Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –16

”வண்டியை மெக்கானிக்கிட்ட விட்டுட்டு அப்படியே நான் லாட்ஜ்க்கு போறேன், நீ பத்திரமா ஹாஸ்டலுக்கு போயிடுவல்ல” என குணா கேட்க அதற்கு கண்மணியோ

“ம்ம்” என்றாள் அவள் மீது அவனுக்கு நம்பிக்கையில்லை

”இல்லை உன்னை நான் நம்பமாட்டேன் நீ போ நான் உன்னை ஃபாலோ பண்றேன்”



Advertisement

”இல்லை வேணாம் நான் போயிடுவேன் நீ போ”

”முடியாது”

”ஏன் இப்படி அடம்பிடிக்கற எனக்கு போக தெரியும்” என எரிந்து விழுந்தாள் கண்மணி

Advertisement

”ஓ அதான் கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தேனே, எந்த லட்சணத்தில நீ நடந்து போனன்னு”

Advertisement

”அது ஏதோ சின்ன மிஸ்டேக் இனி அப்படி நடக்காது”

”நான் நம்ப மாட்டேன் நீ போ நான் பின்னாடியே வரேன்”

”ப்ச் ஒண்ணும் வேணாம், உன்னை பொறுத்தவரைக்கும் நான் யாரோதானே, எனக்காக நீ ஏன் இவ்ளோ கஷ்டப்படனும், எதுக்கு என்னை காப்பாத்தனும், அதுவும் உன் உயிர் மேல அக்கறையில்லாம என்னை காப்பாத்தனும், அந்த வண்டியில நான் மாட்டிக்க கூடாதுன்னு நினைச்ச சரி, ஒருவேளை நீ மாட்டியிருந்தா உன் நிலைமையும் மோசமாகியிருக்கும்ல, எதுக்காக இப்படி ரிஸ்க் எடுக்கனும் ஏன்”

Advertisement

”ஏன்னா என்ன சொல்றது”

”எனக்குத் தெரியும், நீ என்ன சொல்வன்னு, உன் இடத்தில யாரா இருந்திருந்தாலும் நான் இப்படித்தான் உசுரை கொடுத்து காப்பாத்தியிருப்பேன்னு சொல்லப்போற அதானே” என்றாள் சலிப்பாக அவனோ மென்மையாக சிரித்துவிட்டு

”கரெக்ட்தான் உன் இடத்தில வேற யாராவது இருந்திருந்தா கண்டிப்பா நான் காப்பாத்த உதவி செய்திருப்பேனே தவிர என் உசுரை பணயமாக்கியிருக்க மாட்டேன், நீங்கறதாலதான் என் உசுரே போனாலும் போகட்டும்னு காப்பாத்தினேன், எல்லாருக்கும் இப்படி உசுரை கொடுத்து உதவி செய்தா நான் எப்படி வாழறது”

”இப்ப என்ன சொன்ன திரும்பச் சொல்லு“

”ப்ச் உனக்கு கேட்டிச்சின்னு எனக்குத் தெரியும் இதோட விடு“

”எனக்குன்னா உசுரையே தருவியா”

”ஆமாம்”

”அப்போ ஏன் காதலை தரலை”

”ப்ச் இப்ப அதுவா முக்கியம்”

”எனக்கு முக்கியம்தான்”

”உனக்கு படிப்பதான் முக்கியம், உன் லட்சியம் என்னாகிறது, எனக்காக உன் லட்சியத்தை விட்டுக் கொடுத்து தியாகி ஆக வேண்டாம்“

”யாரும் இங்க தியாகியாகலை என் லட்சியத்தை நான் மறக்கலை“

”கிழிச்ச, அதான் பார்த்தேனே, பரிட்சை எழுத முடியாம நீ கஷ்டப்பட்டதும், இதோ இப்ப என் நினைப்பில போய் வண்டி மேல மோதப்பார்த்ததும், ப்ச் படிச்ச முட்டாளா நீ, எப்பவுமே தெளிவா இருப்ப, இப்ப ஏன் மந்தமா இருக்க”

”தெரியலை எனக்குள்ள நிறைய மாற்றம் வந்திருக்கு, அது சரியா தவறான்னு தெரியலை“

”படிப்பை தவிர வேற எந்த மாற்றம் வந்திருந்தாலும் அது தப்புதான் நாளைக்கு டெஸ்ட் இருக்கு, போய் ஒழுங்கா படி போ”

”அதிகாரத்தை பாரு காதல் வேணாமாம், இந்த கண்மணியும் வேணாமாம், ஆனா அதிகாரம் மட்டும் செய்யலாமா, இது அநியாயம்”

என அவள் முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டு நடக்க அவனோ புன்னகை பூத்தபடியே அவளை 4 அடி பின்தொடர்ந்து நடந்தான்.

