Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்…..11

அன்பில் இணைந்த இதயங்கள்….11

இரும்பு பட்டறையில்,

கயல்விழிக்கு நன்கு நினைவு திரும்பி இருந்த போதிலும் எந்த அசைவும் இல்லாதவள் போல் தான் தன்னை காட்டிக் கொண்டாள்.ஆனால் மனதின் பயம் உடலிலும் பிரதிபலித்து போலும் அதனால் சற்று கை,கால்கள் எல்லாம் நடுங்கியது.அவ்வபோது அந்த நால்வரில் ஒருவன் வந்து அவள் விழித்துவிட்டாளா என்று பார்த்துவிட்டு யாருக்கோ தகவல் கூறிக் கொண்டிருந்தான்.

அப்போது பட்டறையின் கதவு திறக்கப்பட யாரோ உள்ளே வருவது மங்கலாக தெரிந்தது கயலுக்கு அந்த உருவம் கிட்டே வர வர தான் அது அன்று அனுவுடன் பார்த்தவன் என்று புரிந்தது.ஆனால் இப்போது அவன் வேறாக தெரிந்தான்.



Advertisement

ஏற்றி சீவிய சிகை,அழகிய நீண்ட முகம் நல்ல வாட்டசாட்டமான உடல் வாகுடன் அவளையே கூர்மையாக பார்த்தபடி வந்து கொண்டிருந்தான் விமல் என்கிற ராபின்.ஆனால் விமலுக்கும் ராபினுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன.ஆம் அவன் பெண்களிடம் காட்டும் உருவ அமைப்பு அப்பாவியாக இருக்கும் இதோ இது வேறு முற்றிலும் வேறு என்று அவனை கவனித்த கயல்விழிக்கு புரிந்தது.ரத்னத்திற்குட விமலின் அடையாலம் தான் தெரியும் அப்படி தான் ராபின் அனைவரிடமும் காட்டிக் கொண்டிருந்தான்.

“என்ன ராபினு ஆளே மாறிட்ட நீயா இது….ஆமா நீ மட்டும் வந்திருக்க….எங்க அண்ணனை காணும்….”என்று ஒருவன் கேட்க,அவனை எட்டி மிதித்த ராபின்,

“யாருடா அண்ணன்???ஆங்….யார் அண்ணன்???”என்று கேட்டுக் கொண்டே ஒரு இறுக்கையில் அமர்ந்தான்.

Advertisement

“என்ன ராபினு பேச்செல்லாம் ஒருமாதிரி இருக்கு…..கையெல்லாம் ஓங்குற….இது நல்லா இல்லை பார்த்துக்க….என்ன இருந்தாலும் நீயும் நம்ம பையன் அதனால தான் கைநீட்டாம இருக்கோம்….”என்று மற்ற மூவரும் அடிவாங்கி விழுந்தவனை தூக்கியவாறே கூற,

Advertisement

“இப்ப சொன்ன பாரு….நம்ம பையன்…அதான்…அந்த ஒரே காரணத்திற்காக தான் உங்களை சும்மா விடுறேன்…புரியுதா….”என்று கூற,மற்றவர்கள் அவனை புரியாமல் பார்த்தனர்.

“என்ன புரியலையா….இங்க முதலாளியே நான் தான் அவனை நான் தான் முதலாளி போல இருக்க வைச்சேன்….அப்போ தான நான் மாட்ட மாட்டேன்….. ஹா ஹா ஹா…..எல்லாம் என் பிளான்….என்னோட பேரு கூட இதுல வராது….அந்தளவுக்கு பக்காவா பிளான் பண்ணியிருக்கேன்….”என்று கூறிக் கொண்டே கயலின் பக்கம் போனவன் அவளின் முக வடிவை அளந்தவரே,

“ம்ம்….இவளும் நல்லா தான் இருக்கா….என்ன அவ இளசு….இவ…….”என்று தகாத வார்த்தைகளை அவன் கூற கூற கயல்விழிக்கு எதையாவது எடுத்து அடித்துவிட வேண்டும் என்ற வேகம் எழுந்தது.

Advertisement

“என்னா குட்டி…மயக்கமா இருக்குற மாதிரி நடிக்கிறியா….”என்றவன் கைகள் கயலின் கன்னத்தில் பதிய,

“ச்சீ….கையை எடுடா நா___….”என்று கூற,அடுத்த நிமிடம் அவளின் கன்னம் தீயாய் எரிந்தது.

