Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 25.3

ஏழு மாதத்திற்கு முன்னே விவாகரத்து வழக்கு சமாதானத்தில் முடிய, ‘இன்றொரு நாள் தன்னோடு இருக்க கேட்டான் திவாகர். நாளை பெங்களூர் சென்றாக வேண்டும். உனக்கு நேரமிருந்தால் என்னோடு பெங்களூர் வா’ என்றாள்.

ஒருவாரம் காவ்யாவோடு பெங்களூரில் இருந்தபடி தனது வேலைகளை கவனித்தான். அதன் பின்னே கடந்த ஏழு மாதங்களாக வாரம் ஒருமுறை பெங்களூர் சென்று வருவான் மனைவியை காண.

சனி ஞாயிறுகளில் திவாகர் பெங்களூர் செல்வதால், மாதம் ஒருமுறைதான் வீட்டிற்கு வருவாள் காவ்யா. அந்த நேரம் வீட்டில் விஷ்ணு இருக்கக்கூடாதென்று வேண்டிக்கொள்வான் திவாகர். அப்படியிருந்தும் இரண்டு முறை விஷ்ணு வீட்டில் இருக்கவே காவ்யாவை விட்டுவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பிடுவான்.

திவாகரோடும் காவ்யாவோடும் இன்னும் இயல்பாய் பேசுவதில்லை விஷ்ணு. ஆனால் காவ்யா முன்புபோல் தனியறையில் உணவுண்பதில்லை. விஷ்ணு இருந்தாலும் தாய்தந்தையோடு உண்பாள்.



Advertisement

ஓர்நாள் காவ்யா உண்டுகொண்டிருக்கும்போது விஷ்ணு வந்துவிட, அவனும் உண்பான் என காவ்யா தட்டோடு எழவே, “சாப்பிட்டிருக்கப்போ எதுக்கு எழற? என்று அதட்டியபடி தனதறைக்கு சென்றிருந்தான். ஆனால் காவ்யாவோடும் உண்ணவில்லை. அரைமணி நேரம் கழித்து அவள் சென்ற பின்னே உண்டான்.

இரண்டு மாதம் முன்னே காவ்யா கர்பமாக இருப்பது உறுதியாகிட, இப்போ கூட பேசமாட்டிங்களா? என்று விஷ்ணுவிடம் விஷாலினி கேட்டுப்பார்த்தாள்.

காதல் தப்புனு சொல்லமாட்டேன். நானும் உன்னை விரும்பித்தான் கல்யாணம் செய்துகிட்டேன். ஆனா அவளை மாதிரி அப்பாம்மாக்கு நம்பிக்கை துரோகம் செய்தா பண்ணிக்கிட்டேன்? நாங்க இரண்டு பேரும் எவ்வளோ க்ளோஸ்னு உனக்கே தெரியும். என்கிட்ட மறைக்க எப்படி மனசு வந்துச்சு?

Advertisement

இப்படி செய்தா அப்பாம்மாக்கு எவ்வளோ பெரிய அசிங்கம்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்காம வீட்டைவிட்டு ஓடிப்போனவளோட திரும்ப என்னால பழைய மாதிரி இருக்க முடியாது. தேவைப்படும்போது நானே பேசுவேன். அவளுக்காக இனி நீ என்கிட்ட பேசக்கூடாதுஎன்றுவிட்டான்.     

Advertisement

மகளை பார்க்க நாம் அங்கே சென்றால் இங்கே மேகலை தனியா இருப்பார் என்று மெடிக்கல் லீவ் போட முடியுமா என்று கேட்டிருந்தார் கோபாலன்.

காவ்யா தற்போது போட முடியாது என்று சொல்ல, காவ்யாவையும் தனியே விட முடியாது. ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. நிறைய நாள் என்னால தனியாவும் இருக்க முடியாது. நான் போகிறேன் என்ற மேகலை இரண்டு மாதமாக காவ்யாவோடு பெங்களூரில்தான் இருந்தார்.  

ப்ரியாவிற்கு திருமணம் முடிவாகியிருக்கவே, மேகலையை நிச்சயத்திற்கு அழைக்க நேரில் வருவதாக வேலவன் சொல்லியிருந்தார். தன் இருப்பை சொல்லி, ஞாயிற்றுக் கிழமை வர சொல்லியிருந்தார் மேகலை.

