மு.வ உரை: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.”
குழந்தை நல்ல உறக்கத்திற்குச் சென்றிருக்க எப்போதும் போல் அவளுக்குப் போர்த்தி விட்டு செங்காந்தள் படுக்க எத்தனித்த நேரம் கேட்ட கணவனின் குரலில் அப்படியே அமர்ந்து விடி விளக்கின் ஒளியில் கணவனை நோக்கினாள்.
“அதெல்லாம் இல்ல சொல்லுங்க மாமா.”, என்றதும் படுத்திருந்தவன் எழுந்து மகளின் கால் இருந்த பக்கத்தில் அமர செங்காந்தளும் மகளின் தூக்கம் கெடாமல் இருக்க அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.
Advertisement
“சேலை நல்லாயிருக்கா?”, என்றவனின் பார்வை ஓரமாய் வைத்திருந்த அந்தக் கடைப் பையில் பதிந்திருக்க மெதுவாய் எழுந்து சென்று எடுத்து வந்தவளாய் அதை நூறாவது முறையாய் மென்மையாய் தடவிப் பார்த்தாள்.
Advertisement
“ரொம்ப நல்லாயிருக்கு மாமா.”
“உனக்கு என்கிட்ட எதுவும் சொல்லணுமா?”
“ம்ம்?”
Advertisement
“இல்ல எதாவது கேட்கணுமா?”
“உங்களுக்கு இப்பவும் என்னைப் பிடிக்கலையா?”, என்றதில் பெரும் அமைதி ருத்ரேஸ்வரனிடத்தில்.
“இல்ல எனக்குத் தெரியும் நான் உங்களுக்கு பொருத்தமே இல்ல. ஆனாலும் இம்புட்டு வருஷத்தில் எதாவது மாறிருக்கானு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.”
“உனக்கு என்னை சுத்தமா பிடிக்காதுனு எனக்குத் தெரியும். என்னை மாதிரி ஒரு புருஷனை எந்த பொண்ணும் கண்டிப்பா சகிச்சுகிட்டு இருந்துருக்க மாட்டா.
உன் வாழ்க்கையை கெடுத்துட்டேனோனு குற்றவுணர்ச்சியா இருக்கு.”
“!!”
“என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியலை. நீ சொல்லு உன் முடிவு எதுவாயிருந்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன்.”
“…”
“என்னால உன் வாழ்க்கை..”
“எனக்குனு தனியா எந்த வாழ்க்கையும் இல்ல மாமா.”
“!!”
“நீங்களும் இந்த வீடும் தான் சாகுற வரைக்கும் என்னோட வாழ்க்கை. உங்க மனசில் வேற எதுவும் இருந்தா நீங்க சொல்லுங்க. நான் புரிஞ்சுக்க நிச்சயமா முயற்சி பண்றேன்.”
“என் மனசில் எதுவுமில்ல”
“ஆனால் நானும் இல்லையே!”
“!!”
“பிடிக்காத வாழ்க்கையை நீங்களும் எவ்வளவு தூரம் கொண்டு போக முடியும். உங்களுக்கு பிடிச்ச மாதிரி யாரையாவது..”
“காந்தா! என்ன பேசுற?”
“மன்னிச்சுடுங்க. எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்ல. ஆனால் இந்த வீட்டை விட்டு மட்டும் போக சொல்லாதீங்க மாமா.”
“!!!”
“உங்களுக்கு தான் இது பிடிக்காத கல்யாணம். என் மனசில் உங்களைத் தவிர எந்த சென்மத்திலேயும் யாருக்கும் இடம் கிடையாது.”, என்றவள் தொண்டை பிசிறாமல் இருக்க பெரும்பாடு படுவது ருத்ரேஸ்வரனுக்கு நன்றாகவே புரிந்தது.
என்னவோ பேச நினைத்து பேச்சு எப்படியோ சென்று இப்போது அவளை சமாதானப்படுத்த முடியாமல் திணறினான்.
“மாமா..”
“ம்ம்?”
“ஒண்ணு மட்டும் கேட்கணும். கோவிச்சுக்க மாட்டீங்களே?”
“என்ன எதுவாயிருந்தாலும் சொல்லு..”
“கொஞ்ச நேரம்.. இல்ல ஒரு இரண்டு நிமிசம் உங்க மடியில படுத்துக்கட்டுமா?”, என்றவள் எத்தனை முயன்றும் கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.
இதை சற்றும் எதிர் பாராதவனாய் ருத்ரேஸ்வரன் பின் சாய்ந்து அமர்ந்து அவளின் பின்னந்தலை பற்றி தனது மடியில் சாய்த்திருந்தான்.
