பவே வந்து நாலு போட்டு உண்மையை சொல்ல வச்சு இருப்பேன். எதுக்கு என்கிட்ட சொல்லல” என அவன் கோபப்பட, இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருந்த மனநிலையில் எங்கிருந்து அவன் நியாபகம் வந்தது. அவர்கள் தயங்கி நிற்பதை கண்டவன்,
“சரி விடுங்க மாமா, உங்க சூழ்நிலை புரிஞ்சுக்க முடியது. உண்மை எதுவோ அது தான் வெளியே வந்து இருக்கு. நம்ம வீட்டில் இப்படி ஒரு பிரச்சனைன்னா நான் சும்மா இருப்பேன்னா, விஷயம் கேள்விப்பட்டதும் என்னால் தாங்கிக்கவே முடியல. அதான் அப்பாவை கூட விட்டுட்டு ஓடி வந்துட்டேன்” என அவன் விளக்கம் கொடுக்க, மீண்டும் நன்றி கூறினர் கனகவல்லியும் சண்முகமும்.
“ஆமாம், உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் நினைச்சேன், நான் வரும் போது வீட்டில் இருந்த பொருள் எல்லாத்தையும் எடுத்து மூட்டை கட்டிட்டு இருந்தீங்களே!! எதுக்கு?’ என அவன் கேள்வி எழுப்ப, சண்முகமோ,
“இவ்வளவு நடந்த பின்னாடியும் எங்களால் எப்படி இந்த ஊரில் இருக்க முடியும்? அதான் ஊரை விட்டு போயிடலாம்னு” என தயங்கி தயங்கி கூற, அனைவரும் அதிர்ந்து பார்த்தனர் அவர்களை.
“என்ன கனகா இது? எங்களை எல்லாம் விட்டுட்டு போக போறீயா நீ? என விசாலாட்சி கேட்க, கனகவல்லியோ சங்கடமாய் பார்த்தார் அவரை.
“இப்போ எதுக்கு இவ்வளவு பெரிய முடிவு எடுத்து இருக்கீங்க ரெண்டு பேரும்? ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்தா, நாங்களாம் அப்படியே விட்டுடுவோமா?!!
சரி பண்ண மாட்டோம். எதுக்கு இப்படியொரு முடிவு? என திருநாவுக்கரசு கோபபப்பட,
“வேறே என்னண்ணே எங்களை பண்ண சொல்ற? எங்களை பார்த்தாலே அம்மாவுக்கு ஆக மாட்டேங்குது. எங்களுக்கு இருக்கிறது ஒத்த பொண்ணு. அவங்க தான் வீண் பழி போடுறாங்கன்னா அம்மாவும் அதை பார்த்துட்டு சும்மா தானே இருந்தாங்க. அவ எடுத்த மாதிரி தானே பேசுனாங்க. அப்போ நாங்க என்ன பண்ணனும். சொந்த பந்தமே வேண்டாம் தானே முடிவெடுக்க முடியும். அதான் இங்கிருந்து போலாம்னு.
ஊரை விட்டு தான் போனோம் நினைச்சோமோ தவிர, உயிரை விடணும் நினைக்கலையே! அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க” என அவரது வேதனைகள் எல்லாம் வார்த்தைகளில் வெளிவர, அனைவருக்குமே கஷ்டமாக இருந்தது.
“என்ன பேச்சு பேசுற நீ?” என விசாலாட்சி கனகவல்லி அருகில் வந்து அவரை கண்டித்து, அழுது கொண்டிருந்த வெண்பாவையும் அணைத்து கொண்டார்.
நாச்சியாருக்கோ கனகவல்லி கூறியதை கேட்டதும் திக்கென்று இருந்தது. ஒருவேளை அப்படி ஏதாவது செய்திருந்தால், நினைக்கவே நெஞ்சு பதறியது அவருக்கு.
மகள் மேல் கோபம் நிறையவே இருக்கிறது தான். தன் பேச்சை கேட்காது திருமணம் செய்து கொண்டாளே என்ற கோபம் தான் நாளடைவில் வெவ்வேறு விதமாக உருமாறி இப்படி வந்து நிற்கிறது.
ஏதோ ஒரு கோபத்தின் உச்சியில் வெண்பாவை நம்பாது, கிஷோர் கூறியதையும், இளங்கோ கூறியதையும் நம்பியது தவறு தான். கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். தீர விசாரித்து இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் மனமே அவரை பாடாத பாடு படுத்தியது.
