Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்….18

அன்பில் இணைந்த இதயங்கள்….18

வீட்டு வரவேற்பறையில் கையில் காபி கோப்பையுடன் மூடியிருந்த கதவையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கயல்விழி.காலையில் கண்விழித்த கயலுக்கு சத்யாவை எதிர்கொள்ள போவது ஒருவித தயக்கத்தை கொடுத்தது அதனாலே அவள் மெல்ல படுக்கையில் அருகில் அவன் படுத்திருக்கிறானா என்று பார்க்க படுக்கை காலியாக இருக்கவும் சற்று ஆசுவாசம் தான்.எழுந்து படுக்கையை சரி செய்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“அச்சோ…கயல்….இப்ப வெளியில போனா எப்படி அவன் முகத்துல முழிப்ப…ம்ம்ம்….”என்று கண்ணாடியின் முன்பு தன் முகத்தை பார்த்தவளுக்கு அத்தனை நிறைவு ஏதோ இத்தனை கால தண்டனைகளுக்கு பிறகு தனக்கு கடவுள் கருணை காட்டியுள்ளார் என்று தான் தோன்றியது.

“நேத்து எப்படி நான்…”என்று நினைத்தவளுக்கு சத்யாவின் முகம் தன் போல நினைவுகளில் வர,அவளின் முகம் குப் என்று சிவந்த நிறம் கொண்டது.இப்படியே பாதி நிகழ்காலம்,பாதி கனவுலகம் என்று மாற்றி மாற்றி நினைத்தபடி கயல்விழி குளித்து முடித்து அறையில் இருந்து வெளியில் வர,வாசல் கதவு மூடப்பட்டு இருந்தது.வீட்டில் சத்யா இருப்பதற்கான அறிகுறியே இல்லை.சமையல் அறையில் பார்த்தாள் அங்கு இல்லை என்றவுடன் அவனது அலுவலக அறையை திறக்க முயல அது அடைக்கப்பட்டு இருந்தது.எங்கு சென்றிருப்பான் என்று நினைத்துக் கொண்டே வாசல் கதவை திறக்க போக அதுவும் வெளிபுறமாக பூட்டப்பட்டிருக்க,



Advertisement

“நான் என்ன கைதியா….இப்படி என்னை உள்ள வைச்சு அடைச்சிட்டு இவரு எங்க போனாரு….”என்று கயல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து தனது பேசியில் அவனிற்கு அழைக்க எடுக்கவில்லை.இரண்டு,மூன்று முறை அழைத்து பார்த்தவள்,

“ப்ச்….எங்க போனாருனே தெரியலை….வரட்டும்….”என்று திட்டிக் கொண்டே இருக்க,கயலின் வயிறு பசியை உணர்த்தியது.

“ச்சு….பசிக்குது….என்ன இருக்குனு பார்ப்போம்….”என்றுவிட்டு சமையல் அறையில் என்ன இருக்கிறது என்று பார்க்க,பாலை தவிர வேறு ஒன்றும் இல்லை.பாலை காய்த்து காபி கலந்தவள் அதை பருகியபடி சத்யாவின் வரவிற்காக காத்திருக்க தொடங்கினாள்.வெகுநேரம் கழித்தே சத்யா வந்தான்.கயல் வாயிற் கதவு திறக்கப்படும் ஓசையில் எப்படி அவனை எதிர்கொள்ள என்ற தயக்கத்துடன் யோசித்துக் கொண்டிருக்க அவனோ ஏதோ பரபரப்புடன் வந்தவன் இவளை கண்டு கொள்ளாமல் நேராக அவனின் அலுவலக அறையை திறந்து கொண்டு உள்ளே எதையோ தேடிக் கொண்டிருந்தான்.அவனை எதிர்நோக்கி கொண்டிருந்த கயலுக்கு முகமே விழுந்துவிட்டது.