“—-என்னையவே எதிர்த்து பேசுறியா உன்னை…”என்று அவன் மேலும் அவளின் அங்கங்களை தொட தன் உடலை அசைத்து காலால் எட்டி அவனை உதைத்துவிட்டாள்.அவள் அவ்வாறு உதைப்பாள் என்று நினைக்காதவன் நிலை தடுமாறி விழுந்தான்.

“ஏய்…..”என்று கத்தலுடன் அவளின் அருகே ரௌத்திரமாக நெருங்கி அவளின் இரு கன்னத்தையும் மாறி மாறி அறைய அவனின் இந்த தாக்குதலில் தோய்ந்து விழுந்துவிட்டாள்.

“என் மேலே கையை வைக்கிறியா….உன்னை….”என்று அவளின் அருகே நெருங்கியவன் பின்,

“ப்ச்…ராபி கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு….இன்னைக்கு உனக்கு செம விருந்து….”என்று தனக்குள் கூறிக் கொண்டு தன் அல்லக்கைகளை பார்த்து,

“டேய்….இவளை ஒழுங்கா பார்த்துக்குங்க….இன்னைக்கு ஒரு பெரிய ஆள் கிட்ட பேசியிருக்கேன்….”என்று அவன் கூற,

“என்ன????ராபி….என்ன சொல்லுற????நாம பொண்ணுங்களை போட்டோ மட்டும் தான எடுத்து மிரட்டுவோம்….இப்ப இது என்ன புதுசா???”என்று ஒருவன் முகத்தில் பயத்தைக் காட்ட,

“ம்ம்ம்….அது சும்மா சாம்பிள்….இது தான் என்னோட பெரிய பிஸ்னஸ்……”என்றுவிட்டு அவர்களை பார்க்க,

“எங்களுக்கு புரியலை ராபி….நீ என்ன சொல்லுற….நீ தான் முதலாளினா…ஏன் ரத்னத்தை நடிக்க வச்ச…”என்று அவர்களை கேள்விகளை தொடுக்க,

“அடேய்….நாதாரிகளா….உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாது….என் பேரு எதிலேயும் வரக் கூடாது அதுக்கு தான் ரத்னத்தை யூஸ் பண்ணேன்…இப்ப எது நடந்தாலும் ரத்னத்தோட பெயர் தான் வரும் என்னோட பேரோ,போட்டோவோ யார்கிட்டேயும் கிடையாது….”என்று ராபின் கூற,கூட்டத்தில் ஒருவன்,

“ஆனா ராபினு….ஏன் இந்த பொண்ணை தூக்கியிருக்க….அந்த சின்ன குட்டியை தூக்கியிருக்கலாமே….”என்று சந்தேகம் எழுப்ப,

“ம்ம்…உன்னை இப்பவே கொல்லனும் போல இருக்கு கொல்லவா….”என்று கேட்க,அவன் பயந்துவிட்டான்.

“என்ன பயந்துட்டியா….அவளை சுத்தி இப்ப போலீஸ் இருக்கு….அதனால அவகிட்ட நாம நெருங்குவோம்னு தான் அவங்க நினைப்பாங்க…அதனால தான் இவளை தூக்குனேன்….அது மட்டும் இல்ல….இதோ இவளால தான் என் திட்டமெல்லாம் நாசமா போச்சு…..முதல் தடவை இவளை பாரக்கும் போதே எனக்கு சந்தேகம் வந்துச்சு….ஆனா கொஞ்சம் லூசா விட்டுட்டேன் அதான் அதான் நான் பண்ண பெரிய தப்பு….அன்னைக்கு இவ மட்டும் வரலை நான் அந்த அனுவை….ச்சை….எல்லாம் இவளால…..நல்லவேளை என்னை அந்த போலீஸ்காரன் பார்க்கல…இல்ல நான் மாட்டியிருப்பேன்….”என்று கூற,அதற்குள் ஒருவன்,

“ஆனா….அந்த பொண்ணு தான் உன்னை பார்த்திருக்கே…..அது உன்னை காட்டிக் கொடுத்துடுமே….”என்று கூற,

“ம்ம்ம்….நீ சொல்லுறது சரிதான் அதனால தான் நாம இப்ப இவளை வச்சு தப்பிக்க போறோம்…..புரியுதா….இங்கிருந்து கொஞ்ச நாளைக்கு வெளியில இருப்போம்….கொஞ்ச நாள்ல இந்த பிரச்சனை எல்லாம்  குறைஞ்சவுடனே வரலாம்…..”என்று கூற,

“சரி அப்ப ரத்னம்???”

