Skip to content
Post Views: 8,174
அத்தியாயம் 5:
சந்தேகமாக பார்த்த கௌரியிடம் “என்ன கௌ உனக்கும் சீம்பால் வேண்டாமா”
“ம் போடி, எனக்கு வேணும்” என்று கிண்ணத்தை கையில் எடுத்து சந்தியாவிடம் காட்டாமல் திரும்பி கொண்டு சாப்பிட்டாள் கௌரி.
“மெதுவா சாப்பிடு கண்ணு. என்ன அவசரம்” என்ற சிவகாமியிடம்
Advertisement
“சந்தியாவும் நானும் நம்ம தோட்டத்து பம்ப் செட்க்கு குளிக்க போறோம் பெரியம்மா”
சிவகாமி கொடுத்த நீராகாரத்தை குடித்துவிட்டு கிளம்ப போன ஆதி “கிணத்து பக்கம்லாம் போய்டாதீங்க கௌரி” என்றான்.
அதற்கு சந்தியா “நோ ப்ராப்லம் பாஸ். எனக்கு ஸ்விம்மிங் தெரியும்”
Advertisement
“இது டவுன்ல இருக்க நீச்சல் குளம் கிடையாது. ஆழம் ரொம்ப அதிகம். ஒழுக்கமா மோட்டர் போட்டு குளிச்சுட்டு வீட்டுக்கு போகோணும்”
Advertisement
“ஓகே டன் பாஸ்” என்று விரல் உயர்த்தி காட்டிய சந்தியாவிடம் “என்ன கண்ணு பாஸுனு சொல்ற. ஆதி உனக்கு மாமன் முறையாகோணும். மாமா இல்ல மச்சான்னு சொல்லு தங்கம்” என்று சொல்லிவிட்டு அடுக்களைக்கு சென்றுவிட்டார் சிவகாமி.
மாமா என்று சத்தம் இல்லாமல் உதட்டை மட்டும் அசைத்து ஆதியை பார்த்து சொன்னாள் சந்தியா. அதை பார்த்த ஆதி அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
சிரித்தபடி கௌரியை அழைத்து கொண்டு சிவகாமியிடமும், வாசலில் இருந்த ஈஸ்வரனிடமும் சொல்லி கொண்டு கிளம்பினாள் சந்தியா.
Advertisement
இருவரும் வீட்டுக்கு சென்று மாற்று உடை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு நடந்து சென்றனர். செல்லும் வழியில் இருந்தது மல்லிகா வீடு. கரெக்ட்டாக வாசலில் நின்று கொண்டிருந்த மல்லிகாவை பார்த்த கௌரி “ஆகா மல்லி நிக்கிறா. பேசிக்கிட்டே கண்டுக்காதாட்டம் போய்டோணும் சந்தியா”
“அந்த பொண்ண பாத்து நீ ஏன் பயப்படற கௌ”
“இந்த மல்லி அடுத்தவங்க நினைக்கிறத பத்தி கவல படாம பேசியே கொல்லுவா. அவளுக்கு ஆதி அண்ணா மேல எப்பவுமே கண்ணு. அவதான் கட்டிக்க போறமாதிரி சொல்லிகிட்டே சுத்திட்டிருப்பா. சுதா எங்க சொந்த அத்தை பொண்ணுங்கிறதால அவள திடீர்னு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அது அவசரமா முடிஞ்சும் போச்சு. அதனால அப்ப விட்ட எங்கண்ணன பிடிக்கிற ஐடியால இருக்கா. இப்ப இவதான் ஆதி அண்ணாக்கு வாழ்க்கை கொடுக்க போறமாதிரி பேசிட்டுருக்கா” என்று கௌரி சொல்லி கொண்டிருக்கும் போதே இவர்களை பார்த்து விட்ட மல்லி
“கௌரி. எங்க குளிக்க போறீங்ளா. இருங்க. நானும் வரேன்” என்று அவசரமாக உள்ளே சென்று மாற்றுடையுடன் வந்தாள்.
