Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 22

அத்தியாயம்  22

வேலை முடித்து வீட்டுக்கு கிளம்ப இருந்த பானுவை, மேனேஜர் அழைத்தார்.

ஒரு கம்பெனியின் பெயரை சொல்லி, அவர்களிடம் இருந்து இந்த மாதத்திற்கான ஸ்டாக் ரிப்போர்ட் அன்ட் டெட்டார்ஸ் லிஸ்ட் வந்து விட்டதா என கேட்டு, அதை எடுத்து வர சொல்லி,  அந்த பைலை பார்த்துக் கொண்டிருந்தார்.



Advertisement

அடுத்து  ஒரு வேலையை கொடுத்து அவளை முடித்து கொடுத்துவிட்டு செல்லும் படி கூறினார்.  பானுக்கு கோவம் வந்தது.  இவருக்கு நான் மட்டும்தான் கண்ணை உறுத்துவேனா…….?  எப்பப்பாரு நான் வீட்டுக்கு கிளம்பும்போது, ஏதாவது எக்ஸ்ட்ரா வேலை கொடுத்து உட்கார வைக்கிறார், என கறுவிக் கொண்டாள் மனதில்.

அவர் கொடுத்த வேலையை செய்து முடிக்க, எப்படியும் ஒரு மணிநேரத்துக்கு மேலே ஆகும்.  நல்ல பசி வேறு அவளுக்கு.   தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

ஒருத்தர் ஒருத்தராக கிளம்ப ஆரம்பித்திருந்தனர்.  புரபேஷன் பீரியட் முடியும் வரை, பல்லை கடித்து இதையெல்லாம் தாக்கு பிடிக்கவேண்டும் என பொறுமையாக செய்ய ஆரம்பித்தாள்.

Advertisement

வேலை செய்யும் மும்முரத்தில் சுற்றுபுறத்தை மறந்து வேலையில் கவனமானாள்.

Advertisement

எப்போதும் இதுமாதிரியான தருணங்களில் தரணி கூட இருந்து உதவி செய்வான்.   இன்று அவனும்  வீட்டிற்கு சென்றிருந்தான் முன்னதாக.

வேலையில் கவனமாக இருந்தவளுக்கு, தன் கழுத்தின் பின்பகுதியில் நெருக்கமாக ஏதோ உரசும் உணர்வு ஏற்பட்டு. சடாரென துள்ளி எழுந்தாள்.  அவள் எழுந்த வேகத்தில், மடியிலிருந்த பைல் கீழே விழுந்தது.  பைலில் இருந்த பேப்பர்ஸ் எல்லாம் நாலாபுறமும் சிதறியது.

ஹேய்………… பார்த்து…  நான் தான் குடுத்த வேலையை முடிச்சிட்டியான்னு பார்க்க வந்தேன் என நின்றுகொண்டிருந்தான் மேனேஜர் அவளின் பின்புறமாக.

Advertisement

சுற்றிப் பார்த்தாள்.  அவளையும் மேனேஜரையும் தவிர அங்கு யாரும் இல்லை.   பேங்கே காலியாக இருந்தது.

மேனேஜரின் கோணலான சிரிப்பும், மேய்ச்சலான பார்வையும் வித்தியாசமாக இருந்தது.  அவளுக்கு சந்தேகத்தை கொடுத்தது.  மனதில் பயம் வந்தது.

பயத்தில் நெஞ்சு தடதடக்க ஆரம்பித்தது.  உடலெல்லாம் வேர்த்து, நெஞ்சு எகிறி வெளியே குதித்துவிடும் போல இருந்தது அவளுக்கு.

மேனேஜர் அவளது அருகில் நெருங்கி நின்று… ஹி….ஹி….. கூல் பேபி…….., எதுக்கு பயம்.    பார் உன் முகமெல்லாம் எப்படி வேர்த்திருக்கு என அவளது முகத்தை தொட வந்தான்.

