அத்தியாயம் -17- PART-2
PART-2
“அதனால், என் பொண்டாட்டிக்கு நான் ஊட்டிவிடுறதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
நீ மறுப்பு சொல்லாமல் முதலில் சாப்பிடு” என ஊட்டி விட, மறுக்காமல் இந்த முறை வாங்கி கொண்டாள்.
Advertisement
“நீங்களும் சாப்பிடுங்க” என அவளும் அவனுக்கு ஊட்டி விட, இருவரின் அக்கறையிலும், அன்பிலும் காதலின் சுவை கூடி, உணவின் சுவை அதீதமாக தெரிந்தது.
Advertisement
இருவரும் சுற்றம் மறந்து தங்கள் உலகத்தினுள் மூழ்கி கிடக்க, அந்நேரம் சரியாக உறக்கம் வராமல் தவித்து கொண்டிருந்த நாச்சியார் அறையை விட்டு வெளி வந்தார்.
Advertisement
இருவரும் ஒருவருக்கு மற்றவர் ஊட்டி கொண்டிருப்பதை கண்டவர் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டார்.
Advertisement
‘என்ன கருமம் இது? நடு வீட்டில் இப்படி பண்ணிட்டு இருக்காங்க’ என எரிச்சலடைந்தவர், உள்ளே சென்று விட்டார்.
‘வர வர இந்த வீட்டில் என்னென்னமோ நடக்குது. என் பேரன் ஒழுங்கா தான் இருந்தான். என்ன சொக்குப்பொடி போட்டாளோ தெரியல. இப்படி அவகிட்ட மயங்கி கிடக்கிறான். என்கிட்ட கூட சொல்லாமல் தாலியை கட்டிட்டான். எவ்வளவு ஆசையா இருந்தேன். எல்லாம் போச்சு’ என தனக்கு தானே புலம்பி கொண்டு கடுகடுவென அமர்ந்திருந்தார்.
இங்கு இருவரும் உணவுண்ட பின்பு, எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு உறங்க செலவதற்காக வெண்பா மீனாட்சி அறைக்கு செல்ல, வெற்றியும் அவனறைக்கு செல்வதற்காக மாடிப்படி ஏறினான்.
இரண்டு படி தான் ஏறி இருப்பான். அப்பொழுது தான் அவனுக்கே நியாபகம் வந்தது. அவனுக்கு திருமணம் முடிந்து விட்டதே!
“தமிழ், எங்க போற? என அறைக்குள் நுழைய போனவளை நிறுத்த,
“தூங்க தான் மாமா” என பதிலளித்தாள் வெகுளியாக.
“அது எனக்கு தெரியாதா? அங்க எங்க போற? என மீண்டும் கேட்க,
அவளும், “தூங்க தான் மாமா” என்றாள் ஒன்றும் புரியாது.
“ஐயோ!” என தலையில் அடித்து கொண்டவன்,
“அடியேய், தூங்க போறேன் தெரியுது. அதுக்கு எதுக்கு மீனாட்சி ரூமுக்கு போற” என அவன் தெளிவாக கேட்க, அப்பொழுதும் அவளுக்கு புரியவில்லை.
“தூங்க தான் போறேன் மாமா” என்றாள் அழுது விடுவது போல.
வெற்றியோ அவளின் பதிலில் முறைத்து பார்க்க,
“இப்போ எதுக்கு முறைகிறீங்க? நீங்க என்ன கேட்க வரீங்கன்னே புரியல” என்ற வெண்பா தற்பொழுது அவனை முறைத்தாள்.
“மக்கு, மக்கு, இப்போ தானே சொன்னேன். நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனி நீயும் நானும் ஒன்னா தான் தூங்கனும். அது தெரியுமா? தெரியாதா உனக்கு?” என்றதும் குப்பென்று வியர்த்து விட்டது வெண்பாவிற்கு.
“மா..மா.., உங்க ரூமுக்கா? அத்தே, மீனாட்சி ரூமில் தான் தூங்க சொன்னாங்க. நா..ன் எப்படி உங்க ரூமில்?” என அவள் திக்கி திணற,
“உங்க அத்தைக்கு அறிவே இல்லை. கல்யாணம் ஆனா, புருஷனும் பொண்டாட்டியும் ஒரே ரூமில் தூங்க வைக்கணும் கூட அவங்களுக்கு தெரியாது. ஒழுங்கா மேலே ஏறி வா” என்றவன்
“மாமா.., மாமா” என அவளது அழைப்பை பொருட்படுத்தாது மேலே ஏறி சென்று விட்டான்.
