Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 18

அம்மையப்பன் 18

 

விஷ்ணு நிதானமாக வீட்டை பார்த்தவன், கூட வந்தவர்களிடம் என்னமோ சொல்ல அவர்களும் சரி சரி என தலையாட்டினர்..

 



Advertisement

அவன் மேலே செல்ல முற்பட திருச்செல்வம் வழிமறித்தார்..

 

தம்பி நீங்க பாட்டுக்கு வந்தீங்க, இப்போ மேல போறீங்க, என்னப்பா என்ன விஷயம் என கண்டிப்பாக கேட்டார்..

Advertisement

 

Advertisement

அகத்தியன் சாரோட ரூமுக்கு போகணும்.. அங்க நிறைய வேலை இருக்கு.. என சொன்னவன் போதுமா என்பது போல் புருவம் உயர்த்த.. மரகதம் பொங்கினார்..

 

அடேய் வெளங்காதவனே என்ற மருமகன் ரூமுக்குள்ள உனக்கென்னடா வேலை.. மொதல்ல உன்ன யாரு வூட்டுக்குள்ள வரச்சொன்னது.. வெளியே போடா என கத்தினார்..

Advertisement

 

விஷ்ணு யாரையும் சட்டை செய்யாது மீண்டும் மேலே செல்ல பார்க்க..

 

தம்பி உங்கள அம்மணி தான் அனுப்பியிருக்கும் புரியுது.. அதுனால சேதி என்னன்னு மட்டும் சொல்லுய்யா என தன்மையாக கேட்டார் அம்மையப்பன்..

 

அதில் விஷ்ணு ஓர் நொடி நின்றவன்.. அகத்தியன் சாரோட ரூம கொஞ்சம் மாத்த போறோம்.. இன்டீரியர், அங்கு உள்ள திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வேற வைக்க போறோம் என்று மட்டும் சொல்ல யாருக்கும் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை..

 

என்ற ஐயா ரூம எதுக்கு நீங்க மாத்தணும்.. யாரு உங்களுக்கு அதுக்கான உரிமை கொடுத்தது.. என குழலி கோபமாக வினவினாள்..

 

அப்பொழுது இறுகிய முகத்துடன் அகத்தியனும் அமுதனும் உள்ளே வந்தனர்..

 

குழலி வேகமாக தந்தையின் அருகே சென்று அவரின் கரத்தை பற்றிகொண்டாள்.. ஐயா இவங்க உங்க ரூம மாத்தணும்ன்னு சொல்லி பிரச்சனை பன்றாங்க.. அவங்கள மொதல்ல வெளில போக சொல்லுங் ஐயா என குழலி அகத்தியனிடம் முறையிட.. அவனோ கண்களை இறுக்கமாக மூடினான்.. விஷ்ணுவும் அவனோடு வந்த ஆட்களும் வேகமாக மேலே சென்றுவிட்டனர்..

 

ஐயா.. அங்க பாருங்.. என குழலி கத்த அகத்தியன் வேதனையுடன் தன் மகளை அனைத்துக்கொண்டு மறுப்பாய் தலையசைத்தான்.. அவனால் பேசக்கூட முடியாத நிலை.

 

அமுதனுக்கு தன் மாமனை இவ்வாறு பார்க்கவே முடியவில்லை.. மாமனின் வேதனையை காண காண அதியின் மேல் உள்ள கோபமும் வெறுப்பும் வளர்ந்து கொண்டே போனது.. 

 

ஐயா ராசா.. என்னய்யா ஆச்சு.. அந்த சிறுக்கி மறுபடியும் ஏதாச்சும் பண்ணிட்டாளாய்யா.. என பரிதவிப்போடு கேட்டார் பேச்சியம்மை.. அதில் அகத்தியனின் முகம் மேலும் இறுகியது..

 

என்னோட பிறந்தநாள் அப்போ, எனக்கும் அவளுக்கும் நம்ம குலதெய்வ கோவில்ல வச்சு கண்ணாலம்.. ஊரே கண்ணாலத்துக்கு வரணும்.. நம்மளோட ஒரு சொந்த பந்தமும் இல்லாம இருக்க கூடாது என அகத்தியன் சொல்லவும்.. அனைவரும் அவனை திகைத்து பார்த்தார்கள்..

 

குழலியோ தந்தையின் மொழி புரியாது அவரையே மலங்க மலங்க பார்க்க.. அகத்தியனின் வேதனை அதிகரித்தது..

 

அனைவரின் பேச்சற்ற அதிர்விலேயே தன் செவியில் விழுந்தது உண்மையென புரிந்த குழலி, விழிகளில் பெறுகிய நீருடன் தந்தையை வெறித்தாள்..