ஹாஸ்டல் வந்துவிட அவளோ திரும்பி அவனைப் பார்த்தாள், அவனோ நிம்மதியாக இருப்பதைக்கண்டு வெறுத்தாள்

”என்ன ரொம்ப நிம்மதியா இருக்கப் போல”

”பின்ன உன்னை பத்திரமா ஹாஸ்டல்ல சேர்த்துட்டேன்ல அதான் நிம்மதியா இருக்கேன்”

”ம்க்கும் இதுக்கு என்ன அர்த்தம்”

”எதுக்கு”

”யாரோ ஒரு பொண்ணு எப்படியோ போறாள்ன்னு விடாம ஹாஸ்டல் வரைக்கும் பின்தொடர்ந்து வர்றது எல்லாம் எதுக்காம்” என கேட்க அவனிடம் பதில் இல்லை

”சொல்லு குணா ஏன் அமைதியா இருக்க சொல்லு”

”சொல்றதுக்கு ஒண்ணுமில்லை, இதோட இந்த விசயத்தை விடறியா நான் கிளம்பறேன் நேரமாச்சி, நாளைக்கு காலேஜ்ல பார்க்கலாம்”

”எதுக்கு பார்க்கனும் உனக்குதான் என்னை பிடிக்கலைல்ல”

”யார் சொன்னது உன்னை எனக்கு பிடிக்கலைன்னு, பிடிக்காமதான் பேசினேனா பழகினேனா காதலிச்சேனா”

”அப்படின்னா ஏன் இப்ப மட்டும் காதல் காணாம போயிடுச்சி”

“அது அப்படித்தான் நீ போய் படி போ” என விரட்டிவிட்டு அவன் கிளம்ப முயல அவளோ தடுத்தாள்

”குணா என் கேள்விக்கு பதில் சொல்லாம உன்னை நான் இங்கிருந்து அனுப்பறதாயில்லை உண்மையை சொல்லு இப்பவும் நீ என்னை விரும்பலை” என அவள் ஏக்கமாக கேட்க அவனோ மனதை கல்லாக்கிக் கொண்டு

”இல்லை இல்லவே இல்லை” என சொல்லிவிட்டு அவன் அவசரகதியில் அங்கிருந்து சென்றுவிட அவளுக்கு சிரிப்புதான் வந்தது

”இல்லைன்னு சொல்றப்ப கூட ஏன் உன் கண்கள் கலங்கனும், தொண்டை இருமனும், வார்த்தைகள் தவிப்போட வரனும், உன்னை பத்தி எனக்குத் தெரியும் குணா, ஆகட்டும் நீயே என்கிட்ட வருவ, அப்ப பார்த்துக்கறேன், என் காதல் இன்னும் அப்படியேதான் இருக்கு, உன் காதலும் அப்படியேதான் இருக்கு, காதல் இருக்கறப்ப நாம ஏன் கஷ்டப்படனும் ஜாலியா இருக்கலாமே” என நினைத்தவளுக்கு அப்போதுதான் இதழில் புன்னகை தவழ்ந்தது.

தனது அறைக்குச் சென்றவள் உடைகளை மாற்றிக் கொண்டு ஏதோ சாப்பிட்டு விட்டு படிக்க அமர்ந்தாள், இப்போது அவளால் படிக்க முடிந்தது, படித்தாள், உறக்கம் வரும்வரை படித்துவிட்டு உறங்கிப் போனாள்

மறுபக்கம் என்னதான் வீராப்பாக கண்மணியிடம் பேசிவிட்டு வந்திருந்தாலும் தன்னையே ஏமாற்றிக் கொள்வது போல உணர்ந்தான் குணா.