சத்தமில்லாத அவளின் அழுகை அவனை மேலும் மேலும் வதைத்தது.
சர்வேஸ்வரனின் பேச்சு அவளை அதிகமாய் பாதித்து விட்டதோ என்று எண்ணியவனாய்,
“சர்வா பேசினதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத.. அவன்..”
“ஐயோ அதெல்லாம் இல்ல மாமா.”, என்றவள் வேகமாய் எழுந்து அமர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“இது.. இது நீங்க எனக்கு கொடுத்த முதல் சேலை. அதான்.. வேற ஒண்ணுமில்ல.”
“இரண்டு நாளில் பாப்பாக்கு லீவு வருதுல ஒரு வாரம் உன் அம்மா வீட்டுக்கு போயிட்டு வா.”
“அது.. இங்கே சாப்பாடு எல்லாம்..”
“ராணி இருக்காளே. இல்லையா அம்மா பார்த்துகிடும். நீ போயிட்டு வா.”
“..”
“என்னாச்சு?”
“இல்ல அங்கே போனால் அங்கேயே இருக்க சொல்ல மாட்டீகளே?”
“!!!”
“திரும்ப.. திரும்ப இங்கே வரலாம்ல?”
“அதனால தான் அம்மா வீட்டுக்கே போகாம இருக்கியா?”
“..”
“சொல்லு. உன்னை அப்படியே விட்டுருவேன்னு தான் போனாலும் உடனே திரும்ப வந்துரியா நீ?”
“ம்ம்..”
“நானே கொண்டு போய் விட்டு கூப்பிட வாரேன். போயிட்டு வா.”
“முறைச்சா நான் சொன்னது இல்லைனு ஆயிடுமா? உன்னைய நம்பி பிள்ளை பெத்துக்கவே தயாரா இருந்த புள்ள உன்னை தப்பா நினைக்குமா டா?”
“…”
“இங்கேரு கொஞ்சம் கொஞ்சமா அவளோட உன்னைப் பொருத்திகிட்டு சந்தோஷமா வாழப் பாரு. அதை விட்டுட்டு பேச வரலை பாட வரலைனு கதை சொல்லித் திரியாத சொல்லிப்புட்டேன்.”, என்ற படி காளி கிளம்பத் தயாராக அவனின் மனதை மொத்தமாய் செங்காந்தள் ஆக்கிரமித்திருந்தாள்.
ருத்ரேஸ்வரன் வீட்டிற்கு வந்த நேரம் ராணி மகனை மடியில் வைத்த படி வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.
அதைக் கண்டும் காணாதவனாய் உள்ளேச் சென்றவன் மனைவியைத் தேட வழக்கம் போல் சமையலறையில் தான் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
“காந்தா..”
“மாமா!!”
“காபி வேணும்.”
“இதோ போட்டுத் தரேன்.”, என்றவள் காபியை கலக்க பின் கொடியில் இருந்த அவளது துணிகளைப் பிழிந்து உலர்த்த ஆரம்பித்திருந்தான்.
அமைதியாய் காபியோடு அவனருகில் சென்றவள் கணவனின் பின் பக்கமாய் நின்றதால் அவன் திரும்பும் வரையிலும் கண்களில் ரசனை வழிய கணவனைப் பார்த்து நின்றாள்.
சட்டென ருத்ரேஸ்வரன் திரும்பியதில் விழி தாழ்த்திக் கொண்டவளாய் காபி டம்ளரை நீட்ட அதை வாங்கிப் பருகியவன் திரும்பி உள்ளே செல்லத் தயாரானவளிடம்,
“நீ காபி குடிச்சியா?”
“ஆங்ங்?!!”
“நீ காபி குடிச்சுட்டியானு கேட்டேன்.”
“ம்ம் குடிச்சுட்டேன் மாமா.”
“பாப்பாவை நானே எழுப்பிக்குறேன்.”
“ம்ம்..”
“ராணியை உதவிக்கு கூப்பிட வேண்டியது தான? ஏன் தனியா எல்லா வேலையும் பாக்குற?”
“இல்ல ஆகாஷ் சீக்கிரமே எந்திரிச்சுட்டான்.”
“நீயும் இனி பொறுமையா எந்திரிச்சு பழகு. வேலைக்கு ஆள் வைக்க அம்மைட்ட பேசுறேன்.”
“…”
“என்னைக்காவது என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுரு காந்தா..”, என்றவன் விருட்டென உள்ளே சென்றிருக்க கணவன் ஏதோ குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தவளாய் யோசனையோடே அவன் பின்னால் தனதறைக்குச் சென்றாள்.