அம்மையப்பன் 30
அம்மையப்பன் 30
தன் கரத்தில் இருந்த தடிமனான காப்பு வளையல்களையே பார்த்து கொண்டிருந்தாள் அதி.
Advertisement
வைரம், வைடூரியம், புஷ்பராகம், முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், மற்றும் நீலம் என நவரத்தின கற்கள் பதித்த காப்பு போலான வலையல்கள். இப்போது இதன் மதிப்பு கோடிகளில் இருக்கும் என அதிக்கு புரிந்தது..
******************
Advertisement
Advertisement
அம்மையப்பனும் மற்ற ஆண்களும் அன்று ஒரு பிடி அதிகமாகவே உண்டார்கள். முக்கியமாக அம்மையப்பனின் மனதும் வயிறும் நிறைந்து கிடந்தது.
அம்மணி என்ற ஆத்தா கைபக்குவம் அப்படியே உனக்கு இருக்குத்தா.. உன்ற அம்மாத்தாளுக்கு என்ற ஆத்தா எவ்ளோ சொல்லிக்கொடுத்தும் அவங்களவு பக்குவம் வந்ததேயில்லை.. என மனைவியை பார்த்து கேலியாக கூற..
Advertisement
க்கும் இத்தன வருசமாகியும் கிழவனுக்கு என்ற சமையலை குத்தங் கூறாட்டி அந்த நாளே விடியாது. இன்னைக்கி சொல்லவா வேணும். என தோள் பட்டையில் முகத்தை நொடித்து கொண்டார். பேச்சியம்மை.
உண்மைய சொன்னா கசக்கத்தான் செய்யும் அம்மணி என சிறு சிரிப்புடன் கூறியவர்.. தன்னறைக்கு சென்று சிறு பெட்டியுடன் வந்தார்..
அவர் அதிலிருந்து நவரத்ன கற்கள் பதித்த காப்பு வலையல்களை எடுத்தார்.. அதனை கண்டு அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் அவரை பார்த்தார்கள்..
சாமி இத என்ற பேத்தி கையில போட்டு வுடுய்யா, என்று அகத்தியனிடம் சொன்னதும் தான் தாமதம் அமிர்தவல்லி மயங்கியே விழுந்துவிட்டார்..
ம்மா என்னாச்சுங்.. என பதறிய யாழினி அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவர் முகத்தில் தெளிக்க, சுயநினைவிற்கு வந்த அமிர்தம் வேகமாய் அம்மையப்பனை நோக்கி சென்றார்..
அப்புச்சி, நாங் இந்த காப்பை கேட்கும் போது தரமாட்டேன்னு சொல்லிபோட்டு.. இவளுக்கு மட்டும் எதுக்கு கொடுக்குறீங்.. என கோபமாக கேட்டார் அமிர்தம்..
அந்த காப்பு வளையல்கள் அம்மையப்பனின் அன்னை அணிந்திருந்தது.. அதோடு அது அவர்களின் பரம்பரை வளையளும் கூட.. ஒரு வளையல் குறைந்தது இருபது பவுன் மற்றும் அதனில் இருக்கும் வைரம் வைடூறியம் நீலம் எல்லாம் என நினைக்கும் போதே அமிர்தத்திற்கு கண்ணை கட்டியது..
அம்மையப்பன் அன்னை இறந்தப்பொழுது அவரின் அணைத்து நகைகளையும் பிரித்து கொடுத்தவர், தன் அன்னை இறக்கும் நேரம் வரை போட்டிருந்த இந்த காப்பை மட்டும் யாருக்கும் தர மறுத்து விட்டார். அவரின் மனைவி பேச்சியம்மைக்கு கூட தரவில்லை.
அம்மணி உன்ற பெரியப்பத்தா நகைங்கள எல்லாருக்கும் அப்போவே பிரிச்சு கொடுத்தாச்சு. அதுனால இது என்ற பேத்திக்கு தான் என முடிவாக கூறிய அம்மையப்பன் அகத்தியனை பார்த்தார்..
அகத்தியனும் அவரின் பார்வையின் பொருள் புரிந்து, அதியின் கரத்தை பற்றி காப்பை மாட்டி விட்டான்..
அம்மணி இது உனக்குன்னு தான் இருந்திருக்கு. என்ற அம்மையோட ஆசிர்வாதம் இது. பத்திரமா பாத்துக்கத்தா. என நெகிழ்வாக கூறி அவளின் சிரத்தை வருடி விட்டு சென்றார்..