”கண்மணி புத்திசாலி, என் மனசுல இருக்கறதை கண்டுபிடிச்சிட்டா, நான் அவளை இப்பவும் காதலிக்கற விசயத்தை அவள் தெரிஞ்சிக்கிட்டா, இனி என்ன செய்வா? தொடர்ந்து அவள் என்னை காதலிப்பா, ஆமாம் அப்போ அவளோட படிப்பு என்னாகிறது, இதுக்கு மேலயும் அவள்கிட்ட பொய்யா நடிக்க நம்மால முடியாது

இப்ப என்னாச்சி அந்த கமலி நம்மளை ஏமாத்தினதுக்காக நாம ஏன் கண்மணியை விட்டுக் கொடுக்கனும், அவள் என்னோட கண்மணி, அவளை என்னால இந்த ஜென்மத்தில விட்டுக் கொடுக்க முடியாது, பரிட்சை முடியட்டும், ரிசல்ட் வரட்டும், எந்த அளவுக்கு மார்க் வாங்கியிருக்கோம்னு பார்க்கலாம்

அவள் முன்னாடியே சொன்னது போல நல்லபடியா மார்க் வந்திருந்தா தொடர்ந்து காதலிக்கனும், இல்லைன்னா படிப்புதான் முக்கியம்னு அதுமேல கவனம் செலுத்தனும், எதுவாயிருந்தாலும் டெஸ்ட் முடிஞ்சி ரிசல்ட் வந்தபின்னாடிதான், அவளை விட்டுக் கொடுக்கறது உசுரை விடறதுக்குச் சமம், அவளை விடமுடியாது, அப்படின்னா நான் படிக்கனும் நல்லபடியா டெஸ்ட் எழுதனும்” என நினைத்த உடனே அவனுக்குள் ஒரு உத்வேகம் வந்தது.

புத்தகத்தை எடுத்தான், மறுநாள் பரிட்சைக்குண்டான பாடத்தை படிக்கலானான், இப்போது அவனாலும் படிக்க முடிந்தது, காரணம் கண்மணியையும் அவளின் காதலையும் இழக்ககூடாது என்பதற்காகவே படித்தான்.

காதல் இருவருக்கும் அருமையான அனுபவத்தை தந்தது, அதுவரை மற்றவர்களுக்காக வாழ வேண்டும் யாருக்காக வாழ வேண்டும் என விட்டேத்தியாக இருந்த இருவரின் மனதிலும் காதல் ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்க, அதுபடி அவர்கள் தங்கள் காதலுக்காக வாழ ஆரம்பித்தார்கள், படிப்பது மட்டுமே லட்சியமாக கொண்ட இருவரின் மனதிலும் படிப்பை தாண்டி காதல் என்ற ஒன்று புது பந்தத்தையே உருவாக்கிவிட்டது.

 

மறுநாள் கல்லூரிக்கு சுறுசுறுப்பாக வந்தார்கள் குணாவும் கண்மணியும், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது கூட மகிழ்ச்சி தாண்டவமாடியது

”கண்மணி” என அவன் அன்பாக அழைக்க அவளுக்கு சிலிர்ப்பாக இருந்தது

”சொல்லு குணா” என்றாள் உற்சாகமாக

”ரொம்ப ஹாப்பியா இருக்கப் போல பரிட்சைக்கு படிச்சிட்ட போல”

”ம் ஆமாம் ஆமா நீ படிச்சிட்டியா”

”படிக்காம இருக்க முடியுமா, நீ வேற டெஸ்ட் வைச்சிட்ட அதுல நான் பாஸ் பண்ணனுமே”

”டெஸ்ட்டா என்ன டெஸ்ட்டு”

”மறந்துட்டியா ஐ ஜாலி”

”ஏய் இரு இரு நான் யோசிக்கறேன்” என சொல்லியவள் சில நொடிகள் யோசித்து பின் தெளிந்தாள்

”ஓஓஓஓ ஞாபகம் வந்துடுச்சி”

”என்னது”

”டெஸ்ட்ல நீ நல்லபடியா எழுதினா நான் உனக்கு சமைச்சி போடறேன்னு சொன்னேன்ல அதுக்காகதானே இப்படி”

”ஆமாம் வயிறு வேற அனலா இருக்கு கண்மணி, சாப்பாடே சாப்பிட பிடிக்கலை முதல் வேலையா வாடகைக்கு ஒரு வீட்டை பார்க்கனும்”