செய்த தவறு, அவரை கூனி குறுக செய்தது. அதைவிட அவரின் வார்த்தைகள் இன்னமும் அவரை நோக செய்தது. நேராக வெண்பாவின் அருகே வந்தவர் அவளின் கைப்பிடித்து,
“என்னை மன்னிச்சுடு வெண்பா. நான் ஏதோ ஒரு கோபத்தில், அவங்க இப்படி சொன்னதும் உண்மை தெரியாம நம்பிட்டேன். தப்பு தான். மன்னிச்சுடு” என்றவர் கண் கலங்க, அவளோ,
“அம்மாச்சி.., அழாதீங்க. நீங்க பெரியவங்க, என்கிட்ட போய் இப்படியெல்லாம்…” என்றதும்,
“தப்பு செஞ்சு இருக்கேன். மன்னிப்பு கேட்கிறதில் என்ன குறைஞ்சுட போறேன்” என்றவர் யாரையும் பார்க்காது உள்ளே சென்று விட்டார்.
திருநாவுகரசோ, “கனகா, இந்த ஊரை விட்டு போறேதெல்லாம் வேண்டாம். உண்மையில் அண்ணன் என்ற பாசம் இருந்தா ஒழுங்கா இங்கேயே இரு. நடந்து முடிஞ்ச எல்லாத்துக்கும் நானும் மன்னிப்பு கேட்டுகிறேன்”என திடமாக கூற,
“ஐயோ அண்ணா, நீங்க ஏன் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு, நாங்க ஊரை விட்டு போகலை. ஆனால், இனி வெண்பா இங்க வர மாட்டா. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் எப்படி நான் அனுப்ப முடியும். நான் அவளை வீட்டிலே வச்சுக்கிறேன். அதுக்கு நீங்க எதுவும் சொல்ல கூடாது” என்றார் அவரும் முடிவாக.
“வெண்பா இங்க வராதது எங்க எல்லாருக்கும் கஷ்டம் தான். இருந்தாலும் உன்னோட விருப்பத்துக்கு மதிப்பு தரேன். காலம் எல்லாத்தையும் மாத்தும். இதுவும் உங்க வீடு தான் எப்போ வேணும்னாலும் நீங்க வரலாம்”
என கூற, கனகவல்லியும், சண்முகமும், வெண்பாவும் அனைவரிடமும் விடைபெற்று கொண்டனர்.
வெற்றி வெண்பாவையே பார்க்க, அவளும் அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே தான் நடந்தாள். அனைவரும் உள்ளே சென்று விட, வெற்றி அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. வெண்பாவும் வீட்டை வாசலை தாண்டி செல்ல, அவன் பார்வை அவளை தொடர்ந்து கொண்டே இருந்தது.
அவனுக்கு தெரியாதா அவளை பற்றி, தெருவில் இறங்கி மூவரும் சிறிது தூரம் தான் சென்றிருப்பர், வெண்பாவோ,
“ம்மா, நான் இதோ வந்துறேன். நீங்க போய்டே இருங்க” என சொல்லிக்கொண்டே பின்னோக்கி நடக்க
“வெண்பா எங்க போற?” என கனகவல்லி கேட்க,
“இதோ வந்துறேன் நீங்க முன்னே போய்ட்டே இருங்க. பத்து நிமிஷத்தில் வந்துருவேன்” என்றவள் வேகமாக ஓடிவந்து பெரிய வீட்டிற்குள் நுழைய, வெற்றி முகத்திலே புன்னகைக்கு அளவில்லாமல் இருந்தது.
அவனருகே வேகமாக ஓடிவந்தவள், “மாமா” என அவன் மார்பிலே முகம் புதைத்து அவனை இறுக கட்டி கொண்டாள். கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடி, அவன் சட்டையை நனைக்க, அவளை லேசாக அணைத்து கொண்டவன், அவளை ஆசுவாசப்படுத்தினான்.
ஆறுதல் தேவை என்பதை கூற அன்புள்ளங்களுக்கு வாய்மொழி தேவைப்படுமா என்ன? ஆசுவாசம் அளிக்க ஒரு தோளும், அரவணைக்க ஒரு கையும் அதுவே போதுமே!!
அவனின் அரவணைப்பில், அவளுக்கான ஆறுதல் மழை போல் பொழிந்தது.
இவையனைத்தும், வீட்டு மொட்டை மாடியில் நின்றிருந்த நாச்சியார் கண்ணில் தவறாமல் விழுந்தது.
இது தொடருமா என்பது தெரியாது!!
முடிந்து விட்டதா என்பது தெரியவில்லை!!
தொடர வேண்டும் என்று மட்டும் என்னுள் வாழும் நீ
அடிக்கடி சொல்கிறாய்!!
கனவுகள் தொடரும்…
error: Content is protected !!