Skip to content
Post Views: 218
இப்படிக்கு,
அத்தியாயம் – 04
Advertisement
இன்னும் சரியாக ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம்.நேசித்தவனுடன் தான்,அவளின் திருமணம் என்ற போதிலும்,யாழினியின் மனதில் ஒரு வித அழுத்தம்.
அவள் தவமிருந்த வாழ்க்கை என்ற போதிலும்,அதற்கான அடித்தளமான இந்த நிச்சயதார்த்தத்தில்,அவளால் முழு மனதாக ஒன்ற முடியவில்லை.
Advertisement
Advertisement
ஆகாஷிடம் எதையும் பரிபூரணமாக,தெரிவிக்க இயலா தன்னிலை மீது அவளுக்கு கோபம் வர,யோசனையுடன் இருந்தவளை கலைத்தது,அவளின் அலைபேசி ஒலிக்கும் சத்தம்.
எடுத்துப் பார்த்திட,அவளை ஏமாற்றாமல் அவனிடம் இருந்து தான் அழைப்பு வந்திருக்க,மனதின் சஞ்சலங்கள் யாவும் ஒரு கணம் காத தூரத்திற்கு ஓடித் தான் போயின.
Advertisement
“ஹலோ!” அவள் குரலிலேயே துள்ளல் நிரம்பி வழிந்தது.அவ்வளவு பிடிக்கும்,அவனை.
“சீக்ரம் கெளம்பி கீழ வா!” அவன் கூறிட,அதிர்ந்து போய் நேரத்தைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.நள்ளிரவைத் தாண்டியிருக்க,இந்நேரம் வெளியே அவன் அழைத்திட,அவளுக்கு திகைப்பு வேறு.
“என்ன ஆகாஷ்..? இந்த நேரத்துல வெளிய வர சொல்றீங்க..? டைம் என்னன்னு பாத்தீங்களா..?” என்றவளுக்கு அப்போது தான் பொறி தட்ட,பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்,மின்னல் வேகத்தில்.
அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்தி விட்டு,ஒய்யாரமாய் அதில் சாய்ந்து அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான்,ஆணவன்.அவனை இவ்விடம் எதிர்பாரா அதிர்வில்,அவள் ஒரு கணம் விக்கித்துப் போனாள்.
“ஆகாஷ்,இங்க என்ன பண்றீங்க..?” கொஞ்சம் காரம் ஏறியிருந்தது,அவள் குரலில்.நடுநிசியில் இப்படி வந்து வாசலில் தவம் கிடக்கிறானே,என்கின்ற கடுப்பு வேறு.
அவனோ,பதில் சொல்லாமல் மௌனம் காத்திட,”ஆகாஷ்!” என்றாள்,மீண்டும் அதட்டலாக.அந்த அதட்டலைக் கேட்டதும் அவனிதழ்களில்,அழகாய் ஒரு முறுவல் மலர்ந்தது.
“சீக்ரம் கீழ வா..இல்லன்னா நா வந்து காலிங் பெல்ல அழுத்திருவேன்..” அவன் புன்னகையை அடக்கியவாறு உரைத்திட,அவளுக்கோ அவன் செய்து விடக் கூடும் என்கின்ற பயம் எழ,அடுத்த நொடி சத்தம் காட்டாமல் வெளியேறி இருந்தாள்,பூனை நடையுடன்.
வெளியே வந்து அவனை முறைத்திட,அவனோ அதை சட்டை செய்யாமல் வண்டியில் ஏறச் சொன்னான்,விழியசைவால்.
“ஆகாஷ் வெளயாடாதீங்க” அவள் அதட்டும் முன்பே,அவளை அள்ளிக் கொள்ள வந்திட,தலையில் அடித்துக் கொண்டே காரினுள் ஏறி அமர்ந்தாள்,யாழினி.
