Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே அத்தியாயம் – 2

அத்தியாயம் -2

 

விக்ரம் அங்கு இருப்பதை அறியாத ஷாம் நண்பர்கள் அனைவருடனும் சந்தோசமா பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

 



Advertisement

“ஸ்ரே எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்குடா, ஷாம் விக்ரம பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவனே தெரியலையே “என்று புலம்பிக் கொண்டிருந்தாள் ரிங்கு.

 

“விக்ரம் இங்க வருவான்னு நானும் எதிர் பார்க்கவே இல்ல ரிங்கு, இப்போ தான் ஷாம் பழசை எல்லாம் மறந்துட்டு கொஞ்சமாது சந்தோஷமா இருக்கா, இப்போ மறுபடியும் விக்ரம பாத்து டென்ஷன் ஆகி மறுபடியும் டோக்கியோக்கு போயிட்டா என்ன பண்ணுறது “

Advertisement

 

Advertisement

“ஷாம் இங்க இருக்குற வரைக்கும் விக்ரம அவ பாக்காம பாத்துக்கணும் ஸ்ரே “.

 

“ரிங்கு நீ டென்ஷன் ஆகாம இருடா நான் ஷாம பாத்துக்கறேன் “என்றாள் ஸ்ரேயா.

Advertisement

 

அதன்பின் டிஜே பாட்டு போட நண்பர்கள் அனைவரும் ஆட ஆரம்பித்தனர். ப்ரீத்தி ஷாமை ஆட அழைக்க முதலில் மறுத்த ஷாம் பின் நண்பர்களின் வற்புறுதலால் அவர்களுடன் போய் ஆட ஆரம்பித்தால். தான் அணிந்து இருந்த ஹீல்ஸ் செப்பலை கழட்டி வைத்துவிட்டு ” வாத்தி கம்மிங் ” என்று விஜய் பாட்டு ஒலிக்க குத்து குத்துனு குத்த ஆரம்பித்து விட்டாள்.

 

ஷாம் ஆடுவதை பார்த்து ஸ்ரேயும் அவளுடன் ஆட,ஆதித் “மம்மி மம்மி”என்று கைத்தட்டி சிரித்துக் கொண்டிருந்தான். வினித் தன் மனைவி ஆடுவதை ஜொள்ளு விட்டப்படி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

தோழிகள் இருவரும் ஆடுவதை பார்த்த ரிங்கு மேடையில் இருந்து இறங்கி வந்து அவர்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்து விட்டால். பெண்கள் மூவரும் நடுவில் ஆடிக் கொண்டிருக்க நண்பர்கள் அனைவரும் அவர்களை சுற்றி நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தன.

 

இந்த தோழிகளைப் பார்த்து டிஜே ” என் பிரண்ட போல யாரு மச்சான் அவ ட்ரெண்டு எல்லாம் மாத்தி வெச்சேன் ” என்ற பாட்டை போட நண்பர்கள் அனைவரும் ஷாமை பார்த்து பாட்டை பாட ஆரம்பித்தனார். ரிங்கு, ஸ்ரே இருவரும் ஷாமை கட்டி அனைத்து இரு கன்னங்களிலும் முத்தம் கொடுக்க கேமராக்கள் அனைத்தும் இவர்களை அழகாக படம் பிடித்தது.

 

விக்ரம் தன் மொபைல் போனில் இவர்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்.விக்ரம் கூட்டம் அதிகமில்லாத இடத்தில் உள்ள மேஜையில் அமர்ந்து கண் இமைக்காமல் ஷாமையே பார்த்துக் கொண்டிருந்தான் அப்பொழுது அவன் அருகில் கனிமொழி வந்து அமர்ந்தாள்.

 

“ஹாய் விக்ரம் அண்ணா எப்படி இருக்கீங்க, உங்கள இங்க பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு “

என்று கனி கூற சிறிய புன்னகையுடன் ” நான் நல்லா இருக்கேன்மா நீ எப்படி இருக்க, நீ எப்போ யுஎஸ்ல இருந்து வந்த, படிப்பெல்லாம் முடிஞ்சதா, அடுத்து என்ன பண்ண போற “என்றான் விக்ரம்.

 

” படிப்பெல்லாம் முடிஞ்சது அண்ணா , மும்பைக்கு வந்து ஆறு மாசம் ஆச்சு, சஞ்சய் கூட அவரோட கம்பெனில தான் இப்போ ஒர்க் பண்ணிட்டு இருக்கேன், கூடிய சீக்கிரமே நானும் ஷாம் சேர்ந்து நியூ பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறோம் அண்ணா ” என்றாள் கனி,விக்ரம் பதில் கூறாமல் அமைதியாக இருந்தான்.