 

அய்யா.. என்னய்யா சொல்ற.. என பேச்சியம்மை கேட்டார்..

 

தம்பி.. அந்த சிறுக்கி தான் ஏதோ சொல்லி மிரட்டியிருப்பான்னு தெரியுது.. ஆனா இது வேணாம்ய்யா என அமிர்தம் அவனை கெஞ்சினார்..

 

பவளம் எதுவும் பேசாது விழிகளில் தன் மன்றாடலை காட்டினார்..

 

மரகதம் என்ன சொல்வது என தெரியாமல் தவிப்போடு அவனை பார்த்தார்..

 

ஆண்கள் யாரும் இதனை பற்றி பேச வாயை திறக்கவில்லை.. நடப்பவற்றை வேடிக்கை பார்த்தனர்.. அதனை அகத்தியனும் அமுதனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்..

 

என்ற வார்த்தைக்கு மதிப்பு இருந்தா நான் சொல்றத செய்ங்க என இறுகிய குரலில் அகத்தியன் சொல்லவும்.. பெண்கள் அனைவரும் அவனை நிராசையாக பார்த்தனர்.. 

 

குழலியோ அங்கேயே மடங்கி உட்கார்ந்து கதறிக் கொண்டிருக்க.. அகத்தியன் அவள் சிரத்தை அழுத்தமாக வருடியவன்.. அதற்கு மேல் தன் மகளின் கதறலை காண முடியாது வெளியே சென்றுவிட்டான்.. அவனின் விழிகளும் கலங்கி கொண்டிருந்தது..

 

தன்னவளின் அருகே வந்த அமுதன் அவளை அப்படியே தன் கரங்களில் தூக்கிக் கொண்டு மேலே உள்ள பால்கனிக்கு சென்றான்..

 

அம்மையப்பன் தன் மகனையும் இரு பேரப்பிள்ளைகளையும் பார்க்க.. அவர்கள் கல்யாண வேலையை பார்க்க கிளம்பினர்.. இன்னும் இருநாள் தானே இருக்கிறது..

 

சொந்த பந்தம் எல்லாம் மேட்டுப்பாளையம் மற்றும் கோவைக்குள்ளே இருந்ததால் அவர்களை அழைப்பது பெரிய வேலையில்லை.. அவர்கள் கேட்கும் கேள்வியை சமாளிப்பது தான் பெரிய காரியம்..

 

குழலி அழுகையை விடாமல் தேம்பிகொண்டேயிருக்க.. அமுதன் அவளை தோளில் சாய்த்து தலையை வருடி கொண்டிருந்தான்..

 

அவனின் மனதில் இன்று காலையில் நடந்தது மீண்டும் படமாய் ஓடிகொண்டிருந்தது..

 

அகத்தியன் எப்பொழுதும் போல் அதிகாலை வேளையே கீழே வர.. அவன் போன் ஒலித்தது.. இந்த நேரத்தில் யார் என பார்க்க புது நம்பராக இருந்தது..

 

ஹலோ..

 

நான் விஷ்ணு, அதி மேம் உங்கள இன்னும் ஒன்னவர்ல அவங்க வீட்டுக்கு வர சொன்னாங்க.. அட்ரஸ் அனுப்பியிருக்கேன் என ரத்தின சுருக்கமாய் கூறி போனை வைத்துவிட.. அகத்தியன் முகம் யோசனையாகியது..

 

மறுபடியும் என்னவோ என நெற்றியை தேய்த்தான்.. நேற்று இங்கு நடந்த பேச்சிலேயே அதியும் இவ்வீட்டு பெண் என தெரிகிறது.. அவளுக்கு தங்கள் குடும்பம் என்ன தவறு செய்தது என அவனுக்கு தெரியவில்லை.. அதனால் அவளிடமே பேசலாம் என முடிவுக்கு வந்தான்..

 

அவன் காரில் ஏறியதும்.. மறுபக்கம் அமுதன் வந்து அமர்ந்தான்.. நேற்று அதி அகத்தியன் தான் முதல் டார்கெட் என சொன்னதே அவன் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.. அதனால் இனி மாமாவோடு அதிக நேரம் இருக்க வேண்டும் என நினைத்தான்..

 

அதிகாலை மாமனோடு செல்வதற்காக கிளம்பியவன், அவன் காரில் ஏறுவதைக் கண்டு அவனோடே ஏறிகொண்டான்.. அமுதா நான் ஒரு முக்கியமான வேலையா போறேன்.. என சொல்ல அவன் எதுவும் பேசாது இருந்தான்.. அகத்தியன் ஒரு பெருமூச்சுடன் விஷ்ணு அனுப்பிய அட்ரஸ்சிற்கு காரை செலுத்தினான்..

