Skip to content
Post Views: 1,041
நேரம் செல்ல செல்ல கண்மணியோ வெறுப்புடனே படுத்து உறங்கி காலையில் எழுந்தாள், ஆசையாக குணாவை பார்க்கச் செல்ல அவனோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான், உறக்கத்தில் இருப்பவனின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள் கண்மணி, அதில் அதிர்ந்து எழுந்தவன் அவளை கோபமாக முறைத்து விட்டான் ஒரு அறை அவளின் கன்னத்தில், அதை அவளே எதிர்பார்க்கவில்லை
”குணா“
”நிறுத்து கண்மணி ஏன் இப்படி நடந்துக்கற இது தப்பு”
Advertisement
”குணா நான் உன்னோட கண்மணி“
”அதுக்கு எப்ப பாரு இதே நினைப்பில இருப்பியா, சே எனக்கு நீ செய்றதெல்லாமே அருவெறுப்பா இருக்கு”
”என்ன சொல்ற என்னை நீ லவ் பண்றல்ல“
Advertisement
”ஆமாம் இப்பவும் நான் உன்னை காதலிக்கிறேன், அதுக்காக காதலை நிரூபிக்கனும்னு எப்ப பாரு உன்னை கொஞ்சிக்கிட்டு கட்டிப்பிடிச்சிக்கிட்டு முத்தம் கொடுத்துக்கிட்டா இருக்க முடியும், வேற வேலையில்லை எனக்கு, காலேஜ்க்கு போகனும், படிக்கனும், வேலைக்கு போகனும், உன்னை வேற நல்லபடியா பார்த்துக்கனும், இவ்ளோ சுமையை தலையில வைச்சிருக்கேன், இதுல நீ என்னடான்னா என் நிலைமையை புரிஞ்சிக்காம வெறுப்பேத்தற மாதிரியான வேலைகளை செய்ற”
Advertisement
”சாரி குணா அது ஆசையா இருந்தது அதான் முத்தம் தந்தேன்”
”அது அதுக்கு நேரம் இல்லையா கண்மணி, நாம மனுஷங்க நாய்ங்க கிடையாது, கண்ட நேரத்தில கண்டதை செய்றதுக்கு“
”குணா வார்த்தையை அளந்து பேசு”
Advertisement
”நான் சொன்னதுல தப்பில்லை” என்றதும் அவளுக்கு வெறுப்பு வந்தது, தனது குணாவா இப்படி என நினைத்து கோபத்தில் சென்றுவிட குணாவோ அவளை நினைத்து வருத்தமே கொண்டான், பேசிவிட்டான், அதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை, இப்போது அவளின் கோபம் அவனை நரகமாக்கியது, அவளிடம் கண்களால் கெஞ்சினான், அதற்கும் அவள் மசியவில்லை
இந்த காட்சியைக்கண்ட கவினும் கமலியும் குழம்பினார்கள்
”குணாவுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, கண்மணியை போய் இப்படி அசிங்கப்படுத்தறான் மனுஷனா அவன்” என கவின் திட்ட கமலியோ
”அவன் சொல்றதும் சரிதானே, அவனே ஏகப்பட்ட பொறுப்புகளோட இருக்கான், இதுல இவள் வேற அவனை தொல்லை பண்ணா எத்தனை நாள்தான் அவன் பொறுத்துப் போவானாம், அவள்தான் இவன் மேல வந்து விழறாளே தவிர குணா டீசன்டா நடந்துக்கறான்”
”அவனுக்கும் ஆசையிருக்கு அதை வெளியக்காட்டலை அவ்ளோதான், உடனே அவனை தூக்கி வைச்சி பேசாத, கண்மணிக்கு சின்ன வயசு, சின்ன சின்ன விசயத்துக்கு ஆசைப்படறா, அதுல என்ன தப்பிருக்கு, இப்ப நீயே குணாவை காதலிச்சிருந்தாலும் இப்படித்தான் நடந்துக்கிட்டு இருப்ப”