”அவசரப்படாத, டெஸ்ட் ரிசல்ட் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்” என இழுத்துச் சொல்ல அவனோ நொந்துப் போய் எதேச்சையாக எதிர்புறம் பார்த்தான்

அப்போதுதான் கவினும் கமலியும் ஒன்றாக கல்லூரி வளாகத்தில் நுழைந்தார்கள், அவர்களைக் கண்டதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது

”வர்றதை பாரு, இவங்களாலதான் எல்லா பிரச்சனையும், அந்த கமலியை என்ன செய்யலாம் ஏதாவது செய்யனும் கண்மணி”

”வேணாம் அவளை விட்டுடு பிழைச்சி போகட்டும்”

“அதெப்படி விடறது, சின்ன தப்பையா செய்திருக்கா, ஒருவேளை அவள் செய்த விசயத்தால நமக்குள்ள சண்டையாகி வாக்குவாதம் நடந்திருந்தா, நான் உன்னை அவமானப்படுத்தியிருந்தா இல்லை நீ என்னை அவமானப்படுத்தியிருந்தா என்னாயிருக்கும், நம்ம இரண்டு பேரோட மானமும் காத்துல பறந்திருக்கும், இந்த காலேஜை நம்மளை கேலி செய்திருக்கும்”

”அப்படிதான் எதுவும் ஆகலைல்ல”

”அதுக்காக அவளை சும்மா விடமுடியுமா எப்ப பாரு இரண்டும் ஒண்ணாவே அலையுதுங்க”

”அவங்களை தப்பு சொல்லாத குணா, இரண்டு பேருமே அண்ணன் தங்கச்சி”

”ஓஹோ இதுவேறயா, அண்ணன் உன்னை தொல்லை பண்றான், தங்கச்சி என்னை டார்ச்சர் பண்றா, இரண்டு பேருக்கும் ஒரு நாள் இல்லை ஒருநாள் வைக்கறேன் ஆப்பு”

”நீ ஏன் சினிமால வர்ற வில்லன் போல பேசற, நீதான் ஹீரோவாச்சே, ஹீரோ போல எல்லாரையும் மன்னிச்சி விடனும் சரியா” என சொல்ல அவனுக்கு சிரிப்புதான் வந்தது

”நான் ஹீரோவா அது இப்பதான் உனக்கு தெரியுதா, அன்னிக்கு இப்படி சொன்னப்ப என்னை கிண்டலடிச்சியே”

”அது சும்மா உன்னை வெறுப்பேத்தி ரசிச்சேன், உண்மையிலயே நீ பார்க்க அழகாதான் இருக்க, சினிமால ட்ரை பண்ணா கண்டிப்பா சான்ஸ் கிடைக்கும் ட்ரை பண்றியா“

”வேணாம்மா நான் நல்லா படிச்சி ஒருவேலையை ட்ரை பண்ணி லைப்ல செட்டில் ஆகற வழியை பார்க்கிறேன்”

”நல்ல எண்ணம் வாழ்த்துக்கள்”

”அது இருக்கட்டும் ஆனா அந்த கமலியை மட்டும் நான் சும்மா விடறதாயில்லை“

”ப்ச் நான்தான் அவளை விட்டுடு போனா போகட்டும்னு சொல்றேன்ல அப்புறம் என்ன”

”எப்படி விடறது, அவள் செய்தது ஒண்ணும் சின்ன தப்பில்லையே உனக்கு அவங்க மேல கோபம் இல்லையா”

”அவங்களாலதானே எனக்கு நீ கிடைச்ச, அதனால எனக்கு அவங்க மேல கோபம் இல்லை நன்றி சொல்லனும்னு தோணுது” என்றாள் மென்மையாக

அதைக்கேட்ட குணாவிற்கு உச்சி குளிர்ந்தது, அவனது கோபமும் பறந்தது, அவன் சுற்றி முற்றி பார்க்க அவளோ வியந்து

”என்ன அப்படி பார்க்கற யாரை தேடற”

”இல்லை நீ ஒரு நல்ல விசயம் சொல்லியிருக்க, இப்பன்னு பார்த்தா எல்லா பக்கமும் ஆளுங்க அலையறாங்க”

”அதனால என்ன”

