Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 15

அத்தியாயம் – 15

 

 இரவு பார்ட்டியை முடித்துவிட்டு லேட்டாக வந்து தூங்கியதால், காலை தாமதமாகவே எழுந்தனர் நால்வரும் அவசர அவசரமாக கிளம்பி உணவருந்திக் கொண்டிருந்தனர், முதலில் உணவருந்தி முடித்த மித்ரா காரை எடுப்பதற்காக வெளியே சென்றாள். அங்கு கோவிலுக்கு செல்ல ஆட்டோ கிடைக்காமல் செல்வி ஆன்ட்டி வெகு நேரமாக வெளியே நின்று கொண்டிருந்தார்.

 



Advertisement

 

“என்ன ஆண்ட்டி நீங்க இன்னும் போகலையா, கோயிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு நீங்க வெளிய வந்து ரொம்ப நேரம் ஆச்சே” மித்ரா.

 

Advertisement

 

Advertisement

“ஆட்டோ எதுவும் கிடைக்கல பாப்பா அதனால தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” செல்வி ஆண்ட்டி (மித்ராவின் வீட்டில் அவர்களுக்கு துணையாக அவருடன் தங்கி வேலை பார்ப்பவர்).

 

 

Advertisement

“என்கிட்ட சொல்லி இருந்தா நான் உங்கள டிராப் பண்ணி இருப்பேன்ல, வாங்க வண்டில ஏறுங்க நான் உங்களை கோவில்ல டிராப் பண்ணிடுறேன்” மித்ரா.

 

 

“இல்ல பாப்பா வேண்டாம் ஏற்கனவே உனக்கு காலேஜுக்கு லேட் ஆயிடுச்சு” செல்வி.

 

 

“காலேஜ் போக நிறைய நேரம் இருக்க ஆண்டி வாங்க பஸ்ட் நான் உங்கள கோவில்ல விட்டுட்டு வாரேன் , ஏறுங்க ஆண்ட்டி வேகமா” 

 மித்ரா ஸ்ரேயாவிற்கு போன் செய்து அவர்களை கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுமாறு கூறிவிட்டு ஆண்ட்டியுடன் கோயிலுக்கு சென்றால்.

 

 

 கோவிலுக்கு வந்ததும் செல்வி மித்ராவை கோவிலுக்கு உள்ளே வருமாறு கூற, தான் அணிந்திருக்கும் உடையை சுட்டிக்காட்டி தன்னால் வர முடியாது என்று கூறி மறுத்து விட்டாள்.

செல்வியை அங்கு இறக்கிவிட்டு விட்டு மித்ரா வண்டியை திருப்பிக் கொண்டிருந்தாள்.அப்பொழுது தான் காரில் இருந்த செல்வியின் பர்ஸ்ஸை பார்த்தாள்.

 

 

 அந்த பர்ஸில் தான் பணம் போன் அனைத்தும் இருந்தது. வேறு வழி இல்லாமல் மித்ரா கோவிலுக்கு சென்றாள். செல்வியை பார்த்து பர்ஸ் கொடுத்துவிட்டு திரும்பி வரும்பொழுது பிரகாரத்தில் அமர்ந்திருந்த வாசுகி மித்ராவை பார்த்து விட்டார், அருகிலிருந்த சுதாவிடம்   

 

 

“அண்ணி அங்க பாருங்க அந்த பொண்ணு எப்படி கருப்பு கலர் சட்டையும் ஜீன்ஸ் பாண்ட் போட்டு, தலைல குதிரைவால் போட்டுக்கிட்டு கோயிலுக்கு வந்து இருக்கான்னு, கோயிலுக்கு எப்படி டிரஸ் பண்ணிட்டு வரணும்னு கூட அந்த பொண்ணுக்கு தெரியல, அந்த பொண்ணு வீட்ல அவளுக்கு கொஞ்சம் கூட ஒழுக்கத்தை சொல்லி வளர்க்கலை போல”

 

 

“நம்ம கவிக்கும் இவ வயசு தான் இருக்கும் அவ எவ்வளவு அடக்க ஒடுக்கமா இருக்கா என் வளர்ப்பு அப்படி” என்றார் வாசுகி தற்பெருமையாக.சுதா வழக்கம் போல் வாசுகி பேசுவதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்.

