அழகிய தீயே அன்புள்ள திமிரே 3
திமிர் 3 :
அனல் அக்ஷிதாவை சமாதானம் செய்துக் கொண்டிருக்க அந்த பக்கம் ஒருவன் கதறிக் கொண்டிருந்தான்.
தேஜா அவள் அறையில் ஓய்வாக அமர்ந்திருக்க அங்கே வந்த விஷ்ணு சோகமே உருவாக அவளை பார்த்தான்.
அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் மலர்ச்சியை விட இன்று சற்று கூடுதலாகவே இருந்தது.
Advertisement
” ஏண்டி என்னை விட்டு போறோம்னு உனக்கு பீலிங்ஸ் இல்லையா ” என்று கடுப்பாக கேட்க ” ஹிஹி பீலிங்ஸ் இருக்கு டா ஒரு ஓரமா… ” என்று சொல்ல ” உன் மூஞ்சிய பார்த்தா அப்படி தெரியலையே ” என்று சந்தேகமாக கேட்டான்.
” இப்போ உனக்கு என்ன பீலிங்ஸ் அதை சொல்லு ” என்று அவன் கை பிடித்து அமரவைத்து கேட்க ” என்னால உன்ன விட்டு எப்படி இருக்க முடியும் தேஜு… எனக்கு எல்லாம் யாரு செய்வா? ” என்று கேட்க ‘ நீ ஏவுன வேலைக்கு வேலை செய்ய யாரு இருக்கா நா ஒருத்தி தானே இளிச்சவாய் ‘ என்று கடுப்பாக நினைத்தவள் பின் அவனை பிரிவது அவளுக்கும் கஷ்டமாக இருக்க அமைதியாக இருந்தாள்.
” பேசாம நீ போய்ட்டு உடனே வந்தறியா நா அம்மா கிட்ட பேசி ஒன்பதாவது மாசம் உன்னை அழைச்சுட்டு போக சொல்லட்டுமா ” என்று கேட்க ‘ கெட்டது குடி நானே ஒரு ஆறு மாசம் தப்பிசோம்னு பீல்ல இருந்தேன் அதை கெடுத்துருவான் போலையே… ‘ என்று மனதுக்குள் அலறியவள் ” ஐய்யயோ அப்படிலாம் பண்ணிராத விஷ்ணு நானே அம்மா வீட்டுல போய் சொகுசா இருக்கலாம்னு பார்த்தா அதை கெடுத்துருவ போல… ” ஒரு ப்ளாவ்வில் உண்மையை உலறி கொண்டிருக்க அவளை முறைத்து பார்த்தான்.
Advertisement
‘ இப்போ எதுக்கு முறைக்கிறான் ‘ என்று யோசிக்க அப்போது தான் உலறியது நியாபகம் வர ‘ சமாளிப்போம் எவ்வளவோ சமாளிச்சுட்டோம் இதை செய்யமாட்டமா ‘ தனக்குள் தைரியத்தை வர வைத்துக்கொண்டாள். அதை விட தாய் வீடு செல்ல போகிறோம் என்ற தைரியம் வேறு.
Advertisement
” அப்போ இங்க இருக்கது உனக்கு கஷ்டமா இருக்கா… இங்கையும் சொகுசா தானே உக்காந்து சாப்புடற ” என்று விஷ்ணு சொல்ல அதுவரை தன்னை கட்டுப்படுத்தி கொண்டிருந்த தேஜுவின் பொறுமை உடைந்து போக ” எதே நா சொகுசா சாப்புடறேன் கொஞ்சமாச்சும் மனசாட்சி ஓட பேசுடா காலை டிபன் நான் தான் செய்யணும் அதுவும் வீட்டுல இருக்க எல்லாருக்கும் புடிச்ச மாதிரின்னு சொல்லி ஒரு வேளைக்கே மூணு சட்டினி அரைக்க வச்சுருவீங்க அப்புறம் கூட்டுறது பேருக்குறது எல்லாம் நான் தான் செய்யணும் இதுக்கு இடையில காலைல பாத்திரம் விளக்குறது நம்ம துணிய துவைக்கிறது வேலைக்கு ஒன்னும் பஞ்சமே இல்லாத உன் வீடு எங்க… மூணு வேலையும் சமைச்சு வச்சுட்டு நா எப்ப சாப்புடுவேன்னு எதிர்பார்த்துட்டு சாப்புடறது மட்டுமே மிக பெரிய வேலையா செஞ்சா போதும்னு நினைக்கிற என் வீடு எங்கே… ” என்று மூச்சு விடாமல் சூரியவம்சம் ராதிகா போல பேசி மூச்சு வாங்க அவளை முறைத்து கொண்டே தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.