வெண்பாவிற்கோ படப்படவென வந்தது. அவனறைக்கு செல்லவே அத்தனை பயமாக இருந்தது. போகலாம் என ஒரு மனம் கூறியது, வேண்டாம் என இன்னொரு மனம் அறிவுறுத்தியது. இரண்டுக்கும் அல்லாடியப்படியே அவள் நின்றிருக்க,
“தமிழ், வந்தியா” என வெற்றியின் குரலில் திடுக்கிட்டவள்,
“இதோ மாமா” என வேக வேகமாக படிகளில் ஏறி அவனறையின் வாசல் வரை சென்று விட்டாள். என்ன செய்ய, மனம் மறுத்தாலும் கால்கள் ஒத்துழைக்கவில்லையே!!
உள்ளே நுழைய அத்தனை பதட்டமாக இருந்தது. சேலை முந்தானையை சுற்றியப்படி நின்றிருந்தவளுக்கு உள்ளே நுழைய தயக்கமாக இருந்தது.
“எவ்வளவு நேரம் வெளியேவே நின்னுட்டு இருப்ப? உள்ளே வர ஐடியா இருக்கா? இல்ல வெத்தலை பாக்கு, பூ, பழம்னு எல்லாம் வச்சு கூப்பிட்டா தான் உள்ளே வருவியா” என உள்ளே இருந்து வெற்றி குரல் கேட்டதும் திடுகிட்டவள் மெல்ல அடியெடுத்து தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தாள்.
இவையனைத்தையும் மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்தார் நாச்சியார். இருந்த கோபத்தில் இந்த விஷயத்தை அவர் மறந்தே போய் இருந்தார். காலையில் நடந்த திருமணம் மட்டுமே, அவர் நினைவில் ஆடி கொண்டிருந்தது.
தற்பொழுது வெற்றி வெண்பாவிடம் கூறியதை கேட்டதும் தான் அவருக்கும் நியாபகம் வந்தது.
‘இந்த விசாலாட்சிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. கல்யாணம் தான் ஏதோ நேரத்தில் நடந்து போச்சு. இதுவாவது ஒழுங்கான நேரத்தில் நடக்க வேண்டாம்.
ரெண்டு பேரையும் அப்படியே விட்டுட்டு தூங்க போயிட்டா. எனக்கு வாய்ச்சத்தும் சரியில்லை. வந்ததும் சரியில்லை. இந்த வீட்டில் இன்னும் நான் என்னெல்லாம் பார்க்க வேண்டி வருமோ! ஈஸ்வரா” என புலம்பி கொண்டே அறைக்குள் சென்று விட்டார் நாச்சியார்.
இங்கு வெற்றியின் அறைக்கு மெல்ல அடியெடுத்து வைத்தவள், வெட்கத்துடன் நிமிர்ந்து பார்க்க, அங்கே வெற்றி இல்லை.
குரல் மட்டும் கேட்டது, ஆளை காணோமே! என வெண்பா அவனை தேட, வெற்றியோ, கதவிற்கு பின்புறம் அவளை பார்த்தப்படி நின்றிருந்தான்.
சத்தம் வராமல் கதவை சாற்றி தாழ் போட்டவன், அவளருகே மெல்ல அடியெடுத்து வந்து சட்டென்று பின்னால் இருந்து அவளை அணைத்து கொண்டான்.
அதில் அதிர்ந்தவள் “ஆ” என அலற,
“நான் தான் தமிழ், எதுக்கு இப்படி கத்துற” என அவளை அணைத்தப்படியே கேட்க,
“போங்க மாமா, நான் பயந்தே போயிட்டேன்” என அவன் பிடியில் இருந்து விலக முயற்சித்து கொண்டே கூற, எங்கே அவன் விட்டால் தானே! இன்னும் இன்னும் அவன் அணைப்பை கூட்டி கொண்டே தான் இருந்தான்.
“மாமா விடுங்க” என அவள் மறுப்புகள் எதுவும் அவனிடம் எடுபடவில்லை.
“ஹூகும்.., விட மாட்டேன். இந்த நாளுக்காக தானே இத்தனை வருஷமா காத்திட்டு இருந்தேன். அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேணா” என வெற்றி கூறியதும், வெட்கத்தில் தலைகுனிந்து கொண்டாள் வெண்பா.
மெதுவாக அவளை தன் புறம் திருப்பி, அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவளுக்கோ உள்ளுக்குள் வெடவெடுக்க, சட்டென்று அவன் மார்பிலே சாய்ந்து கொண்டாள். அவனும் அவளை இறுக அணைத்து கொண்டான்.
