Skip to content
Post Views: 2,356
அத்தியாயம் 34
கருணாவின் பயிற்சி பதினாறு மாதங்கள். மிகவும் கடுமையான பயிற்சி காலம். முதல் நூறு நாட்கள் ஐ பி எஸ், ஐ ஆர் எஸ், ஐ ஈ எஸ் என எல்லா பிரிவு அதிகாரிகளுக்கும் பொதுவான பயிற்சி. அதன் பின்னரே எகனாமிக்ஸ் குரூப்பிற்கு தனி பயிற்சி. இப்பொழுது தான் பொது பயிற்சி காலம் முடிந்து அவளது சிறப்பு பயிற்சி ஆரம்பமாகிறது.
Advertisement
வீட்டிற்கு தினமும் தொலைபேசியில் பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. வாரம் ஒரு முறை மட்டுமே பேசுவாள்.
அவளது பளுவை புரிந்து கொண்ட வீட்டாரும் அதிகம் அவளை தொந்தரவு செய்வதில்லை.
Advertisement
Advertisement
இந்த பயிற்சியை விரும்பியே மேற்கொள்வதால் அவளுக்கு கஷ்டமாக இல்லை. இஷ்டப்பட்டு செய்யும் எதுவும் கஷ்டமாக இருக்காது என்பதே அவளது எண்ணம்.
இருந்தும் சில சமயங்களில் சோர்வு ஏற்படத்தான் செய்கிறது.
Advertisement
நாள்தோறும் தவறாமல் அவினாஷிடம் இருந்து வாய்ஸ் மெசேஜ் மட்டும் வந்துவிடும். சோர்ந்து போகும் நேரங்களில் அந்த குரலே அவளுக்கு புத்துணர்ச்சி தரும்.
பொதுவாக அவனது நாள் எப்படி சென்றது, அவன் அன்று யாரை எல்லாம் சந்தித்தான், அவன் படிச்சதில் பிடிச்ச விஷயம், அவன் கேட்ட பாடல்வரிகளில் மனதை தொட்ட வரிகள் என்று. ஒரு பத்து நிமிஷம்.. உன்னால முடிஞ்ச அப்போ மெசேஜ் பண்ணு கருணா. உடம்பை பாத்துக்க.. கஷ்டமா இருக்கும்பொழுது ஒரு ரெண்டு நிமிஷம் கண்ணை மூடி ஆழ்ந்து மூச்சை விட்டு கடவுளை பிரார்த்திச்சுக்கோ.. உன்னால முடியும்” என்று கூறி முடித்திருப்பான்.
சோர்வாக இருக்கும் பொழுதுகளில் அவினாஷின் குரலை தான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வாள்.
நேரம் கிடைக்கும் போது அவள் அழைத்தே பேசிவிடுவாள்.
இங்கு பாரியும் வில்வாவும் ஒரு வழியாக டெல்லியில் இருந்து சென்னை வந்து சேர்ந்துவிட்டார்கள்.
முருகானந்தம் தாத்தா பேரனுக்காக பிசியோதெரப்பி சென்டர் ஆரம்பிக்கும் ஏற்பாடுகளில் முழுதாக இறங்கி விட்டார்.
“ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ்சாகவே ஆரம்பிக்கலாம் ப்பா, வில்வா பங்கு எவ்வளவோ நாங்க கொடுத்திடறோம்” என்று கூறி சங்கரனும் அவருடன் இணைந்து கொண்டார்.
“மூனு பங்கா போடுங்க தாத்தா, அருந்ததியும் அவங்க கூட தான் சேரனும்னு சொல்லிட்டு இருக்கா. அந்த ஷேர் நான் கொடுத்திடறேன்” என்று சேர்ந்துகொண்டான் அவினாஷ்.
“நான் ரெண்டு வருஷம் வெளிய வேலை பார்த்துட்டு இங்கே சேர்ந்துக்கிறேன் அண்ணா” என்று கூறி இருந்தாள் அருந்ததி. அதுவரை நாம ஸ்லீப்பிங் பார்ட்னர்ஸ்ஸா இருப்போம். நீ சேர்ந்த பிறகு ஆக்ட்டிவா ஆகிக்கலாம்” என்று முன்னமே தங்கையிடம் கூறி இருந்தான்.
