Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 11.1

திருமணம் முடிந்து மூன்று நாட்கள் வீட்டிலே மனைவியோடு இருந்த தேவா மதுரை சுற்றி சில இடங்களுக்கு அவளை அழைத்துச் சென்று அவளோடான தன்னுடைய பிணைப்பை சற்று அதிகமாக்கினான்.

மனைவியோடு என்னரமும் சற்றும் மகனை நாயகி பார்த்து முறைத்தாலும் கண்டுகொள்ளும் ரகமா அவன்? தன் போக்கிலே வளைய வந்தான்.

அதன் பிறகு நான்கு நாட்கள் விருதுநகர் அழைத்து சென்று அவர்கள் குடும்பத்தோடு நேரம் செலவிட்டு அவள் முகம் சற்று நிம்மதி காட்டவும் தான் தேவாவிற்கு மூச்சே வந்தது.

திருமணம் முடிந்த உடனே தன்னுடைய வேலைக்காக அவள் மனதை பார்க்காமல் வீட்டிற்கு அவசரமாக அழைத்து வந்தது தன்னுடைய பிழை தான் என வருந்தி தவித்தவனுக்கு அந்த நான்கு நாட்கள் மாற்றம் போல் இருந்தது. நிறைவான மனதோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.



Advertisement

அடுத்த நாள் தேவா தன்னுடைய வேலையை கவனிக்க அயன்தென்கரை சென்றிட ஞாயிற்று கிழமை என்பதால் நாயகி, ராஜரத்தினம் என அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.

காலை தேவா ஊருக்கு கிளம்புவதால் நாயகிக்கு முன்பே எழுந்து அவனுக்காக எளிமையான உனைவை அவசரமாக தயாரித்து உண்ண வைத்து பைரவி அனுப்பியிருக்க அவன் சென்றதும் வீட்டினருக்கு சற்று சிரத்தை எடுத்து உணவை தயாரித்தாள்.

விடுமுறை நாள் என்பதால் மெதுவாக எழுந்து வந்தார் நாயகி. அவர் வருவதை பார்த்து பைரவி அவர் குடிக்கும் தேநீரை கலந்து கொடுக்க அவளை புறக்கணித்து தனக்கான தேநீரை தானே தயாரித்து எடுத்து சென்றார்.

Advertisement

அவர் செய்வது வேதனையை தர, மௌனமாக அடுத்த வேலையை செய்ய துவங்கினாள். மகன் இருந்த பொழுது அவள் செய்யும் அனைத்தையும் ஏற்றவர் இன்று ஏன் இப்டி உள்ளார் என்ற சந்தேகம் அவளுக்கு.

Advertisement

சில நிமிடங்களில் அவள் மாமாவும் இஷாவும் வர அவர்களுக்கும் காலை தேநீரை கொடுக்க வர, அதற்குள் சமையலறை வந்த நாயகி அதை தானே வாங்கினார்.

“சூடா புதுசா தான் என் வீட்டுல எல்லாரும் குடிப்பாங்க” என்றார் அதிகாரமாக.

தான் வேண்டாம் என்றதை அப்படியே கணவனுக்கும் மகளுக்கும் கொடுக்க பார்கிறாளோ என்ற சந்தேகம் அவருக்கு.

Advertisement

“புதுசா தான் அத்தை போட்டேன்” அவர் எண்ணம் புரிந்த பைரவிக்கு பேசவே கடினமாக இருந்தது.

“ஓ அப்போ அந்த டீயை வேஸ்ட் பண்ணிருக்கியா நீ?” அதற்கும் கோவம் அவருக்கு.

“இல்ல அத்தை, அத நான் குடிச்சிட்டேன்” – பைரவி

கழுத்தை வெட்டி, “பரவால்ல, உன் இடம் என்னனு தெரிஞ்சு தான் வச்சிருக்க”

இகழ்ச்சியான பாராட்டோடு அவர் வெளியே செல்ல கணவன் கொடுத்த தைரியம் எல்லாம் வடிய துவங்கியது பெண்ணுக்கு.

வெளியேறிய கண்ணீரை துடைத்து சமையலை முடித்தவளால் சமையலறை விட்டு வெளியே செல்ல மனம் வரவில்லை.

