Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 22.3

ஒரு வருடம் கடந்திருந்தது. ஆரோஹி மொத்தமும் குணமாகியிருந்தாள். ஆனால் அவள் கடந்து வந்த பாதை அத்தனை சாமான்யமாக இல்லை. முள்ளில் நடப்பது போல் தான் அவளது நாட்கள்.

அருகே நின்று அழுது கண்மூடி கலங்கினாலும் அவள் படும் வேதனைக்கு முன்பு இதெல்லாம் எம்மாத்திரம் என்னும் வகையில் தான் இருந்தது அடுத்து வந்த சிகிச்சை.

கீமோ செய்யும் ஏற்பாடு அடுத்த ஒரு வாரத்தில் துவங்கியது. இந்த கீமோ திருப்பி செய்வதிலும் வேதனை கொஞ்சமெல்லாம் இல்லை. உடல் நலனை தாண்டி மனதளவிலும் அதிக பாதிப்பு ஏற்பட தான் செய்தது.

உடல் பருமன் ஆவது, வாந்தி, மயக்கம், செரிமான சிக்கல், முக்கியமாக ஆரோஹியை அதிகம் உலுக்கியது அவளது முடி உதிர்வை தான். ஆசையாக வளர்ந்திருந்த கேசத்திலிருந்து கால் வாசி கழிந்து அதிகம் அழுதுவிட்டாள்.



Advertisement

இதை எல்லாம் தாண்டி ஒரு வாரம் செவிகள் வேலை செய்வதையே நிறுத்தியது. பயந்து போன குடும்பம் உடனே அதற்கு மருத்துவம் பார்க்க துடிக்க, மருத்துவர்கள் தடுத்தனர்.

“கீமோ பண்றப்போ இது சிலருக்கு வர தான் செய்யும். கொஞ்சம் பொறுங்க. ஆல்ரெடி அவங்களுக்கு ரொம்ப மெடிசின் கொடுக்குறோம் அதுக்கும் மருந்து எடுத்தா அவங்களுக்கு தான் கஷ்டம். கீமோ முடிஞ்சதும் தானா எல்லா பிரச்னையும் சரியாகிடும்” என்றார்.

அவர்கள் கூறியது போலவே அடுத்த சில நாட்களிலே மீண்டும் காது வழக்கம் போல் கேட்க துவங்க, அஸ்வினை கட்டி அழுத்துவிட்டாள்.

Advertisement

“எனக்கு பயமா இருக்கு நாராயணா. இந்த டிரீட்மென்ட் எதுவும் வேணாம். வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று.

Advertisement

மனைவியை சமாதானம் செய்து அடுத்த ஒரு மாதம் ஆரோஹி மொத்தமாய் குணமாகிவிட்டால் என்கிற செய்தியை கேட்ட பிறகே குடும்பம் நிம்மதியாக வீட்டிற்கு திரும்பியது.

மதி ஆரோஹியை இன்னும் சில மாதங்கள் தனியாக விடப்போவதில்லை என அழுத்தமாக கூறிவிட, மறுக்காமல் இருவரும் அங்கு இடம்பெயர்ந்தனர்.

இடையே சித்தார்த், ஜனனி ஸ்ரீ பற்றிய சில சிக்கல் உருவாகி இப்பொழுது அதுவும் ஒரு முடிவிற்கு வந்து வீடே மகிழ்ச்சியில் திளைத்தது.

Advertisement

திவ்யா மாறன் குழந்தை பிறந்தநாளுக்கு கூட கடந்த மாதம் அனைவரும் சென்று கொண்டாடி வந்தனர்.

மருத்துவமனையில் இருந்து வந்த ஆரோஹி கணவனை மீண்டும் விளையாட மிரட்டி அனுப்பி வைத்தாள்.

ஓரளவிற்கு ஆரோஹி தான் அந்த பெண் என்னவும், அவளது புற்றுநோய் பற்றியும் செய்திகள் வெளியாக தான் செய்தது. அஸ்வின் மொத்தமாய் நான்கு மாதங்கள் தலைமறைவானது போல் மனைவியோடு செலவிட்டு அவளை கொஞ்சம் மீட்டிருந்தான்.

தான் நலமாக உள்ளதாக வாக்கு கொடுத்தவள் அஸ்வினை மீண்டும் அணிக்கு அனுப்பி வைக்க அவன் நேரம் அவன் எது தொட்டாலும் அதில் வெற்றியே அதிகம் கிட்டியது.

