Skip to content
Post Views: 5,186
அந்தியூரான் – 24
தணிகாவிடம் பேசிவிட்டு கீழே இறங்கி வந்த மூவரது காதிலும் குமாரி, விசாலாட்சி இருவரும் கீச் குரலில் வாக்குவாதம் செய்வது தான் நன்றாக கேட்டது.
“மனசுல இருக்குறதுதான வெளில வரும் நீ விசா இல்லை ராட்சசி, அம்மா இல்ல போ” சிறு பிள்ளை போல் மூக்கை உறிஞ்சினாள் சின்னவள்.
Advertisement
“ஏய்! கொன்னுடுவேன் உன்னை பார்த்துக்கோ. எல்லா பக்கமும் என்னை உங்க அப்பன் நிக்க வச்சா என்ன தாண்டி செய்வேன்? அந்த கோபத்துல பேசுனதுடி”
Advertisement
“பொய் சொல்லாத நீ! எப்படி பேசுன? நான்தானே எல்லாத்துக்கும் காரணம்னு சொன்ன, தாய் இல்லை, பேய் விசா நீ!”
Advertisement
“யாருடி பேய்? நீ தான் குட்டி சாத்தான்” இருவரும் வழமை போல் வழக்கடித்து கொள்ள.அதனை சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தான் கந்தன்.அவர்களிடம் கண்ணை நிலைக்க விட்டு,
Advertisement
“மனசு நிறைஞ்சு கிடக்கு மாமா நான் கிளம்புறேன்” என்றவன் புன்னகை புரிய.
எங்கே மீண்டும் கந்தன் விசாலாட்சியை தவறாக எண்ணி விடுவாரோ என்று அவசரமாக மருமகனை பார்த்த சிவராமன்,அவங்க இரண்டு பேரும் அப்படிதான் மாப்பிள்ளை நீங்க எதுவும் யோசிச்சிடாதீங்க “
கந்தன் சிறு புன்னகையுடன்,”எனக்கு தான் தெரியுமே மாமா. நீங்க பயந்துக்க வேண்டாம் என்றவர் அமுதன் தோளை தட்டி கொடுத்து மனசு நிறைஞ்சு தான் கிளம்புறேன் தம்பி.
என் பொண்ணு சுகப்படல, அவளுக்கு மாப்பிள்ளையோட வாழ கொடுத்து வைக்கல.என் பொண்ணு வாழாத வாழ்க்கையை, என் பேத்தி வாழ்ந்துட்டு போகட்டும்.என்னைக் கொண்டு நீங்க சங்கடப்பட வேண்டாம் மாமா.சரி நான் நிம்மதியா, நம்பிக்கியா கிளம்புறேன் ராணி தனியா தவிச்சு நிக்கும்” மருமகன் பேச்சில் மகிழ்ந்த சிவராமன்.
“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை” என்றதும் மீண்டும் அமுதனை கட்டி கொண்டு விட்டு விடைபெற.அவரை அனுப்பி வைத்துவிட்டு அவசரமாக உள்ளே நுழைந்தார்கள் சிவராமனும்,அமுதனும்.
ஒரு நிலைக்கு மேல் இருவரது சத்தமும் சந்திக்கு வந்துவிட.மெத்தையில் இருந்த தணிகாசலம் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தான்.தண்ணீர் குழாய் சத்தம் என்பார்களே அதுவே இரு பெண்களிடம் தோற்று நின்றது.
“ஆளு இருக்குற அளவுக்கு சத்தத்தைப் பாரேன்” தனது மனைவியை செல்லமாகக் கடிந்து கொண்டே அவர்களை நெருங்கினான் அமுதன்.சிவகாமிக்கு சலித்து விட்டதோ இல்லை பழகி விட்டதோ,அவர் கூடத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை ஊன்றி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவரது எண்ணம் அடி, பிடி, கட்டி, உருண்டு நில்லு இறுதியில் பிழைத்தால் சரியென்று ஜென் நிலையில் இருந்தார், ஆனாலும் பார்த்தாலும் பார்த்தார் சிவகாமி அனுபத்தில் இப்படி ஒரு தாய் மகளைக் கண்டதே இல்லை போலும்.
“விசா!” தங்கையை அழைக்க அமுதனை திரும்பி பார்த்தவள்.
“அண்ணா வா! எப்படி பேசுறா பாரு?”
“அதுக்கு நீ கத்துவியா?”
“அது என்ன வந்த உடனே விசானு என்ன அமட்டி வைக்கிற”
“எம்மா நீ தானே பெரியவ” சட்டென இறங்கி அத்தனை மென்மையாக தங்கையிடம் பேசினான்.
