Skip to content
Post Views: 471
வினியின் நதி அத்தியாயம் 10
முயலை விட வேகமாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. நாட்கள் கூட கூட அவர்கள் காதலும் வளர்ந்து வந்தது. அந்த வருடத்திற்கான செமஸ்டர் தேர்வும் அடுத்த வாரம் ஆரம்பம். இன்று தேர்வுக்கான நுழைவுச்சீட்டு கொடுக்கப்பட்டது. எப்பொழுதும் நுழைவுச்சீட்டு கொடுக்கும் நாள் நதிக்கும், அவள் தோழிகளுக்கும் கொண்டாட்டமான நாள். ஏனெனில் அன்று 1 மணி நேரம் மட்டுமே கல்லூரி. அடுத்து அப்படியே வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான். ஆனால் நதியும், அவள் தோழிகளும் வீட்டுக்கு கிளம்பாமல் எப்பொழுதும் நடந்தே சென்று வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, எதாவது ஒரு படத்துக்கு சென்று விடுவது வழக்கம்.
அவள் தோழிகள் அனைவரும் வீட்டுக்கு தெரியாமல் தான் படத்துக்கு வருவார்கள். ஏனெனில் அனைவரும் சுற்றி இருக்கும் கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டிலும் ஓவர் ஸ்டிக்ட்(Strict) ஸ்டிக்டோ ஸ்டிக்ட். நதி வீட்டில் சொல்லிவிட்டே வருவாள். இந்த விஷயத்தில் அவள் வீட்டில் எதுவுமே சொல்லமாட்டார்கள். ’இந்த வயசுல சந்தோஷமா இருக்காம அப்புறம் எப்ப வாழ்க்கைய வாழ?’ என்று அவள் தாய் அனுமதி வழங்கி விடுவார்கள்.
எனவே இன்றும் கொண்டாட்டமாக படத்துக்கு கிளம்பினார்கள். அதுவும் நதியின் தோழிகளுக்கு நடிகர் விஜய் என்றால் உயிர். நடிகர் விஜயின் தீவிரமான ரசிகைகள் அவர்கள். தற்பொழுது தான் நடிகர் விஜய் நடித்த புலி படம் வெளிவந்துள்ளது. அதை காண இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அனைவரும் கிளம்பினார்கள்.
Advertisement
போகும் வழியிலே அவர்களுக்கு பிடித்த ஆஸ்தானமான கடையில் அனைவரும் புரோட்டா, ப்ரைட் ரைஸ் சாப்பிட்டு விட்டு படத்துக்கு உற்சாகமாக கிளம்பினார்கள்.
“ஹே புலி படம் சூப்பரா இருக்காம்.. எங்க அண்ணன் போன வாரம் போய் பாத்துட்டு வந்து சொன்னான்” என்று மரியா சொன்னாள்.
“அதெல்லாம் இல்ல.. படம் கொஞ்சம் சுமார் தானாம்.. என் ஃப்ரண்ட் சொன்னாங்க” என்று ராதா சொல்ல,
Advertisement
“ஹே.. எங்க தளபதி நடிச்ச எல்லா படமும் எவ்ளோ ஹிட்னு தெரியும்ல.. அப்டி இருக்கும் அவர் நடிப்பு… இந்த படமும் மாஸ் தான் தெரிஞ்சுக்கோ” என்று வெண்ணிலா சொன்னதும்,
Advertisement
இதற்கு நதி, ”அவ என்னடி பண்ணுவா.. அவ கேட்டத அவ சொல்றா.. இதுக்கு போய் கோபப்படலாமா? அதான் நம்மலே படத்துக்கு போறோம்ல.. நேர்ல போய் பாத்தா தெரிஞ்சுரும்..” என்று சொல்ல,
“அதெப்படி காத்து வாக்குல காதுல கண்டது வரும்.. எல்லாம் சொல்லலாமா? நெகட்டிவ்வ கூட பாசிட்டிவா கொண்டு போகனும்டி… தெரியாது உனக்கு?”
