“ஏற்கனவே போன் செய்தேன், அட்டன் பண்ணல. இப்போ போன் செய்து நான் வரேனு சொன்னா, எங்கையாவது போய்ட்டான்னா?”
Advertisement
“ஹ ஹா… அதுவும் சரிதான். டைம் அஞ்சுதான் ஆகுது. கடையிலதான் இருப்பாங்க, அப்படி இல்லைனா வீட்டுல இருப்பாங்க, பொண்டாட்டி வேணும்னா நல்லா சுத்துங்க”
“என் நேரம்டா” என்று சிரிப்போடு இணைப்பை துண்டித்து, டேக்ஸி டிரைவரிடம் கடையின் விலாசத்தை சொன்னான்.
மார்வாடி தவிர்த்து வேறு பாஷை தெரியாத டிரைவரிடம் வழியை சொல்லி, கடைக்கு வந்து சேர்வதற்குள் போதும் என்றாகிவிட்டது தேவராஜிற்கு.
Advertisement
ஓர் பெண்ணிற்கு துணியை காண்பித்துக்கொண்டிருந்த நவீனா தேவராஜை கவனிக்கவில்லை. தேவராஜைப் பார்த்து அதிர்ந்த செல்வி, “அக்கா” என நவீனாவை அழைத்தாள் கிசுகிசுப்பாக.
Advertisement
“வாங்க தம்பி” என்று சாம்பவி வரவேற்க, இவர்களுமா வேலை பார்க்கிறார்கள்? என்ற சந்தேகத்தோடு உள்ளே வந்தவன், “நல்லா இருக்கிங்களா?” என்றான் நவீனாவை பார்த்தவாறு.
தற்போதுதான் தேவராஜைப் பார்த்த நவீனா அதிர்ந்து நின்றாள்.
“நல்லா இருக்கோம் தம்பி, உக்காருங்க” என்று நாற்காலியை காண்பித்து தண்ணீர் கொடுத்தார்.
“நீதான் வேணும். வெளில வெய்ட் பண்றேன், வா” என்று வெளியேறினான்.
“நவீனா போம்மா” என்றார் சாம்பவி.
“ம்மா சும்மா போ போனு சொல்றிங்க, திரும்ப அக்கா மனசை கஷ்டப்படுத்தினா என்ன பண்றது?” என்றாள் செந்தமிழ்செல்வி.
மகளை முறைத்து, உடை வாங்க வந்த பெண்ணுக்கு தேனையானதை காண்பித்து அவளையும் அனுப்பி வைத்து, “புருஷன் பொண்டாட்டிக்குள்ள நீ எதுக்கு நுழையிற?” என்றார்.
“வேண்டாம்னு டிவோர்ஸ் பண்ணிட்டு அவர்தான் திரும்பவும் நவீனாக்கா நிம்மதியை கெடுக்க வந்துருக்கார்”
“டிவோர்ஸ்க்கு அப்புறமும் நவீனா மனசுல அந்த தம்பிதான் இருக்கார். நவீனாவோட நிம்மதியே அந்த தம்பியோட வாழ்றதுதானு புரிய இது ஒன்னு போதும். உனக்கு இதெல்லாம் புரியாது. நீ அமைதியா இரு” என மகளை அதட்டி,
நவீனாவிடம், “இவ்வளோ தூரம் வந்துருக்கார். முதல்முறையா உன்னைத் தேடி வந்துருக்கார். ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து பாரு நவீனா” என்றார்.
நவீனா குழப்பத்தில் இருக்க, “வா” என்று கைப் பிடித்து வெளியே அழைத்து வந்தார் சாம்பவி.
என்ன காரணத்திற்காக வந்திருக்கிறான் என்று புரிந்துகொள்ள முடியாத போதும், தன்னை ஏற்க வந்திருக்கிறான் என்ற எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை நவீனாவிற்கு.
