Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 25

அத்தியாயம்    25

மதுசூதனனும் பூரணியும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்திருந்தனர்.  பிரதோஷ பூஜைக்காக.  நடராஜர் அபிஷேகம், ஹாரத்தி எல்லாம் பார்த்து…  அம்மன் சிவகாமி தரிசனமும் முடித்து, கோயில் சுற்று பிராகாரத்தில் வந்து அமர்ந்தனர்.

பூர்ணி,  “பணம் ரெடி பண்ண முடிஞ்சுதா……………..?”



Advertisement

மது, “கேட்ட இடத்துல எல்லாம் இழுத்தடிக்கிறாங்க.  இடத்துக்காரர் வேற சீக்கிரம் பணத்தை கேட்டு அவசரப்படுத்தறார்”.  தெரிஞ்ச பிரண்ட் கிட்ட கேட்டிருக்கேன், அவனும் உறுதியா சொல்லமாட்டேன்றான்.  பார்க்கலாம்னு மழுப்பறான்.

கைல வெண்ணைய வச்சிட்டு, ஏன் இவ்வளவு அலையனும்…?  நான் சொன்னா நீங்க கேட்கவே மாட்டேன்றீங்க………………….  எதுக்கு இவ்வளவு சிரமம்?

எதுவும் பேசாமல் அர்ச்சனை பையில் இருந்த தேங்காய் மூலியை எடுத்து தரையில் தட்டி உடைத்து, தேங்காய் ஓட்டிலிருந்து, தேங்காயை பிரித்தெடுத்து வாயில் வைத்து மென்றான்.

Advertisement

“ஏன் இவ்வளவு பிடிவாதம்.  என்னோட அக்கௌண்ட்ல சும்மாதான… இருக்கு.  அதை எடுத்து யூஸ் பண்ணுங்கன்னு சொன்னா, கேட்க மாட்டேன்றீங்க……”

Advertisement

உடைத்த தேங்காய் வில்லையிலிருந்து ஒரு துண்டை எடுத்து, பூர்ணியின் வாயில் வைத்தான்.

“நம்மகிட்டயே பணம் இருக்கும் போது அடுத்தவங்ககிட்ட போய் கடன் வாங்கனுமா…………..?”

மறுத்து பேசினால், அவளுக்கு கஷ்டமாக இருக்கும் என பேச்சை மாற்றி,  ‘’வீட்டுக்கு போலாமா………….?” என எழுந்தான்.

Advertisement

அவனை முறைத்துப் பார்த்தவள், ஏதும் பேசாமல் எழுந்து, அவனுக்கு முன்னே நடந்தாள்.  மனைவியின் கோவத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தது.   எங்கே அவளுக்கு தெரிந்தால் இன்னும் கோவப்படுவாளோ என, அவளுக்கு தெரியவிடாமல் உதட்டுக்குள் மறைத்துக்கொண்டான்.

வீட்டிற்கு வந்தும், பூர்ணி மதுவிடம் முகம் கொடுத்து பேசவில்லை.  இரவு படுக்கைக்கு வரும்வரை பொறுத்திருந்தவன், அவள் வந்து படுத்ததும் “இப்ப என்ன… உனக்கு, உன்னோட பணத்தை நான் வாங்கிக்கனும் அவ்வளவுதான.  சரி வாங்கிக்கறேன்…” என்றான்.

பூர்ணி, “நிஜமாவா………..!  அப்புறம் மாத்தி எதுவும் பேச மாட்டீங்களே…”

மது, “நிஜமாதான்டா… சொல்றேன், ஆனால் ஒரு கன்டிஷன்…”

“என்ன………………..?” எனப் பார்த்தாள்.

“கடனாதான்… வாங்கிப்பேன்”.

எப்படியோ…., வாங்க சம்மதித்ததே, அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

மதுசூதனனின் ஓட்டலுக்கு பக்கத்தில் இருந்த கடையும் பகடிக்கு வந்திருந்தது.  அதையும் எடுத்து கடையை விரிவுபடுத்த எண்ணிதான் பணத்துக்கு அலைந்து கொண்டிருந்தான்.

