Skip to content
Post Views: 255
கண்மணி குணாவை கவனிக்கவேயில்லை, கூட வந்தவர்களுடன் கதை கதையாக பேசி சிரித்துக் கொண்டே நடந்தாள், அவன் இருப்பதை அறியாமல் அவனை கடந்து அவள் சென்று போது வீசிய அவளின் மேனி வாசம் அவனை ஈர்த்தது, கடவுளை தரிசிக்க மறந்து அவளின் பின்னால் சென்றான்.
அவள் சூடியிருந்த மல்லிகைப்பூவின் மணம் அவனை இழுத்தது, அவளின் கால் கொலுசு சிணுங்கிக் கொண்டிருக்க அதில் அவனின் மனம் கூட சிணுங்கியது, பாவாடை தாவணியில் அசைந்து அசைந்து அவள் நடக்கும் நடையழகில் தடுமாறியவன் மனம் இன்னும் தெளிவாகவில்லை, அவளோ வந்தவர்களுடன் அங்கு அனைத்தையும் சுற்றி பார்த்து வேடிக்கை பார்த்தபடியே ஓரிடமாக அமர்ந்தாள்.
அவள் அமரவும் குணாவோ அவளைப் பார்த்தபடியே நேராக ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டான், எவ்வளவு நேரம் அவளை பார்த்தாலும் அவனுக்கு சலிப்பே வரவில்லை, பார்த்தான், பார்த்தான், பார்த்தபடியே இருந்தான், இதில் அவனுக்கு அவளைப் பார்க்கும் போது அந்த கடிதத்தில் இருந்த வரிகள் தன்னால் நினைவுக்கு வந்தது, குறிப்பாக அதில் இருந்த முத்தம் அவனை திகைக்க வைத்தது, அதை நினைக்கும் போது அவனின் கண்கள் தானாக அவளின் இதழை பார்த்து ரசித்தது.
அவனின் இதயம் ரயில் தண்டவாளத்தில் செல்வது போல தடதடவென அடித்துக் கொண்டது, அவளை பார்க்க பார்க்க அவனுக்குள் ஏதோ புது உணர்வு வருவதை புரிந்துக் கொள்ள முடியாமல் தவித்தான், அவள் தன்னை பார்க்க வேண்டும் என உள்ளுக்குள் ஏங்கினான், அவனின் ஏக்கம் தவிப்பு அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
Advertisement
அந்நேரம் கண்மணியும் அவளுடன் வந்தவர்களும் எழுந்து அந்த கோயிலை வலம் வர கைகூப்பியபடியே மனதில் ஏதோ வேண்டிக் கொண்டு நடக்க கூடவே இவனும் சென்றான், கண்மணிக்கு பின்னால் ஒரு பக்தன் போலவே கைகூப்பிக் கொண்டு சிறிதும் கடவுள் பக்தியின்றி கண்மணியின் மீதான ஒரு விதமான உணர்வால் ஈர்க்கப்பட்டு நடந்தான்.
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி
சாம்பவி சங்கரி சயமளை ஜாதினச்சுவாயனி
மாலினி வாரக சூலினி மாதங்கி என்று
Advertisement
ஆய கியாதி உடையாள் சரணம்…
சரணம்… சரணம்… சரணம்… சரணம்… சரணம்…
Advertisement
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
ஒரு கட்டத்தில் அவளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு, யாரோ நெருக்கமானவர் தன்னையே பார்ப்பது போல உணர்ந்து சட்டென திரும்பி பார்க்க அங்கு குணா இருக்கவும் அவளுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓட அழகாக சிரித்து வைத்தாள்
தனக்காக ஒருத்தி தன்னை கண்டு சிரிக்கவும் குணாவிற்கு வெட்கம் வர அவன் நாணத்துடன் தலையை தாழ்த்திக் கொள்ள, அவளோ அவனிடம் பேச ஆவல் கொண்டு சட்டென அவனிடம் அவசர அவசரமாக வர அதைக்கண்டு அவனுக்கு பதட்டம் அதிகமாகி பயம் வந்து சட்டென அங்கிருந்து வேறு பக்கம் சென்றான்
Advertisement
அவன் சென்றதைக்கண்டு குழம்பியவள் விடாமல் அவனை தேடிச் சென்றாள், அவனோ அவளிடம் இருந்து தப்பிக்க அங்கு இங்கு என அலைந்து கடைசியில் யாரும் இல்லாத இடத்தில் ஒரு தூணின் பின்னால் மறைந்துக் கொண்டு எக்கி எக்கி அவள் வருகிறாளா என பார்க்கலானான்.