” அப்போ இத்தன நாள் எங்க வீட்டுல நீ கஷ்டப்பட்டு தான் இருந்த ” என்று விஷ்ணு கேட்க ” absolutely (கண்டிப்பாக )” என்று கெத்தாக சொல்ல ” இவ்வளவு நாள் சொல்லாம இப்ப மட்டும் என்ன ” என்று விஷ்ணு அவளின் பேச்சை உள்ளுக்குள் ரசித்தவாரு கேட்க ” இப்போ தானே ஊருக்கு போக போறேன் ” என்று பல்லை காட்டினாள்.
அவள் தலையை பிடித்து ஆட்டியவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி ” என்னைய கொஞ்சமாச்சும் மிஸ் பண்ணுவியா டி ” என்று கேட்க அவள் கண்கள் லேசாக கலங்க ” உனக்காக மட்டும் தான் நா அங்க இருந்தேன் நம்ம குழந்தை பிறக்குற டைம் ரிலாக்ஸ்ஸா எந்த சில்ற பிரச்சனையும் இல்லாம குழந்தையை மட்டும் யோசிச்சு ரசிச்சு பெத்துக்கணும்னு ஆசை படுறேன் பிரபஞ்சன் ” என்று சொல்ல அவள் உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிந்து அவளை அமர்ந்தவாக்கீலே அணைத்து கொண்டான்.
Advertisement
அவனுக்கு தெரியும் அல்லவா இங்கு அடிக்கடி நித்யாவிற்கும் அவளுக்கும் ஒத்துப்போகாமல் நடக்கும் சண்டையும் அதனால் அவள் அடையும் அழுத்தமும் எனவே அவளுக்காக அவளுடைய விருப்பத்திற்கு விட முடிவு செய்தான்.
” பத்திரமா போய்ட்டு வாங்க ” என்று சொன்னவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு வெளியில் சென்றான்.
அக்ஷிதாவையும் முதலில் அழைத்து கொண்டு செல்ல அவள் கண்களில் பயத்துடனும் சோகத்துடனும் சென்றாள்.
அனலுக்கு வருத்தமாக இருந்தாலும் சம்பிராதாயங்களுக்காக அமைதியாக இருந்தான்.
அடுத்து தேஜஸ்ரீ கிளம்ப அவளுடைய தந்தை தேவராஜ் ” போய்ட்டு வரோம் சமந்தி ” என்க விலாசட்சியிடம் அவள் தாய் வாசுகி ” வரோம் சமந்தி வரோம் மாப்பிள்ளை ” என்று விடைபெற்றார்கள்.
தேஜா விஷ்ணுவை பார்த்து தலையசைக்க அவனும் அவளை பார்த்து தலையசைத்தான்.
தேஜா தாய் வீடு சென்று இன்றோடு இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…நானும் மெழுகுவர்த்தியும்…தனிமை தனிமையோ…தனிமை தனிமையோ…கொடுமை கொடுமையோ…
பேச்செல்லாம் தாலாட்டுப் போல…என்னை உறங்க வைக்க நீ இல்லை…தினமும் ஒரு முத்தம் தந்து…காலை காபி கொடுக்க நீ இல்லை…
சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவை பிரிந்திருக்க முடியாமல் சூர்யா உருகி உருகி கரையும் பாடலை இங்கு நம் பிரபஞ்சனோ தேஜாவை பிரிந்திருக்க முடியாமல் உருகி உருகி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ஸில் வைத்திருந்தான்.
காலையில் எழுந்தவுடன் தாய் வீட்டில் போனும் கையுமாக உட்காருவது தான் தேஜாவின் கடமை.
கணவன் வீட்டில் கிடைக்காத நேரம் இங்கே கொட்டி கிடக்கும் அதனாலே எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடாமல் தாய் வீட்டில் தஞ்சம் புகுந்து விடுவாள் தேஜஸ்ரீ.
