Skip to content
Post Views: 1,997
அத்தியாயம் 36
விசேஷம் நல்லபடியாக முடிந்து அனைவரும் அக்கடா என்று ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து கொண்டனர். அனைவரும் கருணா வீட்டில் தான் இருந்தனர்.
Advertisement
“ராத்திரிக்கு சாப்பாடு வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம், களைச்சு தெரியுறீங்க எல்லாரும்” என்றார் வீரராகு தாத்தா.
அவினாஷ்,”வேண்டாம் தாத்தா, நான் நேத்தே மாவு அரைச்சு வச்சிட்டேன் தாத்தா, நானே எல்லாருக்கும் இட்லியும் சட்னியும் ரெடி பண்ணிட்றேன். மதியமே வெளியில ஆர்டர் பண்ண சாப்பாடு, திரும்ப வெளிய சாப்பிட்டா பெரியவங்களுக்கு ஒத்துக்காது இல்ல” என்றான்.
Advertisement
Advertisement
பாட்டி அவனை பரவசமாக பார்த்து கொண்டிருந்தார், ’எத்தனை எத்தனை பொறுப்பு இந்த பையனிடத்தில்’ என்று. வாழ்க்கையில் அவன் பல இன்னல்களை கடந்து வந்தாலும், பொறுப்புகளில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை. அவன் சந்தித்த சவால்களும் சோதனைகளும் தான் எத்தனை, எல்லாம் அவனுக்கு வயதுக்கு மீறிய பக்குவத்தை கொடுத்து இருக்கிறது.
“இந்த புள்ள உட்கார்ந்து இளைப்பாற ஏதுவான வாழ்க்கை துணையை அந்த கடவுள் கொடுக்கணும்” என்று மனதார வேண்டிக்கொண்டார் அந்த முதிய பெண்மணி.
Advertisement
“டேய், பாட்டி பார்வையே சரி இல்ல பாரி,வச்ச கண்ணு எடுக்காம அவியை பார்த்துட்டு இருக்கு, வா நாம நைசா உங்க வீட்டுக்கு போய்டலாம். இல்லனா அட்வைஸ் ஆரம்பிச்சிடும்ன்னு நினைக்கிறேன்”
“ஆமா வில்வா, இப்ப அட்வைஸ் எல்லாம் கேக்க முடியாது, வா” என்று இருவரும் எழுந்து வெளியே செல்ல கிளம்பினார்கள்.
அதை கவனித்துவிட்டு, “இப்ப எங்க டா போறீங்க, எல்லாரும் இங்க தானே இருக்கோம்” என்றார் சுமதி.
“ஏன் ம்மா? போகும் போது எங்க போறீங்கன்னு யாராச்சும் கேப்பாங்களா?” என்றான் வில்வா கடுப்பான குரலில்.
“அதானே..” என்றான் பாரி.
“கழுதை கெட்டா குட்டிச் சுவரு, ரெண்டு பேரும் வாட்ச்மேன் வேலை பார்க்க போறாங்க.. அந்த கேட்ட பிடிச்சு தொங்கிட்டே பேசணும்.. அதானேடா? எப்ப அது கழண்டு விழுமோ தெரியல?” என்றார் பாட்டி.
“நாங்க பாரி வீட்டுக்கு தான் போறோம்” என்றான் வில்வா பல்லை கடித்துக்கொண்டு.
“இந்தாங்க சாவி என்கிட்டே இருக்கு” என்று வீட்டு சாவியை எடுத்து கொடுத்தார் தமயந்தி.
“சாவி கூட வாங்காம ரெண்டுபேரும் சாகசம் செய்ய கிளம்பிட்டானுங்க.. இதுல எங்க போறீங்கன்னு கேக்க கூடாதாம்..” என்று நொடித்துக்கொண்டார் பாட்டி.
“விடு தங்கச்சி.. இன்னிக்கு அவங்களுக்கான நாள் தானே.. போயிட்டு வரட்டும். தனியா பேசணுமா இருக்கும்” என்றார் முருகானந்தம் சிரித்துக்கொண்டே.
