Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

இதயத்தின் ஓசை கேட்குதோ 2 ❤️( இரண்டாம் பாகம் )

அய்யனார்புரம்

அர்ஜுனன் வீடு இரண்டு வருடமாக பூட்டி தான் இருந்தது…. யாருக்கும் அர்ஜுனன் சுபா இல்லாமல் அந்த வீட்டிற்கு செல்ல இஷ்டம் இல்லை… அனைவரும் பாலாவின் பூர்விக வீட்டில் தான் இருந்தனர்…. பட்டு பாட்டி இங்கு நடக்கும் பிரச்னைகள் தெரியாமலே மூன்று வருடம் முன்பே தன் இறுதி மூச்சை நிறுத்தி இருந்தார்….



Advertisement

அவர் இறந்த ஒரு வருடத்தில் யாரும் நினைக்க முடியாதது எல்லாம் நடந்து இருந்தது… நடந்ததை தற்போது நினைத்தாலும் நெஞ்சம் கணத்து தான் போகும் அனைவருக்கும்…

Advertisement

Advertisement

அங்கு பாலாவின் பூர்வீக வீட்டில்…

“அடியே தனு… அமைதியா உட்காரேன் ஏன் ஓடிட்டே இருக்க…  நீங்காளாச்சும் அவளை பிடிங்களேன்…. என்னால அவ பின்னாடி ஓட முடியல….” என்று சோர்ந்து போய் விட்டாள் மித்ரா…..

Advertisement

“ஏன் நவா ஸ்ட்ரைன் பண்ணிக்குற…. உட்காரேன்…. பாப்பாவை நான் பாத்துக்குறேன்… நீ அமைதியா உட்காரு…” என்று கையில் கட்டு போட்டு இருந்தவளை உட்கார வைத்துவிட்டு அவர்களின் ஆராத்து மகளை ஒரே எட்டில் பிடித்து வந்து சுப்ரியாவிடம் விட்டு வந்தான்…..

சசி மித்ராவுக்கு அவர்களின் கல்யாணம் முடிந்து ஒரு வருடத்திற்கு பின் அவர்களுக்கு பரிசாய் கிடைத்தவள் தன்சிகா…. சேட்டையின் உச்சகட்டம் அவள்… அடுத்த ஒரு  வருடத்தில் இன்னொரு பரிசாய் கிடைத்தவள் தர்ஷிகா….

கர்ணன் சுப்ரியாவுக்கு தன்சிகா பிறக்கும் போது கல்யாணம் நடைபெற்றது…. சசி மித்ராவுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் போது அவர்களின் இளவரசி பிறந்து இருந்தாள்…. அவள் தஸ்விகா……தர்ஷிகா தஸ்விகா இருவருக்கும் ஒரு மாதமே இடைவெளி…..

தன்சிகா சென்ற வாரம் செய்த காரியத்த்தால் தான் மித்ராவுக்கு கை உடைந்து விட்டது…. அவள் விழுக போகிறாள் என்று பிடிக்க போய் அவள் நேராக நின்று அங்கிருந்த கல்லில் கையை ஊன்றி கை உடைந்து இருந்தது…

தன்சிகா அடங்கும் ஒரே ஆள் முகுந்தன் கண்மணியின் மகன் ஆகாஷ்க்கு மட்டும் தான்…. இப்போதும் சுப்ரியாவிடமிருந்தும் ஓடி வந்து இருந்தாள் வெளியே…. உள்ளே ஏற்கனவே  சுப்ரியா தர்ஷிகா தஸ்விகா  இருவரையும் பார்த்து கொண்டு இருந்தாள்…. அவர்களை வைத்து கொண்டு இவளையும் அவளால் பார்க்க முடியவில்லை….

சசியும் வெளியே செல்லும் வேலை இருந்தது…. இதற்கு மேல் முடியாது என நினைத்து முகுந்தனுக்கு அழைத்தான்…. அங்கு அவன் எடுத்தவுடனையே “மாமா சத்தியமா  என் பொண்ணை என்னால அடக்க முடியல… ஆகாஷை கொஞ்சம் வீட்டுக்கு அனுப்பி வைங்க” என்று கூறி வைத்துவிட்டான்….

ஆகாஷ் வீட்டுக்கு வரும் போது அழுது கொண்டு இருந்த தன்சிகாவை சசி சமாதானம் செய்து கொண்டு இருந்தான்… பிரியா மித்ரா இருவரும் சோபாவில் உட்கார்ந்து அவர்கள் இருவரையும் தான் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து கொண்டு இருந்தனர்….

