Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அந்தியூரான் – 5

அந்தியூரான் – 5
முத்துவின் வீட்டில் இருந்து வந்த உடனே சிவகாமி செய்த முதல் வேலை.தனது வீட்டில் பணிபுரியும் பெரிய கருப்பன் என்பவனை அழைத்து  தனது பெரிய மகள் வீட்டுக்கு அனுப்பிக் குடும்பத்தோடு கூட்டி வர சொன்னது தான்.அதே போல் இன்னொரு வேலையாளை அனுப்பித் தனது மகனையும் கையோடு அழைத்து வர சொன்னது தான்.
மனம் பொறுக்க முடியவில்லை சிவகாமிக்கு.வெளியில் இந்த விடயம் தெரிந்தால் அத்தனை பேச்சுக்கள் கிளம்பும் அதுவும் போக ஒரு பெண்ணாக விசாலாட்சிக்கு நியாயம் செய்து ஆக வேண்டிய நிலை.
அத்தி பூத்தார் போல் ஒரு மகனை பெற்று. அவனது வாழ்க்கை காணலாகப் போகப் பெரும் தவிப்பாக இருந்தது அவளுக்கு.இதற்கெல்லாம் முதல் காரணம் தனது மகன் பிறகு தான் மகள்கள்.இன்று ஒரு முடிவு கொள்ள வேண்டும் என்று தான் அழைத்து விட்டார்.அத்தனை மகள்களையும் அழைத்துப் பேசும் அளவுக்குத் தற்போது நேரமில்லை என்பதால் மூத்தவள் ராணியை மட்டும் அழைத்து வரசொல்லிவிட்டாள்.


Advertisement

அடுத்து சில மணி நேரங்களில் சிவராமன்,குமாரி,ராணி அவளது கணவன் கந்தன் ,மகன் என்று மூவரும் வந்திருக்க.அவர்கள் வந்து சில நொடிகளில் உள்ளே நுழைந்தான் தணிகாசலம்.
“வாக்கா!. வாங்க மாமா! வாடா! ” ராணி கந்தனையும், அவனது மகனையும் அழைத்தவன் அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டே.
என்ன மாமா விஷயம் கூப்பிட்டு அனுப்பிருக்கீங்க?” கந்தனை நேர் கொண்டு பார்த்துக் கேட்க புருவம் சுருக்கி அவனது பேச்சை கேட்டவர்.

Advertisement

“நீங்க தானே மாப்பிள்ளை பேசணும் சொல்லி ஆள் அனுப்பி விட்டீங்க. நாங்களும் என்னவோ ஏதோன்னு போட்டது போட்ட படி வந்தோம்” கந்தன் சொன்னதும் யோசனையாக தனது தாய், தந்தையை பார்த்தான் தணிகாசலம்.

Advertisement

மகனது பார்வை உணர்ந்து, “நான் தான் வர சொன்னேன்” என்றவாறு சிவகாமி சொல்ல.சிவராமன் பேத்தியை மடியேந்தி கொண்டு அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தார்.
“என்ன அத்தை? என்ன ஆச்சு? எதுக்கு வர சொன்னீங்க?”
“தணிகாசலத்துக்குக் கல்யாணம் பண்ணும் போது நான் உங்க கிட்ட என்ன பேசி கல்யாணம் பண்ணுனேன் மாப்பிள்ளை” என்றதும் அவர் எதற்கு அழைத்தார் என்பது பிடிபட அமைதியாகி விட்டார் கந்தன்.