முருகானந்தம் தாத்தாவிற்கு பேரனுக்காக தனியே செய்ய முடியவில்லை என்று ஒரு சிறு வருத்தம் இருந்தாலும், பேரனுக்கு இது தான் விருப்பம் என்று புரிந்து இந்த ஏற்பாட்டை ஒத்துக்கொண்டார்.
அதற்காக அனைவரும் பரபரப்பாக இருந்தனர்.
———————–
“நம்மளை ஒண்ணுமே செய்ய விட மாட்டேங்கிறாங்களே வில்வா”
“ஆமா பாரி, உங்க தாத்தா, எங்க தாத்தா, அப்பாங்க, அவின்னு ஒரு பெரிய பட்டாளமே தீயா வேலை செய்யறாங்க. எல்லாம் நம்ம அதிர்ஷ்டம் தான்”
“ஹா ஹா.. உண்மை தான் டா.. இந்த மம்மீஸ் ரெண்டு பேரும் என்னடா பண்றாங்க? நம்ம இங்கே வந்து ஒரு வாரம் ஆகப் போகுது. இன்னும் பொண்ணு ஒன்னும் பார்த்த மாதிரி தெரியலையே?”
பாரியும் வில்வாவும், அவர்களுக்கு பிடித்த இடமான வில்வா வீட்டு கேட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ஏன்டா ? இன்னும் வாட்ச் மேன் கணக்கா இங்கே நின்னு தான் பேசிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு யார்டா பொண்ணு கொடுப்பா?” என்றார் பாட்டி உள்ளே இருந்து.
“ஏன் சொல்ல மாட்டீங்க பாட்டி? எங்க தாத்தா மாதிரி அடாவடி, வாயாடி பொண்ணு கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு எங்க அம்மாங்க நல்ல பொண்ணா பார்த்துட்டு இருக்காங்க. அதான் கொஞ்சம் டைம் எடுக்குது”
“டேய் டேய்.. என்னை மாதிரி அடாவடி வேண்டாம்னா சொல்றீங்க இல்ல.. பாருங்க டா, உங்களுக்கு அடாவடி மட்டும் இல்லாம அடிதடி பொண்ணுங்களா வரப்போறாங்க” என்று மோவாயில் இடித்து கொண்டு சென்று விட்டார் பாட்டி.
“என்ன பாரி பாட்டி இப்படி சொல்லிட்டு போகுது?”
“விடு வில்வா… நம்ம ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கிற வரைக்கும் நம்மள யாராலும் ஒன்னும் பண்ண முடியாது”
“எதுக்கும் அத்தைகிட்டயும் அம்மாகிட்டயும் பார்த்து நல்ல பொண்ணுங்களா பார்க்க சொல்லி ஒரு வார்ததை சொல்லி வைக்கணும்”
“சரி டா”
“இன்னும் ரெண்டு மாசம் வேலைக்கு போகணும். அப்புறம் தான் ரிலீவ் பண்ணுவாங்க.. இங்கேயாவது ஒரே ஷிப்ட்டா கேட்டு வாங்கணும்”
“ஆமா டா..”
பாரியும் வில்வாவும் சென்னைக்கு வந்து தங்கள் பழைய இயல்பு வாழ்வுக்கு திரும்பி கொண்டிருந்தார்கள். டெல்லியில் பொறுப்பாக இருந்து போர் அடித்துப்போய் இருந்தவர்கள், இங்கே அனைவரது கவனிப்பில் குதுகலமாக இருக்கிறார்கள்.
———————–
வர்ஷித்தாவும் ஹர்ஷித்தாவும் அத்தை வீட்டில் நன்றாக பொருந்தி போனார்கள். யாருமே எதிர் பார்க்காத சமயத்தில், சீதா லட்சுமி மிஸ் கருவுற்றார். அதை அறிந்து மகிழ்ச்சி என்பதை விட ஒரு வித பயம் தான் அதிகமாக இருந்தது அந்த தம்பதியனருக்கு.
அவர்களை, மிரட்டியே வழிக்கு கொண்டு வந்தனர் ஹர்ஷித்தாவும் வர்ஷித்தாவும்.