“ஏன் அண்ணே நீங்க வேற, விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இவனுங்கக்குள்ளேயே தான் பேசிகிட்டு இருக்கானுங்க. நாளைக்கு கல்யாணம் பண்ணி பொண்டாட்டி வந்தா என்ன செய்வானுங்கன்னு எனக்கு பக் பக்குன்னே இருக்கு”
“அது எல்லாம் நாங்க பார்த்துக்குவோம், உங்க கிட்ட பஞ்சாயத்துக்கு யாரும் வர மாட்டாங்க” என்றனர் நண்பர்கள் விறைப்பாக.
“ஒரு வழியா சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்புங்க, அப்ப தான் வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா படுக்க முடியும்”
‘சரி, சரி’ என்று முனங்கிகொண்டே அவினாஷுடன் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். அவினாஷ் கூறிய சிறு சிறு உதவிகளை செய்தும் கொடுத்தனர். பின் அங்கே இருந்து மூவரும் உணவுகளை இங்கே கொண்டு வந்து அனைவரும் பேசிக்கொண்டே உண்டு முடிக்கவும், முதல் ஆளாக நண்பர்கள் இருவரும் பாரி வீட்டு மொட்டை மாடிக்கு விரைந்து சென்றனர்.
நல்ல பசங்க என்று சிரித்து கொண்டனர் அனைவரும்.
மற்றவர்களும் நாளைக்கு பார்க்கலாம் என்று அவர் அவர் வீட்டிற்கு புறப்பட்டார்கள்.
—————————————
அங்கே பாரி வீட்டு மொட்டை மாடியில் இருவரும் பேசாமல் பத்து நிமிடங்களுக்கு மேல் நடை பயின்றுகொண்டு இருந்தார்கள்.
“பாரி..”
“வில்வா..”
“எனக்கு ஒன்னு தோணுது”
“எனக்கும் ஒன்னு தோணுது..”
“அப்படியும் இருக்குமோ வில்வா”
“வர்ஷித்தா என்னை பார்த்து கண்ணடிச்சது, எனக்கு ஷாக் அடிச்சது மாதிரி இருந்துச்சு பாரி, நீ அதை பார்த்தியா?”
“ஆ, நான் அதை கவனிக்கல வில்வா, ஆனா ஹர்ஷித்தா என்னை பார்த்து கண்ணடிச்சப்ப எனக்கும் அப்படி தான் இருந்துச்சு”
“ஒரு வேலை நம்மளை வச்சு காமெடி பண்றாங்களோ? எப்படி ஒரே மாதிரி ரெண்டு பேரும் நடந்துக்க முடியும்?”
“அப்படியா சொல்ற? எனக்கு என்னமோ வர்ஷித்தாக்கு என்னை பிடிச்சிருக்கும்னு தோணுது.. எனக்கும் அவளை பிடிச்சிருக்கு டா”
“என்ன வில்வா சொல்ற?”
“அன்னைக்கு வண்டியில அவ பின்னாடி உட்கார்ந்து போனப்பவே ஒரு மாதிரி ஜில்லுன்னு இருந்துச்சு பாரி”
“டேய் ஜில்லுன்னா இருந்துச்சா? எப்ப கீழே விழுவோமோன்னு பக்குன்னு இல்ல இருந்துச்சு?”
“நீ மட்டும் என்னடா, ஹர்ஷித்தா கார் ஓட்டும்போது ஸ்ரீனிவாசன் சாரும் அவியும் அலறிட்டே வந்தாங்க… நீ ‘ஹர்ஷ் ரொம்ப ஸ்மூத்தா கார் ஓட்றீங்கன்னு’ வாய் கூசாம பொய் சொல்லல?”
“ஹீ ஹீ.. கவனிச்சிட்டியா?”
“சரி நமக்கு பிடிச்சது இருக்கட்டும், எதுக்கு டா கண்ணடிச்சிருப்பாங்க ஒரு வேலை அவங்களுக்கும் நம்ம பிடிச்சிருக்குமோ?”
“அதான் தெரியலையே, நம்ம தப்பா புரிஞ்சுக்கிட்டு மேலே பேசுனோம்னு வை, அப்புறம் மேஜர் சார் கிட்ட நசுங்கி போய்டுவோம் டா”
“அதுவும் சரிதான், மனுஷன் பாசமா கட்டிபிடிச்சாலே மூச்சு முட்டும். அந்த ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது. எப்படி கண்டிபிடிக்கிறது?”