Advertisement

மனைவி மூலம் அவர் அறிந்த விடயம் அவருக்குப் பெரும் நெருடலை கொடுக்கப் பேத்தியை தங்களுடன் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கொண்டிருந்தார்.அதற்குள் விசாலாட்சி பிறந்தகம் சென்று விட்டாள் என்று அவருக்கு செய்தி வர அமைதியாகி விட்டார்.
இப்போது பேச்சு என்று வந்துவிடப் பேசி விட வேண்டியது தான் என்று எண்ணியவர், “அதை நான் பேசுறதை எண்ணி சங்கட பட்டு போகாதீங்க.எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேர உடைச்சு பேசிடுறது நல்லது.என் பொண்ணு வாழ்ந்த இடத்துல எங்களுக்கு இன்னொரு பொண்ணைப் பார்க்க வலியா தான் இருக்கு.
இருந்தும் மாப்பிள்ளையை எண்ணி தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம்,ஆனா இங்க எதுவும் சரி இல்லை போலையே.
வழக்கத்துல உள்ளது போல மூத்தாரு பொண்ணை ரெண்டாந்தாரம் சரியா நடத்துலன்னு எங்களுக்கு தோணுது.இந்த இடத்துல நான் என்ன பேசுறது அத்தை? செய்தி கேள்வி பட்டு பிள்ளையை எங்களோட வச்சுக்கத் தான் எண்ணிருந்தோம். அதுக்குள்ள அந்தப் பொண்ணை மாப்பிள்ளை அனுப்பிட்டாதா கேள்வி பட்டேன்.அதான் நாங்க எதுவும் பேசல”
“இங்க யாரு உங்க பேத்தியை பார்க்கலன்னு சொன்னா? குமாரி உங்களுக்கு மக வயித்துப் பேத்தி மட்டுந்தான்,ஆனா எங்களுக்கு எங்க ஒரே மகனோடு மக,மகளோட பேத்தி,என் மக வழி பேத்தியோட பொண்ணு. உங்களை விட எங்களுக்கு தான் உறவு  பலம் கூடி நிக்குது.
அப்போ நாங்க எப்படி எங்க பிள்ளையைப் பார்த்துப்போம்.பிள்ளையை அப்படி விட்டுருவோமா என்ன?”சிவகாமி கொஞ்சம் குரலை கூட்டி பேச தணிகாசலம் தாயை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“ம்மா! நான் குமாரி சொன்னதை வச்சு மட்டும் தம்பிக்கு கிட்ட பேசல. நானே என் கண்ணால பார்த்தேன் குமாரி க்கிட்ட  அந்தப் பொண்ணு அப்படி மல்லுக்கட்டுது” ராணி கோபமாகச் சொல்ல. கடுப்பாக மகளைப் பார்த்த சிவகாமி.
“தினமும் அதுங்க பக்கத்துல இருந்து பார்க்குற எங்களை விட உனக்கு ரொம்ப தெரியுமோ? உனக்கு இதெல்லாம் சொல்லி புரியாது. அந்த பொண்ணை கூப்பிட்டு குமாரியையும் வச்சுக்கிட்டு பேசுவோம் அப்போ அதுங்க பிணைப்பை நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ” என்றவள்
“குமாரி!..” என்றழைக்க குமாரி அழுது வீங்கிய முகத்துடன் வந்து நின்றாள். பேத்தியை அழைத்து நடுவில் நிறுத்தி.
“உன் பேத்தி பள்ளி கூடத்துக்குப் போயி இருபது நாள் ஆகுது. ஏன்? எதுக்குன்னு கேளு?” என்றுவிடத் திருத் திருவென முழித்து வைத்தாள் குமாரி.தணிகலசத்திற்கும் இது புதுச் செய்தி அவனும் தொழில் என்று ஈரோட்டில் இருந்து விட மகளை பத்தி சிறு விசிறப்புகள் மட்டுமே இருக்கும்.