“சும்மா பயப்படாதீங்க மாமா, நீங்க பயந்து அத்தையை பயப்படுத்தறீங்க. அவங்க நல்லா ஆரோக்கியமா தான் இருக்காங்க”
“இல்லம்மா இந்த வயசுக்கு மேல..”
“என்ன வயசாயிடுச்சு இப்போ உங்க ரெண்டு பேருக்கும்?”
“இந்த குழந்தை வளர்ந்து நிக்குறப்ப நாளைக்கு எங்களுக்கு ஏதாவதுன்னு?”
“லூசு மாதிரி பேசாதீங்க.. நாப்பத்து மூனு வயசுல குழந்தைன்னு தயங்கி நிக்காம, எத்தனை ஏக்கத்திற்கு பிறகு கடவுள் அருள் புரிஞ்சிருக்காருன்னு சந்தோஷப்படுங்க. எப்படி ஆரோக்கியமா உங்களை வச்சுக்கிறதுன்னு யோசிங்க..”
“ஹர்ஷ், நாளைல இருந்து நாம மாமாவுக்கு பிட்னெஸ் ட்ரெயினிங் ஆரமிச்சிடலாம் விடு”
“என்னது?” என்று வாயை பிளந்து, பாவமாக மனைவியை பார்த்தார் ஸ்ரீனிவாசன்.
“பாசிட்டிவ்வா யோசிங்கன்னு சொல்லி இருக்கோம் தானே. அப்ப தான் எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று கூறி அவர்கள் பயத்தை போக்கிக்கொண்டு இருந்தார்கள் இருவரும்.
அவர்களுக்கு சென்னை வாழ்க்கை இப்பொழுது நன்றாக செட் ஆகிவிட்டது. இருவருக்கும் பீச், கோவில்கள், மால், மஹாபலிபுரம், ஸ்கூல் என்று இங்கே அனைத்தும் மிகவும் பிடித்து இருந்தது. அத்தையிடம் தமிழ் கற்றுக்கொண்டு வருகின்றார்கள். தமிழ் உச்சரிப்பு இப்பொழுது நன்றாக பழகிக்கொண்டனர்.
கால் வலி என்று முடங்கி கிடந்த பாட்டி இப்பொழுது இருபது வயது குறைந்தவர் போல உற்சாகமாக காணப்பட்டார். வந்ததில் இருந்தே பேத்திகளின் வற்புறுத்தலில் நடை பயிற்சி யோகா எல்லாம் மேற்கொண்டு இருந்தார் தான். மகள் கருவுற்றிருக்கிறாள் என்பது அவரை இன்னும் உற்சாகமாக்கியது.
“நீங்க வந்த நேரம் தான், உங்க அத்தை மனசும் வயிறும் நிறைஞ்சு இருக்கு டா” என்றார் பேத்திகளிடம் வாஞ்சையாக.
“போங்க பாட்டி, நாங்க இங்க வந்ததாலே எல்லாம் இல்லை , மாமா அத்தை கூட கொடைக்கானல் போனது தான் காரணம்” என்றாள் வர்ஷ் சிரிக்காமல் சீரியசாக..”
ஸ்ரீனிவாசன் தான் சங்கோஜப்பட்டு போனார் பெண்களின் கேலியில்.
அப்பொழுது, “அத்தை நிஜமாலுமே மாமா வெட்க படறது பார்க்க அழகா இருக்கு. எங்க வீட்ல பப்பா எப்பவும் ஸ்ட்ரிக்ட்டா தான் இருப்பாரு, மீ தான் வெட்க படுவாங்க. அது கொடுமையா தான் இருக்கும், இப்படி கியூட்டா இருக்காது” என்றாள் ஹர்ஷ்.
குழந்தை ஏக்கத்தில் ஒரு வித விரக்தி மனநிலையில் இருந்தவர்கள் வாழ்வில் ஹர்ஷ் வர்ஷின் வருகை அவர்கள் கூறியதை போலவே ஒரு பாசிட்டிவ் வைப்பய் ஏற்படுத்தி இருந்தது. அது தான் இந்த மகிழ்ச்சியான விஷயத்துக்கு காரணம் என்றே நினைத்தனர் ஸ்ரீனிவாசனும் சீதாலட்சுமியும்.