“இந்தாங்க தம்பி வீட்டுசாவி, நம்ம காரே இருக்கு, டிரைவர் கூட்டிட்டு போவார்” என்று சாவியை நீட்ட, “வேணாம்ங்க, எனக்கு டேக்ஸி வெய்ட்டிங்ல இருக்கு” என்றான்.
அப்போ மனைவியை அழைத்துப்போக வரவில்லையா என்று சாம்பவிக்கு ஏமாற்றமானது. சாம்பவியின் கைக்குள் நவீனாவின் கை இருக்க, அவளின் மற்றொரு கையை பிடித்தவன், “இனி விடவே மாட்டேன். என் பொண்டாட்டி கையை விடுங்கம்மா” என்றான்.
பெரு மகிழ்வோடு நவீனாவின் கையை விடுவித்தார் சாம்பவி.
திருமண நாளன்று மணமேடையில் அக்னியை வலம் வரும்போது விரல் கோர்த்து, அந்த சம்பிரதாயம் முடிந்த கணமே விடுவித்தவன், இன்றுதான் கை பிடிக்கிறான்.
தேவராஜின் உள்ளங்கை வெப்பம் அறியும்படியான முதல் தொடுகை… அவனின் வாயால் என் பொண்டாட்டி எனும் வார்த்தை… இந்த நிகழ்வே தாளமுடியாத நெகிழ்வை கொடுக்க, இது பொய்யா? உண்மையானு தெரியாம ரொம்ப சந்தோசப்படாத என்று தன் மனதை அதட்டியவளுக்கு, அவளின் கண்களை அதட்ட முடியாமல் கண்ணீரை கொட்டினாள்.
நவீனாவின் கண்களை சாம்பவி துடைத்து விட, கணவன் முகம் பார்க்கவில்ல நவீனா.
“இங்கையே கால்ல விழனுமா?” என தேவராஜ் கேட்க, சிரிப்போடு உள்ளே சென்றுவிட்டார் சாம்பவி.
“கையை விடுங்க”
“விடமாட்டேன்” என இன்னும் இறுகப்பற்றினான்.
“என் போன் உள்ள இருக்கு” என்க, செல்வி நவீனாவின் மொபைலை எடுத்து வந்தாள்.
அதனை வாங்கியவன், “நவீனாவோட கஷ்ட காலங்கள்ல கூடவே இருந்திருக்க. ரொம்ப நன்றிம்மா. நான் உன் நவீனாக்கா நிம்மதியை கெடுக்க வரல. என் நிம்மதியை தேடி வந்துருக்கேன், இனி பத்திரமா பார்த்துப்பேன்” என்றான்.
நவீனாவோடு இணைந்ததில் செல்வி எத்தனை மகிழ்கிறாள் என்பது அவளின் முகப்பொலிவில் தெரிய, தானும் மகிழ்ந்தவன், “நான் நவீனாக்கு நிறைய கஷ்டம் கொடுத்திருக்கேன். எல்லாமும் உனக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா ஒரே நிமிஷத்துல என்னை மன்னிச்சிட்ட. ரொம்ப தேங்க்ஸ், இது ரொம்ப நல்ல க்வாலிட்டி” என்றவன், “இதே போல என் தம்பியையும் மன்னிச்சிடேன்ம்மா” என்றான் கோரிக்கையாக.
செல்வியின் சிரம் தாழ்ந்து போக, “நீங்க இரண்டு பேரும் நல்ல ஃப்ரண்ட்ஸ். உன் விசயத்துல செல்வா பெருசா ஏதும் தப்பு செய்திருக்கமாட்டானு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா எதோ ஒரு வகையில உன்னை ஹர்ட் பண்ணியிருக்கான். அவனை பனிஷ் பண்ணு, ஆனா அவாய்ட் பண்ணாத.
செல்வா உன்னை எவ்வளோ மிஸ் பண்றானு எனக்கு தெரியல. உங்க ஃப்ரண்ட்ஸிப் விசயத்துல அவனை புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு அவன் ஸ்பேஸ் கொடுக்கல. ஆனா முன்னாடியிருந்த கலகலப்பு அவன் முகத்துல இல்ல.