“பார்த்தியா! பார்த்தியா! அவ பக்கம் பேச்சு போகுது.போச்சு எங்க அண்ணா அமுதன் இல்லை நீ” என்றதும் அமுதனுக்கு பின் நின்று இதழ் மடக்கி சிரிப்பை ஒழித்து நின்ற குமாரி நாக்கை நீட்டி வக்கலம் காட்ட.
“பாரு பழிப்பு காட்டுறா?” என்றதும் முதுகின் பின் நின்ற மனைவியின் கையை இழுத்து தனக்கு எதிரில் நிற்க வைத்த அமுதன்.
“சேட்டை நீயும் தான் சும்மான்னு இருக்கியா” இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே கூடத்திற்கு வந்து தந்தையுடன் அமர்ந்து கொண்டான் தணிகாசலம்.
“இரண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.இனி ஒருதரம் என்னைப் பேச வைக்கக் கூடாது.அப்படியே பேசி நிக்கிற சூழ்நிலை வந்துச்சுனா. யாரு பக்கமும் நான் நிற்க மாட்டேன்” இப்போது அமுதன் முகம் முற்றிலும் கடுமைக்கு மாறி இருந்தது.
விளையாட்டோ! வினையோ! தன்னைக் கொண்டு தங்கையும் சரி, மனைவியும் சரி இனி ஒரு முறை இது போல் நடுவில் நிறுத்தி, கைது செய்து தன்னைத் திணற செய்யக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தான் அமுதன். இந்த தெளிவை தொலைத்து நின்ற வினை தான் இப்போது தணிகாசலத்திற்கு.
முதலில் தங்கையிடம் திரும்பியவன்,”என்ன எண்ணி வச்சு நீ பேசிட்டு இருக்க விசா? முதல இந்த வீட்டுக்கு நீ வரத்துக்கு முன்னாடி என்கிட்ட என்ன பேசிட்டு வந்த? இப்போ அதைச் சொல்லு?” என்றதும் சுற்றி கணவன், மாமியார், மாமனார் என்று ஒரு பார்வை பார்த்தவள் கடைசியில் குமாரியிடம் பார்வையை நிலைக்க விட்டு.
“அவரோட நான் வாழ்ந்தாலும் சரி, இல்லனாலும் சரி எனக்குக் குமாரி மட்டும் போதும்.அதுக்காக நான் அங்க போயிதான் ஆகனும்” அன்று சொன்னதை அடி பிசகாமல் சொல்லி வைத்தவளை தணிகாசலம் வெறித்துப் பார்த்தான்.
“அதுக்கு நான் என்ன சொன்னேன்?”
“பேச நல்லா இருக்கும்.நடப்புக்கு சரிவருமா அதை பாரு? உனக்குன்னு தேவைகள் இருக்கு, ஆசை இருக்கு எதிர்காலத்தை பத்தின கனவு கண்டிப்பா இருக்கும் .மனச மனம் குரங்கு, எப்போ வேணா இந்த வாழ்க்கையில் சலிப்பு வரும். அப்போ அந்த பெண் குழந்தை ரொம்ப பாதிக்கப்படும் யோசிச்சு முடிவு சொல்லுன்னு சொன்ன.அதுக்கு நான் எல்லாம் யோசிச்சு தான் பேசுறேன் எது வந்தாலும் சமாளிப்பேன்னு சொன்னேன்”
“சொன்னால இப்போ என்ன ஆச்சு உனக்கு?”
“நானும் மனுசி தான் அண்ணே”
“புரியுது உன் இயலாமை, கோபம், வருத்தம் எல்லாம் காட்ட வேண்டிய இடம்.குமாரி இல்ல அதை தான் நான் சொல்ல வரேன்.இதை குமாரி என் பொண்டாட்டியா இல்லனாலும் நான் சொல்லிருப்பேன்,என்னை பத்தி தெரிஞ்சும் நீ எப்படி பேசுற? எப்படி உன்னை மீறி நான் அவளைக் கல்யாணம் பண்ணேன்னு யோசிக்கிறியா விசா?
“இல்ல இல்ல அண்ணா!” பேச்சு எங்கோ செல்ல பார்க்க கொஞ்சமாகப் பதறினாள் விசாலாட்சி
“நீ இப்போ நடந்துக்குறதை வச்சு பார்த்தா நான் அப்படி தானே யோசிக்க முடியும் விசா.முதல இவ கிட்ட பேச வரும் போது எனக்குக் கல்யாணத்தைப் பத்தின எண்ணம் சுத்தமா இல்லை.