“நானும் ரொம்ப நேரமா யோசிக்கிறேன்.. ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குதே”
“நமக்கு எப்படா ஐடியாலாம் வந்திருக்கு, பேசாம கருணாக்கு கால் பண்ணி கேட்போமா?”
“கருணாம்பிகை மட்டும் தான் நமக்கு ஹெல்ப் பண்ணமுடியும். மணி பதினொன்னு ஆக போகுதே? தூங்கி இருப்பாளா தெரியலையே?”
“மெசேஜ் போட்டு பாப்போம், முழிச்சிருந்தா பேசுவோம்” என்று
‘நீட் அர்ஜென்ட் ஹெல்ப், கால் இப் யூ ஆர் அவேக்’ என்று மெசேஜ் அனுப்பி விட்டு இருவரும் கருணாவின் பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது தான் அவினாஷின் வாயிஸ் மெஸ்ஸஜ்களை எல்லாம் கேட்டு முடித்திருந்தாள் கருணா.
இவர்கள் மெசேஜ் பார்த்ததும் உடனே அழைத்துவிட்டாள்.
“ஹலோ சொல்லுங்க, எப்படி போச்சு திறப்பு விழா எல்லாம்?” என்று உற்சாகமாக ஆரம்பித்தாள்.
“அது எல்லாம் சூப்பரா போச்சு, ஆனா நாங்க கேக்க நினைக்கிற விஷயமே வேற?”
“என்ன அண்ணா.. சொல்லு?”
“அது வந்து.. வந்து..”
“சீக்கிரம் சொல்லு, நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு, நான் தூங்கணும்”
“அது வந்து கருணாம்பிகை…வந்து”
“——————”
“நம்ம ராஜிம்மாவும், மேஜர் சாரும் வந்திருந்தாங்க”
“ஆமா, அவங்க பொண்ணுங்களோடு வந்திருந்தாங்க இல்லையா?”
“அது உனக்கு எப்படி தெரியும்?”
“அதை கேக்க தான் கூப்பிட்டிங்களா?”
“இல்ல, அந்த பொண்ணுங்க…அந்த பொண்ணுங்க”
“என்னடா அண்ணா உங்க ரெண்டுபேருக்கும் மண்டையில பல்ப் எரிஞ்சிடுச்சா?” என்றாள் குதூகலமாக.
“அப்படி தான் எங்களுக்கு இருக்கு.. எனக்கு வர்ஷித்தாவையும் பாரிக்கு ஹர்ஷித்தாவையும் பிடிச்சிருக்கு”
“அப்பாடா, ஒரு வழியா உங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்திடுச்சா? நான் கூட அது எல்லாம் சாத்தியம்மான்னு நிறைய தடவை யோசிச்சிருக்கேன். நிஜமாலுமே சந்தோசமா இருக்கு அண்ணா, ஹாப்பியா இருக்கு பாரிவேந்தன்” என்றாள் கருணா உள்ளார்ந்த அன்போடு.
“அது இல்ல கருணாம்பிகை இப்ப பிரச்சனை, இன்னிக்கு ஹர்ஷ் என்னை பார்த்து கண்ணடிச்சா, வர்ஷ் வில்வாவை பார்த்து..”
“ஓ, கதை அப்படி போகுதா?”
“அது தான் எங்களுக்கு தெரியலை.. கதை எப்படிபோகுமோன்னு பயமா இருக்கு. அவங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையா, விளையாட்டுக்கு அவங்க செஞ்சதை நாங்க தப்பா எடுத்துக்க கூடாது இல்லையா? அதான் குழப்பமா இருக்கு கருணா”
“அதனால ராஜிம்மா கூட இருக்கிற ரிலேஷன்ஷிப் பாதிக்க கூடாது இல்ல?”
நண்பர்கள் மாறி மாறி பரிதவிப்பாக கூறினார்கள்.
“எல்லாம் சரி தான், இப்ப நான் என்ன சொல்லனும் இதுல?”
“நீ தானே எப்பவும் எங்களுக்கு எது சரியா இருக்கும்னு சொல்லுவ?”