Advertisement

நேற்றைய நிகழ்வு அவளுக்கு பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது.ஆனால் அதை ஒருநொடியில் சத்யா அழித்துவிட்டது போல உணர்ந்தாள்.அந்த சோபாவில் அவள் அப்படியே அமர்ந்திருக்க,அலுவலக அறையில் இருந்து வந்தவன் நேராக அடுத்த அறைக்குள் நுழைந்து மீண்டும் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.கயலுக்கு அவன் தன்னை கண்டு கொள்ளாதது கோபம் தான் இருந்தாலும் அவனிடம் காட்டும் எண்ணமில்லை.ஏதோ முக்கிய வேலை போல என்று தன்னை தேற்றிக் கொண்டவள்,அறைக்குள் நுழைந்து,

Advertisement

“சத்யா….என்ன தேடுற…சொல்லு நான் தேடி தரேன்….”என்று கூற,

“ம்ம்ம்….அதை இப்ப சொல்லு…இவ்வளவு நேரம் என்ன கனவுலகத்துல இருந்தியா….”என்று கூறிக் கொண்டே தன் கைகளில் உள்ள தாள்களை புரட்டிக் கொண்டிருக்க,

“தெரியாம கேட்டுட்டேன் சாமி…நீங்களே தேடிக்குங்க…”என்று முகத்தைக் கோணிக் கொண்டு வெளியில் வந்துவிட்டாள்.சத்யாவின் கவனம் அவளிடம் இல்லை அதனால் அவள் பேசியதை அவன் காதில் வாங்கவில்லை அவனின் கவனம் முழுவதும் அந்த தாள்களில் தான் இருந்தது.பின் பேசியில் யாருடனோ பேசிக் கொண்டே அவன் சென்றுவிட,

Advertisement

“கொஞ்சமாச்சும் இங்க ஒருத்தி இருக்கேன்னு நினைக்கிறானா…போடா போ….உன்கூட பேசமாட்டேன் போ….”என்று சிறுபிள்ளை போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.காலையில் சாப்பிடவும் இல்லை வெறும் காபியை மட்டும் பருகினாள் இப்போது நேரம் மணி மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்க,சத்யா வருவதை போல தெரியவில்லை எனவே உணவை ஆடர் செய்துவிட்டு அமர்ந்திருந்தாள்.அப்போது அவளின் பேசி அழைக்க எடுத்து பார்த்தால் பார்வதி தான் அழைத்திருந்தார்.

தாயின் அழைப்பை பார்த்தவுடன் சுணக்கம் எல்லாம் பறந்தோட தாயிடம் பேச தொடங்கினாள்.பார்வதிக்கோ மகள் தனியாக எப்படி சமாளிக்கிறாளோ என்று பயந்து தான் அழைத்தார்.ஆனால் எடுத்தவுடன் கேட்ட மகளின் உற்சாக குரலில் மனதில் இருந்த சஞ்சலங்கள் பறந்தோட அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தார்.

அதே நேரம் அவளின் உணவும் வந்துவிட உண்டுவிட்டு சற்று நேரம் வீட்டில் அங்கும் இங்கும் அலைந்தவள்  நேரத்தை பார்க்க மாலை ஐந்தை நெருங்கி கொண்டிருந்தது.சத்யாவிற்கு அழைக்கலாமா என்று நினைத்தவள் பின் திடீர் என்று அமிர்தாவின் நினைவு வர அவருக்கு அழைத்துவிட்டாள்.ஏனோ தன்னை அன்புடன் வரவேற்ற அமிர்தாவை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“ஹலோ கயல் எப்படிமா இருக்க….”என்று எடுத்தவுடன் அமிர்தா கேட்க,

“நான் நல்லா இருக்கேன் அத்தை….”என்றவள் வீட்டில் மற்றவர்களை விசாரித்தாள்.மருமகள் அழைத்ததே அமிர்தாவிற்கு அத்தனை மகிழ்ச்சி இதில் அவள் அனைவரையும் விசாரித்ததில் மனம் குளிர்ந்து போனது அவருக்கு.மகனின் குணத்திற்கு இந்த பெண்ணால் சமாளிக்க முடியுமோ என்ற கவலை இருந்தது அவருக்கு ஆனால் கயலின் இந்த எதார்த்தமான பேச்சு அவரை சற்று நிம்மதி அடைய வைத்தது என்று தான் கூற வேண்டும்.