 

கோவை மத்தியில் பிரம்மாண்டமாய் வீற்றிருந்த பங்களாவின் முன் தன் காரை நிறுத்தினான் அகத்தியன்..

 

அமுதன் கேள்வியாக தன் மாமனை பார்க்க, அவனும் ஒரு பெருமூச்சுடன் அமுதனை பார்த்தவன் வேற எதுவும் பேசாது காரை விட்டு இறங்க.. அமுதனும் இறங்கினான்..

 

விஷ்ணு இவர்களை வரவேற்று ஹாலில் அமர சொன்னான்.. அமுதனுக்கு இது யாரின் மாளிகை எனப் புரிந்துவிட்டது.. கோபத்துடன் விஷ்ணுவை பார்த்தவன் தன் மாமனையும் முறைத்தான்..

 

நீங்க வரதுக்கு ஒரு செகண்ட் லேட்டா ஆகிடுச்சு.. சோ எங்க மேடம் வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க என விஷ்ணு விறைப்பாக சொல்ல அமுதன் கடுப்பானான்..

 

மாமா என்னய்யா நடக்குது இங்க.. நாம ஏன் அவ வீட்டுக்கு வந்து இருக்கோம் என முறைப்புடன் கேட்க.. அகத்தியன் காலையில் விஷ்ணு போன் செய்ததை சொல்ல அமுதன் மேலும் கடுப்பானான்..

 

அப்பொழுது பணியாளர் ஒருவர் வர.. உங்களுக்கு குடிக்க என்ன வேணும்னு சொல்லுங்க சார்.. என விஷ்ணு சொல்லவும் அகத்தியன் மறுப்பாய் தலையசைத்தான்..

 

அமுதன் மாமனை போகலாம் என அழைக்க அகத்தியன் மறுத்தான்.. எனக்கு அவங்ககிட்ட பேசணும் அமுதா.. நம்ம குடும்பம் அவங்களுக்கு அப்படி என்னதான் செஞ்சதுன்னு தெரிஞ்சுக்கணும்.. சமாதானம் படுத்தனும் என அகத்தியன் தீவிரமாக சொல்ல.. அமுதன் மாமனை பைத்தியமா இவன் என்ற ரேஞ்சிற்கு பார்த்தான்..

 

மருமகனின் பார்வையில் அகத்தியன் என்னடா.. என பாவமாய் வினவினான்..

 

லூசா மாமா நீ அவகிட்ட போய் சமாதான பேச்சு நடத்த போறியா.. உனக்கு என்ன நடந்துச்சுனு நீ கேட்டவுடனே அவ கிளுகிளுன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு தான் மறுவேலை பாப்பா.. ஒரு வார்த்தை அவ வாயில இருந்து வாங்க முடியாது.. நாம என்ன பேசினாலும் அதுக்கு எதுத்த மாதிரி தான் பேசுவா.. அவள போய் சமாதானப்படுத்தணும்னு சொல்லிக்கிட்டு கிடக்க.. மனுஷங்க கிட்ட தான் பேச முடியும், அவள மாதிரி ராட்சஷி கிட்ட எல்லாம் பேச முடியாது மாமா, ஒழுங்கா கெளம்பு என பொறிந்து தள்ளினான்.. 

 

டேய், அதி உன்னை விட வயசுல மூத்தவங்க ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு என அகத்தியன் அதட்டினான்..

 

மாமா நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற வாய்யா போலாம்.. என அமுதன் கெஞ்சினான்..

 

அகத்தியனோ அவனிடம் பேசுவதை விட்டு வீட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்.. சின்னவனோ கடுப்புடன் உம்மென்று அமர்ந்தான்..

 

மாளிகை முழுவதும் ப்ளூ கலரில் இருந்தது.. கண்ணாடிகளால் பளப்பளத்தது.. எல்லாமே புதுமையாக வித்தியாசமாக இருந்தது..

 

இருவரும் ஏழு மணிக்கு உள்ளே வந்தனர்.. இப்பொழுது மணி 9.. ஆனால் இன்னும் அதி கீழே வந்தபாடு இல்லை..

 

அமுதன் கொலவெறியுடன் தன் மாமனை முறைத்தான்..