 

 

“அண்ணா நீங்க ரொம்ப மாறிட்டீங்க, உங்க பேச்சு,ஸ்டைல் எல்லாமே அப்படியே மாறிடுச்சு, காலேஜ் படிக்கும் போது சிரிச்ச முகமா இருப்பீங்க, இப்ப ஏன் உர்னு முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க “

 

விக்ரம் பதில் சொல்ல முடியாமல் பேச்சை மாற்றுவதற்காக “படிப்பெல்லாம் முடிஞ்சு போச்சு அப்புறம் எப்போம்மா கல்யாணம் ” என்றான்.

 

 “ஷாமோட மேரேஜ் முடிஞ்சா அப்புறம் தான் எனக்கும் சஞ்சய்க்கும் மேரேஜ்ன்னு கிராணி(ஷாமின் பாட்டி) சொல்லிட்டாங்க, எங்களுக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு, எப்படியும் இன்னும் ஆறு மாசத்துக்குள்ள ஷாமுக்கு மேரேஜ் பண்ணிடனும்னு கிராணி அங்கிள் கிட்ட சொல்லிட்டாங்க ” என்றாள் கனி.

 

கனி கூறியதை கேட்டு விக்ரமுக்கு கோவத்தில் முகம் இறுகத் துவங்கியது. அப்பொழுது யாரோ கனியை அழைக்க கனி விக்ரமிடம் விடைப் பெற்றுச் சென்று விட்டாள். விக்ரம் கோபத்துடன் ஷாமை பார்க்க அவளோ ஆதித்துடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

” ஓ ஆறு மாசத்துக்குள்ள உனக்கு கல்யாணமா எப்படி நடக்குதுனு நானும் பாக்குறேன்டி” என்று கோவமாக மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

வர்மா விக்ரமை உணவருந்த அழைத்துச் சென்றார். பஃபே சிஸ்டம் முறையில் உணவு பரிமாறப்பட்டது. விக்ரம் கையில் உள்ள தட்டில் தனக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது பேரர் குலோப் ஜாமுன் கிண்ணத்தை நீட்ட அதை விக்ரமும், ஆதித்துக்காக ஜாமுன் வாங்க வந்த ஷாமும் ஒரே நேரத்தில் வாங்கினார். இருவரின் கைகளும் அந்த கிணத்தை பிடித்திருந்தது.

 

“சாரி சார் “என்று கூறிக் கொண்டே நிமிர்ந்த ஷாம் அங்கு விக்ரமை கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும் அடுத்த நிமிடம் யாரோ புதியவரை பார்ப்பது போல் பார்த்து விட்டு வேறொரு ஜாமுன் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

 ஐந்து வருடங்கள் கழித்து ஷாமை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில் விக்ரமின் கண்கள் பல விதமான உணர்ச்சிகளை வெளிக்காட்டியது. ஆனால் ஷாமின் பார்வை அவன் நெஞ்சில் கத்தியால் குத்தியது போல் இருந்தது. “என்ன யாரையோ பாக்குற மாதிரி பாக்குற, அப்போ நான் அவளுக்கு யாரோவா, என்ன பார்த்ததுல அவளுக்கு சந்தோசம் இல்லையா “என்று மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தான்.

 

 குலோப் ஜாமுனை எடுத்துச் சென்ற ஷாம் யாருடனும் பேசாமல் தலை நிமிர்ந்தும் பார்க்காமல் அமைதியாக ஆதித்துக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தாள். எங்கே நிமிர்ந்து பார்த்தால் விக்ரமின் முகம் தெரிந்து விடுமோ என்று பயந்து தலையை குனிந்த வண்ணம் இருந்தால்.

 

 உணவு உண்டு முடிந்ததும் ஆதித் தூங்க செல்ல, ஷாம் நேராக பாருக்குள் சென்று அங்கிருந்த முழு பாட்டில் மதுவை எடுத்து குடிக்க ஆரம்பித்தால், அனைவரிடமும் கூறிவிட்டு வீட்டிற்கு செல்ல வெளியே வந்த விக்ரம் ஷாம் மது அருந்தி கொண்டிருப்பதை பார்த்துவிட்டு ரகுவிடம் ஷாம் பேசுவதை வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு காரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டான்.

 

 ஷாம் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஸ்ரேயா அவளிடம் சென்று பேச ஆரம்பித்தாள்.” பேப் என்னடா ஆச்சு ஏன் இப்படி ஃபுல்லா குடிச்சிட்டு இருக்க “

 

” அவன் இங்க இருக்கான்னு ஏன் ஸ்ரே என்கிட்ட சொல்லல, அவன் இங்க வருவான்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன் “என்று கூறி அழ ஆரம்பித்தாள்.