அங்கு சென்றால் மீண்டும் ஏதாவது நாயகி பேசிவிடுவாரோ என்ற பயம். அவள் மாமா இருக்கும் பொழுது நாயகி அதிகம் பேச மாட்டார் தான் இருந்தாலும் அவளுக்கு தயக்கம்.

“பைரவி ம்மா”

ராஜரத்தினம் அழைக்கவும் வெளியே பைரவி எட்டி பார்க்க, “என்ன ம்மா இன்னுமா வேலை பாக்குற? சிம்பிளா ஏதாவது செய் ம்மா, ரொம்ப ரிஸ்க் எடுத்தெல்லாம் செய்ய வேணாம். வந்து ஒக்காரு” என்றார் அக்கறையாக.

“சரி மாமா” சன்னமான சிரிப்போடு அவள் வர அதற்குள் எழுந்த நாயகி பாத்திரங்களை துலக்க சென்றார்.

டீப்பாயின் மேல் இருந்த டம்ளர்களை பார்த்த பைரவி அதை எடுத்து சென்று சமையலறை போக அவள் வரவை பார்த்த நாயகி, “வீட்டுக்கு வந்த மருமக ஒரு வேலை பாக்குறதில்ல. எஜமானி மாதிரி இவா உக்காந்திருக்க இவளுக்கு நான் வேலை பாக்கணுமா?” என்றார் மெல்ல கணவன் காதுகளுக்கு கேட்காதவாறு.

“நான் பாத்துக்குறேன் அத்தை” என்றவள் கையிலிருந்த பாத்திரங்களை சிங்கிள் போடடாள்.

“ம்ம் போடுமா, என்ன என்ன இருக்கோ எல்லாத்தையும் வந்து போடு. எனக்கு லீவு விட்டதே உனக்கு வேலை செய்ய தான?” என்றார் மேலும் கோவமாக.

தூக்கிவாரி போட்டது பைரவிக்கு, “அதை நானே பாத்துக்குறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க”

இதற்காகவே காத்திருந்தவர் பாத்திரங்களை அப்படியே போட்டு, “உன் வீட்டுல சொல்லி குடுத்து தான அனுப்பிருப்பங்க? மாமியார் வீட்டுல கால் மேல கால் போட்டு வேலை வாங்கணும்ங்கிற எண்ணத்தை மாத்திக்கோ”

காரணமே இல்லாமல் பலியை போட்டு சென்றவரை எதிர்த்து பேசும் தைரியம் உள்ளுக்குள் வலுவாய் இருந்தாலும் அமைதியாக கடந்தாள் பெண்.

அதன் பிறகு காலை உணவு, மதிய உணவு என அனைத்தும் பைரவி சமையல் தான்.

நாயகி ராணி போல் அமர்ந்து ஒரு வேலையும் பார்க்காமல் இருக்க ரத்தினம் கேட்டுவிட்டார், “என்ன நாயகி மருமக வந்ததும் வேலை செய்ய வச்சு வேடிக்கை பாக்கறியா?” என.

“அம்மா டெய்லி காலேஜ் போயிட்டு வர்றாங்க, அவங்க வீட்டுல சும்மா தானே இருக்காங்க. வேலை பாக்கட்டும் ப்பா” என்றால் இஷா.

“அதுக்குன்னு எல்லா வேலையும் பைரவியே பாக்கணும்னு அவசியம் இல்ல இஷா, நாயகி நைட் நீ தான் சமையல் பாக்கணும். சொல்லிட்டேன்”

தங்கள் அறையிலிருந்து அனைத்தையும் கேட்ட பைரவி கணவனுக்கு குறுந்செய்தி அனுப்பினாள், “சாப்டீங்களா?” என.

அரை மணி நேரம் பதிலே இல்லை. அமைதியாக படுத்திருந்தவள் கண்ணயர்ந்த நேரம் நோட்டிபிகேஷன் சத்தம்.

திறந்து பார்க்க புகைப்படம் வந்தது அவனிடமிருந்து. மண்சட்டியில் மிதந்தது அயிரை மீன்கள் பல. பார்க்கவே பைரவிக்கு அதை ருசி பார்க்கும் ஆவல். அவனிடம் கேட்க கூச்சம்.

