Skip to content
Post Views: 7,597
திருனேஷ்வரன் பொன்மணி வீட்டிற்கு வர ஒரு மணிநேரமாகியிருந்தது. பைக் சத்தம் கேட்டதும் அழைப்பு மணியை ஒலிக்கவிடும் முன்னே கதவை திறந்தாள் பொன்மணி.
கண்கள் மின்னப் பார்த்தபடி பொன்மணியை நெருங்கியவன், “நீயாடீ இது?” என்றான் புன்னகையோடு.
“ஏன் வேற மாதிரி தெரியுதுங்களா?”
“அப்படியில்ல, ஆனா ஒருமாதிரி தெரியுது” என்று கிசுகிசுத்தவனிடம், “தென்றல் ஸ்வாதி மாடிக்கு போய்ட்டாங்க, சத்தமாவே பேசுங்க” என்றபடி உள்ளே வர செய்கை செய்தாள்.
Advertisement
“அவங்களை வர சொல்லு”
சரியென்பதாய் தலையசைத்தவள், தென்றலுக்கு அழைப்பு விடுத்து வர சொன்னாள்.
இருவரும் வர, “இன்னைக்கு என்ன ப்ளான்?” என்றான்.
Advertisement
“ஒன்னுமில்லைங்க சார்”
Advertisement
“நான் மெயில் பண்றேன், பார்க்குறிங்களா? ஓவர்டைம்க்கு சேலரி தர சொல்லிடறேன்”
“சரிங்க சார்”
மெயிலை அனுப்பியவன், “நிறைய ஒர்க் இருக்கு, நீங்க எஃபோர்ட் போடுற அளவுக்கு பெனிஃபிட்ஸ் கிடைக்க எம்.டிகிட்ட நான் ரெக்கமண்ட் பண்றேன்” என்றவன், “எதாவது டௌட்னா தயங்காம கால் பண்ணுங்க, இல்ல மெஸேஜ் பண்ணுங்க ஓகே” என்றான்.
Advertisement
இருவரும் சம்மதமாய் தலையசைக்க, பொன்மணியை காணவில்லை. “என்ன பண்ற? கிளம்பலாம்” என்றான் சத்தமாக.
“இதோ வந்துட்டேன்” என்று பையை எடுத்துக்கொண்டு வெளியே வர, “நீங்க சாப்பிட்டிங்களா?” என்றான் தென்றல் ஸ்வாதியிடம்.
“சாப்பிட்டோம் சார், பொன்மணிதான் உங்களுக்காக வெய்ட்டிங்” என்றாள்.
இருவரிடமும் “டேக் கேர், டோர் லாக் பண்ணிக்கோங்க” என்று பத்திரம் சொல்லி கிளம்பினான்.
“பேகை கொடு” என்று வாங்கியவன், “இதென்ன இவ்வளோ வெய்ட்? ஒரு வாரத்துக்கு சமைச்சியா?” என்றபடி பைக்கில் அமர,
“கொஞ்சம் திங்சும் இருக்கு, அதான் வெய்ட்” என்றவள், திருனேஷ்வரனின் தோள்பிடித்து பைக்கில் ஏறி அமர்ந்தாள்.
தன்னிடம் கொடுத்த பை இல்லாமல் இன்னொரு பையும் வைத்திருக்க, ‘ஒரு முடிவோடதான் வருவா போல, இன்னைக்கு செத்தோம், எப்படித்தான் கண்ட்ரோல் பண்ணுவேனோ ஆண்டவா’ என மனதிற்குள் புலம்பியபடி பயணித்தான்.
பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து உள்ளே நுழைந்ததும் பொருள்களை எடுத்து வைத்து, கை கழுவி வந்தவள், உணவு பாத்திரங்களை எடுத்து வைக்க ஆரம்பிக்க, “கொஞ்சம் பேசனும் பொன்மணி, அப்புறம் சாப்பிடலாம்” என்றான்.
“கொஞ்சம்தானே பேசனும்? சாப்பிட்டு பேசலாம், உக்காருங்க” என்றாள் பரிமாறுவதில் கவனம் வைத்து.