”இல்லை யாரும் இல்லாம இருந்திருந்தா இந்நேரம் உன்னை கட்டிபிடிச்சி ஒரு முத்தம் கொடுத்திருப்பேன்”

”ஏய்ய்ய்ய்”

”அதுக்கில்லை அந்தளவுக்கு நீ சொன்னதை கேட்டு நான் சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல வந்தேன்”

”வார்த்தையில சொன்னா போதும் செயல்ல வேணாம்“

”வேணாம்னு உன் வாய்தான் சொல்லுது, ஆனா உன் முகம் ஏங்கிக்கிடக்கே, அங்க பாரு உன் கன்னம் சிவந்திருக்கு, ஏய் கண்மணி, நீ வெட்கப்படறதானே” என அவளை சீண்ட அவளுக்கு வெட்கமாகிப் போனது

”சீய் போ குணா, உனக்கு வெவஸ்தையே இல்லை, நான் போறேன்” என சொல்லியபடியே அவள் வகுப்புக்குள் சென்றுவிட குணாவிற்கு இன்பமாக இருந்தது

”இவளை சீண்டி விளையாடினா கூட நல்லா சுகமாதான் இருக்கு” என நினைத்துக் கொண்டே எதிரே பார்த்தான்

அதற்குள் கமலியும் கவினும் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள் அதிலும் கவின் சட்டென யாரோ ஒருவனிடம் ஏதோ பேச போக அதில் கமலி மட்டும் தனியாக நடந்து வந்தாள், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் குணா, அவளோ எதேச்சையாக அதைக்கண்டுக் கொண்டு அதிர்ச்சியில் ஒரே இடத்தில் சிலை போல நின்றுவிட்டாள்.

குணாவோ மென்மையாக சிரித்துவிட்டு அவளை தேடி வந்தான், அவளுக்கு வியர்த்து கொட்டியது, கவின் எங்கே என அவளின் கண்கள் தேடியது, அவனோ அவளை கண்டுக் கொண்டதாக கூட தெரியவில்லை, தேவையில்லாத கதையை ஏதோ உயிர் போகும் கதை போல பேசிக் கொண்டிருந்தான் கவின், அவனை நினைத்து கமலி உள்ளுக்குள் கோபம் கொண்டாள்.

குணாவோ அவளை நெருங்கிவிட்டான், அவளுக்கு இதயம் வேகமாக துடித்தது, வியர்த்து கொட்டியது, அவனோ மெதுவாக

”ஹாய் கமலி எப்படியிருக்க” என அவன் அன்புடன் நலம்விசாரிக்க அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது, பேச முடியாமல் தவித்தாள் அவனோ

”கோவையில உன்னை பார்த்தது, அதுக்கு அப்புறம் இப்பதான் உன்னை பார்க்கிறேன், எந்த க்ளாஸ்” என தெரியாதவன் போல கேட்க அவளுக்கும் அவனிடம் பேச வேண்டும் என ஆசை வந்தாலும் பேச முடியாமல் போக அவனோ பெருமூச்சுவிட்டு

”ஓகே பை” என சொல்லிவிட்டு அவன் வகுப்புக்குள் சென்றுவிட அப்போதுதான் கமலிக்கு மூச்சே வந்தது, அதற்குள் கவின் அவசர அவசரமாக வந்தான்

”கமலி கமலி என்னாச்சி, குணா எதுக்காக உன்கிட்ட வந்து பேசினான், ஆமா அவன் என்ன பேசினான் உன்னை திட்டினானா இல்லை அவமானப்படுத்திட்டானா” என கேட்க அவளோ கோபமாக கவினின் தோளில் ஒரு அடிப்போட்டாள்

”லூசு எங்கடா போன”

”இங்கதான் இருந்தேன் ஏன் என்னாச்சி குணா உன்னை திட்டிட்டானா”

”அவன் திட்டியிருந்தா கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேனே“

”வேற என்ன”

“ரொம்ப அக்கறையா நலம் விசாரிச்சிட்டுப் போறான்“

”ஓ அவ்ளோதானா, நான்கூட நீ செய்த திட்டம் தெரிஞ்சிக்கிட்டு வந்து பேசறான்னு நினைச்சேன்”

“அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சி“

”எதை வைச்சி சொல்ற”