“ஓகே சாப்புடுங்க” என செய்தி அனுப்பி வைக்க உடனே அதை பார்த்திருந்தான்.

அடுத்த நிமிடம் அழைப்பு வந்தது.

“ஹலோ சக்கரை” என்றான் ஆவலாக.

அவன் சக்கரையில் இனித்தது அவள் மனம், “ம்ம்ம் ஹலோ” என்றாள் சிரிப்பை அடக்கி.

“இப்ப தான் சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா?” – தேவா

“சாப்பிட்டேன்” – பைரவி

“என்ன கொளம்பு?” – தேவா

“கொளம்பு இல்லை, இன்னைக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி வச்சேன்” – பைரவி

“பார்ரா, என் பொண்டாட்டி சமயலா இன்னைக்கு?” அவளோடு பேசிக்கொண்டே அவன் உண்பது தெரிந்தது.

“ம்ம் ஆமா” என்றாள் அமைதியாக.

“இங்க அயிர கொளம்பு. தோட்டத்துக்கு வர்ற ஒரு கெழவி வச்சு தரும். ருசி அருமையா இருக்கு” உசுப்பேத்திய அவனை அடிக்க தோன்றியது பைரவிக்கு.

“ஓ சரி” என்று மட்டும் சொன்னவள் குரலில் சிறு கோவம்.

சில நொடிகள் அவன் இன்னும் கொஞ்சம் குழம்பு கேட்டு வாங்கி உண்பது கேட்க அத்தை முன்பு மிகவும் கம்மியாக உண்ட பைரவிக்கு நாவில் எச்சில் ஊறியது.

“எனக்கு பிரியாணி வேணும், மிச்சம் இருக்குமா?” சந்தேகமாக தேவா.

‘அதான் அங்க கொட்டிக்கிட்டியே தர மாட்டேன் போடா’ சண்டைக்கு நிற்க துடித்தது பைரவியின் நா, “ம்ம் இருக்கு” என்றாள் அமைதியாக.

“ஹே பாரேன், கெண்டை மீன் வறுவல் பண்ணோம், அத போட்டோ எடுத்து அனுப்ப மறந்துட்டேன். குளத்து பக்கம் போயிருந்தேன் பைரவி, வாண்டு பசங்க எல்லாம் மீன் புடிச்சிட்டு இருந்தாய்ங்க. சரி உதவி பண்ணலாம்னு போனப்போ எனக்கு ரெண்டு மீனு சிக்குச்சு. புடிச்சு வறுத்தெடுத்துட்டேன்ல. அப்டியே புடிச்சு அப்டியே வறுத்து சாப்புடுற ருசியே தனி. அப்டியே பஞ்சா கரையிது சக்கரை”

பைரவிக்கு மீன் அதிகம் பிடிக்காது தான் ஆனால் அயிரை மீன் மட்டும் விதிவிலக்கு இப்பொழுது அவன் மண்சட்டியில் அனுப்பிய அயிரை மீன் குழம்பும், குளத்தில் பிடித்து அதன் ருசி மாறாமல் அவன் உண்பதை கூறவும் அவளுக்கும் ஆசை துளிர்த்தது.

“நல்லா சாப்புடுங்க” என்றவள் குடல் இங்கு எரிந்தது.

“சொல்லவே தேவையில்ல சாப்பாடு சாப்புடுறேனோ இல்லையோ கொளம்ப கண்டிப்பா குடிச்சிடுவேன்” என்றான்.

“நீங்க சாப்புடுங்க நான் வக்கிறேன்” – பைரவி

“ம்ம்ஹ்ம் இருடி. உன்கிட்ட பேசிக்கிட்டே சாப்டா அது தனி ருசியா இருக்கும்” என்ற தேவாவின் குரலில் இருந்த ஆசை அவளை அமைதியாக்கியது.

“என்ன பேச்சையே கானம்?” – தேவா

“இருக்கேன்” – பைரவி

“என்ன பண்ற?” – தேவா

“சும்மா தான் இருக்கேன், போர் அடிக்கிது” – பைரவி

“சரி அப்டியே எந்திரிச்சு என்னோட கபோர்டு திற” – தேவா

யோசனையோடு அவன் சொன்னதை செய்து, “ம்ம் தொறந்துட்டேன்” – பைரவி

“அதுல உள்ள லாக்கர் ஓபன் பண்ணு” உணவை முடித்து கை கழுவி அங்கிருந்த கயிற்று கட்டிலில் படுத்தான்.