“அவனை நான் வேறு இடத்துக்கு பார்சல் பண்ணியிருக்கேன்….போயிட்டு கூப்பிடுவான்…..இப்ப புரியுதா…..”என்று ராபின் கூற,மற்றவர்கள்,

“ஆங்…ஆங்…இப்ப புரியுது தல….சும்மா சொல்லக்கூடாது…என்ன மூளை உனக்கு போ….”என்று பாராட்ட,

“போதும்….போதும்….உன் பாராட்டெல்லாம்…..சீக்கிரம் இங்கிருந்து கிளம்பனும்….நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்….அதுவரை இவளை பார்த்துக்க….”என்று கூறிவிட்டு சென்றான்.

ராபினின் திட்டமெல்லாம் நல்லமுறையில் தான் நடந்தேறியிருக்கும் ரத்னம் பிடிபடும் வரை.ரத்னத்தை ஊட்டி அனுப்பி வைத்து அங்கே அவன் கதையை முடிக்க தான் ராபின் பிளான் பண்ணியிருந்தான் ஆனால் கடவுள் என்ற ஒருவர் இருக்கார் அல்லவா.ராபினின் அழிவு தொடங்கியிருந்தது.

%%%%%%%%%%%%%%

சத்யா தன் வாகனத்தை மின்னல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான்.அவனின் வாகனத்தின் வேகத்தை விட மனது வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

“கயல்…..கயல்….”என்று இதோடு நூறு முறையேனும் அந்த பெயரைக் கூறியிருப்பான்.அவளின் நினைவுகள் அவனை வாட்டி வதைக்க அவளுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாதே என்றும் மனது துடித்துக் கொண்டிருந்தது.

அப்போது “மகனே நாம எல்லாம் நாட்டுக்கு உழைக்குறவுங்க….அதனால எப்போதும் எந்த இடத்திலேயும் உன்னோட நிதானத்தை விட்டுடாத….நிதானமே பிராதனம் புரியுதா….”என்று கலைவாணின் வார்த்தைகள் நினைவுக்கு வர சத்யா தன் தலையை உலுக்கி கயலின் நினைவுகளில் இருந்து வெளி வந்தான்.அப்போது அவனின் கைபேசி இசை எழுப்ப எடுத்தவன்,

“குட்….தினேஷ்…..நீ அங்கேயே இரு….அந்த இடத்திலேந்து எதாவது வண்டியோ,லாரி…..எதுவாயிருந்தாலும் எந்த பக்கம் போகுது மட்டும் சொல்லு…ஆங்…ஆங்….நான் வந்துகிட்டே இருக்கேன்…”என்று கூறிவிட்டு மீண்டும் வண்டி ஓட்டிக் கொண்டே அந்த இரும்பு பட்டறையில் இருந்து வெளிவரும் பாதைகளில் இருக்கும் வழிகளை தனது கைபேசியில் ஆராய்ந்த வண்ணம் வந்தான்.

சத்யா ராபினின் இரும்பு பட்டறையை அடைந்த நேரம் அங்கு யாரும் இல்லை.அனைவரும் தப்பியிருந்தனர்.சத்யா உடனே தினேஷிற்கு அழைத்து விபரம் கேட்க அவனோ எந்த வாகனமும் செல்லவில்லை என்று கூறினான்.தன்னுடன் வந்த காவலர்கள் இருவரை இந்த இடத்தில் முழுமையாக தேட உத்தரவிட்டவன்.மீண்டும் வெளியில் வந்து தனது வாகனத்தில் அமர்ந்து இரண்டு நிமடம் நீண்ட மூச்சை இழுத்துவிட்டான்.பின் யோசிக்க ஏன் தினேஷ் இந்த இடத்தை அடையும் முன்னே அவர்கள் சென்றிருந்தால் இல்லை வேறு பாதை ஏதாவது இங்கு உள்ளதா என்று யோசித்தவனுக்கு அப்போது தான் மின்னல் வெட்டியது இங்கிருந்து காட்டு பாதை இருப்பது.