 

 

“நான் போய் அந்த பொண்ண நாலு கேள்வி கேட்டுட்டு வந்துடறேன் அண்ணி” என்று கூறி வாசுகி கிளம்ப. “அண்ணி அதெல்லாம் வேணாம் அண்ணி விடுங்க, அந்த பொண்ணு யாரோ என்னவோ நமக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை” என்றார் சுதா.

 

 இருவரும் மித்ராவை பார்த்து பேசிக் கொண்டிருக்க கோவில் பிரகாரத்தை சுற்றி முடித்து வந்த கவி மித்ராவை பார்த்ததும் அவள் அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தாள். பெண்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த வாசுகிக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. ஏனோ தெரியவில்லை மித்ராவை பார்த்ததுமே வாசுகிக்கு பிடிக்காமல் போனது. கவி மித்ராவிடம் பேசிவிட்டு அவர்களை நோக்கி சென்றாள்.

 

 

“கவி யாரு அந்த பொண்ணு, ஏன் அந்த பொண்ணு கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க” வாசுகி.

 

 

“அத்தை அவ என்னோட பிரண்டு மித்ரா, அவளை இங்க பார்த்தேன் அதான் சும்மா பேசிட்டு வரேன்” கவிதா.

 

 

“கவி அந்த பொண்ணு கூட எல்லாம் இனிமேல் நீ பேசாத சரியா,அந்த பொண்ண பார்த்தாலே எனக்கு சுத்தமா புடிக்கல அவ ஆளும் டிரெஸ்ஸும் அவ ஜடையும் பாக்கவே சகிக்கல” வாசுகி.

 

 

“அத்தை அப்படி எல்லாம் சொல்லாதீங்க அவ ரொம்ப நல்ல பொண்ணு,அவ பிறந்து வளர்ந்ததெல்லாம் பாம்பேல தான் அதுனால அப்படி டிரஸ் பண்ணுற, ரகுவோட கிளாஸ்மேட் இவ, விக்ரம் அத்தானுக்கு கூட இவள நல்லா தெரியும்” கவி.

 

 

“கவி பாம்பே பொண்ணுனு சொல்ற அப்போ இந்த பொண்ணு தான் விக்ரம் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருக்கிறதா, ரகு விக்ரம் ரெண்டு பேரையும் அடிச்சதும் இந்த பொண்ணு தானா” என்றார் வாசுகி கோவமாக, கவி அமைதியாக ஆம் என்று தலையை மட்டும் ஆசைத்தாள். 

 

 

வாசுகி கோபமாக அங்கு எங்கேனும் மித்ரா இருக்கிறாளா என்று தேடிப் பார்த்தார். மித்ராவின் நல்ல நேரம் வாசுகியின் கையில் சிக்காமல் சென்று விட்டாள்.

 

 

“கவி உனக்கு கடைசி தடவியா சொல்றேன் இனிமேல் அந்த பொண்ணு கூட நீ பேசறதையோ பழகுவதையோ பார்த்தேன், நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, இன்னையோட அந்த பொண்ணோட பிரண்ட்ஷிப்பை முடிச்சுக்குற புரியுதா” என்றார் வாசுகி அதீத கோபத்துடன். கவி மறுத்து ஏதோ கூற வர அவளின் கையை பிடித்து அழுத்தி சைகையால் எதுவும் பேசாதே என்று கூறினார் சுதா.

 

 

மித்ரா வீட்டிற்கு சென்று தோழிகளை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றாள். மதிய உணவு இடைவேளையின் போது மித்ரா அவளது நண்பர்களுடன் அமர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

 

 

ஜுஸ் வாங்கிக் கொண்டிருந்த ஸ்ரேயாவின் போன் அடித்தது. திரையில் தெரிந்த நம்பரை பார்த்து பயத்துடன் போனை எடுத்து “ஹலோ” என்று சொல்லி முடிப்பதற்குள் “எங்க இருக்கீங்க இப்போ” என்றார் எதிர் முனையில் இருந்தவர். “கேன்டீன்ல இருக்கோம்” என்று சொன்னதும் கால் கட் ஆகி விட்டது.ஸ்ரே வேகமாக மித்ராவிடம் சென்று “பேப் இப்போ எனக்கு ஒரு கால் வந்தது அதுல அதுல” என்று இழுத்தால் அங்கு வந்து கொண்டிருப்பவரை பார்த்து.

