Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அந்தியூரான் – 25 (இறுதி )

அந்தியூரான் – 25
அன்றைய பேச்சுக்கு பிறகு இரண்டு, மூன்று நாட்கள் அமுதனும், குமாரியும் அந்தியூரில் இருந்து விட்டு தான் சென்றனர்.அந்த மூன்று நாட்களும் எந்த வித கசுப்புகளும் அலச படவில்லை.இயல்பு போல் தான் இருந்தார்கள். அவர்களை அப்படி இருக்க வைத்தது சிவகாமி என்று தான் சொல்ல வேண்டும்.
சிறு மன சுணக்கமிருந்தாலும் அதனை வெளி காட்டி கொள்ளாமல் அவரவர் வழமையில் புகுந்து கொண்டனர்.இந்த சில மாதங்களில் தணிகாவிடம் பெரிய மாற்றம் என்று சொல்லி விட முடியாது, ஆனால் கொஞ்சமே கொஞ்சம் விசாலாட்சியைக் கொண்டு விழிப்புடன் இருந்தான் என்று சொல்லலாம்.


Advertisement

கண் பார்த்துத் தேவைகள் உண்டா என்று கேட்கும் அளவுக்கு இருந்தான்.சில நுணுக்கமான அபாய உணர்வுகளைக் கணவன், மனைவியாக ஒற்றை புள்ளியில் நின்று  தீண்டும் போது, சறுக்கல் கண்டு நிற்பவனைக் கொஞ்சம் போல் தாங்கி நின்றாள் விசாலாட்சி.

Advertisement

இதில் விசாலாட்சி அருமையான பெண் என்பதை விட மரகதம் நன்றாகப் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.எந்த சூழ்நிலையிலும் பிள்ளைகள் வாழும் படி அவர் எடுத்த வாழ்வியலே விசாலாட்சியை இத்தனை பக்குவமா காட்டி நிற்கிறது.

Advertisement

இதோ மூன்று மாதங்கள் சென்று குமாரிக்கு தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு நாளை நடக்கவிருக்க.இன்று அமுதனையும்,குமாரியையும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிவராமன் குடும்பத்தார்கள்.