 

அப்பொழுது ஹீல்ஸ் சப்தம் ஒலிக்க.. தொடையை இருக்கி பிடித்த ஷார்ட்ஸ் ஸ்லீவ்லெஸ் கையில்லா டாப் அணிந்திருக்க, அவளின் இடுப்பு இடைவெளியில் ப்ளூ ரோஸ் டாட்டூ இலைகளும் கிளைகளுமாய் அம்சமாக தெரிந்தது.. கால் பாதம் முதுகு கை என எங்கிலும் வித்தியாச வித்தியாசமாய் ப்ளூ ரோஸ் டாட்டூவை போட்டிருந்தாள்..

 

அமுதன் அவளின் ஆடையை கண்டு முகம் சுழிக்க வந்தவன் கடைசி நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டு அமைதியானான்.. அவன் மட்டும் இருந்தால் ஏதாவது பேசியிருப்பான், அகத்தியனும் இருப்பதால் அமைதியாகி விட்டான்..

 

அவள் அவர்களின் எதிரில் உள்ள ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர வேலையாள் அவளுக்கான பானத்தை கொண்டு வந்தார்..

 

அதி ஓர் பார்வை பார்க்கவும் மற்ற இருவருக்கும் ஜூஸ் வந்தது.. அகத்தியன் மறுக்க முடியாது எடுத்துக்கொண்டவன் அமுதனுக்கும் எடுத்து கொடுத்தான்..

 

அமுதன் மாமனை கடுப்பாக பார்க்க.. அவனோ கெஞ்சலாக பார்த்தான்..

 

நீங்க எங்க வீட்டு பொண்ணுதான்னு அப்பாறு சொன்னாங்.. கண்டிப்பா உங்களுக்கு பெருசா ஏதோ நடந்துருக்குனு புரியுது என அகத்தியன் அமைதியாக அவளிடம் பேச ஆரம்பிக்க, அதி கை உயர்த்தி அவன் பேச்சை நிறுத்துமாறு சைகை செய்தாள்..

 

மிஸ்டர் அகத்தியன் நீங்க பேசுற சொற்பொழிவ கேட்குறதுக்காக உங்களை நான் வர சொல்லல.. என அதி அலட்சியமாக சொல்ல.. அகத்தியன் அமைதியானான்..

 

அதி அவனை வரசொல்லியதன் விஷயம் சொல்ல, அமுதன் அகத்தியன் இருவரும் அதிர்ந்து நின்றனர்..

 

அகத்தியன் முகம் இறுகி அவளை பார்க்க.. அமுதனோ கோபமாக அவளை பார்த்தான்..

 

இப்படி அவர்கள் திகைத்து நிற்கும் அளவிற்கு அதி என்ன சொல்லியிருப்பாள்?

 

என்ன மிஸ்டர் அகத்தியன் ஓகே தானே.. இன்னும் ரெண்டு நாள்ல உங்க பர்த்டே அப்போ எனக்கும் உங்களுக்கும் கல்யாணம்.. என மீண்டும் சொன்னாள்..

 

தெரிஞ்சிதான் பேசுறிங்களா, உங்க வயசு என்ன என் வயசு என்ன.. எனக்கு காலேஜ் படிக்குற பொண்ணு இருக்குங்க.. இன்னும் ரெண்டு வருஷத்துல அவளுக்கு கல்யாணம் பண்ண போறேன்… அதோடு என் மனைவி அன்பழகி.. இன்னும் இங்க வாழ்ந்துகிட்டு தான் இருக்கா என நெஞ்சை தொட்டு காண்பித்து.. படபடவென்று கோபமாய் பேச.. அதி அசுவாரஸியமாக அவனை பார்த்தாள்..

 

நீ அடிக்கடி ஒன்ன மறந்திடுற.. நான் உன்கிட்ட பண்ணிக்கிறியான்னு ரெக்வஸ்ட் பண்ணல, பண்ணனும்னு ஆர்டர் போடுறேன் என அதி தன் சிகையை கோதியவாரு அதிகாரமாக சொல்ல..

 

ரொம்ப ஓவரா போகாதீங்க எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு நீங்க கல்யாணம் பண்ணனும்னு சொன்னா உடனே எங்க மாமா கல்யாணம் பண்ணிக்கணுமா, அதுவும் உங்கள போயி, எங்க மாமாவ பாத்தா என்ன இளிச்சவாயன் மாதிரியா தெரியுது என அமுதன் தன் கடுப்பை காண்பித்தான்..

 

அகத்தியன் வேகமாக வெளியே செல்ல.. அப்பொழுது அங்கிருந்த பெரிய தொலைகாட்சி திரையில் குழலியின் கதறல் கேட்கவும்.. சட்டென திரும்பினான்..

 

அங்கு ப்ளூ ரோஸ் ஹோட்டலில் இரு கயவர்களின் மத்தியில் குழலிப்பட்ட வேதனை, காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது.. 