“ச்சை…இதை எப்படி மறந்தேன்….ஆஆஆஆஆ”என்று தன் தொடையை வேகமாக தட்டிக் கொண்டவனின் கண்கள் கலங்க,

“கயல்ல்ல்ல்……”என்று வாய்விட்டே கத்த,அதே நேரம் ராபினின் வண்டியில் மயங்கி இருந்த கயல்விழிக்கு மெல்ல விழிப்பு வந்தது.அவள் கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்க்க தான் எங்கோ பறப்பதை போல இருக்க நன்கு கண்களை திறந்து பார்க்க இடம் முழுவதும் இருட்டு,தன் கை,கால் எல்லாம் குறுக்கி அடைத்து வைத்திருந்தனர் தான் இருப்பது காரின் டிக்கி என்று புரிந்தது தன் உடலின் மீது பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர் அதனால் அவளால் அசையக் கூட முடியவில்லை.ராபின் அறைந்ததில் கன்னம் வேறு தீயாய் ஏறிந்து கொண்டிருக்க,இனி என் நிலை என்று நினைக்கையிலேயே கயலுக்கு கண்கள் மேலும் மேலும் கலங்கியது.

“அம்மா,அப்பா….வனிக்கா,நந்துமா என்றவளின் வார்த்தைகள் கடைசியாக சத்….சத்….சத்யாஆஆஆ”என்று மன்னவனின் பெயரில் முற்று பெற்றது.

ராபின் தனது அல்லக்கைகளில் இருவரை வேறு இடம் வழியாக வர சொல்லிவிட்டு அவனும்,மற்றொருவனும் மட்டுமே கயலை டிக்கியில் அடைத்துக் கொண்டு இந்த வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.ராபினோ விசில் அடித்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க,பக்கத்தில் இருந்தவனோ நடுங்கியபடி இருந்தான்.

“டேய்…..இப்படி நடுங்கி நீயே காட்டிக் கொடுத்துடாத…..கொன்னுட்டு போயிட்டே இருப்பேன் புரியுதா????”என்று மிரட்டல் குரலில் கூற,அவனோ

“ராபி இப்ப நாம எங்க போறோம்????”என்று குரல் நடுங்க கேட்டான்.

“ம்ம்….அதை தெரிஞ்சு நீ என்ன பண்ணப்போற….வாயை மூடிக்கிட்டு வா…..”என்று கூறிவிட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.காட்டு பாதையில் இருந்து ரோட்டிற்கு வந்தவனைத் தான்டி இரண்டு மூன்று கார்கள் சென்று கொண்டிருந்தது.அப்போது பின்னே சிவப்பு விளக்கு மின்னி மறைந்தபடி வர,ராபினின் முகம் இறுகியது.

“டேய்….இங்க பாரு….எவன் என்ன கேட்டாலும் நாங்க பிரண்ட் மேரேஜ்க்கு போறோம்னு தான் சொல்லனும் புரியுதா…..”என்று எச்சரிக்கை செய்ய,பக்கத்தில் இருந்தவனால் தலையை மட்டுமே ஆட்ட முடிந்தது.காவல் வாகனம் வருவதைக் கண்டு வண்டியை நிதானமாக ஓட்ட,அதற்குள் அந்த வாகனம் அவர்களை தான்டி சென்றது.ராபினுக்கு புரிந்தது இங்கு பக்கத்தில் ஒரு செக் போஸ்ட்டில் பிடிப்பார்கள் என்று வண்டியின் பாதையை மாற்றவும் முடியாது வேறு வழியில்லை கடந்து தான் ஆக வேண்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற இருமாப்பு.

ராபினின் வண்டியின் வேகம் குறைந்தது அவனின் வாகனத்தின் முன் வாகனங்கள் வரிசையாக நிற்க ஒருமுறை அவன் வெளியில் பார்த்தான் பின் வண்டியில் சாதாரணமாக அமர்ந்து கொண்டான்.ஒவ்வொரு வண்டியாக சென்றது ராபினின் வண்டி வந்து நிற்கும் நேரம் அவனை சோதனை செய்தனர்.வண்டி முழுவதும் சோதனை செய்து விடுவிக்கும் நேரம் சத்யாவின் வாகனம் புயல் போல வந்து நின்றது.