தன்னுடைய தோழிகள் கூட சில நேரம் பேசுபவள் அவர்கள் இவளை விட குழந்தைகளுடன் பிசியாக இருப்பதை உணர்ந்து தானே வைத்து விடுவாள்.
இன்று அப்படி தன் தோழியுடன் பேசிவிட்டு அப்படியே வாட்ஸாப் ஸ்டேட்டஸ்ஸை பார்வையிட்டாள்.
அதில் கணவனுடைய ஸ்டேட்டஸ்ஸை பார்த்து மனதுக்குள் அவன் அருகாமையை தேடினாலும் வெளியில் தன்னை தேற்றி கொண்டவள் கணவனை இலகுவாக்க எண்ணி ” அடேய் விஷ்ணு பிரபஞ்சா… அப்பயும் காலைல காபி கொடுக்க ஆள் இல்லாம உனக்கு வேலை செய்ய ஆள் இல்லாம தான் என்னை தேடிருக்க… நேத்து குடும்பமா திருப்பருங்குன்றம் கோவிலுக்கு போய் கும்மி அடிச்சுட்டு தனிமை தனிமை கொடுமை கொடுமை பாட்டு வேற வச்சுருக்க மேன் நீ… உன்னை நேர்ல பேசிக்கிறேன் ” என்று அவனுக்கு வாய்ஸ் நோட் தட்டி விட்டு வயிற்றுக்குள் ஓட ஆரம்பிந்துருக்கும் தன் மகவுக்கு உணவு கொடுத்து சாந்த படுத்தும் வேலையில் இறங்கினாள்.
அப்போது தான் மனைவியிடம் வந்த மெசேஜ்ஜை கேட்ட விஷ்ணு இதழ்களில் புன்னகை, முதன் முதலில் இதை போல் ஸ்டேட்டஸ் வைத்து பேசி கொள்ள ஆரம்பித்தது நியாபகம் வந்தது.
இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்த பிறகு தான் இருவரின் தொலைபேசி எண்ணும் வீட்டினர் உதவியால் மாறி கொண்டது.
எப்படி அவளை அழைப்பது என்று தெரியாமல் விஷ்ணு முதன் முறை அவளுக்காக ஸ்டேட்டஸ் தேடி தேடி வைத்தான்.
சங்கமம் படத்தில் வரும் ” சௌக்கியமா கண்ணே சௌக்கியமா ” என்ற பாடலை அவளுக்காக தேடி தேடி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு அவள் பார்ப்பதற்காக அதனை நொடிக்கு ஒரு முறை எடுத்து பார்த்து கொண்டிருந்தது நியாபகம் வந்தது.
ஒரு வழியாக அவன் வைத்த ஸ்டேட்டஸ்ஸை பார்த்து விட்டவள் சில மணி அவனுக்கான பதில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தாள்.
அதை அவன் ஆர்வமாக ஓபன் செய்ய அந்த வீடியோ லோட் ஆகாமல் அவன் பொறுமையை ரொம்பவும் சோதித்து பிறகு வர அதனை பார்த்த விஷ்ணுவின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறி இருந்தது.
பின்ன அவனோ காதல் துளிர்க்கும் ஆசையிலும் கல்யாண ஆசையிலும் ஏர் ரஹ்மான் பாடலை உருகி உருகி வைத்திருக்க அவன் மனைவியோ அவன் ஆசையில் ஒரு லோடு மண்ணை கொட்டுவது போல் நினைத்தேன் வந்தாய் படத்தில் வரும் ” அண்ணா காபி சாப்பிட்டீங்களா அண்ணா… அண்ணா டிபன் சாப்பிடீங்களா அண்ணா ” காமெடி ஸீனை பதிலுக்கு வைத்து பங்கம் செய்திருந்தாள்.
அப்படியே தொடர்ந்த அவர்களின் ஸ்டேட்டஸ் தொடர் வண்டி போல் சென்றது.
இருவருமே சற்று கலகலப்பான ஆட்கள் என்பதனால் உடனே ஒத்து போனது. இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பு உருவானது.
கணவன் என்ற உரிமை உணர்வு பெண்களுக்கு சற்று அதிகமே. கணவன் என்ற ஒரு வார்த்தையே அவர்களின் அன்பிற்கும், உரிமைக்கும் காரணம்.