பூர்ணி அவள் அக்கௌண்டில் இருக்கற பணத்தை எடுத்து உபயோகப் படுத்துமாறு கூறியும், எடுக்க தயங்கி மறுத்து விட்டான்.  சென்னையில் இருந்த அவளுக்கு சொந்தமான வீட்டிலிருந்து, கடையிலிருந்து வந்த வாடகைப் பணத்தை எல்லாம் அவளது பெயரில் செல்வி பேங்க் அக்கௌண்டில் போட்டு வைத்திருந்தார்.

அதைதான் அவனை எடுத்து உபயோகப்படுத்த சொன்னதற்கு மறுத்திருந்தான்.  மனைவியின் எண்ணம் புரிந்து, அவளை மேலும் வருத்தப்படுத்தாமல், அவளது விருப்பத்திற்கு சம்மதித்திருந்தான்.

பூர்ணி, இன்னொரு விஷயமும் உங்ககிட்ட பேசனும்.

மது…………………

அது……………. மாமாவையும் உங்க கூடவே துணைக்கு வச்சுக்கலாமே.  பக்கத்து கடையை எடுத்தீங்கன்னா… இன்னும் வேலை அதிகமாகும்.   “நீங்க ஒருத்தரே எல்லாத்தையும் பார்த்துக்க முடியுமா…………?  உங்களுக்கு நம்பிக்கையா யாராவது இருந்தா ஹெல்ப்பா இருக்கும் இல்ல”.

அது மாமாவா இருந்தா………. உங்களுக்கு உதவியா இருக்குமே.

மது, ஹம்ம், “நல்ல ஐடியா….. தான்.  நானும் இதைப்பத்தி யோசிச்சிட்டிருக்கேன் பூர்ணி…  அப்படின்னா இங்க இருக்கற கடையை மூடனும்.  அவருக்கும் வயசாகுது.  யோசிச்சு முடிவு பண்ணுவோம்”.

_____________

சங்கர், “இதைக் குடிச்சிட்டு வேலைப்பாரு பானு…….”

“டூ மினட்ஸ், இந்த வேலைய முடிச்சிட்டு குடிக்கறேன். வைங்க”.

“ம்ப்ச், இப்படியே லேட் பண்ணுவ.  காலையிலிருந்து வெறும் வயித்துல இருக்க.  இதை முதல்ல குடி நீ”, என அவளது கையிலிருந்த கத்தியையும் காய்கறிகளையும் வாங்கி நகர்த்தி வைத்தவன், அவளது கையில் டம்பளரை திணித்தான்.

அவனையே பார்த்துக் கொண்டு குடித்தவள், “கொஞ்சம் சர்க்கரைப் போட்டிருக்கலாம்………..” என்றாள்.

“ரொம்ப ஸ்வீட் சாப்பிடுற.  ஜூஸ்ல சர்க்கரை சேர்க்காம அப்படியே சாப்பிட்டாதான்… நல்லது.  அதுல கொஞ்சம் தேனும் கலந்திருக்கேன்”.

“ம்ப்ச்…  தித்திப்பே இல்ல.  சப்புன்னு இருக்கு”.

இடுப்பில் கைவைத்து… அவளை முறைத்துகொண்டு நின்றான்.

சங்கர், “இன்னைக்கு லீவ்தான பொறுமையா இதெல்லாம் பார்க்கக் கூடாதா……..?”

“காலையிலே முடிச்சிட்டேன்னா…………………. ஈஸியாயிருக்கும்.  அடுத்து இன்னும் கிளீனிங் வேலையெல்லாம் இருக்கு”.

“ஓஹ்…………… என்ன பண்ணனும் சொல்லு.  நான் ஹெல்ப் பண்றேன்.  உன்னை அம்மா ரொம்ப வேலை பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டு போனதை மறந்திட்டியா நீ”.

“அதெல்லாம் இல்ல.  டாக்டர் நார்மலா இருக்கலாம் சொல்லியிருக்காங்க.  சும்மா இதை செய்யாத…, அதை செய்யாதன்னு… பயமுறுத்தக் கூடாது”.

சரி சொல்லு, நானும் ஹெல்ப் பண்றேன் என அவளுடனே கிட்சனில் நின்று கொண்டான் உதவியாக.

ஆமாம்.  பானு கருத்தரித்திருக்கிறாள்.  அதற்குதான் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம்.  இது அவளுக்கு நான்காவது மாதம்.