Advertisement

“விசாலாட்சி ஏன் இன்னும் மாப்பிள்ளை வீட்டுல தம்பி வரல?” ‘உன் வீடு’ என்பதை தவிர்த்து நின்று இணக்கத்தை காட்டி நின்றாள் போலும் விசாலாட்சியின் நாத்தி.
“எனக்குத் தெரியல அத்தாச்சி அவர் கிட்ட தான் பேசிட்டு இருந்தாங்க”
“ஓ! தணிகாவ போயி கேட்டுட்டு வரியா .நாளைக்கு ஜீவா பையனுக்குப் பரிச்சை குமாரி வந்தான்னா இப்பவே பார்த்துட்டு பொழுதோட ஊருக்கு போயி பிள்ளைங்க சேருவங்க” என்றாள் வைரம்.
சிவராமன் பேரன், பேத்திகள் அல்லாமல் கொள்ளு பேரன், பேத்திகள் என்று மூன்று தலைமுறையும் நிறைந்து நின்றது அந்தியூரில்.அதில் வைரத்தின் கொள்ளு பேரனுக்கு முக்கிய பரிச்சை வந்துவிட, அவர்களால் நாளை விழாவில் நிற்க முடியாது.அதனால் தான் இன்றே குமாரியை பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாள் வைரம்.
“அப்படியா அத்தாச்சி இதோ நான் அவர்கிட்ட கேக்குறேன்” என்ற விசாலாட்சி தனது கணவனைத் தேடி அறைக்குள் செல்ல. அங்கே தனது மகனுடன் பேசி கொண்டிருந்தான் தணிகா.அவன் பேசும. அழகை பார்க்க விசாலாட்சிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு தான் வந்தது.
“டேய் குட்டி காளை இந்த தகப்பன் நிலையப் பார்த்தியா? ராஜா வீட்டுத் தோரணையில் இருந்த என்னை உன் மாமாங்காரன் அவனுக்கு  சலாம் போடா வச்சுட்டான்.திருவள்ளுவர் மாதிரி ரெண்டே வரி பேசி அத்தனை பொண்ணு களையும் சரி கட்டிட்டான்.சிவகாமி தொடங்கி உன் ஆத்தாகாரி,என் அக்காங்க,என் மக வரை.
என்னடா நியாயம் இது? என் பக்கம் அப்போ யாரு இருக்கா? சொல்லு! சொல்லு! சில்வண்டின் முகத்தைப் பார்த்து முட்டுவது போல் சொல்ல.அது தகப்பன் எதோ விளையாடுகிறான் என்று எண்ணி குலுங்கி குலுங்கி சிரித்தது .
“ஆஹான் அப்பாக்கு இந்த சின்னக் காளை இருக்கா? அப்படி சொல்லுடா என் தங்க மகனே” என்று பிள்ளையை அள்ளி கொண்டான்.அதுவரை அவன் பேசும் அழகை பார்த்து கொண்டிருந்தவள்.
“என்ன நியாயம் பேசி வச்சாலும்,உங்க மேல உள்ள தப்பை நீங்களே உணர்ந்து வச்சாலும். எங்க அண்ணனை குத்தம் சொல்றதை நிறுத்த போறதில்லை அதானே” என்றவாறே அறைக்குள் நுழைந்தாள் விசிடலாட்சி.
“அதான் சரியா வந்துட்டியே நான் என் ஆதங்கத்தை என் பையன் கிட்ட சொல்லி வச்சேன்”
“அப்பா ரொம்ப நியாயம் தான் சரி அவங்கெல்லாம் எப்போ வருவாங்க”
“இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்கும் போல”
“ஓ! சரி” என்று செல்ல போனவளை தடுத்தவன் ஒரு மாதிரியாக முழித்து கொண்டு,
“நான் சும்மாத்தாண்டி பேசி வச்சேன்” என்றதும் சும்மா? நீ? என்பது போல் இதழ் வளைத்து ஒரு சிரிப்புடன் பார்த்தவள் விலகி செல்ல.
பல்லை கடித்தான் தணிகாசலம், “எத்தனை நக்கல் பார்த்தியாடா உன் அம்மைக்கு என்றவன் என்னமோ போ எப்ப நான் பேச போனாலும் சரியா தான் அவகிட்ட மாட்டி வைக்கிறேன்.அது என்னமோடா உன் அம்மாக்காரி கொண்டு எனக்குச் சறுக்கல் தான்” என்றவன் மீண்டும் குழந்தையிடம் புலம்பத் தொடங்கி விட்டான்.
தற்போதைக்கு மகன் மட்டுமே தகப்பன் பக்கம் என்பது போல் இருந்தது அவனது பேச்சு.அவனுக்கு பேச தெரிந்தால் தணிகாவின் நிலை என்னவோ?