அவளை பேசவிட்டு என்னத்துக்கு என்னைய கல்யாணம் பண்ண எண்ணி வச்சான்னு பார்த்தேன்.அவளுக்குத் தெரிஞ்ச வகையில அவ பிடித்தம் சொன்னா.அதாவது அவ முதல் நோக்கம் உன்னை விட்டு பிரிய கூடாது, அடுத்து நான் உன்னை பாத்துகிற மாதிரி அவளைப் பார்த்துப்பேன்னு ஒரு எண்ணம்.
அதாவது ஒரு பாதுகாப்பு எனக்கு இந்தக் காரணம் போதல,ஆனாலும் தாய் சூட்டை தேடுற குழந்தை போல அவ எண்ணத்தைச் சரியா சொல்ல முடியாம நெஞ்சுல வந்து முட்டுறவள விட முடியல விசா” என்றவனைக் கண்கள் கலங்க பார்த்து வைத்தது பெண்கள் குழு.
“ப்ச்! விடு இதுக்கு மேல உனக்கு நான் புரிய வைக்க வேண்டாம்னு நினைக்கிறேன் ஏன்னா நம்ப வளர்ந்த விதம் வேற, உனக்கும் எனக்கும் பேசி தான் புரிதல் வரணுமா என்ன?”
“எதோ ஒரு கோபம் நீ சொன்ன மாதிரி என் இயலாமையை நான் அவ கிட்ட காமிச்சுட்டேன் அண்ணா ” என்றவள் ஒரு பார்வை தான் பார்த்தால் மகளை.தாயின் ஒரு பார்வைக்கு ஓடி வந்து அவளை அனைத்து கொண்டாள் குமாரி.
அதுவரை மனைவி,மகள்,மருமகன் என்று மூவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த தணிகாசலம்.தாயும் மகளும் அனைத்து கொள்ளவும் சட்டென எழுந்து சென்று விட்டான்.செல்லும் மகனை சிவராமனும்,சிவகாமியும் சிறு கவலையுடன் பார்த்து கொண்டிருந்தனர்.
“சரி இரண்டு பேரும் அப்புறம் கொஞ்சம் குலாவிக்கோங்க என்றவன் தங்கையிடம் திரும்பி, “மாமாவை போயி பாரு விசா பேசிடு.. அவரோட குணத்தை இயல்பை மாத்த முடியாது, ஆனா உன் இடம் என்னங்கிறதை புரிய வை.
இதை கூட நான் சொல்லித்தான் அவருக்கு தெரியனுமான்னு மல்லுக்கு நீக்காத.அவர் வளர்ந்த விதத்துக்கு ஒரு இழப்பை ஜீரணம் பண்ணி வர முடியல, தெரியல. தடுமாறி நிக்கிறவங்களுக்குத் துணை செய்யலாம் தப்பில்லை.என்ன? நான் அவருக்குத் தோது கொடுத்து பேசுறேன்னு நினைக்காத. இத்தனை நாள் இத்தனை கிட்ட இருந்து நான் அவரைப் பேசி, பழகி வைக்கல.
இப்போ உறவு இன்னும் பலப்பட்டு நிக்கும் போது நான் அவரை நெருங்கி தானே ஆகனும். நல்லா புரிஞ்சுக்கோ விசா உன் சுயம் தொலைச்சு நிற்க சொல்ல மாட்டேன், ஆனா துணையா தோள் குடு.அவர் அலட்சியத்தை நீ கையில் எடுக்காத.
உனக்கான உரிமையைக் கேட்டு வாங்காம கொடி காட்டி செய்ய வை.அதுக்கும் நான் பண்ணி தான் தெரியணுமான்னு பேசாதா.சிலருக்கு புரியவே இல்லனா என்ன செய்யறது நம்ப தான் முடிவெடுக்கனும்” தங்கையை பற்றி நன்கு அறிந்தவனாக அவளது எண்ணத்தை புட்டு, புட்டு வைத்தான் அமுதன்.
“சரி அண்ணே!”
“தம்பிய என்கிட்ட கொடுத்துட்டு போ. அழுதா குமாரி தூக்கிட்டு வருவா” என்றவன் தங்கை மகனை அள்ளி கொண்டு. மாமனை தோளில் தாங்கி மருமகனை மார்பில் தாங்கி நின்றான்.