”எப்படி பரீட்சைல 10 மார்க் எடுத்தா 100 மார்க் எடுத்தேனு வீட்ல நீ சொல்லுவியே அது மாதிரியா?” என ராதா கேட்க,
Advertisement
”அதுவும் பாசிட்விட்டி தான்.. அப்ப தான அடுத்த பரீட்சைல 100 எடுக்க முடியும்… எல்லாம் முன்கூட்டியே யோசிச்சு செய்வேன்டி நான்..” என வெண்ணிலா சொல்லவும்,
“போடி டுபாக்கூர் மண்ட.. பேசாம இரு நீ.. போனா போகுதுனு பாத்தா இது கொஞ்சம் ஓவர்… வீட்ல பொய்யும் சொல்லிட்டு அதுக்கு நியாயம் வேற சொல்றியா நீ?” என்று நதி கேட்கவும்,
”என்னடி நீயே இப்டி சொல்ற?” என்று வெண்ணிலா முகத்தை சோகமாக வைக்கவும்,
“சரி முடிஞ்சத விடுங்க … நேரமாச்சு வாங்க படத்துக்கு போலாம்” என்று மரியா அனைவரையும் கூட்டிச் சென்றாள்.
அனைவரும் படம் முடிந்ததும் வெளியே பேருந்துக்காக காத்திருந்தார்கள். ”அப்போது மரியா, படம் நல்லா தான் இருந்தது.. குறை சொல்ற அளவுக்கு இல்ல” என்றாள்.
”என்ன குறை சொல்ற அளவுக்கு இல்லையா? படத்துல எதாவது இருந்தா தான குறை சொல்ல” என்று ராதா கிண்டலாக சொல்ல,
“ஹே.. நீ ஓட்டுனது போதும்.. படம் சூப்பரா இருந்துச்சு.. இல்லடி நதி?” என வெண்ணிலா நதியை கேட்க,
”ஆமான்டி.. படம் சூப்பரா இருந்துச்சு… எனக்கு தம்பி ராமையா கெட்அப் (Getup) நினச்சாதான் சிரிப்பா இருக்கு.. ஆனா எங்கயோ அந்த கெட்அப் பாத்த மாதிரி இருக்கு.. அதான் யோசிக்கேன்” என்று நதி கூற,
“க்கும் டி.. எனக்கும் தான்” என மரியா சொல்ல,
”எதுக்கு இந்த க்கும்… அப்டியெல்லாம் எங்கயும் பாத்து இருக்க மாட்ட.. புதுசா ஒரு எக்ஸ்ட்ரா மீசை மண்டைல இருக்கு அவ்ளோ தான்.. மண்டைத் முடி தான் இல்ல.. இதாச்சும் இருக்கட்டும்னு வச்சுருப்பாங்க” என்று ராதா கலாய்க்க,
”23ம் புலிகேசி மீசைடி அது.. அதான் எங்கயோ பாத்த மாதிரி இருக்கு” என்று மரியா சொன்னாள்.
”அப்டியும் இருக்குமோ?” என ராதா யோசிக்க,
“முகத்துல மீசை இருக்கும் சரி, மண்டைல கூடவா புலிகேசிக்கு மீசை இருக்கும்” என்று வெண்ணிலா கேட்கவும்,
”ஆமால்ல… இவருக்கு தலைல ஒரு மீசை அதே மாதிரி இருக்கு.. புதுசா யோசிச்சு இருக்காங்க” என்று மரியா கூறியதும்,
நதியோ “ஞாபகம் வந்துருச்சுடி.. அது பழைய படத்துல ஒரு காமெடி நடிகருக்கு வச்சுருப்பாங்க” என்று கூறியதும்,
”எது பழைய படத்துல உனக்கு மண்டைல மீசை வச்சாங்களா.. போடி எதாச்சும் சொல்லனும்னு சொல்லாத” என்று ராதா கூற,
”நிஜமா தான்டி… போன வாரம் தான் எங்க வீட்ல அந்த படம் பாத்தேன்… அதுல வர காமெடி நடிகர் அப்டி தான் வச்சுருந்தாரு.. அந்த படம் பேரு கூட ஏதோ ம-ன்னு ஆரம்பிக்கும்” என்று நதி சொல்ல,
“என்ன பேரு மாமா இங்க வாமா வா” என்று வெண்ணிலா சொல்லவும்,
“ஹை இது கூட நல்லா இருக்குடி…
மாமா இங்க வாமா,
கொஞ்சம் இடியாப்பம் வாங்கி தாமா..
ஏம்மா அட ஏம்மா,
இப்படி பண்றீயேமா..
