Skip to content
Post Views: 941
“டேய் ஏழிலு.. சரவணன் சார் உங்கள டிப்பார்ட்மென்ட் வர சொன்னார் டா”
கிளாசில் ஃபிரீ ஃபயர் விளையாடிக் கொண்டிருந்த தமிழ் எழில் இருவரிடமும் அவர்களின் ரெப்ரசென்டேடிவ் சொல்ல, இருவரும் டிப்பார்ட்மென்ட் சென்றனர்.
சரவணனிடம் சென்ற எழில், “சார் வர சொன்னீங்களா?” என கேட்க “ஆமா எழில், இந்தா இந்த ஃபார்ம்ல உன் டீட்டெயில்ஸ் எழுதி கையெழுத்து போடு” என்றார்.
Advertisement
“என்ன ஃபார்ம் சார் இது?”
“பிலேஸ்மென்ட் ஃபார்ம் டா ஃபில் பண்ணு”
Advertisement
“சரி சார்” என்றவன் அவன் விவரங்களை நிரப்ப இதை பார்த்துக் கொண்டிருந்த தமிழ், “சார் என்னோட ஃபார்ம்..” என கேட்டான்.
Advertisement
தமிழை சங்கடமாக பார்த்தவர், “அரியர் இருக்கிறவங்க கேம்பஸ் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண முடியாது இனியா” என்க தமிழின் முகத்தில் உணர்வுகளே இல்லை.
Advertisement
முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாதவன் அகத்திலோ அன்பரசனை குறித்து அத்தனை பயம். பொதுவாகவே மனிதர் அந்த பேச்சு பேசுவார்.. இதில் அரியர் இருப்பதால் பிலேஸ்மென்ட் இல்லை என்று தெரிய வந்தால் அவ்வளவு தான்.. ‘காலேஜ்க்கு எத்தன ஃபீஸ் கட்டுனேன் தெரியுமா..?’, ‘உனக்கு செலவு செஞ்சு ஒவ்வொரு பைசாவும் தண்டம்…’, என வசவுகளை வீசியே அவனை ஒரு வழியாக்கிவிடுவார்.
தமிழின் உணர்வுகளற்ற முகம் சரவணனை சலனப் படுத்த, “இது இந்த செமஸ்டர்க்கு மட்டும் தான் டா.. அடுத்த செம்லயும் கேம்பஸ் இன்டர்வியூ இருக்கும்.. சோ இந்த செம்ல அரியர்ல கிளியர் பண்ணீட்டா அடுத்த செம்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணலாம்” என்றார்.
“நிஜமாவா சார்..” அதுவரை இருந்த மனநிலை மாறி தமிழ் கேட்க அவன் தெளிந்த முகத்தை கண்டதும் சலனம் நீங்கியவர், “ஆமா இனியா.. அதுல தான் பெரிய பெரிய ஹை பேக்கேஜ் கம்பெனி எல்லா வருவாங்க.. எப்படியாவது இந்த செம்ல அரியர்லாம் கிளியர் பண்ணு போதும் அடுத்த செம்ல பார்த்துக்கலாம்” என தேற்றி அவன் தோளில் கைப்போட்டவர், “படிக்கிறப்போ ஏதாவது டவுட்ஸ் இருந்தா கேளு.. ஐ வில் ஹெல்ப் யூ” என்றார்.
சரியென தலையாட்டியவன், “தேங்க்ஸ் சார்” என்க புன்னகைத்த சரவணன், “சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அப்செட் ஆகாத.. லைஃப் இன்னும் எங்கேயோ இருக்கு” என்றார்.
“இல்ல சார் அப்பா..” தமிழ் இழுக்க “பேரன்ட்ஸ்லா அப்படி தான்.. விடு அடுத்த இன்டர்வியூல பார்த்துக்கலாம்” என தேற்றினார்.
ஏனோ இந்த நிகழ்வுக்கு பின் சரவணன் தமிழின் மனதில் ஒரு படி உயர்ந்திருந்தார். அவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு மீண்டும் வகுப்பிற்கு சென்றனர்.