சரசுக்கு, மருமகள் கருவுற்றதை அறிந்து மிகுந்த சந்தோஷம்.  பானுவின் பெற்றோரும் சந்தோஷப்பட்டனர்.  மகள் கருதரித்திருப்பதை அறிந்து குடும்பத்துடன் எல்லோரும் வந்து அவளை பார்த்து சீராட்டி சென்றிருந்தனர்..

இப்போதெல்லாம் ஜமுனாவும் சரசுவும் மாற்றி மாற்றி வந்து  செல்கின்றனர், பானுவை கவனித்து கொள்ள என.  பேறு காலத்தில் வரும் எந்த தொந்தரவும் இல்லாமல் நார்மலாக இருந்ததால், அவளுக்கு எந்த சிரமமும் இல்லாமல், சாதாரணமாக இருந்தாள்.

சரசு மருமகள் கருவுற்றதும், சங்கரை வற்புறுத்தி வீட்டை அவளது பேங்கிற்கு பக்கத்திலேயே மாற்றச் செய்திருந்தார்.  அவளுக்கு பயண அலைச்சல் கூடாது என்று.

அவரும் முடியும் போது எல்லாம் வந்து தங்கி சென்றார்.

முதல்நாள் தான் டாக்டரிடம் செக்கப்புக்கு சென்று வந்திருந்தனர்.  ஸ்கேன் செய்து பார்த்து, எல்லாம் நார்மலாக இருக்கிறது என்றிருந்தார் மருத்துவர்.

நாட்களும் வேகமாக ஓடின.  பானுவின் ஒன்பதாவது மாதத்தில் சீமந்தம் செய்வதற்காக நாள் குறித்து, மண்டபம் பிடித்து, பெரிய அளவில் கிராண்டாக செய்ய விருப்பப்பட்டார் சரசு.

திருமணத்தின் போது நடந்த குளறுபடியால் அதனை கொண்டாட முடியாமல் போனதால், மருமகளின் வளைகாப்பு விழாவை ஊர் மற்றும் சொந்த பந்தங்கள் மெச்ச நடத்த ஆசைப்பட்டார்.

அவரது ஆசைக்கு ஈடுகொடுப்பது போல ராகவனும், சங்கரும் பானுவின் வீட்டினரும் ஒத்துழைத்தனர்.  ஜமுனாவுக்கும் மகளின் சீமந்தத்தை எல்லோரையும் அழைத்து மண்டபத்தில் வைத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

பானுக்கு திடீரென நடந்த திருமணத்தால் சொந்தங்கள் யாரையும் அழைக்காமல் போனதால் இதனை நிறைவாக நடத்த ஆசைப்பட்டார்.  அவரது எண்ணத்திற்கு ஏற்றார் போல சரசுவும் விரும்பியதால், இதோ பானுவின் வளைகாப்பு எல்லோரும் வியக்கும்படி பிரமாண்டமாக மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

மருமகளின் சீமந்தத்தை கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்தார் சரசு.  மேடையின் மையத்தில் நாற்காலியில், பச்சை நிறத்தில் பட்டுடுத்தி, சர்வ அலங்காரங்களுடன் அமர்ந்திருந்தாள்.

அவளைச் சுற்றி ஜமுனா, சரசு, பூர்ணி, நேயா, மாதவி, தேவகி இன்னும் பல சொந்தங்கள் சூழ்ந்திருந்தனர்.  மேடையின் எதிரில் முதல் வரிசையில் கலியமூர்த்தி, ராகவன், மதுசூதனன், பாண்டியன், குமார், சங்கர், தரணி எல்லோரும் அமர்ந்திருந்தனர்.

சங்கரின் பார்வை மனைவியின் மீது பதிந்திருந்தது. கண்ணின் இமைகள் கூட சிமிட்டாது பானுவையே பார்த்துக் கொண்டிருந்தான் மையலாக.  பக்கத்தில் மதுவும் தரணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் அவனது கவனம் முழுவதும் அவனது சரிபாதியின் புறமிருந்தது.

அவள் கருவுற்றதிலிருந்து எடுத்த சத்தான உணவுகளால், சற்று உடல் பூசி, சதைப்பிடித்து அழகாக தெரிந்தாள்.