“தட்ஸ் மை கேர்ள்!” அவளின் கன்னத்தை தட்டி விட்டு,அவன் வண்டியைக் கிளப்பிட,உர்ரென்று இருந்த அவளின் முகபாவம் மட்டும் மாறவேயில்லை.
“என்ன யாழ்..? எதுக்கு சைலன்ட்டா வர்ர..? நா ஏதாச்சும் தப்பு பண்ணிட்டேனா என்ன..?” அவளை வேண்டுமென்றே சீண்டிட,அடிக்கண்ணால் அவனை முறைத்தவளோ,பதில் இயம்பிடவில்லை.
அதில் அவனின் புன்னகை இன்னும் விரிய,ஓர விழிகளால் அவளை இரசித்தவனோ,”ஆல்வேஸ் ஐ அம் ஃபாலிங் ஃபார் யூ” என்றான்,ஆத்மார்த்தமாக.
அதில் குரலில் கொஞ்சமும் பொய்யில்லை.விழிகளில் அபரிமிதமான காதல் கொட்டிக் கிடக்க,அவன் வார்த்தைகளில் அவள் ஒரு கணம் உறைந்து தான் போனாள்.
சமீப நாட்களாய் அவன் காட்டும் நெருக்கமும்,அவன் பொழியும் காதலும் அவளை பித்து நிலைக்கு தள்ளிட,தன்னை இயல்பாக காட்டிக் கொள்ளவே அரும்பாடு பட்டாள்,யாழினி.
அவன் வார்த்தைகளில் நாணம் வந்து பாடாய்ப்படுத்த,அவள் முகம் வேறு அநியாயத்திற்கு சிவந்து போய் விட,முகத்தை அழுந்தத் துடைத்து சிவப்பை விரட்ட முயன்று தோற்றும் போனாள்.
எதிர்பார்த்த தருணமென்றாலும்,அது நடந்தேறுகையில் அவளால் அத்தனை சுலபமாய் ஏற்க இயலவில்லை.நினைவுகளின் தாக்கத்தில்,அவள் மனநிலை சட்டென மாறிப் போக,ஆணவனுமே அவளை கவனித்திருப்பான்,போலும்.
“என்ன யாழ்..? வாட் ஹேப்பன்ட்..? எதுக்கு இப்போ சடன்னா உன் மொகம் மாறுது..?” அவனும்,பலமுறை அவளிடம் கேட்க நினைத்தது தான்.
அவர்களுக்கான அழகிய தருணங்களை, அவன் இரசிக்க அவளோ அதை முழுதாய் ஏற்க முடியாமல்,சிறு தவிப்புக்கு உள்ளாவதை கவனித்தே இருக்கிறான்.ஆறு மாதமாய் அவளுடன் நல்ல பழக்கம் இருக்க,அந்த அவகாசத்தில் அவளிடம் வாட்டம் உண்டாவது வாடிக்கையாகவே,இருந்தது.
“பயமா இருக்கு!” அவள் குரலில் அத்தனை தவிப்பிருந்தது.
“எதுக்கு..?” அடுத்த நொடி,வண்டியை நிறுத்தி விட்டு அவள் புறம் திரும்பியிருந்தான்,ஆணவன்.அவன் விழிகளிலும்,அதே கேள்வி நிரம்பி நின்றது.
அவளோ,எதுவும் கூறவில்லை.தன் மனநிலையை அவனிடம் எப்படி எடுத்துரைப்பதென்று,அவளுக்கு புரியவுமில்லை.
“இங்க பாரு யாழ்..உன் பாஸ்ட் எனக்கு தேவயே இல்ல..உன்னோட ப்ரசன்டும் ஃப்யூச்சரும் மட்டுந்தான் எனக்குத் தேவ..புரியுதா..?” அவளின் கலக்கம் மிகுந்த விழிகளை ஊடுருவி,தீர்க்கமாய் சொல்லியிருந்தான்,அசைக்க முடியா உறுதியுடன்.
