Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ 28 (இரண்டாம் பாகம்)

மருதாயி பாட்டி தான் சசிக்கு பொறுமையாக புரிய வைத்தார்… “சசி இங்க பாரு நீ சொல்றது எல்லாம் நிஜம் தான்நாங்க எல்லாரும் நிரவியை பாக்காம இருந்தது பெரிய தப்பு தான்ஆனா எத்தனை நாள் சுபா எங்க இருக்கானு தெரியாம நாம தேடிட்டு இருந்தோம்அவ கிடைச்சதும் அவளை பத்தி தான் யோசிப்போம்நாங்க யாரும் நிரவியை மறக்கல சசிஅப்பறம் அந்த பொண்ணுக்கு அர்ஜுனனை தவிர அங்க யாரையும் தெரியாதுஅது தான் அந்த பொண்ணை கொஞ்சம் அதிகமா பாத்துக்கிட்டோம்அதனால நாங்க நிரவி குட்டையை மறந்து போயிடுவோமாஎன்ன சசி பேசுற நீஇனிமே நிரவி குட்டியை பத்திரமா பாத்துக்கலாம்…” என்று கூறி அந்த பிரச்சனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தார்

நிரவியின் விஷயத்தில் சசிக்கு அர்ஜுனன் சுபா இருவர் மேலும் இருவரும் நிரவியிடம் நடந்து கொள்ளும் விதத்தில் நம்பிக்கை வரும்அது போக போக தான் தெரியும் இருவரின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என



Advertisement

அனைவரும் வீட்டிற்கு வர அதற்குள் ஊர் மக்களுக்கு அர்ஜுனன் சுபா இருவரும் ஊருக்கு வந்தது தெரிந்ததும் வீட்டின் முன் ஊர் மக்கள் அனைவரும் கூடி இருந்தனர்

Advertisement

அனைவரும் அர்ஜுனன் சுபா இருவரிடமும் கண்ணீருடன் அவர்களின் நலத்தை விசாரித்து கொண்டு இருந்தனர்இருவரும் இன்முகத்துடன் பதில் கூறி கொண்டு இருந்தனர்

Advertisement

அங்கு இருந்த ஒரு பெரியவர் தான்ஏப்பா எல்லாரும் அமைதியா இருங்கஅது தான் பாப்பாவும் ஐயாவும் திரும்பி வந்துட்டாங்க திரும்பி திரும்பி ஏன் பழசை பேசிட்டு இருக்கீங்க.. விடுங்க இனிமே இங்க தானு இருப்பாங்கபொறுமையா பேசிக்கோங்கஇப்போ விடுங்க அவங்க வீட்டுக்குள்ள போகட்டும்என்று ஊரு மக்களிடம் கூறி விட்டு ஐயா நீங்க உள்ள போங்க.. ஒரு ரெண்டு நாள் ஆகட்டும்அதுக்கு அப்புறம் வந்து பேசுறோம்…” என்று கூறி விடைபெற்று கிளம்பினார்அவருடன் ஊர் மக்களும் விடைபெற்று கிளம்பி விட்டனர்

Advertisement

தற்போது வீடு ஆட்கள் மட்டும் தான்மருதாயி பாட்டி மித்ரா மற்றும் சுப்ரியா இருவரிடமும்அம்மாடி ரெண்டு பேரும் போய் ஆரத்தி கலக்கிட்டு வாங்க…” என்று அனுப்பி வைத்தார்

அவர்கள் இருவருடன் சேர்ந்து கண்மணியும் ஆரத்தி எடுத்து அர்ஜுனன் சுபா இருவருக்கும் உள்ளே செல்ல வழி விட்டனர்இருவரும் அந்த வீட்டிற்குள் தன் மூன்று மக்களுடன் ஒன்றாக உள்ளே சென்றனர்ஆரவ் சுபாவின் கையை பிடித்து கொண்டு நிற்க ரித்திகா அர்ஜுனனின் மற்றொரு பக்கம் நின்று இருந்தாள்அர்ஜுனன் நிரவியை தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தான்

அர்ஜுனன் உள்ளே வந்ததும் அவன் நந்தினியை தான் தேடினான்ஆனால் அவள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை…. அதை யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை…. அவனுக்கு நியாபகம் திரும்பி வந்த பின் அதியின் மூலமாக நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டு இருந்தான்அதில் ஒன்று தான் நந்தினியிடம் யாரும் பேசாதது

நந்தினி தன் தவறை உணர்ந்து கொண்டு அவளே யாரிடமும் பேசாமல் இருக்கிறாள் என்றும் அவனுக்கு தெரியும்அவனின் தேடலை பார்த்த கண்மணியின் அப்பாயாரை அர்ஜுன் தேடுற” என்று கேட்டார்.. அவன் யாரையும் தேடவில்லை என்று கூறி விட்டுஅந்த வீடு சாவி வேணும் அங்க போகனும்…” என்று கூறினான்..