அடர் பச்சை நிறத்தில், அரக்கு பார்டர் வைத்து பட்டு சேலை உடுத்தியிருந்தாள்.  தாய்மையின் பூரிப்பில் கன்னம் பூசி, கலர் கூடி, உடல் மெருகேறி பார்ப்பதற்கே  பொலிவுடன் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

நேற்று சரசு மருமகளுக்காக மருதாணி இலையை பறித்து, அரைத்து, அவரே பானுவின் கைகளில் வைத்திருந்தார்.

சங்கர், மெஹந்தி போடறவங்களை வர வைச்சு போடலாமே ம்மா….. என கூறியும், மருமகளுக்கு ஆசையாக அவரே தோட்டத்தில் இருந்து பறித்து வந்து, அரைத்து வைத்துவிட்டிருந்தார்.

டேய்.. அதைவிட இதுதான்டா உடம்புக்கு நல்லது என அவனை அடக்கியிருந்தார்.

பானுக்கு வயிறு பார்க்கவே பெரியதாக இருந்தது.  முன்பு போல் இல்லாமல் அவளது நடையிலும் நிதானம் வந்திருந்தது.  மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்த வனை பார்த்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த தரணி  கிண்டல் செய்து ஓட்டித்தள்ளிக் கொண்டிருந்தான்.  மது இதையெல்லாம் பார்த்தாலும், எதிலும் தலையிடாமல் மௌனமாக சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

சங்கரின் கவனத்தில் எதுவும் பதியவேயில்லை.  பார்வை மொத்தமும் மனைவியிடத்திலேயே.

முகத்தில் பூத்த வேர்வையை கையில் இருந்த டிஷ்யூவால் மெல்ல துடைத்த பானுவின்  பார்வை தற்செயலாக, எதிரில் அமர்ந்திருந்த கணவனைத் தொட்டு மீண்டது.

வசீகர புன்னகையுடன் கூடிய அவனது பார்வை பரிமாற்றத்தில், நாணம் வந்து, தலைகுனிந்து கொண்டு, புன்னகை பூத்தாள் பெண்ணவள்.

அவளது வெட்கத்தில் மையல் கொண்டு… மமதையுடன், மீசையை நீவி, உதட்டில் அரும்பிய புன்னகையுடன் கால்மேல் கால் போட்டு சாய்ந்தமர்ந்தான் சங்கர்.

பாஸ்…. இதுலாம் மோசம்.  சின்ன பையன்… கன்னி பையன்… பக்கத்துல உட்கார்ந்துருக்கேன்.  கொஞ்சம் கருணை வையுங்க… என கலாய்த்து தள்ளினான் தரணி.  தரணியின் கேலியில் சங்கருக்கு மலர்ந்த சிரிப்புதான் முகத்திலே.

இதற்குதானே ஆசைப்பட்டான்.  மனைவியின் நேசம் கிடைக்காதா… என ஏங்கிய இரவுகள் எத்தனை….?  மனைவியுடனான முதல் தொடுகை ஊடலுடன் ஆரம்பித்திருந்தாலும், அவனுக்கு பிடித்துதானே அவளுடன் கூடியிருந்தான்.

ஆனால் அவன் நடந்தகொண்டமுறைதான் வேறு.  அதுதான் வில்லங்கமாக மாறியிருந்தது.

தம்பதியரிடையே பேச்சு வார்த்தை இருந்தாலும், இதுக்கான ஊடல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.  என்ன மாயமோ, காலம் செய்த கோலமோ… இருவரும் இணைவதற்கு இறைவனே வழிவகுத்திருந்தான் போலும்.

ஜமுனா மகளுடன் தங்கி செல்வதற்காக… மகள் வீட்டிற்கு வந்திருந்தார்.  பூர்ணியின் பெரியம்மாவையும் பார்த்துவிட்டு, அப்படியே மகள் வீட்டிலும் சில நாள் தங்கி செல்லலாம் என வந்திருந்தார்.

மாலை வேலையில் இருந்து வந்தவள் தாய் தந்தை வந்திருக்கும் குஷியில் அவர்களுடன் பேசி, கொஞ்சியிருந்து… சமையல் செய்து சாப்பிடும்வரை மகிழ்ச்சியோடு ஜமுனாவுடனே சுற்றி கொண்டிருந்தாள்.