“அட லூசுங்களா! லவ்ல மட்டும் எப்பவுமே மூனாவது ஆளை உள்ள விட கூடாது” என்றாள் கருணா கிசுகிசுப்பாக.
“அது எல்லாம் லவ்ன்னு கன்பார்ம் ஆனப்பறம் விடமாட்டோம், ஆனா இது லவ்வான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?”
“உங்க ரெண்டு பேரை வச்சுக்கிட்டு என்ன தான் செய்றதோ?” என்று சலித்துக்கொண்டாலும்,
“முதல்ல நீங்க தெளிவா யோசிங்க, உங்களுக்குள்ள இருக்கிறது லவ்வான்னு. அது தான் முதல் படி.. அவங்க உங்களை லவ் பன்றாங்க இல்லன்னு அப்புறம் பார்க்கலாம். உங்க சைட் தீர்க்கமா யோசிங்க”
“கருணா, இது மட்டும் நடந்தா நானும் பாரியும் சகலைகள் ஆகிடுவோம் இல்ல?” என்றான் வில்வா வாயெல்லாம் பல்லாக.
கருணா தலையில் அடித்து கொண்டு, “இது எல்லாமா டா அண்ணா லவ் வரதுக்கு ரீசன்?” என்றாள் .
“அதுவும் ஒரு ரீசன் தான் கருணாம்பிகை, எங்களுக்கு அவங்களையும் பிடிச்சிருக்கு. எங்க சைட் லவ் தான், அதுல தெளிவா இருக்கோம், எனக்கு ஹர்ஷித்தாவை பிடிச்சிருக்கு, நீ சொல்லு வில்வா”
“ஆமா கருணா, எனக்கு வர்ஷித்தாவை பிடிச்சிருக்கு”
“அப்ப நெக்ஸ்ட் யோசிங்க. அவங்க ரெண்டு பேரும் ட்வின்சனாலும், சண்டை போடாம இருப்பாங்கன்னு எதிர் பார்க்க முடியாது. வண்டி வாங்க போனப்ப கட்டி உருண்டு சண்டை போட்டுக்கிட்டாங்க தானே? உங்க நட்பு ஒரு விதம்னா அவங்களுக்குள்ள இருக்கிற பாண்டிங் வேற விதம், உங்க அணுகுமுறை வேற அவர்களது வேற.
அதை அதை அப்படி அப்படியே ஏத்துக்கனும் எல்லாரும், எதையும் மாத்தனும்னு முயற்சி செஞ்சீங்கன்னா சிக்கல் தான் வரும்.
உங்க நட்பு உங்க காதலன்னு நீங்க எப்படி பாலன்ஸ் பண்ணி எடுத்துட்டு போறீங்கண்றதுல தான் எல்லாமே இருக்கு”
இருவரும் மண்டையை ஆட்டிக்கொண்டார்கள்.
“மூனாவது, உங்க சைட் பிடிச்சிருந்தா, நேரடியா ப்ரபோஸ் பண்ணுங்க… “
“அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு” இருவரும் கோரஸ்.
“ஒன்னு நேரடியா போய் பேசுங்க, இல்லை அம்மாங்ககிட்ட இந்த பொண்ணுங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லி பெரியவங்களை பேச சொல்லுங்க..”
“வேற ஆப்ஷன்ஸ்?”
“எனக்கு தெரிஞ்சு இது மட்டும் தான். நல்லா யோசிச்சு முடிவு எடுங்க..”
“நீ என்ன நினைக்கிற கருணா?”
“பாரதியார் பாட்டு எல்லாம் பாடி அசத்திருக்காங்க.. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சு அவங்களுக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் சந்தோஷம் தான், ஆல் தி பெஸ்ட்..”
“தேங்க்ஸ், உன்கிட்ட பேசனதும் கொஞ்சம் தெளிவு கிடைச்ச மாதிரி இருக்கு கருணாம்பிகை”
“அது சரி, அவங்க பாரதியார் பாட்டு பாடுனது, உனக்கு எப்படி தெரியும்? நாங்க யாரும் போன் போடலையே?”
“இப்ப அதுவா முக்கியம், சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க, நான் தூங்க போறேன் நாளைக்கு எக்ஸாம்ல” என்று போனை வைத்து விட்டாள்.