டிபார்ட்மெண்ட் சென்று வந்ததிலிருந்து தமிழ் ஏதோ சிந்தனையிலே இருக்க அவனை கண்ட எழில், “ஏன் டா ஒரு மாதிரி இருக்க.. ஃபீல் பண்றியா?” என கேட்க “ஃபீல்னா.. அப்பாக்கு தெரிய கூடாதுனு இருக்கு, மத்தபடி ஃபீலிங்ஸ் இல்ல… அடுத்து என்ன பண்றது.. எங்கிருந்து தொடங்கிறதுனு ஒன்னும் புரியல அந்த யோசனை தான்” என்றான்.
“பார்த்துக்கலாம் டா.. அதான் இன்னும் மூனு மாசம் இருக்கே..”
“என்ன பத்தி தெரிஞ்சும் இப்படி பேசுற.. அஞ்சு அரியர் இருக்கு அதெல்லாம் கிளியர் பண்ணனும்.. இந்த செம்ல எல்லாம் கோர்.. மொத்தம் பதினொரு பேப்பர்.”
“சரிடா.. என்னால முடிஞ்ச ஹெல்ப் நானும் பண்றேன் பார்த்துக்கலாம்” என தேற்றினான் எழில்.
மதிய இடைவேளையில் கேண்டீன் சென்ற இசைக்கு அங்கு எழிலுடன் நின்றிருந்த தமிழை கண்டதும் மனதில் ஏதோ ஒரு நெருடல். அன்று முல்லையிடம் பேசிவிட்டு சென்றவள் அதை நினைத்து கவலைக் கொள்ளாமல் ஒரளவு அவள் முயற்சியில் வெற்றியும் கண்டாள் ஆனால் மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் அந்நிகழ்வை முற்றிலுமாக கடக்க முடியவில்லை.
அவ்வப்போது தமிழை காணும்போதெல்லாம் அனிச்சையாய் முல்லையின் அழுகை நினைவில் வரும் கூடவே தமிழின் மீது கோவமும் வரும். “அவங்க அப்பா அடிச்சதுக்கு பாவம் அந்த சின்ன பொண்ணு என்ன பண்ணுவா.. இருந்தாலும் இந்த சீனியர் இப்படி பண்ணகூடாது” என நினைத்துக் கொள்வாள்.
சில சமயங்களில் மலர் கூறியதை போல் முல்லையை பற்றி தமிழிடம் பேசிவிடலாம் என கூட தோன்றும். ஆனால் மனதில் ஒரு பயம், ஒரு வேளை இவள் முல்லையை பற்றி பேச போய், ‘நீ யார் அதை கேட்பதற்கு?’ ‘என் குடும்ப விஷயத்தில் நீ தலையிடாதே’ போன்ற வார்த்தைகளை அவன் சொல்லிவிட்டால் அது இருவருக்குமே மன சங்கடம், இசையால் அதன் பிறகு அவனிடம் இயல்பாக பேசமுடியாது.
தமிழ் நன்றாக பேசுவான் பழகுவான் அவளுக்கு ஒரு நல்ல நண்பன், ஆனால் இசைக்கு அவனிடம் ஒட்டுதல் இருக்கும் அளவிற்கு அத்தனை உரிமையிருப்பது போன்ற எண்ணமில்லை அதாவது அவன் குடும்ப விஷயங்களில் தலையிடும் அளவு உரிமை இல்லை. அப்படி தலையிடுவது அநாகரிகமான இருக்க கூடும் என யோசித்தாள். இந்த சிந்தனைகளை குறித்து மலரிடம் பகிர்ந்து கொள்ளவும் பயமாக இருந்தது, அவள் தான் கத்த அரம்பித்துவிடுவாளே.
“இசை..” மலரின் குரலில் சிந்தனையில் இருந்து மீண்டவள் அவளை பார்க்க, “நான் ஒன்னு சொல்லட்டா..” என பீடிகையுடன் தொடங்கினாள் மலர்.
