அத்தியாயம் 16
அத்தியாயம் 16
கெஸ்ட் ஹௌசின் பக்கவாட்டில் அமைந்துள்ள தோட்டத்தில் சோகப்பதுமையாய் அமர்ந்திருந்தாள்.. சிற்பிகா.. அவள் விழிகளோ தொடுவானை வெறித்துக்கொண்டிருந்தது.. அபய்க்கும் அவளுக்குமான நேரம் குறைய குறைய.. அவள் விழிகளின் உயிர்ப்பும் குறைந்துக் கொண்டே வருகிறது.. இன்றோடு அவள் கெஸ்ட் ஹௌசிற்கு வந்து ஒருமாத மாகிவிட்டது..
Advertisement
ஆனால் இன்னும் அபயின் கோபம் தனிந்த பாடில்லை.. அது அவளின் உடலிலும் பிரதிபலிக்க.. தலைவனைப் பிரிந்த தலைவி போல் பசலை நோயில் வாடினாள்.. பெண்ணவள்..
அதிலும் அபயோடு சோனியா வரும் நேரமெல்லாம்.. அவள் ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் நின்றுக்கொண்டிருப்பது போல் இருப்பாள்… அபயும் சரி சோனியாவும் சரி வரும் நேரமெல்லாம் சிற்பிகாவை அவள் வார்த்தைகளால் வதைக்காமல் சென்றதில்லை… என்ன ஒன்று சோனியா.. அபய் இல்லாத நேரங்களில் மட்டும்தான் அவளை நோகடிப்பாள்..
Advertisement
Advertisement
சோனியா ” ஹ்ம்ம் உன்னை பார்த்தா பாவமா இருக்கு… அபய பத்தி தெரியாம கல்யாணம் பண்ணிட்டியா… ” என ஒருமுறை அவளிடம் அவர்கள் திருமணம் பற்றி அறியமுயன்றாள்..
இங்க பாரு நீ பேசாம உங்க வீட்டுக்கே போயிடறதுதான் நல்லது.. இல்லன்னா இங்கயே கிடந்து சாக வேண்டியதுதான்…
Advertisement
என்னால மட்டும் தான் அபய சந்தோஷப்படுத்த முடியும்… அதான் என்னை பார்த்த மறுநாளே என்னைய கூப்பிட்ற்றுக்கார்.. உன்கூட அவர்க்கு திருப்தியா இல்லையாம்.. அபய் டார்லிங் ஒவ்வொரு முறையும் என்கூட இருக்கும் போது சொல்லுவார் என ஹஸ்கி வாய்ஸில் கூறி விழிகளை சிமிட்டுவாள்.. ஆனால் இவளின் எல்லாக் கேள்விகளுக்கும் சரி ஆலோசனைகளுக்கும் சரி.. சிற்பியின் பதில் மௌனம் மட்டுமே….
அவளுக்கே தெரியும் சோனியா கூறுவதெல்லாம் பொய்யென்று.. இந்த ஒருமாத காலம் அபய் அவளிடம் முன்னிலும் கடுமையாக நடந்துக் கொண்டாலும்… அபயின் மனதில் தனக்கென ஓரிடம் இருப்பதை சிற்பி கண்டுகொண்டாள்.. எப்பொழுது சிற்பி அவன் வாழ்க்கையில் வந்தாளோ அன்றே அபய் வேறு பெண்களிடத்தில் பார்வையை திருப்பியதில்லை… அவன் தினமும் அவள் கண் முன்னே சோனியாவோடு ஓர் அறைக்கு செல்வான்.. இருந்தும் அவனால் தன்னைத் தவிர வேறொரு பெண்ணை நெருங்க முடியாது என அவள் காதல் மனம் கட்டியம் கட்டிக்கூற.. சிற்பி சோனியாவின் இவ்வார்த்தகளை பெரிதாக கண்டுகொண்டதில்லை.
ஒரு முறை பொறுமையிழந்து வார்த்தைகளை விட்டதற்குத்தான் இத்தகைய தண்டனை.. அதனால் இம்முறை அவனின் அணைத்து செயலையும் தன் காதல் பேரில் உள்ள நம்பிக்கையில் பொறுத்துக்கொண்டிருக்கிறாள்…
அபய் மற்றும் சிற்பிகாவின் இல்லற வாழ்வைப் பற்றி சோனியாவிற்கு என்ன தெரியும்… அவளின் மாதவிடாய் தினங்களை விட்டு மற்ற எல்லா நாட்களிலும் அபய் சிற்பியின் அருகாமையின்றி இருந்ததில்லை…
அவர்களின் கூடல் பொழுதுகளில் அபயிடத்தில் வேகம் இருந்தாலும்.. வன்மையாக அவளை ஆட்க்கொண்டாலும்.. சிற்பியை ஒருப்பொழுதும் அவன் காயப்படுத்தியதில்லை.. பார்ட்டியின் இரவு கூட அவனின் தொடுகையில் கோபம் மட்டுமே மிஞ்சியிருந்தது… வக்கிரமாக தொடுபவனுக்கும் ஆசையாக தொடுபவனுக்கும் கூடவா அவளுக்கு வித்தியாசம் தெரியாது…
அதனால் சிற்பியின் மனம் ஒரு விஷயத்தில் தெளிவாய் இருந்தது… அவளின் தற்போதைய நிலை நிரந்தரமில்லை.. அவள் அபயை பற்றி புரிந்துக்கொண்டது உண்மையானால் இன்னும் இருநாட்களில் அவளை அவன் மீண்டும் தன் மாளிகைக்கு அழைத்துச் செல்வான்.. என அவள் காதல் மனம் உறுதியாக நம்பியது… அவளின் நம்பிக்கையை காப்பாற்றுவானா அபய்..