கர்ணன் வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்தான்…. பாலா  அர்ஜுனன் சுபா இல்லாமல் மிகவும் ஒடுங்கி போய் விட்டார்…. கிரிஜா இரண்டு வருடம் முன்பு நடந்த சம்பவத்தில்  இருந்து அவரை வீட்டிலேயே வைத்து கொள்ளவில்லை… வீட்டை விட்டு துரத்தி இருந்தார் பாலா….

தற்போது ஆகாஷ் “தன்சி” என்று சத்தமாக அழைத்தான்… அவனின் குரல் கேட்டவுடன் அழுது கொண்டு இருந்தவள் அப்படியே கப்பென்று வாயை மூடிக்கொண்டு திரு திருவென முழித்தவாறே ஆகாஷை பார்த்தாள்….

“இப்படியே இருக்கனும் திரும்பியும் சேட்டை பண்ணா… உனக்கு இந்த வாரம் சாக்லேட் கட்” என்று கூறிவிட்டு மற்ற மூவரிடமும் கூறிவிட்டு மீண்டும் அவன் வீட்டுக்கு சென்றுவிட்டான்…. இங்கேயே இரு என்று கூறியும் வீட்டுக்கே சென்று விடுகிறேன் என்று கூறி சென்றுவிட்டான்….. அதன் பின் தன்சிகா வாயை திறக்கவே இல்லை…. மித்ரா சொல்லக்கூடியதை கேட்டு அமைதியாக இருந்து கொண்டாள்…

முகுந்தன் வீடு….

ஆகாஷ் மீண்டும் வீட்டுக்கு வரும் போது அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர்…  அவனின் தம்பி யாதவ் சமத்தாக மருதாயி பாட்டியிடம் அமர்ந்து இருந்தான்…. வயதானாலும் உடம்பில் வழுவுடன் இருந்தார் மருதாயி பாட்டி… கண்மணி அடம்பிடித்து  இரண்டாவது குழந்தையை நான்கு வருடம்  முன்பு பெற்று இருந்தாள்… இந்த குழந்தை பிறக்கும் போதும் கஷ்டப்பட்டு தான் பெற்று எடுத்தாள்…. முகுந்தன் இதுக்கு தான் சொன்னேன் என கூறியவனை சமாதானப்படுத்தி இருந்தாள் கண்மணி…

யாதவ் தர்ஷிகா தஸ்விகா இரண்டு பேரையும் விட நான்கு ஐந்து மாதம் பெரியவன்…..

அர்ஜுனன் இல்லாமல் போனதில் மருதாயி பாட்டி மிகவும் சோர்ந்து  போய் இருந்தார்…. உடலில் வழுவிருந்தாலும் மனதளவில் சோர்ந்து தான் இருந்தான்….

ஆகாஷை பார்த்தும் முகுந்தன் “என்னடா ரொம்ப சேட்டையா???” என்று கேட்டான்….

“ஆமா ப்பா பயங்கர சேட்டை.. நான் போறப்ப அழுதுட்டு இருந்தா… என்னை பார்த்ததும் அமைதி ஆயிட்டா…. சாக்லேட் கட்னு சொன்னதும் கப்சிப் தான் மேடம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்…..

செண்பகம் அம்மா தான் “அர்ஜுன் ஒருத்தன் இல்லாம என்ன என்ன ஆகி போச்சு… சுபாவும் ஆரவும் எங்க போனாங்கனே தெரியல… புள்ள என்ன கஷ்டப்படுதோ தெரியல… எங்க தேடியும் கிடைக்கவே இல்லையே ” என்று கூறி அழுதார்…

“அம்மா அழுவாத சுபி கிடைச்சிடுவா… கண்டுபிடிக்கலாம்” என்று கண்மணியும் அழுதவாறே கூறினாள்…

“எப்போ கண்டுபிடிப்பிங்க… இப்பயே ரெண்டு வருஷம் ஆகிடிச்சு…” என்று மேலும் அழுதார்… பிறகு அவரை கொஞ்சம் கொஞ்சமாக யாதாவை வைத்து அவரை சமாதானம் செய்து இருந்தனர்… அப்போது இரவு 8 மணி… வார வாரம் ஞாயிற்று கிழமை இரவு 8 மணிக்கு முகுந்தனுக்கு அழைப்பு வரும் எதோ ஒரு எண்ணில் இருந்து… அந்த எண் வரும்போது முகுந்தன் தனியாக சென்றுவிடுவான் பேச….. யார் என்று கேட்டாலும் சொல்ல மாட்டான்… அந்த சமயத்தில் கண்மணி அவனிடம் சண்டை பிடித்தாலும் அவனே அவன் பாணியில் சமாதானம் செய்து விடுவான்…. கண்மணிக்கு சந்தேகம் என்று எல்லாம் இல்லை… ஒரு பயம் எதோ பிரச்சனையா என்று… ஆனால் அவன் எதுவும் சொல்லமாட்டான்…. தற்போதும் அந்த அழைப்பு தான் வந்தது… நீங்க பேசுங்க என்று கூறி அவன் பேச சென்றுவிட்டான்… அவன் பின் செல்ல போனவளை ஆகாஷ் பாடத்தில் சந்தேகம் என்று தன்னுடன் அழைத்து கொண்டான்….