“சொல்லு மலர்..”
“அன்னிக்கு முல்லை அழுதது நம்ம சீனியர் கிட்ட சொல்லலாமா?” என கேட்க மலரை “மலர்ர்…” என வியப்பாக பார்த்தாள் இசை.
“ஏன் டி இப்படி பாக்குற?”
“நீயா டி பேசின.. என்ன ஆச்சு உனக்கு? என்னால நம்பவே முடியல”
“ம்ம்… உன் வியாதி எனக்கும் ஒட்டிக்கிச்சு” என்றதும் இசை அவளை முறைக்க
“தெரியல டி சீனியர பார்க்கும் போதெல்லாம் முல்லை அழுதானு சொன்னது தான் நியாபகம் வருது.. அப்படியே அவர் மேல காரணமே இல்லாம கோவம் வருது.. பாவம் அந்த சின்ன பொண்ணு மனசுல எவ்ளோ ஆசை ஏக்கம் இருந்தா சம்மந்தமே இல்லாத நம்மகிட்ட சொல்லீட்டு அழும்” .
“நானும் அதே தான் யோசிச்சேன்.. ஆனா நம்ம அவர்கிட்ட சொல்ல போய், ‘என் பர்சனல் ஏன் தலையிடுறீங்கனு?’ ஏதாவது கேட்டுட்டா என்ன பண்றது.. அது இரண்டு பேருக்கும் சங்கடம் தான..” என இசை தயங்க
“என்ன பெரிய பொல்லாத பர்ஸ்னல்.. அவ்ளோ பர்ஸ்னல்லா இருந்தா அந்த பொண்ணு ஏன் நம்மகிட்ட சொல்லனும்.. எப்போ முல்லை நம்மகிட்ட சொன்னாளோ அப்பவே அது பர்ஸ்னல்ங்கிற எல்லைய தாண்டிருச்சு.. சோ இத பத்தி அவர்ட்ட பேசிறதுல தப்பில்ல” என்றாள் மலர்.
மலரின் கூற்றை அவள் மனம் முழுவதுமாய் ஏற்கவில்லை என்றாலும் முல்லைக்காக தமிழிடம் பேசிப் பார்க்கலாம் என்றே தோன்றியது.
தமிழிடம் சென்றவர்கள் பொதுவாக பேச்சை தொடங்க தமிழின் எண்ணமெல்லாம் அரியர், கேம்பஸ் இன்டர்வியூ சுற்றியே இருந்தது. இவர்களுடன் மனம் ஒன்றாதவன் இயல்பாக பேசாமல் அமைதியாக இருக்க அவனுக்கும் சேர்த்தி பேசிக் கொண்டிருந்தான் எழில். இசை எழிலை காட்டி மலரிடம் கண்களில் ஜாடை செய்ய அவனை கடுப்பாக முறைத்தாள் மலர்விழி.
இடைவேளை முடிந்து பெல் அடிக்க தமிழிலும் எழிலும் அவர்களின் வகுப்பிற்கு சென்றுவிட்டனர்.
“என்ன டி இப்படி சொதப்பிருச்சு” இசை சலிப்பாக சொல்ல “எல்லா அந்த எழில்னால” என்றாள் மலர்.
“பேசாம நேர்ல சொல்லாம.. போன்ல சொல்லீட்டா என்ன?” இசை யோசனை கூற “நல்ல ஐடியா டி..” என்ற மலர் “இன்னிக்கு ஈவினிங் பேசலாம்” என்றாள்.
மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றதும் அவளின் வேலைகளை முடித்துவிட்டு மலரை அழைத்தாள் இசை.
அழைப்பை ஏற்ற மலர், “சொல்லு டி” என தூக்கத்தில் முனங்க “அடிப்பாவி தூங்கீட்டா இருக்க.. சாயங்காலம் என்ன தூக்கம்?” அதட்டினாள் இசை.