“எங்கமா சத்யா….வீட்டல இல்லையா???”என்று அமிர்தா வினவ,

“ஆங்…இல்லை அத்தை….ஏதோ முக்கியமான வேலை போல….காலையிலேயே கிளம்பிட்டாங்க…”

“ம்ம்ம்…..நினைச்சேன்….அவன் இப்படி தான் செய்வான்னு….இவனை என்ன செய்யறதுனே தெரியலை….இந்த வேலையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு வாடானு சொன்னா….ஒரு மாநகரத்தை பாதுகாக்குறது என்னோட பொறுப்பு அதை எப்படி விட முடியும்…முதல்ல நான் பார்த்துக்கிட்டு இருக்குறது வேலை கிடையாது….இது ஒரு பொறுப்பு அதை நியாபகத்தில வைங்கனு எனக்கே கிளாஸ் எடுக்குறான்….”என்று அமிர்தா பெருமிதம் கலந்த கோபத்துடன் மகனை பற்றி கூற கயலுக்கு தான் இது அனைத்தும் தெரியுமே அவள் வெறும் ம்ம் மட்டும் கொட்டிக் கொண்டிருக்க,

“என்னை பத்தி சொன்னது போதுமா இல்லை இன்னும் தெரிஞ்சுக்கனுமா….”என்ற சத்யாவின் குரலில் கயல் அதிர்ந்து திரும்ப சத்யா  இடுப்பில் கை வைத்தபடி நிற்க,கயல் திருதிருவென முழித்துக் கொண்டு நின்றாள்.அதற்குள் மருமகளின் பேச்சு கேட்காமல் அமிர்தா,

“ஹலோ…கயல்….ஹலோ……”என்று பேசியில் கத்த,கயல் சத்யாவை பார்த்துக் கொண்டே பேசியில் பேசவா வேண்டாமா என்று நிற்க,அவளிடம் இருந்து பேசியை பரித்தவன்,

“உங்க மருமக தற்போது வேலையாக உள்ளதால் பிறகு முயற்சிக்கவும்….”என்று ராகமாக பேசிவிட்டு அணைத்து வைத்துவிட்டான்.

“இப்ப எதுக்கு கட் பண்ணீங்க….நான் பேசிகிட்டு இருந்தேன்…”என்று கயல் முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு கேட்க,

“ப்ச்….புருஷன் வெளியில போயிட்டு வந்திருக்கேன்….உனக்கு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா….நீ பாட்டுக்கு உன் மாமியார் கூட கதை பேசிக்கிட்டு இருக்க….நான் போய் குளிச்சிட்டு வரேன் போ….போய் எனக்கு ஸ்டாங்கா ஒரு கப் காபி போட்டு எடுத்துட்டுவா….”என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட,கயலுக்கு கோபத்தில் மூக்கு நுனி சிவந்துவிட்டது.

சமையல் அறைக்குள் நுழைந்த கயல் சத்யாவின் மேல் உள்ள கோபத்தை பாத்திரத்தில் காட்டிக் கொண்டே,

“என்ன நினைச்சிக்கிட்டு இருக்காரு இவரு….காலையில எங்கயோ போனாரு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும் தோணல…..வீட்டுக்குள்ள வச்சிட்டு பூட்டிட்டு போயிட்டு இப்ப காபி வேணுமாம் காபி…”என்று தன்போக்கில் பேசிக் கொண்டே காபியை கலக்க,

“ம்ம்…அவ்வளவு தானா…”என்று சத்யாவின் குரலில் திரும்ப சமையல் அறை வாயிலில் கைகளை கட்டிக் கொண்டு தோரணாயாக நின்றிருந்தான்.குளித்து தலையை சரியாக துவட்டாமல் நுனி முடியில் நீர்திவளைகள்  சொட்டிக் கொண்டிருந்தது.