“இப்போ எதுக்கு அர்ஜுன் இப்போ தானு வந்த கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு போய் பார்த்துட்டு வா என்று கூறினார்அதனால் தற்போது அந்த பேச்சை விட்டவன் அமைதியாகி அமர்ந்து கொண்டான்

சிறிது நேரத்திற்கு பின் தான் தாங்கள் வெளியில் கிளம்பும் போது இருந்த நந்தினி திரும்பி வந்த போது இல்லையே என நினைத்து அவளின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்ஆனால் அதுவோ வீட்டின் கூடத்தில் தான் ஒலித்தது…. ராஜம்மா மற்றும் அவரின் கணவரிடம் கேட்ட போதுஅவங்க கிளம்பிட்டாங்க தம்பிமுதல் அர்ஜுன் தம்பி வந்ததை பாத்துட்டு கிளம்பிட்டாங்க டிரைவர் கூடதம்பி இங்க வந்துட்டு தான் தோப்பு வீட்டுக்கு வந்தாங்கதம்பியை பாத்துட்டு அழுதுட்டே டிரைவர் கிட்ட சொல்லி வீட்டுக்கு போயிட்டாங்கநான் கூட கேட்டேன்.. ஆனா அவங்க என்னால என் தம்பியை நேருக்கு நேரா பாக்க முடியாதுஅதனால் வீட்டுக்கு கிளம்புறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க…” என்று கூறினார்

அவர் சொன்னதை அனைவரும் கேட்டு கொண்டு தான் இருந்தனர்.. யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லைஅர்ஜுனன் நந்தினியிடம் கூடிய விரைவில் பேச வேண்டும் என நினைத்து கொண்டு அமர்ந்து இருந்தான்ஆனால் அது தன் மனைவியினால் தடை பட போகிறது என தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான்

மெய்யனூர் சென்ற நந்தினி கதவை பூட்டி விட்டு அங்கேயே தரையில் அமர்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள்… “நான் கொஞ்சம் ஒழுங்கா இருந்து இருந்தா இந்த பிரச்சனையே இருந்து இருக்காதுஎல்லாம் என் தப்பு தான்கேட்க கூடாதவங்க பேச்சு கேட்டு புத்தி கெட்டு போய் லூசு மாதிரி எதோ பண்ணிட்டேன்நீ எந்த பிரச்சனையம் இல்லாம திரும்பி வந்துட்ட… ஆனா என்னால உன்னை நேரா பாக்க முடியலகுற்றவுணர்ச்சி தடுக்குது…” என்று அழுது கொண்டு இருந்தாள்

அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க யாரோ வந்துள்ளனர் என அறிந்து கண்ணீரை துடைத்து விட்டு முகத்தை துடைத்து கொண்டே கதவை திறந்தாள்அங்கு வாணன் தான் நின்று இருந்தான்எதுவும் பேசாமல் ஒரு பார்வை அவளை பார்த்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்அந்த நிலையிலும் நந்தினிக்கு வாணன் வந்தது சிறு ஆறுதலை தந்து இருந்தது……

நிரவியை தன் மடியிலேயே அமர வைத்து கொண்டான்…. அதே போல் ரித்திகாவும் அவன் அருகில் தான் இருந்தாள்… அவளுக்கு புது இடம் பயத்தை தந்து இருந்தது…. அதுவும் ஒரு ஊரே அர்ஜுனனிடம் மரியாதையாக பேசியது அவளுக்கு பயத்தை தந்து இருந்தது…. அவளிடம் பேசும் போது இருக்கும் முக பாவனை  தற்போது அப்படியே மாறி இருந்தது…

எங்கு தன்னை மறந்து விடுவாரோ என்ற பயத்தில் அவனுடனே இருந்தது… என்ன தான் ரித்திகா சுபாவுடன் பேசினாலும் அந்த அளவிற்கு அவளுடன் இணையவில்லை… அவளுள் சிறு பயம் எங்கு சுபாவும் காதம்பரி போல் இருந்து விடுவாளோ என…