“டையர்ட்டா இருக்கு டி..”
“சரி சரி எழுந்திரு.. சீனியர்க்கு கான்கால் போடுறேன்”
“ம்ம்..” என முனங்கியவள் அவள் தூக்கத்தை தொடர, தமிழை அழைத்தாள் இசை.
கடந்த பத்து நிமிடங்களாக புத்தகங்களுடன் போராடிக் கொண்டிருந்த தமிழ் இசையிடமிருந்து அழைப்பு வரவும் புத்தகங்களை மூடிவிட்டு அழைப்பை ஏற்றான்.
தமிழ் அழைப்பை ஏற்றதும் மலரின் இணைப்பு துண்டிக்கபட்டுவிட இசைக்கு அடுத்து என்ன செய்வது என புரியவில்லை. இப்போது மலரை அழைத்தால் கால் ஹோல்டில் போய்விடும், தமிழை ஹோல்டில் போட வேண்டாம் என நினைத்து தான் முதலில் மலரை அழைத்திருந்தாள். மீண்டும் அவளை இணைப்பில் சேர்க்க மலரே அழைக்க வேண்டும், ஆனால் அதற்கு தான் வாய்ப்பில்லையே.
“ஹலோ.. இசை லைன்ல இருக்கியா? கேட்குதா?” தமிழின் குரலில் சுயம் பெற்றவள், “ஹான்.. இ.. இருக்கேன் சீனியர்..” மலரின் அழைப்பு துண்டானதும் தன்னால் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“சொல்லு இசை.. நீ இந்த நேரத்தில கூப்பிட மாட்டியே.. ஏதாவது ஹெல்ப் வேணுமா?” மாலை நேரங்களில் அனாவசியமாக அழைக்காதவள் அன்று அழைத்திருக்கவும் தமிழ் கேட்க
“அது.. நா.. நான் சும்மா தான் கூப்பிட்டேன் சீனியர்.. என்ன பண்றீங்க?” என அவனுடன் பேச்சை வளர்க்கும் நோக்கில் பேசியவள் மலரிற்கு அவளை மீண்டும் அழைக்கும்படி மெசேஜ் செய்ய தூக்கத்தில் இருந்த மலர் அதை பார்க்கவேயில்லை.
“இப்போ தான் படிக்கலாம்னு புக் எடுத்தேன்..”
“ஓ சாரி டிஸ்டர்ப் பண்ணீட்டனா.. நீங்க போய் படிங்க” என இசை சொல்லவும் தமிழிற்கு கடுப்பு, ‘அதானே பார்த்தேன்.. சின்ன கேப் கிடைச்சாலும் இவ ஓடுறதுல தானே குறியா இருப்பா’ மனதில் அவளை கடிந்தவன், “அப்பறம் படிச்சிக்கலாம்.. இப்போ நம்ம பேசலாம்” என புத்தகங்களை மேஜையின் மீது வைத்துவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான்.
இவனுடன் பேசிக் கொண்டே இசை மலரின் சேட் ஐ காண, அவள் இவள் அனுப்பிய செய்தியை பார்க்கவே இல்லை. கடுப்பானவள் ‘அடியே மலரு.. இப்படி தனியா மாட்டிவிட்டுட்டல’ என மனதில் புலம்பினாள்.
“அப்பறம் சொல்லு இசை..” தமிழ் உரையாடலை தொடங்க சட்டென எதை பற்றி பேசுவது என விழித்தவள், “ஆங்.. ஹான்.. அது இன்னிக்கு ஏன் சீனியர் ஒரு மாதிரி டல்லா இருந்தீங்க.. உடம்பு சரியில்லையா?” என கேட்டாள்.
“இல்ல.. இல்ல.. நல்லா தான் இருந்தேன்” என்றவன் காலையில் டிப்பார்ட்மென்டில் நடந்ததையெல்லாம் அவளிடம் பகிற
“செம்க்கு தான் இன்னும் மூனு மாசம் இருக்கே ஏன் இப்பவே ஆரம்பிச்சுட்டீங்க..?”.