“என் பாஸ்ட பத்தி சொல்ற அளவுக்கு எதுவும் இல்ல..உன் பாஸ்ட் எப்டி இருந்ததுன்னு நா கேக்கவும் விரும்பல..நம்ம ப்ரசன்ட்லயும் ப்யூச்சர்லயும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மயா இருப்போம்..தட்ஸ் ஆல்..”
அவன் ஒரு முறை உரைத்ததும்,அவள் அதற்கு ஏதோ பதில் சொல்ல முனையும் தருவாயில்,அவன் தந்தை வந்திட,அத்துடன் அந்தப் பேச்சு தபைப்பட்டதும் நினைவில் வர,இப்போது அது நினைவில் வெட்டிச் சென்றது.
“உன் பாஸ்ட பத்தி ஏதாச்சும் சொல்லனுமா..? அன்னிக்கி ஏதோ சொல்ல வந்து பாதில நிறுத்தின தான..?” ஞாபகம் வைத்து அவன் இத்தருணம் வினவிட,மறுப்பாய் தலையசைத்தாள்.
“யாரு குறுக்க வந்தாலும் என்ன பத்தி தப்பா சொன்னாலும்,நீங்க அவங்க பக்கம் போகாம என்ன நம்புவீங்க தான..?” அவனை நேருக்கு நேர் பார்த்து கேட்டவளின் விழிகளில்,நீர் கட்டியிருந்தது.
ஏன் என்று அவளிடம் கேள்வி கேட்கவில்லை,அவன்.அவள் உரைத்திட விரும்பாததை அவன் தோண்டித் துருவவும் எண்ணவில்லை.
“யாரு உன்ன பத்தி என்ன சொன்னாலும் உன் கிட்ட கேட்டு க்ளாரிஃபை பண்ணாம நா அவங்க சொல்றத நம்ப மாட்டேன்..நீ என்ன கட்டிக்கப் போறவ யாழ்..உன்ன நம்பாம இருந்தா அது நா என்னயே நம்பாம இருக்குறது மாதிரி..”
“……………..”
“ரொம்ப யோசிக்காத..உன் மண்டயப் போட்டு ஏதோ ஒன்னு கொடஞ்சி கிட்டு இருக்குதுன்னு புரிது..அத எப்போ உனக்கு சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு..”கண் சிமிட்டிக் கூறியவனின் தோளோடு அவள் சேர்ந்திருக்க,அதிர்ந்து விழித்தவனின் இதழ்களின் அழகிய முறுவலொன்று.
●●●●●●●
வாசுவின் கதை..
ஓகே!
நா என்ன சொல்லிகிட்டு இருந்தேன்..?!நா எங்க நிறுத்துனேன்..
எங்க..?
ஆஹ்ஹ்ஹ்!
ரைட் ரைட்..ஞாபகம் வந்துருச்சு! என் ஃப்ரெண்டு சூசைட் பண்ணதுனால எனக்கு பொண்ணுங்க மேல எந்த நம்பிக்கயும் வர்ல..என் லைஃப்ல இனி எந்த பொண்ணுக்கும் எடம் இல்லன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்னு சொன்னதோட நிறுத்துனேன்ல..
ஒரு மாதிரி பொண்ணுங்கள கண்டாலே வெறுப்பா வரும்..காலேஜ்ல வந்த ப்ரபோஸல்ஸ ரொம்ப ஹார்ஷா தான் டீல் பண்ணேன் அப்போலாம்..
காதலெனும் ஆழியில் நான் மீளமுடியாமல் மூழ்கப் போவது எனக்கு முன்னமே தெரிந்து இருப்பின்,ஓரளவேனும் அவர்களின் உணர்வுகளையும் மதித்திருப்பேனோ என்னவோ..?
ஒரு தடவ கல்சுலர்ல்ஸ ஒரு பொண்ணு ப்ரபோஸ் பண்ணி,அவளுக்கு நா கைய நீட்டப் போய் அந்த எடமே அல்லோல கல்லோப்பட்டு கடைசில சண்டைல தான் வந்து நின்னுச்சு..