அவளை சந்தியா ஆராய்ச்சியாக பார்த்தாள். மல்லிகா மாநிறத்திற்கும் குறைவுதான். சந்தியா அளவிற்கு உயரமிருந்தாள். ஆனால் நல்ல வாளிப்பான உடல். திருத்தமான முகம். கிராமத்து கட்டழகி.
“ம்கூம் முடிஞ்சு போச்சு” என்று மனதில் நினைத்த கௌரி வெளியில் “ஹி ஹி மல்லி. எப்படி இருக்க. உன்ன பாக்கவே முடியல”
“நீயெல்லாம் நெம்ப படிச்சவ. நா படிக்காத கூறு கெட்டவ. நால்லாம் உன்ற கண்ணுக்கு தெரிவேனா”
“அப்படிலாம் இல்ல மல்லி. இவ என் மாமா பொண்ணு சந்தியா. இவ இங்க வந்ததோட்டு நா கொஞ்சம் பிஸி மல்லி”
“ஆமாமா. நடக்க இருந்த கல்யாணம் நின்னு போட்டுன்னு குடும்பத்தோட ஊர விட்டு வந்து போட்டாங்கன்னு என்ர அப்பாரு கூட சொல்லிட்டு இருந்தாரு” என்று மல்லி கூறியதை கேட்டு அதிர்ச்சியாக சந்தியாவை பார்த்தாள் கௌரி.
அவளை கண்களால் அமைதிப்படுத்திய சந்தியாவிற்கும் ஆச்சரியமே. இந்த ஊருக்கு வந்ததில் இருந்து யாருமே அவளின் கடந்த காலத்தை பற்றி பேசி கஷ்ட படுத்தியிருக்கவில்லை. மல்லியே தொடர்ந்து பேசினாள்.
“கௌரி என்னை இனிமே மல்லின்னு கூப்பிடாம மதினினுதான் கூப்பிடோணும்” என்றவள் கூறியதை காதிலேயே வாங்காமல் அவர்கள் வயலையும் தோட்டத்தையும் காட்டி சத்தியாவிடம் பேச ஆரம்பித்து விட்டாள் கௌரி.
சந்தியாவும் இவ்வளவு நேரம் இருந்த குழப்பம் நீங்கி இயற்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டாள். வயல்களை தாண்டி தென்னை மரங்களும் மாமரங்களும் அடங்கிய தோப்பு வந்தது. அதன் நடுவில் அளவான ஓடு வேய்ந்த தோட்ட வீடும், அதன் அருகிலேயே மோட்டர் போட்டு நிரப்பும்படியான பெரிய தண்ணீர் தொட்டியும் இருந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் பெரிய கிணறு இருந்தது.
அந்த சூழலை பார்த்த சந்தியாவிற்கு பாரதியார் பாடிய காணி நிலம் வேண்டும் பாடல் நியாபகம் வந்தது. என்ன பக்கத்தில் ஒரு பத்தினி பெண்ணுக்கு பதிலாக ஆதித்யன் இப்பொழுது பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சிரித்து கொண்டே தலையை உலுக்கி கொண்டவள் கௌரியிடம்
“சூப்பரா இருக்கு கௌ இந்த பிளேஸ். நாளெல்லாம் இங்கயே இருக்கலாம்ன்னு தோணுதுப்பா”
“முன்னெல்லாம் குடும்பமா வந்து குளிச்சுட்டு இங்கவே சமைச்சு சாப்ட்டுட்டு பொழுதோட வீட்டுக்கு போவோம் சந்தியா. இப்பதான் அப்படி வர்றதில்ல.நேரமும் இருக்கறது இல்ல”
“இதென்ன தோப்பு. இதைவிட பெரிய தோப்பு எங்களுக்கு இருக்குல்லோ. ஆனா நீங்கதேன் பாவம் சந்தியா. பொழப்புக்காக போயிருந்த ஊரையும் விட்டு போட்டு வந்துட்டிங். உங்கப்பா மாச சம்பளத்துக்கு தான வேல பாத்தாங்க”
“ஆமா மல்லிகா. கஷ்டம்தான். எங்கப்பா வேலையும் விட்டுட்டு வந்துட்டாங்க. இனிமே நா படிச்சு வேலைக்கு போய்தான் எங்க அம்மா அப்பாவ பாத்துக்கணும்” என்று பெருமூச்சு விட்டவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டாள் கௌரி.