எப்புடி சூப்பர்ல” என்று ராதா பாடவும்,
“கண்டு பிடிச்சுட்டேன்.. மல்லு வேட்டி மைனர் படம் பேரு.. சத்யராஜ் படம்… அதுல ஒரு பூசாரி வருவாரு.. அவர் மண்டைலயும் இப்டி தான் மீசை இருக்கும்.. அத பாத்து பாத்து நான் கிண்டல் பண்ணி சிரிச்சேன்.. இப்ப அதே கெட்அப் தான் புலி படத்துல தம்பி ராமையாவுக்கும் போட்டுருக்காங்க…” என நதி சொல்லவும்,
”அரிய கண்டுபிடிப்பு தான் போ” என வெண்ணிலாவும்,
“ஓ அப்ப பழைய படத்துல சுட்டு தான் புது படமா.. சரி சரி..” என்று ராதா கூறவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது.
அனைவரும் பேருந்து ஏறியதும் நதி வீடு நோக்கி சென்றாள்.
அடுத்த வாரம் தேர்வு ஆரம்பம்.. அதற்கு முழு மூச்சாக அனைவரும் படிக்க ஆரம்பித்தனர்.
தேர்வு ஆரம்பித்ததால் வினோதனிடம் நதியால் எப்பவும் போல் பேச முடியவில்லை. ”படிக்க நிறைய இருக்கு” என நதி சொல்லிவிட்டாள். அதனால் பேச நேரமில்லாமல் போனது.
இப்படியே நாட்கள் செல்ல, தேர்வுகள் அனைத்தும் முடிந்து அனைவரும் விடுமுறையில் வீட்டில் இருந்தனர்.
அடுத்த வாரம் கல்லூரி திறப்பு. அதற்குள் நதிக்கு வினோதனுடன் வெளியே செல்ல வேண்டும் என்று ஆசை.
வினோதனிடம் சொன்னாள். அவனும் அந்த வாரத்தில் ஒரு நாள் அவளை கோவிலுக்கு அழைத்து சென்று பின் அருகில் உள்ள கடைக்கு அழைத்து சென்று, அவர்கள் இருவர் பெயர் போட்டு ஒரு கீசெயினை வாங்கி தந்தான். அதுவே அவர்களுக்கு வினை ஆனது.
கல்லூரி திறந்ததும் நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. நதி மாலை ஹிந்தி வகுப்பும் சென்று கொண்டிருக்கிறாள். வாரத்தில் மூன்று நாட்கள் ஹிந்தி வகுப்பு. அவள் மூத்த சகோதரி வீட்டிற்கு வந்துவிட்டார். நாளை கிறிஸ்துமஸ். அதனால் கல்லூரியில் விடுமுறை. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை.. எனவே டிரிபிள் (triple) டமாக்கா லீவ் தான் அவர்களுக்கு… இன்று மாலை ஹிந்தி வகுப்பு செல்ல வேண்டும்.
கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் நதி சாப்பிட்டு விட்டு, மொட்டை மாடிக்கு மொபைல் எடுத்து சென்று விட்டாள். வினோதனிடம் கொஞ்சம் ரொமாஸ்ஸாக பேசிக்கொண்டிருந்தாள்.
”உங்களுக்கு 1 பேபி வேணுமா, இல்ல 2 பேபி வேணுமா?” என்று நதி கேட்க,
“எனக்கு 2 வேணும்.. ஒன்னு என்னைய மாதிரி.. இன்னொன்னு உன்ன மாதிரி” என வினோதன் பதில் சொல்ல,
“எனக்கு என்னைய மாதிரிலா வேண்டாம்… இரண்டுமே உங்கள மாதிரி அழகா இருந்தா போதும்”
“சரி ஆனா உன்ன மாதிரி கொழுகொழுனு இருக்கனும் ஓகேவா?”
”சரி எனக்கு ஹிந்தி கிளாஸ்ஸுக்கு நேரமாச்சு நான் நைட்டு பேசுறேன்”
“அப்டியெல்லாம் உடனே விடமாட்டேன்.. எனக்கு லவ் யூ சொல்லு அப்ப தான் விடுவேன்”
”சரி சரி ஐ லவ் யூ போதுமா” என இவள் வெட்கத்துடன் பேச,
“போதாதே… எதாச்சும் வேணும்” என்று வினோதன் சொல்ல,
”உம்ம்ம்ம்ம்மாமாமாமா” என மொபைலுக்கு முத்தம் வைத்தாள்.