”இருக்கலாம் அதுக்குன்னு ஒரு எல்லை இருக்கு அந்த எல்லையை தாண்ட மாட்டேன்”
“யாரு நீயா நம்பிட்டேன்”
”சரி நீயா இருந்தா என்ன செய்திருப்ப நீயும் கண்டிப்பா தப்பு செய்யதான் நினைப்ப”
”அது இயல்பானதுதானே”
”அப்புறம் எதுக்கு, எனக்கு மட்டும் அறிவுரை சொல்ற, வா வா ரெடியாகலாம் நேரமாகுது” என சொல்ல அவனும் ரெடியாக சென்றான்
அன்றிலிருந்து ரிவிஷன் டெஸ்ட் வரும் வரை குணா காரணமே இல்லாமல் கண்மணியை திட்டுவதும் கோபித்துக் கொள்வதுமாக இருக்க அதன் காரணமாகவே அவளால் படிக்க இயலாமல் எந்நேரமும் குணாவை நினைத்து கவலையில் இருந்தாள், அவளை கவலைப்பட வைத்து குணாவும் ஒரு பக்கம் வருத்தத்தில்தான் இருந்தான், ஆனாலும் அவளுக்கு பாடம் புகட்ட எண்ணியவன் வேலைக்கு செல்வதாக சொல்லி விடுமுறை அளித்துவிட்டு பார்க்கில் அமர்ந்து பாடம் படிக்கலானான், தான் செய்வது துரோகம் என தெரிந்தும் சில விசயங்கள் கண்மணி புரிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான்
அதன்படி ரிவிஷன் டெஸ்ட் வந்தது, கண்மணியால் ஒன்றுமே எழுத இயலவில்லை, கமலியும் கவினும் கூட ஏதோ படித்தவற்றை எழுதினார்கள், ஆனால் குணாவோ 100 மார்க் வாங்கும் அளவு அற்புதமாக எழுதினான், அவனது செயலைக்கண்டு கண்மணி குழம்பினாளே தவிர கோபித்துக் கொள்ளவில்லை.
ரிசல்ட் வந்தது, அதில் குணாதான் முதல் மதிப்பெண், கவினும் கமலியும் பார்டர் மார்க்கில் பாஸ் செய்திருக்க, கண்மணியோ அனைத்திலும் தோல்வியடைந்திருந்தாள், அதை நினைத்து அவள் கலங்கிக் கொண்டிருக்க குணாவோ மகிழ்ச்சியுடன் வந்தான்
”பார்த்தியா எல்லா பரிட்சையிலயும் நான்தான் பர்ஸ்ட்”
”வாழ்த்துக்கள்” என்றாள் மகிழ்ச்சியாக
”உன்னோடது என்னாச்சி“
”நான் சரியா படிக்கலை அதனால நான் பெயில் ஆயிட்டேன்”
”ஓ அப்படியா ப்ச் இதுக்குதான் படின்னு சொன்னேன் கேட்டாதானே“
”படிக்கனும்னு உட்காருவேன் ஆனா முடியலையே”
”நான் மட்டும் எப்படி படிச்சேன் பார்த்தியா“
”ம் வேலைக்கு விடுமுறை தந்து படிச்ச தெரியுமே”
”யார் சொன்னா உனக்கு இதை”
”கமலி”
”சரி என்னவோ இப்பவாவது புரிஞ்சிக்க கண்மணி படிப்புதான் முக்கியம்“
”தெரியுது”
”உனக்கு கஷ்டமாவே இல்லையா“
”இது வெறும் ரிவிஷன்தானே செமஸ்டர் இல்லையே“
”உனக்கு பாடம் புகட்டவே நான் எல்லாத்திலயும் நல்லபடியா எழுதி பாஸானேன், ஆனா நீ பெயில் ஆனா, இப்ப கூட உன் தப்பை உணராம இருந்தா எப்படி கண்மணி”
”குணா பார்த்துக்கலாம்“
”இல்லை நான் உன்னை காதலிச்சது தப்புன்னு படுது”
”குணா அப்படி சொல்லாத”
”பின்ன காதலால நல்லது நடக்கனுமே தவிர கெட்டது நடக்ககூடாது என்னால நீ உன் லட்சியத்தை இழக்க கூடாது“
”சரி நான் இனிமேல படிக்கறேன்”