அவளோ வேறு பக்கமாக அவனை பார்த்துவிட்டு அவன் ஒளிந்திருப்பதைக்கண்டு அவளுக்கு சிரிப்பே வந்தது, பூனை போல மெதுவாக நடந்து வந்து அவனின் பின்புறத்தில் நின்றவள்
”கண்டுபிடிச்சிட்டேன்” என கத்த அதில் அவன் அதிர்ந்து பதறி எழுந்த வேகத்தில் அவளின் மீது மோத அதில் அவள் தடுமாறி அவன் மீது சாய அவளை கீழே விடாமல் தாங்கியவன் சட்டென தன்னுடன் இறுக்கி நிறுத்திக் கொண்டு அவளது கண்களையே பார்த்தான், அவளும் சட்டென நடந்த நிகழ்வில் பயந்திருந்தாள், அவனின் அணைப்பு அவளை அமைதியாக்கியது, இருவரும் அதே நிலைமையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஒரு இனம்புரியாத உணர்வில் மிதந்துக் கொண்டிருந்தார்கள்.
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இருகி
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இருகி
இளகி முத்து மடல்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலன்கொண்ட நாயகி
நல்லாறவில் பன்கொண்ட அல்குல் பணிமொழி–வேதப் பரிபுறையே!
வேதப் பரிபுறையே!
பார்த்த விழி பார்த்தபடி பூது இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
”கண்மணி கண்மணி” என யாரோ அழைப்பது கேட்டதும் கண்மணி உஷாராகி அவனை விட்டு விலகி நின்றாள், அவனோ பதட்டமாகி சட்டென அவ்விடம் விட்டு விலகி விறுவிறுவென நடந்தான், அவன் சென்றதும் அவளை தேடி வந்த பெண்கள் கண்மணியை கையோடு அழைத்துச் சென்றார்கள்.
அவளோ அவனது வருகை, அவனின் தீண்டல் அதையே நினைத்துக் கொண்டு தனக்குத்தானே வெட்கத்தில் சிரித்தபடியே சென்றாள், ஹாஸ்டல் வந்தும் அவளின் மதி மயங்கியிருந்தது, காதல் மயக்கத்தில் அவள் தனது படுக்கையில் படுத்து உருண்டுக் கொண்டிருந்தாள்.