“ம்ம் இருக்கு தான்.. அஞ்சு அரியர்.. இந்த செம்ல எல்லாம் கோர் சோ மொத்தம் பதினொரு பேப்பர். இப்போ தொடங்கினாலே என்னால எல்லாம் கிளியர் பண்ண முடியுமானு தெரியல”
“அதெல்லாம் ஈசீயா கிளியர் பண்ணீரலாம் சீனியர்” ஆறுதலாக பேசினாள். மலர் அழைக்கவில்லை என்றதும் தயக்கம் விடுத்து இயல்பாக பேச தொடங்கிவிட்டாள் இசை.
“ம்ச்.. கஷ்டம் தான்..” தமிழ் சலித்துக் கொள்ள “ஏன் இப்படி நெகட்டிவ்வா பேசுறீங்க?” என்றாள்.
“நெகட்டிவ் இல்ல மா நிதர்சனத்த பேசுறேன்..” என்றவனின் குரல் உள்ளே சென்று ஒரு வகை விரக்தியுடன் ஒலித்தது.
அவன் குரலின் வேறுபாட்டை உணர்ந்தவள் “ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?” என கேட்டாள் மெல்லிய குரலில் கேட்க பெருமூச்சுவிட்டவன், “உங்கிட்ட சொல்ல என்ன இசை… ஐ ஆம் அ டிஸ்லெக்சிக் (dyslexic)”என்றான்.
இசையிடம் பதிலில்லை. அவள் அமைதியாக இருக்க, “இசை..” என மெதுவாக அழைத்தான், “ஹான்.. இருக்கேன் சீனியர்” அவள் பதிலளிக்க
“ஏன் அமைதியாவே இருக்க? நான் சொன்னது புரிஞ்சுச்சா?”
“ம்ம்..” என முணுமுணுத்தாள்.
“எங்கே அப்படினா என்னன்னு சொல்லு?” அவன் அவளின் புரிதலை தெளிவுபடுத்திக் கொள்ள கேட்க “அது ஒரு லேர்னிங் டிஸார்டர்..(learning disorder)” என்றாள் சங்கடத்துடன்.
“பரவாயில்லையே எல்லாமே தெரிஞ்சு வைச்சிருக்க..” இயல்பாக பாராட்டியவன், “எனக்கு டிஸ்லெக்சியா (dyslexia) இசை.. சின்ன வயசுல இருந்தே படிப்பு சுத்தமா வராது.. வீட்ல அப்போ அதை பெருசா எடுத்துக்கல.. வளர்ந்த அப்புறமும் அப்படியே இருக்க டென்த் படிக்கும்போது அம்மா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க அப்போ தான் எனக்கு டிஸ்லெக்சியானு டயக்னைஸ் பண்ணாங்க..”
“நீங்க எல்லாரும் சாதாரணமா ஒரு முறை படிக்கிறதே எனக்கு அஞ்சு ஆறு முறை படிச்சாதான் மனசுல பதியும், கொஞ்சமாது புரியும்.. சோ என்ன பொறுத்தவர மூனு மாசம் டைம் கம்மி தான்..”
“அப்படியெல்லாம் இல்ல சீனியர்.. நீங்க கொஞ்சம் தொடர்ச்சியா ஹார்ட் வொர்க் பண்ணா கண்டிப்பா கிளியர் பண்ணீரலாம்” என்றவள் “நீங்க இதையெல்லாம் நினைச்சு கவலைப் படாதீங்க.. உங்களுக்கு தெரியுமா ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட டிஸ்லெக்சிக்.. டிஸ்லெக்ஸியாக்கும் இன்டலிஜென்ஸ்க்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லை..” என ஆறுதல் கூறி உக்கமூட்டும் விதத்தில் பேசினாள்.
அவன் குறைப்பாட்டை நினைத்து வருந்துகிறானோ என்ற எண்ணத்தில் அவள் ஆறுதலாக பேச அவனுக்கோ அது போன்ற எண்ணம் ஏதுமில்லை.