சுபாவும் அவளின் பயத்தை அறிந்து கொண்டாள்… ரித்திகாவே தான் தன் பயத்தை விட வேண்டும் என நினைத்து அமைதியாகி விட்டாள்… அவளே புரிந்து கொள்வாள் என நினைத்து அவளை தொந்தரவு செய்யவில்லை அவள்…

பெரியவர்கள் அனைவரும் அமர்ந்து எதையோ கலந்து ஆலோசித்து விட்டு அனைவரிடமும் தங்கள் பேசியதை கூறினர்… அது என்னவென்றால் இன்று அர்ஜுனன் சுபத்திரா இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்யலாம் என பேசி இருந்தனர்…. ஆனால் சசி நிரவியுடன் அய்யனார்புரம் வந்து விட்டதால் அதை தடைப்பட்டு விட்டது… எனவே அங்கு இருக்கும் கோவிலேயே மீண்டும் திருமண ஏற்பாடு செய்யலாம் என்று முடிவு எடுத்து இருந்தனர்….

அர்ஜுன் சுபா இருவரும் வீட்டிலேயே வைத்துகொள்ளலாம் என கூறினர்… ஆனால் அவர்கள் கேட்கவில்லை… இன்னும் இரண்டு நாளில் வரும் நல்ல நாளில் வைத்துகொள்ளலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்…

என்ன தான் இந்த வீடு அய்யனார்புரத்தில் இருந்தாலும் அர்ஜுன் ஒருமுறை கூட தற்போது இருக்கும் வீட்டிற்கு வந்ததில்லை… அவர்களின் பூர்விக வீடாக இருந்தாலும் அவனின் மனம் அவனின் அம்மா சிந்தியாவின் பூர்விக வீட்டிற்கு தான் போக எண்ணியது…

எனவே முகுந்தனிடம் தன் எண்ணத்தை கூறினான்… அது கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரியவந்தாலும் அப்போது எதுவும் செய்யவில்லைஅன்று இரவு வாணன் நந்தினி தவிர்த்து அனைவரும் அங்கேயே ஹாலில் மொட்டை மாடியில் என உறங்கினர்

அர்ஜுனன் சுபா இருவரும் தனியாக பேசும் வாய்ப்பே ஏற்படவில்லைஒன்று குழந்தைகள் அவர்களுடன் உள்ளனர்இல்லையேல் வீட்டில் உள்ளவர்கள் யாரவது இருந்து கொண்டே இருந்தனர்

திருமணத்தை அங்கு இருக்கும் துர்கை கோவிலில் விடியற்காலை வைத்து விட்டு காலை உணவை வீட்டில் முடித்து விட்டு மதிய உணவிற்கு அய்யனார் கோவிலில் ஊருக்கே விருந்து ஏற்பாடு செய்து இருந்தனர்மருதாயி பாட்டி தான் அய்யனாருக்கு வேண்டுதல் வைத்து இருந்தார்சுபாவும் ஆரவும் நல்லபடியாக வீட்டிற்கு திரும்பினால் ஊருக்கே விருந்து வைப்பதாக வேண்டி இருந்தார்இதில் அர்ஜுனனும் உயிருடன் வந்ததால் உடனடியாக ஏற்பாடு செய்ய கூறிவிட்டார்….

இந்த இரண்டு நாட்களில் சுபாவின் பயத்தை அனைவரும் உணர்ந்து இருந்தனர்அனைவரும் அய்யனார்புரம் வந்த அடுத்த நாள் காலை அனைவர்க்கும் நன்றாக தான் விடிந்ததுபெண்கள் அனைவரும் சமையலில் செய்து கொண்டு இருக்க ஆணைகள் அனைவரும் குளித்து முடித்து காலை உணவிற்கு காத்துகொண்டு இருந்தனர்.. காலை உணவு உண்டு முடித்து விட்டு ஆண்கள் அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்றுவிட்டனர்அர்ஜுனனும் கண்மணியின் அப்பாவும் தேவியின் அப்பாவும் மட்டுமே வீட்டில் இருந்தனர்..