முகுந்தன் பத்து  நிமிடம் பேசியபின் வழக்கம் போல் வந்து அமர்ந்து கொண்டான்….  கண்மணியையும் சமாதானம் செய்து இருந்தான்…

மெய்யனூர்….

தேவியின் பெற்றோர் இன்னும் அதே ஊரில் தான் இருந்தனர்… அர்ஜுனன் சுபா இல்லாமல் போனதில் மிகவும் ஒடிந்து போய் விட்டனர்… அவர்களை வாணன் தான் பார்த்துக்கொள்கிறான்…. வர்ணனும் பார்த்துக்கொள்கிறான்….

ஜனனியின் வீடு….

ஜனனியின் தந்தை ஒரு வருடம் முன்பு தான் உடல்நிலை சரியில்லாமல் இறந்து இருந்தார்… இரண்டு வருடம் முன்பு நடந்த பிரச்சனையில் வர்ணன் அவர்கள் வீட்டில் இருந்து ஜனனியின் வீட்டுக்கு வந்துவிட்டான்….

வாணனிடம் பேசிக்கொண்டு தான் உள்ளனர்… ஆனால் வீட்டிற்கு செல்வதில்லை… நந்தினி அங்கு இருப்பதினால் வீட்டிற்கு செல்வதில்லை….. நந்தினி அந்த வீட்டில் ஒரு பொருள் இருப்பது போல் தான் உள்ளாள்…..  வாணன் அவள் கையால் தண்ணீர் கூட குடிப்பது இல்லை இந்த இரண்டு வருடத்தில்…..

நிரவிகா தற்போது வர்ணனுடன் தான் உள்ளாள்…. நிரவி மட்டுமில்லை சிவனேஸ் கூட வர்ணனுடன் தான் உள்ளான்…. சிவனேஸ் தற்போது தன் பொது தேர்விற்கு தயாராகி கொண்டு உள்ளான்….. அவன் தற்பொழுது தான் பன்னிரண்டாம் வகுப்பு அடி எடுத்து வைத்துள்ளான்….

வர்ணன் ஜனனிக்கு நிரவி குட்டி பிறந்த ஒரு ஆண்டுக்கு பின் அருனேஷ் பிறந்து இருந்தான்….

தற்போது வீட்டில்

நிரவியும் கார்த்திகாவும் அருனேஷை  மேலுள்ள அறையில் தேடிக்கொண்டு இருந்தனர்…. அவனுக்கு நேற்றில் இருந்து காய்ச்சல்…. மருந்து சாப்பிட தான் அனைவரும் தேடிக்கொண்டு இருந்தனர்… ஜனனி கீழே தேட வர்ணன் வெளியில் தேடிக்கொண்டு இருந்தான்… ஜனனியின் அம்மா அமைதியாக அமர்ந்து இருந்தார் சோபாவில்…

சிவனேஸ் தன் அறையில் இருந்து வெளியில் வந்து ஜனனியின் தாய் முன்பு நின்று “பாட்டி அவன் எங்க???”  என்று அவனின் இடுப்பில் கை வைத்து கொண்டு கொஞ்சம் கேலியாகவே கேட்டான்…

அவர் கொஞ்சம் தடுமாற்றமாகவே “தெரியலயே தம்பி அவன் எங்கனு” என்று கூறினார்… அவருக்கு தெரியும் அருனேஷ் எங்கு என்று….  அவன் எங்கு சொன்னால்  அவனிடம் இவர் தான் மாட்டிக்கொள்வார்…. அதனால் தான் அமைதியாக உள்ளார்…

இவர் சொல்லமாட்டார் என தெரிந்துவிட்டது… எனவே ஜனனியிடம் “ஜனனிம்மா அவன் இப்ப மருந்து குடிக்க வரலனா அவனோட சைக்கிளை பரண் மேல போட்டுங்க… அப்புறம் அவனோட பேட் பால் ரெண்டையும் மறைச்சி வைங்க” என்று சத்தமாகவே கூறினான்….