அதி முதன் முதலில் இங்கு சமைப்பதால், திருநாவுக்கரசு திருச்செல்வம், நாகநாதன் மற்றும் சிவநேசன் கூட அவளுக்கு நிறைய பரிசுகளை கொடுத்தார்கள்.
அமிர்தம் இதனையெல்லாம் சகித்து கொள்ள முடியாமல் வேகமாக உள்ளே செல்ல யாழினி அவரை பின்தொடர்ந்தாள்..
ஹ்ம்ம் வந்தன்னைக்கே என்ற மாமியா காப்பை வாங்கிப்புட்டா ராங்கி.. என முகத்தை தோள்பட்டையில் இடித்து கொண்டவாறு பேச்சியம்மை சென்றார்..
மாமா என்ற அக்காக்கு நீங் என்ன பரிசு கொடுக்க போறிங் என ஷாலினி புருவம் உயர்த்தி குறும்பு சிரிப்புடன் அகத்தியனை பார்த்து கேட்க, குழலி அவளை முறைத்தாள்..
உம்பட அக்கா சமையல்ல இப்படி பொளந்து கட்டுவாங்கன்னு எனக்கு தெரியாதே கண்ணு.. என்கிட்ட இப்போதைக்கு கொடுக்க ஒன்னும்மில்லையே. என மென் சிரிப்புடன் அகத்தியன் எதார்த்தமாக சொல்ல,
ஹ்ம்ம் அப்போ எங்கக்கா சமையலு கேவலமா இருக்கும்ன்னு நெனச்சுருக்கீங் என பொய் முறைப்புடன் ஷாலு பதார்த்தமாக கேட்கவும் தான், அகத்தியன் தான் கூறியதை நினைத்து மனதிற்குள் அலறியவாறு தன் துணைவியை பார்த்தான்..
அவன் எதிர்பார்த்தது போல் அதியின் முகம் செந்தணலாக இருந்தது.. அதில் உள்ளுக்குள் ஜெர்க்கான அகத்தியன் என்ன சொல்வது என தெரியாமல் முழிக்க,
ப்ச் இப்படி உண்மையெல்லாம் பொதுவுல போட்டு உடைக்க கூடாது ஷாலுமா என்ற அமுதன், மேலும் அகத்தியனை மாட்டிவிட்டான்..
அடேய் ஏன்டா என அகத்தியன் பாவமாய் முழிக்க.. அமுதன் மாட்டினியா என்பது போல் அதியை காண்பித்து கேலியாக சிரித்தான்..
அவுங்களுக்கு என்ன பிடிக்கும்னு ஐயனுக்கு என்ன தெரியும்.. என குழலி முறைப்புடன் சொல்ல.. அகத்தியன் அதை பிடித்துக்கொண்டான்..
மயக்கும் புன்னகையுடன், அதேதான்.. நான் வாங்கிட்டு வர்றது என்ற அம்மனிக்கு பிடிக்கிலைன்னா என்ன செய்றது.. அதான் உன்ற அக்கா என்ன கேட்குறாகளோ அத வாங்கி கொடுத்துடுறேன் கண்ணு என மெல்ல இளித்தவாறு சிறு பிள்ளை போல் அகத்தியன் சொல்ல, ஷாலினியும் அமுதனும் தங்கள் மாமனை நக்கலாக பார்த்தனர் என்றால்.. வீட்டின் மற்ற உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் அவனை பார்த்தார்கள்..
இப்பொழுது சிறு வயது அகத்தியனை அவர்கள் பார்த்தனர்.. குறும்பு செய்து மாட்டிக்கொண்டால் ஒன்றும் மறியா சிறுவன் போல் மயக்கும் சிரிப்புடன் அனைவரையும் கவிழ்த்து விடுவான்..
அன்பழகி இறந்த பிறகு அவனின் விளையாட்டுத்தனம் குறும்பு எல்லாம் மொத்தமாய் மறைந்துவிட்டது.. அவனின் இளமை காலம் எல்லாம் தன் மகளை வளர்ப்பதிலும், தொழிலை முன்னேற்றுவதிலுமே கரைந்து விட்டது.. அதற்காக அவன் வருந்தவும் இல்லை.. அன்பழகி இறந்த பிறகு அவனின் மொத்தமே மகளாகி போனாள்.. வீட்டின் சிறியவர்களிடம் சற்று இயல்பாக இருந்தாலும் வெளியே மௌனமாகி போனான்..
நீண்ட வருடங்களுக்கு பிறகு மகனின் முகத்தில் தெரிந்த மயக்கும் புன்னகையையும் அவனின் சமாளித்தல்களையும் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். வேதவல்லி.