Advertisement

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் காலை ஒன்பது மணிக்கெல்லாம் மேகலையின் அண்ணனும் அண்ணியும் வந்திருந்தனர். முன்பு சாந்தியிடம் மட்டும் பேசி வந்த மேகலை தற்போது அனைவரிடமும் நன்றாக பேசுவார்.

விஷாலினியின் திருமணத்திற்கு வந்த பின்னே மேகலையோடு நன்றாக ஒட்டிக்கொண்டாள் ப்ரியா. அத்தையின் அருமையினை தங்கைக்கு சொல்லியே அனுப்பியிருந்தான் கிருஷ்ணன்.

மேகலை வீட்டிற்கு கிருஷ்ணன் வருவதில்லை என்றாலும், தனது வீட்டில் அத்தையில்லாமல் சின்ன விசயமும் நடக்கக்கூடாது என்று சொல்லிவிட்டான் தந்தையிடம்.                            

“வாங்கண்ணா, வாங்கண்ணி என்று இன்முகத்தோடு வரவேற்று, தந்தையின் நலம் விசாரித்த பிறகு ப்ரியாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் விபரம் கேட்டறிந்தார் ஆவலோடு.                              

அரைமணி நேரத்திற்கு பின்னே மேகலைக்கு அழைத்த கிருஷ்ணன், “ப்ரியா நிச்சயத்துக்கு வந்திடுங்கத்த, கல்யாணத்துக்கெல்லாம் பத்து நாளைக்கு இங்கதான் இருக்கனும் என்றான் உரிமையாக.

“வந்துடறேன் கிருஷ்ணா. ப்ரியா கல்யாணத்துக்கு பத்து நாள் இருந்துட்டு வரேன், நீ கல்யாணம் செய்தினா ஒரு மாசத்துக்கு அங்கதான் இருக்கப்போறேன் என்றார் மேகலை.

தன்னை நினைத்து அத்தை வருந்துகிறார் எனப்புரிந்தவன், “பண்ணிக்கிறேன்த்த, ப்ரியா கல்யாணம் முடியவும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடறேன் என்று இணைப்பை துண்டித்திருந்தான்.

“என்ன சொன்னான் கிருஷ்ணன்? என்றார் சாந்தி.

மேகலை “ப்ரியாவுக்கு முடிஞ்ச பின்ன பொண்ணு பார்க்கறானாம் என்றார் மகிழ்வோடு.        

பிறகு சாந்தி சமைக்க, மூவரும் உண்ட பின்னே வேலவனும் சாந்தியும் கிளம்பினர். சிறிது நேரம் படுக்கலாம் என்று படுத்த மேகலையை அரைமணி நேரத்திலேயே எழுப்பினார் பிரபாவதி.

“இதோ வரேன் அண்ணி என்று மேகலை வெளியே வர, “விஷ்ணுவும், விஷாலினியும் வந்திருக்காங்க. எதுக்கு வந்தாங்கனு நீயே கேளு என்றார் இன்முகத்தோடு.

மகள் தாயாகப்போறாளோ என்று அப்பொழுதே யோசித்தார் மேகலை. ஆனாலும் அப்படியானால் போனில் சொல்லியிருப்பாள் என்று கோபாலன் வீட்டிற்கு வந்தார் மகளை காணும் ஆவலோடு.           

“வாங்க ஆன்ட்டி என்று வரவேற்றான் வெக்கப் புன்னகையோடு.

சோர்ந்த முகத்தோடிருக்கும் மகளருகே சென்று, “குட்டி விஷ்ணுவா? என்றார் மகிழ்வோடு.

“ஆமாம்மா… ரொம்ப படுத்தறான். என்னால முடியலஎன்று தலை கவிழ்ந்தாள் பெருகிய நாணத்தோடு.

மகளை தனியறைக்கு அழைத்துச் சென்று, “டாக்டர்கிட்ட போனியா? எத்தனை நாள் தள்ளி போயிருக்காம்? என்றார்.

“நாற்பத்தஞ்சு நாள் ஆகியிருக்காம். எனக்கு டேட் ஆகுறதே மறந்துடுச்சு. இரண்டு நாளா சாப்பிட முடியாம, வாந்தி, மயக்கம்னு இருக்கவும்தான் இப்படி இருக்குமோனு யோசிச்சேன்.