”எப்படி படிப்ப, இப்படியா சே முடியாது, இனியும் நான் உன்கூட இருந்தா உன் வாழ்க்கை நாசமாயிடும்”
“உன்னால என்னை விட்டுட்டு போக முடியாது குணா, அப்படி ஒரு காரியத்தை நீ செய்யவும் மாட்ட, வீணா ரிஸ்க் எடுக்காத குணா“
”என்னை பத்தி நல்லா தெரிஞ்சி வைச்சிருக்கற ஆனா உன்னை பத்தி ஏன் யோசிக்காம இருக்க”
”முன்னவிட நான் இப்ப சந்தோஷமா இருக்கேன், எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு, என்னை இப்படியே இருக்க விடு குணா“
”இப்படியே இருந்தா உன் லட்சியத்தை கோட்டை விட்டுட்டுவ கண்மணி“
“என் வாழ்க்கையில நிறைய பிரச்சனைங்க, கஷ்டங்க, வெளிய சொல்லிக்க முடியாத அளவு வேதனையோட நான் நாட்களை கழிச்சேன், என் வேதனைக்கு மருந்தா ஏதாவது இருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைச்சிதான் படிப்பை லட்சியமா எடுத்துக்கிட்டேன், எப்பலாம் என் மனசு வருத்தமா இருக்கோ அப்பல்லாம் அந்த வருத்தத்தை மறைக்க படிக்க ஆரம்பிச்சேன்
ஆரம்பத்தில கஷ்டமா இருந்தது, ஆனா போக போக அதுவே பழகிடுச்சி, அப்ப படிச்சி படிச்சி மேலுக்கு வந்தேன், உன்னை பார்க்காம இருந்திருந்தா என்ன செய்திருப்பேன், என் தனிமை துயரை போக்க, என் மன வலியை தீர்க்க, என் வருத்தத்தை விரட்டன்னு படிக்க ஆரம்பிச்சிருப்பேன்
படிப்பு மேல எனக்கு இருந்தது ஆசையில்லை, அந்த படிப்பு என்னை அடிமையாக்கி வைச்சிருந்தது, இப்பதான் அந்த அடிமை வாழ்க்கையில இருந்து மீண்டு எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சேன் அதுவும் உன்னால
கொஞ்சம் யோசிச்சிப் பாரு, முன்ன இருந்த கண்மணிக்கும் இப்ப இருக்கற கண்மணிக்கும் உனக்கே வித்தியாசம் தெரியலை, இப்ப நான் எதை நினைச்சும் கவலைப்படலை, எதுக்கும் பயப்படலை, வருத்தப்படலை, வாழ்க்கையை வெறுமையா நினைக்கலை, சந்தோஷமா இருக்கேன்
முன்ன நான் வாழ்ந்த வாழ்க்கையை நான் வெறுத்தேன், இந்த உலகத்தையே நான் வெறுத்தேன், ஆனா இப்ப என் வாழ்க்கையை நான் விரும்பறேன், இந்த உலகத்தை ரசிக்கிறேன், எல்லாரும் சந்தோஷமா இருக்கறதை பார்க்கறப்ப எனக்கு நிம்மதியா இருக்கு, இந்த நிம்மதி எனக்கு வேணும் குணா”
”அப்போ உன் லட்சியம்”
”அந்த லட்சியம் எதனால வந்தது என்னோட வருத்தத்தை போக்க வந்ததுதானே, இப்ப நான் வருத்தமாவே இல்லையே, அப்புறம் அந்த லட்சியம் இருந்தா என்ன போனா என்ன”
”கண்மணி நீ படிக்கனும், பெரியாளாகனும், உன் குடும்பத்தை பார்த்துக்கனும், எல்லார் முன்னாடியும் வாழ்ந்து காட்டனும்”
”கண்டிப்பா இதெல்லாம் நடக்கும் நாம ரெண்டு பேரும் ஒண்ணா சந்தோஷமா இருந்தா”
”புரியலை”
”புரியும் யோசி” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட குணாவோ குழம்பினான்.
அவளின் பேச்சை ஒட்டுக் கேட்ட கவினும் கமலியும் கூட குழம்பினார்கள்.