ஜமுனாவுடனேயே படுக்க வந்தவளைப் பார்த்து, “நீயேன் இங்க படுக்கறே…. உன் ரூம்ல போய் படு பானு”.  அதான் அப்பா இருக்காங்க இல்ல…. என்றார்.

பானுக்கு முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  என்ன சொல்ல முடியும் அவரிடம்.  சங்கருக்கும் இவளுக்குமான ஊடலில், இவள் இதுவரை தனியாக இந்த அறையில்தான் படுத்திருந்தாள்.

கலியமூர்த்தி கட்டிலில் படுத்திருந்தார்.  ஜமுனா பாய் விரித்து தரையில் படுத்துவிட்டார்.

பானு, “உன்கூட படுத்து எவ்வளவு நாளாச்சு…?  நீ இருக்க வரைக்கும் உன்கூட படுத்துக்கறேன் ம்மா…”.

“அவள்தான் ஆசைபடறாளே…. படுத்துக்கட்டுமே ஜமுனா……” என்றார் கலியமூர்த்தி.

அவரைத்திரும்பி பார்வையால் எரித்த ஜமுனா…. திரும்பி மகளிடம் “நான் இங்கதான இருக்க போறேன்.  மாப்பிள்ளை தனியா படுத்திருப்பாரு…, ஏதாவது நினைக்கப் போறாரு.  நீ அங்கப் போய் படுடா…” என மகளை சங்கருடன் படுக்க அனுப்பிவைத்தார்.

முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு, பானு எழுந்து தயங்கிக்கொண்டே… அவர்களது அறைக்கு சென்றாள் உறங்குவதற்காக.

“ஏன்டி…, பிள்ளைதான் ஆசையா உங்கூட படுக்கனும்னு வந்தாள் இல்ல.  அவளை தொரத்திவிடற…  பார் அவள் மூஞ்சே வாடிப்போச்சு… என அங்கலாய்த்தார் கலியமூர்த்தி”.

ஜமுனா பல்லைக் கடித்துகொண்டு, “கூறுகெட்ட மனுஷா…  கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா…?  சின்னஞ்சிறுசுக அதுக.  அதைப்பத்தின நினைப்பு கொஞ்சமாவது இருக்கா… ? ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல…” என முனுமுனுத்துகொண்டே… தீயாய் கணவனை முறைத்தார்.

இன்னும் கேட்டால், ஏதாவது பேசுவாள் மனைவி என வாயை மூடிக்கொண்டு திரும்பி படுத்துகொண்டார் கலியமூர்த்தி.

பானுவை திருப்பியனுப்பியதற்கு வேறு காரணமும் இருந்தது.  மகள் கணவனுடன் நன்றாக பேசினாலும், ஏதோ குறைவதாக அவரது உள் மனம் கூறியது.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்மனி.  அனுபவமிக்கவர்.  எத்தனை பேரை கடந்து வந்திருப்பார் வாழ்க்கையில்.  அவரது அனுபவ அறிவுக்கு, அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்பதை ஊகிக்க முடிந்தது.  ஆதலால்தான் தன்னுடன் படுக்க வந்த மகளை மறுத்து, கணவனுடன் படுக்க சொல்லி  திருப்பியனுப்பியிருந்தார்.

பானு கதவைத் திறந்துகொண்டு அறையுள் நுழைவதை கண்ட சங்கரின் மனதில் ஆச்சர்யம்.  வந்ததிலிருந்து ஜமுனாவையே ஒட்டித் திரிந்துகொண்டிருந்தவள், அவள் அம்மாவுடன் படுக்காமல் இங்கே வந்ததை நினைத்து ஆச்சர்யப்பட்டான்.

ஒருபக்கம் மனதில் நெடுநாட்கள் கழித்து மனைவியின் வருகை… அவனை மகிழ்ச்சியடைய வைத்தது.  அதை முகத்திலும் அப்பட்டமாக காட்டி சிரித்தான்.