அவளோட,ஃப்ரெண்டு என்ன அடிக்கப்பாய,நானும் கோவப்பட்டு அவனுக்கு கைய நீட்டி,அது ரெண்டு கேங்கோட சண்டயா மாறி,எங்கள எல்லாம் ஒரு வாரம் சஸ்பண்ட் பண்ணி இருந்தாங்கன்னா பாத்துக்கோங்களேன்!
எல்லாத்துலயும் அவசரம்! கொஞ்சங் கூட பொறுமயே இல்ல உனக்கு..அம்மா அவ்ளோ திட்டு அப்போலாம்..
இந்தக் காதல் வந்ததுக்கு அப்றம் தான்,எனக்குள்ளயும் பொறும இருக்குன்னே எனக்கு புரிஞ்சுது..
சம்பந்தமே இல்லாம பேசுறான் இவன்னு, நீங்க கடுப்படிக்கிறது புரிது..நாம சீன்கு வர்லாம்..என்னவாக இருந்தாலும்,வாசுவாகிய எனது கதையை கேட்க,உங்களுக்கு நிச்சயம் பொறுமை வேண்டும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
இங்க சண்ட வந்த கேங்கோட லீடர்,பேரு சதீஷ்..அதாவது,எனக்கு ப்ரபோஸ் பண்ண பொண்ணோட ஃப்ரெண்டு தான் அவன்..
அவன ரொம்ப போட்டு சாத்திட்டேன்..ஹாஸ்பிடல்ல வேற பத்து நாள் இருந்தான்..சஸ்பன்ஷன தாண்டி,பத்து நாள் அவன் காலேஜுக்கு வர்ல..அவன் வாய் நீளம்..என் கை அத விட நீளமா,ஐயாவுக்கு தர்ம அடி!
அந்த சண்டய நா அப்போவே,மறந்துட்டேன்..ஆனா,அவன் அப்டி ஈஸியா விட்டுடல போல..அந்த பகையால தான்,நா அவள எனக்கு தெரிய வந்துச்சு..
அது எப்டின்னு சொல்றேன்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரியா..?
காலேஜ் முடிஞ்சு,நானும் சந்த்ருவும் எக்ஸ்பீரியன்ஸுக்காக,ஒரு கம்பனில வேலக்கி பொய்ட்டு இருந்தோம்..காலேஜ்ல இருக்கும் போதே,அகாடமிக் பர்ஃபாமன்ஸ் பாத்து எங்களுக்கு இந்த ஜாப ஆஃபர் பண்ணி இருந்தாங்க..
ஸோ,வேலக்காக நாங்க வெளியூர்ல தான்,தங்கி இருந்தோம்..அப்போ,எங் கூட செட்டானவன் தான்,தீபக்..
தீபக்கும் எங்க காலேஜ்ல படிச்சவன் தான்..ஆனா,அவ்ளவா பழக்கம் இல்ல..இங்க,வந்ததுக்கு அப்றம் தான்,பழக கெடச்சுது..
தீபக் ரொம்ப சைலன்டான கேரக்டர்..ஆரம்பத்துல நானும் அவனும் அவ்ளவா க்ளோஸ் இல்ல..ஏன்னா,நானும் யார் கிட்டவும் போய் வான்டடா பேசற கேரக்டர் இல்லல..
சந்த்ரு தான் எப்டியோ,எங்க ரெண்டு பேர்குள்ளவும் நல்ல பாண்டிங் வர காரணமாவன்..ஆனா,சந்த்ரு அளவுக்கு தா தீபக் கூட க்ளோஸ் இல்லன்னு தான் சொல்லனும்..
வீக்கென்ட் ஹாலிடே வந்துச்சு..எப்பவுமே,சந்த்ருவும் நானும் ஒன்னா தான்,ஊருக்கு போவோம்..அன்னிக்கி சந்த்ரு அவசரம்னு ஊருக்கு கெளம்ப,அப்பாம்மா வீட்ல இல்லங்குறதுனால நா தங்கி இருக்குற வீட்லயே இருந்துட்டேன்..