“மாமா,” என்றவளுக்கு
“ஹ்ம்ம்” என குரல் கொடுத்தான்.
“மாமா, இப்படியொரு நாள் என் வாழ்க்கையில் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. மனசில் உங்களை நினைச்சுட்டு இருந்தாலும், உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்னு ஒருநாளும் நினைச்சு கூட பார்த்ததில்லை”
“ஏன் அப்படி நினைச்ச? என் மனசில் எப்பவும் நீதானே இருக்க” என்றான் அத்தனை காதலாக.
“அவனை நிமிர்ந்து பார்த்தவள், நிஜமாவா? எப்போதிலிருந்து நீங்க என்னை நினைச்சுட்டு இருக்கீங்க? ஒருநாளும் நீங்க என்கிட்ட சொன்னதில்லையே!” என அவள் கேட்க,
அவள் நெற்றியில் லேசாக முட்டியவன்,
“இப்போ, இந்த நேரத்தில் இது ரொம்ப முக்கியமா” என்று செல்லமாக முறைத்தான்.
“நான் கேட்க கூடாதா? எனக்கும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கும்ல. போங்க. சொல்ல வேண்டாம்” என அவன் பிடியில் இருந்து விடுபட முயற்சிக்க,
“ரொம்ப பேசுற தமிழ் நீ. வாய் பேசுற வாயை அடைச்சா தான் சரிவரும் போல”
“என் வாய் என்ன ஓட்டையா,? சிமெண்ட் போட்டு அடைக்க” என அவள் பதிலுக்கு பேச,
“மக்கு, இதுக்கெல்லாம் வேற வழி இருக்கு” என்றவனை யோசனையுடன் பார்த்தவள்
“என்ன வழி?” என புரியாமல் கேட்டாள்.
“இதோ இப்படி தான்,” என இரு கைகளாலும் அவள் கன்னத்தை பற்றி சட்டென்று இதழோடு இதழ் பொருத்தினான்.
இருவருக்குமான முதல் முத்தம் சட்டென்று முடிந்து விடாமல், நிறுத்தி நிதானமாக நடந்து கொண்டிருந்தது.
காதலில் ஒன்றிய இதழொற்றல், அடுத்த அத்தியாயத்திற்கு திறவு கோலானது. காதல் ஒன்று, காமம் வேறொன்று என்பது எப்பொழுதும் இல்லையே!! இரண்டும் பல நேரங்களில் தனித்தனியாக இயங்கும் போது நன்றாக தான் இருக்கும். ஆனால் இரண்டும் ஒரே புள்ளியில் இணையும் பொழுது தான், அந்த உறவின் பிணைப்பை அழகியல் ஆக்கும்!!
அதேபோல தான் இருவரின் காதலும் காமமும் ஒன்றாக பயணித்தது.
கட்டுப்பாடுகள் அனைத்தும் கட்டவிழ்ந்து, கண் கோர்த்தலும், கை தீண்டலும், அழகாய் தொடங்கி, செல்ல சீண்டலும், வெட்கச் சிரிப்பும் கூடலுக்கு வித்திட்டது.
உரிமையில் இருவரும் அறிமுகமாகி, இன்பமான அவஸ்தை, இனிமையாய் அரங்கேறி, உயிர்கள் கலந்து, உணர்வுகள் உயிர்த்தெழுந்து காதலை காதலாக கொடுத்து காதலோடு வாழ்ந்தனர் அந்த காமத்தின் முடிவில்.
கவிதையை எப்படி
முற்று புள்ளியோ,
ஆச்சரிய புள்ளியோ
முடித்து வைக்கிறதோ!!
அதே போல
முடித்து வைக்க இட்ட
முத்தபுள்ளி தான்
இன்னொரு கோலமானது!!
கனவுகள் தொடரும்…
பின்குறிப்பை மறக்காம படிச்சுடுங்க
நான் ரெகுலரா UD தரத்தில்லைனு எல்லாரும் கோபமா இருப்பீங்க. பெரிய சாரி. என்னோட situation அப்படி இருக்கு. நான் new office join பண்ணிட்டேன். அங்கே எனக்கு போன் use பண்ண allowed இல்ல. அதனால் என்னால் அங்க எழுத முடியல.
before office னா நல்ல டிமிக்கி கொடுத்து எழுதிட்டு இருப்பேன். இப்போ முடியல.
அவ்வளவு தான் மேட்டர்.
weekly ஒரு ud தந்திருவேன். அது மட்டும் கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க.
அவ்வளவு தான் நன்றி.