2 மாதங்கள் கழித்து…
ரிஜிஸ்டரர் ஆபிஸ் வளாகத்தில் கமலியும் குணாவும் வெகு நேரமாக காத்திருந்தார்கள், கமலி அன்று பார்த்து பட்டுப்புடவையில் வந்த காரணத்தால் அதுவும் பழக்கமில்லாத உடை என்பதால் அடிக்கடி அதை சரிசெய்தபடி இருக்க அதைக்கண்ட குணாவோ
”ஏய் என்ன செய்ற நீ யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க ஒழுங்கா இரு”
”சாரி குணா, இதுவரைக்கும் புடவையே கட்டினதில்லையா, அதான் இப்ப ரொம்ப கஷ்டமாயிருக்கு“
”கல்யாணத்தன்னிக்கு கூட இப்படித்தான் நடந்துக்குவியா, ஒழுங்கா இரு ஆமா எங்க உன் அண்ணன் வருவானா மாட்டானா”
”வருவான் பொறு”
”2 நிமிஷம் வெயிட் பண்ணுவேன் அவன் வரலைன்னு வையேன் நடக்கறதே வேற”
”அய்யோ குணா அப்படி எதுவும் செய்யாத, வந்துடுவான் ப்ளீஸ் அமைதியாயிரு”
”அவனுக்கு போன் போடு” என சொல்லவும் கமலியும் கவினுக்கு போன் பண்ண அது சுவிட்ச் ஆப் என வரவும் அவளோ திடுக்கிட்டாள்
”அடப்பாவி சண்டாளா எங்கடா போன” என புலம்ப குணாவோ அவளை வெறுப்பாக பார்த்தான்
”இல்லை வந்துக்கிட்டே இருக்கான் போல, லைன் கிடைக்கலை” என சொல்லவும் குணாவே அவளது போனை பறித்து அதில் கவினுக்கு போன் செய்துப் பார்த்தான், அது மறுபடியும் சுவிட்ச் ஆப் என வரவே அவளை முறைத்தான்
”சாரி குணா” என சொல்லவும் அவனோ அந்த போனை தரையில் விட்டெறிந்து உடைத்துவிட்டு அவளின் கையை பலவந்தமாக பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
”குணா வேணாம் குணா அவசரப்படாத பொறுமையா இரு”
”பேசாம வர்றியா இல்லையா வா” என அவளை இழுத்துக் கொண்டுச் சென்றான். ரிஜிஸ்டர் ஆபிசே அவர்களை வேடிக்கை பார்த்தது, அவனோ அதிகாரி முன் நின்றான்
”என்னப்பா இப்படி வந்து நிக்கற”
”நேரமாகுது சார் சீக்கிரமா முடிங்க”
”சாட்சி கையெழுத்து போட ஆள் வேணும்னு சொன்னேனே வந்தாங்களா இல்லையா”
”வந்துக்கிட்டே இருக்காங்க சார் அவங்க வர்றதுக்குள்ள முகூர்த்த நேரம் முடிஞ்சிடும், நான் தாலி கட்டிடறேன், அப்புறம் அவளோட அண்ணன் வந்த பின்னாடி கையெழுத்து போடுவான் சார்” என சொல்ல அவரோ நொந்துப் போனார்
”என்னப்பா நீ இப்படி பேசற, சரி சரி முகூர்த்த நேரம் வேற முடியப் போகுது, சரி தாலியை கட்டு அப்புறம் பார்த்துக்கலாம்” என சொல்ல குணா முகம் மலர்ந்து கமலியை பார்க்க அவளோ பேய் அறைந்தது போல பார்த்து கைகூப்பி கெஞ்சினாள்
”குணா அவசரப்படாத, அவன் நிச்சயம் வந்துடுவான் கொஞ்சம் வெயிட் பண்ணு”