இந்த மகிழ்ச்சியை கொண்டாட ஏதாவது பரிசு கொடுக்க விரும்புவதாக கூறினார் சீதாலட்சுமி.
“எங்களுக்கு எதுக்கு அத்தை? அது எல்லாம் ஒன்னும் வேணாம்”
“எனக்கு கொடுக்கணும் போல இருக்கு. என்ன வேணும்னு கேளுங்க?”
“பஸ்ல போறது கஷ்டமா இருக்கு, வேணும்னா ஒரு டூ வீலர் வாங்கி கொடுங்களேன்”
“அவ்வளவு தானே, இப்பவே போய் வாங்கிட்டு வாங்க”, என்று கூறி கணவரையும் உடன் அனுப்பி வைத்தார்.
“எனக்கு வண்டி பத்தி அவ்வளவா தெரியாது சீதா” என்று அவர் கூறியதால், அவினாஷிற்கு அழைத்து அவனை ஷோ ரூமிற்கு வந்து கொஞ்சம் உதவும்படி கூறினார் சீதாலட்சுமி.
அவினாஷிற்கு அவர் அழைத்த போது அவன் தமயந்தி வீட்டில் இருந்தான். அங்கே தான் பாரி வில்வா அருந்ததி எல்லாரும் இருந்தனர்.
அவன் விஷயத்தை கூறவும், “அண்ணா எனக்கும் ஒரு வண்டி வாங்கி தாங்களேன்” என்றாள் அருந்ததி.
“நீ சொன்னதும் தான் நியாபகம் வருது பாப்பா.. பாப்பா ஊருக்கு போகும் போதே பாப்பாகிட்ட சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு போச்சு பாப்பா..“ என்றார் தர்மராஜ்.
“அப்பா எந்த பாப்பா ..எத்தனை பாப்பா.. ஒன்னும் புரியலை போப்பா” என்றான் பாரி.
சரியாக அப்பொழுது உள்ளே வந்து “பாப்பா எனக்கு ஒரு காபி கொடு பாப்பா, லேசா தலை வலிக்குது பாப்பா” என்றார் வேதச்சலாம் தாத்தா தமயந்தியிடம்.
“டேய் இதுக்கு மேல முடியாதுடா. நாளைக்கு நமக்கு பாப்பா பொறந்தா எப்படி டா கூப்பிடுவாங்க..குட்டி பாப்பா, குட்டி குட்டி பாப்பான்னா?” என்று வில்வா கூற கொல்லென்று சிரித்து விட்டனர் அனைவரும்.
“கருணா பாப்பா ஊருக்கு போகும் பொழுது, அவ டூ வீலரை அருந்ததி பாப்பாக்கு கொடுக்க சொல்லிட்டு போச்சு. நல்லா ஓட்ட பழக்குனதுக்கு அப்புறம் எடுக்க சொல்லுச்சு, ஓவரா பண்ணாதீங்க போங்கடா” என்றார் தர்மராஜ் விளக்கமாக.
“உனக்கு புதுசு தான் வேணும்னாலும் வாங்கிக்கலாம் பாப்பா” என்றான் அவினாஷ்.
“அது எல்லாம் வேணாம் அண்ணா, எப்பயாவது தானே எடுக்க போறேன். கருணாக்காதே போதும்”
“அதானே.. புது வண்டி வாங்கிட்டாலும், சரியான கஞ்சூஸ் கும்பல்கிட்ட மாட்டிகிட்டு நாங்க படுற பாடு” என்று அலுத்துக்கொண்டான் பாரி.
“நான் போய்ட்டு வரேன் அத்தை” என்று அவினாஷ் கிளம்புகையில், நாங்களும் வருகிறோம் என்று தொத்திக்கொண்டனர் பாரி வில்வா அருந்ததி மூவரும்.
இவர்கள் சென்று சேர்ந்த போது சரியாக ஸ்ரீனிவாசனுடன் ஹர்ஷ் வர்ஷும் வந்து சேர்ந்தார்கள்.
இவர்கள் ஆக்டிவா, ஸ்கூட்டி இப்படி பார்ப்பார்கள் என்று நினைத்திருந்தார் ஸ்ரீனிவாசன். அவர்களோ கெத்தாக இருந்த ஒரு புல்லட்டின் முன் நின்று, இது நல்லா இருக்கு மாமா என்றனர்.