ஒரு ஜோடி கலகலப்பு சண்டையுமாக சென்றது என்றால் இன்னொரு ஜோடி வருத்தமும் கோபமாக சென்றது.
அனல் கோபமாக தன் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு அக்ஷிதாவோ கணவன் மேல் வருத்தம் கொண்டு மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தாள்.
” நா என்ன சொல்லிட்டேன்னு இவ ரெண்டு நாளா என் போனை எடுக்க மாட்டேங்கிறான்னு தெரியல ” என்று வாய்விட்டு புலம்பியவன் அன்று முழுவதும் குழப்பதிலே சுற்றினான்.
இரண்டு நாள் அக்ஷிதா அனல்லிற்கு போன் செய்து செக் அப் சென்றதை பற்றி சொல்ல மனைவியை காண வாய்ப்பு தேடி தவித்திருந்த கணவன் ” ஏன் செக் அப்பிற்கு என்ன கூப்புடல… நீ மட்டும் குழந்தையை பார்த்தா போதுமா நா பார்க்க வேணாமா… அது என் குழந்தைனு அப்போ அப்போ மறந்துற நீ ” என காச்சு மூச்சேனா மனைவியை பார்க்க முடியாத கோபத்தில் கத்தி கொண்டிருக்க அங்கு மனைவியோ இவன் குழந்தைக்காக தான் தன்னோடு வாழ்கிறான் என்று முழுவதுமாக நம்பிவிட்டாள்.
அதிலும் நித்யா அடிக்கடி சும்மா இல்லாமல் ” என்ன அக்ஷி அனல் போன் பண்ணான இங்க அந்த விஷ்ணு தேஜா இல்லாம சோக சித்திரமா ஊர்வலம் வந்துட்டு இருக்கான்… என்னதான் இருந்தாலும் அவன் விரும்பி கல்யாணம் பொண்ணுல உன் தங்கச்சி ஆனா அனல் அப்படியா ” என்று மாசமாக இருக்கும் பெண் என்று பார்க்காமல் அவளை முழு மன அழுத்தத்திற்கு தள்ளினாள்.
அக்ஷிதா வேலைக்கு சென்று இருந்தால் கூட வேலையில் கவனம் செலுத்தி தன் மனதை மாற்றி இருப்பாள். இன்னும் மூன்று வாரங்களில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர் கூறி விட லீவ் இருக்கு அப்ளை செய்து வீட்டில் இருந்தாள்.
இயல்பிலே பயந்த சுபாவம் உள்ள அக்க்ஷிதாவினால் இதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவளின் நினைப்பிற்கு ஏற்ப அனலும் அதிகம் குழந்தையை பற்றியே கேட்க கட்டாயத்திற்காக தான் அவன் தன்னுடன் வாழ்கிறான் அவள் மனதில் பதிந்து விட்டது.
இதில் தேஜாவும் அவர்கள் வீட்டில் இருக்க அவ்வப்போது அவளை இது போன்ற எண்ணங்களில் இருந்து வெளி கொண்டு வருவதே தேஜா தான். அவளிற்கு நித்யாவின் சூழ்ச்சி புரிந்து அக்ஷிதாவை அவளை விட்டு ஒதுங்கி இருக்க சொன்னாள்.
தேஜாவிற்கு திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் அக்ஷிதா கர்பமாக அனல் அவள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து ” ஹே மூணு மாசத்துக்கு எந்த வேலையும் செய்ய வேணாம்னு டாக்டர் சொன்னாங்கள… இப்போதைக்கு சத்தான உணவும் ஓய்வும் தான் குழந்தைக்கு நல்லதுன்னு சொல்லியும் நீ பாட்டுக்கு வேலை செய்யுற ” கத்தியவன் ” உள்ள போய் ரெஸ்ட் எடு ” என்று கத்திவிட்டு உள்ளே சென்று விட்டான்.
அனல் கோபமாக சொன்னதனால் தானோ அந்த வீட்டின் பெண்கள் வாய் திறக்கவில்லை இல்லை என்றால் நித்யாவே ” நானும் தான் மாசமா இருந்தேன் ” என்று ஆரம்பித்து இருப்பாள்.