”இதுக்குதானே நீ ஆசைப்பட்ட, நினைச்சது நடக்கறப்ப ஏன் பயப்படற, அவன் வரும் போது வரட்டும் நீ வா” என அவன் கையில் பூமாலையுடன் நின்றான், அவளோ பதறினாள். வாசலையே பார்த்தாள்
”அங்க என்ன பார்வை யாரும் வரலை” என சொல்லியபடியே தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தாலியை எடுத்தான், அதைக்கண்டதும் அரண்டாள் கமலி
”குணா ஆத்திரத்தில எடுக்கற எந்த முடிவும் சரியா இருக்காது, பொறுமையா இரு கண்டிப்பா அவன் வருவான்”
”எனக்கு நம்பிக்கையில்லை போதும் போதும்னு அவனை பொறுத்து பார்த்து விட்டது தப்பா போச்சி, இனியும் என்னால காத்திருக்க முடியாது, நீ வா கழுத்தை நீட்டு” என அதட்ட அவளோ விலகி நின்றாள்
”கண்மணி பாவம்”
”அவளை பத்தி பேசாத வாங்கறேன்ல வா”
”அய்யோ விசயம் தெரியாம கோபப்படாத குணா, எல்லாத்துக்கும் காரணம் கவின்தான், அவன் கண்மணியோட அப்பா அம்மாவை கிட்நாப் பண்ணி வைச்சி கண்மணியை மிரட்டி கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிட்டான், இதுல கண்மணி மேல தப்பில்லை”
”ஓஹோ அப்படியா, இதே போல ஒரு முறை நடந்தது, அப்பவும் அவள் என்னை பத்தி யோசிக்கவேயில்லை, இப்பவும் அதேதான் நடக்குது, ஏன் என்கிட்ட பிரச்சனை என்னன்னு சொல்லியிருந்தா நான் சால்வ் பண்ணியிருப்பேன்ல, அதென்ன எப்ப பாரு அவளோட குடும்பத்தில ஒரு பிரச்சனை வந்தா என்னைத்தான் தியாகம் செய்றா, அவள் கண்ணுக்கு நான் எப்படி தெரியறேன், என் காதல் பொய்யா எப்படி அதை தூக்கி எறியலாம்”
”சே சே இருக்காது குணா, கண்மணி அப்படியில்லை கவின் மிரட்டியிருப்பான், நீயே அந்த வீடியோவை பார்த்தல்ல, கத்தி முனையில அவளோட அப்பா அம்மாவை மிரட்ட ஆளுங்களை வைச்சிருக்கான், அதெல்லாம் பார்த்து அவள் இந்த முடிவு எடுத்திருக்கா, அவ்ளோதானே தவிர நிச்சயமா அவள் உன்னை தூக்கி எறிஞ்சிருக்க மாட்டா“
”இல்லை கமலி, நீ என்ன சொன்னாலும் சரி, என்னால ஒத்துக்க முடியாது, திரும்ப திரும்ப அவளுக்காக என் வாழ்க்கையை இழக்க முடியாது, அவள் வந்தபின்னாடி என் வாழ்க்கையில நிறைய மாற்றங்களை நான் பார்த்துட்டேன், அவளுக்காகவே நான் மாறினான், பொறுப்பானவனா மாறி அவளை நல்லபடியா பார்த்துக்கிட்டேன், ஆனாலும் அவள் என்னை மதிக்கலை, என்னை நம்பலை, எனக்கு அவள் வேணாம்”
”அவள் உன்னை நம்பாம வேற யாரை நம்புவா, அவள் இடத்தில யாரா இருந்திருந்தாலும் இந்த முடிவுதான் எடுத்திருப்பாங்க“
”ஓஹோ அப்படியா சரி உன் அப்பா அம்மாவை யாராவது கடத்தி வைச்சி உன்னை மிரட்டினா நீ என்னை விட்டுடுவியா சொல்லு” என கேட்க கமலிக்கு பேச்சே வரவில்லை.