இவனது சிரிப்பை தவறாக புரிந்துகொண்டாள் பானு.  ஏற்கனவே ஜமுனா அங்கே படுக்கவிடாமல் துரத்தியடித்ததில் கடுப்பில் இருந்தவளுக்கு, அவனுடைய மனதை புரிந்து கொள்ளும் நிதானம் இல்லை.  அவனது சந்தோஷத்தை பார்த்து, சங்கர் தன்னை நக்கலாக பார்த்து சிரிப்பதாக தப்பர்த்தம் செய்துகொண்டாள்.

சுறுசுறு என கோவம் ஏறியது அவளுக்கு.  வேகமாக அவனை நெருங்கியவள், அவனுக்கு பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து மொத்த ஆரம்பித்தாள்.

என்ன சிரிப்பு…?  திரும்பி வந்துட்டேன்னு… நக்கலா…?  கொன்றுவேன் உங்களை… என அவனை தலையணையாலேயே அடித்தாள்.

மனைவியின் கோவம் சங்கருக்கு சிறுபிள்ளைதனமாக இருந்தது.  அதில் மேலும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

ஹா…. ஹா….

நான் சொல்ல சொல்ல சிரிக்கிறீங்க…..  என்னை வெறுப்பேத்தறீங்களா….?  சிரிப்பீங்களா… சிரிப்பீங்களா…  இனி சிரிக்க மாட்டேன்னு சொல்லுங்க… என அவன் முடியைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள்.

ஹேய்…. நான் அதுக்கு சிரிக்கலடி.  ஆ…. ராட்சஷி…. வலிக்குதுடி….. என அவளை கட்டிலில் தள்ளி, அவளிடமிருந்து தனது முடியை விடுவிக்க முனைந்தான்.

அவன் அவளது கைகளை விலக்க விலக்க இன்னும் அழுத்தம் கூட்டினாள்.

சிரிக்க மாட்டேன்னு சொல்லுங்க அப்பதான் விடுவேன்……

…………….

கணவனிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் பதிலும் வராமல் போகவே அவனது கண்களை நிமிர்ந்து பார்த்தாள்.

கணவனின் பார்வை மாற்றம்.. அவளது ஆழ்மனம்வரை ஊடுருவி சிலிர்ப்பை எற்படுத்தியது.. அப்பொழுதுதான் அவர்கள் ஒருவரோடு ஒருவர் உடலைத் தழுவிய நிலையில், இருந்த நெருக்கமான நிலையைப் பார்த்து வெட்கி, அவனை விட்டு நகர்ந்து படுத்துகொண்டாள்.

இவளை நெருங்கிப் படுத்த சங்கர்…. அவளது தோளில் கையைப் போட்டு அவளை தன்முகம் பார்க்கும்படி திருப்பினான்.

அவனைப் பார்க்க நாணம் கொண்டு பெண்ணவள், பார்வையை தாழ்த்தினாள்.

பானு……

ஹ்ம்ம்……

இங்க பாரேன்….

ம்கூம்…..

ம்ப்ச்… என்னை பாருடி…..

அவளது தாடையைப் பிடித்து தன்னை பார்க்க செய்தவன், இன்னும் கோவம் போகலையா….? என்றான்

வருத்தம் இல்லையென்று சொல்லமுடியாது.  ஆனால் அதையே பிடித்துதொங்கவும் அவளுக்கு மனமில்லை.  பெண்களுக்கேயான ஏக்கங்களும்… எதிர்பார்ப்புகளும் அவளுக்கும் உண்டு.

அதில் சங்கர் தவறியதும் அவளுக்கு ஏமாற்றதுடன் வருத்தத்தையும் கொடுத்தது.  எத்தனை நெருடல்கள் மனதில் இருந்தாலும்… கணவனுடனான முதல் கூடலையும் அவளால் மறக்கமுடியவில்லை.  அது அவளுக்கு பிடிக்கதான் செய்தது.  கணவன் அன்று இருந்த நிலையைதான் வெறுத்தாள்.

காலப்போக்கில் மனம் கணவனிடம் சாயதான் செய்தது.  அன்று அவன் போதையின் பிடியில் தவறியிருந்தாலும்… அடுத்து வந்த நாட்களில் அவளை எதற்கும் வற்புறுத்தாது… பொறுமை காத்தது… பெண்ணவளின் இதயத்தை தொட்டிருந்தது.