”அவ்ளோ தானா?” என்று வினோதன் ராகம் இழுக்க,
“ஏங்க எனக்கு நேரமாச்சுங்க… ப்ளீஸ்” என்று நதி கெஞ்ச,
“அப்ப மிச்சத்தை நைட்டு வச்சுக்குவோம்.. சரியா?”
“சரி சரி பாய்” என்று நதி அவள் மொபைலை அவள் கல்லூரி பைக்குள் ஒளித்து வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
அய்யோ பாவம்.. அவள் அறியாதது அவள் பேசிய அனைத்தையும், அவள் எதிர் வீட்டு அண்ணன், அவள் மூத்த சகோதரியின் நண்பன் கேட்டுவிட்டார் என்பதும், கேட்டு ஒன்றுவிடாமல் அவள் சகோதரியிடம் சொல்லி விட்டார் என்பதும் தான்.
நதி ஹிந்தி வகுப்பு முடிந்து வீட்டுக்குள் வந்ததும், ஏனென்றே கேட்காமல் அவளை அவள் சகோதரி அடித்து வெளுத்துவிட்டார்.
அவள் தாய் அவர் பங்குக்கு அடித்து விட்டு ”நாளையிலிருந்து கல்லூரிக்கு போன நீ கைமா தான்” என எச்சரித்து விட்டு சென்றார்.
நதிக்கு நடந்த எதுவும் தெரியாததால் ’என்னாச்சு?.. எதுக்கு அடிச்சாங்க’ என்ற ரீதியில் தான் இருந்தாள்.
பிறகே இரவு உணவின் போது அவள் தந்தை, “உன்னைய நம்பி தான அனுப்புனோம் கல்லூரிக்கு.. காதலிக்குற வயசா உனக்கு..? நீ இப்டி பண்ணுவன்னு நினைக்கவே இல்ல நதி… இனி என் கிட்ட பேசாத” என சொல்லி விட்டு சென்றார்.
போதாததிற்கு அவள் தந்தை மனவருத்தம் என்று அவள் சித்தப்பாவிடம் சென்று அனைத்தையும் கூறிவிட்டு வந்தார்.
அவள் சித்தப்பா வீட்டிற்கே வந்து அவளிடம், ‘’ஏன் நதி இப்டி பண்ற? அப்பா எவ்ளோ வருத்த படுறாங்க தெரியுமா? நீ நல்லா படிக்கிற பொண்ணுனு நினச்சா நீ இப்டி பண்ற?.. உனக்கு படிக்குற ஆச இருக்கா இல்லையா?” என்று கேட்டார்.
நதியோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, ”எனக்கு படிக்கனும்..” என்று அழுகுரலில் கூறினார்.
”அப்ப அந்த பையன போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லு…” என அவள் சித்தப்பா சொல்ல,
இவளும் தைரியமாக வினோதனுக்கு போன் செய்து “வீட்டில் பிரச்சனை.. வீட்டில் பேச வேண்டும் என்று சொல்றாங்க.. வீட்டுக்கு வாங்க” என்று சொல்ல,
அவனோ, ”நான் ஊரில் தாத்தா வீட்டில் இருக்கிறேன்.. வர 1 மணி நேரம் ஆகும்” என்று சொன்னான்.
”சரி பரவாயில்ல.. வாங்க” என்று சொல்லி இவள் போனை வைத்து விட்டாள்.
இவளும் அவனுக்காக வெகு நேரம் காத்திருந்தாள். அவள் அழைத்தும் போன் பிஸி என்றே வந்தது.. இரவு நேரம் கடந்தும் அவன் வரவில்லை.. அவளுக்கு மனதே விட்டுவிட்டது. ’எவ்வளோ நம்புனேன்.. எதுக்கு இன்னும் வரல.. எதுவும் அவங்க வீட்லயும் பிரச்சனையோ?’ என பலவிதமாக மாடியில் அமர்ந்து தனிமையில் யோசித்து கொண்டிருந்தாள்.