அதுவரை அவனது பேச்சை ஆச்சிரியமாக கேட்டு கொண்டு இருந்த சிவகாமி,”ஐயா! சாமி உன் குணம் தெரியாம இத்தினி நாள் வீனா போச்சே.தணிகா குணம் கெட்டவன் இல்ல சாமி. என் பேத்தி செல்வியை கொண்டு நெருடல் இரண்டும் அப்படி உசுரா இருந்துச்சுங்க”
“அத்தை எனக்கு எல்லாமே புரியுது? நீங்க சொல்லவே வேண்டாம் இனி அவங்களைப் பத்தின கவலைய விடுங்க”
“சரிய்யா” பேச்சை வளர்க்காமல் சிவகாமியும் அத்துடன் நிறுத்தி கொண்டார்.
“சிவா நாளைக்குக குலசாமி கோவிலுக்குப் போயிட்டு வருவோம். நம்ப பொண்ணுங்க, மாப்பிள்ளைங்க கிட்ட சொல்லி பிள்ளைகளையும் அழைச்சுட்டு வர சொல்லு நான் கோவிலுக்குப் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யச் சொல்றேன்” என்றவர் முகத்தில் தான் எத்தனை களிப்பு.
“சரிங்க” என்றவரும் மகளுக்குத் தகவல் கொடுக்க சென்று விட்டார்.
அனைவரும் சென்றதை உறுதி செய்து கொண்ட குமாரி.கணவனை நெருங்கி அவனது உயரத்துக்கு எம்பி அதுவும் போதவில்லை என்று அவனது கழுத்தை வளைக்க “ஏய் குழந்தைடி!” என்று அலறியவனைக் கண்டு கொள்ளாமல் தனது மூக்கை வைத்து அவளது கன்னம் உரசி பின்பு ஆழ்ந்து அழுத்தி அவனை ஒரு நொடி நுகர்ந்து நின்றாள் குமாரி.மனைவியின் செயலில் கொஞ்சம் தடுமாறி தான் போனான் அமுதன்.
“குமாரி!.”
“அமுதா வெல்லமா இனிக்கிறீங்க போங்க” என்றவள் சிறியதாக அவனை வதைத்து விட்டுச் செல்ல. கையில் குழந்தையுடன் கண் மூடி நின்று விட்டான் அமுதன்.
கல்யாண கனவுகளில் இது போல் தருணமெல்லாம் இந்த முதுமகன் கண்டதில்லை போலும்.இன்று நினைவில் காணவும் போதை ஏறி நின்றான்.
இங்கு அண்ணண் இத்தனை சொன்ன பாடமெல்லாம் ஆகாயத்தில் பறக்க விட்டுட்டு தணிகாவை அத்தனை கோபமாக முறைத்து நின்றாள் விசாலாட்சி.
“விசா!”
“பேசுனீங்க நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது”
“ப்ச்! கொஞ்சம் பேச விடேன்”
“மூணு நாளுக்கு முன்னாடியே பேசுறதையெல்லாம் பேசிட்டிங்களே இன்னும் என்ன பாக்கி சொல்லுங்க? அது என்ன சேர்ந்து இத்தனை நாள் வாழ்ந்தும் நம்பிக்கை இல்லாம இருக்குறது?
நீங்க என்னை வச்சுக்கிட்ட லட்சனத்துக்கு கூட எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.என்னைக்காவது நீங்க மாறுவீங்கன்னு” என்றவளை நேர் கொண்டு பார்க்கவே முடியவில்லை தணிகாவிற்கு.
சரி தானே நேர் கொண்டு பார்த்துப் பழக்கம் கொள்ளாது,அவளது தேவைகளைக் கூட அறியாது இருந்த வருடங்கள் பல இருந்த போதும், என் மீது கொண்ட நம்பிக்கையில் தானே அன்று மீண்டும் வந்து சேர்ந்தாள்?
இந்த நம்பிகையை நான் ஏன் அவள் மீது வைக்கவில்லை? இதற்குக் காரணம் பயங்கரமான சுயநலம் என்பது மட்டுந்தான்.தன் சுகம்,தன் துக்கம்,தன் இழப்பு,தன் வாழ்க்கை,தன் மகள் வாழ்க்கை என்று இருந்தது தான்.
நடு மண்டையில் நச்சென்று கொட்டி சொல்லியது மனசாட்சி.இப்போது என்ன பேச முடியும் அவனால்.அமைதியாகக் கையைக் கட்டி கொண்டு முதல் முறையாகத் தலையைச் சற்றுக் குனிந்தது போல் வைத்து கொண்டான்.அதிலே பேச்சை நிறுத்தி கொண்டாள் பேரிளம் பெண்.
“இப்போ என்ன? எதுக்கு இப்போ இப்படி இருக்கீங்க” என்றதும் வெடுக்கென நிமிர்ந்தவன்.