“இது வெயிட்டா இருக்கும் ம்மா, அந்த பக்கம் லேடீஸ் வண்டி இருக்கு பாருங்க” என்றார் பெண்களுக்கு தெரியாது என்று நினைத்து.
“ஏன் சார், நீங்க எப்பவுமே இப்படி தானா? இல்ல இப்ப தான் இப்படியா?” என்றான் வில்வா அவரிடம்.
அவர் ‘ஆங்’ என்று விழிக்க, “நீங்க காட்டுற வண்டி எல்லாம் அவங்களுக்கு சைக்கிள் மாதிரி.. போனா போகுதுன்னு கொஞ்சம் கம்மி ரேஞ்சுல செலக்ட் பண்ணி இருக்காங்க. அங்க நிக்குது பாருங்க அந்த பைக் நாலு லட்சமாம். அது மேல வேற ஒரு கண்ணை வச்சிருக்காங்க.பேசாம சட்டு புட்டுன்னு இந்த வண்டியையே முடிச்சிடுங்க” என்றான் பாரி.
ஸ்ரீனிவாசன் அமைதியாக இருக்கவும், “விலை ஜாஸ்தினா மீக்கு போன் போட்டு காசு அனுப்ப சொல்லுவோம் மாமா” என்றாள் ஹர்ஷ்.
“அது எல்லாம் வேணாம், உங்க அத்தை கிட்ட அடி வாங்கி வைக்காம விடமாட்டீங்க போலவே” என்று அந்த வண்டியை புக் செய்தனர்.
இன்னைக்கே டெலிவரி எடுத்துக்கலாம், இப்ப தான் ஸ்டாக் வந்தது என்று கடைக்காரர் கூறவும் மகிழ்ச்சியாக வண்டியை எடுத்துக்கொண்டனர்.
“கோவிலுக்கு போயிட்டு பூஜை போட்டுட்டு வீட்டுக்கு வர சொன்னா உங்க அத்தை” என்றார் ஸ்ரீனிவாசன்.
“நீங்களும் வாங்களேன்” என்றார் ஸ்ரீனிவாசன் இவர்களிடம், ஒரு பேச்சுக்காக.
“கண்டிப்பா வர்றோம் சார். நாங்க எல்லா வேலையையும் விட்டுட்டு நீங்க வண்டி வாங்க போறீங்கன்னு வந்திருக்கோம்… “
“அப்படியே ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்து அனுப்புங்க சார்” என்று மாறி மாறி பாரியும் வில்வாவும் அவருக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாக பேசினார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் என்ன மேன், வந்ததிலுருந்து எங்க மாமாகூடவே ரகசியம் பேசிட்டு வர்றீங்க” என்று வர்ஷ் கேட்தற்கு,
“ஆம்பளைங்கக்குள்ள ஆயிரம் இருக்கும்.. நீங்க எதுக்கு கேக்குறீங்க?” என்றான் பாரி.
என்னமோ பண்ணுங்க போங்க என்று சகோதரிகள் வண்டியிடம் சென்றனர்.
யார் வண்டியை கோவில் வரை ஒட்டிக்கொண்டு வருவது என்று இருவருக்குள்ளும் வாக்கு வாதம் ஆரம்பித்தது..
“டெல்லில இருந்த வண்டிய வாங்குனப்ப, நீ தானே முதல்ல எடுத்த, இப்ப நான் தான் எடுப்பேன்” என்று ஆரம்பித்தாள் ஹர்ஷித்தா.
“அது எல்லாம் செல்லாது, அப்ப பப்பா கூடவே இருந்தாங்க.. ப்ரீயா ஓட்ட முடியலை.. இப்ப நான் தான் எடுப்பேன்” என்றாள் வர்ஷித்தா.
இருவருக்கும் சண்டை வலுத்தது.
யார் முதலில் வண்டியை எடுப்பது என்று பேசி கொண்டிருக்கையிலே, ஹர்ஷ் வண்டியில் ஏற முயற்சிக்கவும், அவளை பிடித்து கீழே தள்ளி விட்டாள் வர்ஷ்.