”எந்த பொண்ணுகிட்டயும் பழகாத குணா, இவ்ளோ இயல்பா என்கிட்ட பேசறான்னா அவனுக்கு ஏதோ ஒரு விசயம் தெரிஞ்சிருக்கு”

”அப்படியிருந்தா அவன் ஏன் நலம் விசாரிக்கனும் திட்டியிருக்கனுமே”

”அதுதான் என் சந்தேகமே, என்னவோ நடக்குது, அது எனக்குத் தெரியலை கண்டுபிடிக்கிறேன்”

”அவசரப்பட்டு அவன்கிட்ட போய் தானா மாட்டிக்காத, அவனுக்கு ஏதோ டவுட் வந்திருக்கு, அதுக்காக உன்கிட்ட பேச்சுக் கொடுத்துட்டு போயிருக்கான், அவ்ளோதான் நீ பாட்டுக்கு ஏதாவது செய்து அப்புறம் வசமா மாட்டிக்காத சொல்லிட்டேன்”

”இல்லை குணாகிட்ட வித்தியாசம் தெரியுது”

”இல்லையே அவன் எப்பவும் போலதான் இருக்கான்”

”ஓ அப்படியா” என சொன்னவள் தன்னை கடந்துச் சென்ற தனது வகுப்பு மாணவியை அழைத்தாள்

”ஏய் இரு, ஒரு நிமிஷம் உன்கிட்ட ஒண்ணு கேட்கனும் சொல்றியா”

”என்னது”

”குணா ஏன் எப்ப பாரு உம்முன்னு இருக்கான், அவன் யார்கூடவும் பேச மாட்டேங்கறானே ஏன்?” என கேட்க அந்த பெண்ணோ அவளை வித்தியாசமாக பார்த்துவிட்டு

”குணா நல்லாதான் இருக்கான் எல்லார்கூடவும் சகஜமா பழகறான்”

“அப்படியா ஆனா நான் பார்க்கறப்ப அவன் யார்கூடவும் பேசி பழகின மாதிரி தெரியலையே”

”இல்லையே நீங்க இரண்டு பேரும் வராத ஒரு வாரத்தில அவன் எல்லார்கூடவும் நல்லா பேசி பழகினானே”

”அப்படியா சரி அவன் யார்கூட அதிகமா பேசறான்”

”வேற யாரு கண்மணிகூடதான்” என சொல்லும் போதே பெல் அடிக்க அந்த பெண்ணோ

”சரி சரி பெல் அடிச்சிட்டாங்க நான் போறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட கமலியோ கவினைப் பார்த்து

”இப்ப புரியுதா இங்க என்ன நடக்குதுன்னு, குணா கண்மணியோட பேசியிருக்கான், பழகியிருக்கான், அப்படின்னா என்ன அர்த்தம், அந்த லெட்டர் கிப்ட் எல்லாமே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு, குணா புத்திசாலி, நான்தான் செய்தேன்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டான், அவன் என்னை கண்டுபிடிச்சிட்டான்னு சிம்பாளிக்கா காட்டதான் இப்ப என்கிட்ட வந்து நலம் விசாரிச்சிட்டு போயிருக்கான்”

”அவங்களுக்கு உண்மை தெரியும்னா ஏன் சண்டை போட்டுக்கலை”

”போட்டிருப்பாங்க அதை நாம கவனிக்கலை போல”

”ஆமாம் நாம ஒரு வாரமா காலேஜ்க்கு வரலைல்ல அப்ப நிறைய விசயம் நடந்திருக்கு“

”அதேதான் ஆனா அவங்களுக்குள்ள வேற என்னவோ இருக்கு, காலேஜ் தாண்டி அவங்களை நாம கண்காணிக்கனும்“

”ஏன்“

”ஒருவேளை அவங்க வெளிய எங்கயாவது சந்திச்சி பேசி பழகறாங்களோ”

”இருக்கலாம் வாய்ப்பிருக்கு”

”சரி வா நேரமாயிடுச்சி டெஸ்ட் எழுதலாம்” என கமலி கவினை அழைத்துக் கொண்டு வகுப்புக்குள் சென்றாள்.