 

 

“யாரு ஸ்ரேயா கால் பண்ணா சொல்லு” என்றாள் மித்ரா லெக் பிஸ்ஸை கடித்துக் கொண்டே.

 

 

“அன்னப்பூரணி பாட்டி” என்றாள் மித்ராவின் பின்னால் பார்த்துக் கொண்டே.

 

 

ஸ்ரேயாவின் பார்வையை தொடர்ந்து மித்ரா பின்னால் திரும்பிப் பார்த்தால் அங்கு முகத்தில் அனல் தெறிக்க கோவமாக நின்றிருந்தார் அன்னப்பூரணி பாட்டி.

 

 

“அம்மம்மா நீங்க எப்படி இங்க” என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மித்ராவின் கையில் லெக் பிஸ்ஸை பார்த்து விட்டு “உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன் வெள்ளிக்கிழமை அசைவம் சாப்பிடாதன்னு, சொல்லுற பேச்சை கேக்கவே மாட்டைய நீ” என்று கூறி தன்னுடைய கைத்தடியை வைத்து மித்ராவின் காலில் அடிக்க ஆரம்பித்து விட்டார்.

 

 

“அம்மம்மா தெரியாம சாப்பிட்டேன் இனிமேல் சாப்பிட மாட்டேன் அடிக்காதிங்க வலிக்குது” மித்ரா.

 

 

“வலிக்கனுன்னு தான் அடிக்குறதே, ஆமா என்ன டிரஸ் இது பொண்ணா அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ண தெரியாதா உனக்கு, உன் கூட வளர்ந்தவங்க ரெண்டு பேரும் எப்படி டிரஸ் பண்ணி இருக்காங்க, அவங்கள பாத்து கூட நீ திருந்த மாட்டியா மித்ரா” என்று கூறி மேலும் நான்கு அடிகளை போட்டார்.

 

 

 மித்ராவின் கெட்ட நேரமும் என்னமோ தெரியவில்லை ஸ்ரேயா லாங் குர்த்தி மற்றும் லெகின்ஸ் அணிந்தும், ரிங்கு அனார்கலி சுடி அணிந்தும் வந்திருந்தனர். மித்ரா பெண்கள் இருவரையும் முறைத்துப் பார்த்தால். அவர்களோ பாவமாக மித்ராவை பார்த்தனர்.

 

 

“ஸ்ரேயா யாரு இந்த ஓல்ட் லேடி எதுக்காக மித்ராவ இப்படி அடிக்கிறாங்க” என்றான் சரண். 

 

 

“இவங்க அன்னபூரணி பாட்டி மித்ரா ஓட அம்மம்மா, அதாவது மித்ரா ஒட அம்மாவோட அம்மா” என்றாள் ஸ்ரேயா.

 

 

 அம்மம்மா என்ற வார்த்தையை கேட்டவுடன், விக்ரமின் கண்கள் கலங்க ஆரம்பித்தது அவன் காதுகளில் “நீ எந்நேரம் பிறந்தாயோ என் மகள் வாழ்க்கையே போயிருச்சு, நீ பொறந்ததுக்கப்புறம் தான் என் வீட்டில் சந்தோஷம், நிம்மதி எல்லாமே போயிருச்சு ராசிக்கெட்ட ஜென்மம் நீ, உன் முகத்துல முழிச்சாலே எதுவும் விளங்காது,என் கண்ணு முன்னாடி வராதா சனியனே இங்கிருந்து போயித்தொலை” என்று விக்ரமை திட்டித்திற்கும் வாசுகியின் அம்மா வள்ளியின் நியாபகம் வந்தது.விக்ரமின் நிலை உணர்ந்த ரகு ஆறுதலாக அவன் கையைப் பற்றிக் கொண்டான்.

 

 

“நான் இங்க கத்திக்கிட்டு இருக்கேன் நீ என்னடி வேடிக்கை பாத்துட்டு இருக்க” என்றார் பாட்டி. இதுக்கு மேல நம்மளால அடி தாங்க முடியாது என்று நினைத்த மித்ரா. அவளுடைய சீக்ரெட் ஆயுதத்தை உபயோகித்தால்

 

 

“அம்மம்மா ப்ளீஸ் வலி தாங்க முடியல அடிக்காதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்ச ஆரம்பித்தாள். தோழிகள் இருவரும் மித்ராவை பார்த்து சிரிக்க, மித்ராவோ அவர்களை பார்த்து கண் அடித்தால்.