மகள் தாய், தந்தை பொறுப்பில் இருப்பாள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற தைரியத்தில் இருந்தான்,ஆனால் மகள் இப்போது பள்ளி கூடம் செல்லாமல் இருப்பது தெரியவர தனது பொறுப்பை எண்ணி தன்னையே நொந்து கொண்டு நெற்றியை நீவி கொண்டான்.
“குமாரி ஏன் ஸ்கூல் போகல? உடம்பு எதுவும் முடியலையா?” தணிகாசலம் கையை நீட்டி மகளை அழைத்தவாறு கேட்க.தயங்கி, தயங்கி நடந்து சென்றவள் தணிகாசலத்தின் அருகில் அமர்ந்து கொண்டு, அவன் முகம் பார்த்தாள்.
வெகு வருடங்கள் சென்று மிக அருகில் மகளின் முகம் காண. செல்வியின் நினைவு வந்து சுருக்கெனத் தைத்தது.முதல் காதல், அன்பு என்றும் அழியா சித்திரம் அல்லவா.
“என்னடா ஏன் போகல அப்பாகிட்டா சொல்லு?” தகப்பன் கொஞ்சம், கொஞ்சி கேட்க அதில் அழுகை வந்தது குமாரிக்கு.
“விசா அம்மா வேணும்” மெல்லமாக முனக விசும்பி கொண்டே சொன்னதால் அவனது காதுக்கு எட்டாமல் போகக் கொஞ்சம் மகள் அருகில் சரிந்து.
“என்ன? புரியல?”
“விசா அம்மா வேணும்ப்பா” என்றுவிட தணிகாசலம், ராணி, கந்தன் அவர்களது மகன் சூர்யா என்று அனைவரும் அதிர்ந்து நின்றனர் குமாரிக்கு தந்தையின் அமைதி பயத்தைக் குடுக்க.
“ப்பா! விசா ம்மா! பார்க்கணும் போல இருக்கு .அவங்க வந்தா தான் நான் ஸ்கூல் போவேன்”
“ஏய்! அன்னைக்கு என்கிட்ட என்ன சொன்ன?” சிறு அதட்டலாக ராணி கேட்க.
“என்ன அம்மம்மா? “என்றது பதுமை.
“விசாலாட்சி வம்பு பண்ணுறா சண்டை போடறான்னு சொன்ன தானே”
“ஆமா அது அப்படி தான் சண்டை போட்டா உடனே சேர்ந்துடுவோம்” என்றவளது பேச்சில் ராணி அதிர்ந்து கந்தனை பார்க்க. அவனோ குழப்பமாகத் தனது பேத்தியை பார்த்துக் கொண்டு இருந்தான்.
“போதுமா” இப்போது கோபமாகத் தொடங்கினார் சிவகாமி. என்ன? ஏதுன்னு? கேட்காம. நீ போயி உன் தம்பிக்காரன் கிட்ட பேச.அவன் உடனே போயி அந்தப் பொண்ணு அண்ணன் காரன் கிட்ட பேச.அந்த பையன் சோத்துல உப்பு தானே போட்டு தின்பான்.
தங்கச்சியைக் கூட்டிட்டு போன்னு சொன்ன மறுநொடி வந்து அவளை இழுத்துட்டு போயிட்டான்.இந்த வீட்டு பொம்பளைங்க என்ன? ஏதுன்னு? விசாரிக்கலை ஆம்பளைங்களையும் கண்டுகல.
பொண்ணைப் பெத்தவங்க சும்மா இருப்பாங்களா என்ன? வீட்டுக்கு பெரியவரா ஒரு மாசம் கழிச்சு சமரசம் பண்ண போனாரு உங்க அப்பா.அதுக்குள்ள அவங்க குடும்பத்தோட சொல்லாம கொள்ளாம எங்கையோ போயிட்டாங்க” இருக்கும் கடுப்பில் அனைத்தும் கொட்டி வைக்க சிவகாமி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.
“என்ன சொல்லுறீங்க அத்தை?”
“ஆமாங்க மாப்பிள்ளை முத்து அண்ணே கிட்ட கூட சொல்லாம அந்தப் பையன் குடும்பத்தோட எங்கையோ வேலை தேடி போயிட்டான் போல. நம்ப வீட்டுலையும் பொண்ணுங்க இருக்குங்க மாப்பிள்ளை.பொண்ணு பிள்ளை பாவம் சும்மா விடுமா சொல்லுங்க?”