நண்பர்கள் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டனர்.
“நாளைக்கு காலையில நம்ம பிள்ளையார் கோவிலுக்கு போய் நூத்தி எட்டு சுத்து சுத்திட்டு ஒரு முடிவுக்கு வரலாம் பாரி”
“ஆமா வில்வா, நம்ம எப்பவும் அதை தானே செய்வோம், அப்படியே செஞ்சடாலாம்”
—————
காலை ஏழுமணிக்கு எல்லாம், இவர்கள் நூத்தி எட்டு சுத்து சுத்தி முடித்துவிட்டு மெதுவாக வீட்டிற்கு திரும்பினார்கள்.
வில்வா வீட்டு வாசலில் கெத்தாக நின்றுகொண்டிருந்தது குஷ்.
“டேய் வில்வா, அதுகுள்ள பிள்ளையார் நமக்கு அருள் புரிஞ்சிட்டார் போலவே டா”
“அதானே, வா வா சீக்கிரமா போகலாம்”, என்று இருவரும் ஓட்டமும் நடையுமாக வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
அங்கே கையில் காபி கோப்பைகளுடன் ராஜியும் விக்ராந்தும் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.
இருவருக்கும் புஸ் என்று ஆகிவிட்டது.
இருந்தும் சாமாளிப்பாக, “வாங்க ராஜிம்மா வாங்க சார்” என்று வரவேற்றார்கள்.
இருவரும் வெள்ளை வேஷ்டியும், நெற்றியில் பட்டையும் கையில் புளியோதரையுடனும் அப்பாவிகளாக நின்று கொண்டிருந்தார்கள்.
ராஜி இவர்களை பார்த்து வாயில் காபியுடன் சிரிக்கவும் புரை ஏறிவிட்டது
விக்ராந்த் வேகமாக அவர் தலையை தட்டிக்கொடுத்து, “மெதுவா ராஜி” என்றார்.
“ஏன்டிம்மா ராஜேஷ்வரி, உன் வீட்டுக்காரரை பார்த்தா வயசே தெரியலை, ஜம்முனு மாப்பிள்ளை மாதிரி இல்ல இருக்காரு”, என்றார் பாட்டி.
“டேய் நாம அவருக்கு மாப்பிள்ளை ஆகனும்னு கோவிலுக்கு போய் வேண்டிட்டு வந்தா இந்த பாட்டி அவரையே மாப்பிள்ளைன்னு சொல்லுது?”
“அதானே…”
இருவரும் அவர்களுக்குள் கிசுகிசுப்பாக பேசிக்கொண்டார்கள்.
“நாளைக்கு சீதாக்கு வளைகாப்பு, வெளியே யாரையும் கூப்பிடல, உங்க எல்லாரையும் மட்டுமாவது கூப்பிடாலாம்னு நாங்க வந்தோம்.”
“இது அஞ்சாவது மாசம் தானே ராஜி? இப்பவே பண்றீங்களா?” என்றார் சுமி.
“ஆமாம்மா, நாங்க இருக்கும் போதே பண்ணிடாலம்னு அத்தை சொன்னாங்க, அதான். கண்டிப்பா நீங்க எல்லாரும் வரணும்” என்று அழைப்பு விடுத்துவிட்டு, “நாங்க பாரு வீட்லயும் அவி வீட்லயும் சொல்லிட்டு கிளம்புறோம்” என்று எழுந்து கொண்டார்.
நண்பர்கள் இருவரும் இரு வீட்டிற்கும் அழைத்து சென்றார்கள்.
பின் கிளம்புவதற்கு முன் ராஜி பாரி வில்வாவிடம் ரகசியமாக ஏதோ கூறியதை அனைவரும் கவனித்தனர்.
“டேய் பாரு வில்லு, இப்ப தான்டா அவர்கூட பைக்ல ரொம்ப வருஷம் அப்புறமா போறேன், நாங்க போகும் போது ஒரு லவ் சாங் போடறீங்களா?” என்று கேட்டிருந்தார் ராஜி
இருவரும் கிளம்புகையில் அனைவரும் அவர்களை வழி அனுப்ப நின்றார்கள்.