மறுபக்கம் குணாவோ அடித்துபிடித்து தனது லாட்ஜ் அறைக்கு வந்து மூச்சிறைக்க படுக்கையில் படுத்து தன்னை இளப்பாரிக் கொண்டிருந்தான், அவனுக்கு ஒரே படப்படப்பாக இருந்தது, என்ன நடந்தது என ஒரு முறை நினைத்துப் பார்த்தான், அவனது பதட்டம் விலகி மனம் எங்கும் மகிழ்ச்சியில் தாண்டவமாடியது
”கண்மணி” என அவன் இதழ்விரித்து காதலுடன் அவளது பெயரை அழைத்தான்
அவன் கண்களில் தானாக கண்ணீர் வர அதை தொட்டுப்பார்த்து வியந்தான், ஆனந்தக்கண்ணீரில் நனைந்தான், அவனுக்குள் காதல் வந்துவிட்டது என்பதை அவன் உணர்ந்ததும் அந்த உலகையே மறந்துப் போய் கண்மணியின் நினைவில் மிதந்தான்
மறுநாள் காலையில் கல்லூரி விடுமுறை என்று தெரியும் கவினை விரைவாக கமலி அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள்
”எதுக்கு இவ்ளோ சீக்கிரமா கூட்டிட்டு வந்துட்ட இன்னிக்கு காலேஜ் லீவு“
”தெரியும் யாரும் வர்றதுக்குள்ள ஒரு முக்கியமான விசயத்தை செய்யனும்”
”என்ன விசயம்“
”குணாவும் கண்மணியும் பாட்டு பாடி அசத்தினாங்கள்ல”
”ஆமாம் ரொம்ப நல்லா பாடினாங்க அதுலயும் கண்மணியோட இனிமையான குரல் இருக்கே சூப்பரா இருந்தது”
”ரொம்ப முக்கியம்”
”சாரி கோச்சிக்காத”
”சரி சரி அவங்க பாடினதை வைச்சி நாம இப்ப ஒரு விசயம் செய்யப் போறோம்“
”என்ன விசயம்“
”அவங்க காதலிக்கறாங்கன்னு காலேஜ் முழுக்க பரப்ப போறோம்“
”எப்படி“
”காலேஜ் சுவத்தில பாத்ரூம் சுவத்துல எல்லாம் குணா லவ் கண்மணின்னு எழுதி வைச்சிடலாம், அதை பார்க்கறவங்க கண்டிப்பா அவங்களை கலாய்ப்பாங்க“
”சரியா போச்சி அப்படி நடந்தா இரண்டு பேருக்கும் கோபம் வந்துடும் அவங்க இன்னும் காதலிக்கவேயில்லையே, இப்ப இப்படி எழுதினா பெரிய பிரச்சனையாயிடும்”
”அதெல்லாம் ஒண்ணும் வராது, அவங்களுக்குள்ள காதல் வராதுன்னு தெரிஞ்சிப் போச்சி, அதுக்காக அப்படியே விட முடியாது இப்படி ஏதாவது செய்தா அவங்களுக்குள்ள ஒரு கோபமாவது வரும், அந்த கோபத்தில ஒருத்தரை ஒருத்தர் திட்டி அவமானப்படுத்திக்குவாங்க அதுதான் முக்கியம்”
”அதுசரி உன் விசயத்தில நீ தெளிவா இருக்க போல சரி இப்ப நான் என்ன செய்யனும்”
”எல்லாரும் வர்றதுக்குள்ள நான் கொண்டு வந்திருக்கற கிளிட்டர்ஸ் பெயின்ட் வைச்சி குணா லவ்ஸ் கண்மணின்னு எழுதனும் இந்தா வாங்கிக்க” என அவனிடம் கலர் பெயின்டுக்கள் தர அவனும் வாங்கிக் கொண்டான்
”ஆமா வெறும் பெயர்கள் மட்டும் போதுமா இந்த இதய வடிவம்லாம் வேணாமா”
“கண்டிப்பா வேணும் பெரிசா இதயம் வரைஞ்சி அதுல அவங்க பெயரை எழுதிடு மறக்காம அம்பு விடு”
”ம் என் காதலுக்கு கூட நான் இதையெல்லாம் செய்யலை”
”ஹலோ உன்னோடது காதலே இல்லை, ரொம்ப ஃபீல் பண்ணாம கிளம்பு நேரமாகுது” என அதட்டிவிட்டு அவள் வேறு பக்கம் செல்ல கவினும் அவள் சொல்படியே செய்தான்.
மறுநாள் காலேஜ்க்குள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் வர தொடங்கினார்கள், அவர்களின் பார்வையில் பளிச்சென இதய வடிவில் குணா லவ்ஸ் கண்மணி, கண்மணி லவ்ஸ் குணா என எழுதப்பட்ட வாசகங்கள் இருக்கவே அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் உண்டானது
இது உண்மையா பொய்யா என்று கூட அவர்கள் யோசிக்காமல் கலகலவென சிரித்தார்கள், வாத்தியார்களோ இவற்றைக் கண்டு கோபம் கொண்டு மாணவர்களை திட்ட அவர்களோ நான் இல்லை நீயில்லை என பின் சென்றார்கள், இத்தனையும் செய்த கவினும் கமலியும் குணா கண்மணியின் வரவிற்காக வழிமீது விழிவைத்து காத்திருந்தார்கள்.