“ம்மா! முத்து என்ன சொன்னார்?” மகன் கேட்க அவனை முறைத்தவர்.
“ஏன் அதை தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க?”
“ப்ச் ம்மா! சொல்லுங்க”
“உன் அலட்சியம் எங்களுக்குப் பழக்கம் தான் தணிகா, ஆனா அடுத்தவங்களுக்கு அதைப் பழகிக்க முடியாது அதுக்கு அவங்களுக்கு அவசியமும் இல்லை”
“ம்மா?”
“தணிகா நீ சொல்லி நான் கேட்டது போதும் இனி நான் சொல்றதை கேளு. நீ முத்து கிட்ட பேசிட்டு அமுதனை பத்தி விசாரி ஒரு வாரதுக்குள்ள அவங்களை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தனும்” சிறு கண்டிப்புடன் சிவராமன் சொல்ல
“சரிப்பா”
“இங்க பாருங்க அதுக்கு முதல இவனுக்கு அந்தப் புள்ள வேணுமா? வேண்டாமா? அதைச் சொல்ல சொல்லுங்க.சின்ன வயசு வாழ வேண்டிய பிள்ளை ஒரு முடிவு சொன்னா அதைப் பொழச்சுக்கும்” என்ற தாயை இப்போது ஆழ்ந்து பார்த்தவன்.
“ப்பா! நான் முடிவு பண்ண பிறகு யோசிக்கிறது இல்லை”
“அப்படின்னா?” மகனை ஆழம் பார்க்க வேண்டி சிவகாமி கேட்க.
“அவளை விடுறாத இல்லை, அதுக்கு நான் கல்யாணம் பண்ணவும் இல்லை” அத்தனை உறுதியாக மகன் சொன்னதும் சிறு நிம்மதி பிறக்க. அதனை வெளியில் காட்டி கொள்ளாத வாறு முகத்தைக் கோபமாக வைத்து கொண்டாள் சிவகாமி.
அதுவரை அமைதியாக இருந்த கந்தன் எழுந்து கொண்டு,”மாப்பிள்ளை!” என்றதும் தணிகாலசமும் எழுந்து கொண்டான்.கந்தன் தனித்து பேச எண்ணுவது புரிந்து வெளியில் சென்று விட.ராணி அமைதியாகத் தனது பேத்தியை பார்த்துக் கொண்டு இருந்தார்.பெரும் குழப்பமும் எரிச்சலுமாக இருந்தது அவருக்கு.
மகளை மனம் அதிகம் தேடியது. அவள் மட்டும் இருந்திருந்தால் இந்த அத்தியாயத்துக்கு வேலையே இல்லை அல்லவா.
வெளியில் வந்த கந்தன், “நானும் கொஞ்சம் அவசர பட்டுட்டேன்னு தோணுது.ராணி வந்து சொன்னதும் நான் என்ன? ஏதுன்னு? அந்தப் பொண்ணை கேட்டு நேருல வச்சு பேசிருக்கனும்” என்றவர் இந்த இடத்தில் நிறுத்தி யோசனையாகத் தணிகாசலத்தைப் பார்த்து.
“அந்தப் பொண்னு குணம் எப்படி?”
“தெரியல மாமா அந்த அளவு பழகல” பட்டெனச் சொன்னவனை அதிர்ந்து பார்த்த கந்தன்.
“என்ன இப்படி சொல்றீங்க?”
“நான் இங்க இருக்குறதே இல்லை மாமா மாசத்துக்கு இரண்டு நாள் தான் வருவேன்”
” சரி அப்போ பேசுனது இல்லையா?”
“நான் அவ கூட அத்தனை தூரம் பேசணுது இல்லை. தேவைக்கு வேண்டி கேட்டா செய்வேன் அதுவும் குமாரி கிட்ட தான் பேச்சு தொடங்கும்” என்றவனைச் சிறு கோபமாகப் பார்த்தவர்.
“அப்போ என் பேத்தியையும் பார்க்கிறதில்ல”
“அம்மா! அப்பா! இருக்காங்க நான் வந்தாலும் அவ கூடத் தான் இருப்பா தினமும் போன் பேசுவா”
“இது போதுமா அவளுக்கு? உங்ககிட்ட இதை நான் எதிர்பார்கல மாப்பிள்ளை” அதிருப்பிதியாகச் சொன்னவரை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன்.