அங்கு குணாவும் கண்மணியும் நல்ல பிள்ளைகள் போல அமர்ந்திருந்தார்கள், ஆனால் இவர்கள் வரவும் இருவருமே இவர்களை ஒரு நொடி பார்த்துவிட்டு திரும்பினார்கள், அந்த பார்வையில் அத்தனை அழுத்தம் இருந்தது, அதைக்கண்ட கவினே பயந்துவிட்டான், அவனது உடல் நடுங்கிவிட்டது, கமலிக்கோ அச்சம் எழுந்தது, இருவரும் தங்களது இருப்பிடத்தில் அமர்ந்தார்கள்

வாத்தியார் வந்தார், கேள்வித்தாள் தந்தார். அனைவரும் பரிட்சை எழுதினார்கள், அதிலும் கமலியோ எதேச்சையாக குணா இருந்த பக்கம் திரும்பிப் பார்க்க அங்கு அவனோ கமலி எப்படியும் தன்னை பார்ப்பாள் என யூகித்து வைத்திருந்தவன் போல அவள் பார்க்கவும் அவன் அவளை உன்னிப்பாக பார்க்க, அதில் அவளுக்கு காய்ச்சலே அடித்தது.

அவள் சட்டென திரும்பி விட்டாள், அவளின் செயலை கவனித்த கவினோ திரும்பி குணாவை பார்க்க அவனோ கவினைப் பார்த்து இளப்பமாக சிரித்தான், அந்த சிரிப்பில் ஏதோ ஒரு செய்தி ஒளிந்திருந்தது, அதை புரிந்துக் கொள்ள முடியாமல் அச்சத்தில் திரும்பிக் கொண்டான்.

இவற்றைக்கண்ட கண்மணியோ குணாவை கண்களால் அதட்ட, அவனோ யாரும் பார்க்காத வண்ணம் முத்தம் தருவது போல உதட்டை சுருக்கி அவளுக்கு காற்றில் ஒரு முத்தத்தை அளிக்க அவனது செயலால் அவளுக்கு நாணமே எழுந்தது.

தனது வெட்கத்தை யாரும் கவனித்துவிடக்கூடாதென சட்டென பேப்பருக்குள் தன் தலையை நுழைத்துக் கொள்ள, அதைக்கண்ட குணாவிற்கு சிரிப்பே வந்தது, சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டே டெஸ்ட் எழுதினான், பரிட்சை சுலபமாக இருந்தது, பெல் அடிக்கும் வரை குணா காத்திருக்கவில்லை, அதற்குள் எழுதி முடித்து பேப்பரை கொண்டுச் சென்று வாத்தியாரிடம் தந்துவிட்டு வகுப்பை விட்டு வெளியேறினான்

அவனது செயைலக்கண்ட கண்மணியோ குழம்பி அவளும் எழுதி முடித்த பேப்பரை வாத்தியாரிடம் தந்துவிட்டு வெளியேறினாள், அதைக்கண்ட கமலியோ அதிர்ந்தாள், அவள் இன்னும் எழுத வேண்டும் இன்னும் நேரம் இருக்கிறது, அரை மணி நேரம் இருப்பது அறிந்தவள் குணாவை வேவு பார்க்க எண்ணி சட்டென எழுதியது வரை போதும் என பேப்பரை மடித்து வாத்தியாரிடம் தந்துவிட்டு கவினைப் பார்த்து முறைக்க அவனோ நொந்துப் போய் தனது பேப்பரை மடித்து வாத்தியாரிடம் தந்துவிட்டு வெளியே வந்தான்.

இருவரும் வகுப்பை விட்டு வெளியேறி கண்மணியையும் குணாவையும் தேட அவர்கள் கண்களில் சிக்கவில்லை, அவர்களை தேடிக் கொண்டு இவர்கள் காலேஜ் முழுக்க அலைய குணாவோ கண்மணியை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு உல்லாசமாக பயணம் செய்தான்.

குணாவோ அவசர அவசரமாக தனது பைக்கிடம் வர அதைக்கண்ட கண்மணியும் அவனிடம் வந்தாள்

”என்ன அவசரம் அதுக்குள்ள எழுதி முடிச்சாச்சா”

”எழுதியாச்சி கண்மணி வா”

”எங்க கூப்பிடற“

”ப்ச் வண்டியில ஏறு சும்மா ஒரு ரவுண்டு போகலாம்” என அழைக்க அவளுக்கும் ஆசைதான் ஆனாலும் தயக்கம் வந்து எட்டிப்பார்த்தது

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!