அதி வந்த நேரம் தான் இதற்கு காரணம் என நினைத்தவர், அம்மணி நீ நல்லாருக்கோணும்டா.. உன்னால தான் இன்னைக்கு என்ற புள்ள பழைய மாதிரி இருந்திருக்கான் என அவளின் முகத்தை வழித்து நெட்டி முறித்தார். வேதவல்லி..
மரகதம் எதுவும் சொல்லவில்லை என்றாலும் அவரின் விழிகள் அதியையே சொல்லா முடியா உணர்வில் வருடி கொண்டிருந்தது..
இதனை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டிருந்த அதி எரிச்சலின் உட்சத்தில் இருந்தாள்.. இவர்கள் யாரையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அகத்தியனிடம் ஏன் தான் சவால் விட்டோம் என தன்னையே நிந்தித்து கொண்டவள், தன் கரத்தில் உள்ள காப்பை கோபத்துடன் கழட்டி எரிந்தாள்..
அது அறையின் வாசலில் வந்து கொண்டிருந்த அகத்தியனின் காலில் விழுந்தது..
அதனை எடுத்தவன், என்னங்க அம்மணி இது, அப்பாறு இந்த காப்பு எவ்வளோ முக்கியமானதுன்னு சொல்லியும் இப்படி தூக்கி எரியுறீங். உங்களுக்கு பிடிக்கலைன்னா கழட்டி வைக்கலாமுள்ள.. மாமா அப்பாறு எல்லாம் உங்க மேல நிறைய பாசம் வச்சிருக்காங் அம்மணி, புரிஞ்சுக்கோங் என கோபமாய் ஆரம்பித்து வருத்தமாய் முடித்தான்…
ஹேய் போதும் நிறுத்து.. நானே செம்ம டென்ஷன்ல இருக்கேன் இதுல நீ வேற பாசம் பாயாசம்னு என்னோட வெறியை ஏத்தாத.. என வேகமாய் அவனருகே வந்து அதி கத்த..
அகத்தியன் சிறிதும் பின்னடையாது அவளையே நேர்கொண்டு பார்த்தான்..
என்னங்க அம்மணி ஒரு நாளே தாக்குபுடிக்க முடியலைங்களா.. என மென் சிரிப்புடன் கேட்க.. அதியின் வெறி பன்மடங்காக எகுறியது..
முடியலை தான்டா.. உங்களோட இந்த திடீர் பாயசம் ட்ராமாவ பார்க்க முடியலை தான் என அவனிடம் கேலியாக கூற, அகத்தியன் முறைப்பும் வருத்தமுமாக அவளை பார்த்தான்..
என்ன இங்க கூட்டிட்டு வரும்போது என்னமோ சொன்னியே, வீட்டு பழக்க வழக்கத்தை தெரிஞ்சுக்கணும், மருமகளா எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்கணும்.. உன் அம்மாக்கு அன்பான மருமகளா இருக்கனும்.. எல்லாருகிட்டயும் நல்லவிதமா நடந்துக்கணும்னு எல்லாம் சொன்ன.. ஆனா ஒன்னு மட்டும் மறந்துட்டியே.. என அவன் தோளை வருடியவாரு அவனை சுற்றி நடந்து கொண்டே அதி கேட்க.. அகத்தியன் மனது படபடத்து போனது..
சிவபெருமானே தான் நினைப்பதை அவள் கேட்டுவிட்டுடக்கூடாது என அகத்தியன் மனதிற்குள் வேண்டிக்கொள்ள, சிவன் தவத்தில் இருந்திருப்பார் போலும் அதனால் இவனின் வேண்டுதல்கள் கேட்காமல் போய்விட்டது..
இந்த ரூம்ல நான் உன்னோட மனைவியா இருக்கனும்லடா.. அத ஏன் சொல்லல.. என அவள் கட்டிலை காண்பித்தவாறு கேள்வியாய் புருவம் உயர்த்த, அகத்தியன் பயத்தில் எச்சில் முழுங்கினான்..
எல்லார் காலுலயும் விழுந்துருக்கேன், உன் வீட்டு பழக்கமா சமையல் செஞ்சுருக்கேன், உன் அப்பத்தா கிழவி கால அமுக்கி விட்ருக்கேன், முக்கியமா உங்கொக்கவும், உங்கொக்க மவ பேசியது எல்லாத்தையும் பொறுமையா கேட்ருக்கேன்.. இப்படி எல்லாத்தையும் செஞ்ச நான், இதையும் செய்ய முடியும்னு காண்பிக்கணும்ல.. என அவனின் சட்டை காலரை தன் இரு கரங்களால் இழுத்தவாரு அதி கேட்க அகத்தியன் வியர்த்து போனான்..