அவன் கூறிய அடுத்த நொடி டிவி வைக்கும் ஸ்டாண்டில் உள்ள கப்போர்டில் இருந்து வெளியே வந்து இருந்தான் அருனேஷ்…

ஜனனி அவனை பிடித்து மருந்து கொடுத்த பின்னர் தான் சிவனேஸிடம் விட்டாள்…. எப்போதும் அருனேஷ் சிவனேஸ் உடன் தான் உறங்குவான்… அருனேஷ் அவனின் அண்ணன் செல்லம் தான் எப்போதும்….

வர்ணன் அருனேஷை  செல்லமாக தலையில் கொட்டி விட்டு தூங்க சென்றான்… அவன் சென்றபின் ஜனனி தன் தாய்க்கும் மாத்திரை தந்துவிட்டு அவரை படுக்க அனுப்பிவிட்டு நிரவி கார்த்திகாவுக்கு படுக்க அனுப்பினார்….

சிவனேஸ் அருனேஷை படுக்க அழைத்து சென்றான்… அனைவரையும் அனுப்பிவிட்டு அனைத்து கதவும் பூட்டி உள்ளதா என்று பார்த்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றாள் ஜனனி…

தூக்கம் வராமல் ஜன்னல் வழியே வெளியில் வெறித்தவாறு நின்று இருந்தான்…. “என்ன ஆச்சு இன்னும் தூங்கலயா??” என்று கேட்டவாறே கதவை பூட்டிவிட்டு அவனருகில்  சென்றாள்…

“ஹ்ம்ம் எப்படி வரும்… ரெண்டு வருஷமா சரியான தூக்கமே இல்லையே…. அர்ஜுனன் இல்லனு ஏத்துக்கவே முடியலயே… அதுவும் இல்லாம பாப்பா அவ எங்க போனானு தெரியலயே அப்புறம் எப்படி ஜானு… அவளை எங்க தேடியும் கிடைக்கல… எங்க இருக்கானே தெரியல…” என்று கலங்கியவாரு கூறினான்…

“மாமா அழுகாத… கண்டிப்பா கிடைப்பா… நீங்களே இப்படி இருந்தா அத்தான் எப்படி இருப்பாங்க… தைரியமா இருங்க…. கண்டிப்பா கிடைப்பா… ” என்று கூறி அவனை தூங்க வைத்து அவளும் சுபாவை நினைத்து கலங்கிவாறே தூங்கினாள்…

வாணன் வீடு….

வாணன் காலையில் வீட்டை விட்டு வெளியில் சென்றால் இரவு தான் மீண்டும் வீட்டுக்கு வருவான்… காலையில் வர்ணன் வீட்டில் முடித்துவிட்டு வயலுக்கு சென்று விட்டு ஆலைக்கு சென்று விட்டு மற்ற வேலை செய்து விட்டு இரவு தான் வீட்டுக்கு வருவான்…..

நேராக அறைக்கு சென்று தூங்கிவிடுவான்….  நந்தினியை ஒரு ஆளாக கூட மதிக்க மாட்டான்…. அப்படி ஒருத்தி இருப்பதையே அவன் மறந்து இருந்தான்….

மதியம் உணவுக்கு ஒரு நாள் அங்கு செல்வான் இன்னொரு நாள் செல்லமாட்டான்…  ஆனால் அவனுக்கான உணவை ஜனனி கொடுத்து அனுப்பிவிடுவாள் யார் மூலமாகவோ… இரவு அவன் கண்டிப்பாக அங்கு தான் உண்ண வேண்டும் இது நிரவியின் கட்டளை… அதை என்றுமே அவன் மீற மாட்டான்….

நந்தினி தற்போது அவள் செய்த தப்பை உணர்ந்து இருந்தாள்…. அது தப்பு இல்லை அது பெரிய பாவம் என்று கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து இருந்தாள்… ஆனால் அவளை யாரும் நம்ப தான் தயாராக இல்லை….  அவள் யாருக்காக அனைத்தும் செய்தாளோ அவர்கள் அவளை மதிக்கவே இல்லை…. நம்பவும் இல்லை…..

கோவை…

ஆரவ் சுபாவிடம் பேசிவிட்டு நண்பர்களுடன் அனைத்தையும் சுற்றி பார்த்து கொண்டு இருந்தான்…. அப்போது யாரையோ பார்த்து பயந்து தன் நண்பனுக்கு பயந்து நின்றுவிட்டான்… அது கர்ணன்…. கர்ணன் ஆரவை கண்டுகொள்வானா ?!??!?!?……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!