மனைவி வந்த நேரமா என கேள்விகள் எழுந்தாலும் எதற்கும் விளக்கம் கொடுக்கவில்லை அவன். மனைவியை முழுதாய் குணமாக்கி மக்கள் முன்பு நிறுத்த முடிவெடுத்து மௌனம் காத்தான்.

ஆரோஹி எட்டு மாதங்களில் குணமாகி இருந்தாலும் ஒரு வருடத்திற்கு மேல் தான் அவளை அவள் விருப்பபடி இருக்க விட்டான்.

“சில்க் சாரீ, டிசைனர் சாரீ எதுனு முடிவா சொல்லுங்க” இரு கையில் இரு வகை புடவையை வைத்து கணவனிடம் கேட்டாள் குழப்பமாக.

இன்னும் இரண்டு நாட்களில் அஸ்வின் ஆரோஹி திருமண வரவேற்பு. பெரிய வகையில் தொழில்துறை நண்பர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என ராகவ் பலமான ஏற்பாடு செய்திருந்தார்.

“அதான்டா எனக்கும் தெரியல” என்றவன் கையில் இருந்த டேப்லெட் கட்டினான் அவளிடம். எதையோ புதிதாக வாங்க போகிறான் என நம்பியவன் வேகமாக வந்து அவன் அருகே அமர்ந்தாள்.

“இது பழைய காலத்து பைக் மாடல். ராயல் என்பீல்ட் மினி புல்லட். அப்பா இதை பத்தி ரொம்ப சொல்லுவாங்க. அவங்க இந்த பைக்ல தான் அம்மாவை முதல் முதல வெளிய கூட்டிட்டு போனாங்களாம். இதை இப்போ அவருக்கு வாங்கி கிபிட் பண்ணலாம்னு இருக்கேன்”

“செம்ம நாராயணா, வாங்கலாம். ஆனா மாடல் இப்போ இல்லையே”

“இருக்கு. ரெண்டே ரெண்டு பைக் தான் இந்தியால இருக்கு. அதுல ஒருத்தர் தர்றேன்னு சொல்லிருக்கார், வாங்கி நாம வேலை பாத்துக்கலாம்” அஸ்வின் கூற சரி என்றவள் முகமும் பிரகாசமாய் இருந்தது.

மீண்டும் குழப்பம் வந்து குடிகொள்ள, முகத்தை சுருக்கினாள், “எந்த சாரீ போடலாம்”

“உனக்கு எதுடா புடிச்சிருக்கு?”

“எனக்கு ரெண்டுமே ரொம்ப புடிச்சிருக்கு”

அஸ்வின், “அப்போ ரெண்டையும் போட்டு வா. முடிவு பண்ணலாம்” இதோ என ஓடியவன் முதலில் ஊதா நிற பட்டுப்புடவை ஒன்றை உடுத்தி வந்தாள். பார்த்த உடனே மனதில் ஒட்டிக்கொண்டது ஆரோஹியின் அழகிய உருவமும், அவள் நிறத்திற்கு எடுப்பாய் இருந்த அந்த புடவையின் நிறமும்.

“ஸ்பீச்லெஸ்… ஸ்டன்னிங்” என்றான் புருவத்தை உயர்த்தி முழு திருப்த்தியில்.

வெட்கத்தோடு, “அடுத்தது…” என அருகில் இருந்த அவள் அறைக்கு சென்றவள் அந்த செர்ரி ரெட் நிற டிசைனர் புடவையை அணிந்து வந்து அவன் முன்பு இப்படியும் அப்படியும் புடவையை காட்டினாள்.

அவளை கடந்து சென்றவனை பார்த்ததும் புடிக்கவில்லையோ என ஆரோஹி நினைத்திருக்க அவளவனோ அவன் அறையின் கதவினை அடைத்து வந்து மின்னல் வேகத்தில் மனைவியை தன்னுள் இழுத்திருந்தான். அஸ்வின் மெத்தையில் அமர்ந்திருக்க,

அவன் மடியில் அவன் மனைவி. கட்டிலுக்கு நேர் எதிர் இருந்த கண்ணாடியை அவன் கண்கள் மேய, என்ன பார்க்கிறான் என புரியாது திரும்பியவளுக்கு தன்னுடைய ரவிக்கையின் அழகை தான் கணவன் பார்க்கிறான் என புரிந்து முகம் சூடானது.

அவன் முகத்தி பிடித்து தன் கண்ணை பார்க்க செய்தாள், “யோவ் சேட்டை”

“நான் சேட்டை எல்லாம் செய்றது இல்ல டா. உனக்கே தெரியும். முத்தத்துக்கு கூட பஞ்சமா தான் இருக்கு” மனைவியின் தாடையை மென்மையாக பற்றிய அஸ்வின் பெருவிரல் அவளது கீழ் உதட்டினை வருடியது.