“இவரு அதுக்குள்ள குளிச்சிட்டாரா….அய்யோ…கயல் இன்னைக்கு நேரமே சரியில்ல போலடி….இப்படி வகையா மாட்டுற…”என்று நினைத்தவள் அவனுக்கு வேகமாக காபியை  கொடுக்க,அதை வாங்கி அருகில் இருந்த மேடையில் வைத்துவிட்டு அவளின் அருகே நெருங்க,கயலின் கால்கள் தன் போல் பின்னே செல்ல எத்தனிக்க,சத்யாவின் பார்வை வீச்சில் அவள் நகராமல் மேடையில் சாய்ந்தபடி நிற்க,அவளின் இருபுறமும் கைகளை ஊன்றியவன் முகத்தை அவளின் முகம் அருகே கொண்டு சென்று,

“ம்ம்…திட்ட எதும் பாக்கி இருக்கா…”என்று கேட்க,கயலுக்கு இந்த நெருக்கத்தில் வார்த்தைகள் வரவில்லை.கண்கள் படபடக்க அவனை ஏறிட்டாள் இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து உஷ்ணத்தை ஏற்படுத்தியது.சோப்புடன் கலந்த அவனின் வாசம் வேறு அவளை இம்சிக்க செய்ய அவளின் நெற்றியில் முட்டி நின்றவன்,

“ம்ம்ம்….கயலம்மா…என்ன ரொம்ப கோபமா இருக்க போல….”என்று கேட்க,

“ம்ம்…இல்ல…”என்றவள் குரல் மிக மெல்லியதாக வந்தது.

“இருக்கே…கயலம்மா….”என்றவன் தன் மூக்கால் அவளின் மூக்கை உரச,கயல் தன் கால் கட்டைவிரலை மட்டும் தரையில் ஆழமாக பதித்து நின்றாள்.சத்யாவின் கைகள் உயர்ந்து அவளின் கலைந்து இருந்த முன் முடியை ஒதுக்கிவிட்டு நெற்றி,கன்னம் என்று தன் இதழை ஒற்றியெடுத்தவன் இதழ்கள் இறுதியில் அவளின் இதழ்களில் இணைந்து இசை மீட்ட,கயல் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அவனின் சட்டை பிடித்தாள்.சற்று நேரம் இருவரும் தங்களை மறந்து நின்றனர்.

முதலில் தெளிந்த சத்யா,

“ம்ம்…இப்ப உனக்கு ஓகேவா…நான் காபி குடிக்கலாமா….”என்று கேட்க,அவனின் தோள்களை தட்டியவள் அவனை விட்டு விலக பார்க்க,அவனோ ஒற்றை கையால் அவளின் இடைவளைத்து மற்றொரு கையால் காபி பருகி கொண்டே வரவேற்பறைக்கு வந்தான்.

“ம்ம்…பரவாயில்லை காபி கொஞ்சம் சுமாரா போடுற….”என்றவனை அவனின் கைவளைவில் இருந்து திரும்பி முறைத்தவள்,

“ரொம்ப பண்ணுறீங்க நீங்க…”என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய,அவனோ நீண்ட அந்த ஒற்றை விரலை கடித்துவிட,

“ஆஆஆஆஆ….ஏன் சத்து மாத்திரை படுத்துற…வலிக்குது….”என்று அவன் கடித்த விரலை தேய்த்து கொண்டே அவனின் தோள்களில் சாய்ந்துகொள்ள,அவளை சாய்த்து கொண்டே காபியை முழுதாக குடித்தவன்,

“சரி இப்படியே சாஞ்சிகிட்டே தூங்கிடாத….போய் கிளம்பு வெளில போறோம்….”என்று கூற,

“எங்க சத்யா???”என்று கயல் ஆர்வமாக கேட்க,

“ஏன் சென்னா தான் வருவியா…போ கிளம்பு…”என்று அவளை அறையில் பிடித்து தள்ளி,

“சீக்கிரம் கிளம்பு…நான் உனக்கு டிரஸ் எல்லாம் சூஸ் பண்ணி வச்சிட்டேன்….”என்றுவிட்டு செல்ல,கயல் அப்போது தான் படுக்கையை பார்த்தாள்.படுக்கையில் அழகிய பிங்க நிற சுடிதார் செட் இருந்தது.அதை எடுத்து தன் மீது வைத்து பார்க்க அத்தனை பொறுத்தமாக இருந்தது.கயல்விழி கிளம்பி வர சத்யாவும் கிளம்பி தயாராகி வெளியில் வந்தான்.

“பரவாயில்லை சொன்னபடி சீக்கிரம் கிளம்பிட்ட….”என்று தன் டிஷர்ட்டை சரி செய்து கொண்டே சொல்ல,கயல் முகத்தை வெட்டி திருப்பிக் கொண்டாள்.