அவன் தொடுவதற்கு முன்னால் தன் முகத்தை நகர்த்திக் கொண்டவள், அங்கிருந்து நகர முயன்றாள்.  பின்புறமாக மேஜையை ஒட்டி  நின்றிருந்தவளை நகர விடாமல், அவளது டேபிளின் இருபுறமும் கைகளை வைத்து நகரவிடாமல் தடுத்து நிறுத்தினான்.

என்ன பேபி…………….?  ஒன்னும் புரியாதது போல முழிக்கற….?

உனக்கென்ன… புதுசா இது.    ஏற்கனவே அந்த தரணியோட அவ்வளவு க்ளோசா பழகறயே…?    ஒன்னும் இல்லாமயா, நீயும் அவனும் அப்படி இழையறீங்க.

ச்சீ……..

என்ன ச்சீ….. ?   எனக்கு தெரியாதுன்னு பார்த்தியா…….?

அவனோட சாப்பிட போறதும், சிரிச்சு பேசறதும், அவன் பைக்ல உன்னை கூட்டிட்டு போறது எல்லாம் நான் பார்த்துட்டு தானே இருக்கேன்.  அது மாதிரி எனக்கும் கொஞ்சம் கருணை காட்டுறது.  ஏன் சின்ன பையனா இருந்தா தான் பிடிக்குமோ…?

அவனது வார்த்தையிலும், விகாரமான சிரிப்பிலும் அவளுக்கு வயிறு கலங்கியது.  மனம் முழுவதுமாக இறைவனை மன்றாடிக் கொண்டிருந்தது.  இறைவா…. இப்படி இவன்கிட்ட தனியா மாட்டிக் கிட்டேனே என்னைக் காப்பாத்து… என மனம் அலறிக் கொண்டிருந்தது.

சும்மா சொல்லக் கூடாது……………………. என அவளை மேலிருந்து கீழாக பார்வையால் அளந்தவன்……… வில்லங்கமாக இளித்தான்.

அவளது மேனியில் படர்ந்த அவனது பார்வையே அவளை கூசச் செய்தது.  காய்ந்திருந்த தொண்டையை, எச்சில் கூட்டி முழுங்கி ஈரப்படுத்தியவள், தன்னை திடப்படுத்திக் கொண்டு, நகருங்க ஸார்……. என அவனது கைகளை தட்டி விட முயன்றாள்.

தட்டி விட முயன்ற அவளது கையை வாகாக அவனது கைக்குள் பிடித்தவன், அவளது விரல்களை அழுத்திப் பிடித்துக் கொண்டான் அவள் விலகாம்படி.   அவனது கை கொடுத்த அழுத்தத்தின் வலியில் அவளுக்கு கண்கள் கலங்கியது.

கையை விடுங்க……. என கையை உதற முற்பட்டாள்.

அவ்வளவு ஈசியா விட்டுறுவேனா……….?  இது மாதிரி தனியா சந்தர்ப்பம் அமைய, நான் எவ்வளவு நாளா காத்திட்டிருந்தேன்.  எப்படி ஈசியா விட முடியும்.

நான் உங்கிட்ட பேசனும்னு ஏதாவது வேலை கொடுத்து உட்கார வச்சாலும், பசை போட்டு ஒட்டின மாதிரி எப்பவும் உன் கூடவே தரணி இருந்ததால என்னால உன்கிட்ட நெருங்க முடியல.

டேபிள் மேலிருந்த அவளது போன் ஒலிக்க ஆரம்பித்தது.  டிஸ்பிளேயில் அவளது அம்மா ஜமுனாவின் போட்டோ தெரிந்தது.

அதைப் பார்த்தவன், உன் அம்மாவா……… அ…….து ……….. என்றான் விகாரமாக இளித்து.

அவனது வார்த்தையில் உஷ்ணம் வரப்பெற்றவள், இன்னொரு கையால் பக்கத்தில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து க்ஷண நேரத்தில் அவன் மண்டையில் ஓங்கி அடித்தாள்.

அவளது தாக்குதலை எதிர்பாராதவன், அவளது கையை விட்டுவிட்டு வலியில் தனது மண்டையை பிடித்துக் கொண்டு வலியில் கண்களை மூடி தரையில் சாய்ந்தான்.