“இதென்ன பெட்சீட்லாம் எடுத்து வந்திருக்க?”
“இங்க ஏதும் இல்ல, சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஷாப்பிங் போலாம், சீக்கிரம் வாங்க”
“எட்டரை மணிதான ஆகுது? உனக்கு பசிக்குதா?”
“ஆமாம், காலைல சீக்கிரமே எழுந்துட்டேன்”
“கை கழுவிட்டு வரேன்” என்று கிச்சன் சென்றவன், ஆழ மூச்செடுத்தான்.
நேற்று கூட இத்தனை அவஸ்த்தை படவில்லை திருனேஷ்வரன். இன்று காலை பொன்மணி பேசியது அவளை அறிந்து கொள்ளும் ஆவலை உண்டாக்கியிருக்க, தனது விருப்பத்தை பொன்மணியிடம் நிறைவேற்றிக்கொள்ளவும் ஆசை கொண்டான்.
நண்பன் போன் செய்து ஊரில் நடந்த விசயத்தை சொன்ன பின்னே அந்த எண்ணங்கள் மொத்தமாய் வடிந்திட, தற்போதைய பொன்மணியின் நடவடிக்கை பெரும் சங்கடத்தை கொடுத்தது.
“என்னங்க? என்ன பண்றிங்க?” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பியவனிடத்தில், “என்ன?” என்றாள் நக்கல் சிரிப்போடு.
கண்டுகொண்டாள் எனப்புரிய, இவளிடத்தில் இப்படி அசிங்கப்படுவோம் என்று நினைக்காத திருனேஷ்வரன், “என்ன என்ன? இவ்வளோ சீக்கிரம் சாப்பிட சொன்னா எப்படி சாப்பிடறது?
நீ வேற பசிக்குதுனு சொன்ன, ரொம்ப கஷ்டப்பட்டு சமைச்சிருப்ப, அப்புறம் சாப்பிடறேனு சொன்னா ஃபீல் பண்ணுவியோனு யோசிச்சிட்டிருந்தேன்” என்றான்.
“நம்பிட்டேன் வாங்க” என்றவளை இழுத்தணைத்தவன், “வேற ஒரு டென்ஷன்ல இருக்கேன், அதுக்கு இவ்வளோ கலாய்ப்பியா? சும்மா பார்த்ததுக்கே படபடத்தவதான நீ?” என்றான்.
“தனியா நின்னா டென்ஷன் போய்டுமா? இட்லி ஆறிடும் வாங்க” என்றவளை முறைத்தபடி முன்னே சென்றவனின் முகமெல்லாம் சந்தோசப் புன்னகை.
ஊரில் நடந்த பிரச்சனை பொன்மணிக்கு தெரிந்திருந்தால் தன் சந்தோசத்திற்காக அவள் உணர்வுகளை புதைக்கிறாள் என்று அர்த்தம்.
இப்படி நேரத்தில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வது பெரும் தவறு என்றே தன்னை நிதானப்படுத்த நினைத்தான்.
பொன்மணியின் பாவனை, அவளுக்கு தெரிந்திருந்தாலும், தெரியாமல் போனாலும்… திருமணமாகி ஒன்றரை மாதம் கழித்து முதல்முதலாக கிடைத்த உன்னத தருணத்தை அனுபவிக்க வேண்டும்.
இருவரும் சேர்வதில்தான் கொண்டாட்டம் என்றில்லை, பொன்மணியிடம் நான் எதிர்பார்த்த எத்தனையோ விசயங்கள் இருக்கிறதே… அதில் சிலதை அனுபவிப்போம் என்ற ஆசையோடு உண்ண அமர்ந்தான் திருனேஷ்வரன்.
வாசனை நாசியை வருட, “நல்லா சமைப்பியா?” என்றான்.
“ம், அஞ்சு வருசம் அத்தை வீட்டுலதான் இருந்தேன், என்னை சரி பண்ணவேண்டி வேலை வச்சிக்கிட்டே இருப்பாங்க, அப்படி கத்துக்கிட்டதுதான் சமையல்” என்றவாறு பரிமாறினாள்.