அவள் மீது அவன் காட்டிய அக்கறையும், அன்பும் கண்டு பானு உச்சி குளிர்ந்திருந்தாள்.  சில சமயத்தில் அவனது காதலைக் உணர்ந்து, இவன் என்னவன் என்ற கர்வம்கூட எழுவதுண்டு மனதில்.  இதையெல்லாம் வெளியே காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து பூட்டியிருந்தவளுக்கு…. இன்று மடை திறந்த வெள்ளம்போல… இத்தனை நாள் மனதில் கட்டி வைத்த எல்லா உணர்வுகளும் கட்டவிழ்ந்து வெளி வந்திருந்தது.

பதில் சொல்லுடி…..

ம்…ம்….

அன்னைக்கு நான் வேணும்னு பண்ணலடா…..  அது ஏதோ…. தப்புதான்…  ஒத்துக்கறேன்.  ஏதோ வேகத்துல….. ஸாரி டி.  எனக்கும் அதுல வருத்தம் இருக்கு.

உண்மையாவே நம்ம வாழ்க்கைய எப்படிலாம் ஸ்டார்ட் பண்ணனும்னு கனவு கண்டுட்டிருந்தேன் தெரியுமா…..?  எல்லாம் நானே……   ம்ப்ச்…  சொதப்பிட்டேன்.       ஸாரி டி…

அவனது வாயைப் தனது கரத்தினால் மூடியவள்,  நானும் உங்க மனசை புரிஞ்சு நடந்துக்கல இல்ல.  என் பேர்லயும் தப்பிருக்கில்ல….. என்றாள்.

இல்லல்ல….. என் பேர்லதான் தப்பு…. நீ என்ன பண்ணுவ…

ம்கூம்…… என் பேர்லயும் தப்பிருக்கு…

இல்லடி….  அன்னைக்கு நான்தான் போதையில… ஏதோ… அவசரப்பட்டுட்டேன்.  என பேர்லதான் தப்பு…..

ம்ப்ச்….  உங்களை புரிஞ்சும் காக்க வச்சது என் தப்புதான.  என் பேர்லயும் தப்பிருக்கு…

ஹா… ஹா… இதுலகூடவாடி போட்டி…. சரி உனக்கும் வேணாம்.  எனக்கும் வேணாம்.  நம்ம இரண்டு பேர்லயும் தப்பிருக்கு….

ம்கூம்.  நான் அந்த தப்பை சொல்லல.  உங்களை புரிஞ்சும் சரியா நடந்துக்கலையேன்னு சொன்னேன்…..

ஹா…. ஹா…. இப்படியே பேசிட்டிருந்தோம்னா… தப்பு கூட….. வெட்கப்பட்டு….

பட்டென்று சங்கரின் வாயை தனது விரல்களால் மூடியவள்….., கிண்டல் பண்ணாதீங்க என சினுங்கினாள்…

சரி… அது போகட்டும்.  மைனசும் மைனசும் சேர்ந்தா பிளஸ்.  அதுபோல  தப்பை யெல்லாம் சேர்த்து சரிபண்ணிடலாமா…. செல்லக்குட்டி…. என கண்ணடித்து… குழைந்தான் மனைவியடத்தில்.

அவனை நிமிர்ந்து பார்க்ககூட கூசி, அவனது நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள்.

பானு…..

ஹ்ம்ம்…

இங்க பாரு டி…..

தன் மார்பில் முகத்தை அழுந்தி படுத்திருந்தவளை நிமிரச் செய்து…. கண்களாலேயே சம்மதம் வேண்டி நின்றான்.  மனைவியின் நயன பாஷையில்….. சம்மத்த்தை வாங்கியவன்,  உள்ளம் குளிர்ந்து, உச்சி முகர்ந்து, நெற்றியில் முத்தமிட்டு, மூக்கை கடித்து, இதழோடு இதழ் புதைத்திருந்தான் காதல் கள்வன்.

இதோ உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்களல்ல என இவர்களின் இனிய இல்லறதுக்கு இனிமை சேர்ப்பதுபோல…. வெளியே இடியுடன் கூடிய மின்னலும், காற்றுடன் கூடிய மழையும் சோவென பெய்ய ஆரம்பித்திருந்தது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!