சிறுவயதில் இருந்தே படிப்பு வராது, மருத்துவரிடம் பரிசோதித்தபோது அதன் பெயர் டிஸ்லெக்ஸியா என அறிந்து கொண்டான்.
மனதளவில் தமிழ் அதை ஒரு குறைபாடாகவே இதுவரை கருத்தியதில்லை. அவனை பொறுத்தவரையில் படிப்பு ஒரு அர்வமற்ற செயல், சிறுவயதிலிருந்தே அவனுக்கு இசை, விளையாட்டுகளில் இருந்த ஆர்வம் என்றுமே படிப்பில் இருந்ததில்லை. ஆர்வமில்லா ஒன்று அவனுக்கு வரவில்லை என்பதை குறைப்பாடாக எப்படி கருதலாம் என்பதே இன்றளவும் அவனின் எண்ணம்.
இப்போதும் அவன் படிக்க நினைக்க ஒரே காரணம் அன்பரசன் மட்டுமே. கல்லூரிக்கு பிறகும் தந்தையின் நிழலில் இருக்க விரும்பாதவனுக்கு சுயமாக ஒரு வேலை வேண்டும், அது படித்தால் மட்டுமே கிடைக்கும் என்கிற பட்சத்தில் படிக்க நினைக்கிறானே தவிர வாழ்க்கைக்காக இல்லை.
இன்னிசையின் பேச்சில் தமிழின் முகத்தில் புன்னகையின் சாயல், “நல்லா பேசுற..” என்று சிரிப்புடன் சொன்னவன் வேறு விஷயங்களை பேச மேற்கொண்டு அவளும் அதை பற்றி பேசவில்லை.
இசைக்கு உரையாடலின் நடுவே தான் எதற்காக அழைத்தோம் என்பதே நினைவிற்கு வர, “சீனியர்..” என்றழைத்தவள் ‘சொல்லலாமா.. வேண்டாமா.. அவசரப்படுகிறோமோ..’ என யோசிக்க, “ம்ம் சொல்லு இசை..” என்றான்.
“இல்ல.. அது ஒன்னுமில்ல..” அவள் மழுப்ப
“இசை.. நீ ஏதோ முக்கியமான விஷயம் பேச தான் கால் பண்ணீருக்க எனக்கு தெரியுது.. ஆனா என்கிட்ட எதுக்கு உனக்கு இவ்ளோ தயக்கம்?”
“அது..” என்றிழுத்தவள் “உங்க பர்சனல் தலையிடறதற்கு சாரி.. நான் அதிகபிரசங்கித்தனம் பண்றதா நினைக்காதீங்க” தயக்கத்துடன் கூற
“உன்ன போய் அப்படி நினைப்பேனா.. என்ன விஷயம் சொல்லு” தமிழ் கேட்கவும் அன்று முல்லையை சந்தித்தது, இருவருக்குமான உரையாடல், அவள் அழுதது என அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
“அழுதாளா..” அதிர்ச்சியுடன் தமிழ் கேட்க “ஆமா சீனியர்..” என அன்று முல்லை இவனை பற்றி பேசியதெல்லாம் கூற தமிழிடம் கணத்த மௌனம். மனதில் சொல்லமுடியாத ஒரு குற்றவுணர்வு.