அனைவரிடமும் விடை பெற்று, விக்ராந்த் வண்டியை எடுக்கையில்,
“பார்த்த முதல் நாளே… உன்னை பார்த்த முதல் நாளே… “ பாடலை ஒலிக்க விட்டனர்.
விக்ராந்த் இவர்களை முறைக்க முயற்சித்தாலும், ராஜியின் முகத்தை பார்த்தும் சுற்றி அனைவரது பார்வையையும் பார்த்தும், முகம் சிவக்க அமைதியாக வண்டியை எடுத்தார்.
“வர வர ரொம்ப படுத்தற ராஜி..” என்று அவர் கூறுவதும்,
“செம சாங் இல்ல விது.. ஃபீல் பண்ணி வண்டி ஓட்டுங்க” என்று ராஜி சத்தமாக கூறுவதும்,
உடனே ‘ஷ்ஷ்’ என்று விக்ராந்து கூறுவதும் அனைவருக்கும் கேட்டது.
ராஜி திரும்பி டாட்டா காட்டிக்கொண்டே சென்றார்.
“அடுத்து என்ன பண்றது?”
“இன்னிக்கு தான் முதல் நாள் க்ளினிக், முதல்ல அங்கே போவோம், மிச்சத்தை வேலை முடிச்சிட்டு யோசிப்போம்”
“சரிடா, நேரமாச்சு சீக்கிரம் கிளம்புவோம்”
——————
இருவரும் வேலை முடித்து வெளியே வந்து பார்க்கையில், இவர்களுக்காக காத்து கொண்டிருந்தார்கள் ஹர்ஷித்தாவும் வர்ஷித்தாவும்.
இருவருக்கும் இன்ப அதிர்ச்சி. இருவரும் மலர்ந்து சிரிப்புடன் பெண்களை வரவேற்றார்கள்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்த்து சிரித்தாலும், அடுத்து என்ன என்று ஒரு தயக்கம் நிலவியது.
“இங்க பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு அங்கே போய் பேசலாமா?” என்றான் பாரி.
“ஹர்ஷ்க்கு தான் காபி ரொம்ப பிடிக்கும்” என்றாள் வர்ஷ்.
“அப்ப, வா ஹர்ஷி நாம காபி சாப்பிட்டு வரலாம்” என்று பாரி ஹர்ஷிதாவை அழைத்துக்கொண்டு முன்னே நடந்து சென்றுவிட்டான்.
“அடப்பாவி! “என்று நண்பனை பார்த்து முழித்துக்கொண்டு நின்றான் வில்வா.
அவனது முழியை பார்த்து வர்ஷித்தாவிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“எனக்கு உங்க இந்த இன்னொசென்ட் லுக் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் வர்ஷித்தா.
ஆங்..
“சரி, நாமளும் எங்கயாவது போய் பேசலாமே?”
“உனக்கு ஐஸ் கிரீம் பிடிக்குமா?”
“எனக்கு காஃபியும் பிடிக்கும், ஐஸ் க்ரீமும் பிடிக்கும்”
“எனக்கும் ரெண்டும் பிடிக்கும், ஆனா இன்னிக்கு ஐஸ் க்ரீமே சாப்பிடுவோம், வாங்க” என்று வர்ஷித்தாவை அழைத்துக்கொண்டு சென்றான்.
காஃபி ஷாப்பில்..
“நானே உன்கிட்ட பேசணும்னு நினைசேன் ஹர்ஷி.. ஆனா நீயா என்னை தேடி வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்”
“நான் அத்தைக்கு கிப்ட் வாங்க உங்களை துணைக்கு கூப்பிடாலாம்னு வந்தேன்” என்று ஹர்ஷித்தா கெத்தாக கூறினாள்.
“அப்படியா? அதுக்கு தான் அவங்க ரெண்டு பேரையும் கழட்டிவிட்டு வந்தியா?”
“நான் எங்க கழட்டி விட்டேன்?”
“ஹா ஹா.. சரி சரி… எப்படி ப்ரொபோஸ் பண்றதுன்னு பலமாதிரி யோசிச்சு வச்சிருந்தேன், நீ திடீர்ன்னு வரவும் நான் கிப்ட் கூட வாங்கலையே? என்ன செய்றது?”