செல்வாவை மன்னிச்சதும் நவீனாகிட்ட சொல்லுங்க. நாங்க இரண்டு பேர் மட்டுமில்ல, மொத்த குடும்பமும் உங்க வீட்டுக்கு வந்து விருந்தே சாப்பிடறோம். இப்போ எனக்கு நவீனாவோட தனியா இருக்கனும். நாங்க கிளம்பறோம்” என்று நவீனாவைப் பார்க்க, செல்வியை அணைத்து விடுவித்து, “கால் பண்றேன் செல்வி” என்று கணவனோடு கிளம்பினாள் நவீனா.
விவாகரத்து கிடைத்த பின்னும் கூட தேவராஜ்தான் என் கணவன் எனும் நிலையிலிருந்து வெளி வரமுடியாமல் தவித்துக்கொண்டிருப்பவள். இரண்டு வருடங்களாக கணவனோடு ஓர் அறையில் தங்கியவளுக்கு இன்று அவனோடு தனித்திருக்க மனம் பயம் கொண்டது.
விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றவன், தற்போது ஏற்க நினைப்பதன் காரணம் என்னவாக இருக்கும் என்று தீவிரமாக யோசித்தாளே அன்றி, உண்மையில் மனைவியாக தன்னை ஏற்றிருக்கிறான் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை.
இந்நிலையில் தேவராஜோடு தனியறையில் இருப்பதை விட, பயணம் செய்வது பரவாயில்லையாக இருக்க, “இன்னைக்கே போலாம்” என்றாள்.
“எதாவது எமர்ஜன்ஸி திங்க்ஸ் வாங்கனுமா?”
“இல்ல ஏதும் வேண்டாம்”
“ஸ்யூரா?”
“ம்” என்றாள்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பின்னே, “எதாவது சாப்பிடலாமா?” என்றான்.
“எனக்கு பசிக்கல”
“எனக்கு பசிக்குதே”
“நான் டேக்ஸில இருக்கேன், நீங்க போய் சாப்பிட்டு வாங்க”
“பரவால்லையே, உனக்கு கோபம் வருது, இப்படியே டெவலப் ஆகி என்னை பழிவாங்க ட்ரை பண்ணு” என்றான் மெச்சுதலாக.
“இல்ல, நிஜமா எனக்கு பசிக்கல”
“அப்போ என்னை பழிவாங்க மாட்டியா?” என இலகுவாக கேட்க, ஜன்னல்புறம் திரும்பிக்கொண்டாள் நவீனா. அவளின் மொபைலை அவளின் மடியில் வைத்துவிட்டு, தன் மொபைலை பார்த்தபடி ஏர்போர்ட் வந்தான்.
விமானப் பயண நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பே விமான நிலையம் வந்துவிட்டார்கள். சாப்பிட என்ன வேண்டும் என்று ஒரு மணி நேரமாக கேட்கிறான். பசியில்லை என்றேதான் சொன்னாள்.
இவனும் உண்ணாமல் இருக்கிறான் என்று உரைக்க, “ஃப்ளைட்ல ஃபர்ஸ்ட் டைம் வந்தப்போ, கொஞ்சம் பயமாகிடுச்சு. வயிறு பிரட்டுறமாதிரி ஆனது. சாப்பிட்டா செட் ஆகாது. நீங்க போய் சாப்பிட்டு வாங்க” என்றாள்.
தனது பையிலிருந்து பழம் எடுத்து கொடுக்க, மறுக்காமல் வாங்கிக்கொண்டு, “நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன், நீங்க போய் சாப்பிட்டு வாங்க” என்றாள்.
தனியாக விட்டுச் செல்லவும் மனமில்லை, பார்க்க வைத்து சாப்பிடவும் மனமில்லை. உண்டால் உபாதை ஆகும் என்பவளை எப்படி வற்புறுத்தி சாப்பிட வைப்பதென, “உனக்காகத்தான் கேட்டேன், எனக்கு பசியில்ல” என்று அவளருகே அமர்ந்துகொண்டான்.