கௌரியும் மல்லியும் பாவாடையை கட்டிக்கொண்டு தண்ணீர் தொட்டியில் இறங்கினார்கள்.
“இப்படியே குளிக்க போறீங்களா. யாராவது வந்துட்டா என்ன பண்றது” என்ற சந்தியாவிடம்,
“என்னங் நீங்க . ஆதி மச்சான் தோப்புக்குள்ள வர தைரியம் இங்க யாருக்கு இருக்கு” என்ற மல்லிகாவை பார்த்த சந்தியா, ஸப்பா ரொம்ப சாம்பிராணி போடறாளே இவளை…. என்று மனதுக்குள் யோசித்து கொண்டே அவர்களை போல் பாவாடையை கட்டிக்கொண்டாள்.
அவளை பொறாமையாக பார்த்த மல்லி “என்னங். கல்யாணம் நின்னதுல சாப்புடாம இப்படி எலும்பும் தோலுமா இருக்கீங்ளா. இல்ல பட்டணத்துல உடல மெலிவா வச்சுக்க சாப்புடாம இருப்பாங்ளாமல்லோ. அதாட்ட இப்படி இருக்கீங்ளா. நல்லா மஞ்ச பொடி தேச்சுவிட்ட சீக்கு கோழியாட்ட இருக்கீங்” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தாள் மல்லிகா.
“ஏ மல்லி . அவ உடம்பாட்ட ஸிரோ சைஸ் வேணுங்கிறதுக்காக சிட்டில எவ்ளோ மெனக்கெடுவாங்க தெரியுமா. மாடல் மாதிரி இருக்கான்னு காலேஜ்ல அவளுக்கு எவ்ளோ ஃபேன்ஸ் தெரியுமா. அவளுக்கு இயற்கையிலேயே இருக்க வேண்டியதெல்லாம் அதது அங்கங்க அழகா இருக்கு. நீ நல்லா போந்தா கோழியாட்டம் இருந்துட்டு அவள சீக்கு வந்த கோழிங்க்ரியா” என்று பொங்கிய கௌரியை பார்த்து “விடு கௌரி” என்றுவிட்டு மெதுவாக தண்ணீர் தொட்டியில் இறங்கிய சந்தியா,
“நீங்க சொன்னது சரிதான் மல்லிகா. என் கல்யாணம் நின்னு போச்சுன்னுதான் நா இப்படி இளைச்சு போய்ட்டேன். ஆனா இந்த ஊருக்கு வந்த பிறகு இப்பதான் நல்லா சாப்பிட ஆரம்பிச்சுருக்கேன். இந்த ஊர்ல எனக்கு மச்சான் முறைல நிறைய பேர் இருக்காங்கல்ல. உனக்கு யாரை பிடிச்சுருக்குன்னு சொல்லு கட்டி வச்சிடறேன்னு என் மாமா, அதான் கௌரியோட அப்பா சொல்லிருக்காங்க. அதும் அவரோட அண்ணன் பசங்களே ரெண்டு பேர் இருக்காங்களே. சின்ன பையன் அருண் என் வயசுதான். சரி வராது. அதனால ஆதி மாமாவைத்தான் எனக்கு பிடிச்சிருக்குனு மாமாட்ட சொல்லலாம்ன்னு யோசிச்சிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு தண்ணீரில் கௌரியுடன் சேர்ந்து விளையாடினாள் சந்தியா.