பேச்சு வார்த்தை, கை கலப்பாக மாறியது.
இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட அவர்களை பிரிக்க முடியவில்லை. கடையில் அப்பொழுது கூட்டம் இல்லாததால் வேடிக்கை பார்க்க என்று யாரும் வரவில்லை.
ஸ்ரீனிவாசனுக்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது.
அவினாஷ் தான் அவரை அழைத்து கொண்டு கடையினுள் சென்று அமர வைத்து குடிக்க தண்ணீர் வாங்கி கொடுத்தான்.
பாரியும் வில்வாவும் இருவரையும் விலக்கி விட முயற்சித்து, சில பல அடிகளையும் வாங்கிகொண்டார்கள்.
அருந்ததி சுவாரசியமாக வேடிக்கை பார்த்து கொண்டு நின்றாள்.
“ஏய் சின்ன பாப்பா ராஜிம்மாக்கு போனை போடு.. என்ன வேடிக்கை பார்த்திட்டு நிக்குற?” என்று கடுப்படித்தான் வில்வா.
ராஜிக்கு அழைத்து விஷயத்தை கூறவும், “நான் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புறேன், அதை போடு, அப்புறம் சண்டையை நிறுத்திடுவாங்க” என்று கூலாக கூறி போனை வைத்துவிட்டார்.
அருந்ததி அதை ஒலிக்க விடவும்,
“ஹர்ஷ்.. வர்ஷ்..” என்ற விக்ராந்தின் குரல்.
இருவரும் அடுத்த கணமே விலகி நின்றுகொண்டனர்.
போனை பார்த்ததும், அருந்ததியை முறைத்தனர்.
மீண்டும் அவள் அதை ஒலிக்க விடவும், அமைதியாகி விட்டனர்.
“அப்பாடா..” என்று சென்று அமர்ந்துவிட்டனர் வில்வாவும் பாரியும்.
அவினாஷ் வந்து, “யார் ஓட்றதுன்னு டாஸ் போடலாம். ஹெட் அ டைய்லா” என்றான் பெண்களிடம்.
இப்ப ஒருத்தர், கோவில்ல இருந்த ரிட்டர்ன் ஒருத்தர் என்று டீல் பேசி ஒரு வழியாக பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தான்.
“நாங்க கோவில் லொகேஷன் உங்களுக்கு அனுப்பி இருக்கோம் மாமா, சீக்கிரம் வாங்க எல்லாரும்” என்று கூறி வண்டியில் ஏறி அமர்ந்தாள் ஹர்ஷித்தா. வர்ஷித்தா பின் ஏறி அமரவும், சீறி பாய்ந்து சென்றது வண்டி.
எந்த கோவிலுக்கு போகணும் என்று கைபேசியை பார்த்து அதிர்ந்து விட்டார் ஸ்ரீனிவாசன்.
“என்னாச்சு சார்?”, என்று அவர் கைபேசியை எட்டி பார்த்த வில்வா “என்னது திருவண்ணாமலையா?” என்றான் நெஞ்சில் கை வைத்து.
அதை கேட்டு அவினாஷ்,”அவங்களுக்கு போன் போட்டு நிக்க சொல்லுங்க பாரி, இங்கேயே பக்கத்துல ஏதாவது கோவிலுக்கு போகலாம்” என்றான்.
“இந்நேரம் அவங்க பாதி தூரம் போயிருப்பாங்க.. பேசாம நாமளும் அங்கேயே போயிடுவோம். அண்ணாமலையாரே நம்மளை கூப்பிடற மாதிரி இருக்கு” என்றான் வில்வா.
“ரெண்டு கார் எதுக்கு அவ்வளவு தூரத்துக்கு, நீங்க இங்கேயே வண்டிய நிப்பாட்டிட்டு வந்துடுங்க சார். எங்க கார்லயே போய்டலாம்” என்றான் அவினாஷ்.
இவர்கள் ஐந்து பேரும் அவினாஷ் காரில் புறப்பட்டனர்.
போகும் வழியில் வீட்டிற்கு அழைத்து தகவல் கூறினார்கள்.
“அந்த அண்ணாமலையார் புண்ணியத்தில் சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது நடக்கட்டும் டா பாரி வில்வா, நல்லா சாமி கும்பிட்டுட்டு வாங்க” என்றார் பாட்டி .