“தினேஷ்…யாராவது சந்தேகபடும்படியா மாட்டுனாங்களா????”என்றவன் குரல் ராபினின் அருகில் கேட்டது.அப்போது ஒரே ஒரு நிமிடம் அவனின் இதய துடிப்பு அதிகமானது இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு,

“சார் நான் போகலாமா????”என்று தன்னை பரிசோதித்தவரைக் கேட்க,

“ம்ம்….”என்று கூற தனது வண்டியை நோக்கி வர,

“நில்லுங்க….”என்று சத்யாவின் குரல் தடுத்தது.அவனின் குரலில் ராபின் நிற்க அவனின் அருகே வந்து அவனை முழுமையாக அளவிட்டவன்,

“எந்த ஊருக்கு போறீங்க????”என்று கேட்க,

“கேரளா….என்னோட பிரண்ட் ஒருத்தனுக்கு கல்யாணம் அதான் போறோம்….”என்று கூற,அவனை ஏற இறங்க பார்த்தவன் உள்ளிருந்தவனை விசாரித்துவிட்டு,பின்பக்க டிக்கியை திறந்து பார்த்தான்.அதில் பழக்கூடைகள் இருந்தன.அதை எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு நிமிர,

“சார் நாங்க போகலாமா????”என்று கேட்க,சத்யா

“ம்ம்ம்….”என்று கூறினான்.ஆனால் மனது ஏதோ போல இருந்தது.ஏதோ தன்னை பிரிந்து செல்வது போல் இருக்க,அந்த வண்டி நகர நகர அவனின் பார்வையும் அதையே தொடர்ந்தது.அப்போது போகும் வண்டியில் ஏதோ ஒரு ஆட்டம் இருப்பது போல தோன்றியது அவனின் கண்கள் கூர்மை பெற்று மெல்ல அவன் ஓட ஆரம்பிக்கும் நேரம் அந்த வண்டியின் டிக்கியை தன் கால்களால் எட்டி உதைத்து அதில் இருந்து எழ முயன்று கொண்டிருந்தாள் கயல்விழி.சத்யா அந்த டிக்கியை சரியாக மூடாமல் விட்டிருக்க,ராபினும் சத்யாவிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற நினைவில் எதையும் கவனிக்காமல் வண்டியை எடுத்துவிட்டான்.கடவுளின் ஆட்டத்தில் ராபினின் முடிவு நிச்சயமானது.

“கயல்ல்ல்ல்….”என்று கத்தியபடி சத்யா அந்த வண்டியை துரத்த தொடங்க,ராபினுக்கு கயல்விழி தப்பித்துவிட்டாள் என்று புரிய வண்டியை வேகமாக ஓட்டினான்.அந்த சாலையில் ஒருபுறம் வாகனங்கள் போகவும்,மற்றொரு புறம் வாகனங்கள் வரவும் தான் பாதை இருந்தால் ராபின் வேகமாக வண்டியை ஓட்ட அது அவனின் கைகளை மீறி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் மீது மோதிவிட்டது.அதில் காரின் முன்பாகம் முழுவதும் நசுங்கிவிட ராபின் என்ற அரக்கனிற்கு கடவுள் நல்ல முடிவைக் கொடுத்துவிட்டார்.

அனைத்தும் ஒருநிமிட நேரத்தில் நடந்திருந்தது.கயல்விழி டிக்கியில் இருந்து குதிக்க முயலும் போது ராபின் வண்டியின் வேகத்தை கூட்டியிருக்க அவள் நிலை தடுமாறி முன்பக்கமாக இருந்த தார் சாலையில் உருண்டு விழுந்துவிட்டாள்.உருண்டு விழுந்ததில் அவளின் முன் நெற்றியில் கல் குத்தி காயம்,கை,கால்கள் எல்லாம் சிராய்த்துவிட்டது.

“அம்மா…..”என்று அவள் ஈனசுரத்தில் முனங்கும் நேரம் அவளை நெருங்கியிருந்தான் சத்யா.

“கயல்…..கயல்….”என்று கூக்குரலுடன் அவளை தாங்கியவனின் முகத்தை பார்த்துக் கொண்டே கண்களை மூடினாள் கயல்விழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!