”சொல்லு கமலி“
”கவின் இருக்கான்ல அவன் அப்பா அம்மாவை பார்த்துக்குவான், அதுக்காக உன்னை நான் எப்படி விட்டுடுவேன் சொல்லு”
”ஆஆ பாரு நீ எப்படியிருக்கன்னு, உன்னை போல காதலிக்க யாராலயும் முடியாது”
”அய்யோ இல்லை, ப்ச் உன்னை நான் காதலிச்சது உண்மைதான் ஆனா இப்ப உன்னை என் காதலனா பார்க்கலை, உன்னை பார்க்கறப்ப நீ அந்த கண்மணியோட காதலனாதான் தெரியற, அவளோட காதலை நான் பறிக்க விரும்பலை, கண்டிப்பா கவின் நினைச்சது நடக்காது, கண்மணி வந்துடுவா, கொஞ்சம் பொறுமையா இரு”
”முடியாது கமலி இந்நேரம் அங்க கல்யாணமே முடிஞ்சிருக்கும்”
”சே சே இருக்காது இருக்காது”
”போன முறையே கவின் தேவையில்லாத கேள்வியை கேட்டதால கல்யாணம் நின்னது, ஆனா இப்ப அவன் அதுபோல செய்ய மாட்டான், இந்நேரம் அவன் கண்மணியை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷத்தில பூரிச்சிப் போயிருப்பான்” என கடுகடுவென சொல்லிய நேரம் மறுபக்கம் கோயில் மண்டபத்தில் கவினோ கண்மணியிடம் கண்கள் கலங்கி அழுதபடியே கெஞ்சிக் கொண்டிருந்தான்
”கண்மணி அழாத, கண்மணி நீ அழுதா எனக்கும் அழுகை வருது, ப்ளீஸ் அழாத” என மணமகன் கோலத்தில் கழுத்தில் மாலை கையில் தாலியை வைத்துக் கொண்டு கெஞ்ச கண்மணியோ அவன் சொல்ல சொல்ல ஓவென ஒப்பாரி வைத்ததுதான் மிச்சம்”
”நீ இப்படி அழறதுக்காகவா நான் உன்னை கல்யாணம் செய்துக்க நினைச்சேன், உன் கண்ல ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாம நான் பார்த்துக்கலாம்னு இருக்கேன், நீ என்னடான்னா வந்ததில இருந்து அழுதுக்கிட்டே இருக்கியே, இதப்பாரு அழாத, வேணும்னா உன் அப்பா அம்மாவை நான் விட்டுடறேன் சரியா” என சொல்லியும் அவள் அழுகையை நிப்பாட்டவில்லை.
கண்கள் சிவந்தேவிட்டது, முகமோ உப்பிவிட்டது, அழுது அழுது அவளுக்கு மயக்கமே வந்துவிட அவனோ அதிர்ந்தான்.
அவனது நல்ல நேரம் கோயிலில் மருத்துவர் ஒருவர் வந்திருந்தார், அவரை வைத்து அவளுக்கு வைத்தியம் பார்த்தான், அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என சொன்னபின்புதான் கவினுக்கு நிம்மதியே வந்தது, அவள் மயக்கம் கலைந்து எப்போது எழுவாள் என காத்திருந்தான், அவளும் அரை மணி நேரம் கழித்து கண்கள் திறந்துப் பார்த்தாள், எதுவும் மாறவில்லை, அதே கல்யாண செட்டப் இருக்கவே, மீண்டும் ஒரே அழுகை அவனோ நொந்தேப் போனான்
”அம்மா தாயே உன் கால்ல வேணா விழறேன் அழாத ப்ளீஸ்” என கெஞ்ச அவளோ
”எதுக்கு கெஞ்சற என்னை அழவைச்சி, என் வாழ்க்கையை நாசமாக்கி, அதைப்பார்த்து சந்தோஷப்படனும்னுதானே நீ இவ்வளவும் செய்ற, அப்புறம் ஏன் தயங்கற, நீ நினைச்சதை செய்“ என சொல்லி கேவி கேவி அழ அவனோ
”இப்படி நீ அழுதுக்கிட்டு இருந்தா எனக்கு மனசே வரலை, நான் என்ன வில்லனா உன்னை கஷ்டப்படுத்தி பார்க்கறதுக்கு, நானும் மனுஷன்தானே, குணாவுக்கு முன்னாடி உன்னை நான்தானே விரும்பினேன், நீ அவன்கூட இருந்தா சந்தோஷமா இருக்க மாட்ட, நான்தான் உனக்கு சரியா ஆளு, உன்னை உள்ளங்கையில வைச்சி தாங்குவேன், உன்னை மகாராணி போல வாழவைப்பேன்”
”யாருக்கு வேணும் நீ தர்ற மகாராணி வாழ்க்கை, குடிசையில வாழ்ந்தா கூட மனசுக்கு பிடிச்சவன்கூட வாழனும், அப்பதான் அந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாகும், உன்னை நான் கல்யாணம் செய்தாகூட எனக்கு துளிகூட சந்தோஷம் வராது, ஒரு காதலை கொன்னுட்டு அதுக்கு மேலதான் இந்த கல்யாணம் நடக்குது, அப்படிப்பார்த்தா நான் ஏற்கனவே செத்துட்டேன், செத்த பிணத்துக்கு தாலி கட்டி நீ குடும்பம் நடத்த ஆசைப்படற, தாராளமா செய் ஆனா ஒண்ணு நீ என்கிட்ட எதிர்பார்க்கற எதுவும் நிச்சயம் உனக்கு கிடைக்காது” என்றாள் திடமாக, அதைக்கேட்டு தலையில் கையை வைத்துக் கொண்டான் கவின்.