“எனக்கு உங்க பாயின்ட் ஆஃப் வியூ என்னனு தெரியல ஆனா நான் முல்லையோட பக்கமிருந்து யோசிச்ச வர அவ மேல எந்த தப்பும் இல்லை.. நீங்களும் யோசிங்க” என இசை சொல்ல
“எனக்கு ஒரு மாதிரி ரொம்ப கில்ட்டா இருக்கு இசை. எனக்கும் முல்லைய ரொம்ப பிடிக்கும்.. அந்த விஷயத்தில எனக்கு அப்பா மேல தான் கோவமே தவிர முல்லை மேல எந்த கோவமும் இல்ல.. எப்படி சொல்ல அது ஒரு பயம். என்னதான் அன்னிக்கு நடந்தது ஒரு ஆக்சிடென்ட்டா இருந்தாலும் அவ மூச்சு விட முடியாம கஷ்டப்பட்தெல்லாம் என் கண்ணு முன்ன பார்க்கவும் எனக்குள்ள ஒரு பயம் எங்க என்ன அறியாம திரும்ப அவள காயப்படுத்தீருவனோனு.. அதுனால அவ கூட விளையாடுறதையே விட்டுட்டேன். நாளாக நாளாக அப்படியே ரெண்டு பேருக்கும் நடுவுல பேச்சும் குறைஞ்சுது.. இப்போ தேவைக்கு மட்டும் பேசுற லெவலுக்கு வந்திருச்சு எங்க ரிலேஷன்ஷிப்.”
“எனக்கு முல்லை மேல தங்கச்சிங்கிற பாசமெல்லாம் நிறையவே இருக்கு இசை.. அம்மா கூட அடிக்கடி சொல்லுவாங்க ஒரு நாள் கல்யாணமாகி இன்னோரு வீட்ல போய் வழப்போற பொண்ணு அவ வீட்டுல இருக்கிற வர அவ விருப்பம் போல இருக்கட்டும்னு. எனக்கும் அந்த நினைப்பு இருக்கு. அதான் அப்பா அவளுக்கு அதிகமா செல்லம் குடுக்கும் போது கூட நான் எதுவும் கேட்டதில்லை. அவரு என்னையும் முல்லையும் வெவ்வேறு மாதிரி நடத்திறப்போ கூட அவர் மேல தான் கோவம் வருமே தவிர முல்லை மேல பொறாமையோ வெறுப்போ இருந்ததில்லை..” என மனதில் இருப்பதை பகிர்ந்தவன், “ஆனா இப்போ நீ சொல்லவும்.. என்னோட எமோஷன்ஸ மட்டுமே முக்கியமா நினைச்சுட்டு அவள பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம ரொம்ப தப்பு பண்ணிட்டேன்னு தோணுது ” என குற்றவுணர்வுடன் வருத்தமாக பேச
அவன் மனதில் இருப்பதெல்லாம் கொட்டும் வரை அமைதியாக இருந்தவள், “உங்க மனசுல இருக்கிறது புரியுது சீனியர்.. அம்மா சொன்ன மாதிரி தான் எப்பவும் அவ உங்க கூட இருக்க போறதில்லை.. ஒருதர் நம்ம கூட இருக்கிற வரை அவங்க மதிப்பும் அருமையும் புரிஞ்சிக்காம அவங்க இல்லாதப்போ வருத்தப்படுறதுல கொஞ்சம் கூட அர்த்தமே இல்ல.. சோ நல்லா யோசிங்க.. அவ உங்க பாசத்துக்கு ரொம்ப ஏங்குறா..”
“பேசுறேன் இசை.. இவ்ளோ நாள் முல்லைய புரிஞ்சிக்காம அவள ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” தமிழ் வருந்த
“ஃபீல் பண்ணாதீங்க சீனியர் முல்லை கிட்ட பேசுங்க.. அப்பறம் நான் ஏதாவது தப்பாவோ அதிகபிரசங்கித்தனமாவோ பேசியிருந்த சாரி.. நான் வைக்கிறேன் சீனியர்” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.
இசையுடன் பேசி முடித்து யோசனையுடன் அமர்ந்திருந்த தமிழ் கதவு தட்டும் சத்தத்தில் நிமிர கதவின் அருகே நின்றிருந்தாள் முல்லை. அவளை கண்டதும் தமிழின் மனதில் குற்றவுணர்வு.
“அண்ணா அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க..” அவள் அழைக்கவும் “வரேன்” என அவளுடன் எழுந்து சாப்பிட சென்றான்.