விமானம் வரும் நேரம் வரை மனைவியையே பார்த்திருந்தான். தன்னை இன்னும் நம்பவில்லை என்பது அவளின் பாவனையிலேயே புரிந்தது. பின்னே விமானம் வர, ஏறி அமர்ந்ததும், பெல்ட் போட சொல்லிக்கொடுக்க, “சின்னவர் சொல்லிக்கொடுத்தார். எனக்கு தெரியும்” என்று போட்டுக்கொண்டாள்.
விமானம் மேலே பறக்க ஆரம்பிக்கவும் மனைவியின் கையை இறுக்கமாக பற்றிக்கொள்ள, சற்று நேரம் கூட நவீனாவால் தாங்க முடியவில்லை. “ஃபர்ஸ்ட் டைம்தான் பயந்தேன், இப்போ பயமில்ல, விடுங்க” என்றாள்.
“எனக்கு பயமாயிருக்கு, பிடிச்சிக்கிறேன்” என்று இன்னும் இறுக பற்றிக்கொண்டான் தேவராஜ். பேசிக்கொள்ளவில்லை என்றபோதும் விமானம் தரையிறங்கும் வரை நவீனாவின் கையை விடவில்லை.
விமானத்தில் தேவராஜ் தனது கையைப் பற்றியே இருந்ததால் நவீனாவிறகு உறக்கம் வரவில்லை. கழிவறை சென்று வந்து டேக்ஸியில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே உறங்கிவிட்டாள் நவீனா. அதிகாலை நான்கு மணிபோல் “நவீனா, எழுந்துக்கோ இறங்கனும்” என்றான்.
விழித்து டேக்ஸியிலிருந்து இறங்கிய பின்னேதான் தன் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான் என்று புரிந்தது. “இங்க எதுக்கு வந்தோம்?” என்றாள்.
அவளின் கேள்விக்கு பதிலளிக்காமல் டேக்ஸிக்கு பணம் கொடுத்து, “வா” என்று முன்னே சென்று அழைப்பு மணியை அழுத்தினான்.
ஐந்து நிமிடம் கழித்து நவீனாவின் அப்பா வெளியே வந்தார். எதிரில் நிற்பவர்களை நம்ப முடியாமல் கண்ணாடி கழற்றி விட்டு கண்களை நன்றாக துடைத்து கண்ணாடி போட்டு பார்த்தவரின் பார்வையை கண்ணீர் மறைத்துவிட தற்போதும் கூட கண் சரியாக தெரியவில்லை.
“அப்பா” என தந்தையை அணைத்துக்கொண்டாள் நவீனா.
மகளின் முதுகை தட்டிக்கொடுத்தபடி “வாங்க, உள்ள வாங்க” என தேவராஜை வரவேற்க, “யாருங்க?” என்றபடி வந்தார் நவீனாவின் அன்னை.
“பாப்பாவும் மருமகனும் வந்துருக்காங்க, தண்ணி கொண்டு வா”
நடுத்தர வர்கத்தினர் நவீனாவின் பெற்றோர். வீட்டில் இருப்பதும் இரண்டு பேர்தான். நேற்றைய மீதமாய் நீர் ஊற்றி சோறுதான் இருந்தது. மருமகனுக்கு அதை எப்படி கொடுப்பது என்று சங்கடப்பட்டு, “மாவு இருக்கு, சித்த நேரத்துல சட்னி செய்துடறேன்” என்று சமையலறை செல்ல முற்பட,
“இல்ல, இந்நேரத்துல உங்களுக்கு சமைக்க கஷ்டம்னு வாங்கிட்டு வந்துட்டேன்” என்று தனது பையிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்து அங்கிருந்த மேசையில் வைத்து, நவீனாவிடம் “கை கழுவிட்டு வரலாம் வா” என்றான்.