சிறிய, மிக சிறிய பரிசு பெட்டி ஒன்று இருந்தது. அதனை பார்த்ததும் அது தனக்கு தான் என உறுதியானது பெண்ணுக்கு.

ஆனாலும் தெரியாதது போல் சிரிப்போடு, “ம்ம் தொறந்துட்டேன்” என்றவள் கைகளில் அந்த சிறிய பெட்டி அழகாய் வீற்றிருந்தது.

“அங்க ஒரு கிபிட் பாக்ஸ் இருக்கா?” – தேவா

“ம்ம்ம்…” தேடுவது போல் பாவனை செய்தவள் கட்டிலில் படுத்து அந்த பெட்டியை ஆசையாய் வருடினாள், சிறிதும் கணம் இல்லை.

ஏனோ இப்பொழுதெல்லாம் அவன் வாங்கி தரும் சிறு சிறு விஷயங்கள் கூட அவளுக்கு பிடித்திருந்தது. “கெடைச்சிடுச்சு” குரலில் ஆர்வத்தை காட்டாமல் தவிர்க்க பெரும்பாடாக இருந்தது.

“ம்ம் அது உனக்கு தான். ஓபன் பண்ணி பாரு” – தேவா

அவன் கூறுவதற்கு முன்பே பாதி திறந்தது பைரவியின் கைகள். ஆர்வமாக திறந்து பார்த்த பைரவி இறுதியில் தெரிந்த மோதிர டப்பாவை பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி.

“ஆனந்த்… ரிங் பாக்ஸ் இருக்கு” – பைரவி

“ம்ம். உனக்கு தான் வாங்குனேன். அன்னைக்கு மோதிரம் மாத்துனது ஏதோ ஒரு குறை இருக்குற மாதிரியே பீல் ஆச்சு அதான் வாங்குனேன்” – தேவா

அந்த மோதிரத்தை அவனே கையில் கொடுத்திருக்கலாம் என பைரவி யோசித்திருக்க அவன் திறந்து பார்க்க கூறினான்.

அத்தனை ஆசையாக பைரவி திறந்து பார்க்க உள்ளே எதுவும் இல்லை. பயந்தாள், அவன் வாங்கிய கடையில் பொருளை வைக்க மறந்து போனார்களோ என, “ஆனந்த் உள்ள எதுவும் இல்லை”

அவள் பதிலை கேட்டு அந்த பக்கம் தேவா வாய் விட்டு சத்தமாக சிரிக்க, “ஆனந்த் சிரிக்காதிங்க, கடைல உங்கள ஏமாத்திருக்காங்க, முதல கடைக்கு போய் என்னனு பேசுங்க” என்றாள் வேகமாக.

அவனோ சிரிப்பை நிறுத்திவிட்டு, “ஹே செல்ல பொண்டாட்டி, பொறுமை பொறுமை. நான் எதாவது வாங்கிருந்தா தானே உள்ள இருக்கும்” பைரவி பக்கம் அமைதி.

“உனக்கு போர் அடிக்கிதுன்னு சொன்னியே அதான்…” இன்னும் சிரித்தான், “இப்ப என்ன திட்டவே உனக்கு நேரம் பாத்தது… டாட்டா பொண்டாட்டி”

அவளிடம் கைபேசியிலேயே அடி வாங்கும் முன் இணைப்பை துண்டித்துவிட்டான் தேவா.

பைரவிக்கு கோவம் தான் சிறிது வந்தது, அவள் பயந்து போயிருக்க இவனோ விளையாண்டுளன் என எளிதாக கூறி சிரிக்கிறான் என்ற கோவம். ‘எதிர் பாக்கவே இல்ல நீ?’ மனம் கேட்ட கேள்வியில்,

‘சரி ரொம்பவே கொஞ்சம் எதிர் பாத்துட்டேன் தான்’ ஒத்துக்கொண்டது அவளும் தான்.

அதன் பிறகு கணவன் சொன்னது போல் மாலை வரை அவனை திட்டிக்கொண்டே வேலை ஓடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!