இட்லியும், கோழிக்குழம்பும் தட்டில் இருக்க, “இதென்ன இத்தனை பாக்ஸ்?” என்றான்.
“அது மதியம் சாப்பிட”
“அதுல என்ன இருக்கு?”
“மட்டன் பிரியாணி, கத்திரிக்கா ரைத்தா, வெள்ளரிக்கா வெங்காயம் போட்டு பச்சடி”
“ம்… சிக்கன் செம்மையா இருக்கு”
“காரம் ஓகேவா? நீங்க எப்படி சாப்பிடுவிங்கனு தெரியாம கம்மியாதான் போட்டேன்”
“இதுவே கம்மியா? நான் வழக்கமா சாப்பிடறதை விட காரம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு, ஆனா டேஸ்ட்டா இருக்கு”
“சரி இனி காரம் குறைச்சிடறேன்”
“அப்போவும் இதே டேஸ்ட் வருமா?”
“வரும்”
“நீயும் சாப்பிடு, பசிக்குதுனு சொன்னயில்ல?”
“ம்” என்றவள் தனக்கும் பரிமாறி உண்ண ஆரம்பித்தாள் திருனேஷ்வரன் உண்பதை ரசித்தவாறு.
இருவரும் உண்டுமுடித்த பின்னே சாப்பிட்டவைகளை சுத்தம் செய்து முடித்து, “ரெஸ்ட் எடுக்கனுமா?” என்றாள்.
சாப்பிடும்போதாவது சாப்பாட்டை பற்றி பேசினோம்? தற்போது என்ன பேசுவதென, “இல்ல, ஒர்க் இருக்கு, அதனாலதான் தென்றல் ஸ்வாதிக்கும் சொல்லிட்டு வந்தேன்.” என்றான்.
“வெளில போலாம்னு சொன்னிங்க?”
“ஓ… இதற்காக கேட்கிறாளா? என நிம்மதியானவன், இவளோடு ஒரே அறையில் இருப்பதற்கு வெளியில் போவதே மேல் என, “போலாமே” என்றான்.
“வாங்க” என்று வெளியேற, பின்னோடு வந்தவன் “எங்க போறோம்?” என்றான்.
“சும்மா பக்கத்துலதான், அரைமணி நேரத்துல வந்திடலாம்” என்றவள், சிறிய மால் அருகே சென்றதும் “இங்கதான், நிறுத்துங்க நிறுத்துங்க” என்றாள்.
அது வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் கிடைக்கும் இடம் ஆகையால் “என்கிட்ட பணம் இல்லைடீ” என்றான்.
“என்கிட்ட இருக்கு வாங்க” என்று உள்ளே சென்றவள், குளியலறை, மற்றும் சமையலறையில் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்கள் வாங்கிய பின்னே, கீழே விரித்து படுக்கும் மெத்தை, இரண்டு தலையணையை வாங்க, ‘அடிப்பாவி, நம்மளை சோதிக்காம விடமாட்டா போலயே‘ என நினைத்தான் திருனேஷ்வரன்.
“உங்களுக்கு எதாவது வாங்கனுங்களா?”
“இல்ல வேண்டாம்”
“இன்னும் நிறைய வாங்கனும், ஆனா இப்போதைக்கு இது போதும், திரும்ப ஃப்ரீயா இருக்கும்போது வரலாம். கிளம்பலாமா?”
“ம், இதெல்லாம் எப்படி எடுத்துட்டு போறது?”
“ஹவுஸ் ஓனரோட சொந்தக்காரர் ஆட்டோதான் ஓட்டுறார், முன்னவே வர சொல்லிட்டேன், பத்து நிமிஷத்துல வந்திடுவார், அவர் வந்ததும் இதை ஆட்டோல ஏத்திடலாம்”
“ஓ…” என்றான் மெச்சுதலாக.