அங்கு மேலும் ஒரு மணி நேரம் சென்று தான் அமுதன்- குமாரி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.அதன் பின் கேட்கவும் வேண்டுமா என்ன? அடுத்த இரு தினங்களும் விழா கோலமாகத் தான் இருந்தது சிவராமன் வீடு.
சிவராமனும்,சிவகாமியும் இன்று வந்து காலன் அழைத்தாலும் நிறைவாகச் சென்று விடுவார்கள், அப்படி ஒரு களிப்பில் இருந்தார்கள்.சிலருக்கு வாழ்க்கை சொர்கம் தான் போலும்.நெறிக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்த தம்பதிகளாக நிறைந்து கிடந்தனர் இருவரும்.
ஒருவராக விழா முடிந்து அனைவரும் செல்ல இரண்டு மூன்று நாட்கள் பிடித்தது. நாளை ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில்.விசலாட்சி மற்றும் தணிகாசலத்தைப் பார்க்க அவர்களது அறைக்கு வந்தாள் குமாரி.சின்ன வாண்டு அப்போது தான் உறங்கியது போலும்.அவனைச் சரியாகப் படுக்க வைத்து கொண்டிருந்தவள் அறைக்கு முன் அரவம் கேட்டு திரும்ப அங்கே குமாரி நின்று இருந்தாள்.
“என்னடி? வா! ஏன் அங்கையே நிக்கிற” என்றதும் அப்போது தான் மகளைப் பார்த்தான் தணிகாசலம்.
அவளை கண்ட நொடி முகம் மலர “வா டா!” இரு கை நீட்டி தணிகாசலம் அழைக்க ஏனோ தகப்பனின் அந்த செயலில் அழுகை வரும் போல் இருந்தது அரிவைக்கு. ஓடி வந்து தந்தையின் நெஞ்சுக்குள் ஒடுங்கியது பெண்.
மகளை வாகாக நெஞ்சில் தாங்கி கொண்டு நன்றாக அமர்ந்து கொண்டவன் விசாலாட்சியைப் பார்க்க.வழமை போல் வம்பை தொடங்கினாள்.
“ப்பா! என்ன ஒரு பாசம்.மழை, புயல்னு அடிச்சு பெய்யுது போ”
“ஏய்! விசா? அப்பா பாருங்கப்பா”
“விடுடா அவளுக்குப் பொறாமை எத்தனை முறை அவ அண்ணன் கிட்ட செல்லம் கொஞ்சி என்னை வெறுப்பேத்தி வச்சிருப்பா இப்போ நம்ப செய்வோம்” கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது அண்ணனை இழுத்து வைக்கும் கணவனை முறைத்துக் கொண்டு நின்றாள் விசாலாட்சி.
மேலும் அவளை வெறுப்பேற்றி வைப்பது போல மகள் வேறு, “அப்படியாப்பா”
“அம்மாடா கோவிலுக்கு பார்க்க வருவாருல அப்போ பார்த்திருக்கேன்”
“அப்போ எங்களுக்கு தெரியாம ஒளிஞ்சு நின்னு பார்த்திருக்கீங்க அப்படித்தானே”
“அந்த அளவுக்கெல்லாம் நீங்க இல்லடி வேலைக்குப் போகும், போது வரும் போது எதிர்ச்சிய கண்ணுல படுறது தான்.
“சமளிக்காதீங்க” என்று கையை நீட்டி வந்தவளை இழுத்து தனது பக்கவாட்டில் போட்டு கொண்டவனை, “ப்பா! வலிக்குது” தந்தையின் இந்தச் செயலில் கலக் கலவென சிரித்தாள் குமாரி.
“என்னடி சிரிப்பு?” என்ற விசாலாட்சி எட்டி அவள் கன்னத்தைக் கிள்ளி வைக்க.தனது கன்னத்தோடு அவளது கைகளை வைத்து அழுத்தி கொண்டாள் குமாரி.
“அம்மா!” என்றதும் வழமை போல் உருகிய விசாலாட்சி.
அதுவரை இருந்த விளையாட்டு குணம் மறைந்து “சொல்லுடா குட்டி?”
“என்னைப் பார்த்துக்கிட்டது போல, இப்போ தம்பிய பார்த்துகிறது போல, அப்புறம் அப்பாவை பார்த்துகிறது போல என் பாப்பாவையும் பார்த்துப்பியா?” அவள் சொல்வதைக் கிரகிக்கச் சில நொடிகள் பிடித்தது இருவருக்கும்.செய்தி விளங்க சட்டென ஒரு தடுமாற்றம்.
மகளை வளைந்திருந்த கைகளை இன்னும் இறுக்கி உச்சி முகர்ந்தான் தணிகாசலம்.அவனது அதிகப் பட்ச உணர்வுகளை கொட்டுவது இது போல் சிறு, சிறு செயலில் தான்.