 

 ஷாம் அழுவதைப் பார்த்து ஸ்ரையாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.” பேப் ப்ளீஸ் அழாதடா, அவன் இங்க வருவான்னு எங்களுக்கும் தெரியாது, தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உன்ன இங்க வர விட்டிருக்க மாட்டேன் டி “

 

” நீ எவ்ளோ தைரியமான பொண்ணு நீ இப்படி அழறதை பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஷாம்” என்றால் ஸ்ரேயா.

 

” என்னால முடியல ஸ்ரே நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன் பழசு எல்லாம் மறக்கணும்னு , இங்க இருந்தா என்னால எதையும் மறக்க முடியல அதான் அம்மா அப்பா கிராணி சித்தி சித்தப்பா வினய் சஞ்சய் ரிங்கு நீ ஆதித் எல்லாரையும் விட்டுட்டு நான் டோக்கியோ ல போய் இருக்கேன் “

 

” ப்ளே ஸ்கூல் போக ஆரம்பிச்சதுல இருந்து நீ நான் ரிங்கு மூணு பேரும் பிரண்ட்ஸ், நான் என் ஃபேமிலி கூட இருந்ததை விட உங்க கூட இருந்தது தான் அதிகம், நீங்க இல்லாம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது அப்படிப்பட்ட உங்களையே விட்டுட்டு போக வெச்சிட்டான் “

 

” டோக்கியோல நீயும் ரிங்கும் இல்லாம நான் தனியா எவ்ளோ கஷ்டப்படுகிறேனு தெரியுமா ஸ்ரே உனக்கு, யாருமே இல்லாம தனியா அனாதை மாதிரி இருக்கேன் டா ” என்று முழுபோதையில் புலம்பி கொண்டே இருந்தாள் ஷாம்.

 

 “அவன் மட்டும் என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் என் நிம்மதி சந்தோஷம் எதுவும் என்னை விட்டு போய் இருக்காது,நீ ரிங்கு என் பேமிலி எல்லாருமே என் கூடவே இருந்து இருப்பீங்க “.

 

“என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டான், அவன் சொன்னதுலாம் நம்புனேன் பாரு நான் பெரிய முட்டாள், முட்டாள் ” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

“பேபி ப்ளீஸ் அழாதடா நீ இப்படிலாம் அழுது நாங்க பாத்ததே இல்லடா, எங்களுக்கு எல்லாம் ரோல் மாடல் டா நீ, நீயே இப்படி அழலாமா, நீ அழுகுறத பார்த்து எனக்கும் அழுகையா வருது ” என்று கூறி ஸ்ரேவும் அழ ஆரம்பித்தாள்.

 

ஷாம் அழுவதை பார்த்த ரிங்குவும் அவர்கள் அருகில் வந்துவிட்டாள். “ஸ்ரே என்னாச்சு என் பேபி இப்படி அழுகுற “

 

“அவ விக்ரம பார்த்துடா அதான் பழச நெனச்சி அழுகுற ரிங்கு “

 

 ரிங்கு, ஸ்ரே இருவரும் எவ்வளவோ சமாதானம் படுத்தியும் ஷாம் அழுகையை நிறுத்தவில்லை, “நான் போறேன் என்னால இங்க இருக்க முடியாது, அவன பாக்குற ஒவ்வொரு நிமிஷமும் நான் அவன் கிட்ட ஏமாந்தது தான் எனக்கு ஞாபகம் வருது, நான் போறேன்,நான் போறேன்” என்று கூறிக் கொண்டே ஸ்ரேயின் தோலில் சாய்ந்து தூங்கிவிட்டாள்.

 

“ரிங்கு இனிமேலும் ஷாம்ம அவ இஷ்டத்துக்கு விடக்கூடாது, அவ பழசு எல்லாம் மறக்கணும்னா அவளுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்கணும் ” என்றாள் ஸ்ரேயா.

 

” பேபி தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்களே ” என்றாள் ரிங்கு.

 

” ஒத்துப்பா,ஷாம் கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒத்துப்பா கிராணி சொன்னா ” என்றாள் ஸ்ரேயா.

 

” ஆமா ஸ்ரே, கிராணி சொன்னா ஷாம் கண்டிப்பா கேட்பா நம்ம உடனே கிராணி கிட்ட ஷாம் கல்யாணத்தை பத்தி பேசி ஆகணும் ” என்று தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க ஷாமின் போனுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்தது, அதை ஓபன் செய்தால் ஸ்ரேயா. 

 

“ஹாய் மித்ரா எப்படி இருக்க, உன் பிரண்ட் மேரேஜ் நல்லபடியா முடிஞ்சுதா, நீ எப்ப திரும்ப டோக்கியோ வர, உன்ன நா ரொம்ப மிஸ் பண்றேன் டார்லிங், உன்ன பாக்காம உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியல, ப்ளீஸ் வேகமாக வா இங்க ” என்று ஆங்கிலத்தில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான்  லீ மீங் கு (ஜப்பான் பையன் ).

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!