“ஆட்டோ வரவரைக்கும் எதாவது ஸ்னாக்ஸ் வாங்கலாம், நீங்க இங்க இருங்க, இதோ வந்துடறேன்” என்று சென்றவள் பத்து நிமிடத்தில் திண்பண்டங்களோடு வந்தாள்.
பிறகு ஆட்டோ வர, அவருக்கு விலாசம் சொல்லி, பொருள்களை ஏற்றிவிட்டு, இவள் கணவனோடு வீட்டிற்கு வந்தாள்.
ஆட்டோவிலிருந்து திருனேஷ்வரன் பொருள்களை உள்ளே எடுத்துச் செல்ல, அவருக்கு பணம் கொடுத்து அனுப்பி உள்ளே வந்தவள், சமையலறை பாத்திரங்களை அதனிடத்திலும், குளியலறை பொருள்களை அங்கேயும், வைத்து மெத்தை விரிப்பை விரித்தாள் தனியறையில்.
பொன்மணியின் செயலில் திருனேஷ்வரனின் பாடு திண்டாட்டமாகிட, இதை அறியாத பொன்மணி “அந்த பில்லோல இருக்க கவரையாவது பிரிங்களேன், கை வலிக்குது” என்றாள்.
இவள் மெத்தை வாங்கிய கோபத்தில் “வலிக்க வலிக்க இன்னைக்கு ஒரே நாள்ல இதையெல்லாம் யார் செய்ய சொன்னா?” என்றான் முறைப்பாக.
இதெல்லாம் இவனுக்கு பிடிக்காத வேலை என்பதால் கோபப்படுகிறான் என நினைத்து, “உங்களுக்காகத்தான் வாங்கினேன், ரெஸ்ட்டே இல்லாம வேலை பார்க்குறிங்கனு தென்றலும் ஸ்வாதியும் சொன்னாங்க.
இன்னைக்கு சன்டே. ஒர்க்கிங் டே அளவுக்கு வேலை செய்ய வேணாமே. சாப்பிட்டு நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா ஃப்ரஸ்ஸா இருக்கும்” என்றபடி தலையணையையும் தானே பிரித்து படுக்க ஏதுவாக மெத்தை மீது வைத்தாள்.
பிறகு மெத்தையின் ஓரத்தில் அமர்ந்து, “எதோ கொஞ்சம் பேசனும்னிங்க? இப்போ பேசுங்க” என்றாள் ஆர்வமாக.
“நீ காலைலயே எழுந்துட்டேன்னு சொன்னல்ல? படு கொஞ்ச நேரம். நான் என் வேலையை முடிச்சிடறேன்” என்றான்.
“எனக்கு பகல்ல தூங்கி பழக்கமில்ல, ரொம்ப டையர்டா இருந்தா கொஞ்ச நேரம் படுப்பேன், ஆனா தூங்கமாட்டேன்”
“சுத்தம்” என்றான் சத்தமாகவே.
திருனேஷ்வரனின் முகத்தில் ஒளிந்திருந்த வருத்தம் பார்த்து “என்னாச்சு?” என்றாள்.
“அங்க ஊர்ல” எனும்போதே “ஓ… உங்களுக்கும் தெரியுமா?” என்றாள்.
“உனக்கு தெரியுமா? எப்படி இப்படி ஈஸியா இருக்க?” என்றபடி மெத்தைக்கு வந்தான்.
“என்னால நீங்களும் உங்க அப்பாம்மாவும் பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ரொம்ப கம்மிதான். நடக்காத எதையும் உங்கம்மா சொல்லலை.
நீங்க என்னை கல்யாணம் செய்யாம இருந்திருந்தாலாவது என்னை அடிச்சிருப்பாங்க, இல்ல பொய் சொன்னேனு மான நஷ்ட வழக்கு போட்டு சட்டப்படியாவது தண்டிக்க வாய்ப்பிருந்திருக்கும்.
நீங்க என்னை கட்டிக்கிட்டதால அவங்களால எதையும் பண்ண முடியல, இப்படி திட்டியாவது ஆதங்கத்தை தீர்த்துக்கட்டும், எதாவது ஒரு வழியில ஆதங்கம் வெளிவந்து அவங்க கொஞ்சம் கொஞ்சமா நார்மலானா நமக்குத்தானே நல்லது” என்றாள் இலகுவாகவே.