அவனது பிடி தளர்ந்த க்ஷணத்தில் அங்கிருந்து வேகமாக வெளியில் வந்து வாயிலைத் தொட்டிருந்தாள் மின்னல் வேகத்தில்.

தான் தப்பி விட்டதை நம்பமுடியாமல் மூச்சை நன்றாக இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்தினாள் ரோடில் வந்து நின்று.

பாதியளவுக்கு மேல் இழுத்து விட்டு மூடியிருந்த ஷட்டரைத் தூக்கிவிட்டு, கதவைத் திறந்து வருவதற்குள் அவளுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது பயத்தில்.

வாட்ச்மேனையும் காணோம், எங்கே சென்றிருப்பார் என தெரியவில்லை.  அதற்கு மேல் அங்கே நிற்க பயந்து வேகமாக ஒடி வந்தாள் அங்கிருந்து.

நாலு பில்டிங் தள்ளி வந்து நின்றவள், பக்கத்தில் இருந்த கடை ஓனரிடம் இருந்து போன் வாங்கி சங்கருக்கு போன் செய்து இவள் வேலை செய்யும் இடத்திற்கு வரச் சொன்னாள்.

அவரிடம் இன்னொரு போன் செய்வதற்கான அனுமதியும் பெற்று தரணிக்கும் போன் செய்து அவனையும் உடனே அங்கு வரும் படி கூறினாள்.

அவர்கள் வரும் வரை எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்து நின்றாள் அங்கேயே.  எங்கே வெளியில் சென்றாள் அவன் தன்னை தேடி வந்து விடுவானோ என்ற பயத்தில் முகமெல்லாம் வெளிறியிருந்தது அவளுக்கு.

அவளையே பார்த்திருந்த புக் ஷாப் ஓனர், “ஏதாவது பிரச்சினையாம்மா…….. என்றார் அவளது பயந்த முகத்தைப் பார்த்து”.

இல்லை எனத் தலையசைத்தவள், “நான் என் ஹஸ்பன்ட் வர வரைக்கும் இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கவா………….?” எனக் கேட்டாள்.

அப்பொழுதுதான் அந்த கடையை சுற்றி பார்த்தாள்.  அது ஒரு லென்டிங் லைப்ரரி.  தமிழும் ஆங்கிலமும் கலந்து பலவிதமான புத்தகங்கள் இருந்தது.

நெருக்கடியான இடம். இரண்டு மூன்று பேருக்கு மேல் உள்ளே இருக்க முடியாது.  மாலை நேரமாதலால் புத்தகம் வாடகைக்கு எடுப்பதற்கென வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

அவருக்கும் சங்கடமாக இருந்தது.  அவளைப் பார்த்து முடியாது என்று சொல்ல.  வியாபார நேரம், யோசித்தவர் உட்பக்கமாக புக் ஷெல்புக்கு இடையில் ஒரு ஸடூலைப் போட்டு உட்கார்ந்துக்க ம்மா……. என இடம் கொடுத்தார்.

அவர் இடம் கொடுத்ததும் அவருக்கு கைக்கூப்பி, கண்கள் கலங்க “தேங்ஸ்ங்க.. கொஞ்ச நேரந்தான்.  என் ஹஸ்பென்ட் அரைமணி நேரத்தில வந்துருவார்.  அதுவரைக்கும்தான்……….  உங்க உதவிய நான் மறக்கவே மாட்டேன். தேங்க்ஸ்ங்க.” என்றாள்.

அவளது கலங்கிய முகமும், தடுமாற்றமான வார்த்தையிலும், அவள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் எனத் தெரிந்தது அவருக்கு.

அதற்குள் கஸ்டமர்கள் வரவே அவர் வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

சங்கருக்கு தெரியாத நம்பரில் இருந்து போன் வரவே ஏதோ அட்வர்டைஸ்மென்ட் கால் என எண்ணி முதல் இரண்டு முறை எடுக்காமல் இருந்தான்.

அடுத்து அடுத்து அதே நம்பரில் இருந்து கால் வரவே எடுத்து பேசினான்.  மனைவியின் குரலைக் கேட்டதும், ஆச்சர்யம் அவனுக்கு.  அதுவும் வேறு ஏதோ போனில் இருந்து பேசவும் என்னவோ என பயம் எழுந்தது.