கிட் வாங்கி செக் பண்ணிட்டுத்தான் டாக்டர்கிட்ட போனோம். அவங்க ஸ்கேன் செய்தே ஆகனும்னு பிடிவாதம். இப்போ தேவையில்லைனு புரிய வைக்கிறதுக்குள்ள போதும்டா சாமினு ஆகிடுச்சு என்றாள் பெருமையாக.       

“ம்… விஷ்ணு அப்படித்தான் என்று தானும் பெருமை கொண்டு அண்ணன் அண்ணிக்கு விசயத்தை சொன்னார் மேகலை.     

பயண அலுப்பால் உறங்கியிருந்த காவ்யா தற்போதுதான் எழ, விசயத்தை விளக்கினார் பிரபாவதி. “விஷ்ணு எங்க? என்றாள்.

“வெளில போன் பேசிட்டிருக்கான். நீ இரு, விஷாலினியை அழைச்சிட்டு வரேன் என்று மகன் அறைக்கு சென்றவர் “விஷாலினி, எழுந்து வா. ஜுஸ் குடிக்கலாம் என்றார்.

“காவ்யாக்கா எழுந்தாச்சாத்த? என்று வெளியே வர, காவ்யாவோடு சிறிது நேரம் கொண்டாட்டத்தில் சென்றது.    

திவாகர் காவ்யாவை சரியாக பார்த்துக்கிறானா என்று தந்தையிடம் விசாரித்தான் விஷ்ணு. “நல்லா பார்த்துக்கிறான். இவன் எப்படி அத்தனை வருசம் காவ்யாவை விட்டுட்டு இருந்தானு எனக்கே ஆச்சரியமா இருக்கு விஷ்ணு என்று நிறைவாய் சொன்னார் கோபாலன்.

“எல்லாம் சம்பாதிக்கிறோம்ன்ற திமிருதான் என்று பல்லை கடித்தவன், “இனி விஷாலினி இங்கதான் இருக்கப்போறாப்பா. சொல்லித்தான் அழைச்சிட்டு வந்தேன். அவ வாமிட் பண்றதை பார்த்தா குடலே வெளில வந்திடுமோனு எனக்கு பயமாகிடுது என்றான் கவலையாக.

“அதெல்லாம் உன் அம்மா பார்த்துப்பா, கவலைப்படாத என்று தேற்றினார் மகனை.

மாதங்கள் கழிய, காவ்யாவின் ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பு செய்யனும் என்று விஷ்ணுவிடம் சொன்னார் கோபாலன். ஒவ்வொரு மாதமும் காவ்யாவின் உடல் நிலையைப் பற்றி தந்தையிடம் விசாரிக்கும் விஷ்ணு, “வளைகாப்புக்கு வர விருப்பமில்லைப்பா. நீங்க பாருங்க என்றுவிட்டான்.

காவ்யாவின் வளைகாப்பு விஷ்ணு இல்லாமல்தான் நடந்தேறியது. திவாகரின் பெற்றோர் கூட பழைய கசப்புகளை மறந்து மகிழ்வோடு இருந்தனர்.

மனைவியின் அருமை புரிந்ததாலும், தனது வாரிசு வரும் மகிழ்விலும், திவாகரும் மனைவியை பூவைப்போல தாங்கினான். பிரபாவதியும் மகளை பார்த்து பார்த்து கவனித்தார்.

இத்தனை இருந்தும் வளைகாப்பில் விஷ்ணு இல்லாதது பெரும் இழப்பாக இருந்தது காவ்யாவிற்கு.

சில நாள்களுக்கு பிறகு காவ்யா பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். முதல் பேரக்குழந்தையை கொண்டாடித் தீர்த்தார் கோபாலன். காவ்யாவை வீட்டிற்கு அழைத்து வந்த பின்னே மகளையும் மனைவியையும் காண தினமும் வீட்டிற்கு வந்து போவான் திவாகர்.

மேலும் சில மாதங்களுக்குப் பிறகு, விஷாலினிக்கு ஏழாம் மாதம் தொடங்க, அடுத்த வாரம் வளைகாப்பு செய்ய முடிவெத்தார் மேகலை. விஷ்ணுவிடம் சொல்லி தேதியை முடிவு செய்தனர்.  