 

 

மித்ரா ப்ளீஸ் என்று சொன்னதுமே பாட்டி அடிப்பதை நிறுத்திவிட்டார். “ராஜாத்தி உன்கிட்ட எத்தன தடவ நான் சொல்லி இருக்கேன் உன் வாயிலிருந்து ப்ளீஸ் என்கிற வார்த்தை வரக்கூடாதுன்னு, எங்க மித்ரா எப்பவும் எதுக்காகவும் யார்கிட்டயும் கெஞ்ச கூடாது, அப்படி ஒருத்தர் கிட்ட கெஞ்சியோ யாசகமாவோ கேட்டு கிடைக்கிற எதுவும் உனக்கு தேவை இல்லை புரிஞ்சாத”

 

 

“நான் அடிக்கிற நாலு அடிய கூடவா உன்னால தாங்க முடியாது, அந்த அளவா உடம்புல சத்து இல்லாம இருக்குற நீ” என்றார் பாட்டி.

 

 

“அம்மம்மா நீங்க அடிச்ச அடியில என் கால் பாருங்க எப்படி சிவந்துருச்சுன்னு” மித்ரா காலை காட்டினால் .

 

 

“ஐயோ என் ராஜாத்தி கால் இப்படி சிவந்துப் போச்சே , ஏதோ கோவத்துல தெரியாம அடிச்சுட்டேன் கண்ணு” என்று கூறி மித்ராவை அமர வைத்து அவளின் காலை மடியில் தூங்கி வைத்து தடவிக் கொடுத்தார்.

 

 

“அம்மம்மா இப்ப வலிக்கல விடுங்க, ஆமா நீங்க என்ன திடீர்னு என் காலேஜ்க்கு வந்து இருக்கீங்க என்ன விஷயம்” மித்ரா.

 

 

“கண்ணு நீ ஏன் இப்படி எல்லாம் பண்ற,எதுக்கு ஆபத்தான போட்டிகள் எல்லாம் கலந்துக்குற, உனக்கு ஏதாவது ஆயிருச்சுன்னா எங்கனால தாங்க முடியாது பாப்பா. உங்க அம்மாவ பத்தி கொஞ்சமாது நீ நினைச்சு பார்த்தியா,அவளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும், நீ தான் நம்ம குடும்பத்தோட உயிர்நாடியே, இனிமேல் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் கலந்துக்காத பாப்பா” என்று கூறி கண் கலங்கினார்.

 

 

“அம்மம்மா அழாதீங்க இனிமேல் நீங்க வருத்தப்படுற மாதிரி எதையும் நான் பண்ண மாட்டேன் சரியா” என்று கூறி அவரை சமாதானப்படுத்தி, பாட்டிக்கு தன் நண்பர்கள் அனைவரையும் அறிமுகப் படுத்தி வைத்தாள் மித்ரா.

 

 

கனியை பார்த்ததும் “கண்ணு நல்லா இருக்கியா கண்ணு உன்ன பத்தி மித்ரா சொல்லி இருக்கா, நீ யாரும் இல்லன்னு எல்லாம் வருத்தப் படக்கூடாது கண்ணு. பாட்டி நான் இருக்கேன் நம்ம குடும்பம் இருக்கு அப்புறம் உன் நண்பர்கள் எல்லாரும் இருக்காங்க, எப்பவும் சந்தோசமா தைரியமா இருக்கணும், இனிமேல் உனக்கு பரீட்சைக்கு லீவு விடுறப் போலாம் நேர கிளம்பி நம் ஊருக்கு வந்துரு அங்க வயலு வாய்க்காலுனு சுத்தி பாத்துகிட்டு நம்ம ஜாலியா இருக்கலாம் சரியா” என்றார் பாட்டி. கனியும் மகிழ்ச்சியாக சரி என்று தலை ஆட்டினாள்.