அத்துடன் முக்கியமான விஷயம் என்னவென்றால் அக்ஷிதாவிற்கும் குழந்தைக்கும் உள்ள உணவு குழாய் அதாவது தொப்புள் கொடி கீழேயிருந்து செல்வதனால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி மருத்துவர் அறிவுறுத்தி இருந்தார்.
அதனால் தான் அனல் இத்தனை கோபத்துடன் சொல்லி சென்றது. ஒரு கணவனாக தந்தையாக அக்கறை கொண்ட ஆண் மகனின் கோபம் அது. அனல் பிள்ளையை காரணம் காட்டி பொண்டாட்டியை வேலை செய்யாமல் செய்துவிட்டது நித்யாவிற்கு உள்ளுக்குள் புகைச்சலை உண்டாக்கதான் செய்தது. மற்றவர்களுக்கும் லேசாக பொறாமை இருக்க தான் செய்தது ஆனால் குழந்தைக்காக அமைதியாகி போக ஆனால் நித்யா சும்மா இல்லாமல் ” அனலுக்கு பொறக்க போற புள்ள மேல எம்புட்டு பாசம்… புள்ளைக்காக பொண்டாட்டியை இப்போவே அரட்டிட்டு போறாரு… புள்ளைக்காக என்ன வேணாலும் செய்வாரு போல… என்ன அக்ஷி தான் பாவம் புள்ளைக்காக அவளை இப்போவே திட்டிட்டு போறாரு ” என்று பாவமாக சொல்ல அக்ஷிதா கண்கள் லேசாக கலங்கி சிவந்தது.
இங்கு நடந்த கூத்தை பார்த்து பல்லை கடித்த தேஜா ” என்ன புள்ளைக்காகவா மாமாவை பார்த்தா புள்ளைக்காக திட்டுன மாதிரி தெரியல பொண்டாட்டி வேலை செய்யுறாலேன்னு கோபத்துல கத்துன மாதிரி இருக்கு ” பட்டென்று போட்டு உடைக்க ” அப்டியா தேஜு ” அக்ஷிதா ஆர்வமாக கேட்க ” என்ன நொப்புடியா… இதெல்லாம் உனக்கே தெரிய வேணாம் எத்தனை நாளைக்கு தான் பச்சபுள்ளையா இருக்க போற நீ இப்படி இருக்க வரை சில பேர் உன் தலையில மொளகா அரைச்சுட்டே தான் இருப்பாங்க ” என்று நித்யாவை பார்த்து கொண்டே கூற நித்யாவோ தேஜாவை முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
” அதில்லடி ” என்று அக்ஷி ஆரம்பிக்க ” போ போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு ” என்று அந்த இடத்தை விட்டு அவளை துரத்திவிட்டே அங்கிருந்து நகர்ந்தாள்.
இது போல் பல சூழ்நிலைகளில் தேஜா உள்ளே புகுந்து அவளை சரியான பாதையில் இழுத்து சென்றாலும் அக்ஷிதாவின் குரங்கு மனம் நித்யாவின் மரத்தை விட்டு இறங்க மாட்டேன் என்று அவ்வப்போது சண்டித்தனம் செய்யும் அப்போதெல்லாம் தேஜா தான் பொரடிலே ஒன்று போட்டு அடித்து விரட்டுவாள்.
இதில் அவ்வப்போது கண்ணாயிரம் குடும்பத்தை கண்காணிப்பாதக நினைத்து செய்யும் குட்டி கலாட்டாகளை சமாளிப்பது என்று ஒரு குட்டி சர்க்கசை பரிமாறிப்பது போல் தேஜாவிற்கு தோன்றிவிடும். இதெல்லாம் தான் தேஜா பிறந்தகம் தேடி மாமியார் வீட்டில் இருந்து பறந்து கொண்டு ஓட காரணம்.
அக்ஷிதாவின் ஒன்றரை வருட கல்யாண வாழ்க்கையின் மகிழ்ச்சியும் கசப்புகளையும் தாண்டி அவள் இன்னும் ஏங்கி கொண்டு இருப்பது அவளுடையவன் காதலுக்காக. மனைவியின் மேல் அக்கறை கொண்டு படும் கோபம் கூட காதல் தான் என்பதனை அனல் தந்திரன் புரிய வைப்பானா?
இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்…