தீபக்கும் வீட்டுக்குப் போகல..என் கூட இருந்தான்..
நாங்க வேல செய்ற கம்பனி ஓனரோட,தங்கச்சி பையன் தான்,சதீஷ்..அவன் என் கூட இருந்த கோபத்துல,இந்த ஜாப் ஆஃபர் கெடக்க கூடாதுன்னு பல தில்லுமுல்லு எல்லாம் பண்ணான்னு,காலேஜ் டைமே அரசல் பொரசலா தெரிய வந்துது..
நமக்குன்னு இருந்தா,அத கடவுள் நமக்கு கொடுக்கனும்னு இருந்தா,எதுவும் தடுக்க முடியாதுல..அந்த தாட்ல,அவன் விஷயத்த நா பெருசா மண்டைல அப்போ ஏத்திக்கல..அதுல்லாம,இந்த கம்பனில வேல கெடக்கலன்னாலும்,எங்களுக்கு வேற வழியும் இருந்துச்சு..
அடிக்கடி,பந்தாவா வந்து சதீஷ் என்ன வம்பிழுப்பான்..நா அவ்ளவா கண்டுக்க மாட்டேன்..அவன ஒரு ஆளா,மதிக்கலன்னு தான் சொல்லனும்..
அன்னிக்கி,என்னன்னா வீடு தேடி வந்தான்..ஓவரா பேசுனான்..நம்ம கை சும்மா இருக்குமா..?
அட சொல்லுங்க!
சும்மா ஒதுங்கிப் போறவன,தொரத்தி தொரத்தி வந்து டார்ச்சர் பண்ணா என்னாகும்..?!
வாய் பேசாம இருக்குறவனோட,கை அடுத்தவன் வாயவே தெறக்க விடாத அளவு,வெறித்தனமா பேசும்ல! அது தான் அப்போவும் நடந்துச்சு..
சேம் சீக்குவன்ஸ்..
கையோட சேத்து என் காலும்,அவனுக்கு அழகா பதில் சொல்லுச்சு..
அடின்னு அடின்னு அடிச்சிட்டு நிமிர்ரேன்,தீபக் வந்தான்..சதீஷ் இருந்த கோலத்த பாத்து,அவன் பதற,மொகம் முழுக்க ரத்தத்தோட மயங்கி இருந்தவன,அப்டியே தூக்கி சந்த்ரு கார்ல ஏத்தி,ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்..
அது,தீபக்கோட சித்தப்பா பையனோட ஹாஸ்பிடல்..அதனால,எப்டியோ சமாளிச்சு சதீஷ அட்மிட் பண்ணிட்டு வர,தீபக் எனக்கு திட்டோ திட்டு..
நானும் பேசாம நின்னுட்டு இருந்தேன்..அவன் வீட்ல சொல்லிட்டு,அவங்க வரும் வர,நாங்க அங்க இருந்தோம்..
அவங்க வீட்டாளுங்க வரவும்,சண்டயாகப் போக,சதீஷோட அப்பா தான் அதுக்கு முட்டு கட்டப் போட்டாரு..அவருக்கு அவன பத்தி தெரிஞ்சு தான இருக்கும்..
நாங்க ரெண்டு பேரும் வெளில வந்தோம்..
கேட்ல இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்டோன் பென்ச் போட்டு இருந்தாங்க..அதுல இருந்து கொஞ்சம் தூரத்துல ஒரு டேப்..
தீபக் கார எடுத்துட்டு வரும் வர,நா அந்த ஸ்டோன் பென்ச்ல போய் உக்காந்து இருந்தேன்..
அந்த டேப் கிட்ட கொஞ்சம் பொண்ணுங்க வந்தாங்க..இருட்டுல தெளிவா தெரில..அங்க தான் அவளும் நின்னு கிட்டு இருந்தான்னு,சத்தியமா எனக்கு தெரில..