 

அகத்தியனும் அமுதனும் திகைத்து நின்றார்கள்..

 

எனக்கும் இப்படி பண்றது கஷ்டமாதான் இருக்கு, பட் என்ன பண்றது உங்களுக்கு இந்த பாஷையில் சொன்னாதான் புத்தியில உறைக்குது.. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாண நடக்கணும் இல்ல.. என அதிகாரமாக சொன்னவள் மேற்கொண்டு பேசாது தோளை குலுக்கினாள்..

 

அகத்தியன் விருட்டேன அவளின் அருகே சென்று கழுத்தை பிடிக்க.. அதி சிறிதும் பயமின்றி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்..

 

இதுக்கும் உனக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா இதுவும் உன்னோட திட்டமா என அவளின் கழுத்தை சிறிது சிறிதாக நெறித்து கொண்டே ஆக்ரோஷமாக கேட்டான்.. 

 

அதி பதில் பேசாது அவன் விழிகளையே பார்த்து கொண்டிருந்தாள்.. அவளின் விழிகளை சிலநொடி பார்த்தவன்.. என்ன உணர்ந்தானோ மெல்ல தன் கரங்களை விலக்கினான்..

 

அகத்தியன் அதியை நெருங்கிய உடனே.. அவனை சுற்றி பத்துப்பேர் ஃகன்னை ஏந்தியவாரு வந்தவர்கள், அதியின் விரல் அசைவில் அப்படியே நின்றார்கள்..

 

என் மாமா உன்ன கல்யாணம் பண்ணலைன்னா இந்த வீடியோவ நெட்ல போடுவன்னு சொல்ல போற அவ்வளவு தானே.. அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.. உன்னால முடிஞ்சத பாத்துக்க.. என அமுதன் கோபமாக கத்தினான்..

 

அதி அமுதனை பார்க்காது.. இன்னும் ரெண்டு நாள்ல உன்னோட குலதெய்வ கோவில்ல வச்சு.. ஊர கூட்டி கல்யாணம் நடக்கணும்.. இல்ல உன் குடும்ப மானம் சந்தி சிரிச்சு போகும்.. என்று மட்டும் சொன்னவள், மேலே சென்றுவிட்டாள்..

 

இருவரும் அவளையே வெறித்து கொண்டிருக்க..

 

அதி மேம் மேல கை வச்சதுக்கு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க மிஸ்டர் அகத்தியன்.. அன்னைக்கு உங்க பொண்ணுக்கு நடந்த எதுக்குமே எங்க மேம் பொறுப்பு கிடையாது.. சரியான நேரத்துக்கு எங்க மேம் தான் உங்க பொண்ண காப்பாத்தியிருக்காங்க.. இந்த வீடியோ கூட ஆகாஷோட வீடியோ கேமரா மூலமா கிடைச்சது.. என கோபமாக சொன்ன விஷ்ணு..

 

இந்தாங்க இதை எங்க மேம உங்ககிட்ட கொடுக்க சொல்லியிருந்தாங்க.. என கேமராவையும் டிவியில் கனெக்ட் செய்திருந்த பென்ட்ரைவையும் அமுதனிடம் எடுத்துக் கொடுத்தான்.. 

 

அப்பொழுது விஷ்ணுவிற்கு போன் செய்த அதி சில வேலைகள் சொல்ல..

 

எஸ் மேம் என்றவன், மேட்டுப்பாளையம் செல்ல ஆயத்தமானான்..

 

மாமா என மெல்லிய குரலில் அமுதன் அழைக்க.. தன்னிலை திரும்பிய அகத்தியன் வேகமாக வெளியே செல்ல, அமுதனும் பின்தொடர்ந்தான்..

 

காரில் இருவரும் செல்ல.. மாமா வீடியோவை நம்மகிட்ட கொடுத்துட்டாங்க.. இனி வேற எந்த பிரச்சினையும் இருக்காது.. என அமுதன் சொல்லவும், அகத்தியன் மறுப்பாய் தலையசைத்தான்..

 

இல்ல இன்னும் ஏதோ பெருசா இருக்கு.. என பெருமூச்சுடன் சொன்னான்.. 

 

அப்போ நீங்க அவங்கள கல்யாணம் பண்ணிக்க போறீங்களா.. என அமுதன் அதிர்ந்து கேட்கவும்.. அகத்தியன் அவனை வெறுமையாகப் பார்த்தான்.. அதிலையே அவனுக்கான பதில் கிடைத்து விட்டது.. அமுதன் தன் மாமனை வேதனையும் வருத்தமுமாக பார்த்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!