அவள் சித்தப்பா அவளிடம் வந்து, ”பாத்தியா.. நீ கூப்டு இவ்ளோ நேரம் ஆகியும் அவன் வரல.. இந்த காலத்து பசங்களே இப்படி தான்.. தேவைக்கு தான் பழகுவாங்க.. உனக்கு புரிய வைக்க தான் அவன வரசொல்லி சொன்னோம்.. இதுல இருந்தே நீ புரிஞ்சுக்குவனு நம்புறேன்… வீட்ல சொல்லிருக்கேன்.. இனி இந்த மாதிரி எதுவும் பண்ண மாட்ட.. ஒழுங்கா படிப்பனு.. நம்பிக்கைய காப்பாத்து..உனக்காக பேசிருக்கேன்.. நல்லா படி” என்று கிளம்பி விட்டார்.
மறுநாள் விடிந்தது.. இன்று கிறிஸ்துமஸ்…வினோதனுக்கு எதுவும் பிரச்சனையா என்று முகநூலில் சென்று கேட்கலாம் என முகநூல் சென்றாள். அங்கு அவன் முகநூலில் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் இருப்பது போல போட்டோ எடுத்து போட்டிருந்தான்.
அதை பார்த்ததும் அவளுக்கு கடுப்போ கடுப்பு.. ‘ஏன்டா பரங்கிக்காய் வாயா.. நான் கூப்டா வர நேரமில்ல.. ஆனா போட்டோ எடுத்து போட நேரமிருக்கோ.. இனி நீயே பேசுனாலும் நான் பேச மாட்டேன்டா..’ என முகநூல் விட்டு உடனே சென்று விட்டாள்.
திங்கள்கிழமை கல்லூரியில் வினோதன் இவளை பெரிய டைரிமில்க் சாக்லேட்டுடன் பார்க்க வந்திருந்தான். இவளுக்கோ கோபமான கோபம்.. ‘நம்பிக்கையான நேரத்தில் உடன் இருக்காமல் இப்போது சாக்லேட் வாங்கி வந்து சமாதானம் செய்ய பாக்குறானா? என.. அப்புடியா நான் ஈசியா போய்ட்டேன்’ என்று முகம் திருப்பினாள்.
அவனோ, ”சாரி நதி.. நான் தான் நேத்து ரொம்ப பேசிட்டேன்.. அதான் உனக்கு கஷ்டம்.. இனி உன் வீட்ல சொன்னமாதிரியே நான் உன்ன படிப்பு முடியுற வரைக்கும் தொந்தரவு பண்ண மாட்டேன்.. அவசரம்னா மட்டும் உன்கிட்ட பேசுறேன்.. சரியா?” என்றான்.
”நீங்களா ஒன்னு நினச்சு நீங்களா எதாச்சும் செய்விங்களா? என் வீட்ல என்ன சொன்னாங்க.. சும்மா என்னைய சமாதானம் பண்ணனும்னு எதாவது சொல்லாதிங்க.. அன்னைக்கு உங்கள எவ்ளோ எதிர்பாத்தேன்.. அப்ப ஏமாத்திட்டு இப்ப மட்டும் எதுக்கு வந்திங்க?” என கேட்டாள்.
”உன் வீட்டுக்கு வராதது தப்பு தான்.. எனக்கு உன் வீட்டுக்கு வர கஷ்டமா இருந்துச்சு…”
”அதுக்காக உங்கள நம்பி தான நான் சொன்னேன்.. எவ்ளோ நம்புனேன்.. நீங்க வருவிங்க.. வீட்ல பேசுவிங்கனு.. எங்க வீட்ல என்ன பாக்குற பார்வை எப்டி இருந்துச்சு தெரியுமா? அதெல்லாம் சொன்னா புரியாது.. அனுபவிச்சா தான் புரியும்.. என்கிட்ட பேசாதிங்க”
”நான் உங்க தெரு வரைக்கும் வந்துட்டேன்.. வீட்டுக்கு வர ஒரு மாதிரி இருந்துச்சு.. என் பிரண்ட் கிட்ட சொன்னேன்.. அவன் தான் இருக்குற பிரச்சனைய பெருசாக்காதனு சொல்லி போகவேண்டாம்னு சொன்னான்.. ஆனாலும்…”
”ஓஓ… உங்க பிரண்ட் சொன்னானு என் வீட்டுக்கு வரலயா.. அப்ப அவன் கூடவே போங்க.. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா.. இதுல முகநூல்ல போட்டோ போட எல்லாம் நேரம் இருக்கு.. எனக்காக என் வீட்ல வந்து பேச நேரமில்லை… இனி என்கிட்ட பேசாதிங்க.. சும்மா வெட்டி சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு ஆனாலும் இல்லேனாலும்னுட்டு ச்ச்சே”
”ஹே என்னடி இப்டி சொல்ற… எனக்காக அடி எல்லாம் வாங்குன.. உன்ன அப்டியே விட்ருவேனா? நான் உன் சித்தப்பாட்ட அவ்ளோ பேசியும் என் மேல நம்பிக்கை இல்லையா செல்லம்?”