முதலில் குணா தனது பைக்கில் வந்து சேர்ந்தான், அவன் கண்ணிலும் அந்த வாசகங்கள் பட்டது, அதைக்கண்டு அவன் சிறிதும் கோபம் கொள்ளவில்லை மெதுவாக வண்டியை விட்டு இறங்கி தனது வகுப்பு நோக்கி நடக்கலானான், அவனைக்கண்டு சில மாணவ மாணவிகள் கேலி செய்து சிரிப்பது கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை, எதையும் கண்டுக் கொள்ளாமல் அவன் செல்ல அவர்களுக்கு ஏமாற்றமாகிப் போனது
அடுத்து கண்மணி வந்தாள், அவளிடமும் இதே கேலியும் கிண்டலும் செய்தார்கள் அனைவரும், அவளைப் பார்த்து சிரிப்பதை தூரத்தில் இருந்து பார்த்த குணாவிற்கு உடனே கோபம் வந்தது, தன்னை கேலி செய்த போது வராத கோபம் அவளுக்கு என வரும் போது கோபத்தில் பொங்கி எழுந்து அவளை கேலி செய்தவர்களை அடிக்க வந்தான்
அவனின் வேகத்தை எதேச்சையாக கண்ட கண்மணியோ கண்களாலேயே சைகை செய்து அவனை தடுத்தாள், அந்த சைகையைக் கண்டதும் குணா திடுக்கிட்டு நின்றுவிட்டான், ஆனாலும் அவன் கோபம் அதிகமாகிக் கொண்டே போனது, அதைக்கண்ட கண்மணிக்கு சோர்வு எழ தன்னை கேலி செய்தவர்களை ஆர அமர பார்த்தாள், சின்ன கோபமும் வரவில்லை, அவர்களும் முடிந்தவரை அவளை கேலி செய்து ஏமாந்து அமைதியாக நிற்க அவளோ
”முடிஞ்சிடுச்சா இன்னும் இருக்கா, வெட்கமாயில்லை, உங்க கூட நானும் இங்க படிக்கறேன்னு நினைக்கறப்ப எனக்கு கேவலமா இருக்கு“
”இல்லை அது அங்க எழுதினது”
”அது உண்மைன்னு உங்களுக்கு உறுதியா தெரியுமா, அந்த இடத்தில என் பெயருக்கு பதிலா உன் தங்கச்சி பெயர் எழுதியிருந்தா இப்படித்தான் கேலி செய்துக்கிட்டு இருப்பியா, எவனோ ஒருத்தன் பொழுது போகாம இப்படியொரு வேலை செய்துட்டு போயிருக்கான், அவன்தான் கிறுக்கன்னு பார்த்தா அவன் எழுதின முட்டாள்தனத்தை படிச்சி உண்மைன்னு நினைச்ச நீங்களும் என் கண்ணுக்கு பைத்தியங்களாதான் தெரியறீங்க, பைத்தியங்களோட எனக்கென்ன பேச்சு” என அவள் கடுமையாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அவளை கேலி செய்த அத்தனை மாணவர்களுக்கும் அவமானம் ஏற்பட்டு அவரவர்கள் வெறுத்துப் போய் சென்றார்கள்.
நடப்பதைக்கண்ட குணாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது, ஆத்திரம் தலைக்கேற அவளை கோபமாக முறைக்க அவளோ
”இவன் ஏன் முறைக்கறான் அதான் பிரச்சனையை சரிபண்ணிட்டோமே ஏன் இப்படி கோபமா இருக்கான்னு தெரியலையே” என நினைத்தபடியே அவனை இயல்பாக கடந்துச் சென்றாள் அவள் சென்ற பின் அவளின் பின்னாலேயே சென்றான்.