“டாக்டரே சேட்டை பண்ணிக்கலாம்னு ரெண்டு மாசம் முன்னாடி சொல்லிட்டாங்களே” என்றாள் அவன் கைகளில் உருகி.

“அவங்க சொல்லுவாங்க. அவங்களுக்கு என் ஆரூ எவ்ளோ சாப்ட்னு தெரியாதுல”

அஸ்வின் கை தட்டிவிட்டு விலகி நின்றவளை விருட்டென அஸ்வின் பிடித்து இழுக்க, பெயருக்காக தோளில் நடனமாடிய அவள் முந்தானை சரிந்து கீழே விழுந்தது. வேகமாக ஆரோஹி அதனை சரி செய்ய பார்க்க அவள் நேரம் முத்தானையின் ஒரு பக்கம் அவள் அமர்ந்திருந்தாள்.

அதனை எடுத்து மேனியில் சுற்ற நினைத்தவள் செயலை அவளுக்கு முன்பு அவள் கணவன் செய்திருந்தான்.

மனைவி இடையை பிடித்து மெல்ல தூக்க, அந்த நொடியில் புடவை ஆரோஹி கைக்கு சென்றுவிட்டது. வசமாக அவளது வெற்று இடை இருக்கைகளில் சிக்கியிருக்க, வெண்ணை தடவிய இடுப்பை பார்க்காமல் ஸ்பரிசமே போதையூட்டியது.

நிதானித்தவன் தன்னுடைய பிடியில் விக்கித்து நின்ற மனைவி கையிலிருந்த புடவை தலைப்பை அவள் தோள் சுற்றி வைத்து அவள் தவிப்பை தணித்தான்.

“ஆரூ எந்திரி” என்றான் தன் வசம் மெல்ல பொறுமை இழந்து போவதை உணர்ந்து.

கணவனின் கண்ணிய செயலில் கன்னி மனமோ மேலும் உருகியது. அவள் அசௌகரியம் புரிந்தவன் பாராவை ஒரு நொடி கூட தன் முகத்தை விட்டு கீழிறங்கவில்லை.

“மாட்டேன்” சட்டமாக அவனை விட்டு நகரவில்லை. அவள் உயிர் கூட அவனுக்காக பட்டயம் செய்து கொடுத்திருக்க, இந்த உடல் எல்லாம் ஒரு சிறு பண்டமாற்று முறை தானே.

“உன் உடம்பு தேறல ஆரூ. இன்னும் ஆறு ஏழு மாசம் ஆகட்டும்” என்றான். கோவமாக எழ போனவளை பிடித்து நிறுத்தியவன் அவள் கழுத்து வளைவில் அடைக்கலமானான்.

அவளுக்கே உரிய தனி நறுமணம் அஸ்வினை கிறங்கடிக்க, “போங்க வேணாம்னு சொன்னிங்க” என்றவள் வார்த்தை கூட அவன் அங்கு கொடுத்த முத்தத்தில் சுதி குறைந்து போனது.

“வேணாம்னு எப்பவும் சொல்ல மாட்டேன், தள்ளி வைக்கலாம்னு தான் சொல்றேன்” என்றவனோ முத்தத்திற்கு மட்டும் தடையே இல்லை என்பது போல் அவளது இரு பக்க கழுத்து, காது மடல் என அவஸ்தையை கொடுத்தான்.

“அஸ்வின்…” திணறியவள் பின்னங்கழுத்தை பிடித்து கண் பார்க்க செய்தான்.

சொக்கி கிடந்தாள் அவன் மனைவி, “ஸ்வீட் சாப்பிட்டுக்கவா டா?” நல்ல பிள்ளை போல் அவன் அனுமதி கேட்க அவளுக்கு புரியவில்லை கண் சுருக்கி கேள்வியாய் பார்த்தவள் மேல் குறும்பு பார்வையை பதித்தவன் அவள் இதழை சிறை செய்து விடை கொடுத்தான்.

அஸ்வினின் ஆக்கிரமிப்பில் கிறங்கி தவித்தவள் விறலோடு விறல் பிணைத்து பதட்டம் போக்கினான்.

காண கிடைக்காத ஓவியத்தை ஒன்றை தேநீரை கையில் வைத்து மெல்ல பார்த்து ரசிப்பது போல் அனுபவித்து ருசித்தான்.