கலைவாணி சமையல் அறையில் இருக்க அவளே அவள் அண்ணனுக்கு பரிமாறிவிட்டு அவனுடன் அமர்ந்து உண்டாள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தமிழுக்கு புரை ஏற உடனே அவன் தலையில் தட்டியவள், “பார்த்து சாப்பிடு அண்ணா..” என தண்ணீரை அவனிடம் நீட்ட வாங்கி பருகியவனுக்கு உள்ளமெல்லாம் உறுத்தல், அவன்மீதே கோவம். தங்கையின் சின்ன சின்ன அக்கறைகள் கூட தமையனின் குற்றவுணர்வுகளை கூட்டிக் கொண்டே போனது.
அசைன்மென்ட் எழுதிக் கொண்டிருந்த இன்னிசைக்கு மலரிடம் இருந்து அழைப்பு வர கடுப்புடன் ஏற்று காதில் வைத்தாள்.
“சீனியர்ட்ட பேசலாம்னு கால் பண்ண சொன்னேன்ல.. ஏன் பண்ணல?” கொட்டாவி விட்டபடி மலர் கேட்க எரிச்சலான இசை, “ஓஓ.. நான் கால் பண்ணல…?” என்றாள் நக்கலுடன்
“உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல டி.. அடுத்தவங்களுக்கா ஃபீல் பண்ணா மட்டும் பத்தாது அவங்களுக்கு உதவ ஏதாவது முயற்சி பண்ணனும்”
“ம்ம் அப்பறம்.. இன்னும் வேறென்ன இருக்கு..?” இசை பல்லை கடிக்க
“குறை சொன்ன உடனே கோவம் வருமே..” என முணுமுணுத்தவள், “சரி சரி மணி எட்டே கால் தான் ஆகுது சீக்கிரம் சீனியருக்கு ஃபோன் போடு” என்க “நீயே பேசு நான் ஏற்கனவே பேசீட்டேன்” என்றாள் இசை.
“பேசீட்டியா.. என்ன விட்டுட்டு எப்படி நீ பேசலாம்?”
“உன்ன கொல்லப் போறேன் டி.. காலேஜ்ல இருந்து வந்ததும் எருமையாட்ட தூங்கீட்டு கால் பண்ணா கட் பண்ணிவிடுற.. திரும்ப கால் பண்ண சொல்லி டெக்ஸ்ட் பண்ணேன்னே இப்ப வர அதை பாத்தியா டி? இதுல நீ என்ன சொல்ற.. எரும” கோவத்தில் இசை கத்த அவளுடன் பேசிக் கொண்டே ஃபோனை பார்த்தவள், “சாரி டி.. ரொம்ப டையர்ட் அதான் கொஞ்சம் அசந்துட்டேன்..” சிரிப்புடன் சமாளித்தவிட்டு, “சரி சரி அதவிடு.. சீனியர் என்ன சொன்னாரு?”என பேச்சை மாற்றினாள் .
இசை தமிழுடனான உரையாடலை மலரிடம் பகிற, “பரவாயில்லயே புரிஞ்கிட்டாரு.. நான் கூட நீ சொன்ன மாதிரி என் பர்சனல் ஏன் தலையிடுறீங்கனு திட்டுவாறோனு கொஞ்சம் பயந்தேன்” என்றாள் மலர்.
“ம்ம் அதுனால தானே அவர்கிட்ட என்ன தனியா கோர்த்துவிட்ட..” இசை சொல்லி காட்ட, “சரி சரி சும்மா சும்மா சொல்லிக் காட்டாதே”, மலர். வழக்கம் போல் இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது.
வாக்குவாதத்தை கைவிட்டு, “எனக்கு இப்போ தான் டி மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு..” இசை மனநிறைவுடன் பேச, “எனக்கும் இசை.. இனிமேல் அந்த பாப்பா அழ மாட்ட..” என்று புன்னகைத்தாள் மலர்.
தோழிகள் இருவருக்கும் முல்லையின் ஏக்கங்களை தீர்த்து வைத்த திருப்தி.
error: Content is protected !!