விசாலாட்சி,”ஐ! பட்டு உண்மையாடி நான் அத்தை ஆகப் போறேன்னா?”
“அது என்ன அத்தை? அசைய பாரு நீ அம்மாச்சி ஆகப் போற விசா பாட்டி” என்றவளை பார்த்துப் பழிப்பு காட்டியவள் தணிகாவை தாண்டி குமாரியின் கன்னம் பற்றி முத்தம் வைத்தாள்.
“அப்பத்தா, தாத்தா கிட்ட சொன்னியா?”
“இல்ல விசா விடியட்டும் சொல்லிக்கலாம்”
தணிகாசலத்திற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, ஆனால் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தோன்றியது “பாப்பா பத்திரமா இருக்கனும் இங்க இருந்துடேன்” கொஞ்சம் தாவிப்பாகி சொல்ல.
“ப்பா! நான் அங்கிருந்தா தான் மாமாக்கு சரி வரும் அதுவும் மரகதம் அம்மாச்சிக்கு இப்போ நடக்கவே முடியலப்பா.அங்க எனக்கு வேலையே இல்லை இங்க இருக்குறது போலத் தான் இருப்பேன்.நீங்க எதுவும் யோசிக்காதீங்க” தந்தையின் தவிப்பை நன்கு உணர்ந்தவளாக அவனுக்கு ஆறுதல் சொன்னால்.
“உனக்கு என்னடா வேணும்” என்றதும் ஒரு நொடி மௌனம் கொண்டு அவன் முகம் பார்த்தவள்.
“எனக்கு எல்லாமே தான் கொடுத்து இருக்கீங்களே இப்போ என் தேவை. நீங்க இந்தப் பக்கம், விசா இந்தப் பக்கம் இன்னைக்கு நான் உன்கூடத் தான் தூங்க போறேன் அது போதும் எனக்கு” என்றதும் கலக்கமாக மகளைப் பார்த்த தணிகாசலம்.
“நான் உன்னை நல்லா பார்த்திருக்கலாம் இல்லடா ரொம்ப காலத்தை விட்டுட்டேன் தானே. நான் நல்ல அப்பாவே இல்லடா ” முதல் முறையாக மகளிடம் இதனை பற்றிப் பேசுகிறான் தணிகாசலம்.
“ப்பா! அதெல்லாம் இல்ல” என்றும் இல்லாத குரலில் கலங்கி நின்று தந்தை பேசவும் பதறி விட்டாள் குமாரி.
இருவரையும் இயலபுக்கு கொண்டு வரும் பொருட்டு “எப்பா தணிகாசலம் பிள்ளையை பயம் காட்டி வைக்காத” என்றவளை எட்டி பிடித்து விசாவின் கன்னம் கிள்ளி,
“அப்பாவ அப்படிச் சொல்லாத விசா”
“அது என்னடி உங்க அப்பாவை எதாவது சொன்ன மட்டும் உனக்கு அப்படி வருது”
“ஆமா அப்படி தான் என்றவள் தணிகாவை மீண்டும் கட்டி கொள்ள. இப்போது இரு பெண்களும் அறியா வண்ணம் ஒற்றைக் கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் வழிந்தது.அதன் பின் இரு பெண்களும் அப்படி ஒரு பேச்சு.
நடுவில் படுத்து கொண்டு ஒரு புறம் மனைவி, மறுபுறம் மகள் என்று அவர்கள் பேசும் அழகை பார்த்துக் கொண்டே இருந்தான் தணிகாசலம். எப்போதும் அவனுக்கு அதிகப் பேச்சுக்கள் ஆகாது என்பதால் ரசிப்பதோடு நிறுத்தி கொண்டான் போலும்.
‘வாயே வலிக்குது என்னை விடு’ என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு பேச அத்தனை சங்கதிகள் இருந்தது . ஒருவழியாக இரு பெண்களும் பேசிப்படிய உறங்க.இடது புறம் திரும்பி மகளைச் சரியாகப் படுக்க வைத்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு.
வலது புறம் திரும்பி மனைவியும் சரியாய் படுக்க வைத்தவன்.ஓர், இரு நிமிடங்கள் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.அங்கோ வேர் கொண்டவள் தன்னுள் வேர் ஊன்றி நிற்கும் விந்தையை எண்ணி, எண்ணி வியந்தவன் அவளது கழுத்தில் ஆழந்து புதைந்தவரே உறங்கி போனான்.
வாய் திறந்து அன்பை உணர்த்த முடியவில்லை என்றாலும் அவனளவில் உணர்த்த முயன்றான் தணிகாசலம்.பல விதமான குணம் கொண்ட மனிதர்களில் தணிகாசலமும் ஒருவன்.அவனது வாழ்வு பயணமும் ஒன்று அவ்வளவே.