அர்ஜுனன் அவர்கள் இருவரிடமும் நந்தினியை பார்த்து விட்டு வருவதாக கூறிக்கொண்டு இருந்தான்அதை அந்த வழியாக வந்த சுபா கேட்டு விட நேராக அர்ஜுனன் முன் நின்றுநீங்க அவங்களை பார்க்க போக கூடாதுதிரும்பியும் உங்களை எதோ பண்ணிடுவாங்கபோக கூடாது கண்டிப்பா நீங்க போக கூடாதுஅவங்களை பார்க்க கூடாதுஎன தொடர்ந்து அதையே கூறிக்கொண்டு இருந்தாள்

அவள் தொடர்ந்து ஒன்றை கூறிக் கொண்டு இருப்பதை பார்த்து பயந்த அர்ஜுனன்அம்மு ஓகே கூல் நான் அவங்களை பாக்க போகல.. பயப்படாதநீ உள்ள வா தூங்கலாம்..” என்று கூறினான்..

அவள் அதற்கும்இல்ல நான் தூங்கல நான் தூங்குனதும் நீங்க அவங்களை பாக்க போவீங்கஅவங்க உங்களை எதோ பண்ணிடுவாங்கநான் தூங்கல… நீங்களும் எங்கையும் போக கூடாதுஎன அதையும் தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தாள்

“அம்மு சரி நான் எங்கையும் போகலபயப்படாதஇங்கயே இருஒரு ரெண்டு நிமிஷம் வரேன்..” என்று கூறி சமையலறை சென்று ஒரு காபி தர கூறி அதில் தூக்க மாத்திரை கலந்து அவளுக்கு கொடுத்தான்முதலில் அதையும் குடிக்க மறுத்தவள் அர்ஜுனனின் பிடிவாதத்தால் குடித்து முடித்தாள்.. குடித்த சிறிது நேரத்தில் அவளையே அறியாமல் உறங்கி விட அவளை அறையில் சென்று தூங்க வைத்தான்….

பெண்கள் ஆண்களிடம் சொல்ல அனைவரும் வேகமாக வீட்டிற்கு வந்தனர்அவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்த நேரம் சுபா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள்… அவள் அசையாமல் எழுந்த அர்ஜுனன் சோகம் அப்பிய முகத்தோடு வெளியில் வந்தான்..

வர்ணன் தான் “அர்ஜுன் என்ன ஆச்சுபாப்பா என்ன பண்றா…” என்று கேட்டான்

வர்ணா எனக்கு தெரிஞ்சு இத்தனை நாள் அடக்கி வெச்சு இருந்த அழுத்தம் எல்லாம் இப்போ தான் வெளிய வருதுனு நினைக்குறேன்எங்க திரும்பியும் அக்கா என்னை எதோ பண்ணிடுவாங்களோனு பயப்படுறாஎனக்கு என்னமோ அம்மு அவங்களை பார்த்தா பிரச்சனை ஆகும்னு நினைக்குறேன்அவளோட பயம் வெளிய வர வாய்ப்பு இருக்கு…. என்ன பண்றதுனு தெரியல வர்ணாஅம்மு இவளோ ஸ்ட்ரெஸ் இருப்பானு நினைக்கவே இல்லைஎன்ன பண்றதுனு தெரியல டா…” என்று கவலையாக கூறினான்

விடு அர்ஜுன் சரி பண்ணிடலாம்இப்போ நீ பாப்பா கூட இரு.. அவங்களை எப்போ வேணா பாத்துக்கலாம்.. இத்தனை நாள் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்திட்டிங்கஇனிமே அது வேணாம்முதல் பாப்பாவை பாரு…” என்று கூறினான்

இங்கு தூங்கி கொண்டு இருந்த சுபா அர்ஜுனனை நந்தினி மலையில் இருந்து கீழே விழுந்ததை போல் கனவு கண்டு முகம் எல்லாம் வேர்த்துமாமாஎன்று கத்தி கொண்டு எழுந்து அமர்ந்தாள்

அவளின் சத்தத்தில் உள்ளே ஓடி வந்த அர்ஜுனன் கண்டது மாமா மாமா என்று கூறி கொண்டு இருந்தவளை தான்அவள் முகமோ வேர்த்து வலிந்து கொண்டு இருக்க உடம்பு நடுங்கி கொண்டு இருந்தவளை தான்

அவளுக்கு அர்ஜுனன் கண் முன் நிற்பது கூட தெரியவில்லைஅவன் தான் கன்னத்தை தட்டிஅம்மு இங்க பாருநான் இங்க தான் இருக்கேன் பாருநான் நல்லா தான் இருக்கேன்அம்மு இங்க பாரு…” என்று அழைத்தான்….