 

 

 பின் பாட்டி மித்ராவிற்காக கொண்டு வந்த பால்கோவா அதிரசம் முறுக்கு சீம்பால் சீடை அச்சுமுறுக்கு தேன் மிட்டாய் போன்ற பலகாரங்களை மித்ராவின் நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்தார்.

 

 

கிளம்பி செல்லும் முன் மித்ராவின் நண்பர்கள் அனைவரையும் பெரிய கோவில் தேர் திருவிழாவிற்கு வருமாறு கூறினார். அனைவரும் வருவதாக உறுதி அளித்தனர்.பாட்டி அனைவரிடமும் விடைப் பெற்று காரில் ஏற சென்றார். அப்பொழுது 

 

 

“ராஜாத்தி உன்னோட மீனாட்சி மேடம் கிட்ட போன் பண்ணி பேசு அவங்க சொல்றபடி கேட்டு நடந்துக்கோ, விழாக்கு உன் ஃபிரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு வந்துறு” என்று கூறிவிட்டு சென்றார்.

 

 

 தேர் திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மித்ரா கனி இருவரும் கிளம்பி தஞ்சாவூர் சென்று விட்டனர். ஸ்ரேயா ரிங்கு இருவரும் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு திருவிழாவிற்கு முதல் நாள் இரவு அங்கு சென்று சேர்ந்தனர். அவர்களுடன் ரகு விக்ரம் கவி மூவரும் செல்லவில்லை. வாசுகி குலத்தெய்வம் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செய்ய வேண்டும் என்று கூறி விக்ரம் கவி செல்ல மறுத்துவிட்டார்.விக்ரமுக்கு துணையாக ரகுவும் அவர்களுடன் சென்று விட்டான்.

 

 

சித்திரை தேரோட்டம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தியாகராஜசாமியும், கமலாம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

 

 

தேருக்கு வலப்புறமாக மித்ராவின் குடும்பத்தார் நின்று கொண்டிருந்தனர். அவருக்கு நேர் எதிர் திசையில் விக்ரமின் குடும்பம் நின்று கொண்டிருந்தது.தஞ்சைக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் தான் அமைந்துள்ளது வாசுகி குலதெய்வம் கோவில் விடியற்காலையிலேயே குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு தேரோட்டத்தை காண வந்திருந்தனர்.

 

 

 தேரில் எழுந்தருளியிருந்த சுவாமிகளை மனம் உருகி வேண்டிக்கொண்டு கண்ணை திறந்து விக்ரம் கண்டது. பட்டுப்பாவாடை தாவணியில் இரட்டை ஜடை அணிந்து தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து நெற்றிச்சுட்டி ஒட்டியானம் வளையல் ஆரம் காசுமாலை ஜிமிக்கி அணிந்து கோவில் சிற்பம் போல் நின்று கொண்டிருந்த சங்கமித்ராவைத் தான்.

 

 

 மித்ராவை பார்த்ததுமே விக்ரமின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று இருந்தது. கண்களை இமைக்க மறந்து மித்ராவை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

“உன் இப்படி பாக்குறதுக்கு தாண்டி நான் இத்தனை நாளா ஆசைப் பட்டேன். தேவதை மாதிரி இருக்கடி அமுலு நீ எப்பவும் இப்படியே இருடி அதான் ஏன் அம்மாவுக்கு பிடிக்கும். லவ் யூ சோ மச் அமுலு” என்று மனதிற்குள்ளேயே மித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

 

விக்ரமிக்கு மித்ராவை பார்த்த அன்றே பிடித்து விட்டது,போக போக காதலாக மாறிவிட்டது. மித்ரா அணியும் உடை அவளது நடவடிக்கை அனைத்தும் ஆண்களை போல் இருந்ததால் எங்கே தனது அம்மாவிற்கு மித்ராவை பிடிக்காமல் போய்விடுமோ என்று பயந்த விக்ரம்.

 

 

மித்ராவை பார்க்கும் போது எல்லாம் அவளை சீண்டிக் கொண்டே இருந்தான். அப்படியாது அவள் மாறி விட மாட்டாளா என்ற ஆசையில் தான்.தான் ஆசை பட்டது போல் கோவில் சிலை போல் இருந்த மித்ராவை பார்த்ததும் விக்ரமின் காதல் அதிகரித்துக் கொண்டே சென்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!