அவளது பதட்டமான பேச்சும், அழுகை கலந்த குரலும் அவனுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

என்ன பானு…?  ஏன் வேற போன்ல இருந்து பேசறே…..?  உன் போன் எங்கே……? எங்கயிருந்து பேசறே……? என்ற அவனது எந்த கேள்விக்கும் பதில் அளிக்காதவள், அவள் வேலை செய்யும் இடத்திற்கு அருகே இருக்கும் அந்த புக் ஷாப்பின் பெயரைச் சொல்லி அங்கே வரும்படி கூறி வைத்து விட்டாள்.

வைக்கும் போதே திரும்ப போன் பண்ணாதீங்க இந்த நம்பருக்கு, நான் இங்க வெளிய வந்து இந்த கடை ஓனர்கிட்டயிருந்து போன் வாங்கி பேசறேன்.  நேர்ல வாங்க சொல்றேன், என வைத்து விட்டாள்.

அவனுக்கு மனைவியின் பேச்சைக் கேட்டு பதற்றம் அதிகமானது.  மாலை நேர ட்ராஃபிக் அதிகமாக இருந்ததால் வேகமாகவும் வர முடியவில்லை.  மனைவியின் போனுக்கு அடித்தால் ரிங் போய் கொண்டேயிருந்தது.

நேரம் அதிகமாக அதிகமாக அவனுக்கும் டென்ஷன் அதிகமானது.  ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டாளோ என்று.  வேலைக்கு சேர்ந்த இத்தனை நாட்களில் மனைவியிடமிருந்து இதுமாதிரியான போன்கால் வந்தது இல்லை.

அதுவும் பானுவின் கலக்கமான மற்றும் அழுகையை அடக்கிக் கொண்டு பேசுவது போன்ற குரல் அவனை பயப்படுத்தியிருந்தது.

தரணிக்கு போன் வரும் போது கிட்டதட்ட அவன் வீட்டை அடைந்திருந்தான்.  புது நம்பரிலிருந்து பானுவின் வாய்சைக் கேட்டதும் அவனுக்கும் ஆச்சர்யம் கலந்த குழப்பம்.

அவன் என்ன என விசாரிப்பதற்கு இடமளிக்காமல், இந்த புக் ஷாப்பின் பெயரைச் சொல்லி வரச் சொல்லி போனை கட் செய்து விட்டாள்.

அவனும் அவளது போனுக்கு கால் செய்து பார்த்தான்.  கால் எடுக்காமல் ரிங் போய்கொண்டே இருந்தது.

அவனுக்கும் குழப்பமே.  ஏன்? வெளிய வந்து போன் பண்ணனும்.  போன் எங்கயாவது, மிஸ் ஆகி இருக்குமோ…………? என யோசனையில் அவனும் திரும்பி வந்தான்.

தரணிக்கு போன் செய்து விட்டு வருத்தப்பட்டாள், அவனுக்கு போன் செய்ததற்காக.  அவனும் இந்த மேனேஜர் போல தப்பான எண்ணத்தோட பழகியிருப்பானோ……….?

இப்ப அவனுக்கு இது தெரிய வந்ததுனா, ஏதாவது இதை வச்சு பிளாக்மெயில் பண்ணுவானோ…………?  அச்சோ, அவசரப்பட்டுட்டேனா……….. என தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

சங்கரைப் பார்க்கும்வரை அவளுக்கு மனது ஒரு நிலையில் இல்லை.  ஏற்கனவே அவளது பேங்கிற்கு வந்திருப்பதால் அங்கிருந்து நான்கு பில்டிங் தள்ளியிருந்த அந்த லென்டிங் லைப்ரரியை கண்டு பிடிக்க அவனுக்கு கடினமாக இல்லை.