பூவாய் வருடிய முற்றுகையில் போரினை நிகழ்த்த முடிவெடுத்தவளோ ஆவேசமாய் அவனை ஆட்கொள்ள முயல, அவளுக்காக பார்த்து மூச்சு விட அஸ்வின் கொடுத்த இடைவெளியை கூட விடாமல் தனக்கு கிடைத்த முத்தத்தை போல அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்து பற் தடம் பதிய ஆதிக்கத்தை நிலைநாட்டினாள்.

“ஸ்ஸ்… ஏய் என்னடி இப்டி கடிக்கிற?” நிஜமாகவே வலிக்க அவளை கடிய மனம் வராமல் சிரிப்போடு கேட்டான்.

“வேணும்னா நீங்களும் கடிச்சுக்கோங்க” பதிலுக்கு தன்னுடைய கழுத்தை காட்டினாள் அந்த அடாவடி பெண்.

சட்டென மோகம் தலை தூக்க, அவள் காட்டிய இடத்தினில் பாய்ந்தவன் அங்கு மட்டும் அல்லாது அவளது புடவையை மெல்ல கழுத்திலிருந்து கீழே இறக்கி அவஸ்தைகள் கொடுக்க மூச்சு திணறி அவன் மார்பினில் கை வைத்து தடுத்தாள் ஆரோஹி.

அவள் நிலையை பார்த்தவன், மனைவி முதுகினை வருடி தன்னையும் ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

“சாரி டா கண்ட்ரோல் மிஸ் ஆகிடுச்சு” பரவாயில்லை என தலை அசைத்தவள் முகம் சிவந்து போனது.

அவள் ஆடையை சரி செய்தவன் தன்னுடைய சிகையை கைகளால் கோத, அவன் டீ-ஷர்ட்டின் கை பிடித்து இழுத்து, “நானே கேக்குறதால என்ன தப்பா நினைக்க மாட்டீங்க தான அஸ்வின்?”

அவளை விலகி இருக்க அவனுக்கு மட்டும் விருப்பமா என்ன, அவள் அருகாமையை போதும் என நினைத்தவன் தான். ஆனால் ஒரு முறை பெண் பூவின் தேனை ருசி பார்த்த பிறகு மீண்டும் அதனிடம் செல்லும் ஆண் வண்டின் குணமும் தெரிந்து தான் தள்ளி இருக்கிறான்.

ஆரோஹி தலை வருடியவன், “வேணாம்னு சொல்ல பொண்ணுங்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கோ அதே அளவு வேணும்னு சொல்லவும் உரிமை இருக்கு” நெற்றி முட்டி புன்னகைத்தான்.

நிறைந்த மனதோடு அவன் தோள் சாய்ந்தவள், “எந்த டிரஸ் போடனு சொல்லவே இல்ல நீங்க”

“கண்டிப்பா இந்த சாரீ இல்ல. அதுவும் பின்னாடி ப்ளௌஸ் பாரு, ஜன்னல் வச்ச மாதிரி” பேசியவன் முதுகிலே அணைப்பு கலையாமல் அடித்தாள்.

“என்னமோ ரொம்ப தான். நீங்க தானே டிசைன் கொடுத்தது, அப்றம் என்ன குறை?”

“அளவு போன மாசம் எடுத்ததுடி. இப்போ பாரு உனக்கு குட்டி தொப்பை போட்டுடுச்சு, சோ ரொம்ப உன் ஒடம்ப ஹக் பண்ணி காட்டுது”

அவள் வயிற்றினை பிடிக்க வந்தவன் கையில் பட்டென அடித்து, “நோ சொன்னா எல்லாத்துக்கும் நோ தான்”

“இல்ல முத்தம், தொடுறது எல்லாம் கணக்குல வராது” என்றான் அஸ்வின்.

“எல்லாமே வரும்” என்றாள் இவளும்.

“இதெல்லாம் ரொம்ப தப்புடி, பாவம்ல உன் அஸ்வின்?”

அவன் கன்னத்தில் செல்லமாக தட்டியவள், “பீர் அடிக்கிற மூஞ்சி பாவமாமே. இருக்கட்டும் பாவத்தோடயே”

அஸ்வின் அணைப்பிலிருந்து எழுந்து சென்றவள் உறுதியில் முத்தத்திற்கு கூட பஞ்சம் வந்துவிடுமோ என அஞ்சியவன் மனைவியை கெஞ்சிக்கொண்டே அவள் பின்னே தொடர்ந்தான்.

தன்னையே சுற்றி வரும் அஸ்வினின் அளவற்ற இந்த அன்பினில் அடக்கிய சிரிப்போடு அவனை மீண்டும் தன் பின்னே அலைய வைத்தாள் அஸ்வினின் பட்டாம்பூச்சி.

முற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!