“எதுலையும் ஒரு பிடிப்பு இல்லை மாமா எனக்கு. நானும் முயற்சி செஞ்சிகிட்டு தான் இருக்கேன். ஒரு இரண்டு நாள் கூட தாக்கு பிடிக்க முடியல”
“என் மகளை எண்ணி நீங்க மருகி நிக்கிறது எனக்குச் சந்தோஷம் தான், ஆனா அதுக்கு வேண்டி பொறுப்பைத் தட்டி கழிக்கிறது அத்தனை அழகில்லை பார்த்துக்கோங்க. இதுக்கு மேல நான் பேசுறது சரிவராது மாப்பிள்ளை அத்தை சொன்னது போல பெண் பிள்ளை பாவம் ஆகாது” என்றவர் நாசுக்காக அவனது தப்பை சுட்டிக்காட்டி விட்டு செல்ல சில நொடிகள் அப்படியே நின்று விட்டான்.
அதன் பிறகு ராணி குடும்பம் கிளம்பி செல்ல.சிவராமனும், சிவகாமியும் ஓய்வுக்காகத் தங்களது அறைக்குள் புகுந்து கொள்ள.குமாரியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் தணிகாசலம்.
மகளிடம் சில விஷயங்களைப் பேசி தெரிந்த கொள்ள வேண்டி இருந்தது போலும்.
அங்கே அறைக்குள் தனது பக்கத்தில் மகளை அமர வைத்தவன்,”குமாரி!”
“ப்பா!”
“நீ ஏன் ராணி அம்மாச்சி கிட்ட விசா ம்மா சண்டை போடுறாங்கனு சொன்ன” சிவராமன் தொடங்கி தணிகா வரை இதையே கேட்டு வைக்க
“ஐயோ! ப்பா நாங்க சும்மாவே அடிக்கடி சண்டை பிடிப்போம். என்னை அவங்க அழுக வைப்பாங்க. நான் அவங்களை அழுக வைப்பேன்.சிவகாமி அப்பத்தா தான் எங்க இரண்டு போரையும் சேர்த்து வைப்பாங்க” என்றதும் பெரிதாக கண்கள் விரித்தான் தணிகாசலம்.
“என்ன குமாரி சொல்லுற? நீ சொன்னதை வச்சு தான் அம்மம்மா பேசி விசாலாட்சியை நான் அனுப்பி வச்சது” தலையை பிடித்து கொண்டான் தணிகாசலம்.
“அவங்க ஏன் அனுப்பி வச்சாங்க? அப்போ அப்பத்தா சொன்ன மாதிரி விசா அம்மா வர மாட்டாங்களா?” அடுத்த அழுகைக்குக் குமாரி தாயாராகச் சத்தியமாகத் தணிகாசலத்துக்கு நிலையைக் கையாள முடியவில்லை.
“ப்ச் எதுக்கெடுத்தாலும் அது என்ன அழுகுறது? என்ன வயசு உனக்கு? கண்ணைத் துடை” அதட்டலாகச் சொல்ல பயந்து கண்ணை வேகமாகத் துடைத்தவள்.
“விசாம்மா!”
“வந்துருவாங்க நீ ஸ்கூலுக்குப் போற வழிய பாரு அப்போதான் வருவாங்க”
“அப்போ நான் ஸ்கூலுக்குப் போறேன்”
“நல்ல பிள்ளை இப்போ கொஞ்ச நேரம் பட்டி கிட்ட போ” என்றதும் குமாரி சென்று விட. யோசனையுடன் அமர்ந்து விட்டான் தணிகாசலம். அமுதன் வேலையை விட்டுச் சென்றது தணிகாவுக்குக் கோபம் தான். இருந்தும் இறங்கி பேசி பழக்கம் இல்லாததால் போகட்டுமே என்று அமைதியாக இருந்து விட்டான்.
ஆனால் இப்படி அவன் ஊரை விட்டு செல்வான் என்று எண்ணி வைக்கவில்லை.அடுத்து என்ன? என்று யோசித்தவன் பல மணி நேரத்திற்குப் பிகு ஒரு முடிவுடன் எழுந்து கொண்டான்.
இங்கனம் இனிதாகத் தொடங்கியது மாமன் மச்சான் பனி போர்.அதாவது அடுத்தவர் கண்களுக்குத் தெரியாமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!