கண்மணியின் பெற்றோர் கூட கவினிடம் கைகூப்பி கெஞ்சினார்கள்
”தம்பி என் பொண்ணை விட்டுடுப்பா, அவள் சின்ன வயசில இருந்து சந்தோஷத்தை பார்க்காதவ, ஏழ்மையான வாழ்க்கை, கஷ்டம், நஷ்டம், பிரச்சனை அது இதுன்னு அவள் நிறைய பார்த்துட்டா, அந்த வலி வேதனையில இருந்து அவளை காப்பாத்தினது குணாவோட காதல்தான்
அவன் இல்லைன்னா என் பொண்ணு இல்லை, அவன்தான் அவளோட உலகமே, அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கறதுதான் நல்லது, அதை விட்டுட்டு இப்படி கட்டாயப்படுத்தி நீ இவளை கல்யாணம் செய்ய நினைக்கறது ரொம்ப தப்பு, கல்யாணம் ஆன பின்னாடி பொண்ணுங்க மாறிடுவாங்கன்னு நீ நினைக்கலாம்
ஆனா கண்மணி மாற மாட்டா, அவள் குணாவை புருஷனாவே பார்க்கறா, அவள் கழுத்தில குணா கட்டின தாலியிருக்கற வரைக்கும் உன்னால அவளை மனைவியா சொல்லிக்க முடியாது தம்பி, அவளை விட்டுடுப்பா” என சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்த கவினோ கண்மணியின் கழுத்தைப் பார்த்தான், அங்கு தாலியிருக்கவே வெறுப்புற்றான்
”எல்லாத்துக்கும் காரணம் இதுதான், இப்பவே இதை அறுத்துடறேன்” என சொல்லிவிட்டு அவளது கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயல அவளோ தடுக்க ஒரே கலவரமாக இருக்க, மறுபக்கம் ரிஜிஸ்டர் ஆபிசில் குணா கமலியின் கழுத்தில் தாலி கட்ட வர அவளோ அந்த தாலியை கட்டுக் கொள்ள விரும்பாமல் அதை பிடித்துக் கொண்டு அலறினாள், அதைக்கண்ட அனைவருமே அதிர்ந்தார்கள்.
”குணா வேணாம் இப்படி செய்யாத இது தப்பு“
”ஏன் அப்படி சொல்ற, நான் உன்னை கல்யாணம் செய்துக்க கூடாதா, இதை நீ ஆசைப்படலையா, நீ என்னை காதலிச்சியே மறந்துட்டியா, அன்னிக்கு உன் காதலை நான் வெறுத்தேன் ஆனா இப்பதான் எனக்கு உன்னோட காதல் புரிஞ்சது”
”இல்லை இல்லை அப்படியில்லை, நான் உன்னை காதலிச்சேன் ஆனா இப்ப இல்லை”
”பரவாயில்லை வா கல்யாணம் செய்துக்கலாம்”
”அவசரப்படாத குணா நான் கவின்கிட்ட பேசறேன்” என அவள் கத்தியும் பிரயோசனம் இல்லாமல் வலுக்கட்டாயமாக அவளது கழுத்தில் தாலியை வைக்க அவளோ ஏதோ ஆசிட் தன் மீது பட்டது போல துள்ளிக் குதித்து குணாவை தள்ளிவிட்டு
”அய்யோ என்னை விட்டுடு எனக்கு உன்னை பிடிக்கலை” என கதறினாள். அதைக்கேட்ட குணாவோ அவளிடம்
”இப்படித்தானே கண்மணியும் கதறியிருப்பா” என அவன் கண்கள் கலங்க பேசவும் கமலி புரிந்துக் கொண்டாள்
…. தொடரும்
error: Content is protected !!