மருமகளின் வளைகாப்பிற்கு திவாகர் குடும்பதிற்கு முதல்முறையாக நேரில் சென்று அழைப்பு விடுத்தார் கோபாலன். கிருஷ்ணனை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர் வளைகாப்பில்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மேகலையின் ஆசைப்படி குட்டி விஷ்ணுவையே ஈன்றெடுத்தாள் விஷாலினி.      

*** *** *** ***

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, காவ்யாவின் குழந்தைக்கு இன்று காதனி விழா. பழத்தட்டு, புத்தாடையோடு விஷாலினிக்கு அழைப்பு விடுத்தனர் காவ்யாவும் திவாகரும். ஆனால் விஷ்ணுவிற்கு அழைப்பு விடுக்க தைரியம் வரவில்லை காவ்யாவிற்கு.

மகளுக்கு மாமன் மடிமீது வைத்து காது குத்தும் கொடுப்பினை கிடைக்காதோ என்று மிகவும் வருந்தினாள் காவ்யா. கோபாலனும் பிரபாவதியும் மகனிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இன்னும் விஷ்ணு வரவில்லை. அவங்க வரலைனா என் மகன் மடிமேல உக்கார வச்சிக்கலாம் விடுங்கக்கா என்று தேற்றினாள் விஷாலினி.

“விச்சு மாமா என சிரித்தாள் குழந்தை.

“விஷ்ணுவா? என்று ஆவலோடு காவ்யா தேட, ஃபார்மல் பேண்ட் சர்ட்டில் வந்துகொண்டிருந்தான்.

“வாங்க சார்” என்று வரவேற்றான் திவாகர். “ம்” என தலையசைத்து தங்கை மடிமீதிருந்த குழந்தையை தூக்கி முத்தமிட்டு தன் மடிமீது அமர்த்தினான்.

தந்தை வந்த குஷியில் “விச்சுப்பா” என்று குதூகலித்தபடி விஷ்ணுவின் தோள்மீது ஏறி அமர்ந்தான் அவனின் மகன். “டேய்…” என மகனை கீழிறக்கி இடப்பக்க தொடை மீது அமர்த்தியவன், “ஆட்டாம உக்காரனும், இல்ல பாப்பாக்கு காயம் ஆகிடும்” என்று அதட்டினான்.

பிறகு மகனிடமும் மருமகளிடமும் பேச்சுக்கொடுக்க காவ்யா குழந்தைக்கு முடியிறக்கப்பட்டது. குழந்தையை குளிக்க வைத்தபின்னே தனது பாக்கட்டிலிருந்த சிறிய வைர கம்மலை எடுத்து கொடுத்தான்.

பிறகு காது குத்தப்பட, வலியில் அலறித் துடித்தக் குழந்தையை “இல்லடா இல்லடா” என்று கொஞ்சி தேற்றிக்கொண்டிருந்த விஷ்ணுவர்தனைப் பார்த்து காவ்யாவின் கண்கள் கலங்கியது நெகிழ்வில்.

அரைமணி நேரத்திற்கு பிறகு கறி விருந்து உண்டு கிளம்பினான் விஷ்ணு. மகனின் செயலில் நிறைந்து போனார்கள் கோபாலனும் பிரபாவதியும்.

அடுத்தநாள்…

வழக்கம்போல் ஏழு மணிக்கெல்லாம் அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தாள் விஷாலினி. சென்ற வருடம் முதுநிலைப் படிப்பிற்கான மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த விஷாலினி தற்போது ஆறு மாதமாக கல்லூரிக்கு செல்கிறாள். பீடியாட்ரிஷன் படித்து வருகிறாள்.

கோபாலன், பிரபாவதி, மேகலை மூவரும் குழந்தையாகவே மாறியதால் அன்னையையும் தந்தையையும் சற்று சுலபமாக பிரிந்திருக்கிறான் விஷ்ணுவின் மகன்.

எப்பொழுதும் விஷாலினி கிளம்பும் நேரம் மகன் மேகலையோடுதான் இருப்பான். இன்றும் அங்கே இருக்க கதவை தாழிட்டவன், மனைவியின் தலையை களைத்துவிட்டான்.