“என் இழப்பை கொண்டு உன்னை நான் இழுத்து விட்டது தான் நான் பண்ண தப்பு. நீ சொன்ன மாதிரி அவளை மறக்க முடியலன்னு நான் உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கக் கூடாது. உனக்கும் நம்ப பொண்ணுக்கும் நான் நியாயம் செய்யவே இல்லை” என்றவன் தனது இயலாமையைத் தாங்கி கொள்ள முடியாமல்.
எல்லாத்துலையும் நான் சரியாத்தாண்டி இருந்திருக்கேன்,ஆனா உங்க இரண்டு பேர் விஷியத்துல சறுக்கி, ரொம்ப அசிங்கமா தான் தோத்து போறேன்”
“ப்ச்! என்ன பேச்சு இது? உங்க பிரச்சனையே இது தான். என்னை எப்படிக் கேள்வி கேட்கலாம்? என்னை எப்படிச் சொல்லலாம்? இது தான் பெருசா தெரியுது. கேள்வி கேக்குறது யாரு? எதுக்குக் கேக்குறாங்க? ஏன் கேக்குறாங்க? அதை யோசிக்கிறதே இல்லை.
சொல்ல போன கேள்வி கேட்டு பழகுன ஆளுக்கு அடுத்தவங்க நிக்க வச்சுக் கேள்வி கேட்கவும் அதைத் தாங்க முடியல.இது தான் உண்மை இத்தனை வருஷ வாழ்க்கையில நான் உங்களை அணு அணுவாதான் அளந்து வச்சிருக்கேன்.
இப்பவும் உங்க மேல அப்படியொரு கோபம் வருது,ஆனா காட்டத்தான் முடியல.தயவு செஞ்சு இதுக்கு மேல இதுனால தான், அதுனால தான்னு நம்ப பேசி விளக்கம் வச்சு, சமாதானமாகி வாழ வேண்டாம்” என்றவளை கொஞ்சம் கலவரமாகப் பார்த்து வைத்தான் தணிகாசலம்.
“கொஞ்ச நாள் விடுங்க சரி ஆகிடும் அப்புறம் எங்க அண்ணனை கொண்டு இப்போ எந்தப் பயமும் இல்லையே” என்றதும் அதுவரை இருந்த மனநிலை மாறி அவன் முறைக்க.
“இல்ல பயம்னா? உங்க பொண்ணை வச்சு சொல்றேன்” என்றதும் அவளை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டே.
“இல்ல” என்க அவனது செய்கையில் இதழ் மடித்து நமுட்டு சிரிப்பு சிரித்து வைத்தவள்.அவனை விலகி செல்ல பார்க்க அதனை உணர்ந்தார் போல் அவளது கை பிடித்துத் தடுத்தவனை,
“என்ன?”
“கொஞ்சம் இரு”
“இன்னும் என்ன?”
“ப்ச்! எதுவும் பேச இல்லை, நீ இரு. எனக்கு ஒரு மாதிரி குழப்பமா? யோசைனையா? இல்ல பயமா? சொல்ல தெரியல, ஆனா எதோ மாதிரி இருக்கு என்றவன் என் தப்பு புரியுது விசா… ப்ச்! ஆனா?” ஒருமாதிரியாக தடுமாறி நின்றான் தணிகாசலம்.
“வேணாம் விடுங்க பேசிக்கலாம் இத்தனை வருசத்துல எத்தனையோ மாற்றங்கள் வந்துச்சுல அது போல வரும் பார்த்துக்கலாம்” என்றவள் அவன் அருகிலே அமர்ந்து கொண்டாள்.தனித்து பேச வந்தவள் தணிகாவிடம் நன்றாக கேள்விகளைக் கேட்க வேண்டும், சண்டை கட்ட வேண்டும் என்று எண்ணி வந்தவள்.
தணிகாவின் முகத்தைப் பார்த்தும், அவனது தடுமாற்றத்தை பார்த்து அனைத்தும் மறந்து வைத்தால் விசாலாட்சி. சில குடும்பங்களின் கட்டுகள் முறியாமல் இருக்க இது போல் பெண்களே சாட்சி.வலிகளைக் கூட வழி விட்டு அனுப்பி வைத்து விடும் சக்தி பெண்களுக்கு மட்டுந்தான்.
அதுவும் குழந்தைகளுக்காக,பெரியவர்களுக்காக,தாய்க்காக என்று எத்தனை பேருக்காகப் பார்த்து நிற்கும் அவளுக்கு.உற்றவன் அவளுக்கே அவளுக்காகப் பார்க்க தவறி நிற்பது தான் வேதனை தருகிறது.
error: Content is protected !!