வகுப்பிற்குள் அவள் நுழைய பின்னாலேயே குணா வரவும் அங்கு இருந்த சில மாணவ மாணவிகள் அவர்களுக்கு ஆதரவாக பேச அவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை, அவளும் அனைத்தையும் இயல்பாக எடுத்துக் கொண்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
பெல் அடிக்கவும் வாத்தியார் வந்தார், அவருக்கு மாணவர்கள் மரியாதை தந்து அமர்ந்தார்கள் அவரோ உடனே பாடம் எடுக்காமல்
”கண்மணி குணா இரண்டு பேரும் நடந்ததை நினைச்சி வருத்தப்பட வேணாம், எவனோ ஒரு முட்டாள் செய்த வேலையிது, இதை நினைச்சி நீங்க ரெண்டு பேரும் சண்டை போட வேணாம், உங்களை மேடையில பாட சொன்னது நான்தான், உங்களுக்கு சேர்ந்து பாட பிடிக்கலைன்னு அப்பவே சொன்னீங்க, ஆனாலும் வேற வழியில்லாம உங்களை கட்டாயப்படுத்தினது நான்தான், என் மேல இருந்த தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், பிரின்சிகிட்டயும் நடந்ததை சொன்னேன், அவரும் வருத்தப்பட்டாரு, உங்ககிட்டயும் அவர் சார்பா ஒரு மன்னிப்பு சொல்லும்படி சொன்னாரு, அப்புறம் அந்த கிறுக்கலையெல்லாம் க்ளியர் பண்றதுக்கு ஆட்களும் வந்துட்டாங்க, எல்லாத்தையும் சுத்தமாக்கிடுவாங்க” என சொல்ல குணா எதுவும் பேசவில்லை ஆனால் கண்மணியோ
”சார் பரவாயில்லை சார் எனக்கு எந்த வருத்தமும் இல்லை சார்” என சொல்லிவிட்டு அமர்ந்தாள் குணாவோ ஏதும் பேசாமல் இருக்க வாத்தியாரோ
”குணா நீ ஏன் இன்னும் கோபமா இருக்க, விடுப்பா எவனோ பொறாமையில அப்படி செய்திருக்கான், நீ எதை நினைச்சும் கவலைப்படாத” என சொல்லும் போதே அவனுக்கு வெறுப்பு வந்து சட்டென வகுப்பை விட்டு வெளியேறி சென்றான், அவன் செல்லவும் கண்மணிக்கு துக்கம் தொண்டையடைத்தது.
வாத்தியாரோ துக்க பெருமூச்சுவிட்டுவிட்டு பாடத்தை நடத்தலானார், கவினுக்கும் கமலிக்கும் குதூகலமாக இருந்தது, ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டது போல இருமாப்புடன் இருந்தவர்களை ப்யூன் ஒருவன் வந்து அழைத்தான், அவர்களும் பிரின்சியை காணச் செல்ல அவரோ சிசி டிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை அவர்களுக்கு போட்டு காட்டி திட்டி ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்ய அவர்களுக்கு ஒரே அவமானமாகிப் போனது, அப்போதே அந்த கல்லூரியை விட்டு கிளம்பிச் சென்றார்கள்.
கண்மணிக்கு படிப்பின் மீது ஆர்வம் செல்லவில்லை, குணாவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள், மதிய இடைவேளை வரவும் பெல் அடிக்க அனைத்து மாணவர்களும் சாப்பிட சென்றார்கள், அந்த வகுப்பே காலியாகிவிட்டது, கண்மணிக்கோ குணாவின் மீதான ஏக்கம் அதிகமானது, சாப்பிட பிடிக்காமல் கொண்டு வந்த டிபன் பாக்சை திறக்காமல் அதை தடவிக் கொண்டே எதையோ யோசித்துக் கொண்டிருக்க அந்நேரம் புயலென உள்ளே நுழைந்தான் குணா.