“பார்த்துடீ கழுத்து சுளிக்க போது….”என்று நக்கல் பண்ணியவன் அவளின் கைகளுடன் கை கோர்த்து கொண்டு வெளியில் வந்தான்.அவன் புக் செய்த கார் வரவும் அவன் ஏற,

“ஏன் சத்யா உன் வண்டியிலேயே போகலாமே….ஏன் கார்???”என்று கயல் கேட்க,

“உன்னை யாராவது பார்த்துட்டா அதான் உன்னை பொத்தி பொத்தி கூட்டிட்டு போறேன்…”என்று கூற,கயல் அவன் நக்கலாக கூறுகிறானா என்று பார்க்க முகம் எப்போதும் போல் தான் இருந்தது.

“ஏறுடீ…கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு….”என்று அவளை இழுத்து வாகனத்தில் அமர வைத்தான்.அவன் இழுத்த வேகத்தில் அவனின் மீதே கயல் விழுந்து வைக்க,

“எப்பா என்ன கணம்டீ  நீ….ஆனா நேத்து தெரியலை…இப்ப…”என்று அவன் மேலும் பேசும் முன் அவனின் இதழ்களை கரம் கொண்டு மூடியவள்,

“அச்சோ….வாய மூடுங்க….”என்று கயல் பல்லிடுக்கில் கத்திவிட்டு அவன் மேலிருந்து எழும்ப,அவளை இடையை வலிக்க கிள்ளி,

“வாயை மூடுங்கனு சொல்லிட்டு செய்யாம போற….”என்று இதழ்களை குவித்து காட்ட,கயலுக்கு மொத்தமாக வேர்த்துவிட்டது அவனின் அலப்பறைகளில்.இவ்வாறு அவளை சிந்திக்கவிடாமல் சிவக்க வைத்துக் கொண்டே வந்தான் சத்யா.வாகனம் நிற்கவும் தான் தாங்கள் வந்திருப்பது விமான நிலையம் என்று புரிந்தது கயலிற்கு.இங்கு எதற்காக என்று யோசனை செய்து கொண்டிருக்க,சத்யா காரின் பின்புறம் இருந்து ஒரு பெட்டியை எடுத்து கொண்டு,

“ஓய்….என்ன அப்படியே நிக்குற…வா…”என்று அவளின் கை பிடித்து அழைத்துக் கொண்டு செல்ல,

“எங்க போறோம் சத்யா….”என்று கயல் ஆர்வமாக கேட்க,

“ஆங் என் பிரண்டு இன்னைக்கு யூஸ் போறான் அவன்கிட்ட இந்த பெட்டியை கொடுக்க போறோம் வா….”என்று கூற,கயல்விழிக்கு சொத்தென்று ஆனது.முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு செல்ல,

“ஏன்டீ உன் மூஞ்சி சாதாரணமா பார்த்தாலே பயமா இருக்கும்….இப்ப ஏன் இப்படி வர….”என்று அதற்கும் சத்யா பேச,

“ஏய் சத்து மாத்திரை நீ ரொம்ப ஓவர போற….என்ன நினைச்சிக்கிட்டு இருக்க ஆங்….போ நான் வரலை நீ மட்டும் போய் உன் பிரண்டை பாரு….”என்றுவிட்டு கயல் நகர போக அவளின் கையை இறுக பற்றியவன்,

“அப்பப்ப….இந்த சத்து மாத்திரையை மறந்துடுறடீ…..”என்றவன் குரலே இப்போது மாறியிருக்க,அவனை ஏறிட்ட கயலுக்கு அவன் கண்களில் தெரிந்த காதலில் சுற்றம் மறந்து போனது.

“என்னடீ???”என்று அவன் அவளின் முகத்தை பார்த்து கேட்க,

“நீ என்ன எதிர்பார்க்குற சத்யா என்கிட்ட…”என்று கேட்டுவிட்டாள்,அவளிள் விரல்களில் தன் விரல்களுடன் கோர்த்து இறுக்கியவன்,

“ம்ம்ம்….எனக்கு என் கயலம்மா வேணும்…..எனக்கு மட்டும் வேணும்…”என்று ஆழ்ந்த குரலில் கூற,கயலின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“பதில் சொல்லு….”என்று சத்யா ஊக்க,

“ம்ம்ம்…..உன் கயலம்மா உன்கூட தான் இருக்கா…”என்றாள் மெல்லிய குரலில்.