அவளோ இன்னும் புலம்பி கொண்டு இருக்க அவளை அணைத்த அர்ஜுன் மீண்டும் அழைக்க ஆரம்பித்தான்அவன் அணைத்ததும் அனைவரும் அறையில் இருந்து வெளியில் சென்று இருக்க குழந்தைகளை சிவனேஸ் மொட்டை மாடிக்கு இப்போதே அழைத்து சென்று இருந்தான்எனவே குழந்தைகள் யாருக்கும் எதுவும் தெரியாது

தொடர்ந்து உலுக்கியதில் சுயநினைவு வந்த சுபாமாமாஎன்று அழுது கொண்டே கூறி தாவி அணைத்து இருந்தாள்அழுது கொண்டே தான் கண்டா கனவை அவனுக்கு கூறியவள்மாமா திருப்பியும் ஏன் இந்த கனவு வருது என்னை விட்டுட்டு திரும்பியும் எங்கையாவது போயிடுவீங்களாஎனக்கு பயமா இருக்கு மாமா…” என்று அழுது கொண்டே கூறினாள்

அவனோ அவளை மேலும் தன்னுடன் இறுக்கிஅம்மு நான் எங்கையும் போக மாட்டேன்உன் கூடவே இருக்கேன்எங்கையும் போக மாட்டேன்இப்போ கொஞ்ச நேரம் தூங்கு …” என்று கூறி அவளுக்கு தட்டி கொடுத்தான்…. அவளும்என் கூடவே இருங்க மாமாஎன்று கூறி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திற்கு சென்று இருந்தாள்….

அர்ஜுனனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லைஇதை உடனடியாக மாற்ற முடியாது என எண்ணி சுபாவிற்கு பொறுமையாக புரிய வைத்து கொள்ளலாம் என நினைத்து அவளை பார்த்தவாறே அமர்ந்து கொண்டான்அவள் தூக்கத்தில் கொஞ்சம் சிணுங்கினாலும் அவளை தட்டி கொடுத்து உறங்க வைத்தான்

இங்கு நடந்த விஷயம் எப்படியோ வாணன் நந்தினி இருவருக்கும் தெரிய நந்தினி அழுது கொண்டே அறைக்கு சென்று விட வாணன் என்ன செய்யலாம் என யோசித்து கொண்டே சுபாவை பார்க்க அய்யனார்புராம் வந்து விட்டான்..

அடுத்த நாளும் சென்று இருக்க அர்ஜுனன் சுபாவின் கல்யாண நாள் நல்ல படியாக விடிந்து இருந்தது…. மிக எளிமையாக தன் மனையாளுக்கு இரண்டாவது முறையாக தாலி கட்டி தன்னவளாக்கி கொண்டான்அர்ஜுனன் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்க சுபா எளிமையான பிங்க் நிற பட்டு புடவையில் எந்த ஒரு அலங்காரமும் இன்றி ஒரு ஆரம் போட்டு கொண்டு தலை பின்னி பூ வைத்து கொண்டு நின்று இருந்தாள்.. அர்ஜுனன் சுபா இருவருக்கும் தற்போது தான் முழுமையான மனநிம்மதி வந்து இருந்தது

பெரியவர்கள்  குழந்தைகள் மட்டும் காலை உணவை முடித்து விட மற்றவர்கள் எல்லாம் எதுவும் உண்ணாமல் அய்யனார் கோவிலுக்கு சென்று பொங்கலிட்டு கிடா வெட்டி சாமிக்கு படைத்தனர்அதன் பின் விருந்து சமைத்து ஊர் மக்களுக்கு உணவிட்டனர்வந்து இருந்த அனைவரும் உண்டு விட்டு அர்ஜுனன் சுபா இருவரையும் மனதார வாழ்த்தி விடைபெற்றனர்

அய்யனார் கோவிலில் இருந்து அர்ஜுனன் சுபத்திரா இருவரும் சென்றது அர்ஜுனனின் அம்மா வீட்டிற்கு தான்இந்த இரண்டு நாட்களில் வீட்டு ஆட்கள் அந்த வீட்டை சுத்தம் செய்து இருந்தனர்மீண்டும் ஆரத்தி கரைத்து இருவருக்கும் சுற்றி விட்டு தான் இருவரையும் உள்ளே விட்டனர்அர்ஜுனனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது

இரண்டு நாட்களில் ரித்திகா குழந்தைகளிடம் கொஞ்சம் நெருங்கி இருந்தாள்ஆனால் நிரவி மட்டும் அவளிடம் பேச மாட்டாள்.. மற்றவர்கள் அனைவரும் குழந்தைகள் எனவே அவர்களுக்கு எதுவும் தெரியவில்லைஆனால் கார்த்திகாவிற்கு கொஞ்சம் விவரம் தெரிந்ததால் அவளுக்கு நிரவியின் மனது புரிந்ததுநிரவிக்காக ரித்திகாவை ஒதுக்கவும் முடியாது….அவள் தான் பரிதவித்து கொண்டு இருந்தாள்

ரித்திகாவை ஜனனி தங்களுடன் அழைக்க அவள் அர்ஜுனனை தான் பார்த்தாள்.. அவன் சரி என்றவுடன் தான் அவளுடன் சென்றான்நிரவி குட்டியை சசி தன்னுடன் அழைத்து சென்றுவிட்டான்

தற்போது வீட்டில் அர்ஜுனனும் சுபா மட்டும் தான்அவனுடன் இனிமேல் இந்த வீட்டிற்குள் இருக்க மாட்டோம் என எண்ணி கொண்டு இருந்தவளுக்கு தற்போது மீண்டும் அவனுடன் இருப்பது அவளுக்கு அதிக சந்தோசமாக இருந்தது….

அவனை விட்டு நகரவே இல்லைஅவனுடனே இருந்தாள்அர்ஜுனும் அவள் எண்ணம் புரிந்து அமைதியாகவே இருந்தான்…. அவளும் பேசவில்லைஅவனும் பேசவில்லைஆனால் இருவரும் இருவர் மீதும் வைத்து இருந்த பார்வையை மட்டும் நீக்கவில்லை….

அவனேஅம்மு” என்று மென்மையாக அழைத்தான்அவளோ தன் காந்த கண்களால் என்னவென்று கேட்டாள்…. அவனோ ஒன்னுமில்லை என்று தலையசைத்து அவளை தன்னுடன் சேர்ந்து அணைத்து கொண்டான்.. நீண்ட நாட்கள் கழித்து தங்கள் அறையில் இருக்கும் அந்த சிறிய அறைக்கு சென்றான்….

அங்கு முழுவதும் அவர்களின் சுகமான நினைவுகள் மட்டும் தான்சிறிது நேரம் அந்த றையில் இருவரும் அமர்ந்து இருக்க அர்ஜுனன் அவளிடம் பரதம் ஆடுமாறு கேட்டான்அவள் வேண்டாம் என மறுக்கஅம்மு எனக்காக ரொம்ப நாள் ஆச்சுஎனக்கு தெரியும் நீ பரதம் ஆடி எவ்வளவு நாள் ஆச்சுனுபசங்களுக்கு மட்டும் தான் சொல்லி தந்துட்டு இருந்த அப்டினுஎனக்காக இனிமே பரதம் நீ ஆடனும்…” என்று கூறினான்

அவன் கூறியதற்கு சரி என கூறியவள் ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவள் பரதம் ஆட ஏற்றவாறு உடை அணிந்து கொண்டு தயாரானாள்…. போனில் பாட்டு போட்டவள் மெல்ல மெல்ல ஆட ஆரம்பித்தாள்..

இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்
என்னுயிரும் கரைவதென்ன

இருவரும் ஒரு முறை காண்போமா
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

அவள் ஆடுவதை நீண்ட நாட்கள் கழித்து கண் இமைக்காமல் பார்த்தான்அவனின் பார்வையில் அவளுக்கு தான் வெட்கம் வந்து தொலைத்ததுஇருந்தும் தன்னை நிதான படுத்தி கொண்டு மீண்டும் ஆட ஆரம்பித்தாள்ஆடி முடித்தவள் அவன் அருகில் வர அப்படியே அவளை தூக்கி மெத்தையில் போட்டவன் அவளை அணைத்து கொண்டு உறங்க ஆரம்பித்தான்…. அவளும் அவனை அணைத்து கொண்டு நீண்ட நாட்கள் கழித்து தங்கள் வீட்டில் தங்கள் அறையில் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!