அவனின் அந்த வருகையை எதிர்பார்க்காத கண்மணியோ திடுக்கிட்டு எழுந்து அவனைப் பார்த்து பயந்தாள், அவளின் அந்த பயந்த பார்வை அவனை தீயாய் சுட்டது, கோபத்துடன் அவளிடம் வந்தவன்
”ஏன்” என அறை அதிரும் அளவு கத்த அவள் உடல் நடுங்கி தடுமாற அவளை இழுத்து பிடித்தான்
”அப்போ அது உண்மையில்லையா” என அவன் கோபத்தில் கர்ஜிக்க அதைக்கேட்டவள் தனது நடுக்கத்தை அடக்கிக் கொண்டு அவனை வியப்புடன் பார்த்தாள்
அவளின் வியப்பையும் குழப்பத்தையும் கண்டு அவனோ சட்டென அவளை விட்டு விலகி தனது இருக்கையில் சென்று அமர்ந்துவிட அவளோ அவனை சமாதானம் செய்யும் பொருட்டு அவனிடம் சென்றாள்
நடந்ததை பற்றி விளக்கமாக கூற சென்றவள் அவனை நெருங்கி
”குணா” என்றதும் அவ்வளவுதான் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு சிறுபிள்ளை போல தேம்பி தேம்பி அழ அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது
அவன் அணைத்ததால் வெட்கப்படுவதா அல்லது யாராவது பார்த்துவிடுவார்களோ என பயப்படுவதா அல்லது அவனின் அழுகையை நினைத்து அச்சப்படுவதா என நினைத்து எதையும் செய்ய இயலாமல் அமைதியாகிவிட்டாள் கண்மணி.
குணாவும் தனது கண்ணீர் வற்றும் வரை அழுதுவிட்டு கண்மணியை தன்னை விட்டுவிலக்கி விட்டு தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றுவிட அவளோ அவன் செயவதை நினைத்து நொந்துப் போனாள்.
பெல் அடிக்கவும் மாணவர்கள் அனைவரும் வரவும் அவளும் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு தனது இருக்கையில் சென்ற அமர்ந்தாள், மறுபடியும் வாத்தியார் பாடம் எடுக்க அதில் கவனம் செலுத்த இயலாமல் குணாவை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள் கண்மணி
மாலை நேரம் கல்லூரி முடிந்ததும் விரைவாக சூப்பர் மார்க்கெட் சென்றவள் எதிர் கட்டிடத்தில் குணாவின் பைக் இருக்கிறதா என பார்த்தாள் வண்டியில்லை
அதில் அவளுக்கு ஏமாற்றமாகிவிட அவளோ வேலைக்குச் சென்றாள் அடிக்கடி வேலைக்கு நடுவில் எதிர் கட்டிடத்தையே வேடிக்கைப் பார்த்தாள், குணாவின் பைக் அங்கு கடைசிவரை இல்லாமல் போனது, அவளும் வேலை முடிந்து வீடு திரும்பும் போது கூட அவனின் பைக் இல்லாமல் போகவே தனது ஹாஸ்டல் நோக்கி நடந்தாள்
வழியில் குணா தனது பைக்குடன் சாலையோரம் காத்திருந்தான், அவனைக்கண்டதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, சட்டென அவளின் முகம் பூவாய் மலர அவளைக்கண்டதும் அவளை நாடி வந்தான் குணா, அவன் வருவதைக்கண்டதும் அவளுக்கு சிரிப்பே வந்தது, மென்மையாக புன்னகைத்தாள் அவனோ கோபத்துடன்
“அது உண்மையில்லையா” என கேட்க அவளுக்கு சிரிப்புதான் வந்தது
”எது”
”ப்ச் அது”
”அதுதான் எது” என அவள் கேட்க அவனுக்கு கோபம்தான் தலைக்கேறியது. முகத்தை உர்ரென வைத்துக் கொண்டான்.