அவனது காரைப் பார்த்து எழுந்தவள், அந்த கடை ஓனருக்கு நன்றி கூறி சங்கரை நோக்கி நடந்தாள்.  அவன் காரிலிருந்து இறங்கியதும் அவனது கையைப் பிடித்து அவனது தோளில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

ஹேய்….. என்ன ஆச்சு…..? என்னமா…….? இங்க பாரு……. என்னன்னு சொல்லு…….?  நீ பாட்டுக்கு போன் பண்ணி ஒன்னும் சொல்லாம வரச்சொல்லிட்டு, இப்படி பார்த்ததும் அழுதா எனக்கு என்னன்னு தோணும்.

பதில் சொல்லாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டேயிருந்தாள்.  முதலில் காரிலிருந்து தண்ணீர் பாட்டிலை அவளுக்கு எடுத்துக் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தியவன், ரிலாக்ஸ் பானு…. என அவளை ஆறுதல்படுத்த முயன்றான்.

பானு வெறுங்கையோடு நின்றிருப்பதைப் பார்த்து அவனுக்கு மேலும் குழப்பமானது.  “இவளோட ஹேன்ட்பேக் எங்கே….?  போன்லாம் எங்கே…? என அவளைப் பார்த்தான்.

அவன் பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து அவளது முகத்தை துடைத்து விட்டவன், இப்ப சொல்லு, உன் பேக் எங்க, போன் எங்க, என்னாச்சு………….?  என்றான்.

சரியாக அந்த நேரம் தரணியின் பைக் அவர்களை ஒட்டி வந்து நின்றது.  தரணியை ஏற்கனவே பார்த்திருந்ததால், இவன் ஏதாவது பானுவிடம் பிரச்சினை செய்திருப் பானோ… என அவனை முறைக்க ஆரம்பித்தான் சங்கர்.

தரணிக்கு சங்கர் யாரென்று தெரியாததால், பைக்கை நிறுத்தி இறங்கிய தரணி, சங்கரைக் கண்டு கொள்ளாமல் பானுவிடம் வந்தான்.

என்னாச்சு பானு……….?

சங்கர், இவன் ஏதாவது உன்கிட்ட வம்பு பண்ணானா……………….? என்றான்.

தரணிக்கு சங்கரின் வார்த்தையில் கோவம் வந்தது.  ஸார் பார்த்து பேசுங்க……….  முதல்ல நீங்க யாரு……………………..?

பானு, அவர் என்னோட ஹஸ்பன்ட்……… ஸார்.

ஓஹ்………… என கொஞ்சம் தணிந்தான்.

என்னாச்சு பானு….?  இன்னும் ஏன் இங்க இருக்கீங்க……?  நீங்க வீட்டுக்கு போகலையா……………..? உங்க போன் எங்க………………?  ட்ரை பண்ணா ஃபுல் ரிங் போய் கட்டாகுது.

அ………..து…. என தடுமாறியவள், சங்கரைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

தைரியத்தை வரவைத்துக் கொண்டு நடந்தது முழுவதையும் இருவரிடமும் சொல்லி முடித்தாள்.

அவள் சொல்ல சொல்ல சங்கருக்கு மேனேஜரை இழுத்து நையப் புடைக்கும் ஆத்திரம் தலைக்கேறியது.  என்ன தைரியம் இருக்கனும் அவனுக்கு.  எங்க இருக்கான் அவன்….?  இன்னும் அங்கேயா இருக்கான்..? வா… என அவளது கையைப் பிடித்து இழுத்து சென்றான்.

தரணி அவர்களுக்கும் முன்னே பைக்கை கொண்டு சென்று நிறுத்தி, இறங்கி உள்ளே சென்றான் வேகமாக.

பயத்தில் உள்ளே வர மறுத்த பானுவை திரும்பிப் பார்த்த சங்கர், ஏதும் பேசாமல் மனைவியின் கையைப் பிடித்தவாறே பேங்கிற்குள் நுழைந்தான்.

அங்கே மேனேஜர் தரையில் அசைவில்லாமல் விழுந்து கிடந்ததைப் பார்த்து,  தரணி முதலில் ஓடி சென்று பார்த்தான்.

பானுவுக்கு மேனேஜர் தரையில் விழுந்து கிடந்த கோலத்தைப் பார்த்ததும் பயத்தில் அழுகை வந்தது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!