அங்கே மெத்தையில் சிவராமனும்,அமுதனும் படுக்கையை விரித்துப் படுக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர்.கை வேலை செய்தாலும் முகத்தில் சிரிப்பை அடக்கி கொண்டு போர்வையை விரித்து கொண்டிருந்தார் சிவராமன்.
சில நொடிகள் கண்டும் காணாமல் இருந்த அமுதன்.விரித்த படுக்கையில் வாகாக அமர்ந்து கொண்டு, “என்ன மாமா? எதையோ எண்ணி, எண்ணி சிரிக்கிறீங்க” என்றதும் இப்போது கலக் கலவெனச் சிரித்தார் சிவராமன்.
அவர் சிரித்த அழகில் அவனுக்கு ஏன்? என்னவென்று ? தெரியவில்லை என்றாலும் அவனுக்கும் சிரிப்பு வந்தது,”என்ன மாமா?”
“உங்களை என் பேத்தி வம்பு செஞ்சதை கேட்டேன் அமுதா” என்றதும் இப்போது அவனுக்கும் பல் தெரிய சிரிப்பு.தனது தந்தையுடன் படுக்கச் செல்வதாகச் சொல்ல. அதற்கு அமுதன் சிறிதாகக் கேலி செய்து விட்டான்.
அது என்னவோ மனைவிகளின் பிறந்தகம் கேலி பேசவில்லை என்றால் கணவன்மார்களுக்குப் பொழுதே போவதில்லை.அதே போல் தான் அவர்களுக்கும் பல விசியங்களை விட்டு கொடுக்கும் பெண்களுக்கு பிறந்தகம் பேசி நின்றால் அத்தனையாகத் தான் பொங்கி கொண்டு வருகிறது.
அப்படி ஒரு பேச்சு பேசி விட்டாள் குமாரி.கல்யாணம் தொடங்கி அவன் விசாலாட்சிக்காக நின்றது வரை குதித்துக் குதித்துச் சண்டை கட்ட அவளைச் சமாளிக்கும் வழி தெரியாமல் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி அவளிடம் சரணடைந்து விட்டான்.அதனை எண்ணி தான் சிவராமனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
” என் பேத்தி வீட்டுல எப்படி அமுதன்?”
“அவளை வரை அவ ரொம்பச் சரி மாமா பொறுப்பா இருப்பா”
“ஹ்ம்ம்! என்னதான் நாங்க எல்லாரும் இருந்தாலும் வசதி இருந்தாலும். ஒரு கட்டத்துல அவளுக்கு அவளனே எல்லாம் செய்யத் தொடங்கிட்டா” இன்னும் பேத்தியை மகனும், தாங்களும் கொண்டாடி இருக்கலாம் என்ற வருத்தம் அவருக்கு.
“குமாரின்னு இல்ல மாமா, விசாவும் அப்படிதான் பொண்ணுங்களுக்குக் கடவுள் கொடுத்த வலிமை இது.குமாரி இடத்தில நானோ, இல்ல விசா இடத்துல நான் இருந்தாலோ இப்படி இருந்திருக்க மாட்டேன்”
“அது என்னமோ உண்மை தான். அதுங்க இறங்கி கொடுத்து வழி விடலான என்னைத் தொடங்கி நீங்க வரை பொழைச்சு வர முடியாது, தணிகாவும் இதை உணரணும் “
“அவரவர் வளர்ந்த விதம் சூழ்நிலைன்னு ஒன்னு இருக்குல்ல மாமா. அதான் என் மாமனாருக்கு சில இடங்களில் ஒட்ட முடியல. விசாவோட அண்ணனா அவர்கிட்ட நெறைய குறையக் கண்டிருக்கேன்.
நாள் போக, போகத் தான் அவர் குணம் கொஞ்சமா பிடிபட்டது என்றவன் குறும்பு சிரிப்பை உதிர்த்து, இப்போ பெண் கொடுத்த மாமனார் கண் கண்ட தெய்வமா தெரியிறார்” என்றதும் வெடித்துச் சிரித்தவர்
“நீ பொழைச்சுக்குவ படவா” தோளில் செல்லமாகத் தட்டி பேத்தியின் கணவனைப் பெரும் அன்போடு அனைத்துக் கொண்டார் சிவராமன் இங்கு எதுவும் மாறவில்லை, யார் குணமும் மாற்றப் படவில்லை, அது சாத்தியமுமில்லை சில உறவுகள் ஆழ்ந்து நுகர்ப்பட்டு உணர்ந்திருக்கிறது.
மீண்டும் இவர்களைச் சில ஆண்டுகள் கண்டு பார்க்கலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!