புருசன் பொஞ்சாதி உறவு காலத்துக்கும் வரதுங்க.. எல்லா உறவும் பாதியில முடிஞ்சுடும் ஆனா கணவன் மனைவி உறவுதான் நாம கட்டையில போற வரைக்கும் இருக்கும் என அகத்தியன் பயத்தில் ஏதேதோ உலற.. அதி ஒன்றும் பேசாது அவனையே ஓர்விதமாய் பார்த்து கொண்டிருந்தாள்..
அதில் அகத்தியன் கலவரம் கொண்டாலும்.. தன் மனதின் வார்த்தையை அவளிடம் புரியவைக்க முயன்றான்..
உடம்பு இணையுர சந்தோஷத்தை விட மனசு இணையுறதுதான் நமக்கு அதிக சந்தோஷத்தை கொடுக்கும் அம்மணி.. முதல்ல நாம நம்மள புரிஞ்சுப்போம் அப்பொறம் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.. என வேகவேகமாய் சொன்னவன் அவள் முகத்தை கூட பார்க்காது விருவிருவென வெளியேறினான்..
அதியின் கண்ணும் இதழோரமும் சிறிதாய் மிகசிறிதாய் வளைந்தது.. ஹ்ம்ம் நல்லா சமாளிக்குற எத்தனை நாளைக்குனு பார்க்குறேன் என சவாலாய் சொன்ன அதியின் விழியில் அகத்தியனின் பயமும் பதட்டமுமான முகமே மின்னி மறைந்தது..
****************
என்ன மாமோய் இப்படி வேர்த்து விருவிருத்து வர மோகினி ஏதும் அடிச்சுடுச்சா என அவன் எதிரே வந்த அமுதன் கிண்டலாக கேட்க.
ஆமாண்டா மாப்புள, vமோகினி தான் அடிக்க பார்த்துச்சு.. ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சு வரேன்.. என பயத்துடன் சொன்ன அகத்தியன், அப்போதுதான் தான் உளறியதை நினைத்து கண்ணை மூடினான்..
அமுதன் திகைப்பாய் கண்ணை விரித்து மாமனை பார்க்க..
அகத்தியன் இவனிடமா வாய கொடுத்தோம் என தன்னையே நொந்து, தலையை கோதியவாறு முகத்தை திருப்பி கொண்டான்..
நீ சரியில்லை மாமோய்.. நீ சரியில்லை.. என ஒருமாதிரியாக அமுதன் இழுத்து கூற,
தத்து பித்துனு உளறாம உன் வாப்பொட்டிய சாத்திக்கிட்டு போடா.. வந்துட்டான் பெரிய இவனாட்டம் அது சரியில்லை இது சரியில்லனு என படபட பட்டாசாய் வெடித்து விட்டு சென்றான்.
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு மாம்ஸ் இப்படி பொங்கிட்டு போறாரு.. உண்மையிலேயே ஜீன்ஸ் போட்ட மோகினி ஒரு காட்டு காட்டிருக்குமோ, அதான் மாமன் முகமெல்லாம் சிவந்து கிடக்கு.. என தன் மாமனை நினைத்து பாவப்பட்டான் அமுதன்..
****************
மாடியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து, அகத்தியன் அன்பழகியின் திருமண புகைப்படதொகுப்பை பார்த்து கொண்டிருந்தாள் குழலி.. அவள் விரல்களோ அன்பழகியின் முகத்தை வருடி கொண்டிருந்தது..
என்னதான் தந்தையிடம் அவருக்கு ஆதரவாய் இருப்பேன் என கூறினாலும், அகத்தியன் அதியின் திருமணத்தையும் தன் தாயின் இடத்தில் அதி இருப்பதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
அதியை பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.. தங்களை கடத்தி, அமுதனை அடித்து, முக்கியமாக அகத்தியனை மண்டியிட வைத்து, அலைக்களித்தது என அதியை பற்றி நினைத்தாலே இவைகளெல்லாம் நியாபகம் வந்து அவளை வெறுப்பிற்குள் தள்ளியது..
குழலி அடியே குழலி எத்தன சத்தம் போடுறேன் இங்கன தான் இருக்கேன்னு ஒரு குரல் கொடுத்தா என்னாவாம்.. என அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தாள் ஷாலினி.
இந்தா கொழுக்கட்டை.. அம்மத்தா செஞ்சாங்க.. ஆ காட்டு என அவளுக்கு ஊட்டிவிடப் பார்க்க.. குழலி முகத்தை திருப்பினாள்..