அவளை வெறித்து பார்த்த மல்லிகா “டவுன்ல வளந்து போட்டு இந்த பட்டிக்காட்ல வாக்கப்பட்டா உங்களுக்கு சரியா வருமா”
“இன்டர்நெட் இருக்கதால இப்பல்லாம் சிட்டி,வில்லேஜ்ன்னு பெரிய வித்தியாசம் இல்ல . அதும் இல்லாம ஆதி மாமாக்காக எந்த கஷ்டத்தையும் தாங்கிக்கலாம் மல்லிகா”
“அது சரி. எந்த சிறுக்கிக்கும் ஆதி மச்சான பாத்தா ஆசை வரத்தான் செய்யும். அதுக்காக ஏற்கனவே கல்யாணம் முடிவாகி நின்னு போன உங்கள கல்யாணம் பண்ணிப்பாங்ளா”
“எனக்காவது கல்யாணம் நின்னுபோச்சு. ஆனா ஆதி மாமாக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸும் ஆயிடுச்சே. அதனால எங்களுக்குத்தான் பொருத்தம் சரியா இருக்கும். அதோட இல்லாம ஆதி மாமாக்கும் என்ன பிடிக்கும். நீங்க என்ன பாத்து சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கேன்னு சொன்னீங்கள்ள. ஆனா ஆதி மாமா என்ன மஞ்ச காட்டு மைனான்னு தான் கூப்புடுவாங்க தெரியுமா. எனக்கு சீம்பால் பிடிக்கும்ன்னு அவங்க சாப்பிடாம எனக்கே கொடுத்துட்டாங்க. இல்ல கௌரி” என்று வெட்கப்பட்டு கொண்டே அவளை வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்த கௌரியை பார்த்து கண்ணடித்தாள் சந்தியா.
“ஆமா மல்லி” என்று அவசரமாக சொன்னாள் கௌரி.
“நா அம்மாட்ட வெசையா வந்து போட்றேன்னு சொல்லிட்டு வந்தேன். நா கிளம்புறேன்” என்று கடுப்பாக கிளம்பி சென்று விட்டாள் மல்லிகா.
அவள் சென்றவுடன் கௌரி “ஏண்டி உன் இஷ்டத்துக்கு அளந்து விடற. இவ நீ பேசினத வச்சு ஏதாச்சும் பிரச்னையாக்கிட போறா”
“என்ன பிரச்சனையானாலும் பரவால்ல கௌ. உங்க ஆதி அண்ணாக்கு இவளா ம்… என்னால டாலரேட் பண்ணவே முடியல. நல்ல காரசாரமான மீன் குழம்புக்கு, கன்றாவியான ரவா உப்மா காம்பினேஷன் மாதிரி”
“ஹா ஹா இப்பகூட சாப்பாடுதான் உனக்கு. எங்கண்ணாட்ட சீம்பால புடுங்கி தின்னுட்டு, அவரு பாசமா குடுத்தாருன்னு சொன்ன பாரு. அததாண்டி என்னால தாங்க முடியல” என்று கண்ணை துடைத்து விட்டவளை பார்த்து,
“விடுடி . நாம சைட் அடிக்கிற ஆள் படுகுழில விழாம காப்பாத்தறதுக்காக நாலு பொய் சொல்லலாம் தப்பில்ல”
இருவரும் குளித்து முடித்து தோட்ட வீட்டு திண்ணையில் டிரஸ் மாற்றி கொண்டு, வீட்டுக்கு கிளம்பி வரும்போது வயலில் ஆதியும் வசந்தனும் இருப்பதை பார்த்தார்கள்.
“அது யாரு கௌ. உங்கண்ணா கூட அடிக்கடி பாத்துருக்கேன்”
மூஞ்சை சுளித்து கொண்ட கௌரி “இப்ப போச்சே, இந்த மல்லிகா டைனோசர். அதோட அண்ணா. ரெண்டு பேரோட அம்மாவும் ஓட்டுக்கா பொறந்தவங்க” என்று நீட்டி முழங்கிய கௌரியை ஆச்சரியமாக பார்த்தாள் சந்தியா.
“அப்ப எனக்கும் அண்ணா முறைதான்” என்ற சந்தியா அவர்களிடம் சென்றாள். அவள் வருவதை பார்த்த ஆதி மண்வெட்டியை எடுத்து கொண்டு மடையை வெட்டி விட கிளம்பி போனான்.