சீதாலட்சுமி தான் வாங்கு வாங்குன்னு வாங்கினார் ஸ்ரீனிவாசனை. “பொண்ணுகளை எப்படி அவ்வளவு தூரம் வண்டி ஓட்ட அனுப்புனீங்க” என்று.
“ஹலோ மிஸ், நீங்க கேக்கறது எல்லாம் கரெக்ட் தான், ஆனா ஒரே ஒரு டவுட்” என்றான் பாரி.
அவர் அமைதியாக இருக்கவும், “பொண்ணுங்கன்னு சொன்னீங்களே அது யாரை.. ரெண்டு குட்டி பிசாசுங்களோடு இந்த அப்பாவி மனுஷனை அனுப்பி வைத்தது மட்டுமில்லாமல், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம திட்டிட்டு இருக்கீங்க”என்றான் வில்வா.
“டேய்…”
“இருங்க நான் கருணாக்கு போன் போட்டு உங்களுக்கு எடுத்துச் சொல்ல சொல்றேன். உங்களுக்கு எல்லாம் எங்க கருணா தான் கரெக்ட்”
“சரி சரி.. பார்த்து எங்க வீட்டுக்காரரை பத்திரமா கூட்டிட்டு போங்க” என்று சிரித்து கொண்டே பின்வாங்கி விட்டார்.
“நிஜமாலுமே அந்த அக்காஸ் சூப்பரா ஓட்டுறாங்க இல்ல அண்ணாஸ்” என்றாள் அருந்ததி.
“ஆமா இல்லம்மா” என்றார் ஸ்ரீனிவாசன் பெருமையாக.
“அது எல்லாம் சரிதான் சின்ன பாப்பா. நம்ம காரை உங்க அண்ணா இப்படி உருட்டிக்கிட்டு போனா, அவங்க திரும்ப பூஜை முடிச்சு சென்னைக்கே வந்திடுவாங்க”
“நான் ஸ்பீட் லிமிட்ல தான் ஓட்டுறேன். ரூல்ஸ் பால்லொவ் பண்ணாம என்ன செய்றது?” என்றான் உர்ரென்று அவினாஷ்.
“தம்பி நீங்க தான் ரொம்ப நியாயமா நடந்துக்கிறீங்க” நான் முன்னாடி உட்கார்ந்துக்கிறேன், ஓரமா நிப்பாட்டுங்க” என்று கூறி ஸ்ரீனிவாசன் தப்பித்தால் போதும் என்று முன்னிருகைக்கு மாறிக்கொண்டார்.
பின்னாடி பாரி வில்வா அருந்ததி மூவரும் அரட்டை கச்சேரியை ஆரம்பித்து கலகலப்பாக வந்தார்கள்.
திருவண்ணாமலையில் வண்டிக்கு பூஜை போட்டுவிட்டு, அங்கேயே ஒரு நல்ல ஹோட்டலில் உணவை உண்டு கிளம்பினார்கள்.
“அக்கா எனக்கு உங்க வண்டியில பின்னாடி வரணும்னு ஆசையா இருக்கு” என்று அருந்ததி கேட்டாள்.
“ஆமா, புது வண்டி வாங்கி எங்க எல்லாரையும் கூட்டிட்டு போகணும் இல்ல” என்றான் வில்வா.
“நாங்க அஞ்சு பேர் இருக்கோம், ஒவ்வொருத்தரா கொஞ்ச தூரம் கூட்டிட்டு போங்க” என்றான் பாரி.
பெண்களுக்கு இது புது விதமாக இருக்கவும், ஒரு வித உற்சாகத்தை கொடுத்தது.
“டீக் ஹேய்.. ஒவ்வொரு இருபது கிலோமீட்டக்கும் ஒருத்தர் வாங்க”, என்று முதலில் அருந்ததியை வர்ஷ் ஏற்றிக்கொண்டாள்.
“நான் காரை எடுக்கிறேன்”, என்று ஹர்ஷ் மற்றவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.
சீறி பாய்ந்தது புல்லெட். அதனை நெருக்கமாக தொடர்ந்தது கார்.