”எதுன்னு தெளிவா சொன்னாதானே பதில் கிடைக்கும்” என சொல்ல அவனோ தயங்கினான் கோபம் சிறிது தணிந்தது
”அதான் அங்க காலேஜ் சுவத்தில எழுதியிருந்தது” என திக்கி திக்கி பேச அவளுக்கு புரிந்தும் புரியாதது போல
”என்ன என்ன சொல்ற ம்ம் எனக்குப் புரியலை” என வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற அவனோ கடுப்பாகி
”கண்மணி லவ்ஸ் குணான்னு இருந்ததே அது”
”அது யாரோ கிறுக்கி வைச்சிருக்காங்க, அவங்க மேல கோபப்படறதால எந்த பிரயோசனமும் இல்லை விட்டுத்தள்ளு”
”நான் அவங்களை பத்தி பேசலை அவங்க எழுதினது உண்மையில்லையா”
”எது”
”ப்ச் அதான் சொன்னேனே கண்மணி லவ்ஸ் குணான்னு”
“அப்படியா ம்ம் ஆனா என் கண்ணுக்கு வேற ஒண்ணு தெரிஞ்சதே, குணா லவ்ஸ் கண்மணின்னு அது என்ன”
”அது ரெண்டும் ஒண்ணுதானே”
”அதெப்படி ரெண்டும் ஒண்ணாகும்“
”இதுல என்ன வித்தியாசம் இருக்கு”
”நிறைய இருக்கு குணா லவ்ஸ் கண்மணின்னா குணா கண்மணியை விரும்பறான்னு அர்த்தம் அது கண்மணிக்கு தெரியாம கூட இருக்கலாமே”
”அப்போ கண்மணி லவ்ஸ் குணான்னு எழுதியிருக்கே அதுக்கு அர்த்தம் கண்மணி லவ் பண்றது குணாவுக்கு தெரியலைன்னா”
”ஆமாம் கரெக்ட்டா சொன்ன”
”அப்போ அது உண்மையா”
”இன்னும் உனக்கு விளங்கலையா“
”அப்புறம் ஏன் காலேஜ்ல அந்த பசங்ககிட்ட அப்படி பொய் சொன்ன”
”அதுக்காக என்ன சொல்லனும்னு எதிர்பார்த்த, உண்மையை சொல்லியிருந்தா என்ன நடந்திருக்கும், நம்மளை ஒழுங்கா படிக்க விட்டிருக்க மாட்டாங்க, கிண்டல் பண்ணி கேலி பண்ணி ஓட்டியிருப்பாங்க, நாம செய்யாததை கூட செய்ததா கதை கட்டியிருப்பாங்க, இதனால யாருக்கு அவமானம், யாருக்கு அசிங்கம் நமக்குத்தானே
குணா நான் படிக்கனும், எனக்கு குடும்பம் இருக்கு, அப்பா அம்மா என்னை நம்பித்தான் இருக்காங்க, நான் இந்த படிப்பை நம்பியிருக்கேன், எப்படியாவது நல்லபடியா படிச்சி முடிச்சி வேலைக்குப் போய் குடும்பத்தை காப்பாத்தனும், அதுதான் என் லட்சியம், என் கனவு கலைஞ்சிடக்கூடாது, அது கலையறமாதிரி எது நடந்தாலும் அதை நான் ஏத்துக்க மாட்டேன், என்னை மன்னிச்சிடு
நான் இப்படி சொல்லியிருக்க கூடாது ஆனா என்னோட கனவு இந்த காதலை விட முக்கியமானது, இதே விசயத்தை நான் லைப்ல செட்டில் ஆன பின்னாடி சொல்லியிருந்தா நிச்சயம் நான்” என அதற்கு மேல் பேசாமல் அவனை வியப்புடன் பார்த்தாள் காரணம் அவன் அவளை ஆசையாக பார்த்தான்
…. தொடரும்
error: Content is protected !!