“இல்ல….அவ அப்பப்ப காணாம போயிடுறா…அதான் தேடுறேன்…”என்றவன் நீண்ட மூச்சை இழுத்துவிட,

“ஓய் சத்து மாத்திரை நீ இப்படி பீல் பண்ணுறது எல்லாம் நல்லா இல்லை…வா….போகலாம்…”என்று அவனை இழுக்க,

“ம்ம்ம்….அப்ப எனக்கு என் கயலம்மா திரும்பிட்டானு சொல்லாம சொல்லுறியா….”என்று தன் காரியத்தில் கண்ணாக இருக்க,

“ம்ம்…உடனே எல்லாம் கிடைக்க மாட்டா…ஆனா சீக்கிரம் கிடைச்சுடுவா வா….”என்று இழுத்துக் கொண்டு விமானநிலையத்திற்குள் நுழைய,சத்யா அங்கு உள்ளே சென்று தங்களுக்கு மணாலி செல்வதற்கான டிக்கெட்டுகளை காட்ட,முறைத்தவள்,

“பிராடு….இதை முன்னாடியே சொல்லுறதுக்கு என்ன….”என்று கயல் உதட்டை சுழிக்க,

“ம்ம்…அப்படி சொல்லிட்டா இப்படி நீ என் பின்னாடி சுத்துனது போல சுத்துவியா….அதான் இப்படி பிளான் பண்ணேன்…எங்க எல்லாம் வேஸ்ட் நான் எதிர்பாத்த அளவுக்கு இல்லை…”என்று வேறு குறைபட,அவனின் கைகளை வலிக்க கிள்ளியவள்,

“பிராடு….பிராடு…பண்ணுறத பண்ணிட்டு பேச்சை பாரு….”

“யாரு நானு…நீ சரியான….”என்று அவன் ஏதோ கூறும் முன் அவனின் வாயை மூடிய கயல்,

“அச்சோ சாமி நான் எதுவும் கேட்கலை போதுமா….பார்க்குறதுக்கு தான் டெரர் போலீஸ் ஆனா பண்ணுறது எல்லாம் சேட்டை….”என்று அவனின் தோள்களில் செல்லமாக தட்ட,

“உன்கிட்ட மட்டும் இப்படி தான் நான்….பின்ன நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஊர்லேந்து உன்னை தூக்கிட்டு வந்திருக்கேன் அது கூட தெரியலை உனக்கு…”என்று கூறியவன் செக்கின் எல்லாம் முடித்து கொண்டு அங்கு பயணிகள் காத்திருப்பு பகுதிக்கு சென்று ஒரு இறுக்கையில் அமர,அவனை நெருங்கி அமர்ந்தவள்,

“என்ன என்ன சொன்ன சத்து மாத்திரை….”என்று கண்கள் விரிய கேட்க,

“ம்ம்…சொன்னாங்க சுரைக்காய்க்கு உப்பில்லனு…போடீ…அங்கிட்டு வீட்டுல பக்கத்துல வந்தா ஓடுறா…இப்ப விட்டா மடியில உட்கார்ந்துடுவா போல….போடீ…தள்ளி உட்காரு…மனுஷன் அவஸ்தை புரியாம….”என்று கூற,கயல்விழிக்கு சத்யாவை புரிந்து கொள்ள முடியவில்லை.அவன் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான்.ஒரு நிமிடம் தன்னை சுட்டெரிக்கும் சூரியன் போல சுடுபவன் சில நிமிடம் குளிர்விக்கும் நிலவு போல குளிர்விக்கிறான் என்று தனக்குள்ளே அவள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க அவர்களின் விமான அறிவிப்பும் வர இருவரும் கைகோர்த்து கொண்டே சென்றனர்.கயலின் முகத்தை வைத்தே அவளின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட சத்யா,

“கயலம்மா…”

“…..”