******************************************
கண்ணாடியின் வழியே தன்னை முன்னே பின்னே பார்த்துக்கொண்டிருந்தாள் சோனியா… அசாத்திய உயரம் அபரிமிதமான அங்கங்கள்.. என கவர்ச்சியாய் தான் இருந்தாள்.. எப்பொழுதும் சோனியாவிற்கு தன் அழகை குறித்து கர்வம் இருக்கும்.. ஆனால் அவளுக்கே தான் அழகில்லையோ என்ற எண்ணத்தை அபய் அவள் மனதில் விதைத்து விட்டான்…
அபய் அவளை வரச்சொல்லி செய்தியனுப்பிய மறுகனமே துள்ளலாய் அவனைக் காண சென்றவள்.. அங்குள்ள நிலையைக் கண்டு காற்றுப்போன பலுனாய் ஆகிவிட்டாள்…
அவளின் ஒரே ஆறுதல் அபய்க்கும் சிற்பிகாவிற்குமான பிரச்சனை தான்.. முதல் நாளிலே அதை பெரிதாக்கும் பொருட்டு அவளை பற்றி குறைக்கூறி.. அவளை அவன் வாழ்க்கையை விட்டு.. இல்லை உலகத்தை விட்டே அனுப்புமாறு நைச்சியமாக கூற.. அடுத்த நொடி அபய் விட்ட அறையில் பொறி கலங்கி கீழே விழுந்தாள்..
அதோடு விடாமல்.. அபய் அவளின் காலை தன் ஷுக்காலால் மிதிக்க வலியில் அலறி விட்டாள்… உனக்கு என்ன தைரியம் இருந்தா இந்த அபயசிம்ஹா சக்சேனாவோட மனைவியப்பத்தி இப்படி பேசுவ… நான் அவளை இந்த உலகத்தை விட்டு அனுப்பனுமா இப்போ யார் இந்த உலகத்தை விட்டு போறாங்கன்னு பார்க்கலாமா என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவன்.. அவளின் முடியை பிடித்து இழுத்து சுவற்றில் தள்ளி… கழுத்தை நெறித்தான்… அவள் கால்கள் அந்தரத்தில் தொங்க.. விழிகள் கொஞ்ச கொஞ்சமாக சொருகத் தொடங்கியது.. அதைகண்டு சிறிதும் இரக்கம் கொள்ளாதவன்… கரத்தின் இருக்கத்தை கூட்டிக்கொண்டே சென்றான்… அவள் நரகத்தின் விளிம்பில் நின்றுக்கொண்டிருக்கும் பொழுது கரத்தை எடுக்க.. அவள் அப்படியே விழுந்தாள்.. கண்ணீர் பெருகி மை கலைந்து அவள் கண்ணமெல்லாம் பரவி.. சூனியக்காரி போல் தோற்றமளித்தாள்..
ஹேய் லுக்.. இங்க நடக்கிற விஷயம் வெளில போககூடாது… நான் கூப்பிடுற நேரம் வர.. நான் சொல்றமாதிரி இருக்குற.. கொடுக்கிற காச வாங்கிட்டு மூடிக்கிட்டு போற.. இதைவிட்டு வேற வேலைப்பார்த்த அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள்.. என சிங்கம் போல் உருமியவன்… கத்தை பணத்தை அவள் மேல் வீசி.. இங்க வரநேரம்.. அந்த ட்ரெஸ்சிங் ரூம்ல இருக்கணும்.. தப்பித்தவறி.. இங்க வந்த.. என அபய் சீரவும்.. தப்பித்தோம் பிழைத்தோம் என வேகநடையிட்டு அவன் காட்டிய அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.. சோனியா.
அன்றிலிருந்து அவள் அபயிடம் அடக்கி வாசித்தாலும்.. அவனை விடமனமின்றி சிற்பியிடம் தன் சகுனி வேலையைத் தொடங்க அங்கேயும் தோல்விதான்..
ஒவ்வொரு முறையும் வித விதமான அலங்காரத்தில் சோனியா வந்தாலும்.. அபயின் விழிகள் மென்புடவையில் எவ்வித ஒப்பனையுமின்றி இருக்கும் சிற்பிகாவைத்தான் சுற்றியது… அதைக்கண்டு சோனியாவின் முகம் செங்குரங்காக மாறும்…
ச்ச எப்படி அபய மறுபடியும் நம்மகிட்ட வரவைக்குறது.. என தீவிரமான யோசையில் இருந்தாள்…
நான் அந்த கிழவன்கூட போயே இருக்ககூடாது.. நான் மட்டும் போகாம இருந்திருந்தா அபய் கல்யாணத்தை எப்படியாவது கலைச்சு விட்ருக்கலாம்.. பத்துலட்சத்துக்கு ஆசைப்பட்டு அபய விட்டுட்டேனே.. கைகாரி என்ன பண்ணான்னு தெரில.. ஒருமாசத்துல அபய் அப்படியே மாறிட்டானே.. என ஒவ்வொரு நாளும் புலம்பிக் கொண்டிருந்தாள்..
அவளுக்கு அபயின் அந்தஸ்து மீதும்.. அவனின் கட்டுக்கடங்காத ஆண்மையின் மீதும்… ஒருவித ஆசை.. பணத்துக்கு பணமும் சுகத்திற்கு சுகமும் என எல்லாமே கொட்டிக்கிடக்கும் அவனை விட்டுக்கொடுப்பதா என பொறுமிக்கொண்டிருந்தாள்…