“உங்க பிளானை சொதப்பிட்டேனா?”
“சில நிகழ்வுகள் எதார்த்தமா இருந்தா தான் நல்லா இருக்கும் போல.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ஹர்ஷி.. எனக்கு என் மிச்ச வாழ்க்கையை உன்கூட சேர்ந்து வாழ ஆசையா இருக்கு.. உனக்கு இதுல சம்மதமா?”
“என்ன இப்படி உடனே டப்புன்னு சொல்லிட்டீங்க?”
“நீ என்ன எதிர்பார்த்த?”
“நீங்க தயங்கி தயங்கி… சொல்ல முடியாம தவிப்பீங்கன்னு…”
“உன் கண்ணை பார்க்கிற வரை தயக்கமா இருந்தது என்னமோ நிஜம்.. ஆனா உன் கண்ணோடு என் கண்ணும் கலந்த பிறகு தயக்கம் எல்லாம் தூரமா போயிடுச்சு..நம்ம கண்ணுல நமக்கான நேசம் நிறைஞ்சிருக்கு… காதல் கலந்திருக்கு… அன்பும் ஆசையும் அளவுக்கு அதிகமா இருக்கு… அதான் டக்குனு சொல்லிட்டேன்”
“கவித்துவமா பேசறீங்க.. எனக்கு அப்படி எல்லாம் பேச வருமா தெரியலை.. எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு. நாம சேர்ந்து வாழ்க்கையை ஷேர் பண்ணிக்க எனக்கும் சம்மதம்”
“இப்படி மின்னல் வேகத்துல லவ் சொன்னவங்க நாமளா தான் இருப்போம் வர்ஷி”
“உங்களுக்கு எப்ப இருந்து என்னை பிடிக்க ஆரம்பிச்சது. எனக்கு பாக்ஸிங் அகாடெமி முன்னாடி நான் பைக்ல இருந்து இறங்குனப்ப ஆன்னு வாய பிளந்துட்டு நீங்க நின்ன அந்த நொடியே ஒரு ஸ்பார்க்”
“எனக்கு, ராஜிம்மா ஹாஸ்ப்பிட்டல்ல இருந்தப்ப, மூக்கை உறிஞ்சுகிட்டு குழந்தையா நீ பேசுனல்ல, அந்த நொடி தோணுச்சு.. நீ ஒரு முரட்டு குழந்தை, இந்த முரட்டு குழந்தையை நான் நல்லா பார்த்துக்கணும்னு”
“பார்த்துப்பீங்களா?”
“நம்பிக்கை இல்லையா?”
“இல்லாமலா இப்படி உட்கார்ந்திருக்கேன்”
சரி.. காஃபியோடு தொடர்வோம் நம் காதல் பயணத்தை.. என்று இருவருக்கும் காஃபி தருவித்தான் பாரிவேந்தன்.
“உங்க ப்ரெண்ட் எப்படி ? இந்நேரம் அவரும் லவ்வ சொல்லி இருப்பாரா?”
“ஹா ஹா ஹா.. அது தெரியலை, அவனுக்கு எப்பவுமே பயம் அதிகம். உன் அக்கா சொன்னா தான் உண்டு”
“நான்தான் அக்கா..”
“அவங்க லவ்வை அவங்க பார்க்கட்டும், நம்ம விஷயத்தை நாம் பார்ப்போம்”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க லவ் சொன்னாலும் உங்க ப்ர்ன்ட் லவ்வை நினைச்சு டென்ஷனா இருப்பீங்கன்னு நான் நினைச்சேன்.
“நாங்க எல்லா ரிலேஷன்ஷிப்பையும் நல்லாவே பாலன்ஸ் பண்ணுவோம். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப க்ளோஸ்தான்… ஆனா இங்கிதம் தெரியாத முட்டாள்கள் இல்லை. எங்கே விலகனும் எங்கே சேரணும்னு எங்களுக்கு தெரியும்”
ஹர்ஷித்தா பூரிப்புடன் பாரியை பார்த்து சிரித்துக்கொண்டாள்.
அங்கே ஐஸ் கிரீம் பார்லரில்….
error: Content is protected !!