கௌரியும் அங்கு நில்லாமல் ஆதியோடு சென்று விட்டாள். வசந்தன் ஆச்சரியமாக,
“என்னங் அம்மணி, எதற்கும் அஞ்சாத நெஞ்சன், என்ற மச்சான் உங்கள பாத்ததோட்டம் தெறிச்சு ஓடறான்”
“என்னங் பண்றது ப்ரோ, எல்லார்ட்டையும் மரியாதையா நடக்கும் என் பெஸ்ட்டி, என் மச்சி கௌரி உங்கள அலட்சிய படுத்திட்டு போகலையா. அது மாதிரிதான் இதுவும்”
இருவரும் ஒருவரையொருவர் ஆராய்ச்சியாக பார்த்தவர்கள், சிறிது நேரத்தில் சேர்ந்தாற்போல் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு சிலரை பார்த்ததும் பிடித்துவிடும். ஒரே அலைவரிசையில் பயணிப்பார்கள். அது போல் பார்த்ததும் வசந்தனை மிகவும் பிடித்துவிட்டது சந்தியாவிற்கு.
“என் பேர் சந்தியா ப்ரோ. உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா”
“வசந்தன்ங் அம்மணி”
“இந்த ங்க, அம்மணி எல்லாத்தையும் கட் பண்ணிட்டு, தங்கச்சிய உங்க ஊர்ல எப்படில்லாம் பாசமா கூப்புடுவாங்களோ, அத மாதிரி என்ன கூப்பிடணும்”
“அப்படியா. நெம்ப சந்தோசம் தங்கம். என்ற மச்சான் ஆதி சிங்கத்தை என்ன செஞ்ச. இந்த ஓட்டம் ஓட்றான்”
“பெருசா ஒண்ணுல்ல. பாக்கும் போதெல்லாம் கொஞ்சம் சைட் அடிச்சேன். அதுக்கே சிங்கம் மெர்சலாயிடுச்சி”
“பேங்ளூர்ல இல்லாத பசங்களா. சிலிக்கான் வேலில இருந்து வந்து என்ற மச்சான சைட் அடிக்கிறியா கண்ணு”
“என்ன பண்றதுண்ணா. உங்க மச்சான் வேட்டி மடிச்சு கட்ற ஸ்டைல் பார்த்தே அவர்கிட்ட என் மனசு தொபுக்கடீர்ன்னு கவுந்துடுச்சுன்னா பாத்துக்குங்களேன்”
அவளை இமைக்காமல் சில நொடிகள் பார்த்தவன் “ஆர் யூ சீரியஸ்” என்றான்.
“என் வாழ்க்கைல இதுக்கு முன்னாடி நா இவ்ளோ சீரியஸா பேசுனது இல்லைண்ணா”
“அவனுக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆன விஷயம் உனக்கு தெரியுமா”
“அத பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்ன்னு தான என் பெஸ்ட்டிட்ட கூட சொல்லாத ரகசியத்தை உங்கட்ட சொல்லிருக்கேன்”
“ஓ . உன் லைஃப்ல நடந்த இன்ஸிடண்ட்ஸ்…”
“உங்க மச்சான எனக்கு பிடிச்சுருக்கு. அவர் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு என் மனசு நம்புது. அவரோட பாஸ்ட் லைஃப் எனக்கு முக்கியமில்ல. ஆனா அவர என்னை அக்சப்ட் பண்ணிக்க வைக்க, அவர் பாஸ்ட் லைஃப் தெரிஞ்சாதான் என்னால ஏதாவது பண்ண முடியும். ஆனா நீங்க அத சொல்றதுக்கு முன்னாடி என் கடந்த கால விஷயங்கள உங்கட்ட சொல்லிடறேன். எங்க எப்ப பேசலாம்ன்னு எனக்கு கால் பண்ணி சொல்லுங்கண்ணா ” என்று போன் நம்பரை அவனிடம் கொடுத்துவிட்டு கௌரியை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டாள்.
error: Content is protected !!