“மெதுவா ம்மா மெதுவா..” என்று அவினாஷும் ஸ்ரீனிவாசனும் அலறியது காற்றில் தான் கலந்தது.
அடுத்த ரவுண்ட் பாரி, அடுத்து வில்வா டர்ன் முடிந்தது.
‘சூப்பர் அக்காஸ்’ என்று அருந்ததி அவர்களின் பேன் ஆகவே மாறிவிட்டாள்.
அடுத்து சீக்கிரம் வாங்க என்று வர்ஷ் கூறவும், “நீ போப்பா” என்றார் ஸ்ரீனிவாசன், “நீங்க போங்க சார்” என்றான் அவினாஷ்.
நாங்க கார்லயே வர்றோம் என்று கூறிய இருவரையும் மல்லுக்கட்டி ஒவ்வொருத்தராக புல்லட்டில் ஏற்றியே இறக்கினார்கள்.
ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தனர் அனைவரும். முதலில் ஸ்ரீனிவாசன் வீடு தான் வந்தது.
“நாங்களே உங்க காரை போகும் போது எடுத்திட்டு போய்டறோம் சார், நாளைக்கு கொண்டு வந்து தர்றோம், இல்லை இன்னிக்கே வேணுமா?” என்றான் அவினாஷ்.
“பரவாயில்லை அண்ணா, நாளைக்கே கொடுங்க போதும். அவசரம்னா எங்க கிட்ட தான் வண்டி இருக்கே” என்றாள் ஹர்ஷித்தா.
ஸ்ரீனிவாசனின் திருட்டு முழியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் பாரி வில்வா அருந்ததி மூவரும்.
அவினாஷ் தான் அவர்களை கண்டித்து வண்டியில் ஏற்றி கிளம்பினான்.
அத்தை நீங்க ஒரு ரவுண்ட் வர்றீங்களா என்று சீதாலட்சுமியை கேட்கவும்,
“ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் ம்மா எம்பொண்டாட்டி மாசமா இருக்கா.. அவளை விட்டுடுங்களேன்” என்றார் ஸ்ரீனிவாசன் பாவமாக.
அவரை முறைத்து கொண்டே, “நீங்க வாங்க பாட்டி” என்று பாட்டியை ஒரு ரவுண்ட் அழைத்து சென்று வந்தனர்.
பின் ராஜிக்கு அழைத்து வீடியோ காலில் வண்டியை காட்டினார்கள்.
மீ எப்படி இருக்கு?
“சூப்பர் வர்ஷ்! நம்ம க்ரிஷ் மாதிரியே இருக்கு தானே?”
“யார் அது க்ரிஷ்” என்றார் சீதாலட்சுமி.
“மீ மீ.. அத்தைக்கு காட்டு” என்றனர் பெண்கள் உற்சாகமாக.
ராஜி வெளியே சென்று அங்கே நின்றுகொண்டிருந்த பைக்கை காட்டினாள்.
“இந்த வண்டி தான் க்ரிஷ்ஷா?” என்றார் அவர் சிரித்துக்கொண்டே.
“சும்மா எப்படி பறக்கும் தெரியுமா க்ரிஷ்” என்றனர் உற்சாகமாக.
“சரியா போச்சு, சரி இந்த வண்டிக்கு என்ன பெயர் வைக்க போறீங்க?” என்றார் பாட்டி.
“நான் தான் வைப்பேன், நான் தான் வைப்பேன்” என்று அங்கே இருந்து ராஜி கத்தினார்.
“சொல்லு மீ.. இந்நேரம் யோசிச்சு இருப்பியே?”
“ ‘குஷ்’ எப்படி இருக்கு?” என்றார் ஆசையாக.
“சூப்பர் மீ.. க்ரிஷ்.. குஷ்..”
“மீ உன் ஷ் பிளாஷ் பேக் ஸ்டோரிய இவங்க கிட்ட எல்லாம் சொல்லு அப்பதான் இந்த பெயரோடு அருமை புரியும், நாங்க போய் பிரெஷ் ஆகிட்டு வர்றோம்” என்று உள்ளே சென்றுவிட்டனர்.
ராஜியின் கதையை கேட்டு, நொந்து போய் அமர்ந்துவிட்டனர் அனைவரும்.
—————————–
error: Content is protected !!