இரண்டு சிறு தனியறைகள், சமையலறை, ஹால் என்று சின்ன வீடு. திருமணத்தின்போது பாதி பகல் இங்கே தங்கியிருந்தான். அதன்பின்னே இன்றுதான் இங்கே வந்திருக்கிறான், தனியறையில் குளியலறை இல்லை என்பது நியாபம் இருக்க, வேறு எங்கிருக்கிறது என தெரியாமல் நவீனாவை அழைத்தான்.
வீட்டின் பின்புறம் அழைத்துப் போனாள். அங்கே குளியலறை இருக்க, “நீ போய்ட்டு வா” என்றான்.
பின்னே இருவரும் முகம் கை கழுவி வர, அதற்குள் சாப்பிட ஏதுவாக உணவை எடுத்து வைத்திருந்தார் நவீனாவின் அன்னை.
உண்ண அமர்ந்தவன், நவீனாவின் பெற்றோர் முகத்திலிருந்த கவலை உணர்ந்து, “நவீனா என் கூட இருந்த வரைக்கும் அவ அருமை தெரியல. பொண்ணை பெத்தவங்களா உங்க வேதனையையும் யோசிக்கல. டிவோர்ஸ்க்கு அப்புறம்தான் எல்லாம் புரிஞ்சது. என்னை மன்னிச்சுடுங்க. இனி நவினாவை விடமாட்டேன்” என்று இரு கை கூப்பி வணங்கினான்.
மகளின் விவாகரத்தால் உண்டான மன வேதனையிலிருந்து இன்னும் வெளிவராத பெற்றோர்கள். விவாகரத்து ஆன போதும் மகளின் விருப்பம் தேவராஜ் மீதுதான் என்பதால், தேவராஜின் பேச்சு ஆறுதலாக இருந்தது.
“இங்கதான் கூட்டிட்டு வருவார்னு எனக்கே தெரியாதும்மா, டேக்ஸியில ஏறினதும் தூங்கிட்டேன், இவர் சாப்பாடு வாங்கினது கூட எனக்கு தெரியாது”
“ராஜஸ்தான்லயிருந்து வந்துருக்காங்க, அலுப்பா இருக்கும், படுக்கட்டும், காலைல பேசிக்கலாம்” என தந்தை சொல்ல, மருமகன் தற்போதுதான் மனம் மாறியிருக்கிறார் என்ற நிம்மதியோடு “போய் படு” என அனுப்பி வைத்தார் மகளை.
சிறிய அறையில் இரண்டு பேர் மட்டுமே படுக்கும் அளவிலான கட்டில். கீழே படுத்தால், கட்டிலிலிருந்து இறங்கக்கூட முடியாது. கணவன் வீட்டின் தனியறையில் தனியே படுத்துப் பழகியவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அலமாரியிலிருந்த மெத்தை விரிப்பை எடுத்து மெத்தைக்கு விரித்து முடித்து தேவராஜ் திரும்ப, கையை பிசைந்தபடி நவீனா நின்றிருந்தாள்.
இனி தேவராஜ் தனக்கு இல்லை என்றபோதும் இவனுக்காக ஏங்கிய மனம்தான். ஆனாலும் தேவராஜ் பிடிக்குள் இவள் நெளிந்து கொண்டிருக்க, “என்னை இன்னைக்கே ஏத்துக்க வேண்டாம். நம்ம கல்யாணம் முடிஞ்ச பின்னாடி ஏத்துக்கிட்டா போதும்” என்று நெற்றியில் முத்தமிட்டு, “தூங்கலாம்” என்று கட்டில் மீது அமர வைத்து தானும் அமர்ந்தான் அருகே.
படபடக்கும் இதயத்தை சமன் செய்ய த்ராணியில்லாமல் படுத்தவள் சுவற்றோரம் திரும்பிக்கொண்டாள். மனைவி அருகே படுத்தவனுக்கு அளவில்லாத நிம்மதி.