“கயலம்மா….”என்று அவளின் கைகளில் கிள்ள,

“ஆஆஆஆ ஏன் சத்துமாத்திரை கிள்ளுன…”

“ம்ம்ம்….இப்ப தான சொன்னேன் உன் மூஞ்சி…”

“சாதாரணாமா பார்த்தா நல்லா இருக்காது இப்படி தூக்கிவச்சிக்கிட்டு வந்தா ரொம்ப மோசமா இருக்கும் அதான….”என்று சத்யா தொடங்கியதை கயல் முடித்து வைக்க,

“ம்ம்ம்….அதே தான்….”என்று குழந்தை போல தலையாட்டி அவன் கூற,

“உன்னை….”என்று இரு கைகளையும் தூக்கி அவனின் கழுத்தை நெறிப்பதை போல செய்ய,

“அச்சோ….தேன்நிலவு கொண்டாட போன மாப்பிள்ளை  கொலை….”என்று சத்யா கத்த,அவனின் வாயை பொத்தியவள்,

“போதும் முடியலை சத்து மாத்திரை….இதுக்கு மேல தாங்க மாட்டேன் அழுதுடுவேன்….”என்று கயல் முகத்தை பாவமாக வைக்க,சத்யாவின் முகத்தில் விரிந்த புன்னகை.இருவரும் பேசியபடியே விமானத்தில் தங்களின் இறுக்கையில் அமர்ந்தனர்.சற்று நேரத்திற்கு எல்லாம் பயணிகள் அனைவரும் ஏறிவிட விமானம் வானில் பறக்க தொடங்கியது.கயலுக்கு இது தான் முதல் அனுபவம் என்பதால் ஜன்னலின் ஓரத்தில் இருந்து கீழே பார்த்துக் கொண்டே வந்தாள்.

“ம்ஹம்….”என்று சத்யா அவளின் இடையில் கிள்ள,

“ஸ்ஸ்ஸ்…ஆஆஆ….”என்று அவனின் கைகளில் ஒரு அடி வைத்துவிட்டு, மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்ப,

“ஓய் என்னையும் பார்க்கலாம்….”என்று கூற,அவனை திரும்பி பார்த்துவிட்டு அவனின் தோள்களில் சாய்ந்து அமர்ந்தாள்.சற்று நேரம் இருவருமே பேசிக் கொள்ளவில்லை அமைதியாக தங்களின் அருகாமையை ரசித்துக் கொண்டிருந்தனர்.அவனின் தோள்களில் சாய்ந்தபடி இருந்த கயல்விழி,

“ஏன் சத்து மாத்திரை பொய் சொல்லி கூட்டிகிட்டு வந்த….”என்று கேட்க,

“ம்ம்….அப்புறம் என்ன செய்வாங்களாம்….எனக்கு உன் கூட தனியா இருக்கனும் அங்க இருந்தா சுத்தி யாராவது இருப்பாங்க…அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்…அதோட நீ இன்னும் நார்மல் மோடுக்கு வரலை….எனக்கு என் வீட்டுல என் கயலம்மா சுதந்திரமா இருக்கனும் அதுக்காக தான்….”என்று சத்யா கூற,அவனின் தோள்களில் இருந்த முகத்தை நிமிர்த்தி பார்த்தவள்,

“தேங்க்ஸ்…என்னை புரிஞ்சிகிட்டதுக்கு….”என்று கயல் உணர்ந்து கூறினாள்.

“ம்ம்…புருஷனுக்கு தேங்கஸ் எப்படி சொல்லனும் கூட தெரியலை சரியான மக்கு பொண்டாட்டி….”என்று கூறிவிட்டு அவள் அசந்த நேரம் அவளின் அவளின் இதழில் பட்டும் படமல் தன் இதழை ஒற்றி எடுத்துவிட்டு,

“இப்படி தான் சொல்லனும் கயலம்மா…”என்று கூற கயலின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது.மனதெங்கும் அத்தனை நிம்மதி தன்னை புரிந்து கொண்ட துணைவனை அத்தனை பிடித்து போனது.அதன் பின் கயலின் கவனம் எல்லாம் சத்யாவின் மேல் தான்.இருவரும் தங்களின் தேன்நிலவை தெவிட்ட தெவிட்ட கொண்டாடி களித்துவிட்டு தான் சென்னை திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!