“அச்சோ… என்ன பண்றிங்க? லேட் ஆகுது” என்று விஷாலினி சிணுங்க, “இன்னைக்கு லீவ் போடு” என்று முத்தமிட்டான் கன்னத்தில்.

“நான் லீவ் போடுறேனுதான் சொன்னேன், நீங்கதான கிளம்பனும்னு சொன்னிங்க?”

“அது நேத்து நைட் சொன்னேன்… இன்னைக்கான ப்ரோகிராம் கேன்சல் ஆகிடுச்சு. அதனால வீட்டுலதான் இருக்கப்போறேன்” என்று இதழை நெருங்கப்பார்க்க, இவள் கதவை பார்த்தாள்.

“தாழ் போட்டுட்டேன்” என்று வசீகரமாக சிரித்தபடி கட்டிலில் அமர்ந்து, மனைவியையும் அருகே அமர்த்திக்கொண்டவன், “ம்… நேத்து எதோ சொல்ல வந்தியே… என்னனு இப்போ சொல்லு” என்றான்.

“நானா… இல்லையே” என்றாள் தடுமாற்றமாக.

விஷ்ணு முறைக்க, “இல்ல… போன வாரம் கிருஷ்ணன் கல்யாணத்துக்கு அத்த மாமா, நீங்கனு எல்லாரும் போனிங்க. ஆனா காவ்யாக்கா திவாகர் அண்ணாவை மட்டும் மன்னிக்க மாட்டேங்குறிங்க” என்றாள் சன்னக்குரலில்.

“ஆன்ட்டியோட அம்மா குடும்பமாச்சே… எப்படி அவாய்ட் பண்றது?” என்றவன், “நான் அவாய்ட் பண்ற அளவுக்கு கிருஷ்ணன் எந்த தப்பும் பண்ணல. உன்னை பிடிச்சது, கேட்டான். நீ மறுத்தபின்ன இந்த பக்கம் வந்தானா?

காவ்யாவை மன்னிச்சிட்டேனானு கேட்டா ஆமாம்னு சொல்லலாம். ஆனா அவ துரோகத்தை மறக்கல. எவ்வளோ ஈஸியா அப்பாம்மாவை அசிங்கப்படுத்திட்டா?” என்றான் கோபமாக.

விஷாலினி அமைதியாகிட, “நம்ம ஆசைக்கு மத்தவங்களை அசிங்கப்படுத்தினா, இப்படி சில இழப்புகளை சந்திச்சுதான் ஆகனும்.

துரோகம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமும் நாட்டுல நடந்துட்டுதான் இருக்கு. அதுக்காக நாமளும் செய்ய நினைக்கலாமா?

கிருஷ்ணன் மனசு சுத்தமாகிடுச்சு. அதனாலதான் அவனால என்னை நேர்ல பார்த்து இன்வைட் பண்ண முடிஞ்சது. உன்னையும் அழைச்சிட்டு வர சொன்னான். உனக்கு பிடிக்காதுனு நான்தான் வற்புறுத்தல.

நியாயமான விசயத்துக்குத்தான் ஆசைப்படனும். வெக்கப்பட வேண்டிய விசயத்துககு வெக்கப்படனும். அச்சப்பட வேண்டிய விசயத்துக்கு அச்சப்பட்டுத்தான் ஆகனும்” என்றான்.

விஷாலினி சோர்வோடு அமர்ந்திருக்க, “போரடிக்கிறேனா?” என்று அணைத்து முத்தமிட்டான். “கொஞ்சம்” என்றாள் கிண்டலாக.

“அடிங்… கேட்டதுக்கு பதில் சொன்னா போரடிக்கிறேனு சொல்ற?” என்று பொய்யாய் மிரட்டியவன், “இதென்ன சுடிதார்? நல்லாவேயில்ல, வேற போடு” என்று கழற்ற முனைய, விஷாலினி வெக்கத்தில் சிவந்தாள்.

“எத்தனை முறை நெருங்கினாலும் முதல் முறைபோல நினைக்க வைக்கிற உன்னோட இந்த நாணம்தான்டீ என்னைக் கட்டிப்போட்டுடுது” என்று அணைத்தான் பெருகிய காதலோடு.

இனி எல்லாம் சுபம் சுபமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!