அந்த இருட்டுல தான்,என் எதிர்காலம் இருக்குன்னு தெரிஞ்சு இருந்தா,கண்ண துழாவி தேடி இருப்போனோ என்னவோ..?
அங்க என்னாச்சுன்னா…
●●●●●●●●
“மேகா!” என்றான்,ராகவ்.மடிக்கணினியில் இருந்து பார்வை நிமிர்த்தி,அவனை ஏறிட்டாள்,மேகா.
“எதுக்கு நீ அவன லவ் பண்ற..? அவன் தான் உன்ன அவ்ளோ அவாய்ட் பண்றான்ல..”
“அதான்..அதான் மெய்ன் ரீசன்..எல்லா எடத்துலயும் என் பின்னால பல பேரு சுத்தி இருக்காங்க..அப்போலாம் எனக்கு எதுவும் தோணுனு இல்ல..பட் என்ன கண்டுக்காம அவாய்ட் பண்ணது இவன் மட்டுந்தான்..”
“………………”
“நானா போய் பேசுனாலும் கத்தரிச்ச மாதிரி வெட்டா பதில் வரும்..என்ன பாத்து பாத்து நா ரெடி பண்ணி கிட்டு போனாலும்,அவன் என்ன பாக்கவே மாட்டான்..அது தான் என்ன கவனிக்க வச்சது..வெக்கம் மானத்த விட்டு,அவன் பின்னாடி சுத்த வச்சி கிட்டும் இருக்கு..”
“நா ஒன்னு சொல்லவா மேகா..?”
“என்னடா..?” மடிக்கணினியை அணைத்து வைத்தாள்,அவள்.பார்வையில் ஆர்வம் வந்து சேர்ந்திருந்தது.
“நீ பின்னாடி பின்னாடின்னே போறதுனால தான்,அவருக்கு உன்னோட அரும தெரியலன்னு நெனக்கிறேன்..கொஞ்சம் நீ அவர கண்டுக்காம இருந்து பாரேன்..”
“அதுக்காக தான, உன்ன கூட்டிட்டு போய் கட்டிக்கப் போறவன்னே இன்டர்ட்யூஸ் பண்ணி வச்சேன்..” அவள் குரலில்,ஏகத்துக்கும் சலிப்பு.
அவள் ஏதோ ஒன்றை எண்ணி செய்திருக்க,முகத்தில் கூட எந்த உணர்வையும் காண்பிக்காமல்,அவளை ஏமாற்றி இருந்தானே,கல்லுளி மங்கன்.
“அவருக்கு உன்ன பத்தி நல்லா தெர்யும்..நீ எதுக்காக கூட்டி வந்தன்னு கெஸ் பண்ண முடியாத அளவு முட்டாள் இல்லயே அவரு..அதுவும் அவரு பின்னாலயே,போன வாரம் வர சுத்திட்டு இருந்துட்டு இப்போ திடீர்னு போய் என்ன மாப்ளயா காட்டுனா,அவ்ளோ ஈசியா நம்புவாரா என்ன..?”
“…………….”
“என்ன தான் சேஞ்ச் ஓவர்னாலும்,அதுக்கு டைம் வேணும்..நீ கொஞ்சம் அவர அவாய்ட் பண்ணி அவருக்கு சந்தேகம் வர வச்சு,அப்றமா என் கூட்டிட்டு போய் நிறுத்தி இருந்தன்னா ஓகே..நம்பியிருக்கு சான்ஸ் இருக்கு..ஸோ..”
“புரிஞ்சுது புரிஞ்சுது டா..அப்போ நா சரியா நடிக்கனும்னு சொல்ற..ரைட்!”கூறிதவளோ,ஏதேதோ யோசித்தாள்.
தொடரும்.
🖋️அதி..!
2026.05.21
error: Content is protected !!