“பொன்மணி” என்று நெகிழ்வோடு மனைவியிடம் நெருங்கி அமர, சில நொடி தடதடத்து அடங்கியது பொன்மணியின் இதயம். பெரும் அவஸ்த்தைக்கு உள்ளான போதும், திருனேஷ்வரனிடம் இயல்பாக இருக்கவே முயற்சித்தாள்.
பொன்மணியின் படபடப்பை ரசித்தாலும் “என் அம்மா பண்ணின வேலைல ரொம்ப டிஸ்டர்பா இருக்கேன், அதோட தென்றல், ஸ்வாதியை கைட் பண்ணனும், என்னை படுத்தாம நீ கொஞ்ச நேரம் தூங்கு பண்ணுமணி” என்றான் தன்னைத்தானே சமன் செய்யும் முயற்சியோடு.
“பண்ணுமணியா?”
“ம்… கன்னம் பண்ணுமாதிரி இருக்கு” என்றான் ரசனையாக.
பொன்மணியின் இமைகள் தன்போல் தாழ, “ம்ப்ச்… இதுக்கே கீழ பார்த்தா மத்ததை சொல்ல வேணாமா? என்னைப் பாரு” என இவன் வம்பிளுக்க,
“ஒர்க் இருக்குனு சொன்னிங்கதான? அதை பாருங்க, மத்ததை நைட் சொல்விங்களாம்” என்றாள் சிவந்த முகத்தோடு.
இன்று மனைவியை நெருங்க வேண்டாம் என்ற கட்டுப்பாடுகளெல்லாம் பொன்மணியின் சம்மதத்திலும் முகச்சிவப்பிலும் உடைந்து போக, சேர்த்தணைத்தான் நிறைந்த காதலோடு.
“மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேட்காதுனு… கவிஞர் வைரமுத்து சொன்னது எவ்வளோ உண்மைனு இப்போதான் தெரியுது” என்று கன்னத்தை லேசாய் கடித்தவன் இதழ்கள் பொன்மணியின் இதழை வருட, விக்கித்துப்போனாள் பொன்மணி.
“சில விசயங்களை பார்த்ததும் சொல்ற அளவுக்கு எனக்கு டேலண்ட் இல்ல, ஃபீல் பண்ணிட்டு சொல்றேன்” என்றான் கிறக்கமாக.
“நைட்” என்று தடுமாறியவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.
இதழ் முத்தம் நீண்டு கொண்டே இருக்க, இன்னும் இன்னும் அவளுள் தொலையும் வேட்கை எழ, திருனேஷ்வரனின் கைகள் பொன்மணியின் பொன்னுடலில் அவள் எதிர்பாராத இடங்களில் படர்ந்தும் தொடர்ந்தும் பயணித்தது.
உடைமீது பயணித்தபோதும் வெற்றுடலில் படர்வது போன்று பொன்மணிக்கு பெரும் அவஸ்த்தையாகிட, இரவு வரை கால அவகாசம் வேண்டி திருனேஷ்வரன் முகம் பார்த்தாள்.
திருனேஷ்வரனின் மோகப்பார்வை அவனின் தாபத்தை உணர்த்த, மறுக்கும் எண்ணத்தை துறந்து கண்மூடி தனது சரணாகதியை தெரிவித்தாள் பொன்மணி.
“பொண்ணுமணி என்னோட பொண்ணுமணி” என்ற கொஞ்சலோடு தனது மேலுடையை கழற்றியவன், அவளின் உடையையும் கழற்ற கண்களால் கட்டளையிட, “போங்க” என்ற சிணுங்களோடு திரும்பிப்படுத்தாள்.
“எங்க போறது?” என்று மந்தகாசமாய் சிரித்தபடி பொன்மணியை நெருங்க, இடைவிடாமல் அழைத்தது திருனேஷ்வரனின் கைப்பேசி.
error: Content is protected !!