விறுட்டென்று நிமிர்ந்து “என்ன என் சித்தப்பாகிட்ட பேசுனிங்களா? என்கிட்ட சொல்லவே இல்ல..”
”எப்டி நான் சொல்ல? போன் பேச மாட்டேன்னு உன் வீட்ல சொல்லிட்டேன்… முகநூலுக்கும் நீ வரது இல்ல.. அப்புறம் எப்டி சொல்ல?.. ஏன் உன் வீட்ல சொல்லலயா?”
”இல்லயே என்கிட்ட எதுவும் சொல்லலயே.. நீங்க என்னய சமாதானம் பண்ணனும்னு சும்மா தான சொல்றிங்க… ?”
“அடியே சப்பமூக்கி” எனவும் அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.
”சரி சரி.. உண்மைய சொன்னா ஒத்துக்கோ.. சொல்றத கேளு.. நான் நீ கூப்ட அன்னைக்கே உன் வீட்டுக்கு வர தயக்கமா இருக்குனு உன் சித்தப்பாக்கு போன் பண்ணி அவர் வீட்டுக்கு போய் பேசுனேன்”
“நிஜமாவா?” என கண்களை விரித்து அவள் கேட்கவும்,
”ஹே.. முட்டகண்ணி நிஜமாதான் சொல்றேன்.. அவர் வீட்டுக்கு போனதும் அவர் ரொம்ப சத்தம் போட்டார்.. உங்களுக்கு என்ன வயசு.. படிக்குற பிள்ளைய எதுக்கு கெடுக்குறிங்கனு?”
”அப்றம் நீங்க என்ன சொன்னிங்க?”
“அழகிக்கு ஓவர் ஆர்வம் போல.. இப்ப மட்டும் கதை கேக்குற…ம்ம்ம்”
“அய்யோ சொல்லுங்க ப்ளீஸ்.. இல்லேனா மண்டையே வெடிச்சுரும்…”
”சரி சொல்றேன்.. நானும் அப்டியெல்லாம் இல்ல.. நதிய எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. நாங்க படிச்சு முடிச்சதும் நல்ல நிலைமைக்கு வந்து அவள கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேன்.. வேணும்னா எங்க குடும்பத்த பத்தி விசாரிச்சுக்கோங்கனு சொல்லி என் தாத்தா, அப்பா பத்தி எல்லாம் விளக்கம் குடுத்தேன்… அடுத்து உங்க வீட்டுக்கு போன் பண்ணி நதிய படிக்க அனுப்புங்க.. அவ படிச்சு முடிக்குற வரைக்கும் அவள நானா தொந்தரவு பண்ண மாட்டேன்.. அவளுக்கு படிக்க பிடிக்கும்.. எங்கள மன்னிச்சு அவள படிக்க அனுப்புங்கனு சொன்னேன்..”
”இவ்ளோ நடந்துருக்கா? என்கிட்ட யாரும் எதுவும் சொல்லல…”
“அத நீ உன் வீட்ல தான் கேக்கனும் அழகி.. நான் உனக்கு எல்லாம் தெரியும்.. பாத்ததும் வந்து சந்தோஷத்துல கட்டி பிடிப்பனு பாத்தா.. இப்டி கோபப்படுற..”
”ஆமா ஆமா.. பேசுனதுக்கே வீட்ல அடி.. இதுல கட்டிவேற பிடிக்கனுமாக்கும்.. போங்க” என்று சிணுங்கினாள்.
”சரி இந்தா” என சாக்லேட்டை அவளிடம் குடுத்துவிட்டு கிளம்பினான்.
error: Content is protected !!