ப்ச் என்னடி ஏன் வேணாங்குற கொஞ்சமாச்சும் சாப்புடு. மதியமும் நீ சரியா சாப்புடல என அவள் வற்புறுத்தி கொண்டிருக்க.. அங்கு வந்த யாழினி அதனை கோபமாக தட்டிவிட்டாள்..
ஏய்.. லூசா நீ.. சாப்புடுற பொருள தட்டிவிடுற.. அறிவிருக்கா உனக்கு..
அடிச்சு பல்ல பேத்துடுவேன் நாயே.. ஆருக்குடி அறிவில்ல உனக்கா எனக்கா.. அவ என்ன நிலைமையில இருக்கானு பார்க்காம அததின்னு இததின்னுன்னு தொல்ல பண்ற..
மாமனை போட்டு அந்த பாடு படுத்திப்போட்டு இப்போ அவரையே கட்டிக்கிட்டு நம்ம வூட்டுக்கு வந்துருக்கா அந்த ராங்கி.. நீ அவளுக்கு சமரசம் வீசுக்கிட்டு.. அக்கா ங்கொக்கான்னு பாசத்த பொழியுற.. நம்ம குழலிய பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தியா.. அந்த மினுக்கி கொடுத்த நகையில மயங்கிக்கிடக்குறியா.. வெட்கங்கெட்டவளே..
குழலி வயசுக்கு மாமா இன்னொரு கண்ணாலம் பண்ணது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா.. என குழலியின் மனவோட்டத்தை புரிந்து, அதற்க்கு ஏற்றார் போல் எல்லாம் பேசி அவளின் கோபத்தை தூண்டிவிட்டு கொண்டிருந்தாள் யாழினி.. சும்மாவே அவளுக்கு ஷாலினியை பிடிக்காது.. இதில் இவளின் தோற்றம் அதியை ஒற்று இருக்க கேட்கவா வேண்டும்.. அதனால் அதியிடம் காட்ட முடியா கோபத்தை இவளிடம் காண்பித்து கொண்டிருக்கிறாள்..
யாழினியின் எண்ணம் போல், குழலியின் முகம் கோபத்தால் இறுகி கொண்டிருந்தது..
ஷாலினி அடிவாங்கிய பிள்ளை போல் இருவரையும் வெறித்து பார்த்தாள்.. யாழினி பேசுவது அவளுக்கு ஒன்றும் புதிதல்ல.. ஆனால் குழலியின் மௌனம் அவளை நொறுக்கி விட்டது.. இரட்டை பிறவி போல் கூடவே வளர்ந்த தன்னை குழலி புரிந்து கொண்டது இவ்வளவு தானா என வேதனையாக குழலியை பார்க்க.. அவளோ எதிரே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்..
மத்தவங்க பேச்சு மதிப்பு கொடுத்தா நாம நம்ம வாழ்க்கைய வாழ முடியாது.. அதோட மாமன் பண்ணது ஒன்னும் அசிங்கமான விசயம் இல்ல.. அவருக்கு நாப்பது வயசுதான் ஆகுது.. இப்போ இந்த வயசுலதான் சிலர் மொத கண்ணாலமே பன்றாங்க.. ஏன் இந்த வயசுல மறுகல்யாணம் பண்ணா என்ன தப்பு.. இளமை காலத்தை விட முதுமை காலத்துல தான் ஒருத்தருக்கு வாழ்க்கை துணை தேவை..
நீ சொல்லுவடி.. ஏன் சொல்ல மாட்ட.. அல்லாரும் குழலியத்தான கேள்வி கேட்பாங்க.. அதான் தெனாவெட்டா பதில் சொல்ற.. என்றாள் யாழினி..
என்ன கேட்டாலும் நானும் இதையே தான் சொல்வேன் யாழினி.. அதோட அதி நம்மட அக்கா.. கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசு.. என அவளிடம் கோபமாக பேசியவள், குழலியை ஆழ்ந்து பார்த்தாள்..
நீ இப்போ கோபத்துல இருக்க.. அதான் நான் சொல்றது செய்றது எல்லாம் உனக்கு தப்பாத்தெரியுது.. கோபம் குறைஞ்சதும் நீதானமா யோசிச்சு பாரு.. என அவள் உள்ளங்கையை அழுத்திவிட்டு சென்றாள்..
யாழினி மேற்கொண்டு தன்னால் முடிந்தளவு அதியை பற்றி வெறுப்புகளை ஏத்திவிட்டு செல்ல, மனம் குழம்பிய நிலையில் இருந்தாள் குழலி.
